அவுஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்த உடன் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினரின் இடாப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் சில பெருந்தலைகளுக்கு இடமில்லை. அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. ஆனா இந்த உணர்ச்சிகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை என்ன ஏதென்று பார்க்கலாமா?
கங்குலி, திராவிட், லக்ஷ்மண் அணியில் இல்லை. இதுதானே இவ்வளவு கொந்தளிப்புக்குக் காரணம்? நம் வழக்கமான முறைப்படி அதெப்படி இவர்கள் எல்லாம் இல்லாமல் ஒரு அணி, அதுவும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராகவா என்றெல்லாம் சொல்லி தேர்வாளர்களுக்கு எளிதாக முட்டாள் பட்டம் கட்டி விடலாம். ஆம், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த அணியின் மட்டையாளர்களுக்கு அவ்வளவு அனுபவம் இல்லைதான். சேவாக்கும் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய பின் வருபவர்கள் அனைவருமே இளைஞர்கள். நடுவே யுவராஜ், தோணி என கொஞ்சம் அனுபவம் இருக்கத்தான் இருக்கிறது என்றாலும் மற்றவர்களின் அனுபவம் பெரும்பாலும் 20-20 ஆட்டங்களில்தான். ஆனால் கம்பீர், கார்த்திக், உத்தப்பா, ரெய்னா என நல்ல தகுதியுடையவர்கள்தானே அணியில் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பொழுதெல்லாம், 20-20 உலகக்கோப்பை உட்பட, சாதித்துக் காட்டியவர்கள்தானே இவர்கள்.
இவர்களை மெதுவாக ஒவ்வொருவராக அணிக்குள் கொண்டு வரலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட போட்டியில் மொத்தமாக களமிறக்கி அவர்களை பழக்கப்படுத்தலாம். நம் தேர்வாளர்கள் இரண்டாம் முடிவினைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிக்கு இருப்பது போலில்லாமல் ஒரு நாள் ஆட்டத்திற்கு பீல்டிங் செய்வது மிகத் தேவையான ஒன்று. அதற்கான இளமைத் துடிப்பு இந்த அணியினரிடையே இருக்கிறது. அதே போல் ரன்கள் ஓடுவதிலும் கூட. திராவிட்டும் லக்ஷ்மணும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை மூன்று ஓட்டங்கள் எடுக்க இடங்களில் இரு ஓட்டங்களும், இரு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஓட்டத்துடனும் நின்றிருக்கிறார்கள்? இது மட்டுமே ஒரு 30 - 40 ஓட்டங்களாக மாறினால் அது வெற்றியை நிர்ணயிக்கும் அல்லவா?
அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். இந்த இளைஞர்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு அந்த போட்டிக்கு முன் எவ்வளவு அனுபவம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது. முதலில் அனுபவமின்மையால் தோற்றுத்தான் போவார்கள். ஆனால் அதனை சகித்துக் கொண்டு அவர்களைக் கொண்டே தொடர்ந்து விளையாடினால் நல்ல அனுபவம் பெற்று உலகக் கோப்பையைத் தட்டிவரத் தயாராவார்கள் என்பது நிச்சயம். இந்த அணியினருக்கு அணித்தலைவர் தோணியின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரால் நமக்கு உலகக்கோப்பை வர வேண்டுமானால் அவருக்கு உகந்த அணியினைத் தர வேண்டியது அவசியம். அதைத்தான் இந்த தேர்வாளர்கள் செய்திருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் இது போன்று ஒரே நேரத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருவது அவ்வளவு சரி இல்லை. ஆனால் ஒரு நாள் அணியில் செய்வது தவறில்லை என்றே நினைக்கிறேன்.
சேவாக்கும் பார்மில் இல்லாமல் இருந்து இப்பொழுதுதான் மீண்டும் சரியாக விளையாடத் தொடங்கி இருக்கிறார், யுவராஜோ சொதப்பிக் கொண்டு இருக்கிறார். இந்நிலமையில் நன்றாக ஆடி வரும் இம்மூவரையும் ஒரேடியாக தூக்கி இருக்காமல் திராவிட் அல்லது கங்குலி இவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இருந்திருக்கலாம். ஆனால் இதுதான் நாம் செல்ல வேண்டிய பாதை என முடிவு செய்த பின் அதன் வழியே செல்வது அவசியம். முதலில் சில தோல்விகள் வந்தாலும் இந்த அணியில் பெரும் மாற்றங்கள் இல்லாமல் ஆதரித்து இவர்களை உலகக்கோப்பையினை வெல்லும் அணியாக மாற்ற வேண்டியதுதான் சரி.
