Sunday, September 09, 2007

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!

டார்வின் அப்படின்னு ஒரு ஆள் இருந்தாரு. உலகில் உயிரினங்கள் இப்படி விருத்தியாகக் காரணம் இயற்கையின் தேர்ந்தெடுப்பு (Natural Selection) அப்படின்னு சொன்னாரு. அவரோட எழுத்துக்களைப் படிச்ச ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் என்பவர் வலிமையே வாழும் ( Survival of the Fittest) எனச் சொல்லப் போக, டார்வினே அத்தொடரை எடுத்தாளத் தொடங்கினார். எந்தக் கேனையன் என்ன சொன்னா என்ன, நம்ம வலையுலகின் கோட் வேர்ட் இன்னைக்கு சர்வைவல் ஆப் பிட்நெஸ்தான். நம்ம மனசுக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கும் தலைப்பாச்சே. நாமளும் மொக்கை போட்டு நாளாச்சே. அதான் இப்படி. மேல படியுங்க.

கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன். அதாங்க நம்மளை கண்டாலே உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, அதைத்தான் சொல்லறேன். அதுவும் வழக்கம் போல லிட்டர் கணக்குல உறிஞ்சுக்கிட்டு நாளைன்னைக்கு வா அப்படின்னு அனுப்பி வெச்சுது. (ஆமாம், இப்படி கொசுவைப் பத்தியே கொசுவர்த்தி சுத்தலாமோ?) ரெண்டு நாள் கழிச்சு தம்பதி சமேதரா போய் நின்னா கை நிறைய பேப்பரை வெச்சுக்கிட்டு உனக்கு கொழுப்பு ஜாஸ்தி அப்படின்னு ஒரு நான் வெஜ் சமையல் குறிப்பு மாதிரி ஆரம்பிச்சாரு. இதைச் சொல்லவா டாக்டருக்குப் படிச்சீரு, அதெல்லாம் படிக்காமலேயே தங்கமணி நேத்தே இதைச் சொல்லிட்டாங்களேன்னு நான் நேரம் காலம் தெரியாம சவுண்ட் விட, அதுக்குக் கிடைச்ச பரிசு தொடையில் நறுக்குன்னு ஒரு கிள்ளு. (யப்பா நகத்தை வெட்டுன்னு சொன்னா கேட்கிறாளா, ரத்தமே வந்திருச்சு).

இதையெல்லாம் காதிலேயே போட்டுக்காம நம்மாளு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அப்படின்னு கெமிஸ்ட்ரீ கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தது. நானும் வகுப்பில் இருப்பது போல் ரொம்ப கவனமா கண்ணைத் திறந்து வெச்சுக்கிட்டு தூங்கிக்கிட்டு இருந்தேன். நடுவில் சாப்பாடு என பேச்சு வர சடாரென முழிச்சுக்கிட்டேன். ஆனா அதுக்குள்ள அந்தாளு செய்ய வேண்டிய டேமேஜ் எல்லாமே செஞ்சுட்டாரு. எண்ணை கூடாதாம், சர்க்கரை கூடாதாம், பொரிக்கக்கூடாதாம், வறுக்கக்கூடாதாம். சொல்லிக்கிட்டே போறாரு. ஏற்கனவே அடிக்கடி உனக்கு என்ன ரெண்டு கொம்பான்னு கேட்கறா இதுல இலை தழை எல்லாம் சாப்பிட்டா என்ன ஆகுறது டாக்டர் என்று ஜோக் அடிக்கலாம் என நினைத்தேன். ஆனா தொடை இன்னும் வலிக்கவே பேசாமல் இருந்துவிட்டேன். அந்த மௌனத்தின் காரணம் தெரியாமல் நான் எதோ உடன்படுவதாக நினைத்து அடுத்த குண்டை தூக்கிப் போட்டார் நம்ம டாக்டன். (வாழ்க்கையில் இப்படி விளையாடறான் இனிமே என்ன மரியாதை. டாக்டர் எல்லாம் கிடையாது. டாக்டந்தான்!) என்னடான்னா உடற்பயிற்சி செய்யணுமாம். அந்த டாபிக்கில் வேற அரை மணி நேரம் லெக்சர். பலியாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு வெளிய வந்தாச்சு. அப்ப ஆரம்பிச்சதுய்யா தொல்லை.


அடுத்த படத்தில் அசினை ரெகமெண்ட் செய்யலாமா இல்லை பாவமா இருக்கே இந்த பாவனா, அதைத்தான் சேர்த்துக்கலாமா என கனவு காணும் காலை நேரத்திற்கு விழுந்தது கத்தரி, எழுந்து வாக்கிங் போங்க என்ற குரலுடன். டெய்லி வாக்கிங் போக நான் என்ன பக்கத்து வீட்டு ஜிம்மியா? என்று கேட்க நினைக்கும் போதே கன்றிப் போன தொடை ஞாபகத்திற்கு வர அதைத் தடவிக் கொண்டே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரெண்டு நாள் இப்படிப் போக நம்ம மூளையில் ஒரு ஐடியா உதித்தது. இப்பத்தானே இப்படித் தொரத்தற, இதோ பனிக்காலம் வந்தாச்சே, இப்ப என்ன செய்வீக, இப்ப என்ன செய்வீக என கோஷம் போட ஆரம்பித்தது வினை. வந்து இறங்கியது ஒரு ட்ரெட்மில்.

