Sunday, January 14, 2007

பொங்கல் போனஸ்

இன்றைக்குப் பொங்கல். எல்லோரும் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும் இந்த வேளை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இனிக்கிறது. வலையுலகில் பல காலம் படித்தும் பின்னூட்டம் அளித்தும் வந்திருந்தாலும் நான் பதிவுகள் எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது. ஆமாம் கடந்த ஆண்டு ஜனவரியில்தான் நான் என் வலைப்பூவைத் தொடங்கினேன்.

ஒரு வருடமாக நாமும் எழுதிக் கொண்டு இருக்கிறோமே, நாம் எழுதுவதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு ஆவல். யாரைக் கேட்பது என யோசித்துக் கொண்டே பழைய பதிவுகளைப் புரட்டினால், என் முதல் இடுகையின் முதல் பின்னூட்டம் அளித்து என்னை இந்த வலையுலகிற்கு வரவேற்றவர் நம் ஜிரா எனப் பார்த்தேன்.

சரிதான், முதன் முதலில் நம்மை வாழ்த்தி வரவேற்ற அவரையே நம் முதல் வருட அப்ரெய்சலைச் செய்யச் சொல்லலாம் எனக் கருதி அவரை அணுகினேன். என் வேண்டுகோளை மதித்து அவர் ஒரு பதிவாகவே எழுதி அனுப்பி வைத்தார். இதுவே எனது பொங்கல் போனஸ். எனக்காக பதிவு எழுதி, அதனை பொங்கல் பரிசாக எழுதி அனுப்பியதற்கு நன்றி ஜிரா.

அந்தப் பரிசினை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லி எனது நிறை குறைகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி ஜிரா


ஜனவரி மாதம் பத்தாம் நாள் 2006ல் ஜனங்களுக்கு வரி போடும் அரசாங்கங்கள் உலகமெங்கும் இருக்கையில் இலவசமாக ஒரு வலைப்பூ பூத்தது. பூ இருந்தால் பழமும் இருக்கத்தானே வேண்டும். மாதுளையும் கூடக் கிடைத்தது. மாதுளை என்றால் இந்தியில் அனார். அதுவும் ஒன்று இரண்டு அல்ல. ஒரு கொத்து. அதாவது கொத்து அனார். அதாகப்பட்டது கொத்தனார். இலவசக் கொத்தனார்.

வரும் போதே வந்துட்டேன் வந்துட்டேன்னு இரண்டு தடவை சொல்லிக்கொண்டு வந்தார். ஏன் இரண்டு முறை? இலவசமாக ஒன்று கிடைக்கிறதென்றால் அந்தப் பொருளை ஒருமுறையா வாங்குவோம்? இரண்டாம் முறையும் வாங்குவோம் அல்லவா. அதனால்தான் இரண்டு முறை சொன்னார். அது அவரது பின்னவீனத்துவ கருத்தாய்வுத் திறனின் ஆழத்தின் உச்சத்தை விளங்கச் சொல்லும் வகையில் இருந்தது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் அவரது பதிவில் முதல் பின்னூட்டமிட்ட வலைஞர் என்ற பெருமையை எனக்களித்துப் பெருமைப் படுத்தினார். (மயிலார் : கொத்சோட தலையெழுத்து. உருப்படியா யாராவது போட்டிருக்கக் கூடாது. பெருமையில இருக்குற பெக்கு பதிலா எ போட்டா சரியாயிருக்கும்.)

வந்ததுமே...இரண்டாவது பதிவில் "There is sex for money and there is sex for free. And sex for free costs more!" என்று நகைச்சுவையாக குறும்போடு சொன்னார். திடீர்னு என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு-னு சொன்னாரு. என்னடான்னு கேட்டா ரீபஸ்சாம். (மயிலார்: ரீபஸ்னா? சுரங்கள்ள ஸ-பஸ்சுக்கும் க-பஸ்சுக்கும் நடுவுல வருமே அந்த ரீபஸ்சா?)

சொடக்குப் போடும் பழக்கம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் சூடோகு போடும் பழக்கம் நல்லதாம். ஏனென்றால் சூடோகு என்பது கணக்கு விளையாட்டு. அதை நன்றாக விளையாடினால் கூட ஒரு இலவசம் கிடைக்குமாம். அதுதான் நீண்ட ஆயுள். இத்தோடு சேர்த்து பத்துப் பதிவு கூட வந்திருக்காது. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு சோதனை.

இப்படி ரீபஸ் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தவர் மைசூர் அரண்மனைக்குப் போனார். அங்கு சிவாவைச் சந்தித்தார். ஆமாம். கால்காரி சிவாவைத்தான். மைசூர் அரண்மனை கால்காரியில்தானே இருக்கிறது. மைசூர் போண்டோ கிடைக்கிறதோ இல்லையோ...காலிபிளவர் வறுவல் கிடைக்கும். (மயிலார்: திங்கிற பண்டம் எங்க எது கெடைக்கும்னு சரியாச் சொல்லீருவயே!)

பெண்பா எல்லாம் என்பா என்று வெண்பா வடிக்கும் கூட்டத்திற்கு நடுவில் தன்பா எல்லாம் நிறத்திலும் வெண்பா என்று கொத்தனார் எழுதத் தொடங்கினார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று பலபா ஏற்கனவே எழுதப்பட்ட நிலையில் கண்பார் குமரனை வைத்து நண்பார் எனப் புகழ்ந்து ஒரு தண்பா எழுதினார். இதற்குக் கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 134. ஜீவ்ஸோடு சேர்ந்து கொண்டு இயன்ற அளவில் இனிய தமிழில் என்று வெண்பாக்களாக எழுதித் தள்ளினார். (மயிலார்: எழுத்து விளையாட்டாக்கும்? நெனப்புதான் பொழப்பக் கெடக்குது! ஒழுங்கா எழுதுனாலே ஒன்னும் புரியாது. இது மட்டும் யாருக்காவது முழுசா சரியாப் புரிஞ்சிருச்சு...அவங்களுக்கு பரிசு ஒரு மயிலிறகு!)

பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா.......என்று ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாட்டு போட்டிருக்கிறார். கொத்தனாரோ பதிவு போட்டிருக்கிறார். முட்டை பரோட்டா குத்தியதை அழகாகச் சொல்லி அவர் அள்ளிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்னூற்றுக்கு இருபத்தைந்து குறைவு. அத்தோடு விட்டாரா? தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்...தள்ளாடி நடந்தா உல்லாசம் கிடைக்கும்....ஓ பார்வதீன்னு கமல் ஒரு படத்தில் பாடுவாரே...அந்த அளவிற்கு ஒரு பதிவு. அதைப் படித்தவர்கள் எல்லாம் நம்ம சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு என்று பாடிப் புலம்பியதாகத் தகவல். தகவல் மட்டுமே.

இப்படிப் பதிவுகளாகப் போட்டுக் கொண்டு பின்னூட்டங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்த கொத்தனாரின் வாழ்விலும் திருப்பம் வந்தது. பக்கிப் பசங்க என்று அனைவராலும் அன்போடும் பண்போடும் குணத்தோடு மணத்தோடு நிறத்தோடு திடத்தோடும் அழைக்கப்படும் விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது. அதற்கெல்லாம் அசரவில்லை கொத்தனார். ஏமாந்தவர்களைச் சேர்த்துக் கொண்டார். கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விக்கிப்பசங்களை ஊரறியச் செய்தார். பின்னூட்ட நாயகிக்கு அடுத்த வாரிசு என்று பிரகடணம் செய்தார். அதை இன்றும் மறுப்பார் இல்லை. இதுதான் இலவசக் கொத்தனாரின் ஓராண்டுக்குள் நிகழ்ந்த மாபெரும் இமாலயச் சோதனை...சீச்சீ சாதனை. அவரை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம். (மயிலார்: வாழ்த்துவோம். வாழ்த்துவோம். இதுக்குத்தான் நம்மளக் கூப்புடுறாங்க)

அன்புடன்,
கோ.இராகவன்

378 comments:

  1. பொங்கலன்று சிறப்பு நிகழ்ச்சியாக வந்து இப்பதிவினைத் தந்த ஜிரா அவர்களுக்கு மீண்டும் என் நன்றி. மயிலாருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. :)

    அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பொங்கல் திருநாளை முன்னிட்டு,.....

    இதுவரை நீங்கள் பதிவுலகிலேயே பார்த்திராத,.......

    உலகத் தமிழ்ப் பதிவுலகிலேயே முதன்முறையாக,.......

    ஒரு பதிவருக்கு, இன்னொருவர் வழங்கும் மாபெரும் பாராட்டுப் பதிவு,......

    அதுவும் இலவசமாக,.....

    பதிவர்களே!!!!!........

    உங்கள் பொங்கல் புதுநாளில் இதனையும் படித்துத் வையுங்கள்!.....

    உங்கள் வாழ்வில் பொங்கல் புன்னகை பூக்கட்டும்!!

    ReplyDelete
  3. பதிவைப் போட்டாச்சா? வாழ்த்துகள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சூப்பர் அப்ரைசலுங்க. முதல் கமெண்ட் போட்டவர் கிட்டவே முதல் அப்ரைசல் வாங்கற ஐடியா சூப்பர்.

    எனக்கு நினைவிருக்கிற உங்களோட சில அந்தகால(!) பதிவுகள் :
    1. உங்க முதல் பதிவு - அதுல டுபுக்கை எனக்கு அறிமுகப் படுத்தி வச்சீங்க
    2. இலவசக் கொத்தனாரியல்
    3. தகதகதக தங்கவேட்டை
    4. ரீபஸ் பதிவுகள் - ஆப்பீஸ் நேரத்துல பல நாள் உடம்பு ரணகளமான பதிவுகள்
    5. பீர் மிளகாய்
    6. வெண்பா - இது வரைக்கும் கூட உள்ளேன் ஐயா போடறதைத் தவிர நம்ம லெவல் இம்ப்ரூவ் ஆகலை
    7. வ.வா.சங்கத்துல ரவுண்டு கட்டி சதங்கள் அடிச்ச ஜூலை 2006 அட்லாஸ் மாசம்
    8. பின்னூட்டங்கள் வாங்குவது எப்படின்னு 'மருந்தோட' கம்பவுண்டரா நீங்க இருந்து மக்களுக்குக் கொடுத்த மருந்து சீட்டு மாதிரியான ஒரு பதிவு

    //ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு சோதனை.//
    கண் எல்லாம் படலை. கொத்ஸே முன்னே மாதிரி அடிச்சி ஆட மாட்டேங்குறாருன்னு தான் நெனக்கிறேன். சரி தானே கொத்தனாரே?

    FYI, உங்கப் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சது ஜி.ரா. பதிவுல நீங்க போட்ட ஒரு கமெண்டை வச்சி தான்.

    ஒன்று, இரண்டு, முப்பது, ஐம்பது என இன்னும் பல அப்ரைசல்கள் காண வாழ்த்த(சாரி...வாழ்த்த வயதில்லை) அதனால கும்புட்டுக்கிட்டு குந்திக்கறேன் சாமியோவ்.

    ReplyDelete
  5. சூப்பர் அப்ரைசலுங்க. முதல் கமெண்ட் போட்டவர் கிட்டவே முதல் அப்ரைசல் வாங்கற ஐடியா சூப்பர்.

    எனக்கு நினைவிருக்கிற உங்களோட சில அந்தகால(!) பதிவுகள் :
    1. உங்க முதல் பதிவு - அதுல டுபுக்கை எனக்கு அறிமுகப் படுத்தி வச்சீங்க
    2. இலவசக் கொத்தனாரியல்
    3. தகதகதக தங்கவேட்டை
    4. ரீபஸ் பதிவுகள் - ஆப்பீஸ் நேரத்துல பல நாள் உடம்பு ரணகளமான பதிவுகள்
    5. பீர் மிளகாய்
    6. வெண்பா - இது வரைக்கும் கூட உள்ளேன் ஐயா போடறதைத் தவிர நம்ம லெவல் இம்ப்ரூவ் ஆகலை
    7. வ.வா.சங்கத்துல ரவுண்டு கட்டி சதங்கள் அடிச்ச ஜூலை 2006 அட்லாஸ் மாசம்
    8. பின்னூட்டங்கள் வாங்குவது எப்படின்னு 'மருந்தோட' கம்பவுண்டரா நீங்க இருந்து மக்களுக்குக் கொடுத்த மருந்து சீட்டு மாதிரியான ஒரு பதிவு

    //ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு சோதனை.//
    கண் எல்லாம் படலை. கொத்ஸே முன்னே மாதிரி அடிச்சி ஆட மாட்டேங்குறாருன்னு தான் நெனக்கிறேன். சரி தானே கொத்தனாரே?

    FYI, உங்கப் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சது ஜி.ரா. பதிவுல நீங்க போட்ட ஒரு கமெண்டை வச்சி தான்.

    ஒன்று, இரண்டு, முப்பது, ஐம்பது என இன்னும் பல அப்ரைசல்கள் காண வாழ்த்த(சாரி...வாழ்த்த வயதில்லை) அதனால கும்புட்டுக்கிட்டு குந்திக்கறேன் சாமியோவ்.

    ReplyDelete
  6. பொங்கலு இன்றா?நாளை இல்லையா?தை 1,சனவரி 15 ல் இல்லையா?தை 1 தானே பொங்கல்லு!

    ReplyDelete
  7. கைப்பு,ஜிரா,உங்க தமிழுக்கு $ பதிவு திறமைகளுக்கு முன்னாடி நாம என்ன சொல்ல. ஜி.ரா & கைப்பு சொன்னதையே-- ரிப்பீட்டு

    வாழ்த்துக்கள் கொத்தனாரே. ஒரு சகாப்தம் படைத்த சங்கத்தில் எழுதிய4 வரி கவிதையின் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருக்கு.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கொத்தனார்!!!
    கண்டிப்பாக இது பொங்கல் போனஸ்தான்!!

    ReplyDelete
  9. அருமையாக எழுதியிருக்கிறார் ஜிரா. முதல் பத்தி, பிரமாதம்!

    இப்போது புரிந்தது உங்களை ஏன் பின்னூட்ட நாயகன் என்கிறார்கள் என்று.

    //விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது.//

    ஹாஹா.. :-)

    வாழ்த்துக்கள் கொத்ஸ்.

