Tuesday, March 17, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - மார்ச் 2009

போன முறை எல்லாரும் போட்டுத் தாக்கிய பின் இந்த முறை புதிர் போடவே பயமாக இருக்கிறது. சென்ற முறையை விடக் கொஞ்சமேனும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

வாத்தியார் வாஞ்சி, எங்கள் கூகிள் குழுமத்தில் சொல்லிக் கொடுத்ததன்படி இனி இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்பதற்குப் பதிலாக முறையே குறுக்கு, நெடுக்கு என்ற பதங்களைப் பாவிக்கலாம் என இருக்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
  • இந்த புதிரமைக்க பேருதவியாக இருந்த பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


குறுக்கு

3 புத்திரன் தலைமாறியதால் பிள்ளையார் ஆனானே! (5)
6 இந்தப் பண் மதத்தில் ஒரு பாதி (4)
7 யோசித்து ஆரம்பிக்க வேண்டிய இந்த தொழிலில் கண்ணாயிரு (4)
8 உடன்பிறந்தவள் வீசிய வலையில் பாதி பெற்ற பொன் உருவம் (6)
13 சமமில்லா இந்தக் சரணாகதிக்குக் காசும் வேண்டும் (6)
14 உலகத்தில் தலை இழந்த முதல் மகள் (4)
15 கலவரமும் கலகமும் ஆரம்பித்தால் சிரிப்பா? (4)
16 தேர் கொண்ட பூவிற்குமா குலப்பாசம்? (2,3)

நெடுக்கு

1 இசையின் பிறப்பிடத்தை இரவில் மறை (2,3)
2
உலகெங்கும் பரவி தங்கள் முறைகளை எண்ணிப் பார்த்தனர் (5)
4 இந்த ஊர் பேர் தெரியுமெனக் கருதக் கலை ஞானம் வேண்டும் (4)
5
அவன் மம்தாவைக் கண்டான், தீராப்பகை கொண்டான் (4)
9 சிலம்புச் செல்வரின் அடியும் முடியும் அறிந்த கொஞ்சம் பேர் (3)
10 பணமும் உறுதியும் கலந்து வந்த நல்ல நேரம் (5)
11 தாமிரத்தால் செய்த கப்பலில் ஒரு பகுதி சண்டை நடந்த இடம் (5)
12 வசந்தியின் இடை மாறியதாய் வெட்டிப் பேச்சு (4)
13 அவிக்க ஆரம்பித்து சமையலில் முடிந்த கலப்பு (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

115 comments:

  1. போன முறை கலக்கிய மக்கள் இந்த முறை என்ன செய்யப் போகிறார்கள் எனப் பார்க்கலாம்!!

    ReplyDelete
  2. மேலிருந்து கீழ் :

    12. வதந்தி
    13. அவியல்

    இடமிருந்து வலம் :

    14. புதல்வி
    16. ஜாதிமுல்லை
    15. கலகல

    ReplyDelete
  3. இ.வ.13 ஐந்து எழுத்துதானா? ஆறு கட்டம் தொடர்ச்சியாக இருக்கிறதே? என்னாச்சு தல?!

    ReplyDelete
  4. நெடுக்கு
    --------
    1. சாமவேதம்
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10. சுபகாலம்
    11. செம்புலம்
    12. வதந்தி
    13. அவியல்


    குறுக்கு
    ------
    3. முதல்வன்
    6. மருதம்
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. புதல்வி
    15. கலகல
    16. சாதிமுல்லை

    அனைத்தும் சரி என்றால், 1,6 தவிர மற்றவை எளிதாய் இருந்தது.

    ReplyDelete
  5. ஹையா.. முடிச்சிட்டேன்..

    மேலிருந்து கீழ் :
    ----------------
    1. சாமவேதம்
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10. சுபகாலம்
    11. செம்புலம்
    12. வதந்தி
    13. அவியல்

    இடமிருந்து வலம் :
    -------------------
    3. முதல்வன்
    6. மருதம்
    7. கருமம் / கருமமே
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. புதல்வி
    16. ஜாதிமுல்லை
    15. கலகல

    ReplyDelete
  6. இந்த முறை கொஞ்சம் சிரமமாவே இருக்கும் போல... சும்மா மேலோட்டமா பார்க்கையில் ஒரு சில விடைகள் மட்டுமே எளிதாக இருக்கிறது. ம்ம்ம்ம்... பார்க்கலாம்... கண்டிப்பா முயற்சி செய்ய வேண்டியது தான்...

    ReplyDelete
  7. இ-வ

    3.முதல்வன்
    6.----------
    7.கருமம்
    8.தங்கச்சிலை
    13.அர்ப்பணம்
    14.புதல்வி
    16.ஜாதி முல்லை

    மே-கீ

    1.----------
    2.----------
    4.தக்கலை
    5.வன்மம்
    9.சிலர்
    10.சுப காலம்
    11.அம்பலம்
    12.வதந்தி
    13.அவியல்

    ReplyDelete
  8. இப்போதைக்கு என்னால் கண்டுபிடிக்க முடிந்த விடைகள்...