இந்த அணியினரே நன்றாக விளையாடினால் அப்பொழுது யார் யாரை முட்டாள் எனச் சொல்வது. அடுத்தவரை முட்டாள்கள் எனச் சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அதுவே நம்மை நோக்கி வர அதிக நேரமாகாது. சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான் பாகிஸ்தானோடும் சரி அவுஸ்திரேலியாவுடனும் சரி பட்டையைக் கிளப்பினார்கள். அது பற்றிய சத்தத்தையே காணும். அதுபோல் இந்த அணியினரும் நன்றாக விளையாடி நம் எதிர்ப்பார்ப்பை விட அதிகமாக செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Let us not look for instant gratification. Let us give this team some time and groom them. They are going to be the back bone of our 2011 World Cup Team. They need our support and belief.
Go India Go! Go with an eye on 2011 World Cup!!
Sunday, January 20, 2008
வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்!
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
பதிவு எழுதிய பின் கிரிகின்போவில் சம்பித் பால் எழுதியது படிக்கக் கிடைத்தது. நான் சொல்ல வந்த கருத்துக்களை இன்னும் அருமையாகச் சொல்லி இருக்கிறார். அதையும் ஒரு முறை படித்து விடுங்க.
சரி. படித்துவிட்டேன்.
ரீச்சர், வீட்டுப் பாடம் மாதிரி படிக்கச் சொன்னா அதுக்காக இப்படியா? இதெல்லாம் ஓவராத் தெரியலை?!! :))
பேசாமல் இதை போகி அன்று செய்து இருக்கலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும்!! :)
//பேசாமல் இதை போகி அன்று செய்து இருக்கலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும்!! :)//
:))
ஹலோ.. நான் க்ரிக்கெட் பதிவெல்லாம் படிக்கிறதில்ல...
ஹலோ நான் தொடர் பதிவு படிக்கறது இல்லை!!
ஹலோ நான் பதிவு பெருசா இருந்தாப் படிக்கிறது இல்லை!!
ஹலோ நான் கிரிக்கெட் பதிவெல்லாம் படிக்கிறது இல்லை!!
இதுக்குப் பேசாம நான் உன் பதிவெல்லாம் படிக்க மாட்டேன்னு சிம்பிளா சொல்லி இருக்கலாம். இதுல என்ன சந்தோஷமோ!!! :))
//ஹலோ நான் பதிவு பெருசா இருந்தாப் படிக்கிறது இல்லை!!//
அப்படீன்னா இப்படி ஒரு வரிப் பதிவுகள்தான் போடணும்
"இன்று திங்கட் கிழமை"
அதானே, அப்படிச் சொல்லுங்க ரீச்சர். பதில் பதிவு போடணுமுன்னா..
எங்களுக்கு இன்னும் ஞாயிற்றுக்கிழமைதான்.
இப்படித்தானே!! :))
உங்களுக்கெல்லாம் கிண்டலாப்போச்சு.. ம்.. இருங்க இருங்க..
//அணியினரின் இடாப்பை //
இது சரியான பிரயோகமா? இடாப்பு என்றால் அட்டவணை என்று சொன்ன மாதிரி ஞாபகம். அணியினரின் பட்டியல் எனபதுதான் சரியென்று தோன்றுகிறது.
//ஆடி வரும் இம்மூவரையும் ஒரேடியாக தூக்கி இருக்காமல் திராவிட் அல்லது கங்குலி //
ஏற்கெனவே கொஞ்ச நாளாக லக்ஷ்மண் ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இல்லை. டிராவிட் கடந்த பாகிஸ்தான் போட்டி தொடரில் இல்லை. இப்பொழுது கங்குலியும் தேர்வு செய்யப் படவில்லை. ஏற்கெனவே அணியின் ஆவரேஜ் ஏஜ் 33-க்கு மேல் வந்து விட்டது. அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
//சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான்//
இது என்ன மேட்டர்? அட ஒரு பொது அறிவுக்குதானே :-)
//எங்களுக்கு இன்னும் ஞாயிற்றுக்கிழமைதான்.
//
இதுக்கு ஒரு காலண்டரை டைம் ஜோனோடு போட்டுற வேண்டிதானே? :-))
இ.கொ,
லக்ஸ்மன் நீண்ட நாட்களாகவே ஒரு நாள் போட்டிகளில் இல்லை, திராவிட் சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில தடுமாறி வருவதால் ஒதுக்கப்பட்டு வருகிறார், எனவே இவர்கள் நீக்கம் சரியே, ஆனால் கங்குலி என்ன செய்தார்,நல்ல ஸ்டிரைக் ரேட் உள்ளவர், கடந்த ஓராண்டாக நிலைத்து ரன்கள் எடுத்து வரும் வீரர்களில் அவரும் ஒருவர், மீண்டும் அவரின் பழைய ஃபார்ம் திரும்ப வந்திருக்கும் நேரத்தில் நீக்குவது சரி அல்ல , கங்குலிக்கு இன்னும் 1-2 ஆண்டுகள் தான் ஆட்டம் மீதம் இருக்கு, பீக்கில் இருக்கும் போது நீக்குவது ஏன்?
