Friday, July 30, 2010

படையெடுக்கும் பெனாத்தலார்

ஒபாமா எங்க ஊருக்கு வந்தாராம். எப்போ வருவாரு, எங்க வருவாருன்னு யாருக்குமே தெரியலை. ஒரு போஸ்டர் உண்டா, பத்து லாரி நிறைய ஆட்கள் உண்டா? என்ன வருகை இது? இப்படியா யாராவது சொல்லாமக் கொள்ளாம வருவாங்க?

ஒரு பெரிய மனுசன் செய்யும் வேலையா இது? இவ்வளவுக்கும் இது அவரு ஆளும் ஊரு. அப்போக்கூட இப்படி. இவங்க எல்லாம் நம்ம ஆட்கள் கிட்டப் பாடம் கத்துக்கணும்ய்யா.

இப்போ இதே பராகபுரிக்கு இன்னும் ஒரு பெரிய மனுசன் வராரு. இப்படியா சைலண்டா வந்துட்டுப் போறாரு.



ஓப்பனா சொல்லறாருப்பா.

இடம்:2 Snowflake Lane, Edison, NJ
நேரம்:ஜூலை 31, 2010 - காலை 10 மணி
தொடர்புக்கு: 917 974 9286

எல்லாரும் வந்து பார்த்துப் பேசி, போட்டோ எடுத்துக்குங்கப்பா. ஆனா ஒண்ணு யாரெல்லாம் வரப் போறீங்கன்னு சரியாச் சொல்லுங்க. பிரியாணி ஏற்பாடு செய்யணமுல்ல. பெனாத்தலார் வருகையை ஒட்டி சில படங்கள்.



பெனாத்தலார் வருகையை முன்னிட்டு சாலையில் சேர் போட்டு மக்கள் காத்திருக்கும் காட்சி!

அரங்க ஒலி ஒளி அமைப்புகளை கவனிக்கும் குழுவினர்.

வழக்கம் போல பெனாத்தலாரின் அசத்தல் போஸ்டர் ஆயில்யன் கைவண்ணம்.

4 comments:

said...

அடங்குடா மவனே அடங்குடா. தாங்கலடா சாமி.

said...

ஹேஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! சிங்கம் களம் இறங்கிடுச்சேய்ய்ய்ய்! :)))


பாஸ் ரசிகர் கூட்டத்தை புல் கவரேஜ் பண்ணி போட்டோவெல்லாம் போட்டு நெக்ஸ்ட் போஸ்டர் ஒட்டணும்! கூட்டம் அதிகமா இருந்து வீயு கவர் செய்யமுடியலைன்னா பறவை பார்வை போட்ட்டோவாச்சும் வேணும்ம்!

ஷார்ஜா சிங்கம் எங்கள் தங்கம் அண்ணன் பெனாத்தலார் வாழ்க

said...

:)))))))))))))))))

said...

சூப்பரு! பெனாத்தலார் என்ன குதுரைல இப்பூடி பறந்துகிட்டு வர்ராரு? எங்க ஊர்ல இருந்தப்ப ஒன்லி ஒட்டகந்தேன்!!! நல்ல இம்புரூவ்மெண்ட்!!!