    குறுக்கு:
    3. புதல்வன்
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    14. புதல்வி ???
    15. கலகல
    16. ஜா(சா)திமுல்லை

    நெடுக்கு:
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிவன் ???
    12. வதந்தி
    13. அவியல்

    கண்டிப்பாக மற்றவையும் கண்டுபிடிக்க முயற்சி செய்வேங்க... கொஞ்சம் கடினமா தான் இருக்கு. பார்ப்போம்.

    ReplyDelete
  9. அப்படியே இதுவும் சரியானு சொல்லுங்களேன்.

    நெடுக்கு:
    10. ராசிபலன்.

    இது வரை சொன்னவை.
    குறுக்கு:
    3. புதல்வன்
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    14. புதல்வி ???
    15. கலகல
    16. ஜா(சா)திமுல்லை

    நெடுக்கு:.
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிவன் ???
    10. ராசிபலன்.
    12. வதந்தி
    13. அவியல்

    ReplyDelete
  10. குறுக்கு:

    3. முதல்வன்
    6.
    7. கருமம் (கருமமே)
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. புதல்வி
    15. கலகல
    16. ஜாதிமுல்லை

    நெடுக்கு:
    1.
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10.
    11.
    12. வதந்தி
    13. அவியல்


    1ம், 11ம் ரொம்பவே மண்டை காய்கிறது. அதனால் அப்புறம் வந்து முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  11. ஜி3

    போணி நீங்கதான்.

    முதல் பின்னூட்டத்தில் இருந்து

    நெ 12 13
    கு 14 15 16

    சரியான விடைகள்.

    ReplyDelete
  12. ஏஸ்!!

    பட்டையைக் கிளப்பிட்டீங்க. அனைத்தும் சரி!!

    வாழ்த்துகள்!!

    அடுத்த முறை உம்மைப் புதிரமைக்கச் சொல்ல வேண்டியதுதான்!!

    ReplyDelete
  13. ஜி3,

    இப்போ எல்லாம் சரியா இருக்கு. சாய்ஸ் எல்லாம் குடுத்து இருக்கீங்க. ஆனாலும் பரவாயில்லை!!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. வாய்யா சங்கரு!! நல்லாப் புதிர்ப் பைத்தியம் பிடிச்சாச்சு போல!! :))

    கு 3 7 8 13 14 16
    நெ 4 5 9 10 12 13

    இவை சரியான விடைகள்! மற்றவைகளையும் சீக்கிரம் போடுங்கள்.

    ReplyDelete
  15. //Anonymous said...

    Nice Puzzle.
    //

    அனானி அவர்களே, வருகைக்கு நன்றி. ஆனா புதிரைப் போடலாமே!

    ReplyDelete
  16. //இ.வ.13 ஐந்து எழுத்துதானா? ஆறு கட்டம் தொடர்ச்சியாக இருக்கிறதே? என்னாச்சு தல?!//

    யோசிப்பவரே, புதிரை சரியாப் படிக்கறீங்களான்னு பார்த்தேன். ஹிஹி!!

    ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆகிப் போச்சு. இப்போ சரி செஞ்சாச்சு!!

    சொன்னதுக்கு நன்னி!

    ReplyDelete
  17. //நாகை சிவா said...

    ரைட்டு :)
    //

    யோவ் நக்கலா? விடையைச் சொல்லும்!

    ReplyDelete
  18. //இந்த முறை கொஞ்சம் சிரமமாவே இருக்கும் போல... சும்மா மேலோட்டமா பார்க்கையில் ஒரு சில விடைகள் மட்டுமே எளிதாக இருக்கிறது. ம்ம்ம்ம்... பார்க்கலாம்... கண்டிப்பா முயற்சி செய்ய வேண்டியது தான்...//

    வாங்க ராசுக்குட்டி. கட்டாயம் முயற்சி செய்யுங்க. நானும் கொஞ்சம் கஷ்டமாத்தான் குடுக்கப் பார்க்கிறேன். நம்ம ஆளுங்க எல்லாம் செவாக் மாதிரி அடிச்சு தூள் கிளப்பறாங்க!! :)

    ReplyDelete
  19. ராசுக்குட்டி, வாக்கு குடுத்த மாதிரியே முயற்சி பண்ணிட்டீங்க! நன்னி!

    கு 3 7 8 14 15 16
    நெ 4 5 12 13

    இவை சரியானவை. அடுத்த பின்னுட்டம் வேற வந்தாச்சு, அதையும் பார்க்கறேன்.

    ReplyDelete
  20. ராசுக்குட்டி

    10 தவறான விடை!!