//உங்களுக்கெல்லாம் கிண்டலாப்போச்சு.. ம்.. இருங்க இருங்க..//
இருக்கோம் இருக்கோம். இல்லாம என்ன? போறேன் போறேன்னு சொல்லறவனே இருக்கான். எங்களுக்கு என்ன? :))
//இது சரியான பிரயோகமா? இடாப்பு என்றால் அட்டவணை என்று சொன்ன மாதிரி ஞாபகம். அணியினரின் பட்டியல் எனபதுதான் சரியென்று தோன்றுகிறது.//
இடாப்பு (p. 67) [ iṭāppu ] , டாப்பு, s. a list, register அட்ட வணை.
இதுதான் அகராதி சொல்லுது. லிஸ்ட் என்பதற்கும் சொல்லலாம் எனத்தானே போட்டிருக்கிறது? ஓகை, ப்ளீஸ் ஹெல்ப்.
//அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.//
லாம். ஆக மொத்தம் இளமை புதுமை அப்படின்னு சொல்லிட்டாங்க. இருக்கட்டுமே.
//இது என்ன மேட்டர்? அட ஒரு பொது அறிவுக்குதானே :-)//
அதெல்லாம் புரியவங்களுக்குப் புரியும். நீங்க லூஸில் விட்டுட்டு நல்ல பையனா இருங்க!! :))
//இதுக்கு ஒரு காலண்டரை டைம் ஜோனோடு போட்டுற வேண்டிதானே? :-))//
இது வேறயா?!! நல்லா இருங்கடே!!
//கங்குலிக்கு இன்னும் 1-2 ஆண்டுகள் தான் ஆட்டம் மீதம் இருக்கு, பீக்கில் இருக்கும் போது நீக்குவது ஏன்?//
நானும் இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனா நீங்க சொல்லும் 1-2 ஆண்டுகள்தான் அவருக்கு எதிரா போயிருச்சு போல!
இ.கொ,
வயது தான் கங்குலிக்கு எதிராக உள்ளது தெரிகிறது,ஆனாலும் சுழற்சி முறையில் அணியில் அவரை வைத்துக்கொண்டே மற்றொரு இளைஞரையும் தயார்ப்படுத்தலாமே.
கூடுதலாக மற்றொன்றையும் பார்க்கணும், இப்போ கங்குலி, டிராவிட் எல்லாம் ஏற்கனவே ஆஸியில் ஆடிக்கொண்டிருப்பதால் அந்த தட்ப வெப்பம், பிட்ச், அதோட பவுன்ஸ் , பட்னு வீச்சாளர்களின் செயல் படும் விதம் எல்லாம் இப்போது பழக்கமாக ஆகி இருக்கும், எதிர்க்கொள்ள பிரச்சினை வராது , ஆனால் நீண்ட நாட்களாக டீமில் இல்லாது இருந்து வரும் ரெய்னா, சாவ்லாக்கு எல்லாம் அங்கே பழகவே கொஞ்சம் ஆகும் அதுக்குள் இரண்டு மேட்ச்கள் முடிந்து விடும். தவறுகளை திருத்திக்கொண்டு ஆட டைம் ஆகும்.
ஒரு கம் பேக் டிரையலில் இருப்பவர்களை இப்படி ஆஸி மாதிரி கடிமான சூழலில் வர வைத்தால் எதிராக போய் விடக்கூடுமே!
உள்நாட்டில் நடக்கும் தொடர்களில் அழைத்திருக்கலாம்.
//அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும்\\ இவங்க இல்லை அவங்க இல்லைன்னு புலம்பாம இருக்கவங்க எந்த அளவுக்கு நல்ல விளையாட முடியும்னு பாக்கணும். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் பெஸ்ட் டீம்னு சொல்லலாம். புது வீரர்கள் அவங்களோட விளையாடுவது அவர்களுக்கு நிச்சயம் நிறைய நல்ல டெக்னிக்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு தரும்
அய்யோ.. எனக்கு இந்த கிரிக்கெட் போர்டில மட்டும் வேலையே வாணாம்பா... முன்னே போனா கடிப்பானுங்க, பின்னே வந்தா உதைப்பானுங்க..
இந்த மூணு பேரையும் வச்சுகிட்டிருந்தா கிழவனுங்க - தோத்துப்போயிட்டானுங்க.. 20/20லே நல்லா ஆடின சின்ன பசங்களை விட்டுட்டாங்க - புண்ணாக்கு செலக்டர்ஸ்..னு திட்டியிருப்பாங்க..
