Thursday, August 28, 2008

புதசெவி - 8/28/2008

புதிர் போட்டி எல்லாம் போட்டா புதசெவியை மறந்து போயிடுவியான்னு பஞ்ச் அண்ணா விட்ட குத்து ஒண்ணோட விளைவா இந்த மாதத்துப் புதசெவி பதிவு. அதனால இந்தப் பதிவு பிடிச்சு இருந்தா அவருக்கு நன்றி சொல்லுங்க. தானிப்படையும் அவர் வீட்டுக்கே அனுப்பிடுங்க.

செய்தி - 1

வழக்கம் போல நம்ம நாட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். நம்ம மத்திய அரசு கவிழாம இருக்க என்னென்னமோ பேரம் எல்லாம் நடந்து இருக்கு. மாநில அரசு, பல கோடி பணம் அப்படின்னு எல்லாம் நடந்தது எல்லாம் பற்றிப் படிச்சு இருப்பீங்க. ஆனா கடவுளோட போட்ட ஒரு ஒப்பந்தம் பற்றித் தெரியுமா? அரசைக் காப்பாற்ற கடவுளுக்குக் கொடுத்த விலை நாலு எருமைகளும் இருநூறு ஆடுகளும். நடந்தது அஸ்ஸாம் மாநிலத்தில். மேற்கொண்டு படிக்க இங்க போங்க.

பஞ்ச் : 4 எருமை, 200 ஆடா? சில பல கோழிகளையும் சேத்தா 271 வருதா பாரும் அய்யா! பலி ஆனதும் மேஜிக் பிகரா இருக்கும்! அது மட்டுமில்லாம சிவப்பு சட்டைக்காரங்க தோல்விக்கு கோயிலையே சிவப்பு சாயம் பூசிட்டாங்களாக்கும். நல்ல வேளை அஸ்ஸாமில் அம்மா ஆட்சி இல்லை.

செய்தி - 2

மாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடிச்சு இருக்காங்கன்னா பெரும்பாலான மாடுகள் மேயும் பொழுதோ, களைப்பாறும் பொழுதோ தெற்கு - வடக்காகத்தான் நிற்கின்றனவாம். இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மேலும் மாடுகளுக்கு இயற்கையிலேயே வடதிசை அறியக் கூடிய ஆற்றல் இருக்கிறதா என சோதனைகள் மேற்கொள்ளப் போகிறார்களாம். தேனீக்கள், கறையான்கள் போன்றவற்றிக்கு இது போன்ற பூமியின் காந்தசக்தியின் உதவி கொண்டு வடதிசை அறியும் ஆற்றல் உண்டு என்பது நிரூபணமான ஒன்றாம். மாடுகள் தவிர்த்து மற்ற பெரிய மிருகங்களும் இது போன்ற ஆற்றல் உண்டா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவிருக்கிறதாம். செய்தி இங்கே.

பஞ்ச்: தெற்கு வடக்கா நின்னா மட்டும் மாட்டுக்கு ராஜ்யசபா சீட்டா கிடைக்கப்போவுது? யாராச்சும் கருணை காமிச்சு, நிதி கொடுத்து, பிச்சை போடணும்.. அட அட்லீஸ்ட் சரியான குடும்பத்திலாவது பிறக்கணும். அப்பதான் அதெல்லாம் நடக்கும்!

செய்தி - 3

லண்டனில் ஒருவர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வர ஒரு ஓரமாய் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அங்குள்ள தடங்களில் மின்சாரம் பாய்வதினால் அவர் சிறுநீர் கழிக்கையில் அதன் மூலம் கடத்தப்பட்ட மின்சாரம் அவர் உடலைத் தாக்கி அவர் இறந்தே விட்டார்! மனிதர் போலந்தில் இருந்து லண்டனைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஒரு உல்லாசப் பயணி. மேலும் விபரங்கள் இங்கே.

