Sunday, September 21, 2008

ஆர்வக்கோளாறும் பொறுப்பற்ற பதிவர்களும் !

இன்று தெருமுனைகளில் நிறைய பேர் கிரிக்கெட் ஆடுகிறார்கள். கிரிக்கெட் ஆடுவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை கிரிக்கெட் ஆட வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. பம்பரம் ஆட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு ஆக்கர், ரெண்டு ஆக்கர் அடிக்கும் அளவுக்கு ஆட்டம் கைவசப்படும். அதே மாதிரிதான் கோலிகுண்டும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், கிரிக்கெட். அதற்காகக் கோலிகுண்டை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது கிரிக்கெட். அந்த விளையாட்டில் எடுத்தவுடன் ஒரு பந்து ஒரு மட்டை கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் சுவரில் மூன்று கோடுகள் வரைந்து கிரிக்கெட் ஆடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- கேரள ஓப்பனிங் பாட்ஸ்மென் வனோஜ்

இன்று பாத்ரூமில் நிறைய பேர் பாடுகிறார்கள். பாடுவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை பாட வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. மேஜையில் தாளம் போட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் சுமாரான டப்பாங்குத்துப் பாட்டுக்குத் தாளம் போடும் அளவுக்கு தாளம் கைவசப்படும். அதே மாதிரிதான் விசில் அடிப்பதும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், பாட்டு. அதற்காக விசில் அடிப்பதைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது பாட்டு. பாட ஒரு இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் ஷவரைத் திறந்து விட்டுக் கொண்டு பாடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- ஒரிய மொழிப் பாடகர் காமா சோமா

இன்று கிடைத்த பேப்பரில் எல்லாம் நிறைய பேர் நட்சத்திரம் வரைகிறார்கள். நட்சத்திரம் வரைவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை நட்சத்திரம் வரைய வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. கோடு போட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு வட்டம், ரெண்டு சதுரம் வரையும் அளவுக்கு கோடு கைவசப்படும். அதே மாதிரிதான் அம்புக்குறியும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், நட்சத்திரம் வரைதல். அதற்காக அம்புக்குறியை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது நட்சத்திரம். எடுத்தவுடன் ஒரு பேப்பர் ஒரு பேனா கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் நட்சத்திரம் வரைவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- கன்னட நட்சத்திர ஓவியர் கேன்

இன்று இணைய தளங்களில் நிறைய பேர் எழுதுகிறார்கள். எழுத்து என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை எழுத வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஓர் உழைப்பு தேவைப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியைப் படிக்கவேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஷ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும். அதே மாதிரிதான் இசையும். பல மணி நேரப் பயிற்சி அதற்குத் தேவை. இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், மொழி. அதற்காகச் சங்கீதத்தைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது மொழி. அந்த மொழியில் எடுத்தவுடன் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் தட்டி அதை Blog-ல் போடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா

டிஸ்கி 1: மேற்கண்ட ஸ்டேட்மெண்ட்களில் ஒன்றே ஒன்று மட்டும் நிஜம் என்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும். அந்த உரையை முழுதாக வாசித்தாக வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் இங்கே போகலாம்.

டிஸ்கி 2: இந்த சந்திப்பில் பங்கெடுத்து ஆனால் இதைப் போன்ற Irresponsible Statements கூறப்பட்ட பொழுது கண்டனங்களைத் தெரிவிக்காத சகபதிவர்களுக்கு என் கண்டனங்கள்.

57 comments:

said...

Blog = Weblog = Digital Diary. முன்னாடி டயரி எழுதினவங்களை யாரும் பொறுப்பற்றவர்கள் அப்படின்னு சொன்ன மாதிரி தெரியலையே.

நம்ம எழுதறதையும் நாலு பேர் படிக்கறாங்களேன்னு கொஞ்சம் ரென்சனோன்னு சந்தேகமா இருக்கு!! :)

said...

இப்போ என்ன சொல்ல வராரு? டெமாக்ரெஸி என்பது ஒரு நோயா? :))

said...

தமாசு தமாசு :)

said...

kalakkal....

said...

அடப்போங்க கொத்ஸ்.. நீங்க வேற.. இதையெல்லாம் புரிஞ்சுக்கறதுக்கே பக்குவம் வேணும்னு மண்டபத்துல பேசிக்கறாங்க!

said...

ஆமாம், நமீதாவை சந்தித்துவிட்டு வந்தவுடன் கடகடவெனத் தட்டி அதை Blog-ல் போடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

said...

மெய்யாலுமா இப்படி சொன்னாரு.

ஹா ஹா ஹா.

நான் கூட, கிரிக்கெட்டுதான் உண்மையோன்னு ஒரு நிமிஷம் சமாதானமா இருந்துட்டேன்.

யாரங்கே?

-irresponsible blogger

said...