நீக்கினா இப்படி..
என்னிக்காவது ஜெயிச்சதுக்கப்புறம்.. சூப்பர் செலக்சன் அதான் ஜெயிச்சாங்க - அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கீங்களா..
எதையோ பண்ணிட்டானுங்க.. விட்டுத் தொலைங்கப்பா.. போய் விவசாயம் பாருங்கப்பூ!
வவ்வால், நீங்க சொல்வது எல்லாமே சரிதான். நானும் ஒத்துக்கறேன். ஆனா அப்படி நடக்காத பொழுது அந்த மாதிரி முடிவெடுத்தவங்களை முட்டாள் அது இதுன்னு கூப்பிட்டு உணர்ச்சி வசப்படணுமா?
//இவங்க இல்லை அவங்க இல்லைன்னு புலம்பாம இருக்கவங்க எந்த அளவுக்கு நல்ல விளையாட முடியும்னு பாக்கணும். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் பெஸ்ட் டீம்னு சொல்லலாம். புது வீரர்கள் அவங்களோட விளையாடுவது அவர்களுக்கு நிச்சயம் நிறைய நல்ல டெக்னிக்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு தரும்//
ஆமாம் சின்ன அம்மிணி, அதுதான் நானும் சொல்லறது!! :)
கொத்ஸ் அண்ணா,
நல்ல அலசல் தான் ! நானும் இளைஞர்கள் வேண்டாமுன்னு சொல்லலை ! ஆனா கங்குலி போல சாதிச்ச ஒரு ஆளை, நல்லாவும் ஆடற நேரத்தில விலக்கியிருப்பது அக்கிரமம் :(
This is a Utterly biased decision and I re-iterate that these selectors are a bunch of egoistic JOKERS !!!!
எ.அ.பாலா
//திராவிட் அல்லது கங்குலி இவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இருந்திருக்கலாம்//
சவுரவ் கங்கூலி ஃபீல்டிங் சரியில்லை என்று சொல்லி ஓரங்கட்டப்பட்டது ரொம்ப அபத்தம். 2011க்கான டீமா இது? இப்போது ஃபார்மில் இருப்பவர்கள் 2011ல் ஃபார்மில் இருப்பார்களா என்பது நிச்சயமில்லை. அடுத்த தொடரில் ஃபார்மில் இருப்பார்களா என்பதே நிச்சயமில்லை.
பதிவிற்கும், cricinfo லிங்க் கொடுத்தற்கு நன்றி.
இதெல்லாம் சரி, டெண்டுல்கர் அணியில் இருக்கிறாரே? பார்க்கப் போனா போன வருஷம் கங்குலி, டெண்டுல்கரை விட அதிக ரன் எடுத்திருக்கார். டெண்டுல்கரும் பீல்டிங்கில் நிறையவே ஓட்டை விடுகிறார். இவரும் 2011 வரைக்கும் தாக்குப் பிடிப்பாரா என்பது சந்தேகம்தான்.
-அரசு
வவ்வால், எ.அ.பாலா வின் கருத்தே என் கருத்தும்..
டெஸ்ட், 50ஓவர், 20-20 மூன்றும் வெவ்வேறு வகையிலான ஆட்டங்கள்..
கங்குலியை நீக்கியிருப்பது தவறே...
-அபுல்
சின்ன திருத்தம், டெண்டுல்கர் கங்குலிய விட 185 ரன்கள் அதிகம் எடுத்திருக்கார் 2 இன்னிங்ஸ் அதிகமாக விளையாடி இருக்கிறார்.
-அரசு
கங்குலியை நீக்கியதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.
நடந்து முடிந்த ரஞ்சி போட்டிகளில் ராய்னாவைவிட (683, 48.78) கூடுதலாக ஓட்டங்களும் ஆவரேஜ்ஜும் கொண்டுள்ள கைஃப்(687,57.25) ஏன் தேர்வு செய்யப்படவில்லை?
காம்பீர், ராய்னா, ரோஹித் ஷர்மாவைவிட சிறந்த ஃபீல்டர் / பேட்ஸ்மேன் கைஃப் என்பதை மிஸ்டர்.வெங்க்சர்க்காரோ அல்லது பி.சி.சி.ஐ. யோ மறுக்க முடியுமா?
இது ஒரு சாம்பிள்தான் இவர்கள் அடிக்கும் கூத்துக்கு.
இவர்களின் சப்பைக்கட்டெல்லாம் சும்மா சார்.
//அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. ///
அவ்வ் அவ்வ் திரும்பவும் அதே டயலாக்!!!
போன முறை இப்படிதானே சொல்லிக்கிட்டு இருந்தாங்க:(((
பாஸ்ட் பவுலர் ஒரு கேள்வி கேட்டு இருக்கார் அதையும் பாருங்க.
