Tuesday, September 09, 2008

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது. 
 
தினசரி எஸ்.எம்.எஸ்ஸில், தொலைபேசியில் வெண்பாவும், கேள்வி பதிலும், நகைச்சுவையும், ரசித்த இலக்கியமும், புதுக் கவிதையுமாக க்ரேஸி கலகலக்க வைக்காத நாள் இல்லை. அவருக்கு பதில் எழுதவே கிட்டத்தட்ட நூறு வெண்பா நானும் இயற்றி விட்டேன். 

'என்ன, வெண்பா அம்பு விட்டுக்கறீங்களா தினமும் மோகனும் நீங்களும்?' கண்ணில் ஒரு மெல்லிய சிரிப்போடு விசாரிப்பார் கமல் எனக்கு முன்னால் என் வெண்பா க்ரேஸி உபயத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.
 
இது குறித்து நண்பர் சொக்கன் ட்விட்டரில் சொல்லி ரொம்ப சிலாகித்துப் பேச 
 
அன்பன் முருகனும் ஆசைமிகு மோகனும்
வெண்பாவில் விட்டாரே அம்பு
 
அப்படின்னு அவர் சொன்னதையே ஒரு குறள் வெண்பாவா மாத்தி அவருக்கு அனுப்பினேன். நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவரு உடனே ஒரு ஈற்றடியைக் குடுத்து இதுக்கு எழுது பார்ப்போம் அப்படின்னு உசுப்பேத்தி விட்டாரு. அப்படி அவர் குடுத்த ஈற்றடி -  தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
மண்ணிலே கஷ்டம் மறந்திட நீயுமே 
எண்ணியிங்கு ஏதேனும் செய்திட வேண்டித்தான் 
விண்ணில் பறந்திடும் விந்தை உணர்வுக்குத் 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
சொக்கனும் சொன்னாரே சோக்காய் ஒருவேலை 
மக்களை மாட்டிவிட்டு மெண்டலாய் ஆக்கிட 
எண்ணித்தான் தந்தார் எசப்பாட்டாய் ஈற்றடியே - 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
எண்ணியே சொன்னார் எசப்பாட்டாய் அண்ணனுமே 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
அப்படின்னு நானும் நாலு (சரி மூணு) வெண்பாக்களை எழுதி ட்விட்டரில் போட்டேன்.  அப்போ ரொம்ப நாள் ஆச்சே வெண்பாப் பதிவு போட்டு அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. ஆனா என்னடா ஈற்றடி குடுக்க அப்படின்னு யோசிக்கும் பொழுதுதான் மீண்டும் இரா முருகனே கை குடுத்தார். அவரோட வலைத்தளத்தில் அழகா ஒரு ஆஞ்சநேயர் படம் ஒண்ணு போட்டு அதுக்குப் பக்கத்தில் அப்படத்திற்கு ஏற்ற மாதிரி க்ரேஸி மோகன் எழுதின ஒரு வெண்பாவையும் போட்டு இருந்தாரு. அது


ரொம்ப அருமையா வந்திருக்கு இல்லையா இந்த வெண்பா. ஆனா அவரு அவரோட தகுதிக்கு ஏத்த மாதிரி மனமென்ற ஆழியைத் தாண்ட உதவி கேட்கறாரு. நான் இன்னிக்கு நமக்கு இருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அந்த ஆஞ்சநேயரின் உதவியைக் கேட்கலாமேன்னு 
 
மாசு மதச்சண்டை மாறா பிடுங்கல்கள்
லேசும்தான் ஆகுதப்பா சட்டைப்பை காசின்றி 
வாழ வழியில்லை ஆகவே வந்திங்கு
தோழா கொடுத்திடு தோள்.
 
அப்படின்னு ஒரு வெண்பாவை எழுதிப் போட்டேன். நீங்க இங்க இருக்கும் இரண்டு ஈற்றடிகளில் எதுக்கு வேணும்னாலும் எழுதலாம். எழுதிப் பாருங்களேன். வெண்பா எழுத கத்துக்க ஆசைப்படறவங்க இங்கேயும் இங்கேயும்  போய் எப்படி எழுதறதுன்னு பார்த்துக்கலாம். 
 

41 comments:

said...

தோழாக்கு எதுகையா வாழா பாழான்னு ரொம்ப நெகட்டிவாவே இருக்கே... வேற எதாவது தோணுதா?! :)

said...

