//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...” நான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.//
இன்னிக்கு எனக்கு கொஞ்சம் ஜல்ப்பாக இருப்பதால் எனக்கு என்னோட பதிவின் வாசனை எனக்குத் தெரியலை. இங்க வந்து படிக்கும் நீங்க என்ன வாசனை அடிக்குதுன்னு சொன்னாப் புண்ணியமாப் போகும். அதோட நீங்க எல்லாரும் அவங்க அவங்க வலைப்பதிவுகளைத் திறந்து ஒரு முறை நல்லா மூச்சை இழுத்து மோந்து பார்த்து என்ன வாசனை வருது என்பதை இங்க பின்னூட்டமாப் போடுங்கப்பா.
அப்படியே கீழ்கண்ட இந்தப் பதிவுகளையும் படிச்சு என்ன வாசனை வருதுன்னு சொல்லுங்க. இவைகள் ஜென் குரு நோபிளஸ்ட் எழுதினது அல்லது அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எழுதினது.
- ஜென் குரு கதை சாம்பிள் 1
- ஜென் குரு கதை சாம்பிள் 2
- ஜென் குரு கதை சாம்பிள் 3 (ஆனா இதோட ஒரிஜினல் தொலைஞ்சு போச்சு அதனால வெறும் மறுபதிப்புதான்.)
- ஜென் சிஷ்யன் கதை 1
- ஜென் சிஷயன் கதை 2
- இன்னும் ஒரு சுட்டியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். வழக்கம் போல மூல நூல் காணாமல் போய்விட்டதா எனத் தெரியவில்லை. கிடைத்தால் தருகிறேன்.
- தேர்ட் டிகிரி, தேர்ட்டித் தேர்ட் டிகிரிங்கிற ரேஞ்சில் ஒரு காவியம் வேற இருக்காம். அதை நான் நல்ல வேளையா படிக்கலை. அதில் என்ன வாசம் அடிக்குதோ படிச்சவங்க சொல்லுங்கப்பா.
டிஸ்கி 1: கடைசியாகத் தந்திருக்கும் சுட்டிகளைச் சொடுக்கி வந்த வாசனையால் நீங்கள் மூர்ச்சையடைந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.
டிஸ்கி 2: காலை வேளையில் இந்த நோபிளஸ்ட் அருளுரையின் சுட்டியைக் கொடுத்து இன்றைய தினத்தைக் கெடுத்த, நண்பன் எனச் சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கும் பாவியை கடவுள் ரட்சிப்பாராக.
டிஸ்கி 3: காசு குடித்துக் குடிப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்ல அடிப்படைத் தகுதி என்ன எனக் கேட்டால் நீர் இணையக் கிரிமினல் என்ற பட்டம் பெறுவீர் என்பதை நினைவில் கொள்வீராக.