// இலவசக்கொத்தனார் said...
Blog = Weblog = Digital Diary. முன்னாடி டயரி எழுதினவங்களை யாரும் பொறுப்பற்றவர்கள் அப்படின்னு சொன்ன மாதிரி தெரியலையே.

நம்ம எழுதறதையும் நாலு பேர் படிக்கறாங்களேன்னு கொஞ்சம் ரென்சனோன்னு சந்தேகமா இருக்கு!! :)
///


இது கரீக்ட்டு :)

said...

அச்சச்சோ.... எனக்கு விசில் அடிக்க வராது(-:


ஆமாம். சாருவை இவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துக்கணுமா?

said...

>>>>மேற்கண்ட ஸ்டேட்மெண்ட்களில் ஒன்றே ஒன்று மட்டும் நிஜம்

தெரிஞ்சிருச்சு. கேரள ஓப்பனிங் பாட்ஸ்மென் வனோஜுக்கு பம்பரப் புகழ் கேப்டன் விஜயகாந்த் சார்பில் என் கடுமையான கண்டனங்கள்!

said...

//ஆமாம். சாருவை இவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துக்கணுமா?//

என் கருத்தும் இதேதான்.

said...

பாருங்க, மறுபடியும் பொறுப்பில்லாத்தனமா எழுதியிருக்கீங்க. :-( இலத்தீன் அமெரிக்க எழுத்தைப் படிச்சிருக்கீங்களா? அட அரேபிய எழுத்தாளர்கள் பெயராவது தெரியுமா? பிரான்ஸின் சுதந்திரத்தை அனுபவிச்சிருக்கீங்களா?

அட சென்னையில கல்லூரிப் பெண்களை எந்த 'மாதிரி' இடங்களில் சந்திக்கலாம் என்றாவாது தெரியுமா? ஒரு குறுஞ்செய்தி கதையாவது தெரியுமா? நீங்க எல்லாம் பதிவெழுதனும்னு யாராவது கேட்டாங்களா? அப்படியே எழுதுவதானாலும் பேசாம நாலு பேர்கிட்ட கட்டணம் வாங்கிட்டு எழுத வேண்டியதுதானே.

said...

எது பொறுப்புள்ளது எது பொறுப்பற்றது என்பது அவரவர் கண்ணோட்டத்தில் வேறுபடும். ஆகவே நமக்கு சரி என்று பட்டால் அதைச் செய்ய வேண்டும். இதற்கு ஒரு சிலர் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள்.

said...

//இலத்தீன் அமெரிக்க எழுத்தைப் படிச்சிருக்கீங்களா? அட அரேபிய எழுத்தாளர்கள் பெயராவது தெரியுமா? பிரான்ஸின் சுதந்திரத்தை அனுபவிச்சிருக்கீங்களா?

அட சென்னையில கல்லூரிப் பெண்களை எந்த 'மாதிரி' இடங்களில் சந்திக்கலாம் என்றாவாது தெரியுமா? ஒரு குறுஞ்செய்தி கதையாவது தெரியுமா? நீங்க எல்லாம் பதிவெழுதனும்னு யாராவது கேட்டாங்களா? அப்படியே எழுதுவதானாலும் பேசாம நாலு பேர்கிட்ட கட்டணம் வாங்கிட்டு எழுத வேண்டியதுதானே.//

சூப்பரு. இது மட்டுமா, இன்றைய பெண்களின் மனநிலையை அறிந்து அதை எழுத வயதைக் குறைவாக காண்பித்துக் கொள்ளவும் சேர்த்தல்லவா ஸ்பான்ஸர் எதிர்பார்க்கணும்.

என்னுடைய கண்டனங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரீச்சர் சொன்னதும் கவனிக்கத்தக்கதே. இம்மாதிரி ஆட்களை கவனிக்காது விடுதல் நலம்.

said...

கொத்ஸ்,
இந்தப் பதிவு பொறுப்புள்ள பதிவா? பொறுப்பற்ற பதிவா? :)
சாருவுக்கு அனுப்பிக் கேட்டுப் பாருங்களேன்! :)

//அது இப்போது நிறைய பேரை எழுத வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது.//

அடா அடா அடா!
நோயாளிகள் அதிகமா ஆவுறாங்களே-ன்னு ஒரு டாக்டரின் நியாயமான கவலை! :)

//ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஷ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும்//

உண்மையைச் சொல்லுங்க கொத்ஸ்!
இந்தப் பதிவுக்கு எம்புட்டு மணி நேரம் உழைத்தீங்க? :)

said...

//ஒருநாளைக்கு மட்டும் எனக்கு இருபது பேர் கவிதை அனுப்பி எப்படி என்று கேட்பார்கள். எவ்வளவு துன்பம் பாருங்கள்//

ஓ...
பின்னூட்டம் தான் பிரச்சனையா? :))

said...