//வாழா பாழான்னு ரொம்ப நெகட்டிவாவே இருக்கே//

வாழா-ல்ல என்ன நெகடிவ்???

இந்த வெண்பாக்களை இரா முருகன் ஜட்ஜ் பண்ணுவாரா? 'மர்மயோகி' படத்துல இந்த பாடல்கள் வருமா? இப்படி ஏதாவது 'கவிரிசி' இருந்தா நாங்களும் ஆட்டத்துல குதிக்கலாம்னு... ஹி... ஹி...

இப்படித்தான் சிறில் அண்ணாச்சி ஜெயமோகன் ஜட்ஜ் பண்ணுவாருன்னு ஒரு கதைப் போட்டியை அறிவிச்சிட்டு சைலண்டா இருக்கார். :-)

said...

கிரேஸி மோகனின் சொல் வன்மையும் மொழியாளுமையும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம். சந்தத்துக்காக அர்த்தத்தை இழக்காமல் அதே நேரத்தில் நகைச்சுவையையும் கொண்டு வருதல் அவர்க்கு கைவந்த கலை. மொழியாளுமை கொண்டவர்கள் வெண்பாவில் கலக்குவது ஒன்றும் கஷ்டமில்லை.. (நானே எழுதிகிட்டு இருக்கேன்:-)

சரி வெண்பாவுக்கு வரேன்.

மோழைக் குழந்தை மதுரை கொள்ள
ஏழைகள் முட்டாள் நிகழ்ச்சி கண்டுற
பாழாய்ப் பகுத்தறிய பாடம் நடத்திட
தோழா கொடுத்திடு தோள்..

மத்தவங்களையும் திட்டி அப்புறம் எழுதறேன் :-)

said...

வேற வழியே இல்லை நானும் சென்ஷி மாதிரி வெண்பா எழுத வேண்டியதுதான்:-))))

said...

ட்விட்டரையும் விட்டு வைக்கலையா நீங்க?

டிவிட்டரே போச்சுது போ! :)

said...

டிவிட்டர்-ல வெண்பா எல்லாம் எழுதும் போது, ஆன்மீகம் எழுத முடியாதா என்னா?
குமரன், ஏமி செப்தாவு? டிவிட்டருக்கு ஒஸ்தாவா? :)

said...

நான் ஏதோ வெண்பொங்கல்னு நினைச்சுட்டேன் தப்பா! :P :P இது ஏதோ பின் நவீனத்துவமா?? இல்லை, பின்னே இல்லாத குண்டூசி நவீனத்துவமோ தெரியலை, வரேன், அப்புறமா, மொக்கை போட்டாச் சொல்லுங்க! இப்போ அம்பியும் இல்லை, அபி அப்பாவும் சீரியஸா எழுதறார்! மொக்கைக்கு ஆளே இல்லாமல் பதிவுலகம் தவிக்குது!

said...

அப்புறம் ஒரு விஷயம், பினாத்தல் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்! அது எழுத மறந்து போச்சு! :))))

said...

//அந்த ஆஞ்சநேயரின் உதவியைக் கேட்கலாமேன்னு//

சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்! :)

மாறா வம்பினை மாற்றுவாய் மாருதி
ஆறா வெம்பசி ஆற்றுவாய் - அன்பருக்(கு)
ஆழாக் கிற்,பல அன்னமும் பொங்கவே
தோழா கொடுத்திடு தோள்!

//வாழா பாழான்னு ரொம்ப நெகட்டிவாவே இருக்கே//

ஆழாக்கு அரிசி ஆக்கியாச்சி கொத்ஸ்! :)
பாழாக்க வேணாம்! துன்னுபுட்டு போங்க! :)

said...

காலையிலே நான்கண்ட கன்னிப் பெண்ணை
மாலையிலும் பார்த்திடவே தவிக்கின்றேன்
பாழான பொழுதுகளாய்ப் போகாமற் காத்திடவே
தோழா கொடுத்திடு தோள்

said...

பத்த வெச்சியே கொத்தண்ணா! நல்லா இருங்கடே! :))

said...

//இப்போ அம்பியும் இல்லை, அபி அப்பாவும் சீரியஸா எழுதறார்! மொக்கைக்கு ஆளே இல்லாமல் பதிவுலகம் தவிக்குது!
//

அதான் நீங்க ஒருத்தர் போதுமே!னு நாங்க ஒதுங்கிட்டோம். :p

said...