    ReplyDelete
  10. வலைப்பூ இணையத்தில் இலவசமாக இணைத்துக்கொண்ட ஆண்டுவிழாவை மகிழ்ச்சியாகப் பொங்கலோ பொங்கலெனக் கொண்டாடும் இலவசக் கொத்தனார்க்கு எமது பொங்கல் + வலைப்பூ ஆண்டுநிறைவுக் கொண்டாட்ட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் இ.கொ.

    பொங்கலோ பொங்கல் :)

    ReplyDelete
  12. SK, சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் அறிவிப்பை நிறைய தடவை பார்த்துட்டீங்கன்னு நினைக்கிறேன் :)

    சரி, மயிலார்னா யாரு?

    ReplyDelete
  13. பின்னூட்ட நாயகனே பதிவுலகில் நீகலக்கிக்
    கொன்னுட்ட போய்யா நீ!

    வெண்பாவின் முதற்பகுதியை அழகாக முடிப்பதே கொத்ஸூக்கு பொங்கல் போனஸ்! :-)

    மயிலாருடன் ஒயிலாக நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்!
    வாழ்த்துக்கள் கொத்ஸ்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் இலவசனார் அவர்களே,

    உங்கள் பதிவுகள் ஒரு சுவை என்றால், அதன் பின்னூட்டங்களும் அதற்கு உங்கள் பதிலும் கூடுதல் (இலவச) சுவை.

    நீங்கள் இதே போல் உற்சாகமாய் பல்லாண்டு வலை பதிய வேண்டுமென்று உங்கள் ரசிகர்கள் சார்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  15. உண்மையாகவே இது போனஸ்தான்!
    வாழ்த்துகின்றேன்!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் தலீவா!!!! :)

    ReplyDelete
  17. ஒரு வருஷம் ஆயாச்சா?

    நல்வாழ்த்துக்கள் கொத்ஸ்.

    ஒரு வருஷத்தில எவ்வளவு சாதனை பின்னூட்டப் புயல், புதிர்ப் புலி, வெண்பா வித்தகர், விக்கியின் செல்வர் அட அட .....

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  18. கொத்தனாரே,
    மயிலும் கையுமாக வந்து இராகவனே சொன்னபிறகு எங்களுக்கு வழிமொழிவதே வேலை.:-)

    பரோட்டா போட்டபிறகு சமைக்கவே இல்லையா?

    பொங்கல் தின போனஸுக்கு மிக்க நன்றி.
    இலவசங்கள் நீள் பட்டியலாகத் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. @இலவசம் வித்தியாசமான விஷயங்களை வித்தியாசமான முறையில் ஒரு வருட காலமாக சொன்னதற்கு நன்றி. தொடரட்டம் பணி. ஜீராவின் அலசல் அருமை.நம்பளையும் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்க சார்.

    ReplyDelete
  20. பொங்கல் வாழ்த்துக்கள் கொத்தனார்ஜி..

    ஓராண்டு நிறைவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இலவசம்! வாழ்க என்று சொல்லிமட்டும் நிறுத்திக்கிறேனய்யா, வளர்கன்னு சொல்ல பயமா இருக்கு, மொதல்லே பின்னுட்ட பெட்டி ஏகத்துக்கு வளர்ந்து நிக்குது :-)

    ReplyDelete
  22. கொத்தனார்,

    வாழ்த்துஸ் (க்கள் போடறதா,கள் மட்டும் போடறதான்னு கன்ப்பூஸன், எனவே தமிழ்லேயே எழுதிட்டேன்).

    எனக்கு இப்ப ஞாபகம் வர உங்க ப்திவுகள் - மிளகாய் பீர், கொத்துபரோட்டா, ஆரம்பகால ரீபஸ்கள், வெண்பா. பிடிக்காத பதிவுகள் மாவரைக்கும் பதிவுகள்:-)

    பின்னூட்டத்திலே நூறு 200னு எகிறினாலும் டீசண்டா படிக்கும்படியா இருக்கும் இடம் -ரெண்டாவது கொத்தனார்தான். முதல் யாருன்னு கேளுங்க?

    ReplyDelete
  23. காமெடியாக பெயர் வைத்துக் கொண்டு உங்கள் முகம் மற்றும் விவரங்களை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    பொங்கல் வாழ்த்துக்கள்.

    அந்த கொத்தனார் வீட்டை கட்டுவார். இந்த கொத்தனார் யாரை கட்டுவார் ? வூடு கட்டி அடிக்காமல் இருந்தால் சரி.

    மெலட்டூர்.இரா.நடராஜன்

    ReplyDelete
  24. ஓராண்டைத் தாண்டிய ஒப்பற்ற ஓட்டத்தை
    நேராகத் தந்தார் இலவசம் - தேரோடும்
    தென்மதுரை மைந்தர் தினமோர் பதிவிட
    என்மனதும் வாழ்த்திடுமே இன்று.

    ஆனாலும்

    வெண்பாவை விட்டுவிட்டு விக்கியைக் கைப்பிடித்தார்
    கண்பார்வை மாறுமோ காண்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் கொத்ஸ்
    ஒரு பதிவருக்கு இன்னொருவர் பரிந்துரை தருவது பாராட்டப் படவேண்டிய நல்ல விஷயம்[லஞ்சம் கிஞ்சம்கொடுக்கலையே...சும்மானாங்காட்டி கேட்டேன் அப்பூ கொச்சிக்கிடாதேயும்]
    அது இன்னா இலவச கொத்தனார்...ஹூம் கட்டும் கட்டும்...[சின்னதுயில்ல]பெரிய வீடா..

    ReplyDelete
  26. பொங்கல் மற்றும் பதிவுலகில் முதலாண்டு நிறைவு ஆகியவற்றை கொண்டாடும் கொத்சுக்கும் அவரது கோடானகோடி ரசிக பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து கலக்குங்கள்.

    ReplyDelete
  27. இலவசம். இந்த பதிவையும் இலவசமாய் ஜிராவிடம் வாங்கி போட்டுவிட்டீர்கள். வாழ்க உங்கள் இலவசம்.

    ஜிரா என்னையும் நினைவுகூர்ந்து காலிப்ளவருக்கு கவிப்பூ என்று சொன்ன மைசூர் அரண்மனையையும் நினைவுகூர்ந்துளார். அவருக்கும் நன்றி

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. என்ன எஸ்.கே. ரொம்ப சன் ரீவி (அட போன பதிவு தாக்கமுங்க) பாக்கறீங்களா? நானும் அப்படித்தான் போட நினைச்சேன், அப்புறம் ரொம்ப அலட்டலா இருக்குமோன்னு நினைச்சு விட்டுட்டேன். நீங்க சரியா போட்டீங்க பாருங்க! :)))

    ReplyDelete
  29. //பதிவைப் போட்டாச்சா? வாழ்த்துகள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.//

    ஆமாம் ஜிரா. போட்டாச்சு. மீண்டும் நன்றி. :))

    ReplyDelete
  30. //சூப்பர் அப்ரைசலுங்க. முதல் கமெண்ட் போட்டவர் கிட்டவே முதல் அப்ரைசல் வாங்கற ஐடியா சூப்பர்.//

    ரொம்ப நன்றி கைப்ஸ்.

    இம்புட்டு பதிவுங்க ஞாபகம் இருக்கா. முதல் பதிவுக்கு அப்புறம் என்ன எழுதணமுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தப்போ உங்க கேள்விதானே கொத்தனாரியல் எழுத வெச்சுது.

    //கொத்ஸே முன்னே மாதிரி அடிச்சி ஆட மாட்டேங்குறாருன்னு தான் நெனக்கிறேன். சரி தானே கொத்தனாரே?//

    ஹிஹி. அப்படியே வெச்சுக்குவோம். :))

    //அதனால கும்புட்டுக்கிட்டு குந்திக்கறேன் சாமியோவ்.//

    நாங்களும் பதிலுக்கு கும்பிடறோமுங்கோவ்.

    ReplyDelete
  31. //பொங்கலு இன்றா?நாளை இல்லையா?தை 1,சனவரி 15 ல் இல்லையா?தை 1 தானே பொங்கல்லு!//

    எங்க ஊருல 14ம் தேதிதான் பொங்கலுன்னு சொன்னாங்க ஐயா. அதான் போட்டேன். அம்புட்டுதான் தெரியும்.

    ReplyDelete
  32. //கைப்பு,ஜிரா,உங்க தமிழுக்கு $ பதிவு திறமைகளுக்கு முன்னாடி நாம என்ன சொல்ல. ஜி.ரா & கைப்பு சொன்னதையே-- ரிப்பீட்டு//

    அது என்ன விவா டாலர் பதிவு? மக்கள் வந்து பணமெல்லாம் சம்பாரிக்கறாங்களா? தெறமைதான் போங்க.

    //வாழ்த்துக்கள் கொத்தனாரே. ஒரு சகாப்தம் படைத்த சங்கத்தில் எழுதிய4 வரி கவிதையின் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருக்கு.//

    அது ஒரு அது ஒரு கனாக்காலம். :))அன்னைக்கு விட்டு இருந்தா 1000 அடிச்சி இருக்க மாட்டோம். ஹூம்....

    ReplyDelete
  33. //வாழ்த்துக்கள் கொத்தனார்!!!
    கண்டிப்பாக இது பொங்கல் போனஸ்தான்!!//

    ஆமாம் அருட்பெருங்கோ. ரொம்ப நன்றி. இதுதான் உங்க முதல் வருகைன்னு நினைக்கறேன். இனிமே அடிக்கடி வாங்க. :)

    ReplyDelete
  34. //அருமையாக எழுதியிருக்கிறார் ஜிரா. முதல் பத்தி, பிரமாதம்!//

    அவருக்கென்னங்க. தமிழ் சும்மா அருவி மாதிரி கொட்டும். ஹூம். அதுக்கெல்லாம் ஒரு 'இது' வேணுமுங்க. :))

    //இப்போது புரிந்தது உங்களை ஏன் பின்னூட்ட நாயகன் என்கிறார்கள் என்று.//

    அப்படியா? அது என்ன விஷயம்? சொல்லுங்கப்பா! :))

    //விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது.//

    ஹாஹா.. :-)//

    என்ன சிரிப்பு சேது உங்க சிரிப்பு? தெய்வீகச் சிரிப்பால்ல இருக்கு! :))

    //வாழ்த்துக்கள் கொத்ஸ்.//

    நன்றி சேது.

    ReplyDelete
  35. //வலைப்பூ இணையத்தில் இலவசமாக இணைத்துக்கொண்ட ஆண்டுவிழாவை மகிழ்ச்சியாகப் பொங்கலோ பொங்கலெனக் கொண்டாடும் இலவசக் கொத்தனார்க்கு எமது பொங்கல் + வலைப்பூ ஆண்டுநிறைவுக் கொண்டாட்ட வாழ்த்துக்கள்//

    நன்றி ஹரிஹரன்.

    ReplyDelete
  36. //வாழ்த்துக்கள் இ.கொ.

    பொங்கலோ பொங்கல் :)//

    பாபா, நன்றி.

    இன்பம் பொங்குதே..... :))

    ReplyDelete
  37. //SK, சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் அறிவிப்பை நிறைய தடவை பார்த்துட்டீங்கன்னு நினைக்கிறேன் :)//

    அதே அதே!!

    //சரி, மயிலார்னா யாரு?//

    ஆஹா இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? ஜிராவின் பழைய பதிவுகள் எல்லாம் படிக்கணும்.

    மயிலார் வந்து ஜிரா ஒழுங்கா இருக்காரான்னு பார்க்க முருகன் அனுப்பின ஆளுங்க. இவர் கூடவே இருப்பாரு. இவரு செய்யற அட்டகாசமெல்லாத்தையும் நம்ம கிட்ட போட்டு குடுத்துடுவாரு.

    இவரோட அந்த பெங்களூர் மால் போயி பண்ணுன அட்டகாசத்தை எல்லாம் படியுங்க, புரியும்.

    ReplyDelete
  38. //பின்னூட்ட நாயகனே பதிவுலகில் நீகலக்கிக்
    கொன்னுட்ட போய்யா நீ!

    வெண்பாவின் முதற்பகுதியை அழகாக முடிப்பதே கொத்ஸூக்கு பொங்கல் போனஸ்! :-)//

    கே.ஆர்.எஸ். நீங்களும் வெண்பாவில் இறங்கிட்டீங்களா? சரிதான். அடுத்தது வெண்பா பதிவுதான் போடணும்.

    ஆனா நீங்க கொடுத்து இருக்கற வரிகளில் தளை தட்டல் இருக்கே. அதனால நான் எஸ்கேப்.

    //மயிலாருடன் ஒயிலாக நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்!
    வாழ்த்துக்கள் கொத்ஸ்!//

    நன்றி தலைவா!

    ReplyDelete
  39. //நீங்கள் இதே போல் உற்சாகமாய் பல்லாண்டு வலை பதிய வேண்டுமென்று உங்கள் ரசிகர்கள் சார்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.//

    நன்றி ஸ்ரீதர் வெங்கட். வழக்கம் போல அடிக்கடி வாங்க. :)

    ReplyDelete
  40. //உண்மையாகவே இது போனஸ்தான்!
    வாழ்த்துகின்றேன்!//

    நன்றி சிவஞானம்ஜி. உங்க வாழ்த்துக்கள் என்னை இன்னும் தூரம் கொண்டு செல்லும்.

    ReplyDelete
  41. //வாழ்த்துக்கள் தலீவா!!!! :)//

    நன்றி கப்பிஸ்!

    ReplyDelete
  42. தலிவா,
    பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    டார்கெட் வெச்சி அடிச்சி ரொம்ப நாளைச்சி... இதுல தூக்கிடுவோமா???

    ReplyDelete
  43. //ஒரு வருஷம் ஆயாச்சா?//

    குடுத்த கஷ்டத்துல ஒரு வருஷம் பத்து வருஷம் மாதிரி இருந்துதா? :))

    //நல்வாழ்த்துக்கள் கொத்ஸ்.//

    நன்றி ரமத! (ரொம்ப நாள் ஆச்சே இப்படி கூப்பிட்டு!)