//ஆத்மாநாம் படித்திருக்கிறீர்களா? பாரதியில் ஆரம்பித்து.. நான் ஆண்டாளுக்குப் போவேன். ஆண்டாள் தெரியாமல் எப்படி கவிதை எழுதுவீர்கள்?//

ஹா ஹா ஹா
நல்ல வேளை! காக்கைப்பாடினியார் தெரியாம எப்படிக் கவிதை எழுதுவீர்கள்-ன்னு ஆண்டாளை யாரும் கேக்கல! :)

said...

:-)

said...

உங்க கண்டனத்துல மைனஸ் ஒண்ணு. ஏன்னா, நான் எதிர்த்து குரல் குடுத்தேன். அங்கேயே.. அதை யாரும் சொல்லவே இல்லையப்பா :-)

said...

உளறலின் உச்சக் கட்டம்.

said...

ஆமாமாம். எடுத்தவுடன் ஒரு லேப்டாப் கிடைத்து விட்டது என்பதற்காக கடகடவென குட்டிகளைத் தட்டி, சா(ரு)ரி, 'குட்டி'க் கதைகளை தட்டி, அதை ஆன்லைனில் போடுவதுதான், ரொம்ப RESPONSIBLEஆன விஷயம்.

said...

டிஸ்கி 2 - இதை வாசித்ததும் மனதில் உடனே தோன்றியது - அப்படியும் சில ஜென்மங்கள் அங்கே இருந்தனாவா?

உங்கள் பதிவை மட்டும் வாசித்ததும் பின்னூட்டியது. இனிதான் அந்த மதிப்பிற்குரிய பதிவர்கள் யாரென்று பார்க்க வேண்டும். அங்கே இருக்குமல்லாவா?

said...

இ கொ

உணர்ச்சி வசப்பட்டுருப்பார். விடுங்க :)

அது சரி இவரை மாதிரி ஆளுங்க பேசுனாலே கான்ட்ராவர்ஸி ஆகுதா இல்லை கான்ட்ராவர்ஸி பண்றதுக்குன்னே பேசுராங்களா ?

said...

இந்த உரைக்கெல்லாம் ஒரு லின்க் தேவையா?
"உரையை" படித்தேன்
சத்தியமா ஒன்னும் புரியல?
என்ன கொடுமை இதெல்லாம்?

said...

அய்யா
கட கடவென தட்டறது
அவ்வலவு சுலபமான விசயமா போயிடிச்சா.

said...

//SurveySan said...
மெய்யாலுமா இப்படி சொன்னாரு.

ஹா ஹா ஹா.

நான் கூட, கிரிக்கெட்டுதான் உண்மையோன்னு ஒரு நிமிஷம் சமாதானமா இருந்துட்டேன்.

யாரங்கே?

-irresponsible blogger
//

ரிப்பீட்டே :))

said...

:)

said...

அவங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க?

said...

ஹா ஹா ஹா
நல்ல வேளை! காக்கைப்பாடினியார் தெரியாம எப்படிக் கவிதை எழுதுவீர்கள்-ன்னு ஆண்டாளை யாரும் கேக்கல! :)//
சூப்பரோ சூப்பர் ரவி.

கொத்ஸ் ,
இவர்
இனிமே தன் பதிவுக்குப் பணம் கட்டினாத்தான் படிக்க முடியும்னு ஒரு நாள் எழுதி இருந்தாரே.
நானும் முன்னாடி டயரியில் எழுதினதைத்தான் இப்ப பதிவில எழுதறேன்னு அறிவிச்சுக்கறேன்.

இப்படிக்கு -------,----,----

எழுதும் பதிவர்:))))

said...

அடுத்து பிளாக்கர் மீட்டிங் வைச்சு அவருக்கு சரக்கு வாங்கிதந்தா நம்மளை "ரொம்ப நல்லவங்க"ன்னு பேசிருவாரு..... :))

said...

என்னான்னு சொல்லுவேன்.. எங்க போயி சொல்லுவேன்...

said...

chaaru மட்டும் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்ற எண்ணம் கூடாது என்பதே என் கருத்து .

said...

கொத்ஸ், இந்த மாதிரி உங்கள் கருத்தைப் பதிந்தது ஆர்வக்கோளாறு என்பது நாம் அறிந்ததே.

ஸ்பானிஷில் எழுதுபவர்களுக்கு இவ்வளவு எழுத்துப் பயிற்சி தேவையில்லை என்ற கருத்து காணப்படுகிறது. எனவே, பொறுப்பற்ற பதிவர்கள் இனி ஸ்பானிஷிலும் அராபிய மொழியிலும் எழுதினால், அது எழுத்தாகக் கருதப்படும்.

ஃப்ரீயா விடு மாமே! ஆல் இன் த கேம். அவருக்கு தேவை ஹிட்ஸ் போலிருக்கு. "இத்தனை ஹிட்ஸ் இருப்பதால், இந்த பதிவில் விளம்பரம் செய்யலாம்"னு போட்டிருக்காங்க.

//Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said... chaaru மட்டும் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்ற எண்ணம் கூடாது என்பதே என் கருத்து// ரிப்பீட்டு.

said...

வேலியோர ஓணானை வேட்டிக்குள்ள விட்டுட்டு இப்போ குத்துது குடையுதுன்னு என்ன கும்மி? போறார், விடுங்க சார். இவர் இப்படித் தான்னு தெரிஞ்சது தானே?

said...

எவ்ளோ கஷ்டப்பட்டு நாங்கள்லாம் எளக்கியவாதியா ஆயிருக்கோம்? சும்மா முந்தாநேத்து பெஞ்ச மழையில நேத்து முளைச்ச காளானுங்க எல்லாம் "பதில் சொல்லு"ன்றான். எனக்கு ஹிட் அதிகம்ன்றான். நானும் குட்டிக்கதை ஜட்டிக்கதைன்னு போட்டாக்கூட நாலு வெங்கடாசலபதி டாலர் கூட கிடைக்கமாட்டேங்குது.

மூணு நாளா எவனும் காசே அனுப்பல. குவார்ட்டர்கூட கிடைக்கல. பொறுப்பத்த உலகம் இல்லாம என்ன?

said...

ஆனாலும் சாருவுக்கு நகைச்சுவை உணர்சு ரொம்ப சாஸ்திங்கோவ். இவரு எழுதுனா இலக்கியமா. அதென்னது சீரோ டிகிரியா... அதப் படிச்சுக் கழுத்தும் தலையும் 360 டிகிரிக்குச் சுத்துச்சேய்யா...சரி விடுங்க. முந்நவீன இலக்கியம்னா அப்படித்தான் இருக்கும்னு வெச்சுக்கோங்களேன். இப்ப என்ன பிரச்சனைன்னா....ரெண்டு மூனு வலைப்பதிவார்கள் சேந்து அவரோட பூச்சியக் கோணம்... அதாங்க சீரோ டிகிரிக் கதைய தமிழில் மொழி பெயர்த்தால்...ஓ தப்பாச் சொல்லீட்டேனோ...ஆங்கிலத்துல மொழி பெயர்த்தால் ... அவரு வலைப்பூக்களைக் கொண்டாடுவாரு.

said...

இன்னொரு விசயம்...யாராச்சும் சாருவைப் பாக்க முடியும்னா...இந்தக் கேள்வியெல்லாம் கேளுங்கய்யா...

1. தொல்காப்பியரைத் தெரியுமா? ஏன்னா நானு தொல்காப்பியரை ஒவ்வொரு நாளும் படிச்சுப் படிச்சு வியக்கிறேன்.

2. Anne Rice எழுத்துகளைப் படிச்சிருக்காரா? என்னது அப்படின்னா யார்னே தெரியலையா?

3. Witch Hunter, Vet might fly போன்ற புதினங்களைப் படிச்சிருக்காரா?

4. டச்சு மொழி இலக்கியங்களின் நவீனச் செழுமையின் அலங்காரங்களை அனுபவித்திருக்கிறாரா!

இப்பல்லாம் நான் யாரும் வந்தா...எவ்ளோ படிச்சிருக்கீங்கன்னுதான் கேக்குறது. சாரு....விடையிருக்கா? இதையெல்லாம் படிச்சிருக்கீங்களா? என்னது கற்றது கைமண்ணளவா? ஹி ஹி ஔவையாரை நினைச்சு நீங்களும் வியந்தா நல்லாயிருக்கும்.

said...

// டிஸ்கி 2: இந்த சந்திப்பில் பங்கெடுத்து ஆனால் இதைப் போன்ற Irresponsible Statements கூறப்பட்ட பொழுது கண்டனங்களைத் தெரிவிக்காத சகபதிவர்களுக்கு என் கண்டனங்கள். //

சகபதிவர்களா? ஹி ஹி அவங்கள்ளாம் சாரு நிவேதிதா பேசுறதக் கேக்க முடியாம தூங்கீட்டாங்களாம். (கரகாட்டக்காரன்ல கவுண்டமணி கிட்ட செந்தில் சொல்வார்ல...எனக்குப் பிடிக்கலைன்னா தூங்கீருவேன்னு) இல்லைன்னா...வீட்டுக்கு வந்தப்புறமாச்சும் சுடச்சுட பதிவு போட்டிருப்பாங்கள்ள. கை கூடத் தட்டலையாம்யா...நம்புங்க.

said...

//அவரோட பூச்சியக் கோணம்... அதாங்க சீரோ டிகிரிக் கதைய தமிழில் மொழி பெயர்த்தால்...ஓ தப்பாச் சொல்லீட்டேனோ...ஆங்கிலத்துல மொழி பெயர்த்தால் ... //

யாரு இந்த ஜி ரா? எதற்காக இப்படி எழுதறார்? ஜீரோ டிகிரி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு அமேசானில் அமோக விற்பனையாகிறது தெரியுமா இவருக்கு? ஏனிப்படி irresponsible-ஆக எழுதி என்னை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்? இவரைப் போன்ற இணையக் கிரிமினல்கள் இருக்கும் வரையில் வலைப்பதிவாளர்கள் எல்லாரும் irresponsible என்று சாரு சொன்னது உண்மைதானே.

said...