பஞ்ச்: தண்ணீரில் இருந்து ரிவர்ஸுல மின்சாரம் எடுக்க முயற்சித்த விஞ்ஞானியைப் பற்றி கிண்டலாகச் செய்தி வெளியிடும் கொத்தனாருக்கு பலத்த கண்டனங்களும், மின்சார மூச்சா போனவருக்கு அழ்ந்த அனுதாபங்களும்! ஆனா நம்ம ஊர் ரயில் நிலையங்கள் சுத்தமாக ஒரு வழி கிடைத்தாற்போல இருக்கிறதே!

செய்தி - 4

அப்படியே நம்ம துளசி ரீச்சர் ஊருக்குப் போகலாம். அங்க உள்ள நீதிமன்ற உத்தரவு ஒண்ணைப் பார்த்து புதுசா அப்பா அம்மா ஆகப் போறவங்களுக்கு எல்லாம் கலக்கமா இருக்காம். விஷயம் என்னன்னா, குழந்தைகளுக்கு கிறுக்குத்தனமான பெயரை எல்லாம் வைப்பது அவர்களுக்கு கொடுமை இழைப்பதாகும் அப்படின்னு சொல்லி அப்படி ஒரு பெயரை வைத்த பெற்றோரிடம் இருந்து குழந்தையைப் பிரித்தே விட்டார்கள். அதனால் வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும் என நினைத்தவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்கிறார்களாம். செய்தி இங்கே.

பஞ்ச் : அப்ப நியூசிலாந்துல கிவிநிதி, நியூசிகொண்டான் அப்படின்னு எல்லாம் தலைவருங்க பேரு வைக்கறதில்லையா?அப்படியே பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தறேன் பேர்வழி எனச் சொல்லி நம்ம நாக்கை உடையச் செய்பவர்களுக்கும் இப்படி எதாவது செஞ்சாத் தேவலாம்.

செய்தி - 5

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி. ஜப்பானில், ஷிபுகாவா என்ற நகரில் சமீபத்தில் ஒரு திருவிழா நடைபெற்றது. தொப்புளின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்தத் திருவிழா நடைபெற்றதாம். உடலின் பாதியில் இருக்கும் தொப்புள் முக்கியமான ஒரு பாகமாக ஜப்பானில் கருதப்படுகிறதாம். அதனைக் கொண்டாடும் இந்த விழா நடைபெறும் இந்த நகரோ ஜப்பானில் நடுவாக உள்ள இடமாம். தொப்புளைப் பிரதானமாகக் காண்பிக்கும் வகையில் வயிற்றில் பலவித படங்கள் வரைந்து கொண்டு ஆட்டமும் பாட்டமுமாக அன்றையப் பொழுதைக் கழித்தார்களாம் இந்த விழாவில் பங்கு கொண்டவர்கள். மேலும் படிக்க.

பஞ்ச்: அட.. ஜப்பான் கரங்க எல்லாத்துலையும் லேட்டுதான். நாங்க பம்பரம் மட்டுமா வுட்டோம்? ஆம்லெட்டு சுட்டோம், தக்காளி உருட்டுனோம்.. தேமுதிக எப்ப ஜப்பான் கிளை ஆரம்பிக்கப்போறாங்க? சின்னக்கவுண்டர் டோக்யோ தலைமை மன்றத்துக்கு flex digital பேனருக்கு ஆர்டர் கொடுத்தாச்சா?

செய்தி - 6

இனப் பாகுபாடு காரணமாக தண்ணீர் கிடைக்காமல் தவித்த மக்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு தர உத்தரவு. தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்டதால் மற்றவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட பொழுது இவர்களுக்கு இணைப்பு மறுக்கப்பட்டதாம். பொது நீர் இணைப்பு இல்லாததால் தங்கள் நிலத்தில் கிணறு தோண்டியோ அல்லது மழைத் தண்ணீரை சேர்த்து வைத்து அதனையே குடிக்க, குளிக்க, சமைக்க என்று உபயோகித்து வந்தனராம். எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்ததால் எனக்கு என் குழந்தைப் பருவத்தில் நாங்கள் செய்வது வித்தியாசமாகப் படவில்லை என்று சொல்கிறார் ஒருவர். இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடக்கப்பட்டு அதன் மீது தீர்ப்பும் வந்துவிட்டது. இவர்களுக்கு இழப்பீடாக கிட்டத்தட்ட 44 கோடி ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் இது பற்றிப் படிக்க.