    //ஒரு வருஷத்தில எவ்வளவு சாதனை பின்னூட்டப் புயல், புதிர்ப் புலி, வெண்பா வித்தகர், விக்கியின் செல்வர் அட அட .....//

    எல்லாம் உங்களாலதான்! (இது எப்படி இருக்கு!) :))

    ReplyDelete
  44. //கொத்தனாரே,
    மயிலும் கையுமாக வந்து இராகவனே சொன்னபிறகு எங்களுக்கு வழிமொழிவதே வேலை.:-)//

    வல்லியம்மா, உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

    //பரோட்டா போட்டபிறகு சமைக்கவே இல்லையா?//

    ஆமாங்க. எதாவது சமைக்கணும். வெண்பா சமைக்கச் சொல்லி வேற மக்கள் சொல்லறாங்க. எல்லாம் செய்யணும்.

    //பொங்கல் தின போனஸுக்கு மிக்க நன்றி.
    இலவசங்கள் நீள் பட்டியலாகத் தொடர வாழ்த்துகள்.//

    வல்லியம்மா, எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்தான். அது இருந்தா எல்லாம் நல்லாச் செய்ய மாட்டோம்! :)

    ReplyDelete
  45. //@இலவசம் வித்தியாசமான விஷயங்களை வித்தியாசமான முறையில் ஒரு வருட காலமாக சொன்னதற்கு நன்றி. தொடரட்டம் பணி. ஜீராவின் அலசல் அருமை.நம்பளையும் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்க சார்.//

    திரசா, ஐயா, உங்க நினைவு இல்லாமலையா? எப்பவும் உங்க நினைப்புத்தான் போதுமா?! :)

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  46. //பொங்கல் வாழ்த்துக்கள் கொத்தனார்ஜி..

    ஓராண்டு நிறைவுக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி அரைப்பிளேடு அவர்களே. (ஆமாம் உங்க பேருல ஒரு 'ப்' இருக்க வேண்டாமோ?)

    அப்புறம் அது என்ன நம்ம பேருக்குப் பின்னாடி வட இந்திய அரசியல்வியாதி மாதிரி ஜி எல்லாம் சேர்த்துட்டீங்களே! :))

    ReplyDelete
  47. //இலவசம்! வாழ்க என்று சொல்லிமட்டும் நிறுத்திக்கிறேனய்யா, வளர்கன்னு சொல்ல பயமா இருக்கு, மொதல்லே பின்னுட்ட பெட்டி ஏகத்துக்கு வளர்ந்து நிக்குது :-)//

    நன்றி உஷாக்கா.

    உங்களைப் பார்த்தா இதுக்கெல்லாம் பயப்படற பார்ட்டி மாதிரி தெரியலையே! :)

    ReplyDelete
  48. //கொத்தனார்,

    வாழ்த்துஸ் (க்கள் போடறதா,கள் மட்டும் போடறதான்னு கன்ப்பூஸன், எனவே தமிழ்லேயே எழுதிட்டேன்).//

    பெனாத்தல், வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த குழப்பம் நிறையா பேருக்கு இருக்கு. எங்க டீச்சர் கூட 'வாழ்த்து(க்)கள்' அப்படின்னு எழுதறாங்க. ஆனா நான் வாழ்த்துக்கள் அப்படின்னே சொல்லறேங்க. மத்தவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

    //எனக்கு இப்ப ஞாபகம் வர உங்க ப்திவுகள் - மிளகாய் பீர், கொத்துபரோட்டா, ஆரம்பகால ரீபஸ்கள், வெண்பா. பிடிக்காத பதிவுகள் மாவரைக்கும் பதிவுகள்:-)//

    மாவரைக்கற பதிவா? அது கூடவா நான் போட்டு இருக்கேன்? நம்ம பதிவு எல்லாம் சமுதாய விழிப்புணர்ச்சியைத் தட்டி எழுப்பும் பதிவாகவே இருப்பதாக அல்லவா நம்பிக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  49. //கொத்தனார்,

    வாழ்த்துஸ் (க்கள் போடறதா,கள் மட்டும் போடறதான்னு கன்ப்பூஸன், எனவே தமிழ்லேயே எழுதிட்டேன்).//

    பெனாத்தல், வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த குழப்பம் நிறையா பேருக்கு இருக்கு. எங்க டீச்சர் கூட 'வாழ்த்து(க்)கள்' அப்படின்னு எழுதறாங்க. ஆனா நான் வாழ்த்துக்கள் அப்படின்னே சொல்லறாங்க. மத்தவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

    //எனக்கு இப்ப ஞாபகம் வர உங்க ப்திவுகள் - மிளகாய் பீர், கொத்துபரோட்டா, ஆரம்பகால ரீபஸ்கள், வெண்பா. பிடிக்காத பதிவுகள் மாவரைக்கும் பதிவுகள்:-)//

    மாவரைக்கற பதிவா? அது கூடவா நான் போட்டு இருக்கேன்? நம்ம பதிவு எல்லாம் சமுதாய விழிப்புணர்ச்சியைத் தட்டி எழுப்பும் பதிவாகவே இருப்பதாக அல்லவா நம்பிக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  50. //பின்னூட்டத்திலே நூறு 200னு எகிறினாலும் டீசண்டா படிக்கும்படியா இருக்கும் இடம் -ரெண்டாவது கொத்தனார்தான். முதல் யாருன்னு கேளுங்க?//

    ஆஹா, இதைப் படிக்கும் போது ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருது.

    ஒருத்தர் முதல் முறையா பிரசங்கம் பண்ணினாராம். ரொம்பவே தட்டுத் தடுமாறினாரம். அதனால எல்லாரும் பாதியில் பேசவும் தூங்கவும் எழுந்து போகவும் ஆரம்பிச்சிட்டாங்களாம். ஆனா முன்னாடி உக்கார்ந்து இருந்த ஒரு பாட்டி மட்டும் கடைசி வரைக்கும் கேட்டாங்களாம்.

    பிரசங்கம் முடிஞ்ச பின்னாடி இவரு அந்த பாட்டி கிட்ட போயி, கடைசி வரை கவனமாக் கேட்டீங்களே, எப்படி இருந்தது நம்ம பிரசங்கம் அப்படின்னு கேட்டாராம். பாட்டியும் "You are the second best I have heard" அப்படின்னு சொன்னாங்களாம்.

    இவருக்கு ஒரே பெருமையாப் போச்சாம். ஒரு பெருமிதமா எல்லாரையும் பாத்துக்கிட்டு அந்த முதல் ஆளு யாருன்னு கேட்டாரம். அந்த பாட்டியும் சிரிக்காம "Anyone else" அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம்.

    இது தெரிஞ்ச பின்னாடி நான் உங்களை அந்த முதல் பதிவு யாருன்னு கேட்பேன்னு நினைக்கறீங்க? :))

    (ஆனா உண்மையில் அது எங்க பின்னூட்டக் கலையின் ஆசான் வைத்தியர் திரு இராமநாதன் பெயரைத்தான் சொல்லுவேன். சரிதானே!)

    ReplyDelete
  51. //காமெடியாக பெயர் வைத்துக் கொண்டு உங்கள் முகம் மற்றும் விவரங்களை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.//

    அது போகட்டும் விடுங்க. இப்படி இருக்கும் போது நமக்கு மிதவாதி தீவிரவாதின்னு ஆயிரம் பட்டம். அதை விடுங்க.

    //பொங்கல் வாழ்த்துக்கள்.//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    //அந்த கொத்தனார் வீட்டை கட்டுவார். இந்த கொத்தனார் யாரை கட்டுவார் ? வூடு கட்டி அடிக்காமல் இருந்தால் சரி.//
    அதுலாம் இல்லைங்க. என்ன கொஞ்சம் பின்னூட்டக் கயமைத்தனம் வேணா பண்ணுவோம். அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது. ;)

    ReplyDelete
  52. //ஓராண்டைத் தாண்டிய ஒப்பற்ற ஓட்டத்தை
    நேராகத் தந்தார் இலவசம் - தேரோடும்
    தென்மதுரை மைந்தர் தினமோர் பதிவிட
    என்மனதும் வாழ்த்திடுமே இன்று.//

    உங்க கிட்ட இருந்து வெண்பாவா வாழ்த்துக்கள் வரலைன்னாத்தான் ஆச்சரியப்பட்டு இருப்பேன். அது இருக்கட்டும். ஒரு கொத்துப்பரோட்டா பதிவு போட்டதுனால நம்மளை மருதக்காரனா ஆக்கிட்டீங்களா? நான் நெல்லை மாவட்டமுங்கோ!

    ஆனாலும்

    //வெண்பாவை விட்டுவிட்டு விக்கியைக் கைப்பிடித்தார்
    கண்பார்வை மாறுமோ காண்.//

    விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  53. //இதயம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

    வைசா//

    வைசா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. //வாழ்த்துக்கள் கொத்ஸ்
    ஒரு பதிவருக்கு இன்னொருவர் பரிந்துரை தருவது பாராட்டப் படவேண்டிய நல்ல விஷயம்[லஞ்சம் கிஞ்சம்கொடுக்கலையே...சும்மானாங்காட்டி கேட்டேன் அப்பூ கொச்சிக்கிடாதேயும்]//

    இப்படி எல்லாம் கேள்வி கேட்கறதுனாலதான் ஏடாகூடம் அப்படின்னு பேரா? இதெல்லாமா பப்ளிக்குல கேட்கறது? எவ்வளவு பின்னூட்டம் தரேன்னு வாக்குக் குடுத்து இருக்கறது எல்லாம் சஸ்பென்ஸ்!


    //அது இன்னா இலவச கொத்தனார்...ஹூம் கட்டும் கட்டும்...[சின்னதுயில்ல]பெரிய வீடா..//

    பெயர்க்காரணம் எல்லாம் இருக்கு. நம்ம பழைய பதிவெல்லாம் பாருங்க. :)

    ReplyDelete
  55. //பொங்கல் மற்றும் பதிவுலகில் முதலாண்டு நிறைவு ஆகியவற்றை கொண்டாடும் கொத்சுக்கும் அவரது கோடானகோடி ரசிக பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.//

    கோடானுகோடியா? அவ்வளவு இருந்துமா இப்படி 1000 தாண்டறதுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கு? :))

    //தொடர்ந்து கலக்குங்கள்.//

    கலக்கிருவோம். :))

    ReplyDelete
  56. //இலவசம். இந்த பதிவையும் இலவசமாய் ஜிராவிடம் வாங்கி போட்டுவிட்டீர்கள். வாழ்க உங்கள் இலவசம்.//

    இதெல்லாமா கண்டுக்கறது? சும்மா ப்ரீயா விடு மாமே!

    //ஜிரா என்னையும் நினைவுகூர்ந்து காலிப்ளவருக்கு கவிப்பூ என்று சொன்ன மைசூர் அரண்மனையையும் நினைவுகூர்ந்துளார். அவருக்கும் நன்றி//

    வலையுலகில் நீங்காப் புகழ் பெற்ற அண்ணன் கால்கரியார் வாழ்க!

    //அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்//
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. //தலிவா,
    பொங்கல் வாழ்த்துக்கள்!!!//

    வாங்க வெட்டி, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    //டார்கெட் வெச்சி அடிச்சி ரொம்ப நாளைச்சி... இதுல தூக்கிடுவோமா???//

    ஆமாம் ரொம்ப நாள் ஆச்சு. ஆடுவோமா? என்ன டார்கெட்? :))

    ReplyDelete
  58. பொங்கல்,வலைப்பூ 2ம் ஆண்டு தொடக்கவிழா வாழ்த்துக்கள் கொத்ஸ், முதல் முறையாக உங்களிடம் வருகிரேன்.உங்கள் பதிவுகளிள் பல மனதை தொட்டாலும் "வால மீனுக்கும்" பதிவு(169 பின்னூட்டம்) இப்போதய சூழலுக்கு என்னமாய் சிரிக்க வைக்குது!!! பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. //பொங்கல்,வலைப்பூ 2ம் ஆண்டு தொடக்கவிழா வாழ்த்துக்கள் கொத்ஸ்//

    வாங்க அபி அப்பா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களும் கூட.

    //முதல் முறையாக உங்களிடம் வருகிரேன்.//

    முதல் பின்னூட்டமாக இருந்தால் கூட பல பதிவைகளைப் படித்து இருக்கிறீர்களே. நன்றி.

    //உங்கள் பதிவுகளிள் பல மனதை தொட்டாலும் "வால மீனுக்கும்" பதிவு(169 பின்னூட்டம்) இப்போதய சூழலுக்கு என்னமாய் சிரிக்க வைக்குது!!! //

    நம்ம கவுண்டர் ஸ்டைலில் சொல்லணமுன்னா, அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!! :))

    //பணி தொடர வாழ்த்துக்கள்.//

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  60. //வாழ்த்துஸ் (க்கள் போடறதா,கள் மட்டும் போடறதான்னு கன்ப்பூஸன், எனவே தமிழ்லேயே எழுதிட்டேன்)//

    இந்தக் குழப்பம் பலருக்கும் இருக்கு. இன்னிக்கு காலையிலே கூட எங்கம்மா கோலத்துல பொங்கல் வாழ்த்துக்கள்னு எழுதுனாங்க. நான் தப்புன்னு சொன்னேன். ஆனா வாழ்த்துக்கள் தான் சரின்னு வாதாடுறவங்க நிறைய பேர் இருக்காங்க.

    இதை பத்தி எங்க தமிழ் மிஸ் சொன்னது ஞாபகம் வருது. உதாரணத்துக்கு 'கை'- இதை பன்மையில் குறிக்க 'கைக்கள்'னா சொல்றோம்? 'கைகள்'னு தானே சொல்றோம்? அதனால் பன்மையைக் குறிக்க ஒற்று மிகாது என்பது நான் கற்றது.

    வேற யாராச்சும் விளக்கம் சொன்னாலும் நல்லாருக்கும். இதை பத்தி ஆராய்ச்சி பண்ணி விக்கிபசங்கள்ல போட்டீங்கன்னாலும் நல்லது தான்.
    :)

    ReplyDelete
  61. நண்பர் ரவி சொல்வது -

    ஓராண்டு நிறைவுக்கு நல் வாழ்த்துக்கள். உம்முடைய ஓராண்டு கால பதிவுகளைப் படித்த நிறைவு கிடைத்தது. ஜிரா மிகவும் அருமையாக அலசி இருக்கிறார்.