ஜி ரா கவனத்திற்கு,

மேலே போட்ட எனது மறுமொழியில் சிரிப்பான் எதுவும் போடவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையாகவே நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கிறேன். ஆமாம் :-((

said...

// Sridhar Narayanan said...

ஜி ரா கவனத்திற்கு,

மேலே போட்ட எனது மறுமொழியில் சிரிப்பான் எதுவும் போடவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையாகவே நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கிறேன். ஆமாம் :-(( //

ஹி ஹி போங்க ஸ்ரீதர். ஆனாலும் ஒங்களுக்குக் குசும்புதான். கடுமைன்னு தமிழ்ல சொன்னா நெறைய. கன்னடத்துல சொன்னா கொறச்சல். மளே கடுமே அப்படீன்னா மழை கொறவுன்னு பொருள். நீங்க சொல்ற கடுமையான மனவுளைச்சல் கன்னடந்தானே. :) பாத்தீங்களா ஒங்க எழுத்தை நான் கன்னடத்துல மொளி பெயர்த்து (எடுத்து) இருக்கேன். என்னையப் பாராட்டாம கிண்டுறீங்களே!

said...

இன்று கிடைத்த சமையலறையில் எல்லாம் நிறைய பேர் சமைக்கிறார்கள். சமையல் என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை
சமைக்க வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. வென்னீர் வைக்க வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு காபி, ரெண்டு டீ வைக்கும் அளவுக்கு வென்னீர் கைவசப்படும். அதே மாதிரிதான் ரசம் வைப்பதும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், இட்டலி மாவு அரைத்தல். அதற்காக ரசத்தை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது இட்டலி மாவு.. எடுத்தவுடன் ஒரு கிரைண்டர் ஒரு அரிசி ஒரு உளுந்து கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவென இட்டலி மாவு என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

அறுசுவை ராமராஜன், ரோஜா கத்ரிநாத் இதுபோன்று இருபத்தைந்து முப்பது பேர் இருக்கிறார்கள். இவர்கள் என்ன சமைத்தார்கள் என்று பார்க்காமல் பர்பி ஒன்றை செய்து அதை எனக்கும் அனுப்பி எப்படி என்று கேட்கிறார்கள். பதிலுக்கு முதலில் நீங்கள் என்னென்ன சமைத்துள்ளீர்கள் என்று கேட்பேன். அதைத் தெரிந்தபிறகுதான் அவர்களுடைய பர்பியை கடிப்பேன்.

ஒருநாளைக்கு மட்டும் எனக்கு இருபது பேர் சாம்பார் அனுப்பி எப்படி உப்பு சரியா இருக்கா என்று கேட்பார்கள். எவ்வளவு துன்பம் பாருங்கள். ...

இது இகொ பதிவு அதனால ரெண்டு றெம்ப்லேட்.

1. இது உனக்கே ஓவரா தோணல?
2. ரிப்பீட்டேய்.........!
3. டூஊஊஊஉ மச்!
4. த்ரீஇ மச்!

said...

//
Blogger திவா said...

இன்று கிடைத்த சமையலறையில் எல்லாம் நிறைய பேர் சமைக்கிறார்கள். சமையல் என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை
சமைக்க வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. வென்னீர் வைக்க வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு காபி, ரெண்டு டீ வைக்கும் அளவுக்கு வென்னீர் கைவசப்படும். அதே மாதிரிதான் ரசம் வைப்பதும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், இட்டலி மாவு அரைத்தல். அதற்காக ரசத்தை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது இட்டலி மாவு.. எடுத்தவுடன் ஒரு கிரைண்டர் ஒரு அரிசி ஒரு உளுந்து கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவென இட்டலி மாவு என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

அறுசுவை ராமராஜன், ரோஜா கத்ரிநாத் இதுபோன்று இருபத்தைந்து முப்பது பேர் இருக்கிறார்கள். இவர்கள் என்ன சமைத்தார்கள் என்று பார்க்காமல் பர்பி ஒன்றை செய்து அதை எனக்கும் அனுப்பி எப்படி என்று கேட்கிறார்கள். பதிலுக்கு முதலில் நீங்கள் என்னென்ன சமைத்துள்ளீர்கள் என்று கேட்பேன். அதைத் தெரிந்தபிறகுதான் அவர்களுடைய பர்பியை கடிப்பேன்.

ஒருநாளைக்கு மட்டும் எனக்கு இருபது பேர் சாம்பார் அனுப்பி எப்படி உப்பு சரியா இருக்கா என்று கேட்பார்கள். எவ்வளவு துன்பம் பாருங்கள். ...