அதுக்காக இடம் செய்யப் போய் டீவி முன் இருந்த நல்லா படுத்துக் கொண்டு டீவி பார்க்கக் கூடிய சோபா காணாமல் போனது. ஆனந்தம் பார்க்கும் போது அரைமணி நேரம் பண்ணுங்க. சீரியல் பார்த்து எனக்கு கதை சொன்னா மாதிரியும் ஆச்சு. உடற்பயிற்சி பண்ணினா மாதிரி ஆச்சு என ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தாள் என் தர்மப்பத்தினி. அட, அந்த சுகன்யா புருஷன் ட்ரெயினில் வரேன்னு சொன்னா மாதிரி வரலை. இதைச் சொல்ல 7 நிமிஷம். இதுக்கு நடுவில 20 நிமிஷம் விளம்பரம், 3 நிமிஷத்துக்குப் பாட்டு வேற. இப்போ இதைப் பார்த்து கதை சொல்ல ஒரு அடியாள். என்ன கொடுமை சரவணன் இது? அந்த ட்ரெட்மில் சத்தத்தில் வசனம் எதுவுமே கேட்கலை. அது வேற விஷயம்.


இப்படியா 'நடந்துக்கிட்டு' இருந்த என் வாழ்க்கையில் விழுந்தது அடுத்த 'அடி'! சும்மா நடந்தா போதுமா , கை அப்போ சும்மா இருக்கே. உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சமமா பயிற்சி தரணும் அப்படின்னு அவங்க நண்பிகளில் எவளோ ஒருத்தி பத்த வைக்க வந்து இறங்கியது ஸ்டெப்பர். காலுக்கு படியேறுவது மாதிரியும், கைக்கு படகுகில் துடுப்பு போடுவது மாதிரியும் செய்யலாமாம். ஆனந்தத்திற்கு முன்னாடி கஸ்தூரி வருதே, அந்த நேரத்தில்தான் பையன் சாப்பிடறான், என்னால பார்க்கவே முடியறது இல்லை. அந்த நேரத்தில் நீங்க இந்த ஸ்டெப்பரைப் பண்ணிக்கிட்டே பார்த்து அந்த கதையையும் சொல்லிடுங்களேன் என ஆசையாய் வந்து கொஞ்சுகிறாள் என் தர்ம பத்தினி. கொஞ்சலா அது? கட்டளை இல்லையா, அதுவும் பார்க்க ஆரம்பிச்சாச்சு.


அவளுக்கு என்ன ஒரே ஒரு நண்பிதானா என்ன? ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு போட்டுக் குடுக்க, வீட்டில் சைக்கிள், எலிப்டிகல், அது, இது என காலில் இருந்து தொடை, வயிறு, கை, கழுத்து வழியாகத் தலை வரை செல்லும் என்று ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு மாதிரி பாகங்களுக்கு ஒன்றாக விதவிதமாக சாமான்கள் வந்திறங்கத் தொடங்கியது. நானும் கஸ்தூரியில் ஆரம்பித்து ஆனந்தம், மேகலா, அஞ்சலி, கோலங்கள், அரசி, லக்ஷ்மி என எல்லா சீரியல்களையும் பார்க்க வேண்டியதாகி விட்டது. ஆபீஸ் போவதனால் மத்தியான சீரியல்கள் எல்லாம் மிஸ் செய்கிறேன். நடுவில் நியூஸ் போடுகிறார்களோ சாப்பிட எதாவது கிடைக்கிறது. (அடேய் சன் டீவிக்காரனுங்களா, அதையும் எடுத்து எதாவது சீரியல் போட்டு என் அடிமடியில் கை வெச்சுடாதீங்கப்பா.)


சனி, ஞாயிறு சும்மா இருக்காம யோகா கிளாசுக்குப் போங்க என ஒரு கொடுமை. முதல் நாள் அங்க சவாசனம் செய்யும் போது பெரிசா குறட்டை விட்டுட்டேனாம். அதனால இனிமே வரவேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. (நல்ல சனிக்கிழமை எண்ணை எல்லாம் தேச்சு குளிச்சிட்டு அங்க போனா தூக்கம் வருது. அதுக்கு நான் என்ன பண்ண? நம்ம சத்தத்தில் மத்தவங்க எல்லாம் டிஸ்டர்ப் ஆகி முழிச்சுக்கிட்டாங்க போல!) நல்லதாப் போச்சுன்னு அதை நிறுத்தியாச்சு. அடுத்தது Tai Chi கிளாஸ் போறீங்களான்னு பேச்சு வந்தது. அந்தப் பேச்சு ஆரம்பிக்கும் போதே டாய் ச்சீ என நாம உரும, போனா போகுது என அதுவும் வேண்டாமுன்னு வெச்சாச்சு.


இதெல்லாம் ஒரு பக்கம் போயிக்கிட்டு இருக்க, நான் இளைக்கிறேனோ இல்லையோ (தங்கமணி - ஆபீஸில் கண்ட நேரத்தில் என்னதைத் திங்கறீங்களோ, உடம்பைப் பார்த்துக்கணும் அப்படின்னு அக்கறை இருந்தால்தானே.) நம்ம பர்ஸும், பேங்க் பேலன்ஸும் நல்லா இளைக்க ஆரம்பித்தது. ஒரு நாள் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் உடற்பயிற்சி சாதனங்கள் விற்கும் கடை ஓனரை எதேச்சையாய் ரோட்டில் பார்த்தேன். சாதாரணமா இருந்தவன், உதயகீதம் படத்தில் வர கவுண்டமணி மாதிரி, பென்ஸ் காரில் போய்க்கிட்டு இருந்தான். என்னடா, சாரி சாரி, என்ன சார், எப்படி இது அப்படின்னு விசாரிச்சா, சர்வைவல் ஆப் பிட்நெஸ் அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே போறான்!! (அப்பாடி, தலைப்பில் கொண்டு வந்து முடிச்சாச்சு, நடுவில ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் வெச்சிருந்தா, தமிழ் சினிமாக்கு கதை எழுதப் போய் இருக்கலாம்.)


டிஸ்கி:
இப்பதிவில் வரும் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. (பின்ன, தங்கமணி பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க இல்ல!)

74 comments:

said...

நீ எழுதினது எல்லாம் நகைச்சுவைன்னு வேற வகைப்படுத்திக்கற அளவு முத்தியாச்சான்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. அழுதுடுவேன்.

said...