டிராவி, V.V.S.L நீக்கியது தவறு இல்லை கங்குலியை ஏன் நீக்க வேண்டும்? ஓட்டங்கள் எடுக்க ஓட்டங்கள் எடுக்க என்றால், நிலைத்து நின்று பேட்டிங் செய்வது யாரு?
//அணியினரின் இடாப்பை///
என்னங்க வர வர இடாப்பு , குடாப்பு, இசலி, குஜிலி என்று சொல்றீங்க:)
அவனவன் ஆஸ்திரேலிய ஓப்பன் லைவ்வா வரமாட்டேங்குதேங்கற அவஸ்தைல இருக்கான்..
எல்லாத்தையும் விட்டு கிழவிய தூக்கி மனைல வையுங்கற கதையா 2011ல நடக்கப்போற கூத்துக்கு தயார் படுத்தறோம்னு அனாலிஸிஸ் போடறீரா? இதெல்லாம் நியாயமா?
08,09,10 வரிசைல 2011லயும் எங்க தலதான் கெலிப்பாரு.. அது சர்வநிச்சயமா நடக்கும். அந்த வரலாற்று நிகழ்வுக்கு என்ன பதிவு போடலாம்னு யோசியுமய்யா...சும்மா ஸ்பெகுலேஷன் செஞ்சு ரணகளப்படுத்தாதேயும்...
தாதாவை தூக்கிட்டாங்க.... பஸ் சை நிறுத்துங்கடா.... பதிவைக் கொளுத்துங்கடா... பின்னூட்டத்தைக் கிழிங்கடா.... இப்படி உணர்வு பூர்வமான உத்தரவுகளை எதிர்பார்த்து வந்தால்.. ஏமாத்தீட்டிங்களா தலீவா.... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.
பாலாவின் பதிவில் காட்டம் கொஞ்சம் அதிகம். எனக்கும் கங்குலியை விட்டுவிட்டது சரி இல்லையோ என்று கொஞ்சம் அலை பாய்கிறது. fieldingஐ வைத்து முடிவு செய்திருப்பார்களோ?
பட்டியல் ஒற்றை பரிமாணம். இடாப்பு இரட்டை பரிமாணமென்று நினைக்கிறேன்.
பெனாத்தல்,
//அய்யோ.. எனக்கு இந்த கிரிக்கெட் போர்டில மட்டும் வேலையே வாணாம்பா... முன்னே போனா கடிப்பானுங்க, பின்னே வந்தா உதைப்பானுங்க..//
எல்லா வேலையும் அப்படித்தானே!! என்ன இங்க பேரு பேப்பரில் வரும். ஊரில் எல்லாரும் முட்டாள் அப்படின்னு கூப்பிட்டுப் பதிவு போடுவாங்க. அம்புட்டுத்தானே!! :))
//என்னிக்காவது ஜெயிச்சதுக்கப்புறம்.. சூப்பர் செலக்சன் அதான் ஜெயிச்சாங்க - அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கீங்களா..//
Wifeology (இதைத் தமிழில் வைப்பாலஜின்னு எழுத முடியலை!) எழுதின நீரா இப்படி ஒரு கேள்வி கேட்பது! :P
//எதையோ பண்ணிட்டானுங்க.. விட்டுத் தொலைங்கப்பா.. போய் விவசாயம் பாருங்கப்பூ!//
என்னே நின் நுண்ணரசியல்!! :))
//ஆனா கங்குலி போல சாதிச்ச ஒரு ஆளை, நல்லாவும் ஆடற நேரத்தில விலக்கியிருப்பது அக்கிரமம் :(//
நீக்கி இருக்க வேண்டாம். திராவிட் / கங்குலி இருந்திருக்கலாம். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இது ஒண்ணும் இடி விழற மேட்டர் இல்லை. அதனால அப்படியே முன்னாடி போகலாமுன்னு சொல்லறேன்.
//This is a Utterly biased decision and I re-iterate that these selectors are a bunch of egoistic JOKERS !!!!//
என்ன Bias என்பது எனக்குப் புரியலை. போகட்டும். ஆனா ஒரு செயலின் நிறை குறைகளை விவாதிக்காமல் திராவிட அரசியல் போல் அச்செயலைச் செய்தவர்களை முட்டாள் என முத்திரை குத்துவதில்தான் எனக்கு அவ்வளவு சம்மதம் இல்லை.