    ReplyDelete
  62. பொங்கலோ பொங்கல்!

    உங்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  63. //சரி, மயிலார்னா யாரு?//
    //ஆஹா இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? ஜிராவின் பழைய பதிவுகள் எல்லாம் படிக்கணும்.//

    படிச்சிருவோம்!

    ReplyDelete
  64. Yennai Maranthathu yane ?
    -Muthusamy

    ReplyDelete
  65. //இந்தக் குழப்பம் பலருக்கும் இருக்கு. இன்னிக்கு காலையிலே கூட எங்கம்மா கோலத்துல பொங்கல் வாழ்த்துக்கள்னு எழுதுனாங்க. நான் தப்புன்னு சொன்னேன். ஆனா வாழ்த்துக்கள் தான் சரின்னு வாதாடுறவங்க நிறைய பேர் இருக்காங்க.//

    நான் இது வரை வாழ்த்துக்கள் அப்படின்னுதான் எழுதி வந்திருக்கிறேன். இது தப்பா?

    //இதை பத்தி எங்க தமிழ் மிஸ் சொன்னது ஞாபகம் வருது. உதாரணத்துக்கு 'கை'- இதை பன்மையில் குறிக்க 'கைக்கள்'னா சொல்றோம்? 'கைகள்'னு தானே சொல்றோம்? அதனால் பன்மையைக் குறிக்க ஒற்று மிகாது என்பது நான் கற்றது.//

    ஹை! இது நல்ல கதையா இருக்கே. பூ இருக்கு. இதுக்கு பன்மை பூகளா? இல்லையே பூக்கள்தானே? அதனால நீங்க சொல்ல வரது கம்ப்ளீட்டா சரி மாதிரி தெரியலையே.

    //வேற யாராச்சும் விளக்கம் சொன்னாலும் நல்லாருக்கும். இதை பத்தி ஆராய்ச்சி பண்ணி விக்கிபசங்கள்ல போட்டீங்கன்னாலும் நல்லது தான்.
    :)//

    கண்ணு இது விக்கி பசங்க டிபார்ட்மெண்ட் இல்லைப்பா. இது போக வேண்டிய அட்ரஸ் சொல் ஒர் சொல் கேர்/ஆப் குமரன் / ஜிரா. :))

    ReplyDelete
  66. //ஓராண்டு நிறைவுக்கு நல் வாழ்த்துக்கள். உம்முடைய ஓராண்டு கால பதிவுகளைப் படித்த நிறைவு கிடைத்தது. ஜிரா மிகவும் அருமையாக அலசி இருக்கிறார்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி இரவி அவர்களே.

    ReplyDelete
  67. //பொங்கலோ பொங்கல்!

    உங்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//

    ஆதி பகவன் அவர்களே, இது உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  68. //சரி, மயிலார்னா யாரு?//
    //ஆஹா இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? ஜிராவின் பழைய பதிவுகள் எல்லாம் படிக்கணும்.//

    படிச்சிருவோம்!//

    அதுவும் நான் சொன்ன பதிவை முக்கியமா தேடி படியுங்க. இருக்கட்டும் நம்ம பழைய பதிவு எல்லாம் படிச்சாச்சா? டெஸ்ட் வைக்கலாமா? :)

    ReplyDelete
  69. வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இது குழப்பமான ஒன்றாக இருந்தாலும் இரண்டுமே சரி என்று எடுத்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து. இதே போன்ற குழப்பம் கருத்துகள், கருத்துக்கள் என்பதிலும் வரலாம். இங்கும் இரண்டுமே சரி என்பதுதான் என் கருத்து.

    சில இணையான சொற்களைப் பார்க்கலாம். குருத்து-குருத்துகள், இணைப்பு-இணைப்புகள், இனிப்பு-இனிப்புகள், வாத்து-வாத்துகள், காழ்ப்பு-காழ்ப்புகள். இந்த வகையில் பார்க்கும் போது கருத்துகள் என்பதும் வாழ்த்துகள் என்பதுமே சரி. 'கள்' என்பது பன்மையைக் குறிக்கும் விகுதி. ஆகையால் 'வன்றொடர் குற்றியலுகரத்துக்குப்பின் ஒற்று மிகும்' என்ற விதியின் படி ஒற்று மிகத் தேவையில்லை. குருத்துக்கள், வாத்துக்கள்................. என்பதெல்லாம் தவறு.

    அதனால் கருத்துக்கள், வாழ்த்துக்கள் என்பதெல்லாம் தவறு என்று வாதிடலாம். இந்த வாதம் சரியான வாதம்தான்.

    ஆனால் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள் என்பது இப்போது பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறது. இக்காலத்தில் குருத்துக்கள் என்று சொல்லும்போது ஏற்படும் நிரடல் கருத்துக்கள் என்று சொல்லும் போது ஏற்படுவதில்லை. இப்படியாக ஒற்று மிகுதல் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள் - இவ்விரண்டு சொற்களிலும் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து பொருளை மிகுதிப்படுத்துகிறது.

    மேலும்.

    ReplyDelete
  70. ஓகை,

    நல்ல விளக்கம். சுட்டிக்கு நன்றி. ஆனால் நீங்கள் சொல்வது பார்த்தால் இலக்கணப்படி வாழ்த்துகள் என்றே வர வேண்டுமெனத் தோன்றுகிறதே. அதுதான் சரியா?

    ReplyDelete
  71. //நான் இது வரை வாழ்த்துக்கள் அப்படின்னுதான் எழுதி வந்திருக்கிறேன். இது தப்பா?//

    தப்பே இல்லை...

    ReplyDelete
  72. //நம்ம பழைய பதிவு எல்லாம் படிச்சாச்சா? டெஸ்ட் வைக்கலாமா? :)//

    என்ன.. என்னை அர்ரியர்ஸ் வாங்கவைக்கிறதா உத்தேசமா?

    ReplyDelete
  73. தம்பி தேவ் அவர்கள் நம்மைச் சிறப்பித்து போட்டு இருக்கும் பதிவு இதோ .

    நன்றி தேவ்.

    ReplyDelete
  74. //நான் இது வரை வாழ்த்துக்கள் அப்படின்னுதான் எழுதி வந்திருக்கிறேன். இது தப்பா?//

    தப்பே இல்லை...//

    அவங்க சொல்லறதைப் பார்த்தா தப்பு மாதிரி தெரியுதே. நீங்க இவ்வளவு அடிச்சு சொல்லறீங்க. அப்படியே ரூல் புக்கை எல்லாம் எடுத்து கோட் பண்ண வேண்டாமா?

    ReplyDelete
  75. //நம்ம பழைய பதிவு எல்லாம் படிச்சாச்சா? டெஸ்ட் வைக்கலாமா? :)//

    என்ன.. என்னை அர்ரியர்ஸ் வாங்கவைக்கிறதா உத்தேசமா?//

    அட பசங்களை விட நீங்க எல்லாம் நல்லா படிப்பீங்கன்னு நினைச்சா நீங்களும் அரியர்ஸ் அது இதுன்னு பேசுனா எப்படி? உங்களை வெச்சுதான் நம்ம பசங்களையும் உசுப்பேத்தி படிக்க வைக்கணமுன்னு பார்த்தா அந்த நினைப்பில் மண் அள்ளிப் போட்டுடுவீங்க போல இருக்கே.

    ReplyDelete
  76. //உங்களை வெச்சுதான் நம்ம பசங்களையும் உசுப்பேத்தி படிக்க வைக்கணமுன்னு பார்த்தா அந்த நினைப்பில் மண் அள்ளிப் போட்டுடுவீங்க போல இருக்கே.//

    :-)))) படிக்கிறேன் படிக்கிறேன்... (நேரம் இருக்கணும்ல?)

    ReplyDelete
  77. //அவங்க சொல்லறதைப் பார்த்தா தப்பு மாதிரி தெரியுதே//

    இப்ப தான் ஓகையின் பின்னூட்டத்தை வாசிச்சேன்.

    //நீங்க இவ்வளவு அடிச்சு சொல்லறீங்க. அப்படியே ரூல் புக்கை எல்லாம் எடுத்து கோட் பண்ண வேண்டாமா?//

    என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்த்துகள்னு எழுதப்பட்டு நான் அதிகம் பார்த்ததில்ல (சொல்லப்போனா, அப்படி எழுதப்பட்டுப் பார்த்ததேயில்ல) அதனால தான் அடிச்சு சொல்லிப்புட்டேன். ஆனா ரூல் புக் எடுத்து மேற்கோள் காட்டற அளவுக்கெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. ஏதோ எழுதறதை முடிஞ்ச அளவு எழுத்துப்பிழை ஒற்றுப்பிழை இல்லாம எழுதணும்னு நினைப்பேன், ஆனா இந்த இலக்கணப்படி எது சரி எது தவறுன்னெல்லாம் சொல்ற அளவுக்கு எனக்குப் பள்ளிக்கூடத்துல படிச்சதெல்லாம் ஞாபகமில்லைன்னு வச்சிக்கோங்களேன் (பள்ளிக்கூடத்தில் ஒழுங்காப் படிச்சிருந்தாத் தானே? :-)))

    ReplyDelete
  78. //:-)))) படிக்கிறேன் படிக்கிறேன்... (நேரம் இருக்கணும்ல?)//

    அப்பாடா. ஒரு வாய் வார்த்தைக்காவது சொல்லறீங்களே!

    என்னது? சொல்லலைன்னா நான் விட மாட்டேனா? அது எவண்டா அது சைடுல கமெண்ட் அடிக்கறது! :)))

    ReplyDelete
  79. //(பள்ளிக்கூடத்தில் ஒழுங்காப் படிச்சிருந்தாத் தானே? :-)))//

    கவலைப்படாதீங்க. நம்ம பெருந்தலைங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பலாம். அவங்க வந்து கருத்து சொல்லுவாங்க. அப்ப தெரியும் விஷயம்.

    ReplyDelete
  80. //அப்பாடா. ஒரு வாய் வார்த்தைக்காவது சொல்லறீங்களே!
    என்னது? சொல்லலைன்னா நான் விட மாட்டேனா? அது எவண்டா அது சைடுல கமெண்ட் அடிக்கறது! :)))//

    நல்லா கேட்டீங்களா? என் குரல் மாதிரி இருந்துச்சா? "நியூசிலாந்தில் டீச்சர்கள் அட்டகாசம்" பதிவில் விசயத்தை வாங்கறவரைக்கும் இப்படித்தானே செஞ்சீங்க :-D

    ReplyDelete
  81. //நல்லா கேட்டீங்களா? என் குரல் மாதிரி இருந்துச்சா?//

    ஏங்க. நானே எவன் குரலோ அப்படின்னு தல ஸ்டைலில் போகப் பார்த்தா, சொன்னது நாந்தானா சொல் சொல் சொல் இலவசமேன்னு அடம் புடிச்சா எப்படி? விட்டா நோட்டரி கையெழுத்தோட ஸ்டேட்மெண்ட் வேற குடுப்பீங்க போல!

    //"நியூசிலாந்தில் டீச்சர்கள் அட்டகாசம்" பதிவில் விசயத்தை வாங்கறவரைக்கும் இப்படித்தானே செஞ்சீங்க//

    ஆஹா! மேட்டர் என்னான்னு பாத்தீங்களா! ஒவ்வொரு பதிவுலையும் விஷயத்தை வாங்க நான் இவ்வளவு கஷ்டப்பட்டா, பிரச்சனை யாருக்கிட்டன்னு தெரியுதா! :)))

    ReplyDelete
  82. பொங்கல் வாழ்த்துக்கள்.

    இதையும் படிங்க.

    http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html

    ReplyDelete
  83. ஊரை மாத்தறது ரொம்ப தப்புங்கோ!
    மாற்றிய வாழ்த்து.

    ஓராண்டைத் தாண்டிய ஒப்பற்ற ஓட்டத்தை
    நேராகத் தந்தார் இலவசம் - நீரோடும்
    தாமிர மைந்தர் தினமோர் பதிவிட
    நாமும் தருவோமே வாழ்த்து.

    ReplyDelete
  84. வாழ்த்துக்கள் கொத்ஸ்...

    இப்பதிவு உங்கள் பெருமையே உலகுக்கு எடுத்து சொல்லவதாய் பின்னூட்டங்கள் கரை புரண்டு ஓட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்..... :)

    ReplyDelete
  85. //பொங்கல் வாழ்த்துக்கள்.

    இதையும் படிங்க.

    http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html//

    விஷ்வா, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  86. //ஓராண்டைத் தாண்டிய ஒப்பற்ற ஓட்டத்தை
    நேராகத் தந்தார் இலவசம் - நீரோடும்
    தாமிர மைந்தர் தினமோர் பதிவிட
    நாமும் தருவோமே வாழ்த்து.//

    ஓகை, தங்கள் கவித்துவமான வாழ்த்துக்கு நன்றி.

    ஒரு நாளைக்கு ஒரு பதிவா? சாமி நானும் தாங்க மாட்டேன். நாடும் தாங்காது. :))

    ReplyDelete
  87. //வாழ்த்துக்கள் கொத்ஸ்...

    இப்பதிவு உங்கள் பெருமையே உலகுக்கு எடுத்து சொல்லவதாய் பின்னூட்டங்கள் கரை புரண்டு ஓட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்..... :)//

    ராம், எங்கள் வீட்டுக்கு பொங்கலன்று வந்ததுக்கு நன்றி தலைவா! (கமலின் பஞ்சதந்திரம் படம் பார்த்தோம். அதில் அவர் பெயர் ராமச்சந்திரமூர்த்தி என்ற ராம்.சி.எம். )

    வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்க வாக்கு பொய்க்காம போகணமுன்னா அடிக்கடி வாங்க. வந்த மட்டும் போதாது.. :))

    ReplyDelete
  88. கொத்ஸ்,
    நேத்தே அடிச்சி ஆடனும்னு பார்த்தது... எவனோ கண்ணு வெச்சிட்டான்... இங்க எனக்கு அநியாயத்துக்கு ஆணி புடுங்க சொல்றானுங்க :-(

    ReplyDelete
  89. இருந்தாலும் விட்டுடுவோமா????

    நம்மல யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. சரிதானே??? ;)

    ReplyDelete
  90. உங்க பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?