வெண்பா..!!??
இதுக்கும் எனக்கும்
ஆஞ்சநேயர் தாண்டும் தூரம். :-))

said...

//வாழா-ல்ல என்ன நெகடிவ்???//

வாழா நெகட்டிவ் இல்லையா? வாழாத என்ற சொல் மருவி வாழா என ஆனது அல்லவா?

//இந்த வெண்பாக்களை இரா முருகன் ஜட்ஜ் பண்ணுவாரா? 'மர்மயோகி' படத்துல இந்த பாடல்கள் வருமா? இப்படி ஏதாவது 'கவிரிசி' இருந்தா நாங்களும் ஆட்டத்துல குதிக்கலாம்னு... ஹி... ஹி...//

அப்புறம் சைலண்ட் ஆகிட்டேன்னு கேஸ் போடுவீரு. இங்க எல்லாம் கவிரிசி எல்லாம் இல்லை கவிருசிதான்.

said...

//கிரேஸி மோகனின் சொல் வன்மையும் மொழியாளுமையும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம். சந்தத்துக்காக அர்த்தத்தை இழக்காமல் அதே நேரத்தில் நகைச்சுவையையும் கொண்டு வருதல் அவர்க்கு கைவந்த கலை. மொழியாளுமை கொண்டவர்கள் வெண்பாவில் கலக்குவது ஒன்றும் கஷ்டமில்லை.. (நானே எழுதிகிட்டு இருக்கேன்:-)//

அதே அதே!! அப்புறம் அந்தப் படத்துக்குக் கீழேயும் அவர் கையெழுத்து இருக்கு. அவரே வரைஞ்ச படமான்னு தெரியலை!

//மோழைக் குழந்தை மதுரை கொள்ள
ஏழைகள் முட்டாள் நிகழ்ச்சி கண்டுற
பாழாய்ப் பகுத்தறிய பாடம் நடத்திட
தோழா கொடுத்திடு தோள்..//

வெண்பா சரியாத்தான் இருக்கு! பொருள்தான் விவகாரமா இருக்கு!! :))

//மத்தவங்களையும் திட்டி அப்புறம் எழுதறேன் :-)//

ஒரு தொழிலாவே செய்யறீரு போல!! :))

said...

//வேற வழியே இல்லை நானும் சென்ஷி மாதிரி வெண்பா எழுத வேண்டியதுதான்:-))))//

அபி அப்பா இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் வர மாட்டீரே. இதுவே ஒரு முதல் படிதான்!! :))

சென்ஷி வெண்பா எழுதுவாரா? அப்புறம் ஏன் இந்தப் பக்கம் வரது இல்லை? :(

said...

தெவிட்டா தமிழில் தெளிவாய் எழுத
டிவிட்டரே போச்சுது போ!

அப்படின்னு வெண்பா எழுத ஈற்றடி தந்த கே ஆர் எஸ் வாழ்க அப்படின்னு வேணா சொல்லறேன்!!

அதை ஏங்க விட்டு வைக்கணும்! :))

said...

//டிவிட்டர்-ல வெண்பா எல்லாம் எழுதும் போது, ஆன்மீகம் எழுத முடியாதா என்னா?
குமரன், ஏமி செப்தாவு? டிவிட்டருக்கு ஒஸ்தாவா? :)//

உம்ம தொந்தரவுக்குப் பயந்துதான் நாங்க எல்லாம் அந்தப் பக்கமா ஒதுங்கறோம். விடமாட்டீங்கறீங்களேப்பா!!

said...

//நான் ஏதோ வெண்பொங்கல்னு நினைச்சுட்டேன் தப்பா! :P :P//

எல்லா வெண்பா பதிவுக்கு இப்படி ஒரு ரெம்பிளேற் பின்னூட்டம். நல்லா இருங்கம்மா!

//இது ஏதோ பின் நவீனத்துவமா?? இல்லை, பின்னே இல்லாத குண்டூசி நவீனத்துவமோ தெரியலை,//

இதுல என்ன நவீனத்துவம். மரபு அம்மா மரபு!!

// வரேன், அப்புறமா, மொக்கை போட்டாச் சொல்லுங்க! இப்போ அம்பியும் இல்லை, அபி அப்பாவும் சீரியஸா எழுதறார்! மொக்கைக்கு ஆளே இல்லாமல் பதிவுலகம் தவிக்குது!//

மொக்கைன்னா என்ன மிஸ்? :))

said...

