Showing posts with label penathal. Show all posts
Showing posts with label penathal. Show all posts

Saturday, July 31, 2010

வராது வந்த நாயகன்!!


வந்து சேரும் வழியைப் பாருங்கப்பூ!!
இந்த முறையும் போஸ்டர் டைனோவின் கைங்கர்யமே!

Friday, July 30, 2010

அன்புக்கு நான் அடிமை!


அன்புக்கு நான் அடிமை என பெனாத்தலார் சொன்னதை வைத்து அவரை அடிமைகளின் தலைவனாக சித்தரிக்கும் டைனோபாயின் நுகபிநி!

படையெடுக்கும் பெனாத்தலார்

ஒபாமா எங்க ஊருக்கு வந்தாராம். எப்போ வருவாரு, எங்க வருவாருன்னு யாருக்குமே தெரியலை. ஒரு போஸ்டர் உண்டா, பத்து லாரி நிறைய ஆட்கள் உண்டா? என்ன வருகை இது? இப்படியா யாராவது சொல்லாமக் கொள்ளாம வருவாங்க?

ஒரு பெரிய மனுசன் செய்யும் வேலையா இது? இவ்வளவுக்கும் இது அவரு ஆளும் ஊரு. அப்போக்கூட இப்படி. இவங்க எல்லாம் நம்ம ஆட்கள் கிட்டப் பாடம் கத்துக்கணும்ய்யா.

இப்போ இதே பராகபுரிக்கு இன்னும் ஒரு பெரிய மனுசன் வராரு. இப்படியா சைலண்டா வந்துட்டுப் போறாரு.



ஓப்பனா சொல்லறாருப்பா.

இடம்:2 Snowflake Lane, Edison, NJ
நேரம்:ஜூலை 31, 2010 - காலை 10 மணி
தொடர்புக்கு: 917 974 9286

எல்லாரும் வந்து பார்த்துப் பேசி, போட்டோ எடுத்துக்குங்கப்பா. ஆனா ஒண்ணு யாரெல்லாம் வரப் போறீங்கன்னு சரியாச் சொல்லுங்க. பிரியாணி ஏற்பாடு செய்யணமுல்ல. பெனாத்தலார் வருகையை ஒட்டி சில படங்கள்.



பெனாத்தலார் வருகையை முன்னிட்டு சாலையில் சேர் போட்டு மக்கள் காத்திருக்கும் காட்சி!

அரங்க ஒலி ஒளி அமைப்புகளை கவனிக்கும் குழுவினர்.

வழக்கம் போல பெனாத்தலாரின் அசத்தல் போஸ்டர் ஆயில்யன் கைவண்ணம்.

Monday, July 19, 2010

பராகபுரியில் பெனாத்தலார்!



பெனாத்தலைப் பெட்டி கட்ட வைக்க இத்தனை பாடுபடும் ஆயில்யனுக்கு நன்றி! :)

Friday, July 16, 2010

அண்ணன் அழைக்கிறார்!!

PenathalAzaikiraar7


முழு போஸ்டரையும் பார்க்க ஸ்க்ரோல் பாரை கீழே இழுக்கவும்.

Wednesday, May 07, 2008

மை டியர் பெனாத்தலாரே (08-05-2008)

பெனாத்தலாருக்கு இலவசம் எழுதும் கடிதம். எல்லாரும் சாமிக்கு கடிதம் எழுதும் போது நம்ம ரேஞ்சுக்கு நம்ம ஒரு ஆசாமிக்காவது கடிதம் எழுத வேண்டாமான்னுதான் இந்தக் கடிதமே.

உங்கள் சமீபத்திய பதிவினை படித்தேன். படிக்கப் படிக்க உம்ம மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை கலந்த பயமும் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது.அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி தெண்டனிட்டுக்கவும்தான் இந்தப் பதிவு.

