Thursday, September 25, 2008

பதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்!

அதாகப்பட்டது என்னான்னா வலைப்பதியும் பொதுஜனங்களே, நாம எல்லாம் இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த கலியுகத்திலே நம்மோட துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துக்க, நம்மை ஒரு ஜென் குருவாக வழிநடத்த, பெருங்கருணையோடு அவதரித்து வந்திருக்கும் நோபிளஸ்ட் ரைட்டர் அவர்கள் இன்னிக்கு தந்தருளியிருக்கும் உபதேசம் என்னான்னா எல்லா எழுத்துக்கும் வாசனை உண்டு. அது அவரோட பருப்பான, சாரி பொறுப்பான எழுத்தா இருக்கட்டும், நீங்க எழுதும் பொறுப்பற்ற எழுத்தா இருக்கட்டும் எல்லாத்துக்கும் வாசனை இருக்கு. அவர் மேலும் சொல்லி இருக்கிறது என்னான்னா

//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”

சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன.

நான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.//

இன்னிக்கு எனக்கு கொஞ்சம் ஜல்ப்பாக இருப்பதால் எனக்கு என்னோட பதிவின் வாசனை எனக்குத் தெரியலை. இங்க வந்து படிக்கும் நீங்க என்ன வாசனை அடிக்குதுன்னு சொன்னாப் புண்ணியமாப் போகும். அதோட நீங்க எல்லாரும் அவங்க அவங்க வலைப்பதிவுகளைத் திறந்து ஒரு முறை நல்லா மூச்சை இழுத்து மோந்து பார்த்து என்ன வாசனை வருது என்பதை இங்க பின்னூட்டமாப் போடுங்கப்பா.

அப்படியே கீழ்கண்ட இந்தப் பதிவுகளையும் படிச்சு என்ன வாசனை வருதுன்னு சொல்லுங்க. இவைகள் ஜென் குரு நோபிளஸ்ட் எழுதினது அல்லது அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எழுதினது.

  1. ஜென் குரு கதை சாம்பிள் 1
  2. ஜென் குரு கதை சாம்பிள் 2
  3. ஜென் குரு கதை சாம்பிள் 3 (ஆனா இதோட ஒரிஜினல் தொலைஞ்சு போச்சு அதனால வெறும் மறுபதிப்புதான்.)
  4. ஜென் சிஷ்யன் கதை 1
  5. ஜென் சிஷயன் கதை 2
  6. இன்னும் ஒரு சுட்டியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். வழக்கம் போல மூல நூல் காணாமல் போய்விட்டதா எனத் தெரியவில்லை. கிடைத்தால் தருகிறேன்.
  7. தேர்ட் டிகிரி, தேர்ட்டித் தேர்ட் டிகிரிங்கிற ரேஞ்சில் ஒரு காவியம் வேற இருக்காம். அதை நான் நல்ல வேளையா படிக்கலை. அதில் என்ன வாசம் அடிக்குதோ படிச்சவங்க சொல்லுங்கப்பா.

டிஸ்கி 1: கடைசியாகத் தந்திருக்கும் சுட்டிகளைச் சொடுக்கி வந்த வாசனையால் நீங்கள் மூர்ச்சையடைந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

டிஸ்கி 2: காலை வேளையில் இந்த நோபிளஸ்ட் அருளுரையின் சுட்டியைக் கொடுத்து இன்றைய தினத்தைக் கெடுத்த, நண்பன் எனச் சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கும் பாவியை கடவுள் ரட்சிப்பாராக.

டிஸ்கி 3: காசு குடித்துக் குடிப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்ல அடிப்படைத் தகுதி என்ன எனக் கேட்டால் நீர் இணையக் கிரிமினல் என்ற பட்டம் பெறுவீர் என்பதை நினைவில் கொள்வீராக.

27 comments:

said...

இதுதான் கடைசி. இனிமேல் இந்த டாபிக்கில் பதிவு போட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

டிஸ்கி: ஜென் குரு உத்தம தமிழ் எழுத்தாளரைப் பற்றி எழுத மாட்டேன் என பலமுறை சொல்லி இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பாக மாட்டேன்.

said...