பஞ்ச் - ஈராயிரம் ஆண்டுகளாக எம்மக்களை வாட்டி வந்த கொடுமை எங்கெங்கிலும் வந்து ஏறியிருப்பதை முதலில் காணாமல் கொலை வாளினை எடுக்க உ பி களுக்கு ஆணை இட்டுவிட்டேனே! சரி போகட்டும்.. ஜனநாயக ஆட்சி அமையும் வரையில் அமைதி காக்கச் சொல்லி விட்டால் போகிறது!

கடைசியா ஒரு போனஸ்!

மெய்ப்புல அறைக்கூவலர் என்றால் என்ன? சரியான பதில் சொல்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவும். மற்றவர்கள் இங்கே சொடுக்கிப் பார்க்கவும்.

பஞ்ச் - இதுக்கு மேல என்ன சொல்ல! மெய்ப்புல கைத்தொப்பியர் அப்படின்னு போடாம விட்டாங்களேன்னு வேணா சந்தோஷப்பட்டுக்குங்க. அம்புட்டுதான்.

53 comments:

said...

வழக்கம் போல புகழும் இகழும் பஞ்சாருக்கே!!!

said...

மீ த செகண்ட்...

தனக்குதானே பின்னூட்டம் போட்டு கொல்லும் கொத்ஸ் ஒழிக!! :)

said...

பின்னூட்ட கயவாளி கொத்ஸ்'ன்னு சொல்லவந்தது விட்டுப்போச்சு... :)

said...

//யாராச்சும் கருணை காமிச்சு, நிதி கொடுத்து, பிச்சை போடணும்.. அட அட்லீஸ்ட் சரியான குடும்பத்திலாவது பிறக்கணும். அப்பதான் அதெல்லாம் நடக்கும்!//

ரசிச்சேன்

said...

கொத்தனாரய்யா, இதுக்கு பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன், எதுக்கும் பக்கத்தில ஆஸ்பத்திரி இருக்கான்னு துரைகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்து போடுறேனே. இவன் "புதன்கிழமை தண்ணியடிக்க செவ்வாய்கிழமையிலிருந்து விளக்கம்" சொல்வோர் சங்கம்

said...

:-)))...

said...

எங்க இருந்து தான் இந்த செய்தியெல்லாம் பிடிக்கறீங்களோ...

பஞ்ச் எல்லாம் சூப்பரு :)

said...

செய்தி - 4

செய்தி இங்கே. Link not set

said...

பின்னூட்டக் கயமைன்னா என்னங்க???? நமக்கு ஒண்ணுமே புரியலை! :P

said...

எல்லாஞ்சரிங்க. தேமுதிகவை இழு(ழி)க்கிற அளவுக்கு எப்போ பெரிய ஆள் ஆனீங்க?

said...

//பின்னூட்ட கயவாளி கொத்ஸ்'ன்னு //

பின்னூட்டம் கொண்டான்னு பேர் வெச்சா நியூசில என்ன பண்ணுவாங்க?

இது மக்களா வெச்ச பேரு நானா வெச்ச பேருன்னு பஞ்ச் அடிக்க முடியாதா?

said...

ஒலிம்பிக்ஸ் செய்தி எதுவும் இல்லையா? வர வர புதசெவி பழைய பேப்பரா போய்டுச்சிப்பா. சூட்டை ஏத்துங்க சாமி.

பஞ்ச் அண்ணா என்ன கொடநாட்டுல ரெஸ்ட் எடுத்திட்டு இருந்தாரா? கமெண்டுல ஒரே கட்சி வாசம் :(

said...