    ReplyDelete
  91. பதிவு எழுதறது கஷ்டமா இல்லை பின்னூட்டத்துக்கு பதில் சொல்றது கஷ்டமா???

    ReplyDelete
  92. நீங்க இருக்குற ஏரியால பனி பெய்ய ஆரம்பிச்சிடுச்சா???

    ReplyDelete
  93. வெண்பா பாட்டு சொல்லி தர ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாதா?

    ReplyDelete
  94. இல்லை விக்கி பசங்கள ஒரு தொடர் எழுதுங்களேன்

    ReplyDelete
  95. உங்க பதிவுல எனக்கு பயனளிச்சது கொத்து பரோட்டா பதிவுதான்...

    வாரத்துக்கு ஒரு தடவை செய்யறோம் :-)

    ReplyDelete
  96. எத்தனை போட்டேனு மறந்து போச்சி..
    இன்னும் 100 வந்திருக்காதுனு நினைக்கிறேன்...

    ReplyDelete
  97. இன்னைக்கு 100 அடிக்காம விடறதில்லைனு முடிவு பண்ணியாச்சு :-)

    ReplyDelete
  98. வெட்டி 100 ஆயிடிச்சு. இப்போ நானும் ஆணி புடிங்கிக்கிட்டு இருக்கேன். ஒரு ஒரு மணி நேரம் டயம் குடுங்க.

    ReplyDelete
  99. my share
    http://unarvukal-unarvukal.blogspot.com/2007/01/blog-post.html
    http://thamizhachi.blogspot.com/2007/01/blog-post.html

    ReplyDelete
  100. //கொத்ஸ்,
    நேத்தே அடிச்சி ஆடனும்னு பார்த்தது... எவனோ கண்ணு வெச்சிட்டான்... இங்க எனக்கு அநியாயத்துக்கு ஆணி புடுங்க சொல்றானுங்க :-(//

    என்ன அநியாயம் இது? தனி ஒரு மனிதனை ஆணி புடுங்கச் சொன்னால் இந்த ஜகத்தினை எரித்திடுவோம் எனச் சொன்ன ஆளை எங்கே? எனக்கு வர கோவத்துக்கு.....

    ReplyDelete
  101. //இருந்தாலும் விட்டுடுவோமா????

    நம்மல யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. சரிதானே??? ;)//

    அதானே. உங்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியுமா? அப்படி எல்லாம் முடிஞ்சிருந்தா உம்மை தெலுங்கு படம் பாக்க விடுவோமா? :))

    ReplyDelete
  102. //உங்க பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?//

    என்னங்க இப்படி ஒரு வழக்கமான கேள்வி. சரி முதல்ல வழக்கமான பதிலையே சொல்லிருவோம்.

    என் கண்களில் எந்த கண்ணு உசத்தின்னு கேட்டா என்ன சொல்லறது? நம்ம பசங்கள்ள எந்த பையன் செல்லமுன்னு கேட்டா என்னத்த சொல்ல? நம்ம பொண்டாட்டிங்கள்ள எந்த பொண்டாட்டி.... அடப்பாவிங்களா என்னவெல்லாம் சொல்ல வைக்கறீங்க. அந்த லாஸ்ட் ஸ்டேட்மெண்ட் கேன்ஸல்!

    சரி, இப்போ உண்மையான பதில். எழுதுன பதிவுங்கள்ள எல்லாம் நான் எனக்கு தோணும் பொழுது எழுதுனதை விட நம்மளை மதிச்சி எழுதச் சொல்லி சொன்னாங்க பாருங்க நம்ம சங்க மக்கள், அவங்களுக்காக எழுதுன பதிவுங்கதான் நம்ம பேவரைட். அதுவும் வாரம் ஒண்ணுன்னு கெடு வெச்சி வாங்குனாங்க பாருங்க. நம்மால அந்த மாதிரி எழுத முடிஞ்சுதுன்னு தெரிய வந்ததே அப்பத்தேன். அதுனாலேயுந்தான் இந்த பதிவுங்க நம்ம பேவரைட்.

    ReplyDelete
  103. //பதிவு எழுதறது கஷ்டமா இல்லை பின்னூட்டத்துக்கு பதில் சொல்றது கஷ்டமா???//

    இது ரொம்ப சுலபமான கேள்விங்க. பதிவுல நாம என்ன கதை எழுதறோமா இல்லை உங்களை மாதிரி கொல்டி என்ற பெயரில் சுயசரிதையா? சும்மா அங்க இங்க படிக்கறதை கட் பேஸ்ட் பண்ணினா ஆச்சு வேலை.

    ஆனா இந்த PM இருக்கே. அதாவது Project Management இல்லைங்க, Pinootta Management இருக்கே. ரொம்ப கஷ்டமான வேலைங்க. நம்ம பெனாத்தலாரைக் கேளுங்க, எம்புட்டு கஷ்டப்பட்டாருன்னு.

    அதுவும் வரவங்க என்னென்ன கேட்கறாங்க? எல்லாத்துக்கும் அடுத்த முறை வரா மாதிரி பதில் சொல்லறதுக்குள்ள தாவு தீந்து போகுதய்யா.

    ReplyDelete
  104. //நீங்க இருக்குற ஏரியால பனி பெய்ய ஆரம்பிச்சிடுச்சா???//

    இன்னும் இல்லைய்யா. இளையவர் மனசு நொந்து போயி இருக்காரு. நாங்க இன்னும் இளவேனிற் மேற்சட்டையோடதான் வெளிய போறோமுன்னா பார்த்துக்குங்களேன். எல்லாம் நான் Snow Shovel வாங்குன நேரம்!

    ReplyDelete
  105. //வெண்பா பாட்டு சொல்லி தர ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாதா?//

    அடப்பாவிங்களா! இம்புட்டு நாளா கரடி மாதிரி கத்தி இருக்கேனே. அதெல்லாம் காதுலையே விழலையாய்யா? கொஞ்சம் இங்க போயி பாருங்கப்பா, நம்ம வெண்பா வாத்தியும் சரி, நானும் சரி பதிவு பதிவா போட்டு இருக்கோமய்யா.

    அதையெல்லாம் படிச்சிட்டு அடுத்த வெண்பா பதிவுல வந்து விளையாடலை உனக்கு இருக்குடி!

    ReplyDelete
  106. //உங்க பதிவுல எனக்கு பயனளிச்சது கொத்து பரோட்டா பதிவுதான்...

    வாரத்துக்கு ஒரு தடவை செய்யறோம் :-)//

    அது நம்ம வீட்டுல கூட அடிக்கடி செய்யற மேட்டர்தான். வல்லியம்மா வேற அடுத்தது என்ன சமைக்கப் போறீங்கன்னு கேட்டாச்சு. அதனால விரைவில் அடுத்த சமையல் குறிப்பு போட வேண்டியதுதான்.

    ReplyDelete
  107. //எத்தனை போட்டேனு மறந்து போச்சி..
    இன்னும் 100 வந்திருக்காதுனு நினைக்கிறேன்...//

    வந்திருச்சய்யா வந்திருச்சு!

    ReplyDelete
  108. //இன்னைக்கு 100 அடிக்காம விடறதில்லைனு முடிவு பண்ணியாச்சு :-)
    //

    மொத்தமா 100ஆ அல்லது நீங்க ஆரம்பிச்ச இடத்துலேர்ந்து 100ஆ? இரண்டாவதுன்னா இன்னும் ரொம்ப தூரம் போகணும் சொல்லிட்டேன். ஆமா!

    ReplyDelete
  109. //my share
    http://unarvukal-unarvukal.blogspot.com/2007/01/blog-post.html
    http://thamizhachi.blogspot.com/2007/01/blog-post.html//

    அனானி, நீங்க குடுத்த சுட்டி எல்லாம் போயி பார்த்தேன், ஒண்ணுமே தெரியலையே! :)))

    உண்மையைச் சொல்லறேன். நம்ம பதிவுல எல்லாம் சரக்கு கம்மி. ஆனா பின்னூட்ட விளையாட்டா இருந்தாலும் இது ஒரு பொழுது போக்குதான். ஒரு ரிலாக்சேஷனுக்குத்தான் இதெல்லாம்.

    அனாவசியமா சண்டை போடறது இல்லை, தனி மனித தாக்குதல் இல்லை, நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு அடம் பிடிக்கறது இல்லை. இப்படியே இருந்துட்டு போறேன் விடுங்க.

    ReplyDelete
  110. இ.கொ,
    வெளியூரில் இருந்ததால் உடன் படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை.

    முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது [தாமதமான] இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிவுலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டு நிறைவை தமிழ்மணத்தின் "வாரியார்" அருமை நண்பர் கோ.இராகவனின் ஆக்கத்தோடு புதுமையாகத் தந்துள்ளீர்கள்.

    முதல் ஆண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் எழுதி எங்களை மகிழ்விக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் பாலிப்பானாக.

    ReplyDelete
  111. //வெளியூரில் இருந்ததால் உடன் படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை.//

    வாங்க வெற்றி, உங்களைத்தான் காணுமேன்னு நினைச்சேன். வெளியூர் பயணமா? நல்லபடியா முடிஞ்சதா?

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    தமிழ்மணத்தின் வாரியார் ஜிராவா? பட்டம் நல்லாவே இருக்கே. நான் இப்போதான் சொற்சித்தர் அப்படின்னு வேற சொல்லி இருக்கேன். எல்லாப் பட்டத்துக்கும் உகந்தவர்தான். என்ன சொல்லறீங்க? :)

    ReplyDelete
  112. //நம்ம பதிவுல எல்லாம் சரக்கு கம்மி. //

    அட சிமெண்ட் கம்மி, ஜல்லி அதிகம்னு சொல்லுங்க.

    ReplyDelete
  113. //ஆனா பின்னூட்ட விளையாட்டா இருந்தாலும் இது ஒரு பொழுது போக்குதான். ஒரு ரிலாக்சேஷனுக்குத்தான் இதெல்லாம்.//

    மனசை பாதிச்ச விஷ்ஹயங்களை மட்டும்தாங்க நாங்க எழுதறோம், அது உங்களுக்கு ரிலாக்ஷேசனா? என்ன உலகம் இது?

    ReplyDelete
  114. //அனாவசியமா சண்டை போடறது இல்லை, தனி மனித தாக்குதல் இல்லை, நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு அடம் பிடிக்கறது இல்லை. இப்படியே இருந்துட்டு போறேன் விடுங்க.//
    ஆமாங்க, நாங்க என்ன பந்துபோட்டு அடிச்சா விளையாடுறோம். இல்லே அப்புறமா பூஸ்ட், சேவிங் ரேசர்ன்னு விக்க வரோமா? சும்மா பின்னூட்டத்துல தானே அடிச்சு விளையாடுறோம். விட்டுருங்களேன்

    ReplyDelete
  115. //தமிழ்மணத்தின் வாரியார் ஜிராவா? //


    இது நல்லா இருக்குங்க. அப்போ "வாரியார்" ஜி.ரா அவர்களே

    //சொற்சித்தர்// இதுமட்டும் வேணாம், அழுதுருவேன். நேர்ல பேசிப்பார்த்துட்டு சொல்லுங்க. அப்புறமாத்தான் தெரியும்.

    ReplyDelete
  116. //அட சிமெண்ட் கம்மி, ஜல்லி அதிகம்னு சொல்லுங்க.//

    அப்பூ, இதெல்லாம் பத்தி ஆராச்சும் கேட்டாங்களாக்கும்? பேசுனது சரக்கப் பத்தி மட்டுத்தானுங்களே. சரக்கப் பத்தி நாம எம்புட்டு பதிவு போட்ருக்கோமுன்னு பாருங்கண்ணா, ஒரே ஒரு பதிவுதானுங்களே. அதத்தான் சரக்கு கம்மின்னு சொன்னோமுங்க.

    அத விட்டுப்போட்டு சிமிண்டு செங்கலுன்னு ஜல்லி அடிச்சா அது எந்த ஊரு நியாயமுங்கோ?

    ReplyDelete
  117. //மனசை பாதிச்ச விஷ்ஹயங்களை மட்டும்தாங்க நாங்க எழுதறோம், அது உங்களுக்கு ரிலாக்ஷேசனா? என்ன உலகம் இது?//

    இன்னா மேன் நீ? நான் வந்து இன்னா சொல்றேனோ அத்தையே நீயும் சொல்லிக்கினு அப்புறம் வேர்ல்ட பாத்து நொந்துக்கிறே?

    ரிலாக்சேஷன்னா இன்னா? நம்ம டி.என். சேஷன் கசினா? இல்லபா. மனசு அப்படியே ஆற அமர குந்திக்கிறதுபா.

    நம்ம மனசுள்ளாற ஒரு மேட்டர் வந்து பீலிங்ஸ் ஆவுதுன்னு வெச்சிக்கோ. அப்போ நீ இன்னா செய்யணும்? நம்மள நல்லா புரிஞ்சவன் கையில போயி இதோ பாரு கண்ணு. இதான் மேட்டர், இன்னா ஆவுது பாரு அப்படின்னு சொன்னேன்னு வெச்சுக்கோ, அப்போ அந்த மேட்டர் உள்ளையே இருந்துக்கினு ராவாம அப்படியே ஒரு ரிலாக்ஸ் ஆகிப் பூடும். இத்தத்தானே நானும் சொன்னேன்.

    அத்த கண்டுக்காத இன்னா மேன் ஒலகம் அது இது அப்படின்னு தேவதாஸாட்டும் சவுண்டு விட்டுக்கினு இருந்தா இன்னா ஆவ போவுது. போயி தொயில கவுனி வாத்தியாரே.

    ReplyDelete
  118. கொத்ஸ்,

    எஸ்கே ஐயாவின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

    சரியாத்தான் சொல்லி இருக்காக !

    ReplyDelete
  119. //ஆமாங்க, நாங்க என்ன பந்துபோட்டு அடிச்சா விளையாடுறோம். இல்லே அப்புறமா பூஸ்ட், சேவிங் ரேசர்ன்னு விக்க வரோமா? சும்மா பின்னூட்டத்துல தானே அடிச்சு விளையாடுறோம். விட்டுருங்களேன்//

    நன்னாச் சொன்னேள் போங்கோ. அதுல பாருங்கோ, நம்ம புள்ளாண்டன்கள் இந்த பந்தை அடிக்கறது எல்லாத்தையும் சரியாச் செய்யறாளோ இல்லையோ. ஆனா இந்த மாதிரி கண்ட கண்ட சாமானெல்லாம் விக்கறதுக்கு மட்டும் சரியா வந்துடறா.