//அப்புறம் ஒரு விஷயம், பினாத்தல் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்! அது எழுத மறந்து போச்சு! :))))//

அதான் எழுதிட்டீங்களே!! இப்படி அடிக்கடி மறந்து போவது வயதாவதின் அறிகுறியாமே. அப்படியா? :)

said...

நல்ல வெண்பாக்களை எழுதியதற்கும் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிகள் கொத்ஸ். தொடர்ந்து கலக்குங்க. :-)

இரவி, ட்விட்டருக்கு போகலாம். ஆனா அது என்ன ஏதுன்னு இன்னும் எனக்குத் தெரியலையே? ஆழம் தெரிஞ்ச பின்னாடி தான் இறங்கணும். இல்லாட்டி பதிவு மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கும். எனக்கு ஒரு மின்னஞ்சல்ல என்ன ஏதுன்னு எழுதி அனுப்புங்க. கொத்ஸை ஒரு வழி பண்ணிடலாம். :-)

said...

//மாறா வம்பினை மாற்றுவாய் மாருதி
ஆறா வெம்பசி ஆற்றுவாய் - அன்பருக்(கு)
ஆழாக் கிற்,பல அன்னமும் பொங்கவே
தோழா கொடுத்திடு தோள்!//

என்னையும் சுரேஷையும் விட்டா எழுத யாருமே வரலையேன்னு பார்க்கற சமயத்தில் இப்படி வந்து பாட்டைத் தந்த கே ஆர் எஸ் வாழ்க!!

சரி இப்போ பாட்டு வெண்பாவா வெறும் கவுஜையான்னு பார்க்கலாமா? கொஞ்சம் தளை தட்டல் இருக்கிறதால இது கிட்டதட்டப்பா அப்படின்னு சொல்லிடலாமா!!

மாறா வம்பினை - இங்க மா/றா என தேமா என்று வரும் பொழுது இதனைத் தொடர்ந்து ஒரு நிரை அசைதான் வர வேண்டும். ஆனால் வம்/பினை என வரும் பொழுது நேர் அசை வருகிறது.

ஆறா வெம்பசி - இங்கேயும் மேல சொன்ன அதே மிஷ்டேக்தான். ஆ/றா என்ற தேமாவைத் தொடர்ந்து வெம்/பசி என்ற நேரசை.

மூன்றாவது அடியிலும் இதே போல நடந்திருக்கு பாருங்க - ஆ/ழாக் கிற்/பல

இந்த மூன்று தளைதட்டல்களையும் சரி பண்ணனும். இது ஈசி.

மாறாத வம்பினை மாற்றுவாய் மாருதி
ஆறாத வெம்பசி ஆற்றுவாய் - அன்பருக்(கு)
ஆழாக்கில் அற்புதமாய் அன்னமும் பொங்கவே
தோழா கொடுத்திடு தோள்!

அப்படின்னு எழுதினா தளை தட்டல்கள் எல்லாம் போயே போச்சு!!

ஆனா இன்னும் ஒரு மேட்டர் இருக்கு. அது அடுத்த பின்னூட்டத்தில்.

said...

//என்னையும் சுரேஷையும் விட்டா எழுத யாருமே வரலையேன்னு பார்க்கற சமயத்தில் இப்படி வந்து பாட்டைத் தந்த கே ஆர் எஸ் வாழ்க!! //

கலைஞரைப் போட்டுத்தாக்க சான்ஸ் கிடைத்தால் பெனாத்தலார் விடுவாரா? சொன்னபடி மிச்ச கட்சிக்காரங்களைப் பத்தியும் வெண்பா வராட்டி இருக்கு அவருக்கு. அந்தக்கால சினிமா வசன வார்த்தைகளையே அங்கங்க உடச்சுப்போட்டு கவிதைங்கிற பேர்ல நாறடிச்சுடுவோம். ஜாக்கிரதை.

---------
அப்பப்போ பதிவு/இடுகை போட்டு இருந்தீரு. இப்ப என்ன டிவிட்டருங்கற பேருல ரன்னிங் காமெண்டரி கொடுத்து படுத்துறீரு?

'பல்தேய்க்கலாம்னு நினச்சா பேஸ்ட் தீர்ந்து போச்சு', 'ரசத்துல உப்பு ஜாஸ்தி' - இதெல்லாம் இனிமே வருமா?

said...