ஹா ஹா ஹா

இப்பிடி ஆயிருச்சே ஒங்க நிலமை...மன்னிக்கனும்..நீங்க சொல்றவரு நெலமை. ஆனா அதெல்லாம் நல்லதுதாங்க. தங்கமணி சொல்லே தங்கம்னு எடுத்துக்கிட்டு செய்ங்க. மன்னிக்கனும். செய்யச் சொல்லுங்க.

said...

நல்லா சமாளிச்சுட்டீர்.. இது கற்பனைன்னுட்டு..

நல்லா இரும்வோய்...


கிள்ளுன இடத்துல மஞ்சளை அரைச்சு பூசும்... இதமா இருக்கும்

said...

//உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, //
ஒரு நிமிஷம் என்னப் பத்தி சொல்றீங்களோனு திக்னு ஆயிருச்சு..

எனிவே, சர்வைவல் ஆப் பிட்நெஸ் தியரி படி இப்படி அந்தக் கொசு ரத்தத்த உறிஞ்சுறது அதனோட இருப்ப நிலைநாட்டிக்கிறதுக்குத்தான்.. அதுனால சமத்தா தொடையக் காட்னீங்கன்னா.. வாரம் ஒரு ரவுண்ட் வந்து குடிச்சுட்டு பேசாம போயிடும். கொசுக்களின் ஜீவாதார பிரச்சனையை லைட்டாக எடுத்துக்க கூடாது.

அதுங்களோட இறங்கி களப்பணி செய்யலேன்னாலும் பரவாயில்ல, தலையில தட்டி அதுங்களோட உயிர எடுத்துடாதீங்க. எடுக்கிறதுக்கு உங்களுக்கு உரிமையும் கிடையாது. சரியா?

said...

:))))

said...

கொத்ஸ்! உம்ம மேல உள்ள அக்கறைய்யா அக்கறை இனிமேலாட்டம் புரிஞ்சு நடந்துகோங்க!

(ஏங்க அபிஅப்பா போல ஆளுங்க கூட மட்டும் நட்பு வச்சுகோங்க)

தங்கமணி பார்க்குறாங்களாம்!

said...

எனக்கு இந்த பிரச்சனையே இல்ல ஏற்கனவே பென்சில் மாதிரி தான் இருக்கேன்:-)

said...

வயசு ஆகுதுல அப்படினு நீங்க பீல் பண்ணியதுக்கு அர்த்தம் இப்ப தானுங்க எனக்கு புரியுது.

:-)

said...

//எனிவே, சர்வைவல் ஆப் பிட்நெஸ் தியரி படி இப்படி அந்தக் கொசு ரத்தத்த உறிஞ்சுறது அதனோட இருப்ப நிலைநாட்டிக்கிறதுக்குத்தான்.. அதுனால சமத்தா தொடையக் காட்னீங்கன்னா.. வாரம் ஒரு ரவுண்ட் வந்து குடிச்சுட்டு பேசாம போயிடும். கொசுக்களின் ஜீவாதார பிரச்சனையை லைட்டாக எடுத்துக்க கூடாது.

அதுங்களோட இறங்கி களப்பணி செய்யலேன்னாலும் பரவாயில்ல, தலையில தட்டி அதுங்களோட உயிர எடுத்துடாதீங்க. எடுக்கிறதுக்கு உங்களுக்கு உரிமையும் கிடையாது. சரியா? //

தனி ஒரு கொசுவை கூறிய போதிலும் பல கொசுக்கள் அது தங்களை கூறியது போல எடுத்துக் கொண்டது போல இருக்கே....

நாராயணா, வர வர இந்த கொசு தொல்லை தாங்கலடா.. ஏதும் மருந்து இருந்தா அடிச்சு கொல்லு... வேணாம் ஏதா இருந்தாலும் நம்ம ஆளு ஆயிட்டார்... நல்லா இருக்கட்டும்...

said...

Very Good

இங்கே நம்ம வீட்டில் தமிழ் வர்ற தொலைக்காட்சி ஒண்னும்
இல்லை. அதனாலே சாயந்திரம் 7 முதல் 7.45 வரை
ட்ரெட்மில் ஓட்டம் நம்ம ரங்கமணிக்கு:-)

6 முதல் 7 வரை கோ.கி.யின் டைம். அவனும் அதுலெ
ஓடறானான்னு கேக்கப்பிடாது.

அவனை மடியில் தூக்கி வச்சுக்கணும். அது அவன் 'நேரம்'.

இந்தக் கடமை யாருது?
சந்தேகம் வேறயா? நம்ம ரங்குவுக்குத்தான்:-)

said...

Ippadik kooda oruththar(neenga illai)
maattippaaraa??????
so.se.soo keLvippattu irukken.
Doc kaiyila soonyam vacchathai ippothan
paarkkiREn.
enjoy....:))))

said...

//வலிமையே வாழும் ( Survival of the Fittest)//
'வ'னாவுக்கு 'வ'னா போட்டு அர்த்தத்தை மாத்திட்டீங்களே வெண்பா வாத்தி... வலிமைக்கும் தகுதிக்கும் வித்தியாசம் இல்லையா?

//யப்பா நகத்தை வெட்டுன்னு சொன்னா கேட்கிறாளா//
உங்களுக்கு கொழுப்பு போல அவங்களுக்கு கால்ஷியம் சத்துன்னு நினைக்கிறேன்... இதைத்தான் நாங்க 'இயற்கையின் சமன்பாடு' அப்படின்னு சொல்வோம்...

//நம்மாளு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அப்படின்னு கெமிஸ்ட்ரீ கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தது. //
'நல்ல' கொழுப்புய்யா உமக்கு... அப்படின்னா செம கொழுப்புன்னு அர்த்தம்... 'கெட்ட' கொழுப்புன்னா என்னா அர்த்தம்?

//பாவமா இருக்கே இந்த பாவனா, அதைத்தான் சேர்த்துக்கலாமா என கனவு காணும் //
கதிரை பத்தி (அதாங்க நம்ம வலைப்பதிவர் தம்பி) கவலைப்படாம கனவு கண்டுகிட்டிருந்திருக்கீங்க... சாக்கிரதைப்பு.