    அதுலேயும் இந்த படத்தைப் பாருங்கோ. இன்னிக்கு தினமலர்ல போட்டு இருக்கான். இந்த சேவாக் அம்பியை ஆட்டத்துலயே சேத்துக்கலை. ஆனா பணம் பண்ண மட்டும் சரியா ஆஜர் ஆயுட்டன். அதுலயும் அந்த அபிஷ்டு மொகத்துல சிரிப்ப பாத்தேளோ? எல்லாம் கலிகாலங்காணும். வேற என்ன?




    ஆனா நாம எல்லாம் இதை பணம் பண்ணறதுக்கா பண்ணறோம்? இல்லையே. ஒரு சேவையான்னா நெனச்சு பண்ணிண்டு இருக்கோம். இதுனால ஒரு நாலு பேர் சிரிச்சிட்டு போன நமக்கு ஒரு திருப்தி. அம்ப்ட்டுதானே. இதுல ஏன் மத்தவாளுக்கு இவ்வளவு கோவம் வரது? லோகத்துல ஒண்ணுமே புரியல்லை. போங்கோ.

    ReplyDelete
  120. //அத்த கண்டுக்காத இன்னா மேன் ஒலகம் அது இது அப்படின்னு தேவதாஸாட்டும் சவுண்டு விட்டுக்கினு இருந்தா இன்னா ஆவ போவுது. போயி தொயில கவுனி வாத்தியாரே.//
    அத்து ஓன்னுமில்ல நைனா. மொதா பின்னோட்டம் சரன்னு இர்ந்துச்சா, அத்த படிச்சுக்கின்னே இரண்டாம் தபா போட சொல்லோ மப்பு ஏறி தேவாதாஸ் கணக்கா உட்டேம்பா. இதெல்லாம் ரீஜெண்டா கண்டுகீனாம உட்ருபா

    ReplyDelete
  121. //அத விட்டுப்போட்டு சிமிண்டு செங்கலுன்னு ஜல்லி அடிச்சா அது எந்த ஊரு நியாயமுங்கோ?//
    என்னாங்க அநியாயம் இது, ஒரே ஒருபதிவை போட்டுட்டு சரக்கு கம்மி, ஜல்லி கம்மின்னா என்னா அர்த்தம்?

    கொத்ஸ் பரோட்டாக்கு சால்னா வேணும்னு சொன்னா மட்டும் போதுங்களா, அதுக்கு சைடு டிஷ்ஷா கொஞ்சம் சரக்கையும் வெக்க வேணாமா? ஒர் கிங் பிஷரை வாங்கிக்கவும்னு சொன்னா, " சரக்கு கம்மி"ன்னுதான் சொல்லுவோம்

    ReplyDelete
  122. //கொத்ஸ்,

    எஸ்கே ஐயாவின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.//

    கோவி, நிறையா இடங்களில் அவர் சொல்லறதை வழி மொழியறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சே! :)))
    (சிரிப்பான் எல்லாம் போட்டாச்சு. திட்டக்கூடாது.)

    //சரியாத்தான் சொல்லி இருக்காக !//

    ஆத்தாடி. அவுக எம்புட்டு பெரியவக. சாமி சமாச்சாரத்தை எல்லாம் எம்புட்டு சுளுவா நம்ம மாதிரி ஆளுகளுக்கு வெளங்குதாப்புல சொல்லுதாக. அவுக ஒரு விஷயம் சொன்னா அலசி ஆராயாமலயா சொல்லுவாக. அதெல்லாம் அவுக சொன்னா சரியாத்தேன் இருக்கும். அத மீறி நம்ம மாரி ஆளுவ என்னத்த சொல்லறது? இந்த மாதிரி வம்பு வழக்குக்கெல்லாம் நாம வரலை சாமியோவ். சொல்லிப்புட்டேன். ஆமா!

    ReplyDelete
  123. இ.கொ,

    /*ஆத்தாடி. அவுக எம்புட்டு பெரியவக. சாமி சமாச்சாரத்தை எல்லாம் எம்புட்டு சுளுவா நம்ம மாதிரி ஆளுகளுக்கு வெளங்குதாப்புல சொல்லுதாக. அவுக ஒரு விஷயம் சொன்னா அலசி ஆராயாமலயா சொல்லுவாக. அதெல்லாம் அவுக சொன்னா சரியாத்தேன் இருக்கும். அத மீறி நம்ம மாரி ஆளுவ என்னத்த சொல்லறது? இந்த மாதிரி வம்பு வழக்குக்கெல்லாம் நாம வரலை சாமியோவ். சொல்லிப்புட்டேன். ஆமா!*/
    ஹிஹி... நல்லாய்த்தான் இருக்கு.
    இ.கொ, இது எந்தப் பகுதித் தமிழ்? மதுரையா?

    ReplyDelete
  124. //இதெல்லாம் ரீஜெண்டா கண்டுகீனாம உட்ருபா//

    சரீப்பா, அப்டியே நானும் கண்டுக்காத மாரி அப்பாலிகா போறேன், நீயும் அடுத்த மேட்டருக்கா போயிடு. இன்னா.

    ReplyDelete
  125. //ஒர் கிங் பிஷரை வாங்கிக்கவும்னு சொன்னா, " சரக்கு கம்மி"ன்னுதான் சொல்லுவோம்//

    நான் சொன்னது அதுவல்ல. நான் சொன்னது - "தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்!" அளவு எல்லாம் அவங்களுக்கே தெரியணும். நான் சொல்லறது இல்லை.

    இதுக்கே குடி குடியைக் கெடுக்கும் அப்படின்னு விஸ்கி போடலைன்னு நம்ம டாக்டர் சத்தம் போடுறாரு. (என்னது? அது விஸ்கி இல்லை டிஸ்கியா? என்னவோ எழவு. அதான்யா)

    ReplyDelete
  126. //ஹிஹி... நல்லாய்த்தான் இருக்கு.
    இ.கொ, இது எந்தப் பகுதித் தமிழ்? மதுரையா?//

    இல்லீங்க வெற்றி, இது இன்னும் தெக்கால. நம்ம நெல்லை மண்ணின் மணம் சாமி இது.

    ReplyDelete
  127. ஏமண்டி கொத்தனார்காரு! மீரு இப்புடு எந்துக்கு எந்தலயை ரோல் சேசுன்னாரு?

    மனக்கும், மீருக்கும் ஏமி வாய்தா?

    பாக லேதண்டி மீரு சேய்யுறது!

    தேவுடா!
    :)

    ReplyDelete
  128. //சொற்சித்தர்// இதுமட்டும் வேணாம், அழுதுருவேன். நேர்ல பேசிப்பார்த்துட்டு சொல்லுங்க. அப்புறமாத்தான் தெரியும்.//

    இளா, என்ன ஆச்சு? சொல்லவே இல்லையே?! இவ்வளவு உணர்ச்சிவசப்படறீங்க, கட்டாயம் ஒரு கதையாவது இருக்கணுமே....

    ReplyDelete
  129. //ஏமண்டி கொத்தனார்காரு! மீரு இப்புடு எந்துக்கு எந்தலயை ரோல் சேசுன்னாரு?

    மனக்கும், மீருக்கும் ஏமி வாய்தா?

    பாக லேதண்டி மீரு சேய்யுறது!

    தேவுடா!
    :)//

    சாமி, நல்லதாத்தானே சொல்லி இருக்கேன். அதுக்கு எதுக்கு தேவுடாவை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு.

    ஏற்கனவே நம்ம பையன் நல்ல பையன் வெட்டியை இந்த மாதிரி தெலுங்குக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு நிக்கறோம். இப்போ நீங்க என்ன இந்த செப்பு செப்பறீங்க.

    அடுத்தது தெலுங்கு படத்துக்கு விமர்சனம் எழுதுனீங்க, அப்புறம் அழுதுருவேன். ஆமா.....

    ReplyDelete
  130. அது வேர வொண்ணுமில்ல வோய்!
    ஏதோ பொழ்ஹுது போகல்லியேன்னு கொஞ்சம் இந்தத் தெலுங்கை தொட்டுப் பாத்தேன்!
    அவ்ளோதான்!

    நீர் வொண்ணும் மனசில வெச்சுக்க வோண்டாம் வோய்!

    பகவான் உம்மை க்ஷேமமா வெச்சிரிக்கட்டும்!!

    நீர் சும்மா அடிச்சு ஆடும் வோய்!

    ReplyDelete
  131. //நீர் வொண்ணும் மனசில வெச்சுக்க வோண்டாம் வோய்!//

    சரி சரி. நமக்குள்ள எதுக்கு வீணா தர்க்கம் பண்ணிண்டு. நாலு பேர் பாக்கற இடத்துலயாவது ஒத்துமையா இருக்கற மாதிரி இருப்போம்வோய். சும்மாவே வாய மெல்லறவாளுக்கு அவலைக் குடுத்துண்டு.

    ReplyDelete
  132. // வெற்றி said...
    பதிவுலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டு நிறைவை தமிழ்மணத்தின் "வாரியார்" அருமை நண்பர் கோ.இராகவனின் ஆக்கத்தோடு புதுமையாகத் தந்துள்ளீர்கள். //

    ஆகா...வெற்றி....என்னைப் பற்றி....இப்படிச் சொல்லீட்டங்களே. தமிழ்மண வாரியாரா! நானா! மலையெங்கே மடுவெங்கே! பகலவன் எங்கே! அடுப்புச் சுள்ளியெங்கே! சீஸ் பீட்சா எங்கே! பிரட் ஸ்டிக் எங்கே!

    // இலவசக்கொத்தனார் said...
    தமிழ்மணத்தின் வாரியார் ஜிராவா? பட்டம் நல்லாவே இருக்கே. நான் இப்போதான் சொற்சித்தர் அப்படின்னு வேற சொல்லி இருக்கேன். எல்லாப் பட்டத்துக்கும் உகந்தவர்தான். என்ன சொல்லறீங்க? :) //

    அது சரி. வெற்றிக்கு நீங்க சாட்சியா? இதெல்லாம் சரியில்லை. அழுதுருவேன். கொஞ்சும் தமிழில் அஞ்சும் படிச் சொல்லிக் கெஞ்சும்படி வைக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    // ILA(a)இளா said...
    //தமிழ்மணத்தின் வாரியார் ஜிராவா? //
    இது நல்லா இருக்குங்க. அப்போ "வாரியார்" ஜி.ரா அவர்களே //

    இரண்டாம் வழிமொழிதலா! அதுவும் இளாவா!

    //சொற்சித்தர்// இதுமட்டும் வேணாம், அழுதுருவேன். நேர்ல பேசிப்பார்த்துட்டு சொல்லுங்க. அப்புறமாத்தான் தெரியும். //

    என்னய்யா இது! நேருல பேசிப் பாத்தா என்னாகும்? அதையுஞ் சொல்லுங்க. மூசுமூசுன்னு அழுதாச் சரியா?

    ReplyDelete
  133. //கமலின் பஞ்சதந்திரம் படம் பார்த்தோம். அதில் அவர் பெயர் ராமச்சந்திரமூர்த்தி என்ற ராம்.சி.எம். )//

    ஹி ஹி அந்த படம் வரதுக்கு முன்னாடியே Raamcm'ன்னு ஐடி கிரியேட் பண்ணியாச்சு....

    ReplyDelete
  134. எல்லா ஊர் மொழியிலேயும் கலக்குரீங்களே, எங்க ஊர் பாஷையிலே எழுதுங்க பார்ப்போம்?

    (எங்க ஊர் எதுன்னு தேடி நம்ம பதிவுக்கு ஒரு நாலு ஹிட் வராதா?)

    ReplyDelete
  135. //Pinootta Management இருக்கே. ரொம்ப கஷ்டமான வேலைங்க. நம்ம பெனாத்தலாரைக் கேளுங்க, எம்புட்டு கஷ்டப்பட்டாருன்னு.//

    past tense இல்லை.. present and Maybe future tense:-((((((((((((

    ReplyDelete
  136. ///கொஞ்சும் தமிழில் அஞ்சும் படிச் சொல்லிக் கெஞ்சும்படி வைக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//

    பட்டம் குடுத்தாச்சுன்னா குடுத்தாச்சுதான். ஒண்ணும் பண்ண முடியாது.

    //என்னய்யா இது! நேருல பேசிப் பாத்தா என்னாகும்? அதையுஞ் சொல்லுங்க. மூசுமூசுன்னு அழுதாச் சரியா?//

    அதைத்தான் நானும் கேட்கறேன். சொல்ல மாட்டேங்கறாரே. இளா சொல்லு இளா.

    ReplyDelete
  137. //ஹி ஹி அந்த படம் வரதுக்கு முன்னாடியே Raamcm'ன்னு ஐடி கிரியேட் பண்ணியாச்சு....//

    நான் மட்டும் அதைப் பார்த்து வெச்சுக்கிட்டீங்கன்னா சொன்னேன். அதைப் பார்த்தேன், உங்க ஞாபகம் வந்தது. அட நம்ம இராமே பொங்கலுக்கு வீடு தேடி வந்தாரேன்னு சந்தோஷப்பட்டேன். அம்புட்டுதான்.

    ReplyDelete
  138. //எல்லா ஊர் மொழியிலேயும் கலக்குரீங்களே, எங்க ஊர் பாஷையிலே எழுதுங்க பார்ப்போம்?//

    அடடா எனக்கு அரபி எல்லாம் தெரியாதே. அப்படித் தெரிஞ்சாலும் எழுதினா நிறையா மக்களுக்கு புரியாதே. என்ன செய்ய?

    //(எங்க ஊர் எதுன்னு தேடி நம்ம பதிவுக்கு ஒரு நாலு ஹிட் வராதா?)//

    இந்த மாதிரி சும்ப கேள்விக்கெல்லாம் ஹிட் வருமாய்யா?