அதாவதுங்க, இந்த வெண்பாவில் ரெண்டு டைப் இருக்கு. ஒண்ணு இன்னிசை வெண்பா மற்றது நேரிசை வெண்பா. நீங்க ட்ரை பண்ணி இருக்கிறது நேரிசை வெண்பா.

இதுல எப்படி இருக்கணுமுன்னா முதல் மற்றும் இரண்டாம் அடிகளில் உள்ள முதல் வார்த்தை (+) இரண்டாம் அடியில் உள்ள கடைசி வார்த்தை இவை மூன்றிலும் இரண்டாவது எழுத்து ஒரு இனத்தைச் சார்ந்ததாக வரவேண்டும் (இனம் என்பதை இப்போதைக்கு லூசில் விடுங்க. ஒரே எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம்).

அதே மாதிரி கடைசி இரு வரிகளின் முதல் வார்த்தைகளின் இரண்டாவது எழுத்து ஒத்து வரணும்.

இப்படி வரும் பொழுது அந்த வார்த்தைகளில் முதல் எழுத்து எல்லாமே நெடிலாகவோ குறிலாகவோ இருக்கணும்.

இப்படி எழுதி கன்பியூஸ் பண்ணறதை விட ஒரு எடுத்துக்காட்டு தந்தா ஈசியா இருக்கும்.

சும்மா கிடந்த சங்கையே ஊதினார்ப்போல்
நம்மை அடித்தார் பயித்தியமாய் - அம்மா
கழுதையாய் நானுமே கத்தினேன் வெண்பா
எழுதவே ஈற்றடித் தா

நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதினது. இதுல பாருங்க

சும்மா, நம்மை, அம்மா - மூணு வார்த்தையும் குறிலில் தொடங்குது இரண்டாவது எழுத்து ‘ம்’

கழுதையாய், எழுதவே - இவையும் குறிலில் தொடங்குது இரண்டாவது எழுத்து ’ழு’.

இப்படி இருந்தால் அது நேரிசை வெண்பா. ஆனா இந்த மேட்டரை இப்போதைக்குச் சாய்ஸில் விடலாம்.

முதலில் தளை தட்டாமல் எழுதலாம் அப்புறமா இதுக்கு வரலாம். ஓக்கே?!

said...

//கா/லையி/லே நான்/கண்/ட கன்/னிப் பெண்/ணை
மா
/லையி/லும் பார்த்/திட/வே தவிக்/கின்/றேன்
பா/ழா/ன பொழு/துக/ளாய்ப் போ/கா/மற் காத்/திட/வே
தோ/ழா கொடுத்/திடு தோள்//


ஆஹா!! வர மாட்டேன் வரம் மாட்டேன்! என அடம் பிடிக்கும் இன்னொரு ஆசாமி! வாங்க வாங்க!! :))

மேல கொஞ்சம் போல்ட் பண்ணி இருக்கும் இடங்களைப் பாருங்க. அங்க எல்லாம் தளைதட்டல் இருக்கு. அப்புறம் இரண்டாவது அடியில் மூன்று சீர்கள்தான் இருக்கு. இதை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணிப் போட்டா

காலையிலே நான்கண்ட கன்னியிளம் பெண்தனையே
மாலையிலும் பார்த்திடத் தான்தவிக்க - சோலைதனில்
பாழாப் பொழுதுகளாய்ப் போகாமற் காத்திடவே
தோழா கொடுத்திடு தோள்

இப்படி வருது!! இந்த மாதிரி இன்னும் ரெண்டு எழுதுங்க. அப்புறம் கவுஜ போஸ்ட் போட நினைச்சாக் கூட வெண்பாவா வரும். அப்போ நானும் அந்த போஸ்டுக்கு எல்லாம் வருவேன்! :)))

said...

//பத்த வெச்சியே கொத்தண்ணா! நல்லா இருங்கடே! :))//

எல, என்னல சொல்லுத? நான் இங்கன என்னத்தல பத்த வெச்சேன்? சொல்ல வந்தா ஒழுங்காச் சொல்ல வேண்டாமாலே.....

said...

//அதான் நீங்க ஒருத்தர் போதுமே!னு நாங்க ஒதுங்கிட்டோம். :p//

:P

said...