இது இகொ பதிவு அதனால ரெண்டு றெம்ப்லேட்.

1. இது உனக்கே ஓவரா தோணல?
2. ரிப்பீட்டேய்.........!
3. டூஊஊஊஉ மச்!
4. த்ரீஇ மச்!
//

இது ஜூப்பரு!!

said...

அவரு வூட்ல போட்ட வெர்ஷனைப் பார்த்தீங்களா?

//இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது.// இந்த வரி //ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது.// இப்படி மாறிப் போச்சு. இப்படி நோயைத் தீர்க்கும் உமக்கு டாக்டர் பட்டம் தர வேண்டியதுதான் போல!

//அந்த மொழியில் எடுத்தவுடன் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் தட்டி அதை Blog-ல் போடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம். //
என்று ஆணித்தரமாக அடித்துக் கூறப்பட்ட விஷயம் //அப்படிப்பட்ட மொழி என்ற வடிவம் கைக்கெட்டிய தூரத்தில் கிடைத்தவுடன் ஏதோ ஒன்றைக் கடகடவெனத் தட்டி அதை Blog- ல் போடுவதென்பது ரொம்பவும் பொறுப்பில்லாத ஒரு விஷயமாகத் தோன்றுகிறது.// என வெறும் பாஸிபிலிடியாகப் போய்விட்டது!

நல்லா எழுதறீங்கப்பா பதிவு! கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம!

ஆமாம், இப்படி வெட்டியா எல்லாப் பதிவும் படிச்சு பின்னூட்டம் போடறவங்களுக்குப் பொறுப்பு இருக்கா இல்லையா?

said...

கிராமத்தில் தேரடியில்/ திண்ணையில் பேசுவது, நகரத்தில் நண்பர்களுடன் மொட்டைமாடியில் மணிக்கணக்கில் பேசுவது, இதையெல்லாம் இழந்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளே பலரையும் இணையத்திற்கு இழுக்கிறது (பேச்சுத்தமிழில் எழுத விரும்புவது, "மொக்கை"களைத் தானே கிண்டல்செய்து கொண்டு வெளியிடுவது போன்ற போக்குகளிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது).
எனவே இத்தகைய நிலையில் இயங்கும் தளங்களில் சா.நி. கூறும் "பல நூல்களைப் படித்து வருடக் கணக்கில் உழைத்துப் பெற்ற எழுத்துத்திறன்" வேண்டுமென்று யாரும் நினைப்பதுமில்லை; அவர்கள் இணையத்தை நாடும் காரணத்திற்கு அத்தகைய முன்தயாரிப்பு தேவையுமில்லை.
எனவே இந்த விதத்தில் சா.நி.யின் விமர்சனம் பொருத்தமற்றது.

இந்த வகைத் தளங்களிலிருந்து வேறு முக்கியமான விஷயங்களைக் கையாளும் வலைப்பதிவுகளுக்குச் செல்வோம்.
பொதுவாக (இணையத்திலும் சரி, அச்சுப் பத்திரிகைகளிலும் சரி) தமிழில் எழுதுவதற்கு (கதையோ, கட்டுரையோ, விமர்சனமோ) தன்னை நிறைய தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்று முனைப்பு குறைவுதான்.
உதாரணமாக, மொழியைப் பிழையின்றி எழுத
ஆங்கிலத்தில் காட்டும் முனைப்பை அதே நபர் தமிழில் எழுதும்போது பாதியளவு கூட காட்டுவதில்லை. ஆங்கிலத்தில் பேசும்முன் schedule என்பது ஷெட்யூலா, ஸ்கெட்யூலா
என்று நாம் உறுதி செய்துகொள்கிறோம்.
அமெரிக்கர்களிடம் லிஃப்ட் என்று சொல்லக்கூடாது எலவேட்டர் என்று சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்கிறோம். ஆனால் பவளம்/பவழம் இதில் எது சரி என்று நாம் தெரிந்துகொள்ள நினைப்பதில்லை.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டு வேறு மொழி எதுவும் தெரியாத அமெரிக்கர்கள்/இங்கிலாந்துக்காரர்கள் ஆங்கில அகராதியை வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மில் பலர் தமிழில் அகராதி இருக்கறதா, தமிழ்--தமிழ் அகராதி தேவையா, அப்படி இருந்தாலும் அதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமா என்ற நிலையில் இருக்கிறோம்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இணையத்திலேயெ எழுதிவந்த ஒருவர்
தான் புதிதாக எழுதிய நூல் அச்சில் வெளியாகிறது என்று பெருமையுடன் ஒரு மடற்குழுவில் குறிப்பிட்டார். இன்றும் விளையாடிக்கொண்டிருக்கும் பிரபலமான இந்திய விளையாட்டுக்காரரின் வாழ்க்கைவரலாறுதான் அது.
ஒசாமா பின்லாடன் என்றால் சந்திப்பது கடினம்,
வீரபாண்டியகட்டபொம்மன் என்றாலும் சந்திப்பது முடியாது; இந்த எழுத்தாளர் அப்படிப்பட்டவரின் வாழ்க்கைவரலாற்றை எழுதவில்லை. உயிருடன் இருப்பவரை
நேரில் சந்திக்காமலே நூற்றுக்கணக்கான பக்கங்களை அவர் எழுதினால் நான் ஏன் அதை வாங்கிப்படிக்கவேண்டும்? ஆர்தர் ஹெய்லி என்ற
ஆங்கில "வணிக" எழுத்தாளர் ஏர்போர்ட், ஹோட்டல் போன்ற நூல்களை எழுத அவ்விடங்களிலே மாதக் கணக்காக இருந்து கவனித்தபின் எழுதினாராம்.
எழுதுவதற்கு அடிப்படையாக
வாசகர்களை நாம் மதிக்க்கும்வகையில் முதலில் அதற்கான உழைப்பை முதலீடு செய்ய வேண்டும் என்ற சாருநிவேதிதாவின் கருத்தை (அவர் எப்படிப்பட்ட இலக்கியவாதி என்பது பொருட்டல்ல) நான் முழுதாக ஆதரிக்கிறேன்.