போடறது தான் போடறீர், இந்த செய்திகளின் ஜிஸ்டு ஒன்றையும் பதிவிலேயே கொடுத்து விட்டால், காலில் வென்னீர் கொட்டிய என் போன்ற பாவிகள் படிக்கலாம். (இதுல செம கடுப்பு என்னான்னா, ஒவ்வொரு முறையும் இந்த செய்திகள் நான் படித்த பிறகு இங்கே வலையேற்றப் படும். வென்னீர்/ஆணி அதிகம் இந்த முறை...:-(

//எல்லாஞ்சரிங்க. தேமுதிகவை இழு(ழி)க்கிற அளவுக்கு எப்போ பெரிய ஆள் ஆனீங்க?// இளா, இது பஞ்ச்!! பரமசிவத்துக்கே பஞ்ச்!

said...

//மீ த செகண்ட்...

தனக்குதானே பின்னூட்டம் போட்டு கொல்லும் கொத்ஸ் ஒழிக!! :)//

மீ த பர்ஸ்ட் முடியாட்டாலும் மீ த செகண்ட் என சவுண்ட் விடும் ராமுத் தம்பி வாழ்க!!

இந்த மொதப்பின்னூட்ட வியாதி நம்ம கிட்ட ரொம்ப நாளா இருக்கிறது. நான் என்ன செய்ய? சில டீக்கடைக்காரங்க மொத டீயைப் போட்டு தானே குடிப்பாங்களாம். இல்லை போணி பண்ணறவங்க கைராசியை சந்தேகப்பட வேண்டி வரும் இல்ல.

said...

/////"புதன்கிழமை தண்ணியடிக்க செவ்வாய்கிழமையிலிருந்து விளக்கம்" சொல்வோர் சங்கம்////

புதன்கிழமை தண்ணியடிக்க செவ்வாய்க்கிழமையிலிருந்து விளங்காமல்
வேலை பார்ப்போர் சங்கம்' என்றிருப்பதே சரி!

said...

மெய்ப்புல அறைக்கூவலர் - நானும் என்னவா இருக்குமுன்னு ஆர்வமா பாத்தா... ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு. எங்கேயிருந்து இப்படி வார்த்தைகளை புடிக்கிறாங்களோ... எல்லாருக்கும் புரியும் படி எளிய தமிழில் இருந்தால்தானே நல்லது.

அதுசரி.. இது உங்க கண்ணில் எப்படி மாட்டுச்சு? எங்க புடிச்சீங்க?

said...

// பின்னூட்ட கயவாளி கொத்ஸ்'ன்னு சொல்லவந்தது விட்டுப்போச்சு... :)//

எந்தப் பட்டம் குடுத்தாலும் கவுஜ வாசிச்சுக் குறைபட்டுக்காம ஏத்துக்கணும் அப்படின்னு செயல் தலைவர் சொல்லி இருக்காரு. அதுனால இதையும் ஏத்துப்போம். இதுக்கும் நன்னி சொல்வோம்!

said...

//ரசிச்சேன்//

வேலன் நீங்க கூட நான் கஷ்டப்பட்டு தேடிப் போட்ட செய்தியை எல்லாம் விட்டுட்டு அந்த பஞ்சுக்கு கைதட்டும் கூட்டத்தில் சேர்ந்துட்டீங்களே!! :)

said...

//கொத்தனாரய்யா, இதுக்கு பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன், எதுக்கும் பக்கத்தில ஆஸ்பத்திரி இருக்கான்னு துரைகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்து போடுறேனே. இவன் "புதன்கிழமை தண்ணியடிக்க செவ்வாய்கிழமையிலிருந்து விளக்கம்" சொல்வோர் சங்கம்//

அனானி ஐயா உங்களைத் தேடி எப்படித் தானிப்படை வர முடியும்? அதனால அடிச்சு ஆடுங்க.

அப்புறம் புதசெவிக்கு இப்படி ஒரு விளக்கமா? நல்லா இருங்க சாமி!!

said...

//விஜய் ஆனந்த் said...

:-)))... //

விஜய் ஆனந்த் அண்ணா

அம்புட்டுதானா? :))

said...

//எங்க இருந்து தான் இந்த செய்தியெல்லாம் பிடிக்கறீங்களோ...//

வெட்டி, உனக்காக எல்லாம் உனக்காக இந்த செய்தி பஞ்சும் கொண்டு வருவது உனக்காக!!