//வெண்பா..!!??
இதுக்கும் எனக்கும்
ஆஞ்சநேயர் தாண்டும் தூரம். :-))//

குமார் சார், எம்மாம் பெரிய கட்டடமெல்லாம் கட்டறீங்க. இது என்ன ஜுஜுபி வெண்பா, ஆனா துணிஞ்சு இறங்கினாத்தானே வரும்! அடிச்சு ஆடுங்க மாஸ்டர்!

said...

//நல்ல வெண்பாக்களை எழுதியதற்கும் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிகள் கொத்ஸ். தொடர்ந்து கலக்குங்க. :-)//

கலக்கலாம். உங்க வெண்பா எங்க? எல்லாம் வந்து சேர்ந்தாத்தானே நல்லா கலக்க முடியும்!

//இரவி, ட்விட்டருக்கு போகலாம். ஆனா அது என்ன ஏதுன்னு இன்னும் எனக்குத் தெரியலையே? ஆழம் தெரிஞ்ச பின்னாடி தான் இறங்கணும். இல்லாட்டி பதிவு மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கும். எனக்கு ஒரு மின்னஞ்சல்ல என்ன ஏதுன்னு எழுதி அனுப்புங்க. கொத்ஸை ஒரு வழி பண்ணிடலாம். :-)//

ட்விட்டர் என்னன்னு அவரைக் கேட்டா? இப்படி எதாவது கேட்டாத்தானே விக்கி பசங்களை எழுப்ப முடியும். அப்புறம் என்னை ஒரு வழி பண்ணறதுக்கு என்ன வேணா செய்வீங்க போல!

said...

//இராமநாதன் said...//

யார் அது? நீயா? எப்படி? என்னய்யா, ஆனாலும் இப்படி இணையம் எங்க இருக்குன்னு தெரியாம இருக்கறது எல்லாம் ரெண்டாம் மாடியா இல்லை? (அதான்யா டூ மச்சு!) சீக்கிரம் வாரும்!

//கலைஞரைப் போட்டுத்தாக்க சான்ஸ் கிடைத்தால் பெனாத்தலார் விடுவாரா? சொன்னபடி மிச்ச கட்சிக்காரங்களைப் பத்தியும் வெண்பா வராட்டி இருக்கு அவருக்கு. அந்தக்கால சினிமா வசன வார்த்தைகளையே அங்கங்க உடச்சுப்போட்டு கவிதைங்கிற பேர்ல நாறடிச்சுடுவோம். ஜாக்கிரதை. //

ஒன் ஸ்மால் கரெக்‌ஷன், அந்த வார்த்தையைப் போடறதுக்குப் பதிலா கவுஜ எனப் போடலாமே! மத்தபடி பெனாத்தல் இதுவரை வேற யாரையும் திட்டி எழுதலை. பெனாத்தாரின் என்னமோ நெளியுது என்றும், நீ மட்டும் யோக்கியமா என்றும் வரப்போகும் பதிவுகளை எதிர்பார்த்து நிற்கிறேன்.

//அப்பப்போ பதிவு/இடுகை போட்டு இருந்தீரு. இப்ப என்ன டிவிட்டருங்கற பேருல ரன்னிங் காமெண்டரி கொடுத்து படுத்துறீரு?//

அதுக்குத்தானே அது! அதான் அப்படியே செய்யறோம்!!

//'பல்தேய்க்கலாம்னு நினச்சா பேஸ்ட் தீர்ந்து போச்சு', 'ரசத்துல உப்பு ஜாஸ்தி' - இதெல்லாம் இனிமே வருமா?//

ஏன் இப்படி நெகட்டிவாவே இருக்கீரு? ஹை ஜாலி பேஸ்ட் காலி இன்னிக்குப் பல் தேய்க்க வேண்டாம்! ஆஹா ரசத்தில் உப்பு அதிகம். இன்னிக்குச் சாப்பிட்ட தங்கமணி நம்மை மறக்கவே முடியாது அப்படின்னு பாஸிடிவ்வா இருக்க வேண்டாமா?

said...

இதென்ன கொத்தனார் வெண்பா அது இதுன்னு போட்டு வாட்டுறார்.
பள்ளிக்கூடத்தில் படிச்ச எலக்கணமெல்லாம் மறந்து போச்சே. கொஞ்சம் முன்ன பின்னா இருந்தாலும் பாத்துப் போட்டுக்கோங்க:

பாழானச் சோற்றின் பழையமுது ஆனாலும்
கூழாய் வடித்தாலும் கூசாமல் உண்டிடுவேன்
ஏழாம் வகுப்பின் இலக்கணம் சொல்வார்யார்
தோழா கொடுத்திடு தோள்

said...