//இந்த டாபிக்கில் பதிவு போட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.//

இந்த உறுதியை, நீங்கள் சொன்ன இரண்டாம் பத்தி போலின்றி நிஜமாகவே கடைப்பிடித்தால் நலம்.

ஏன் இவ்வளவு கோபம்? தேவையே இல்லை. போஸ்டர் பார்த்துவிட்டு சினிமாவை விமர்சிப்பவர்களுக்கு எந்த பயிற்சியும் பின்னணியும் இருந்தாலும் முக்கியத்துவம் தரத்தேவையில்லை.

ஆனால், நீங்கள் சுட்டியுள்ள பதிவின் பொதுமைப்படுத்தல் என்னையும் கிளறிவிட்டிருக்கிறதுதான். எழுதலாம்!

said...

முதல்ல இந்த உறுதி மொழிக்கு தாங்கீஸ் இகொ.
உங்க பதிவு வாசம்தானே?
கொடுத்து இருக்கிற தொடுப்பால ஓடோனில் வைக்க வேண்டிய லெவல்ல இருக்கு!
:-))
my sincere suggestion: ignore these guys. they are not worth the attention.

said...

//இந்த உறுதியை, நீங்கள் சொன்ன இரண்டாம் பத்தி போலின்றி நிஜமாகவே கடைப்பிடித்தால் நலம்.//

செய்வேன் செய்வேன். கவலை வேண்டாம். ஆனா அதை எழுதும் போதே இந்த ஆள் அடிக்கும் கூத்து ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. என்ன செய்ய. அதான் டிஸ்கி போட்டுட்டேன்.

நமக்கு புதசெவி, குறுக்கெழுத்துன்னு ஏகப்பட்ட மேட்டர் இருக்கு எழுத. இவரைப் போல இல்லாமல்.

//ஏன் இவ்வளவு கோபம்? தேவையே இல்லை. போஸ்டர் பார்த்துவிட்டு சினிமாவை விமர்சிப்பவர்களுக்கு எந்த பயிற்சியும் பின்னணியும் இருந்தாலும் முக்கியத்துவம் தரத்தேவையில்லை.//

வலையுலகில் ஏற்கனவே சில பொதுமைப்படுத்தல்களைக் கண்டு கடுப்பு. ஆனால் இந்த மாதிரி அதிமேதாவிகளைக் கண்டால் ரொம்பவே எரிச்சல் வருகிறது. பொதுமைப்படுத்துதல்^n செய்யும் பொழுது கடுப்பாக இருக்கிறது.

//ஆனால், நீங்கள் சுட்டியுள்ள பதிவின் பொதுமைப்படுத்தல் என்னையும் கிளறிவிட்டிருக்கிறதுதான். எழுதலாம்!//

என்னால் ஆனது. நீங்களும் எழுதுங்க. எல்லாம் அரைவேக்காடுங்கதானே. :)

said...

பொதுவாக தனி வலை வைத்து எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் மனசாட்சி வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள்

said...

//அதை எழுதும் போதே இந்த ஆள் அடிக்கும் கூத்து ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. //
நீர் ஏன்யா அவரு அடிக்கிற கூத்தெல்லாம் கவனிக்கிற? கவனிக்காம ஒதுக்கிற வேண்டியதுதானே!!

said...

http://pathivubothai.blogspot.com/2008/09/blog-post_9069.html

said...