    ReplyDelete
  21. வாங்க மஞ்சுளா

    கு 3 7 8 13 14 15 16
    நெ 2 4 5 9 12 13

    இவை சரியான விடைகள்!

    ReplyDelete
  22. நெடுக்கு...
    2. விதங்கள்
    9. சிம்பு

    ம்ம்ம்ம்... எத்தனை முயற்சிக்கு அப்புறம் எல்லாம் சரியா சொல்லறேன்னு பார்க்கலாம்.

    ReplyDelete
  23. ராசுகுட்டி

    2 ஓக்கே

    9 ம்ஹூம்.

    ReplyDelete
  24. அப்பாடா... ஒண்ணு கண்டு பிடிச்சாச்சு... இத்தனை சீக்கிரம் பதில் சொல்லறீங்க... 10 சரியான்னு சொல்லுங்களேன்.

    நெடுக்கு...
    10. பொற்காலம்

    9. நல்லா குழப்புதுங்க. (மா பொ சி நு எல்லாம் யோசிக்க தோணுது). விடை கண்டு பிடிச்சே தீருவேங்க.

    ReplyDelete
  25. ராசுக்குட்டி

    10 - சரி இல்லை

    9 - குழப்புதா! வாழ்க!! அதுக்குத்தானே புதிர்!

    ReplyDelete
  26. நெடுக்கு
    9. சிலர் (கண்டு பிடிசிடோம்ல கடைசில - இத்தனை எளிதா இருக்கே!!!)

    குறுக்கு
    13. அர்ப்பணம்

    ReplyDelete
  27. நெடுக்கு
    9. சிலர் (கண்டு பிடிசிடோம்ல கடைசில - இத்தனை எளிதா இருக்கே!!!)
    10. சுபகாலம்

    குறுக்கு
    13. அர்ப்பணம்

    ReplyDelete
  28. ராசுக்குட்டி

    ஜூப்பரு!!

    9 10 13 எல்லாம் சரி!!

    விடையைக் கண்டுபிடிச்ச பின் எளிதாகத்தானே இருக்கும்!! :))

    ReplyDelete
  29. குறுக்கு
    11. தாம்பூலம் (சரியானு தெரியலைங்க)...

    இத்தனை பின்னூட்டம் போட்டதுக்கு மன்னிக்கவும். அப்படியே உங்களோட தொலை(அழை)பேசி எண்ணை எனக்கு nagarajan.appichigounder@gmail.com அனுப்புங்களேன். இத்தனை பக்கத்துல இருந்துட்டு பேசாம இருக்கறது நல்லா இல்லைங்க. (நான் நியூயார்க்-ல தான் இருக்கேன்)...

    ReplyDelete
  30. ராசுக்குட்டி

    11 - சரி இல்லை.

    அலைபேசி எண்ணை அனுப்பறேன்.

    ReplyDelete
  31. கொத்தனாரே, விடுபட்டதெல்லாம் சரியான்னு பாருங்க:

    குறுக்கு:
    6. மருதம்

    நெடுக்கு:
    1. சாமவேதம்
    10.சுபபலம்
    11. செம்புலம்

    ReplyDelete
  32. மஞ்சுளா

    6 1 11 சரியான விடை
    10 தவறு

    ReplyDelete
  33. //9 சிலம்புச் செல்வரின் அடியும் முடியும் அறிந்த கொஞ்சம் பேர் (3)
    // சிலர்

    //12 வசந்தியின் இடை மாறியதாய் வெட்டிப் பேச்சு (4)
    // வதந்தி

    ReplyDelete
  34. கைப்ஸ்

    9 / 12 போட்ட ரெண்டுமே சரி!

    ReplyDelete
  35. வணக்கம் கொத்ஸ்,

    எது கேள்வி, எது குறிப்பு என்று தெரியாக அளவிற்கு குழப்பி அடிக்கிறீர்கள்...

    கு: 6
    நெ: 1, 2

    அப்புறமா இவைகளுக்கு விடை அளிக்கிறேன்.

    குறுக்கு:

    3 புதல்வன்
    6
    7 கருமம்
    8 தங்கச்சிலை
    13 சமர்ப்பணம்
    14 புதல்வி
    15 கலகல
    16 சாதிமல்லி

    நெடுக்கு:
    1
    2
    4 தக்கலை
    5 வன்மம்
    9 சிலர்
    10 சுபகாலம்
    11 செம்புலம்
    12 வதந்தி
    13 அவியல்

    ReplyDelete
  36. 2,3 தடவை உங்க புதிரை முயற்சித்து ரொம்ப செய்ய முடியல. ஆனால் இந்த தடவை,
    தப்பா இருந்தாலும், தப்பா கூட நிரப்பிட்டோம் அப்படீனு ஒரு திருப்தியோட பதில்கள்:

    குறுக்கு

    3. முதல்வன்
    6 மருதம்
    7 கருமம்
    8 தங்கச்சிலை
    13 அர்ப்பணம்
    14 முதல்வி
    15 கலகல
    16 ஜாதிமல்லி