அனானி அண்ணா

எழுத்தைப் பார்த்தா பழைய ஆள் மாதிரித்தான் தெரியுது. அது என்ன பெயரைப் போடாம? இப்போ நான் யாருன்னு நினைக்கிறது?

தோழாக்கு எதுகையா பிடிக்க திணறும் பொழுது பாழா, கூழா, ஏழா என இன்னிசை எழுதின உமக்கு வாழ்த்துகள்!

said...

பேருந்தில் நீண்டதூரப் பயணத்தில் உங்கள் தோள்மீது சாய்ந்து உல்லாச உறக்கம் கொண்ட நண்பரிடம் எப்போதாவது மாட்டியிருக்கிறீர்களா?

ஆடுகின்ற பேருந்தில் அசைவின்றித் தூங்கினோய்
பேடுபோல எண்ணிப் படுத்தனையே = பீடுகொண்ட
தாழாத் தலைகொள் தயைசெய் எழுந்தெனக்குத்
தோழா கொடுத்திடு தோள்

நடராஜன்.

said...

//பாழானச் சோற்றின் பழையமுது ஆனாலும்
கூழாய் வடித்தாலும் கூசாமல் உண்டிடுவேன்
ஏழாம் வகுப்பின் இலக்கணம் சொல்வார்யார்
தோழா கொடுத்திடு தோள்//

இது பழகின கை மாதிரித் தெரிகிறதே!

said...

//ஆடுகின்ற பேருந்தில் அசைவின்றித் தூங்கினோய்
பேடுபோல எண்ணிப் படுத்தனையே = பீடுகொண்ட
தாழாத் தலைகொள் தயைசெய் எழுந்தெனக்குத்
தோழா கொடுத்திடு தோள் //

ஓகை சார், முதல் அடியில் ஒரு தளை தட்டல் இருக்கே. அதைக் கொஞ்சம் மாத்தலாமா

ஆடுகின்ற பேருந்து அசைவின்றித் தூக்கமே

அப்படின்னு போட்டா சரியா வருதா? ஒரு விளக்கமும் தாங்களேன்!

said...

//இது பழகின கை மாதிரித் தெரிகிறதே!//

அதேதான் நானும் சொன்னேன்! ஒரு புயல் அடிச்ச பீலிங்! :))

said...

//ஆடுகின்ற பேருந்து அசைவின்றித் தூக்கமே//

அதே தளைதட்டல். ஐ ப்ளீட் தூக்கக்கலக்கம்!

said...

////இது பழகின கை மாதிரித் தெரிகிறதே!//

அதேதான் நானும் சொன்னேன்! ஒரு புயல் அடிச்ச பீலிங்! :))//

புயலுக்கேன் போர்வை புகல்?

said...

//புயலுக்கேன் போர்வை புகல்?//

லாகின் பண்ணச் சோம்பேறித்தனம் என்பதைத் தவிர வேறு ஒண்ணும் தோணலையே!!

said...

//ஆடுகின்ற பேருந்தில் அசைவின்றித் தூங்கினோய்
பேடுபோல எண்ணிப் படுத்தனையே = பீடுகொண்ட
தாழாத் தலைகொள் தயைசெய் எழுந்தெனக்குத்
தோழா கொடுத்திடு தோள் //

//ஓகை சார், முதல் அடியில் ஒரு தளை தட்டல் இருக்கே. அதைக் கொஞ்சம் மாத்தலாமா//

தட்டியதற்கு நன்றி.

ஆடுகின்ற பேருந்தில் ஆழ்தூக்கம் தூங்கினோய்
பேடுபோல எண்ணிப் படுத்தனையே = பீடுகொண்ட
தாழாத் தலைகொள் தயைசெய் எழுந்தெனக்குத்
தோழா கொடுத்திடு தோள் //

(பேடு = காதலி அல்லது மனைவி)

said...

//(பேடு = காதலி அல்லது மனைவி)//

நல்ல வேளை சொன்னீங்க. நான் என்னமோ Mattress Pad பத்தி சொல்லறீங்களோன்னு நினைச்சேன்!! :))

உங்க தோளையே திரும்பிக் கேட்க பா எழுதின விதம் சூப்பர் ஓகை!!