    ReplyDelete
  139. //past tense இல்லை.. present and Maybe future tense:-((((((((((((//

    அட அட அடா! இந்த நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. ஒரு மூணு பதிவுக்கு 30 பின்னூட்டம் வந்திருச்சாம் அலட்டல் தாங்கலடா சாமி. :))

    ReplyDelete
  140. //அட அட அடா! இந்த நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. ஒரு மூணு பதிவுக்கு 30 பின்னூட்டம் வந்திருச்சாம் அலட்டல் தாங்கலடா சாமி. :)) //

    வருத்தப்பட்டு எழுதறதைக்கூட அலட்டல் என்று திரிக்கிறீர்கள் - அதன்மூலம் இன்னொரு பின்னூட்டம் வரும் என்ற கயமை உள்ளம்தானே காரணம்?

    ReplyDelete
  141. //நான் மட்டும் அதைப் பார்த்து வெச்சுக்கிட்டீங்கன்னா சொன்னேன். அதைப் பார்த்தேன்,//

    ஓ நானாந்தான் நாறிட்டோனோ??? :(

    // உங்க ஞாபகம் வந்தது. அட நம்ம இராமே பொங்கலுக்கு வீடு தேடி வந்தாரேன்னு சந்தோஷப்பட்டேன். அம்புட்டுதான். //

    படத்தே பார்த்த்தும் என்னை ஞாபகப்படுத்தி இருக்கீங்க பாருங்க, நீங்க ரொம்ப நல்லவருங்க....

    திங்கக்கிழமை எங்கூருலே ஜிகர்தண்டா குடிக்கிறப்போ உங்க ஞாபகம் வந்துச்சு, காதல் படப்புகழ் ஜிகர்தண்டா காரர்கிட்டே அனுமதி வாங்கி அது எப்பிடி செய்யுறதுன்னு கேட்டு சொல்லுறேன், அதை விக்கிப்பசங்க'திலே சொல்லிருங்க.. :)

    ReplyDelete
  142. //ஓ நானாந்தான் நாறிட்டோனோ??? :(//

    இன்னும் என்ன பேச்சு? அதெல்லாம் அப்படியே ஜெண்டில கண்டுக்காம விட்டுட்டு அடுத்த மேட்டர பார்த்து போகணும். அதை விட்டுட்டு நீயே போஸ்டர் அடிச்சி சொ.செ.சூ வெச்சுக்கிட்டா நான் என்ன பண்ணறது?

    //படத்தே பார்த்த்தும் என்னை ஞாபகப்படுத்தி இருக்கீங்க பாருங்க, நீங்க ரொம்ப நல்லவருங்க....//

    எப்பவும் உங்க நெனப்புதான் ராசாக்களா!

    //திங்கக்கிழமை எங்கூருலே ஜிகர்தண்டா குடிக்கிறப்போ உங்க ஞாபகம் வந்துச்சு,//

    நான் ஒண்ணு சொன்னா உடனே நீ ஒண்ணு சொல்லணுமா? இந்த மருதகாரய்ங்க செய்யுற ஏட்டிக்குப் போட்டி இருக்கே, தாங்கலைடா சாமி.

    //காதல் படப்புகழ் ஜிகர்தண்டா காரர்கிட்டே அனுமதி வாங்கி அது எப்பிடி செய்யுறதுன்னு கேட்டு சொல்லுறேன், அதை விக்கிப்பசங்க'திலே சொல்லிருங்க.. :)

    ஹலோ, யாருக்கிட்ட அனுமதி வாங்கணும்? இந்த வலையுலகின் ஜிகர்தண்டா ஓனர் யாருன்னு தெரியுமில்ல. தன்னிகரில்லாத் தலைவன், கவிப்பூ கண்ட காவியத் தலைவன், அண்ணன் கால்கரியாருக்கே அது சொந்தம். அது புரியாம நீ எதனாச் செய்ய போயி வம்பை விலை குடுத்து வாங்காதே. சாக்கிரதை.

    ReplyDelete
  143. //வருத்தப்பட்டு எழுதறதைக்கூட அலட்டல் என்று திரிக்கிறீர்கள் - அதன்மூலம் இன்னொரு பின்னூட்டம் வரும் என்ற கயமை உள்ளம்தானே காரணம்?//

    யப்பா சாமி. என்ன இது ஆளாளுக்கு திரிக்கிறீர்கள் அப்படின்னு எழுதறீங்க. படிச்சாலே பயமா இருக்கு. அந்த க்ரிஷ் அப்பா இப்படித்தான் என்னமோ தொடையில் திரிக்கப் போயி அடிவாங்கி மண்டையில் கட்டு எல்லாம் போட்டு இருக்காரு. இப்போ என்னை எதுக்கு இழுக்கறீங்க.

    ReplyDelete
  144. //அந்த க்ரிஷ் அப்பா இப்படித்தான் என்னமோ தொடையில் திரிக்கப் போயி அடிவாங்கி மண்டையில் கட்டு எல்லாம் போட்டு இருக்காரு.//

    அந்த ஆளை நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா? மறக்க விட மாட்டேங்றீங்களே?

    நான் திரித்தல் என்று சொன்னது அழுகையை அலட்டல் என்று ஊடகப் பொய்ப்பிரசாரம் செய்யும் இலவசக்கொத்தனாரின் வன்முறையை எதிர்த்து.

    ReplyDelete
  145. அடடே கொத்ஸ் ஒரு வருஷமாதான் ஃபீல்டுல இருக்காரா? அதுக்குள்ளயா இம்புட்டு வெளையாட்டு.. சும்மா சொல்லப்படாது.. செம ரகளை & விஷயம்.

    வாழ்த்துக்கள்..

    உங்களுக்கு கொத்ஸ் அப்டின்னு பெயரைச் சுருக்கின மனுஷன் யாருங்க? நல்லாவே செஞ்சிருக்காரே..! யாரோ ஒரு 'பயங்கரமான' ஆளா தான் இருக்கணும்.. இல்லீங்க... நல்ல 'புத்திசாலிங்க' அவரு..! இல்ல..? (இல்லைன்னு சொல்லீராதீங்க, ப்ளீஸ்!!)

    ReplyDelete
  146. வாழ்த்துக்கள் கொத்தனார்
    உண்மையில் பொங்கல் போனஸ்தான்
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  147. //அந்த ஆளை நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா? மறக்க விட மாட்டேங்றீங்களே?//


    நிம்மதியா இருக்க விடறதா?

    அதான் அந்த ஆளை மண்டையைப் போட வெச்சு, பாலுல்லாம் கூட ஊத்திட்டாரே நம்ம கோவியார்!

    இப்ப புள்ளாண்டானுக்கு அடுத்த கல்யாணம் பண்ணப்போறதாவும், அவா ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டதாவும் வேற பேச்சு!

    இருக்கற பிரச்சினைல, நீ வேற ஏன் இன்னொரு பிரச்சினையைக் கேளப்பறேன்னு கேட்டுட்டானாம்!

    அவ்ளோதான்! பொட்டியத் துக்கிண்டு 'நீயே கட்டிண்டு அழு உன் அம்மாவை'ன்னு பொறப்பட்டு போயாச்சு!

    :))

    :)

    ReplyDelete
  148. //நான் திரித்தல் என்று சொன்னது அழுகையை அலட்டல் என்று ஊடகப் பொய்ப்பிரசாரம் செய்யும் இலவசக்கொத்தனாரின் வன்முறையை எதிர்த்து.//

    என்ன செய்யறது!
    பெனாத்தலார் அழுதாலும் அலட்டல் மாதிரி இருக்கு!
    அலட்டினாலும், அழற மாதிரி இருக்கு!

    அப்படீன்னு கொத்ஸ் சொல்றாரு போல!
    :)

    வன்முறைக்கு எதிரா குரல் கொடுப்போம்!

    ReplyDelete
  149. //பின்னூட்டத்திலே நூறு 200னு எகிறினாலும் டீசண்டா படிக்கும்படியா இருக்கும் இடம் -ரெண்டாவது கொத்தனார்தான். முதல் யாருன்னு கேளுங்க? //

    கொத்ஸ், இது புரியலையா உங்களுக்கு ? )))

    // Pinootta Management இருக்கே. ரொம்ப கஷ்டமான வேலைங்க. நம்ம பெனாத்தலாரைக் கேளுங்க, எம்புட்டு கஷ்டப்பட்டாருன்னு.//

    past tense இல்லை.. present and Maybe future tense:-(((((((((((( / //


    ))))))))))))))))

    ReplyDelete
  150. //கொத்ஸ், இது புரியலையா உங்களுக்கு ? )))//


    கொத்ஸைத் தவிர மிச்ச எல்லாரும்!!
    :)))))))))))))))))!!!

    ReplyDelete
  151. //அடடே கொத்ஸ் ஒரு வருஷமாதான் ஃபீல்டுல இருக்காரா? அதுக்குள்ளயா இம்புட்டு வெளையாட்டு.. சும்மா சொல்லப்படாது.. செம ரகளை & விஷயம்.//
    ஹிஹிஹி

    //வாழ்த்துக்கள்..// - சரி உங்க விருப்பம் என்னன்னு தெரியுது.

    //உங்களுக்கு கொத்ஸ் அப்டின்னு பெயரைச் சுருக்கின மனுஷன் யாருங்க?// அது ஒரு மருத பார்ட்டிங்க. நீங்க சொன்னா மாதிரி பயங்கரமான ஆளுதான். என்னாத்துக்கு இப்படி சுத்தி வளைச்சுக்கிட்டு - Let us hit the nail on its head! :))

    ReplyDelete
  152. //வாழ்த்துக்கள் கொத்தனார்
    உண்மையில் பொங்கல் போனஸ்தான்
    நல்வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் வாழ்த்துக்குக்களுக்கும் நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  153. //அதான் அந்த ஆளை மண்டையைப் போட வெச்சு, பாலுல்லாம் கூட ஊத்திட்டாரே நம்ம கோவியார்!//

    பின்ன என்னங்க? ஆளாளுக்கு அவரைப் பந்தாடுனாங்க. இவருதான் பாவம் அப்படின்னு பார்ஸல் பண்ணிட்டாரு. :)))

    ReplyDelete
  154. //என்ன செய்யறது!
    பெனாத்தலார் அழுதாலும் அலட்டல் மாதிரி இருக்கு!
    அலட்டினாலும், அழற மாதிரி இருக்கு!

    அப்படீன்னு கொத்ஸ் சொல்றாரு போல!
    :)//

    உங்களுக்கு வேணுமுங்கறதைச் சொல்லிட்டு கீழ என் பேரா? நடக்கட்டும் நடக்கட்டும்.

    //வன்முறைக்கு எதிரா குரல் கொடுப்போம்!//

    ஆமாம் வன்முறைக்கு எதிரா எல்லாருமா சேர்ந்து குரல் கொடுப்போம்.

    ReplyDelete
  155. //கொத்ஸ், இது புரியலையா உங்களுக்கு ? ))) ///

    எனக்குத் தெரிஞ்சதைத்தான் சொல்லிடேனே. உங்க ஐடியா வேற மாதிரி இருந்துதுனா டக்குன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  156. //கொத்ஸைத் தவிர மிச்ச எல்லாரும்!!
    :)))))))))))))))))!!!//

    அதைத்தான் நாங்க குட்டிக் கதை மாதிரி சொல்லிட்டு அப்படி ஜெண்டில்மேன் மாதிரி விட்டுட்டோமில்ல. என்ன இது சிறுபிள்ளைத்தனமா? இப்படியே போச்சு, அப்புறம் அழுதுருவேன். ஆமா!

    ReplyDelete
  157. //வாழ்த்துக்குக்களுக்கும்// - வாழ்த்துகளா வாழ்த்துக்களாங்கிற பிரச்சினையே முடியல.. இதென்ன புதுசா?

    ReplyDelete
  158. சேது,

    இது எல்லாம் கண்ணுல பட்டுடுமே. இட் இஸ் தி ஸ்பெல்லிங் மிஷ்டேக். ப்ளீஸ் எச்சூஸ் மி. :))

    ReplyDelete
  159. ஏங்க கொத்ஸ்,
    உங்க வழியை நானும் பின்பற்றலாமாவென பார்க்கிறென். என்ன, நம்ம சுரேஷ் பாடுதான் பாவம். எனக்கு முதல் பின்னூட்டம் போட்ட புண்ணியவானுக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டாமேவென பார்க்கிறேன். நல்லதா சொல்றதுக்கு (அப்படித்தான் சொல்லுவார் அப்டிங்கிற நம்பிக்கை!) ஒரு நாலு பாயிண்டாவது வேண்டாமா அவருக்கு!

    ReplyDelete
  160. அப்பாடா.. ரெண்டு மூனு தரம் பின்னூட்டம் போடவந்து பின்னூட்டப் பெட்டியே திறக்க முடியாம போய்ட்டு வந்துருக்கேன்.

    வாழ்த்துகள் இ.கொ.. ஜி.ராவுக்கும் சேர்த்துத்தான்..

    இனி அவருக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்னு நினைக்கேன்.. அதாவது அப்ரைசல் பண்றதுக்கு:)

    ReplyDelete
  161. வந்தேன் வந்தேன்!

    ReplyDelete
  162. மீண்டும் நானே வந்தேன்!

    ReplyDelete
  163. //ஏங்க கொத்ஸ்,
    உங்க வழியை நானும் பின்பற்றலாமாவென பார்க்கிறென். என்ன, நம்ம சுரேஷ் பாடுதான் பாவம். //

    நீங்களுமா? நடத்துங்க. எனக்கு என்ன காப்பிரைட்டா இருக்கு. அவர் பாடுதானே கஷ்டம் நமக்கென்னா. எஞ்சாய்!

    ReplyDelete
  164. அப்பாடா.. ரெண்டு மூனு தரம் பின்னூட்டம் போடவந்து பின்னூட்டப் பெட்டியே திறக்க முடியாம போய்ட்டு வந்துருக்கேன்.//

    ஆஹா. ஒரு 150 பின்னூட்டத்துக்கே பெட்டி திறக்கலையா? இது நம்மளை பிடிக்காதவர்களின் சதிதான். இதனைக் கண்டு பொங்கி எழுங்கள் நண்பர்களே!

    //வாழ்த்துகள் இ.கொ.. ஜி.ராவுக்கும் சேர்த்துத்தான்..//

    நன்றி டி.பி.ஆர்.