    நெடுக்கு
    1 சாமவேதம்
    2. விதங்கள்
    4 தக்கலை
    5 வன்மம்
    9 சிலர்
    10 சுபகாலம்
    11 செம்புலம்
    12 வதந்தி
    13 அவியல்

    ReplyDelete
  37. குறுக்கு

    3 முதல்வன்
    6 மருதம்
    7 கருமம்
    8 தங்கச்சிலை
    13 அர்ப்பணம்
    14 புதல்வி
    15 கல கல
    16 சாதி முல்லை

    நெடுக்கு

    1 சாம வேதம்
    2 விதங்கள்
    4 தக்கலை
    5 வன்மம்
    9 சிலர்
    10 சுபகாலம்
    11 செம்புலம்
    12 வதந்தி
    13 அவியல்

    ReplyDelete
  38. வாங்க சதீஸ்

    குழப்பினால்தானே புதிர் சுவாரசியமா இருக்கும்!!

    கு 7 8 14 15
    நெ 4 5 9 10 11 12 13

    இவை சரியானவை.

    ReplyDelete
  39. அமுதா

    முயன்றால் முடியாதது உண்டோ!!

    கு 3 6 7 8 13 15
    நெ 1 2 4 5 9 10 11 12 13

    இவை எல்லாமே சரி. அடுத்த தவணையில் விட்டதைப் பிடியுங்க!

    ReplyDelete
  40. பாசமலர்

    கலக்கிட்டீங்க!! ஆல் ஓக்கே!!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  41. அப்பாடா.. எப்படியோ நினைச்ச மாதிரி உங்களோட பேசியாச்சு... சந்தோசம் ங்க. காலைல இருந்து வலைப்பூ பக்கம் வர்றதுக்கு நேரம் கிடைக்கலீங்க... குறுக்கு 6 ம், நெடுக்கு 1,11 ம் இன்னும் கொஞ்சம் குழப்பமாவே இருக்கு. கண்டிப்பா எளிதாக தான் இருக்கணும்... பார்க்கலாம் எப்போ கண்டுபிடிக்கறேன்னு...

    குறுக்கு.
    6. பந்தம் ???

    நெடுக்கு
    11. தாம்பாளம் ???

    நிஜமாலுமே சரியான பதில் தெரியலைங்க... அதுனாலா, நான் திருப்பி திருப்பி கேட்டுட்டே இருந்தா தப்பா நினைச்சுக்காதீங்க...

    ReplyDelete
  42. எழுத்துப்பிழைங்க...

    குறுக்கு.
    6. பந்தம் ???

    நெடுக்கு
    11. தாம்பாலம் ???

    ReplyDelete
  43. 10. சுபகாலம் ?

    மொத்தத்துல எனக்கு நேரம் சரியில்ல.. :-(

    ReplyDelete
  44. ராசுக்குட்டி,

    இந்த விடைகள் எல்லாம் வேலைக்காவது. வேற கொண்டு வாங்க!! :))

    ReplyDelete
  45. மஞ்சுளா

    இப்போ எல்லாம் சரியா இருக்கு!! நீங்க கடைசியாப் போட்ட விடைதான் உங்களுக்கு!! :))

    ReplyDelete
  46. மொத இண்ஷ்டால்மென்டு:
    குறுக்கு


    8 தங்கச்சிலை
    13 அர்ப்பணம்
    14 புதல்வி
    15 கலகல
    16 சாதிமுல்லை

    நெடுக்கு

    2 விதங்கள்
    4 தக்கலை
    5 வன்மம்
    9 சிலர்
    10 சுபகாலம்
    12 வதந்தி
    13 அவியல்

    ReplyDelete
  47. //இப்போ எல்லாம் சரியா இருக்கு!! நீங்க கடைசியாப் போட்ட விடைதான் உங்களுக்கு!! :))//

    இதுல உறுதி எங்க வந்தது? ஒண்ணும் புரியல.

    எப்படியோ ஒருவழியா போட்டாச்சு, இனிமே அடுத்த மாசத்துக்கு காத்திருக்கவேண்டியது தான்.

    ReplyDelete
  48. குறுக்கு
    3. புதல்வன்
    6.வழிபாடு
    7.கர்மம்
    8.தங்கச்சிலை
    13.அர்ப்பணம்
    14.புதல்வி
    15.கலகல
    16.ஜாதி மல்லி

    நெடுக்கு
    1.
    2.
    4.தக்கலை
    5.வன்மம்
    9.சிலர்
    10.சுபநேரம்
    11.செம்புலம்
    12.வதந்தி
    13. அவியல்

    ReplyDelete
  49. மறுபடியும் ஒரு முயற்சி... எத்தனை முயற்சி தேவையோ தெரியலையே :( :(

    நெடுக்கு:
    1. சாம வேதம்
    11. செம்புலம்

    குறுக்கு:
    6. மருதம்

    ReplyDelete
  50. வணக்கம் பாலகிருஷ்ணன்

    3 6 7 8 13 14 15 16
    1 2 4 5 9 11 12 13

    இவை சரியான விடைகள்.