//டெய்லி வாக்கிங் போக நான் என்ன பக்கத்து வீட்டு ஜிம்மியா? //
அப்ப 'அதுக்கு'தான் வாக்கிங் போனீங்களா? :-)) இப்பல்லாம் நாய்ங்களுக்கே சூப்பர் ட்ரெய்னிங் கொடுக்கறாங்களாம்...

//ஆனந்தம் பார்க்கும் போது//
இன்னுமா இது ஓடுது... இதான் survival of fittest-க்கு சரியான உதாரணம்...

//அந்த ட்ரெட்மில் சத்தத்தில் வசனம் எதுவுமே கேட்கலை.//
ஒரு கார்ட்லெச் ஹெட்போன் வாங்கி கொடுக்க சிபாரிசு செய்கிறேன். :-)0

//ஆபீஸ் போவதனால் மத்தியான சீரியல்கள் எல்லாம் மிஸ் செய்கிறேன்.//
அடடா... சீரியல் இருக்கட்டும்... ஆபிஸ் போகும்பொழுது 'உடற்பயிற்சி' என்னாகிறது? (தங்கமணி படிக்கிறாங்கல்ல?) ட்ரெட்மில்லுல நடக்கிற மாதிரியே துடுப்பு போட்டுகிட்டு ஆபிஸுக்கு நடந்துடுங்க... பர்ஸ் வெயிட் கொஞ்சம் மெதுவா குறையுமில்ல...

//பென்ஸ் காரில் போய்க்கிட்டு இருந்தான்//
கூடவே உங்க குடும்ப கொசுவும் போய்கிட்டு இருந்துச்சா? ஒரு குருப்பாத்தான்யா சுத்தறாங்க இவங்கல்லாம்...

//பின்ன, தங்கமணி பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க இல்ல!//
அவங்க பின்னூட்டமும் படிப்பாங்கன்ற நம்பிக்கையில... :-))

said...

நகைச்சுவை என்ற முறையில் இது சிரிக்க வைத்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேணும்.

கற்பனை எனச் சொல்லிவிட்டதால், இதில் இருக்கும் சில அதிகப்படியான தகவல்களைத் தள்ளிவிடலாம்.

ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவாக வந்திருக்க வேண்டிய ஒரு தலைப்பு.....ம்ம்...

said...

//(யப்பா நகத்தை வெட்டுன்னு சொன்னா கேட்கிறாளா, ரத்தமே வந்திருச்சு).//

:-))))
அதைக் கூட வெட்டி விடாம உங்களுக்கு என்ன அப்படி பிட்னஸ், போகா, ப்ரெட் மில்-னு பைத்தியம்? :-)

ஒரே சிரிப்பு தான் கொத்ஸ்!
இப்போ உங்க எடை என்ன, அதச் சொல்லுங்க!

said...

அஹ்ஹஹஹஹ், அட்டகாசம். இப்படி ஒரு நகைச்சுவை உணர்வு உமக்குள்ள எப்படி பொதச்சு வெச்சு இருந்தீங்க. ஆங், இப்பதான் ஞாபகத்துக்கு வருது. சன் டிவி வாங்கலையான்னு கேட்டதுக்கான அர்த்தம். வெளுத்து, துவைச்சு, தொங்கப்போட்டு இருக்கீங்க.

தங்கமணிக்கு:

ஆபீசு போயி என்ன போறாரு இவரு, கம்னு வீட்ல வேலை(work from home) செய்ய சொல்லி மீதி சீரியலையும் பார்த்து பதிவா போட சொல்லுங்க புண்ணியமா போவும். அப்படியே உங்க கண் பார்வையிலேயே மதிய சாப்பாடும் ஆயிடும். அப்புறம் ஃபுல் கண்ட்ரோல்ல இருப்பாரு இல்லே.

said...

திருமதி. இ.கொத்தனார் பார்வைக்கு,
என் சோகக்கதை

http://nunippul.blogspot.com/2006/11/blog-post_03.html

said...

வலியில்லாத வேதனைகள்!
கண்ட பதிவுகளைப் படிக்கறதச் சொல்லலே!அதெல்லாம் வலியுள்ள வேதனைகள்!
முப்பதிலே வலியே இருக்காது!அய்ம்பதிலே வேதனை தாங்காது!காதல் கடி மணம் இல்லை!அது முப்பது நாள்ளேயே வந்துடுமே!
சரி,சரி ரொம்ப அருக்காம சொல்லித் தொலையிறேன்.கேக்குறதே கவனமாக்கேட்டுத் தொலையுங்க!ஆண்,பெண் எல்லோருந்தான்.இது ஒன்னுலே தான் சாதி,மதம்,இனம் ஒரு வேடு பாடும் இல்லே!

அப்பா!சொல்லிடுறேன்!முப்பதிலேயே ஒழுங்கா வருசா வருசம் பாத்துடுங்கோ
இல்லாட்டி அய்ம்பதிலே அழுதுடிவீங்க!

சர்க்கரை,ரத்த அழுத்தம்,கொலெஸ்டிரால்!!!

மகாக் கெட்ட வார்த்தைகள்.வலியே தெரியாது, வேதனையோ வேதனை.ஒழுங்கா அடக்கி வச்சுடணும்!ஆமாம்,சரியா?

said...

பேசாம இருக்கிற எல்லா மெஷினையும் வெச்சி வீட்டிலேயே ஒரு ஜிம் ஆரம்பிங்க. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரியும் ஆச்சு.
சீரியசா, கொலஸ்டிரால்ரொம்ப ஜாஸ்தியா?

said...

//நீ எழுதினது எல்லாம் நகைச்சுவைன்னு வேற வகைப்படுத்திக்கற அளவு முத்தியாச்சான்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.//

சிரித்தேன் :)

said...