//சவுரவ் கங்கூலி ஃபீல்டிங் சரியில்லை என்று சொல்லி ஓரங்கட்டப்பட்டது ரொம்ப அபத்தம். 2011க்கான டீமா இது? இப்போது ஃபார்மில் இருப்பவர்கள் 2011ல் ஃபார்மில் இருப்பார்களா என்பது நிச்சயமில்லை. அடுத்த தொடரில் ஃபார்மில் இருப்பார்களா என்பதே நிச்சயமில்லை.//
ஃபீல்டிங்கினால் என்பதே நம் அனுமானம்தானே. எதுதான் நிச்சயம்? ஆனால் எதிர்காலத்திற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லவா...
முதலில் நீங்கள் எல்லாரும் கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் க்ரிக்கெட் மேனேஜ்மெண்ட் பற்றிய உபயோகமான விஷயங்களில் சிலதையாவது படித்து பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.
cricket management
//க்ரிக்கெட் மேனேஜ்மெண்ட் பற்றிய உபயோகமான விஷயங்களில் சிலதையாவது //
யப்பா... இவ்ளோ மேட்டர் இருக்கா இதில?
ஆமாம், இந்த Jerusalem Cricket-னா என்னப்பா? யூத கிரிக்கெட்டா? இல்ல அரேபிய கிரிக்கெட்டா?
//இதெல்லாம் சரி, டெண்டுல்கர் அணியில் இருக்கிறாரே? பார்க்கப் போனா போன வருஷம் கங்குலி, டெண்டுல்கரை விட அதிக ரன் எடுத்திருக்கார். டெண்டுல்கரும் பீல்டிங்கில் நிறையவே ஓட்டை விடுகிறார். இவரும் 2011 வரைக்கும் தாக்குப் பிடிப்பாரா என்பது சந்தேகம்தான்.//
வாங்க அரசு, இந்த பாயிண்டை இன்னும் யாரும் தொடலைன்னு நினைச்சேன். தொட்டுட்டீங்க. போன வருடத்தைப் பொறுத்த வரையில் நம் அணியின் சிறந்த மட்டையாளர் டெண்டுல்கர்தான் என்பதில் சந்தேகமே கிடையாது.
நீங்க சொன்னதில் பொருட்குற்றம் இருக்கு. அதை நீங்களே சொல்லிட்டீங்க. அங்க வந்து தொடர்ந்து பேசறேன்..
//வவ்வால், எ.அ.பாலா வின் கருத்தே என் கருத்தும்..
டெஸ்ட், 50ஓவர், 20-20 மூன்றும் வெவ்வேறு வகையிலான ஆட்டங்கள்..
கங்குலியை நீக்கியிருப்பது தவறே...
-அபுல்//
கங்குலி திராவிட் இருந்திருக்கலாம். சுழற்சி அடிப்படையில் இவர்களும் இளைஞர்களும் வந்திருக்கலாம். ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் இவ்வளவு உணர்ச்சிவசப்படுதல் தேவையா?
கொத்ஸ் இந்த பிரச்சினை குறித்தும், BCCI குறித்தும் எனது பார்வை இங்கே:
http://blog.nandhaonline.com/?p=41
கொத்ஸ் ஐயா, நான் இட்லி வடையில் இட்ட comment in ஒரு பகுதி...
"இந்த அணி 50 overs நிலைத்து நின்று ஆடுவார்கள் என்று கூட தோன்றவில்லை. Dravid, Ganguly அல்லது lakshman யாராவது ஒருவர் அணியில் இருந்து இருக்க வேண்டும். இந்த அணியில் அனைவரும் Hitters மட்டுமே"...அணியினில் இளைஞர்கள் வேண்டுமெனில் Kaif, Badrinath போன்றவர்களை சேர்த்து இருக்கலாம். இவர்கள் சற்று நிலைத்து ஆடும் பழக்கம் கொண்டவர்கள். நிச்சியமாக இது ஒரு முட்டாள் தனமான தேர்வே.
//சின்ன திருத்தம், டெண்டுல்கர் கங்குலிய விட 185 ரன்கள் அதிகம் எடுத்திருக்கார் 2 இன்னிங்ஸ் அதிகமாக விளையாடி இருக்கிறார்.
-அரசு//
ஆமாம் அரசு. சச்சின் அதிக ரன்கள், அதிக ஆவரேஜ், அதிக ஸ்டைரக் ரேட். அது மட்டுமில்லாம, இந்த பாயிண்டை எடுத்தா கங்குலி அயர்லாந்து, பெர்முடா, ஆப்பிரிக்கா 11 அப்படின்னு சொத்தை அணிகளோட ஆடினது அதிகம் அப்படின்னு போயிகிட்டே இருக்கும். அதனால இங்க போக வேண்டாம்.
சச்சின், கங்குலி, திராவிட், லக்ஷ்மண் - இவர்களில் ஒருத்தரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னா அது சச்சினாகத்தான் இருக்கும். குழப்பமே இல்லை. அதைத்தான் தேர்வாளர்களும் செஞ்சு இருக்காங்க.