    10 ஒன்றே ஒன்று மட்டும் தவறு.

    ReplyDelete
  51. வாங்க திவா

    8 13 14 15 16
    2 4 5 9 10 12 13

    என போட்டது எல்லாம் சரி. இரண்டாவது இன்ஸ்டால்மெண்டை சீக்கிரமே அனுப்புங்க! :))

    ReplyDelete
  52. //இதுல உறுதி எங்க வந்தது? ஒண்ணும் புரியல.//

    புரியாமப் போட்டதுக்கு மார்க் குறைக்கவா? :) விடை வரும் பொழுது பாருங்க புரியும்!

    //எப்படியோ ஒருவழியா போட்டாச்சு, இனிமே அடுத்த மாசத்துக்கு காத்திருக்கவேண்டியது தான்.//

    நடுவில் புதசெவி பதிவு வரும். படிக்கலாம். அப்புறம் தென்றலில் வாஞ்சியின் புதிர் வரும். போடலாம். அதை எல்லாம் விட்டுட்டு சும்மா காத்துக்கிட்டு இருந்தால் எப்படி? :)

    ReplyDelete
  53. வாங்க தமிழ்ப்பிரியன்

    7 8 13 14 15
    4 5 9 11 12 13

    இவை சரியான விடைகள்.

    ReplyDelete
  54. ராசுகுட்டி

    விடாமுயற்சிக்குப் பாராட்டுகள்

    1 11 6 ஆகிய மூன்றுமே சரி!!

    இத்தோடு அனைத்தும் சரி. வாழ்த்துகள்!! :)

    ReplyDelete
  55. 2 வது முயற்சி

    குறுக்கு

    3 புத்திரன் தலைமாறியதால் பிள்ளையார் ஆனானே! முதல்வன்

    நெடுக்கு
    11 செம்புலம்,

    ReplyDelete
  56. அட 11 ஓக்கேவா? ஹிஹி!

    ReplyDelete
  57. ம்ம்ம் மத்தது தண்ணி காட்டுது. க்ளூ கேக்க ஈகோ இடம் கொடுக்கலை. பாக்கலாம்!

    ReplyDelete
  58. //புரியாமப் போட்டதுக்கு மார்க் குறைக்கவா? :) //

    வார்த்தைய பிரிச்சு சேர்த்து ஒருவழியா உறுதிய வரவழைச்சுட்டேன். :-(

    //நடுவில் புதசெவி பதிவு வரும். படிக்கலாம். //

    கண்டிப்பா.

    //அப்புறம் தென்றலில் வாஞ்சியின் புதிர் வரும். போடலாம். //

    இந்த மாசம் போட்டாச்சே.

    நன்றி!!

    ReplyDelete
  59. அப்பாடா... ஒரு வழியா எல்லாம் கண்டு பிடிச்சாச்சு... ஒரு சில பதில்கள் ரொம்பவே யோசிக்க வைச்சுடுசுங்க... அதுவும் நல்லதுக்கு தான்... இப்படியாவது யோசிக்கறோமே... :) :) :)

    இனி மஞ்சுளா அவர்கள் சொன்ன மாதிரி அடுத்த புதிரை எதிர் பார்க்க வேண்டியது தான்... :) உங்களோட அடுத்த பதிவுகளையும் கண்டிப்பா படிப்போங்க...

    ReplyDelete
  60. குறுக்காக3.முதல்வன் 6.??? 7.கருமம்
    8.தங்கச்சிலை13.அர்ப்பணம்14.புதல்வி16 ஜாதி முல்லை
    நெடுக்காக 1.???? 2 ???? 4தக்கலை 5 வன்மம் 9 சிலர் 10 சுபகாலம் 11. செம்புலம் 12 வதந்தி 13 அவியல்

    இந்த முறை சற்றுக் கடினமாக இருக்கிறது

    நாராயாணன்

    ReplyDelete
  61. வாங்க நாராயணன்

    போன தடவை எல்லாம் சும்மா ப்பூன்னு ஊதித்தள்ளிட்டாங்களா, அதான் இந்த முறை கொஞ்சம் கடினமாக்காலாமேன்னு செஞ்சேன்!

    3 7 8 13 14 16
    4 5 9 10 11 12 13

    எனப் போட்டது எல்லாம் சரிதானே!! மத்தது எல்லாமும் போடுங்க!!

    ReplyDelete
  62. வாழ்த்துகள் பாலகிருஷ்ணன் சார்

    இப்போ எல்லாம் சரியா இருக்கு!!