முதலில் அந்த ஐபில் மேட்டர். (ஆமாம் இதை யாரும் இன்னும் படுத்தலையா?, சாரி தமிழ்ப் படுத்தலையா?)அது எப்படிங்க நீங்களும் நல்லா விளையாடிக்கிட்டு இருக்கிற அணியாப் பார்த்து உம்ம ஆதரவுக் கரத்தை நீட்டறீங்க. முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி. அந்த நேரம் பார்த்து அவங்களை விட்டுட்டு ராஜஸ்தானுக்கே என் ஓட்டுன்னு போயிட்டீங்க. இப்படிப் போனதுக்கே உங்களை வெச்சு பல பதிவுகள் வந்திருக்கணும். பாவம் அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ, வரக் காணும். ஆனா உங்க ஆதரவைப் பெற்ற நேரம் இன்னிக்கு ராஜஸ்தானும் காலி. அது எப்படிய்யா இதெல்லாம். சில சமயம் இதெல்லாம் நினைக்கும் போது அம்மா ஆதரவு பெற்ற வாஜ்பேயி ஞாபகம்தான் வருது!

************************
தமிழகத்தில் பிறந்து பெண்களூரில் வேலை செய்து தற்போது புதரகத்தில் இருப்பதாலும் அதை விட முக்கியமா சாப்பாட்டைப் பற்றி பேசி இருப்பதாலும் நீங்கள் இரண்டாவதாகத் தொட்டுச் சென்று இருக்கும் தலைப்பை தெரிவில் விட்டுட்டு அப்படியே உலக நாயகன் மேட்டருக்குப் போறேன்.


//ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். //

என்னதான் வேசம் கட்டினாலும் கமல் ஒரு(க்) கால் மறைத்த ஆச்சார்யங்கள் உள்ளே வைத்திருப்பவர் என்ற உண்மை தெரிந்ததால்தான் சிவாசிக்குச் செய்த பிளாச் போல (தமிழ் தெரியாத ஆரிய கூத்தாடிகளுக்காக - சிவாஜிக்கு செய்த ஃபிளாஷ் எனப் படிக்கவும்), போக்கிரிக்குச் செய்த விமர்சனம் போல இவருக்குப் போட மாட்டேன் என்ற நிலைப்பாடா என மற்றவர்கள் கேட்கும் முன் ஆச்சரியத்தைச் சரியா வெளிப்படுத்துங்க. அம்புட்டுதான்.

****************************

இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க? பேசாம இந்த பெட்டி தட்டற வேலையை எல்லாம் விட்டுட்டு நாமளும் இதுல இறங்க வேண்டியதுதான் போல. தமிழ்ன்னு சொல்லி ஏமாத்தறவன், பாலம் சாமின்னு சொல்றவங்க, பால சாமி தவிர மத்த சாமி எல்லாம் ஓக்கேன்னு சொல்றவங்க், இவன் தமிழன், இவன் ஆரியன்னு உறுதிப்படுத்தறவங்க, எந்தெந்த சாதி பேர் வெளிப்படையா சொல்லலாம்னு நிர்ணயம் செய்றவங்க, எல்லாம் நல்லாத்தானே இருக்கான். இவனுங்க மாதிரி நாமளும் தெரிஞ்சே ஏமாத்தினாக் கூட, நல்லாத்தான் இருப்போம். என்ன முதல் போட கொஞ்சம் பணம் வேணும். அடுத்து நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?

****************************

தமிழ்மணம் நல்லாத்தான் இருக்கு. என்ன முன்ன எல்லாம் ஸ்க்ரோல் (தமிழ்?) செய்யாமலேயே நிறையா பதிவுகள் பார்க்க முடிஞ்சுது. ஆனா இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.