//பஞ்ச் எல்லாம் சூப்பரு :)//
ஆமாம் ஆமாம். க்ர்ர்ர்ர்ர்!

said...

//Gnana Raja said...

செய்தி - 4

செய்தி இங்கே. Link not set
//

நன்றி ஞானராஜா உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின் சரி செய்துவிட்டேன்.

said...

// பின்னூட்டக் கயமைன்னா என்னங்க???? நமக்கு ஒண்ணுமே புரியலை! :P //

எனக்கும்தான் கீதாம்மா!!

ஆமாம். இப்போ இதை இங்க எதுக்குச் சொன்னீங்க? :)

said...

//எல்லாஞ்சரிங்க. தேமுதிகவை இழு(ழி)க்கிற அளவுக்கு எப்போ பெரிய ஆள் ஆனீங்க?//

நான் எங்கன இழுத்தேன்? எல்லாம் பஞ்சார் செய்யும் மாயம்.

said...

//பின்னூட்டம் கொண்டான்னு பேர் வெச்சா நியூசில என்ன பண்ணுவாங்க?//

இது ரீச்சரைத்தான் கேட்கணும். வயசான பின் நாம என்ன வேணா வெச்சுக்கலாம். அதை யாரு தடுப்பா?

//இது மக்களா வெச்ச பேரு நானா வெச்ச பேருன்னு பஞ்ச் அடிக்க முடியாதா?//

இது பஞ்ச் அண்ணாவிற்குப் பார்சல் செய்யப்படுகிறது.

said...

//மெய்ப்புல அறைக்கூவலர் என்றால் என்ன? சரியான பதில் சொல்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவும்.//

real field room caller....
ஐயா மண்டை காயுது.

சொல்லலைனா வேலைக்கு போக முடியாது போல இருக்கே! :-))

said...

கீதா பி.க இன்னான்னா

said...

இந்த மாதிரி இரண்டாவது வரி எழுதறது.

said...

அதுக்கப்புறம் ஓ அதை நான் சரியா சொல்லலைன்னு டிஸ்கி போடறது.

said...

நமக்கும் பின்னூட்டக் கயமைக்கும் சம்பந்தமே இல்லைப்பா:)

said...

கொத்ஸ் நியுசும் பன்ச் சும் சூப்பர். தானிப்படைகளை எங்க அனுப்பணும்:)
ஆளே தெரியாதே.

இந்த புதசெவி கொஞ்சம் எண்டிடிவி,கொஞ்சம் கலைமகள்,கொஞ்சம் ரீடர்ஸ் டைஜஸ்ட்,கொஞ்சம் ஜூவி படிச்ச திருப்தி கொடுத்தது.
தன்மையாத்தான் சொல்லியிருக்கேன். சரியா:)

said...

கொத்ஸ் நியுசும் பன்ச் சும் சூப்பர். தானிப்படைகளை எங்க அனுப்பணும்:)
ஆளே தெரியாதே.

இந்த புதசெவி கொஞ்சம் எண்டிடிவி,கொஞ்சம் கலைமகள்,கொஞ்சம் ரீடர்ஸ் டைஜஸ்ட்,கொஞ்சம் ஜூவி படிச்ச திருப்தி கொடுத்தது.
தன்மையாத்தான் சொல்லியிருக்கேன். சரியா:)

said...

அப்புறம் அந்தப் படம் பார்க்கப் போனால் பச்ச மிளகாய்னா இருக்கு!!!

said...

//ஒலிம்பிக்ஸ் செய்தி எதுவும் இல்லையா? வர வர புதசெவி பழைய பேப்பரா போய்டுச்சிப்பா. சூட்டை ஏத்துங்க சாமி.//

சூட்டை ஏத்தறதா? விண்டர் வரட்டும் செய்யலாம். அப்புறம் இந்த மாதிரி நியூஸுக்கு எல்லாம் வயசே கிடையாது. அன்னன்னிக்கு நடப்பு தெரிய நியூஸ் பேப்பர் படியுங்கப்பா!!