    ReplyDelete
  63. குறுக்காக 15 கலகல ( விடை எழுத விட்டுப் போயிடுத்து) 6.சந்தம்

    நெடு 1ம் 2ம் கொஞ்சம் கூடத் தெரியவில்லை

    நாராயணன்

    ReplyDelete
  64. நெடு 1. சாம வேதம்
    குறு 6. மருதம்

    நெடி 2. ?த?க? ( தெரிவதேயில்லை)

    ReplyDelete
  65. 3. முதல்வன்
    6.திருமறை
    16. சாதிமல்லி


    1. ஆதி தாளம்

    ReplyDelete
  66. குறுக்கு:
    3. முதல்வன்
    6. ஹிந்தள
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. முதல்வி
    15. கலகல
    16. ஜாதிமல்லி

    நெடுக்கு:
    1.
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10.
    11.
    12. வதந்தி
    13. அவியல்

    ReplyDelete
  67. முக்கி மொனகி...
    கு 7 கர்மம்
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா! இன்னும் ரெண்டு!

    ReplyDelete
  68. கு --- 15. கலகல 6.மருதம்
    நெ----1.சாம வேதம் 2.? த ? க ?

    R.நாராயணன்

    இதே விடைகளை முன் இரு பின்னூட்டங்களில் எழுதினேன். கிடைத்ததா தெரியாததால் மீண்டும் அனுப்புகிறேன். நெடு 2 சுத்தமாகத் தெரிவதே இல்லை. தமிழ் வார்த்தைதானா?

    ReplyDelete
  69. குறுக்கு:
    3. முதல்வன்
    6.
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. புதல்வி
    15. கலகல
    16. ஜாதிமுல்லை

    நெடுக்கு:
    1.
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10.
    11. செம்புலம்
    12. வதந்தி
    13. அவியல்

    6 ஆனாலும் குழப்புதே! இந்தப் பண்-இல் ஒளிஞ்சிட்டிருக்கா? விக்கில கூட தேடினேன்:-)

    ReplyDelete
  70. என் தமிழ்ப் பணியைத் தடுக்குமாப்போலே, சரியா, தவறா என்று தெரியப்படுத்தாமலும், விடை தந்தோர் அட்டவணையை இன்னமும் பெப்ருவரியிலேயே காட்டும் கொத்தனாருக்குக் கண்டனங்கள்.

    ReplyDelete
  71. குறுக்கு 
    3 - புதல்வன் (?)
    6 - மருதம்
    7 - கருமமே
    8 - தங்கச்சிலை
    13 - அர்ப்பணம் (?)
    14 - புதல்வி
    15 - கலகல
    16 - சாதி முல்லை

    நெடுக்கு 
    1 - சாம வேதம்
    2 - விதங்கள்
    4 - தக்கலை
    5 - வன்மம்
    9 - சிலர்
    10 - சுபகாலம்
    11 - செம்புலம்
    12 - வதந்தி
    13 - அவியல்

    Excel sheet shows last month's answer ?

    -அரசு

    ReplyDelete
  72. கொத்ஸ்ஸ்.
    இதோ என் முயற்சி.

    நெடுக்கு

    1,சாமவேதம்
    9,சிலர்
    12வதந்தி
    குறுக்கு....
    7,கர்மம்
    13,அர்ப்பணம்
    14,புதல்வி
    15,கல கல
    16,ஜாதி முல்லை.

    சரியான்னு பார்க்கணும்:)

    ReplyDelete
  73. வாரயிறுதியில் கணினி பக்கமே வர முடியவில்லை. விடையைச் சொல்லிக் காத்திருந்தவர்கள் மன்னிக்கவும். இப்போ எல்லாம் சரி பார்த்திடலாம்.

    ReplyDelete
  74. நாராயணன்

    15 - ஓக்கே
    6 - இல்லை

    ReplyDelete
  75. தமிழ்ப்பிரியன்

    3 6 16 1 - எதுவும் சரி இல்லையே.

    ReplyDelete
  76. தமிழ்ப்பிரியன்

    சாரிங்க. தப்பா சொல்லிட்டேன்.

    3 ஓக்கேதான்!!

    ReplyDelete
  77. கெபி அக்கா

    3 7 8 13 15
    2 4 5 9 12 13

    இவை சரியான விடைகள்!

    ReplyDelete
  78. திவா

    7 போனால் போகுதுன்னு மார்க் தரேன்! :)

    ReplyDelete
  79. நாராயணன்

    உங்க விடைகள் வந்திருச்சு. நான் பதில் சொல்லத்தான் தாமதம்.

    2 தவிர மத்தது எல்லாம் போட்டாச்சு போல!!

    தமிழ் வார்த்தைதாங்க. அதில் என்ன சந்தேகம்! :)

    ReplyDelete
  80. கெபி அக்கா,

    இந்த தடவை போட்டதில்

    14 16 11 - இவை சரியானவை!

    1 6 10 - இவை மட்டுமே பாக்கி!