//நடந்து முடிந்த ரஞ்சி போட்டிகளில் ராய்னாவைவிட (683, 48.78) கூடுதலாக ஓட்டங்களும் ஆவரேஜ்ஜும் கொண்டுள்ள கைஃப்(687,57.25) ஏன் தேர்வு செய்யப்படவில்லை?
காம்பீர், ராய்னா, ரோஹித் ஷர்மாவைவிட சிறந்த ஃபீல்டர் / பேட்ஸ்மேன் கைஃப் என்பதை மிஸ்டர்.வெங்க்சர்க்காரோ அல்லது பி.சி.சி.ஐ. யோ மறுக்க முடியுமா?//
கைப் விஷயத்தில் கொஞ்சம் attitude problem இருப்பதாய் கேள்விப்பட்டு இருக்கிறேன். யுவராஜுக்கு எதிராகவும் இந்த குற்றச்சாட்டு உண்டு. அதனால் அது மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது.
இப்படிப் பார்த்தால் ஏன் இவர் இல்லை இவர் இருக்கிறார் எனக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நம் வேலையில் கூட சிலருக்கு அதிக சம்பளம் கிடைக்கும் பொழுது அல்லது பிரமோஷன் கிடைக்கும் பொழுது நாம் பேசுவது போலத்தான் இது.
எப்படி ஒரு அணியைத் தேர்ந்தெடுத்தாலும் அனைவரும் அதை ஆமோதிக்கப் போவதில்லை. ஆனால் என் கேள்வி அதுவல்ல. அதற்காக அந்த முடிவை எடுத்தவர்கள் முட்டாள்கள் என உணர்ச்சி வசப்படுவதும், ரயிலை நிறுத்துவதும் தேவையா?
//அவ்வ் அவ்வ் திரும்பவும் அதே டயலாக்!!!
போன முறை இப்படிதானே சொல்லிக்கிட்டு இருந்தாங்க:(((//
எம்புட்டு விஷயத்தில் ஒரு தடவை முடியலைன்னா திரும்பத் திரும்ப முயற்சி செய்யறோம். அந்த மாதிரிதான்.
//டிராவி, V.V.S.L நீக்கியது தவறு இல்லை கங்குலியை ஏன் நீக்க வேண்டும்? ஓட்டங்கள் எடுக்க ஓட்டங்கள் எடுக்க என்றால், நிலைத்து நின்று பேட்டிங் செய்வது யாரு?//
நீங்க இப்படிச் சொல்லறீங்க. நான் சொல்லறேன், திராவிட் கூட இருக்கலாம். ஒரு சுழற்சி முறையில் புதுசும் பழசும் கலந்து அடிக்கலாம் என்று. ஆனால் இப்படி ஒரு அணி தேர்வான பின்னால் ரொம்ப ஆர்பாட்டம் செய்யாம ஒரு சான்ஸ் குடுத்துப் பார்க்க வேண்டியதுதான்.
//என்னங்க வர வர இடாப்பு , குடாப்பு, இசலி, குஜிலி என்று சொல்றீங்க:)//
நான் தேடிக் கண்டுபிடிச்ச வார்த்தையை நானே பயன்படுத்தலைன்னா எப்படி? :))
//அவனவன் ஆஸ்திரேலிய ஓப்பன் லைவ்வா வரமாட்டேங்குதேங்கற அவஸ்தைல இருக்கான்..//
இப்போ எல்லாம் டென்னிஸ் பார்க்கும் ஆர்வமோ போயிடுச்சு. எப்பவாவது ஒரு நாள் செமி பைனல், பைனல் அப்படின்னு பார்க்கறதோட சரி.
//எல்லாத்தையும் விட்டு கிழவிய தூக்கி மனைல வையுங்கற கதையா 2011ல நடக்கப்போற கூத்துக்கு தயார் படுத்தறோம்னு அனாலிஸிஸ் போடறீரா? இதெல்லாம் நியாயமா?//
என்ன பண்ண நானும் பதிவு போட எதாவது மேட்டர் வேணுமே.
//08,09,10 வரிசைல 2011லயும் எங்க தலதான் கெலிப்பாரு.. அது சர்வநிச்சயமா நடக்கும். அந்த வரலாற்று நிகழ்வுக்கு என்ன பதிவு போடலாம்னு யோசியுமய்யா...சும்மா ஸ்பெகுலேஷன் செஞ்சு ரணகளப்படுத்தாதேயும்...//
இந்த வருஷமே தலைவர் திணறிக்கிட்டு இருக்காரு. விரைவில் அவரையில் கிழபோல்ட்டு அப்படின்னு திட்டி பதிவு வந்தாலும் வரும் நம்ம தமிழ்வலைப்பதிவுகளில்.