நான் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்தேன் அது போதாதா நான் எழுத ஆரம்பிப்பதற்கு என்று நினைப்பவர்கள் வாசகர்களுக்கு எந்த நூலைப் படிப்பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
---வாஞ்சிநாதன்

said...

//அடப்போங்க கொத்ஸ்.. நீங்க வேற.. இதையெல்லாம் புரிஞ்சுக்கறதுக்கே பக்குவம் வேணும்னு மண்டபத்துல பேசிக்கறாங்க!//

intha penathalukku oru ripiteeeeeeeeeeeee

said...

//இது இகொ பதிவு அதனால ரெண்டு றெம்ப்லேட்.

1. இது உனக்கே ஓவரா தோணல?
2. ரிப்பீட்டேய்.........!
3. டூஊஊஊஉ மச்!
4. த்ரீஇ மச்!//

இங்கே வந்தால் எல்லாருக்கும் இந்த வியாதி கூட இலவசமா??

said...

ஐயா வாஞ்சி,
ரொம்ப சீரியஸாவே எழுதிட்டீங்க.
சரி.
//வாசகர்களை நாம் மதிக்க்கும்வகையில் முதலில் அதற்கான உழைப்பை முதலீடு செய்ய வேண்டும் என்ற சாருநிவேதிதாவின் கருத்தை ... நான் முழுதாக ஆதரிக்கிறேன்......
நான் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்தேன் அது போதாதா நான் எழுத ஆரம்பிப்பதற்கு என்று நினைப்பவர்கள் வாசகர்களுக்கு எந்த நூலைப் படிப்பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.......//

வாசகர் உரிமை எப்பவுமே இருக்கு.
இணைய ஊடகத்துக்கும் மற்ற ஊடகங்களுக்கும் நிறையவே வேறுபாடு இருக்கு.
இங்கே யாரும் பெரிய இலக்கியங்களை படைக்கலை. தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இது வெகுவாகவே வசதியாக இருக்கு.
எழுதுவது பயனுள்ளதாயோ இல்லை சுவாரசியமாயோ இல்லைன்னா யாரும் அதை பாக்க மாட்டாங்க. நிறுத்திடுவாங்க. அந்த பதிவு காணாமலே போயிடும். இதுல யாருக்கும் நஷ்டம் இல்லை. நான் ஒரு பத்தகத்தை நல்லா இருக்கும்ன்னு எதிர்பார்த்து விலை கொடுத்து வாங்கி எதிர்பார்ப்பு நிறைவேறது போனா எனக்கு காசு நஷ்டம். இங்கே பதிவுகள் நல்லா இல்லைனா யாருக்கு நஷ்டம்?
எல்லாரும் எல்லாத்தையும் படிக்க முடியாது, அவசியமும் இல்லை. உண்மையில் மத்த எழுத்தாளர்களை படிக்காம எழுதுவது உள்ளத்திலேந்து /அனுபவத்துலேந்து வரும். படிச்சு எழுதினா அதோட பாதிப்பு இருக்கவே இருக்கும். அது ஒரு இமிடேஷனாதான் இருக்கும்.
இன்னும் எழுதினா இது ஒரு பதிவா போயிடும். வேற வேலை இருக்கு. வரேன்.

said...

//ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இணையத்திலேயெ எழுதிவந்த ஒருவர்
தான் புதிதாக எழுதிய நூல் அச்சில் வெளியாகிறது என்று பெருமையுடன் ஒரு மடற்குழுவில் குறிப்பிட்டார். இன்றும் விளையாடிக்கொண்டிருக்கும் பிரபலமான இந்திய விளையாட்டுக்காரரின் வாழ்க்கைவரலாறுதான் அது.
ஒசாமா பின்லாடன் என்றால் சந்திப்பது கடினம்,
வீரபாண்டியகட்டபொம்மன் என்றாலும் சந்திப்பது முடியாது; இந்த எழுத்தாளர் அப்படிப்பட்டவரின் வாழ்க்கைவரலாற்றை எழுதவில்லை. உயிருடன் இருப்பவரை
நேரில் சந்திக்காமலே நூற்றுக்கணக்கான பக்கங்களை அவர் எழுதினால் நான் ஏன் அதை வாங்கிப்படிக்கவேண்டும்?//

இது மிகவும் சரி. இம்மாதிரி ஒரு 10-15 புத்தகங்கள் வெளியிடப்பட்டன். ஒரு நடிகர். அரசியல் தலைவர். இப்படி.... விக்கிபீடியாவிலிருந்து வடித்து எடுத்து புத்தகமாக போட்டு காசு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இதற்கும் வலைப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. வலையில் இலவசமாக கிடைக்கும் இடத்தில் எதை வேண்டுமானால் கிறுக்கலாம். இது தொழில்நுட்பத்தின் சாத்தியம். அதை வைத்து யாரும் பெரிதாக காசு பண்ணிவிட முடியாது. 'அவர் சைக்கிள்' எடுத்து ரெண்டு ரவுண்ட் சுற்றி வருகிற பொழுதுபோக்கு மாதிரிதான் இது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இங்க் பேனாவில் எழுதும்போது வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள் 'நாங்க எல்லாம் பென்சில்லதான் எழுதிட்டிருந்தோம். இப்பவே இங்க் பேனாவில எழுதினா கையெழுத்து சரியாவே வராது'. இப்பொழுது கையெழுத்தே மறந்து போகுமளவிற்கு கணிணி வந்தாகிவிட்டது.

எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். அந்த எழுத்தே அதற்குண்டான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். :-)

said...

முந்தைய கமெண்ட்தான் 50-வது போல. உங்களோட 35 கமெண்டுகளை கழிச்சுட்டுப் பார்த்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்த மாதிரி இருக்கே :-) வாழ்த்துகள் தல :-))

said...

:)

said...

//எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். அந்த எழுத்தே அதற்குண்டான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். :-)//

இது ரொம்ப நல்லா இருக்கே ..

said...

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

ஸ்ரீதர் நாராயணன்
\\எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். அந்த எழுத்தே அதற்குண்டான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். :-)
\\
கலக்கல்.

said...

//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். //

சாரு அவருடைய இன்றைய இடுகையில்!! பொறுப்பிருக்கான்னு தெரியாத பின்னூட்டாளரே எனக்கு டாக்டர் பட்டம் இல்லைன்னு சர்வ நிச்சயமா தெரியுது! :))

said...

//பகடி செய்வதில் மனிதர் பின்னி எடுக்கிறார். பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”

சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன. //

யாரு சொந்தக் காசில் குடிப்பது பத்திப் பேசுவது என விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

குடித்துவிட்டு வாந்தி எடுப்பது யார்? யாரோட எழுத்து கக்கூஸ் வாசனை அடிக்குது என்பது எல்லாம் படிப்பவர்களுக்குத் தெரியும்!

என்ன எழவுடா இது!!

said...

இ.கொ
இவரைப்பத்தி ஏன் இன்னும் எழுதறீங்க. இக்னோர் ஹிம்! he does not matter.
அவரே அத சொல்லி புலம்புறாரே!

அப்புறமா இன்னொரு விஷயம். நான் தமாஷா எழுத போய் அவர் நெசமாவே எழுதி இருக்காரு!

//ஒன்றுமில்லை, மோர்க்குழம்பை 150 விதமாக்ச் செய்யலாம். நம்மிடையே மோர்குழம்பு மறைந்துவிட்டது ஆகவே மோர்க்குழம்பு சமையல் குறிப்புகள் எழுதலாம் என்று அங்கு சென்றால் அமெரிக்காகாரனிடமிருந்து அனுமதி பெறாமல் எழுதமுடியாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். சரபோஜி மகாராஜா சமையல்காரரின் சமையல் குறிப்புகள் அவை. ...... நான் எழுதுவேன் என்று நான் இப்போது அதை எழுதிக்கொண்டிருக்கிறேன். 25 விதமான ரசம், 150 மோர்க்குழம்பு என பலவகைகள் உள்ளன//

said...

//ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டு வேறு மொழி எதுவும் தெரியாத அமெரிக்கர்கள்/இங்கிலாந்துக்காரர்கள் ஆங்கில அகராதியை வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.//

அண்ணை, நல்லா சோக் அடிக்கிறாரு.
நெறைய average-joe-on-the-street-கள சந்திச்சிருப்பாரு போல!