கொத்தண்ணா,

உள்குத்து புரியாமலேயே இவ்ளோ பின்னூட்டமா.. நடத்துங்க..

பதிவு பத்தி: ஒரு கவிஞர் சொன்னார்.. பெண்கள் பலவிதமாகச் சிந்திப்பார்கள், ஆனால், மனைவிகள் ஒரே விதமாகத்தான் சிந்திப்பார்கள்னு (இவ்ளோ பேருண்மையைச் சொன்ன கவிஞர் யாருன்னு தெரியணும்னா சுயவிலாசமிட்ட அஞ்சல்தலையை என் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்).

கவிவாக்கு பொய்க்குமா? என்ன, இங்கே குளிர்காலம் இல்லைன்றதால ட்ரெட்மில் எல்லாம் இல்லாம வெளிய போயிடறேன் ;)

said...

சூப்பர்..... ரசிச்சு படிச்சேன்.... :)

//அடுத்த படத்தில் அசினை ரெகமெண்ட் செய்யலாமா இல்லை பாவமா இருக்கே இந்த பாவனா, அதைத்தான் சேர்த்துக்கலாமா என கனவு காணும் காலை நேரத்திற்கு விழுந்தது கத்தரி,//

சாவித்திரியும், பத்மினியும் வரவேண்டிய வயசிலே அசினும், பாவனா'வா??? இப்பிடியெல்லாம் கனவு கண்டுட்டா நாமே யூத் ஆகிருவோமா என்னா??? :)

said...

//அவளுக்கு என்ன ஒரே ஒரு நண்பிதானா என்ன? ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு போட்டுக் குடுக்க, வீட்டில் சைக்கிள், எலிப்டிகல், அது, இது என காலில் இருந்து தொடை, வயிறு, கை, கழுத்து வழியாகத் தலை வரை செல்லும் என்று ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு மாதிரி பாகங்களுக்கு ஒன்றாக விதவிதமாக சாமான்கள் வந்திறங்கத் தொடங்கியது. //
:)))))

என்னைய்யா நகைச்சுவையிலும் இறங்கிட்டீர் போல நன்றாக வந்துள்ளது. நம்ம மார்கெட்டுலயும் கைய வைக்க ஆரம்பிச்சீட்ங்க போல...கலக்குங்க:)

said...

கொத்சு

நானும் ஜிம்முக்கு போகலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.ஜாகிங் மட்டும் போனா பத்தாதாம்.Unaerobic exercise கண்டிப்பா தேவைன்னு சொல்றாங்க

(விக்கி பசங்களில் உடல்பயிற்சி பத்தி ஒரு கட்டுரை போடுங்களேன்)

said...

இவர் டுபுக்குக்கு எதிராக, இந்த ஊரில சில புண்ணியவான்கள் ஏற்றி விட்டதற்காக ஒரு சேம்பில் பதிவு இட்டுள்ளார், இப்படியே அத்தனை கண்டத்தில்லேயிருந்தும் சிரிச்சுவை பதிவாளர்கள் வருவார்கள். (டுபுக்கு ஒழுங்கா பதிவு போடுவேன் என்று சொல்லி ஒரு மொக்கை பதிவு போட்டுள்ளதால் அடுத்த கண்டங்களின் சிரிச்சுவை இறக்குமதி ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது)

said...

என்னவோ தெரியலை நேற்று 2 முறை பின்னூட்டம் போட்டு "போ" என்றால் அப்படியே காணாமல் போய்விட்டது.
அதெப்படிங்க? பிடிச்ச சப்ஜெட் என்றால் உ.தமிழன் மாதிரி தட்டச்சு செய்திட்டீங்க?
தொடையில் கிள்ளுவதையெல்லாம் பொதுவில் போடனுமா? கிள்ளு வாங்காத ஆளுங்க எல்லாம் இன்னும் இருக்காங்க.
தெரியாததை சொல்லிகொடுக்காதீங்க. :-)
நல்ல வேளை என் மனைவியிடம் இந்த பக்கத்தைப் பற்றி சொல்லவில்லை!!

said...

எனக்கு என்னுமோ கற்பனை மாதிரி தெரியலையே ;)

//கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன//
இது கூடவா கற்பனை???

said...

நான் பார்த்த கொசு இந்த மாதிரி லெக்சர் எல்லாம் தரலை கொத்ஸ். தப்பிச்சேன். லெட்டர்ல அனுப்பிச்சாங்க. எங்க வீட்டுலயும் ட்ரெட் மில் இருக்கு. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அதுல ஓடுவேன். :-) தங்கமணி அவ்வளவா தொந்தரவு செய்றது இல்லை. நல்லவேளை அவங்களுக்கு தமிழ்மணம், வலைப்பதிவுன்னாலே ரொம்ப வெறுப்பு. இந்த இடுகையைக் கட்டாயம் படிக்க மாட்டாங்க. :-)

said...

ஜிம்...யோகா...டாய் ச்சீ...சீரியல்ஸ்...

ஒரு saying ஞாபகத்துக்கு வருது...

"There's always a first time"

ஆனா உஷார் படுத்துனதுக்கு ரொம்ப நன்னி வாத்தியாரே...கன்னிப் போன தொடையை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கறேன் இனிமேலே...
:)

said...

//ஒரு நிமிஷம் என்னப் பத்தி சொல்றீங்களோனு திக்னு ஆயிருச்சு..//

அப்போ அந்த டாக்டன் நம்ம மருந்து இல்லிங்களா கொத்ஸு?
:)

said...

ரொம்பவே எஞ்சாய் பண்ணிப் படிச்சேன். :)

said...

நாங்கள் survival off the fit test :-)

said...

இங்கே பழைய என் பதிவொன்று உடற்பயிற்சி பற்றி (சீரியசா)http://reallogic.org/thenthuli/?p=227

said...

Some more links: http://www.tamiloviam.com/unicode/08110505.asp

http://www.tamiloviam.com/unicode/08180505.asp

said...