என்னுடைய ரெண்டனா :-)
பலரும் சொன்னதுதான். இணையம் அல்லது பதிவுகள், அரியணைகளை தகர்த்துவிட்டது. அதை
ஜீரணிக்க அச்சு இதழில் இருந்து வருபவர்களால் முடிவதில்லை. எழுதியது தவறு என்றால்,பதிவு
போட்ட அடுத்த நொடி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், நார் நாராய் கிழிக்கலாம்.
இவை எல்லாம் பத்திரிக்கையில் நடக்காத விஷயம். அரியணையில் அமர்ந்து அறிவுரை சொல்வதை, கேட்கிறார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாமல் சொல்லிக் கொண்டு இருந்ததை, எழுத்தாளன், வாசகன் என்ற பாகுபாட்டை இணையம் தகர்த்துவிட்டது. இங்கு
எழுத்தாளனே வாசகன், வாசகனே எழுத்தாளன. இங்கு சட்டமெல்லாம் போட்டு இதைதான் எழுத வேண்டும் என்று யாரும் கோல் எடுத்து மிரட்ட முடியாது. இந்த சுதந்திரமே இணையத்தின் பலமும் பலகீனமும். விருப்பம் இருந்தால் படி இல்லையா படிக்காதே. அம்புட்டே :-)

said...

என்னுடைய ரெண்டனா :-)
பலரும் சொன்னதுதான். இணையம் அல்லது பதிவுகள், அரியணைகளை தகர்த்துவிட்டது. அதை
ஜீரணிக்க அச்சு இதழில் இருந்து வருபவர்களால் முடிவதில்லை. எழுதியது தவறு என்றால்,பதிவு
போட்ட அடுத்த நொடி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், நார் நாராய் கிழிக்கலாம்.
இவை எல்லாம் பத்திரிக்கையில் நடக்காத விஷயம். அரியணையில் அமர்ந்து அறிவுரை
சொல்வதை, கேட்கிறார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாமல் சொல்லிக் கொண்டு
இருந்ததை, எழுத்தாளன், வாசகன் என்ற பாகுபாட்டை இணையம் தகர்த்துவிட்டது. இங்கு
எழுத்தாளனே வாசகன், வாசகனே எழுத்தாளன. இங்கு சட்டமெல்லாம் போட்டு இதைதான்
எழுத வேண்டும் என்று யாரும் கோல் எடுத்து மிரட்ட முடியாது. இந்த சுதந்திரமே இணையத்தின்
பலமும் பலகீனமும். விருப்பம் இருந்தால் படி இல்லையா படிக்காதே. அம்புட்டே :-)

said...

ப்ளாகர்கள் இலவச சேவைகளை பயன்படுத்துவது குறித்து 'அம்மா தாயே எனக்கு காசு அனுப்புங்க' என தினம் தினம் பிச்சை எடுக்கும் ஒருத்தர் குறை சொல்வது அதுவும் தரம் குறைந்த வார்த்தைகளில் சொல்வதை என்ன சொல்வது.

பரபரபுக்காக பதிவர்களை குறை சொல்வது இப்போது வழக்கமாயிடுச்சு. இதெல்லாம் பதிவர்களின் நன்மைக்குத்தான் என்பதை புரிஞ்சு கொள்ள வேணும். சாருவெல்லாம் இப்படி பீ, மூத்திரம்ணு குற்றம் சாட்டப்பட்டதுக்குப் பின்னாலத்தான் பெரிய 'உத்தமனல்லாத' எழுத்தாளர் ஆகியிருக்காரு.

Intensity! ஹஹ.

said...

வந்தேன் ஐயா!

உடுங்க ...

said...

Freeயா விடு மாமே....

காப்பி ரைட் பிரச்சனை ஒண்ணும் இல்லையே?!

said...

உங்க பதிவ வாசனை பாக்கப் போய், என் மூக்கை சுட்டுக்கிட்டேன். அவ்ளோ சூடு!!!

said...

அந்த ஆளு எழுதன இத்தனை பதிவுகளை படிச்சிருக்கீங்க???

said...

Freeயா விடு மாமே....!!

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...

பரிணாமம் கணி சிமிட்டிக் கொண்டே இருக்கிறது. :-)

said...

கொத்ஸ்,

ஏன் இந்தக் கொந்தளிப்பு?

அவர் சொன்னாச் சொல்லிக்கிட்டுப் போகட்டுமே. அவரோட பதிவுகள் & பக்கங்களில்தானே சொல்றார்.

ஒரு நல்ல உதாரணம் வாயிலே வருது. என்னாத்துக்கு அதைச் சொல்லணுமுன்னு அடங்கிட்டேன்.