அப்புறம் இந்த உத்தப்புரத்தைப் பத்தி ஆளாளுக்கு எழுதறீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி. சுவரைக் கட்டி இருக்காங்க சரி. அது தப்புன்னு தெரியும் பொழுது அதை இடிச்சு தள்ளாம அது என்ன அதில் நிலைவாசல் வைக்கிறேன், நிலையில்லாத வாசல் வைக்கிறேன்னு வழவழா கொழகொழான்னு ஒரு முடிவு. அதுக்கு சபாஷ் சரியான தீர்ப்புன்னு சொல்ல நாலு பேரு. ஒண்ணும் சரியாப் படலையே?

**************************

நிறையா சினிமா பார்க்கறீரு. நீர் படும் பாட்டை நான் பார்த்து ரசிச்சுக்கறேன். அதே போதும் எனக்கு.

கடைசியா நம்ம பக்கத்தில் இருந்து ஒண்ணு. மன அழுத்தம் இருக்கிறவங்களுக்கு மருந்தா வலைபதியறது இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா கேள்விப்பட்டீங்களா? (நீங்க கேள்விப்படாட்டி வேற யாரு கேள்விப்படுவாங்க?) எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்!

இப்படிக்கு அன்புடன்
கொத்ஸ்

டிஸ்கி 1: கடிதமெழுதும் இட்லிவடை காணாமல் போய்விட்டார். படிக்க கடிதம் கிடைக்காமல் கை கால் உதறல் எடுப்பதால் நானே எழுதிவிட்டேன்.

டிஸ்கி 2: அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில், உள்ளேன் ஐயா பதிவு பெனாத்தலார் போட்ட பதிவின் தாக்கதால் நானும் போட்ட உள்ளேன் ஐயா பதிவு இது. மேட்டர் இல்லாத காரணத்தால் அவருடைய பதிவையே எடுத்து மொக்கை போட வேண்டியதாய் ஆயிற்று

டிஸ்கி 3: மேலே உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே (இது சும்மா பாதுகாப்புக்காக. இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்.)

Saturday, May 19, 2007

MXXIV - பெனாத்தலாரின் வா சிஜி கோட்

டிஸ்கி: இது ஒரு விளம்பரப் பதிவு. படிக்கப் பிடிக்காதவர்கள் இன்னும் சில நாட்களில் நேரடியாக பெனாத்தலார் பதிவுக்குப் போகலாம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்ற வள்ளுவர் வாக்கின் படி எண்ணும் எழுத்துமே ஒருவனின் இரு கண்களாக கருதப்படும் தமிழ் கூறும் நல்லுலகிலே இந்த எண்ணையும் எழுத்தையும் இணைத்து ஒரு புது வரலாறு படைக்க இருக்கிறார் நமது மின்னொளி மன்னன் பெனாத்தலார் அவர்கள். இது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

இதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் எண் 1024. அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த எண் சாதாரணமான எண் இல்லை. கணினித் துறையில் ஒரு முக்கியமான எண். 10 பைனரி ஸ்விட்சுகள் கொண்டு வைக்கக்கூடிய கணினி முகவரிகள் 1024. இதனால்தான் கணினியின் மெமரி 1024பைட் துண்டுகளால் அளக்கப்படுகிறது. பைனரியில் 1024 என்ற எண்ணை எழுத வேண்டுமானால் 10,00,00,00,000 என எழுத வேண்டும்.

இப்படிப் பட்ட 1024 என்ற எண்ணை வைத்து என்ன மாயம் செய்யப் போகிறார் நம் மின்னொளி மன்னன் எனப் பார்க்கலாமா. அதற்கு இன்னும் சில தினங்கள் காத்திருங்கள். அது வரை அவர் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டமாக போடுங்கள். சரியாக சொல்பவருக்கு ஒரு சர்'ப்ரைஸ்' இருக்கலாம்.

MXXIV - இது என்ன அப்படின்னு கேட்பவர்களுக்கு பதில் பின்னூட்டங்களில் வரும்.

அப்டேட் : பெனாத்தலாரின் 1024 பதிவு