அடேய் வந்த பின்னூட்டத்துக்கு பதில் போட முடியாம என்னடா வேலை எனக் கேட்பவர்களுக்கு... விரைவில் பதில் வரும். :))

said...

நகைச்சுவயா சொன்னாலும் நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க.

ஆரோக்கியமே இளமை கடன் இல்லாமல் இருப்பவனே பணக்காரன்.

மங்களூர் சிவா

said...

ஹிஹிஹிஹி, இனிமேல் வந்துட்டுப் போனதுக்கு அடையாளம் வச்சுடறேன். இந்த முறை கொஞ்சம் நாள் ஆயிடுச்சு வர! உங்க கொலஸ்ட்ராலைக் கண்டுபிடிக்க இத்தனை வருஷம் ஆச்சா உங்க தங்கமணிக்கு? ரொம்பவே அப்பாவியா இருப்பாங்க போலிருக்கு?
அது சரி, இன்னுமா "ஆனந்தம்" ஓடிட்டு இருக்கு? கஷ்ட காலம்! முடிஞ்சிருக்கும்னு நினைச்சு ஆனந்தமா இருந்தேனே! :P

said...

ஹிஹிஹிஹி, அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேன், ராமநாதனுக்கு வந்த சந்தேகம் தான் எனக்கும் முதலில் வந்துச்சு! அப்பாடி நம்மாலே முடிஞ்சது!

said...

பின்னே, என்னோட பின்னூட்டம் வராமல் பதில் சொல்ல முடியுமா என்ன? :P

said...

//இப்பிடி ஆயிருச்சே ஒங்க நிலமை...மன்னிக்கனும்..நீங்க சொல்றவரு நெலமை. ஆனா அதெல்லாம் நல்லதுதாங்க. தங்கமணி சொல்லே தங்கம்னு எடுத்துக்கிட்டு செய்ங்க. மன்னிக்கனும். செய்யச் சொல்லுங்க.//

ஜிரா, அப்படியே செய்யறேங்க. ஐ மீன் செய்யச் சொல்லறேங்க! :-D

said...

//நல்லா சமாளிச்சுட்டீர்.. இது கற்பனைன்னுட்டு..

நல்லா இரும்வோய்...//

ஹிஹி


//கிள்ளுன இடத்துல மஞ்சளை அரைச்சு பூசும்... இதமா இருக்கும்//

அடுத்த முறைக்கு நல்ல ஐடியாவா இருக்கே! :))

said...

////உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, //
ஒரு நிமிஷம் என்னப் பத்தி சொல்றீங்களோனு திக்னு ஆயிருச்சு..//

அதான் எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு அப்படின்னு சொல்லி இருக்கேனே. அப்புறம் எப்படி உங்களை... ஹிஹி

//சரியா?//

சரியாவா!! என்னென்னவோ பதிவு எல்லாம் படிச்சிட்டு சரியான பின்நவீனத்துவவியாதி ஆகிட்டீரு போல! வாழ்த்துக்கள் தோழரே! :))

said...

//கண்மணி said...

:))))//

என்ன கண்மணி? அம்புட்டுதானா? :))

said...

//கொத்ஸ்! உம்ம மேல உள்ள அக்கறைய்யா அக்கறை இனிமேலாட்டம் புரிஞ்சு நடந்துகோங்க!

(ஏங்க அபிஅப்பா போல ஆளுங்க கூட மட்டும் நட்பு வச்சுகோங்க)

தங்கமணி பார்க்குறாங்களாம்!//

இதெல்லாம் நீரா நெனைச்சுக்கிடறது. அந்த அபிஅப்பா சும்மா டிராமா போடற மாதிரித் தெரியுது. அந்தாள் கிட்ட சகவாசம் வெச்சுக்கிட்டீங்க... ஜாக்கிரதை. இப்படி இல்ல சொன்னாங்க. அம்புட்டு சீக்கிரம் அவங்களை ஏமாத்த முடியுமா?

said...

//எனக்கு இந்த பிரச்சனையே இல்ல ஏற்கனவே பென்சில் மாதிரி தான் இருக்கேன்:-)//

யோவ் இதுல பென்சில் பேனா எல்லாம் ஒண்ணும் கிடையாது. மொதல்ல கொசு கிட்ட போயி எல்லா செக்கப்பும் பண்ணிக்குங்க.

said...

//வயசு ஆகுதுல அப்படினு நீங்க பீல் பண்ணியதுக்கு அர்த்தம் இப்ப தானுங்க எனக்கு புரியுது.//

புலி, சரியான சமயத்தில் போட்டு வாங்கற பாத்தியா? இருக்கட்டும் இருக்கட்டும்!

said...

//ஏதும் மருந்து இருந்தா அடிச்சு கொல்லு...//

யோவ் என்னதான் என்னைப் பார்த்து அப்படி எல்லாம் சொன்னாலும் மருந்து நம்மாளு. அவரை அடிச்சு எல்லாம் கொன்னுடாதீங்க! :))

said...

//அதனாலே சாயந்திரம் 7 முதல் 7.45 வரை
ட்ரெட்மில் ஓட்டம் நம்ம ரங்கமணிக்கு:-)//

டெய்லி முக்கால் மணி நேரமா?! நல்லா இருங்க டீச்சர்!! :))

//இந்தக் கடமை யாருது?
சந்தேகம் வேறயா? நம்ம ரங்குவுக்குத்தான்:-)//

சரியாப் போச்சு, இந்த விஷயத்தில் எல்லாம் சந்தேகம் வருமா டீச்சர்!

said...

//Doc kaiyila soonyam vacchathai ippothan
paarkkiREn.
enjoy....:))))//

ஆஹா, இதுல இம்புட்டு சந்தோஷமா? நல்லா இருங்கம்மா!! :))

said...