உஷா சொல்வது என்னான்னா..... மன்னராட்சி முடிஞ்சு மக்களாட்சி வந்துருச்சுன்னு:-)))))

said...

உள்ளேன் ஐயா!

//ramachandranusha(உஷா) said...
என்னுடைய ரெண்டனா :-)//

ரெண்டணான்னா, இரண்டு தடவைப் போடனுமா என்ன? :-))

அணாவை அக்கா இப்படி அனா, ஆவன்னா மாதிரி ஆக்கிட்டாங்களே.

said...

முகர்ந்து பார்த்தேன் முக்கை சுட்டுகிட்டன் Monitorல்!

said...

முகர்ந்து பார்த்தேன் முக்கை சுட்டுகிட்டன் Monitorல்!

said...

இகொ, சரி இதுல R P ராஜநாயஹம் எங்க வந்தாரு? சிஷ்யன் கதைன்னு அவருடையதை எடுத்துப் போட்டிருக்கீங்க!

அவரு எங்கயாவது சொன்னாரா சாருவோட சிஷ்யன் அப்படின்னு? தெரியல :(

எனக்கு அந்த sadism பிடிச்சிருந்தது. உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும்!

said...

சுந்தர்

ஜென் குருவின் படித்ததில் பிடித்தது லிஸ்ட்டில் இருந்தது. இல்லைன்னா எனக்கு இந்த மாதிரி ‘பின்’நவீனத்துவ ஆளுங்களை எல்லாம் தெரியுமா?

நல்ல ப்ளாக் எல்லாம் அறிமுகப்படுத்தறாராமே அதுல ரெண்டு சேம்பிள் போட்டேன்.

அது பிடிச்சு இருந்ததா!! யப்பா!!!

said...

ஓ, இன்னும் சாரு புராணம் முடியலையா, என்று நினைத்தவாறு மறுமொழிப் பக்கம் வந்தேன், உத்திராவாதத்தைப் பார்த்தேன் :-(
நடக்கட்டும் பார்க்கலாம்!

said...

எதிர்ப்பை முழுமையாக காட்டும் ஒரே வழி, இன்னும் ஆக்கபூர்வமாகச் செயல்படுதலே!

பிறழ் இல்லாப் புலர்தல்! (A)

said...

இ கொ

இந்தப் பதிவோட இதைப் பத்தின பேச்சை நிருத்திடுவேன் அப்படீன்னு சொன்னது ஆறுதலா இருக்கு :(

இந்த மாதிரி புகழ் வெறி புடிச்ச self centred லூஸுங்க நிறையப் பேர் இருக்காங்க..உளறிக்கிட்டேதான் இருப்பாங்க..ஒண்ணொண்ணா பார்த்து என்ன ஆகப்போகுது ?

பாராட்டும்போது கூட "என்னோட க்ளோன் மாதிரி" அப்படீன்னு..ங்கோ..

said...

அதே பொய்யன் பதிவுல லக்கிலுக் சாருவை தலை அப்படின்னு சொல்லி இருக்கிறதைப் பத்தி உங்க கருத்து என்ன? கருணாநிதி போய் சாரு வந்தது டும்டும்டும்மா?

said...

முதல் கதை...படித்தவுடனே ஷாக். அஷ்விதாவா???

கொத்ஸ் அதுக்கு மேல படிக்கலை.
நீங்களும் படிக்கத் தேவையில்லை.அப்புறம் மூச்சே விட முடியாத நிலைமை வந்துடும்.
மத்தபடி,உஷா,துளசி எல்லாரும் சொல்லிட்டாங்க.

நாம குப்பை..அவ்வளவுதானே சொல்ல வரார். அதுக்கு மேலயும் சொல்ல முடியும் அங்க இருக்கிற எழுத்தை.
விடுங்க.
வீணா பி பி எகிறும்:(

said...

the best answer to a fools is silence. When you talk back, you become one of them.

இதை யாரோ எனக்குச் சொன்னாங்க.