ஒலிம்பிக்ஸ் பத்தி ரெண்டு மூணு மேட்டர் வெச்சு இருந்தேன். அப்புறமா இந்த மாதிரி ஹெவிவெயிட் பதிவெல்லாம் வந்த பின் நான் என்ன செய்ய அப்படின்னு அடங்கிட்டேன்.

//பஞ்ச் அண்ணா என்ன கொடநாட்டுல ரெஸ்ட் எடுத்திட்டு இருந்தாரா? கமெண்டுல ஒரே கட்சி வாசம் :(//

அவரு அரசியல் பேச எதுக்கு ரெஸ்ட் எல்லாம்? :))

said...

//போடறது தான் போடறீர், இந்த செய்திகளின் ஜிஸ்டு ஒன்றையும் பதிவிலேயே கொடுத்து விட்டால், காலில் வென்னீர் கொட்டிய என் போன்ற பாவிகள் படிக்கலாம்.//

ஜிஸ்ட் இருக்கே. படிச்சாத்தானே! எப்ப பாரு காலில் வென்னீர் கொட்டிய மாதிரி என்ன வேலையோ!! :)

//இளா, இது பஞ்ச்!! பரமசிவத்துக்கே பஞ்ச்!//

பஞ்சுக்கே பஞ்ச் வெச்ச இளா வாழ்க!! :))

said...

//
புதன்கிழமை தண்ணியடிக்க செவ்வாய்க்கிழமையிலிருந்து விளங்காமல்
வேலை பார்ப்போர் சங்கம்' என்றிருப்பதே சரி!//

வாத்தியாரே என்னென்னமோ சொல்லறீங்க. நல்லா இருந்தாச் சரி!!

said...

//மெய்ப்புல அறைக்கூவலர் - நானும் என்னவா இருக்குமுன்னு ஆர்வமா பாத்தா... ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு. எங்கேயிருந்து இப்படி வார்த்தைகளை புடிக்கிறாங்களோ... எல்லாருக்கும் புரியும் படி எளிய தமிழில் இருந்தால்தானே நல்லது.//

என்னாத்த சொல்ல!! :))

//அதுசரி.. இது உங்க கண்ணில் எப்படி மாட்டுச்சு? எங்க புடிச்சீங்க?//

சென்னை விமான நிலையம். செல்பேசி கேமராவில் பிடிச்சுக்கிட்டு வந்து உங்களுக்குக் காண்பிச்சாச்சு!!

said...

//real field room caller....
ஐயா மண்டை காயுது.

சொல்லலைனா வேலைக்கு போக முடியாது போல இருக்கே! :-))//

திவா சொல்ல என்ன இருக்கு. அந்த சுட்டியைப் பாருங்க. என்ன கொடுமை இது சரவணன் அப்படின்னு சொல்லுவீங்க!!

said...

//கீதா பி.க இன்னான்னா//

இன்னான்னா? :)

said...

//இந்த மாதிரி இரண்டாவது வரி எழுதறது//

அப்படியா?

said...

// அதுக்கப்புறம் ஓ அதை நான் சரியா சொல்லலைன்னு டிஸ்கி போடறது.
//

எதை மறந்து போச்சு?

said...

// நமக்கும் பின்னூட்டக் கயமைக்கும் சம்பந்தமே இல்லைப்பா:)
//

ஆமாமாம். எனக்கும்தான்!

said...

//கொத்ஸ் நியுசும் பன்ச் சும் சூப்பர். தானிப்படைகளை எங்க அனுப்பணும்:)
ஆளே தெரியாதே.//

நல்ல வேளை நீங்களாவது நியூசும் சூப்பர் அப்படின்னு சொன்னீங்களே. அவரு தானிப்படைக்குப் பயந்துதான் தலைமறைவா இருக்காரு!!

//இந்த புதசெவி கொஞ்சம் எண்டிடிவி,கொஞ்சம் கலைமகள்,கொஞ்சம் ரீடர்ஸ் டைஜஸ்ட்,கொஞ்சம் ஜூவி படிச்ச திருப்தி கொடுத்தது.
தன்மையாத்தான் சொல்லியிருக்கேன். சரியா:)//

ஆக மொத்தம் எல்லா விதத்திலேயும் அரைகுறைன்னு சொல்லிட்டீங்க. ரொம்ப பெரும்'தன்மை'தான் போங்க!!

said...