//தாதாவை தூக்கிட்டாங்க.... பஸ் சை நிறுத்துங்கடா.... பதிவைக் கொளுத்துங்கடா... பின்னூட்டத்தைக் கிழிங்கடா.... இப்படி உணர்வு பூர்வமான உத்தரவுகளை எதிர்பார்த்து வந்தால்.. ஏமாத்தீட்டிங்களா தலீவா.... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.//
இதுதான் தேவு, இந்த ஆர்ப்பாட்டம் செய்யறதே நம்ம கலாச்சாரமாப் போச்சு. இதுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் தேவையா? நீயே சொல்லு.
//பாலாவின் பதிவில் காட்டம் கொஞ்சம் அதிகம். எனக்கும் கங்குலியை விட்டுவிட்டது சரி இல்லையோ என்று கொஞ்சம் அலை பாய்கிறது. fieldingஐ வைத்து முடிவு செய்திருப்பார்களோ?//
அப்படித்தான் தோன்றுகிறது. எனக்கே உடன்பாடு இல்லைதான். ஆனா இவர்களை எடுத்தால் அப்புறம் ஆட வைத்தே ஆகணும் என்பதும் இருக்கே. எடுத்துட்டு ஆட விடாம பெஞ்சில் உட்கார வைப்பதை விட இப்படி செய்யறது நல்லதோன்னு கூட தோணுது.
//பட்டியல் ஒற்றை பரிமாணம். இடாப்பு இரட்டை பரிமாணமென்று நினைக்கிறேன்.//
கொஞ்சம் விவரமா எடுத்துக்காட்டோட சொல்லுங்களேன். சரியாப் புரியலை.
//முதலில் நீங்கள் எல்லாரும் கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் க்ரிக்கெட் மேனேஜ்மெண்ட் பற்றிய உபயோகமான விஷயங்களில் சிலதையாவது படித்து பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.
cricket management//
தல, நீங்களும் ஜோதியில் ஐக்கியமாயாச்சா. நீங்க குடுத்த சுட்டியைப் பார்த்தேன். அதில் அடங்கி இருக்கும் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன். என் புரிதலை சொல்ல ஆரம்பித்தால் தனிப்பதிவாக ஆகும் என்பதால் அடக்கி வாசித்து அடங்கி இருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ;-)
//யப்பா... இவ்ளோ மேட்டர் இருக்கா இதில?
ஆமாம், இந்த Jerusalem Cricket-னா என்னப்பா? யூத கிரிக்கெட்டா? இல்ல அரேபிய கிரிக்கெட்டா?//
ஸ்ரீதர், இதெல்லாம் வெறும் ஆரம்பம்தான். இன்னும் ரெண்டு முறை படியுங்க. என்னென்னமோ தெரியும். :P
//கொத்ஸ் இந்த பிரச்சினை குறித்தும், BCCI குறித்தும் எனது பார்வை இங்கே:
http://blog.nandhaonline.com/?p=41//
பார்த்தேன் நந்தா. அங்க வந்தே பதில் சொல்லறேன்.
//கொத்ஸ் ஐயா, நான் இட்லி வடையில் இட்ட comment in ஒரு பகுதி...
"இந்த அணி 50 overs நிலைத்து நின்று ஆடுவார்கள் என்று கூட தோன்றவில்லை. Dravid, Ganguly அல்லது lakshman யாராவது ஒருவர் அணியில் இருந்து இருக்க வேண்டும். இந்த அணியில் அனைவரும் Hitters மட்டுமே"...அணியினில் இளைஞர்கள் வேண்டுமெனில் Kaif, Badrinath போன்றவர்களை சேர்த்து இருக்கலாம். இவர்கள் சற்று நிலைத்து ஆடும் பழக்கம் கொண்டவர்கள். நிச்சியமாக இது ஒரு முட்டாள் தனமான தேர்வே.//
அப்படின்னு நீங்க சொல்லறீங்க. எனக்கென்னமோ அவ்வளவு மோசமான அணியாத் தெரியலை. என்ன நடக்குதோ பார்க்கலாம்.
ஆனா அருண் நீங்க ரயிலை எல்லாம் நிறுத்தச் சொல்லலையே!! :)
//ஆனா அருண் நீங்க ரயிலை எல்லாம் நிறுத்தச் சொல்லலையே!! :)//
ஏன் சுவாமி என்ன வம்பில் மாட்டி விட பாக்கறிங்க.
பிப்ரவரி 11 எழுதினது தீர்க்கதரிசனமாம். ஆனா ஜனவரி 20 எழுதினது குருட்டாம் போக்கு போல!! நல்லா ஜால்ரா தட்டறாங்கய்யா!!
மேட்டர் புரியலைன்னா இதைப் பார்க்கவும் - http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_05.html
அன்புடன் அனானி
Post a Comment