//'வ'னாவுக்கு 'வ'னா போட்டு அர்த்தத்தை மாத்திட்டீங்களே வெண்பா வாத்தி... வலிமைக்கும் தகுதிக்கும் வித்தியாசம் இல்லையா?//

ஏம்பா ஸ்ரீதர், பிட்டஸ்ட் அப்படின்னா இப்படிக்கூட பொருள் பண்ணிக்க முடியாதா?

//இதைத்தான் நாங்க 'இயற்கையின் சமன்பாடு' அப்படின்னு சொல்வோம்...//
இதை நான் அவங்க கிட்ட சொல்லறேன். என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா? :))

//'நல்ல' கொழுப்புய்யா உமக்கு... அப்படின்னா செம கொழுப்புன்னு அர்த்தம்... 'கெட்ட' கொழுப்புன்னா என்னா அர்த்தம்?//

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உமக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். :)

//கதிரை பத்தி (அதாங்க நம்ம வலைப்பதிவர் தம்பி) கவலைப்படாம கனவு கண்டுகிட்டிருந்திருக்கீங்க... சாக்கிரதைப்பு.//

தம்பி கேட்டாருன்னா வேற பேரைச் சொல்லிருவோமில்ல....

//கூடவே உங்க குடும்ப கொசுவும் போய்கிட்டு இருந்துச்சா? ஒரு குருப்பாத்தான்யா சுத்தறாங்க இவங்கல்லாம்...//

கூட உக்கார்ந்து இருந்த ஆளு யாரோ பார்த்தா மாதிரி இருக்கே, ஆனா ஆள் நம்ம பக்கம் திரும்ப மாட்டேங்கறாரேன்னு நினைச்சேன். இதுதான் மேட்டரா? :)

//அவங்க பின்னூட்டமும் படிப்பாங்கன்ற நம்பிக்கையில... :-))//

உம்ம நம்பிக்கை நாசமாப் போக!! :)))

said...

//ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவாக வந்திருக்க வேண்டிய ஒரு தலைப்பு.....ம்ம்...//

இப்போ என்ன, நீங்க விக்கியில் பதிவாப் போட்டா நாங்க எல்லாம் படிப்போமில்ல.

said...

//அதைக் கூட வெட்டி விடாம உங்களுக்கு என்ன அப்படி பிட்னஸ், போகா, ப்ரெட் மில்-னு பைத்தியம்? :-)//

ஆஹா, போகா ப்ரெட் மில் என சப்ஸி மண்டியே இருக்கே உங்க பின்னூட்டத்தில். :)))

//ஒரே சிரிப்பு தான் கொத்ஸ்!
இப்போ உங்க எடை என்ன, அதச் சொல்லுங்க!//

அதைச் சொல்லறதுக்கு முன்னாடியே இம்புட்டு சிரிப்பு அதை வேற சொல்லணுமா?

said...

//வெளுத்து, துவைச்சு, தொங்கப்போட்டு இருக்கீங்க. //

யோவ் இருக்கீங்க வா இல்லை இருக்காங்க வா? சரியாப் படிச்சு பதில் சொல்லும்வோய்!

//தங்கமணிக்கு://

அவங்க பின்னூட்டமெல்லாம் படிக்கிறது இல்லை சாமியோவ். அதுவும் வெளியிடப் படாத பின்னூட்டங்களை சத்தியமாப் படிக்கிறது இல்லை.

said...

//திருமதி. இ.கொத்தனார் பார்வைக்கு,
என் சோகக்கதை //

உஷாக்கா, இதுக்குப் பதிலா ஒரு ஸ்வீட் பதிவு போட்டீங்களே, அதைக் காண்பிச்சுட்டேன்!! :)))

said...

//ஒழுங்கா அடக்கி வச்சுடணும்!ஆமாம்,சரியா?//

சரியே!!

said...

//பேசாம இருக்கிற எல்லா மெஷினையும் வெச்சி வீட்டிலேயே ஒரு ஜிம் ஆரம்பிங்க. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரியும் ஆச்சு.//

அட கற்பனைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களே! வீட்ல அம்புட்டு எல்லாம் இல்லை. ஒரு ட்ரெட்மில், ஒரு சைக்கிள். இதான் இருக்கு. :))

//சீரியசா, கொலஸ்டிரால்ரொம்ப ஜாஸ்தியா?//

கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனா இது முன்னமே தெரியும். என்ன பண்றேன்னு கேட்காதீங்க. இதுவரை ரொம்ப ஒண்ணும் பண்ணலை. :(

said...

//நீ எழுதினது எல்லாம் நகைச்சுவைன்னு வேற வகைப்படுத்திக்கற அளவு முத்தியாச்சான்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.//

சிரித்தேன் :)//

நல்லா சிரியுங்க. நோயே வராதாம்.

நல்ல வேளை திரும்ப வந்தீங்களே!! :))

said...

//உள்குத்து புரியாமலேயே இவ்ளோ பின்னூட்டமா.. நடத்துங்க..//

ஆமாம் பெனாத்தலாரே. நீரும் மருந்தும் போட்டுக் குடுத்துக் கூட ரொம்ப எதிர்வினை இல்லையே! :))

//என்ன, இங்கே குளிர்காலம் இல்லைன்றதால ட்ரெட்மில் எல்லாம் இல்லாம வெளிய போயிடறேன் ;)//

எதாவது பார்க் போய் கதை எழுதறேன்னு கதை விடறீங்களா? வைரவா, யாரு பெத்த பிள்ளையோ!!!

said...

//சாவித்திரியும், பத்மினியும் வரவேண்டிய வயசிலே அசினும், பாவனா'வா??? இப்பிடியெல்லாம் கனவு கண்டுட்டா நாமே யூத் ஆகிருவோமா என்னா??? :)//

என்னை நேர்ல பார்த்த நேரத்தில் இருந்து உமக்கு ஒரே பொறாமையா இருக்கு!!!

said...