    ReplyDelete
  81. வாங்க அரசு

    6 7 8 13 14 15 16

    1 2 4 5 9 10 11 12 13

    3 மட்டும்தான் பாக்கி போல!!

    ReplyDelete
  82. வாங்க அரசு

    6 7 8 13 14 15 16

    1 2 4 5 9 10 11 12 13

    3 மட்டும்தான் பாக்கி போல!!

    ReplyDelete
  83. வாங்க வல்லிம்மா

    ரொம்ப நாள் ஆச்சே நம்ம பக்கம் வந்து.

    1 9 12
    7 13 14 15 16

    என போட்டது எல்லாமே சரியான விடைகள்!! :))

    அப்படியே மத்தது எல்லாமும் போடப் பாருங்க!!

    ReplyDelete
  84. பலரும் இந்த மாத விடைகள் பக்கம் சரியாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். பல முறை முயன்று பார்த்துவிட்டேன்.

    இப்பொழுது அந்தக் கோப்பில் எல்லாப் பக்கங்களும் தெரியுமாறு செய்துவிட்டேன். எனக்கு சரியாகத் தெரிகிறது.

    யாரேனும் பார்த்துச் சொன்னால் தேவலாம்.

    ReplyDelete
  85. எல்லாமே தெரியுதே! மார்க் பக்கத்தை சொன்னேன். புதிரை சொல்லலை! :-))

    ReplyDelete
  86. //7 போனால் போகுதுன்னு மார்க் தரேன்! :)//

    போனால் போகுது எல்லா வாணாம்.
    கருமம்
    சரியா?

    ReplyDelete
  87. திவா

    இப்போ 7 சரியான விடைதான்!!

    மத்தவங்க நீங்க முதன்முறை தந்த விடையை தந்த பொழுது அவர்களுக்கும் மதிப்பெண் தந்ததால் உங்களுக்கும் தருகிறேன் எனச் சொன்னேன். :)

    ReplyDelete
  88. நெ 2.விதங்கள்

    ( இந்த விடை சரியாகுமா அது சரியானால் , இதில் உலகெங்கும் , எண்ணிப் பார்க்க என்ன உள்ளது ? )

    R.நாராயணன்

    ReplyDelete
  89. 3 - முதல்வன் ??

    I liked the positive thinking approach, instead of telling 3 is wrong, you told still I need to complete 3. WOW...

    -Arasu

    ReplyDelete
  90. ஆஹா. தான்க்ஸ் கொத்ஸ்.
    போடப் பார்க்கிறேன். சோம்பேறித்தனம் தான்:)

    ReplyDelete
  91. நாரயணன்

    இப்போ 2 ஓக்கே.

    ReplyDelete
  92. அரசு

    3 இப்போ சரியாச்சு!! :)

    ReplyDelete
  93. குறுக்கு
    3.புதல்வன்
    7.கருமம்
    8.தங்கச்சிலை
    14.புதல்வி
    15.கலகல
    16.ஜாதி மல்லி அல்லது ஜாதி முல்லை

    நெடுக்கு.

    4.தக்கலை
    5.வன்மம்
    9.சிவம்
    10.சுபகாலம்
    11.போர்கலம்
    12.வதந்தி
    13.அவியல்


    ஆணியோ ஆணி கொத்ஸ்.

    இவ்வளவுதான் முடிஞ்சுது.

    ReplyDelete
  94. வாய்யா பெருசு

    நல்லா இருக்கியா?

    7 8 14 15 16
    4 5 10 12 13

    இந்த பத்து விடைகள் சரியானவை. மற்றவைகளை மீண்டும் முயலவும்.

    ReplyDelete
  95. இம்முறை கொஞசம் கஷ்டமாகத்தான் உள்ளது. என்னுடைய சில விடைகள்

    குறுக்கு

    8 தங்கச்சிலை
    13 அர்ப்பணம்
    14 புதல்வி
    15 கலகல
    16 சாதி முல்லை

    நெடுக்கு

    9 சிலர்
    10 சுபகாலம்
    12 வதந்தி
    13 அவியல்

    ReplyDelete
  96. இ.வ.

    13.அர்ப்பணம்

    மே.கி.
    2.விதங்கள்
    9.சிலர்

    ReplyDelete
  97. கொத்ஸ்

    தொல்லைபேசி எண்ணை அனுப்பவும்

    ReplyDelete
  98. எங்கடா, இந்த தடவை நான் attempt பண்றதுக்குள்ள நீங்க விடை போட்டிட்டுவீங்ளோன்னு நினைச்சுட்டு இருந்தேன் , நல்ல வேளை . :-)

    நிறைய குறிப்புகள் அசத்தலா இருந்துச்சு.