// அப்புறம் அந்தப் படம் பார்க்கப் போனால் பச்ச மிளகாய்னா இருக்கு!!!
//

இல்லையே. எனக்கு சரியாத்தானே தெரியுது. மீண்டும் ஒரு முறை சொடுக்கிப் பார்க்கவும்!!

said...

//இந்த புதசெவி கொஞ்சம் எண்டிடிவி,கொஞ்சம் கலைமகள்,கொஞ்சம் ரீடர்ஸ் டைஜஸ்ட்,கொஞ்சம் ஜூவி படிச்ச திருப்தி கொடுத்தது.
தன்மையாத்தான் சொல்லியிருக்கேன். சரியா:)
//
இதில கண்டிப்பா ஏதோ ஒரு உ.கு. இருக்கற மாதிரி இருக்கே. நீங்க சொல்லாத பத்திரிகை எதையோ ஞாபகப்படுத்துதோ? :))))

அப்படியே இங்க ஒரு 50. வாழ்க கொத்தனார். வளர்க பரமசிவத்தின் தொண்டு.

said...

////இந்த புதசெவி கொஞ்சம் எண்டிடிவி,கொஞ்சம் கலைமகள்,கொஞ்சம் ரீடர்ஸ் டைஜஸ்ட்,கொஞ்சம் ஜூவி படிச்ச திருப்தி கொடுத்தது.
தன்மையாத்தான் சொல்லியிருக்கேன். சரியா:)
//
இதில கண்டிப்பா ஏதோ ஒரு உ.கு. இருக்கற மாதிரி இருக்கே. நீங்க சொல்லாத பத்திரிகை எதையோ ஞாபகப்படுத்துதோ? :))))//


ஸ்ரீதர், எந்த பத்திரிகை பேரை விட்டாங்க? துக்ளக்கா? :)))

நாராயண நாராயண என்று சொல்லாமல் விட்டு விட்டீரே!!

//அப்படியே இங்க ஒரு 50. வாழ்க கொத்தனார். வளர்க பரமசிவத்தின் தொண்டு.//

இதில் என்ன நுண்ணரசியல்? :))

said...

//இதில் என்ன நுண்ணரசியல்? :))//

மன்னிக்கனும். கொடுத்த அமௌண்டுக்கு மேல கூவிட்டேன். 50 வரும்போது சொல்லி அனுப்புங்க (பொட்டி முக்கியம்). மீண்டும் வருகிறேன். :-))

said...

//மன்னிக்கனும். கொடுத்த அமௌண்டுக்கு மேல கூவிட்டேன். //

தொழில் அப்படின்னு வரும் போது இந்த மாதிரி ஒரு புரிந்துணர்வு அவசியம்!! :))

//50 வரும்போது சொல்லி அனுப்புங்க (பொட்டி முக்கியம்). மீண்டும் வருகிறேன். :-))//

ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் அப்படின்னு சொன்னாங்களே?!!

said...

இப்போ 50க்கு ரெடின்னு கூவறேன்!! வாங்க ஸ்ரீதர்!! :))

said...

//ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் அப்படின்னு சொன்னாங்களே?!!
//

அது நீங்க இலவசமா கொடுக்கனும் சார்.

said...

பேச்சு சுவாரஸ்யத்தில நானே 50-ம் போட்டுட்டேனோ?

said...

//அது நீங்க இலவசமா கொடுக்கனும் சார்.//

நான் எப்படிக் குடுத்தாலும் இலவசமாக் குடுத்த மாதிரிதானே!! :))

said...

//பேச்சு சுவாரஸ்யத்தில நானே 50-ம் போட்டுட்டேனோ?//

அய்ம்பது (50 - இப்போ இப்படி எழுதறதுதான் பேஷனாம்) மட்டுமில்லை 51-ம் நீங்கதான்!!

அடுத்தது என்ன செய்யலாம்? :)))