//என்னைய்யா நகைச்சுவையிலும் இறங்கிட்டீர் போல நன்றாக வந்துள்ளது.//

வசிஷ்டர் வாயால பிரம்மரிஷியா?! நன்றி நன்றி. :))

// நம்ம மார்கெட்டுலயும் கைய வைக்க ஆரம்பிச்சீட்ங்க போல...கலக்குங்க:)//

நான் எல்லாம் எப்பவாவது ஒரு பதிவு போடற ஆளு. நீர் எல்லாம் நகைச்சுவையை சுவாசிக்கிறவங்க. :))

said...

//நானும் ஜிம்முக்கு போகலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.//

நானும் நினைச்சுக்கிட்டு இருக்கிறதுலேயே நேரம் போயிடுது!! அப்புறம் எங்க போக?!

//(விக்கி பசங்களில் உடல்பயிற்சி பத்தி ஒரு கட்டுரை போடுங்களேன்)//

குறிப்பிட்டு எதாவது சொல்லணுமா? நம்ம மருத்துவர்களை எழுதச் சொல்லலாமே....

said...

//இப்படியே அத்தனை கண்டத்தில்லேயிருந்தும் சிரிச்சுவை பதிவாளர்கள் வருவார்கள்.//

இளா, இதுதான் டுபுக்குவிற்கு வந்த கண்டமா? கண்டனமா?

said...

//என்னவோ தெரியலை நேற்று 2 முறை பின்னூட்டம் போட்டு "போ" என்றால் அப்படியே காணாமல் போய்விட்டது.//

போய் சேரு அப்படின்னு சொல்லாம போ அப்படின்னு சொன்ன இதுதான் நடக்கும். :))

//அதெப்படிங்க? பிடிச்ச சப்ஜெட் என்றால் உ.தமிழன் மாதிரி தட்டச்சு செய்திட்டீங்க?//

நிறுத்த தெரியாதே. அதான் அவனை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் அப்படின்னு வசனம் பேசிக்கிட்டு இருக்கோம். :))

//நல்ல வேளை என் மனைவியிடம் இந்த பக்கத்தைப் பற்றி சொல்லவில்லை!!//

துரோகம் செஞ்சுட்டீங்களே குமார்.... :))

said...

//எனக்கு என்னுமோ கற்பனை மாதிரி தெரியலையே ;)//

நானும் கற்பனைன்னு சொன்னது பாத்திரங்களும் நிகழ்வுகளையும்தானே தவிர விபரங்களை இல்லையே...

said...

//தங்கமணி அவ்வளவா தொந்தரவு செய்றது இல்லை.//

குமரன், நீங்க டியூஷன் கிளாஸ் எதாவது எடுத்தா நாங்க எல்லாரும் சேர்ந்துப்போமே!! :))

said...

//கன்னிப் போன தொடையை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கறேன் இனிமேலே...//

அது!!! :))

வாய்யா வா! வெல்கம் டு தி கிளப். :)

said...

//அப்போ அந்த டாக்டன் நம்ம மருந்து இல்லிங்களா கொத்ஸு?
:)//

மருந்துக்கு எழுதின பதிலைப் பார்க்கவும். :))

said...

//ரொம்பவே எஞ்சாய் பண்ணிப் படிச்சேன். :)//

நன்றி இரவி.

said...

//நாங்கள் survival off the fit test :-)//

பாலா, டெஸ்ட் எல்லாம் பண்ணிக்காத வரை இப்படி சிரிப்பான் போடலாம். முதலில் அதைப் போய் பண்ணிக்குங்க.

said...

//இங்கே பழைய என் பதிவொன்று உடற்பயிற்சி பற்றி (சீரியசா)http://reallogic.org/thenthuli/?p=227//

//Some more links: http://www.tamiloviam.com/unicode/08110505.asp

http://www.tamiloviam.com/unicode/08180505.asp//

சுட்டிகளுக்கு நன்றி பத்மா.

said...

//நகைச்சுவயா சொன்னாலும் நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க.

ஆரோக்கியமே இளமை கடன் இல்லாமல் இருப்பவனே பணக்காரன்.//

நன்றி சிவா. ஆமாம் ஆரோக்கியம்தான் முக்கியம்.

said...

//ஹிஹிஹிஹி, இனிமேல் வந்துட்டுப் போனதுக்கு அடையாளம் வச்சுடறேன். இந்த முறை கொஞ்சம் நாள் ஆயிடுச்சு வர!//

இந்த முறையாவது வந்துட்டுப் போனீங்களே!!

//உங்க கொலஸ்ட்ராலைக் கண்டுபிடிக்க இத்தனை வருஷம் ஆச்சா உங்க தங்கமணிக்கு? ரொம்பவே அப்பாவியா இருப்பாங்க போலிருக்கு?//

அவங்க முன்னமே கண்டுபிடிச்சாச்சு. இந்த டாக்டந்தான் இப்போ படுத்தினது.

//அது சரி, இன்னுமா "ஆனந்தம்" ஓடிட்டு இருக்கு? கஷ்ட காலம்! முடிஞ்சிருக்கும்னு நினைச்சு ஆனந்தமா இருந்தேனே! :P//

இப்போ நீங்கதான் அப்பாவியாத் தெரியறீங்க. :))

said...

//ஹிஹிஹிஹி, அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேன், ராமநாதனுக்கு வந்த சந்தேகம் தான் எனக்கும் முதலில் வந்துச்சு! அப்பாடி நம்மாலே முடிஞ்சது!//

அதான் அவர் சந்தேகத்துக்குப் பதில் சொல்லியாச்சே. இப்போ என்ன தனியா..

said...

//பின்னே, என்னோட பின்னூட்டம் வராமல் பதில் சொல்ல முடியுமா என்ன? :P//

வந்ததுதான் வந்தீங்க. சும்மா யுவராஜ் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடிச்சா மாதிரி வந்த வேகத்தில் மூணு பின்னூட்டம் போட்டுட்டீங்க. இனிமே பதில் சொல்லாம இருக்க முடியுமா? அதான் சொல்லியாச்சு!! :))

said...

=)=)