    குறுக்கு
    -------
    3. முதல்வன்?
    6. மருதம்
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. புதல்வி
    15. கலகல
    16. சாதி முல்லை

    நெடுக்கு
    --------
    1. சாம வேதம்
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10. சுபகாலம்
    11. செம்புலம்
    12. வதந்தி
    13. அவியல்

    ReplyDelete
  99. மகேஷ்April 01, 2009 9:44 AM

    கொத்தனாரே,

    நான் அனுப்பிய பதில்களை கவனிச்சிங்களா? சரியா தவறான்னு சொல்லுஙக. அனுப்பி 4 நாள் ஆச்சு. ஒரு வேளை பதில்கள் உஙகளை வந்து சேரலையோ?

    மகேஷ்

    ReplyDelete
  100. போட்டி இன்னும் தொடர்கிறதா எனத் தெரியவில்லை. இருப்பினும் நான் இத்தனை தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும். எனது விடைகள் இதோ:
    1. சாமவேதம்
    2.விதங்கள்
    3.புதல்வன்
    4.தக்கலை
    5.வன்மம்
    6.மருதம்
    7.கருமம்
    8.தங்கச்சிலை
    9.சிலர்
    10.சுபகாலம்
    11.செம்புலம்
    12.வதந்தி
    13.அர்ப்பணம்
    14.புதல்வி
    15.கலகல
    16.சாதிமுல்லை
    சரிபார்ப்பிற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  101. மகேஷ்

    போட்டது எல்லாம் சரி.

    8 13 14 15 16
    9 10 12 13

    எல்லாமே சரியான விடைகள்!

    ReplyDelete
  102. பெருசு

    13 2 9 - மூணுமே சரியான விடைகள்!

    ReplyDelete
  103. வாங்க பூங்கோதை!

    நீங்க பதில் போடாம புதிரை முடிக்க முடியுமா? :))

    எல்லாமே சரியான விடைகள்!!

    ReplyDelete
  104. வாங்க மணியன்

    நீண்ட நாட்களுக்குப் பின் வருகை!! அடுத்த முறை விடைகளை குறுக்கும் நெடுக்கும் எனப் பிரித்துத் தாருங்கள். சரிபார்க்க எளிதாக இருக்கும்.

    3 - தவறு
    6 7 8 13 14 15 16 - சரி

    1 2 4 5 9 10 11 12 - சரி

    13 - விட்டுட்டீங்க பாருங்க.

    ஆக 3, 13 தவிர மத்தது எல்லாம் சரி.

    ReplyDelete
  105. //நான் அனுப்பிய பதில்களை கவனிச்சிங்களா? சரியா தவறான்னு சொல்லுஙக. அனுப்பி 4 நாள் ஆச்சு. ஒரு வேளை பதில்கள் உஙகளை வந்து சேரலையோ? //

    மகேஷ் - மன்னிச்சிடுங்க. இணையம் வர முடியாத அளவு கொஞ்சம் வேலையாகிப் போச்சு. இப்போ சரி பார்த்துச் சொல்லிட்டேன்!

    ReplyDelete
  106. 3-முதல்வன்
    13 - அர்ப்பணம்

    கட்டத்தில் சரியாக இருந்தது எடுத்தெழுதியதில் தவறியது/விட்டுப்போனது :(

    1,2,3 உங்களுக்கு compare செய்ய எளிது என்று நினைத்தேன்..இனி நீங்கள் கூறியவாறே குறுக்கும் நெடுக்குமாக பிரித்து எழுதுகிறேன்.

    பூர்த்தி செய்த கட்டங்களை அப்படியே snapshot எடுத்து அனுப்ப முடியுமா ?

    ReplyDelete
  107. குறுக்கு:-

    3. முதல்வன்
    6. மருதம்
    7. கருமம்
    8. தங்கச்சிலை
    13. அர்ப்பணம்
    14. புதல்வி
    16. ஜாதிமுல்லை
    15. கலகல

    நெடுக்கு:-

    1. சாமவேதம்
    2. விதங்கள்
    4. தக்கலை
    5. வன்மம்
    9. சிலர்
    10. சுபகாலம்
    11. செம்புலம்
    12. வதந்தி
    13. அவியல்

    ReplyDelete
  108. Dear Mr.Suresh,
    there was no blog in the month of April.I wish very much that there was no problem to you. Kindly let me know how are you. wish you all the best.

    R.Narayanan.

    ReplyDelete
  109. நேற்று முழுக்க யோசித்தும் 3 விடை தெரியவில்லை.
    இ.வ 3-முதல்வன்; 7-கருமமே; 8-தங்கச்சிலை; 13-அர்ப்பணம்; 14-புதல்வி; 15-கலகல;16; ஜாதிமல்லி

    மே.கீ 2-விதங்கள்; 4- தக்கலை; 5; வன்மம்; 9-சிலர்; 10-சுபகாலம்; 12- வதந்தி; 13- அவியல்

    சகாதேவன்

    ReplyDelete
  110. அடுத்த புதிர் எப்போது ராஜேஷ்?

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!