    //இனி அவருக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்னு நினைக்கேன்.. அதாவது அப்ரைசல் பண்றதுக்கு:)//

    அதுக்கு அப்போ ஒரு டீல் போட்டு கமிஷன் வாங்கிக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  165. //இராமநாதன் said...

    வந்தேன் வந்தேன்! //

    யாருங்க இது? எங்கயோ பார்த்த மாதிர் இருக்கே.... :)

    ReplyDelete
  166. //இராமநாதன் said...

    மீண்டும் நானே வந்தேன்! //

    இப்போதான் வறீங்க இதுல என்ன மீண்டும் வந்தேன். ஒரு வேளை மீண்டு வந்தேன் அப்படின்னு எழுத வந்தீங்களா? யாருக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சீங்க இப்போ மீண்டு வர? விளக்கமா சொல்லுங்க. :)

    ReplyDelete
  167. பதிவு தொடங்கின முதலாமாண்டு நினைவஞ்சலி வித்தியாசமா இருக்கு!

    ReplyDelete
  168. ஜிராவோட elegyஉம் அருமை!

    ReplyDelete
  169. மீண்டு மீண்டும் வந்தேன் கொத்ஸ்!

    பின்ன சேர்ந்து ஆடிய ஆட்டமென்ன... ரசித்த கூட்டமென்ன. ஆனா கடைசியில ஒரு அழைப்பிதழ்கூட இல்லை (தனிமடலாவது அனுப்பிச்சீரா???)

    ReplyDelete
  170. //பதிவு தொடங்கின முதலாமாண்டு நினைவஞ்சலி வித்தியாசமா இருக்கு!//

    என்னாது அஞ்சலியா? என்னவோய் இப்படி அட்டகாசம் பண்ணறீரு? அனிவர்சரி கொண்டாடலாமுன்னு பார்த்தா திவச மந்திரம் சொல்லறீரு?

    ReplyDelete
  171. //ஜிராவோட elegyஉம் அருமை!//

    அது சரி, அவரு Laminate பண்ணி வெச்சுக்குங்கன்னு சொல்லறது உமக்கு Lamenting மாதிரி தெரியுதா?

    என்ன வைத்தியரே, ஒரு Dark Moodல இருக்கிற மாதிரி தெரியுது. என்ன மேட்டர்?

    ReplyDelete
  172. //பின்ன சேர்ந்து ஆடிய ஆட்டமென்ன... ரசித்த கூட்டமென்ன. ஆனா கடைசியில ஒரு அழைப்பிதழ்கூட இல்லை (தனிமடலாவது அனுப்பிச்சீரா???)//

    அதான் நீர் தனிமடல் பாக்கற வழக்கத்தை விட்டொழிச்சுட்டீராமே.

    கொஞ்சம் பின்னூட்டம் எல்லாம் படியும். உம்மைப் பத்தி எவ்வளவு பெருமையா பேசி இருக்கேன்னு தெரியும்.

    நீர்தான் இந்தியா வந்து அம்மா சாப்பட்டுல கொழுப்பேறி எங்க பக்கம் திரும்பாம இருக்கீரு.

    ReplyDelete
  173. //இலவசக்கொத்தனார் said...

    //கொத்ஸ்,
    நேத்தே அடிச்சி ஆடனும்னு பார்த்தது... எவனோ கண்ணு வெச்சிட்டான்... இங்க எனக்கு அநியாயத்துக்கு ஆணி புடுங்க சொல்றானுங்க :-(//

    என்ன அநியாயம் இது? தனி ஒரு மனிதனை ஆணி புடுங்கச் சொன்னால் இந்த ஜகத்தினை எரித்திடுவோம் எனச் சொன்ன ஆளை எங்கே? எனக்கு வர கோவத்துக்கு..... //

    கொத்ஸ்,
    உங்ககிட்ட சொன்னாலும் சொன்னேன்... இங்க காலைல 4 மணி வரைக்கும் ஆணி புடுங்கற நிலைமைக்கு ஆளாயிட்டேன்...

    ஏன் இந்த கொல வெறினே தெரியல...
    இப்படியும் ஒரு வாரம்ல சரியாயிடும்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  174. //இலவசக்கொத்தனார் said...

    //இருந்தாலும் விட்டுடுவோமா????

    நம்மல யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. சரிதானே??? ;)//

    அதானே. உங்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியுமா? அப்படி எல்லாம் முடிஞ்சிருந்தா உம்மை தெலுங்கு படம் பாக்க விடுவோமா? :)) //

    கொத்ஸ்,
    தெலுகு படம்ல ஒரு முக்கியமான விஷயமிருக்கு.. எதுக்கும் ஃபீல் பண்ணவே மாட்டானுங்க, ஹீரோயின் நல்லா இருப்பாங்க. (அங்க வயசானவுடனே நம்ம தமிழ்க்கு வந்துடுவாங்க... )

    அப்பறம் அந்த படமெல்லாம் பார்த்தா எந்த கலர்ல வேணாலும் ட்ரெஸ் பண்ணலாம் :-) (நமக்கு கூச்சமே வராது...)

    இன்னும் நிறைய இருக்கு...

    ReplyDelete
  175. //இலவசக்கொத்தனார் said...

    //உங்க பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?//

    என்னங்க இப்படி ஒரு வழக்கமான கேள்வி. சரி முதல்ல வழக்கமான பதிலையே சொல்லிருவோம்.

    என் கண்களில் எந்த கண்ணு உசத்தின்னு கேட்டா என்ன சொல்லறது? நம்ம பசங்கள்ள எந்த பையன் செல்லமுன்னு கேட்டா என்னத்த சொல்ல? நம்ம பொண்டாட்டிங்கள்ள எந்த பொண்டாட்டி.... அடப்பாவிங்களா என்னவெல்லாம் சொல்ல வைக்கறீங்க. அந்த லாஸ்ட் ஸ்டேட்மெண்ட் கேன்ஸல்!

    சரி, இப்போ உண்மையான பதில். எழுதுன பதிவுங்கள்ள எல்லாம் நான் எனக்கு தோணும் பொழுது எழுதுனதை விட நம்மளை மதிச்சி எழுதச் சொல்லி சொன்னாங்க பாருங்க நம்ம சங்க மக்கள், அவங்களுக்காக எழுதுன பதிவுங்கதான் நம்ம பேவரைட். அதுவும் வாரம் ஒண்ணுன்னு கெடு வெச்சி வாங்குனாங்க பாருங்க. நம்மால அந்த மாதிரி எழுத முடிஞ்சுதுன்னு தெரிய வந்ததே அப்பத்தேன். அதுனாலேயுந்தான் இந்த பதிவுங்க நம்ம பேவரைட். //

    கொத்ஸ்,
    100 போடனும்னா அவசரத்துக்கு என்ன கேக்கறதுனே புரியல... சரி ஏதாவது கேட்டா மக்களுக்கும் சந்தோஷமா படிப்பாங்களேனு தான் இந்த கேள்வி :-)

    அதுவும் இல்லாம இது ஸ்பெஷல் பதிவு இல்லையா?

    ReplyDelete
  176. //இலவசக்கொத்தனார் said...

    //பதிவு எழுதறது கஷ்டமா இல்லை பின்னூட்டத்துக்கு பதில் சொல்றது கஷ்டமா???//

    இது ரொம்ப சுலபமான கேள்விங்க. பதிவுல நாம என்ன கதை எழுதறோமா இல்லை உங்களை மாதிரி கொல்டி என்ற பெயரில் சுயசரிதையா? சும்மா அங்க இங்க படிக்கறதை கட் பேஸ்ட் பண்ணினா ஆச்சு வேலை.
    //
    கொல்ட்டி சுய சரிதை எல்லாம் இல்லை... ஏன் இப்படி எதையாவது கிளப்பி விடறீங்க. நம்ம கதை எல்லாமே கதை தான் :-)

    //
    ஆனா இந்த PM இருக்கே. அதாவது Project Management இல்லைங்க, Pinootta Management இருக்கே. ரொம்ப கஷ்டமான வேலைங்க. நம்ம பெனாத்தலாரைக் கேளுங்க, எம்புட்டு கஷ்டப்பட்டாருன்னு.

    அதுவும் வரவங்க என்னென்ன கேட்கறாங்க? எல்லாத்துக்கும் அடுத்த முறை வரா மாதிரி பதில் சொல்லறதுக்குள்ள தாவு தீந்து போகுதய்யா. //

    இதுல எங்க குருவே நீங்கதான்...
    இதுல ஒரு சில சமயம் திட்டி வர பின்னூட்டத்துக்கும் சிரிச்சிக்கிட்டே பதில் சொல்லனும். உள்குத்து பின்னூட்டத்தை சரியா புரிஞ்சிக்கனும்...

    ஆனா உங்களோட வழிகாட்டல்ல ஒரு வழியா நாங்க எல்லாம் அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கோம் :-)

    ReplyDelete
  177. //இலவசக்கொத்தனார் said...

    //நீங்க இருக்குற ஏரியால பனி பெய்ய ஆரம்பிச்சிடுச்சா???//

    இன்னும் இல்லைய்யா. இளையவர் மனசு நொந்து போயி இருக்காரு. நாங்க இன்னும் இளவேனிற் மேற்சட்டையோடதான் வெளிய போறோமுன்னா பார்த்துக்குங்களேன். எல்லாம் நான் Snow Shovel வாங்குன நேரம்! //

    இங்கயும் அதே கதை தான்...
    என் ரூமேட் நான் பதிவு போட்ட நேரம் தான்னு சொல்லறான்...

    பனி இல்லை.. ஆனா குளிர் பின்னி பெடலெடுக்குது...

    ReplyDelete
  178. //இலவசக்கொத்தனார் said...

    //வெண்பா பாட்டு சொல்லி தர ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாதா?//

    அடப்பாவிங்களா! இம்புட்டு நாளா கரடி மாதிரி கத்தி இருக்கேனே. அதெல்லாம் காதுலையே விழலையாய்யா? கொஞ்சம் இங்க போயி பாருங்கப்பா, நம்ம வெண்பா வாத்தியும் சரி, நானும் சரி பதிவு பதிவா போட்டு இருக்கோமய்யா.

    அதையெல்லாம் படிச்சிட்டு அடுத்த வெண்பா பதிவுல வந்து விளையாடலை உனக்கு இருக்குடி! //

    புகையில் பலர்நெஞ்சு புண்ணா வதைவெம்
    புகையில் திரைப்படத்தில் பார்த்தேனே நம்சிம்
    புகையில் சிகரெட்டை, பாங்கென இதைநம்
    புகையில் வரும்நோய்தான் புற்று

    இந்த மாதிரி எல்லாம் சத்தியமா நமக்கு எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் வராது.. இது மத்தவங்களுக்கு தெரியனும்னு ஒரு அட்வர்டைஸ்மெண்ட் கேள்வி ;)

    ReplyDelete
  179. //இலவசக்கொத்தனார் said...

    //உங்க பதிவுல எனக்கு பயனளிச்சது கொத்து பரோட்டா பதிவுதான்...

    வாரத்துக்கு ஒரு தடவை செய்யறோம் :-)//

    அது நம்ம வீட்டுல கூட அடிக்கடி செய்யற மேட்டர்தான். வல்லியம்மா வேற அடுத்தது என்ன சமைக்கப் போறீங்கன்னு கேட்டாச்சு. அதனால விரைவில் அடுத்த சமையல் குறிப்பு போட வேண்டியதுதான். //

    அதே மாதிரி ரொம்ப சிம்பிளா ஏதாவது போடுங்க... நானும் முயற்சி செஞ்சி பாக்கறேன் :-)

    ReplyDelete
  180. //இலவசக்கொத்தனார் said...

    //எத்தனை போட்டேனு மறந்து போச்சி..
    இன்னும் 100 வந்திருக்காதுனு நினைக்கிறேன்...//

    வந்திருச்சய்யா வந்திருச்சு! //

    சரி.. இனி 200க்கு போவோம் :-)

    ReplyDelete
  181. //இலவசக்கொத்தனார் said...

    //இன்னைக்கு 100 அடிக்காம விடறதில்லைனு முடிவு பண்ணியாச்சு :-)
    //

    மொத்தமா 100ஆ அல்லது நீங்க ஆரம்பிச்ச இடத்துலேர்ந்து 100ஆ? இரண்டாவதுன்னா இன்னும் ரொம்ப தூரம் போகணும் சொல்லிட்டேன். ஆமா! //

    நான் ஆரம்பிச்ச இடத்துல இருந்து 100 போடனும்னு தான் ஆசை பட்டேன்.. இங்க அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் ஆணி இருக்கு வந்து புடுங்குனு சொல்லிட்டானுங்க :-(

    ReplyDelete
  182. //உண்மையைச் சொல்லறேன். நம்ம பதிவுல எல்லாம் சரக்கு கம்மி. ஆனா பின்னூட்ட விளையாட்டா இருந்தாலும் இது ஒரு பொழுது போக்குதான். ஒரு ரிலாக்சேஷனுக்குத்தான் இதெல்லாம்.
    //
    சரியா சொன்னீங்க...
    எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான் :-)

    //
    அனாவசியமா சண்டை போடறது இல்லை, தனி மனித தாக்குதல் இல்லை, நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு அடம் பிடிக்கறது இல்லை. இப்படியே இருந்துட்டு போறேன் விடுங்க.//
    ரிப்பீட்டூ...

    ReplyDelete
  183. வாழ்த்துகள் கொத்ஸ்.

    ReplyDelete
  184. //என்ன வைத்தியரே, ஒரு Dark Moodல இருக்கிற மாதிரி தெரியுது. என்ன மேட்டர்?//

    எல்லாம் காலம் செய்த கோலம்! எப்படி இருந்த என்னைய இப்படி மாத்திருச்சே! அடச்சே!

    ReplyDelete
  185. வானத்த பார்த்தேன்! பூமியப்பார்த்தேன்! அட பலநாள் இருந்தேன் அங்க! அந்த நிம்மதி...

    வேணாம் இப்போதைக்கு இது ஸ்டாப்!

    ReplyDelete
  186. //ஏற்கனவே நம்ம பையன் நல்ல பையன் வெட்டியை இந்த மாதிரி தெலுங்குக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு நிக்கறோம். இப்போ நீங்க என்ன இந்த செப்பு செப்பறீங்க.
    //
    கொத்ஸ்,
    அதெல்லாம் தாரை வார்க்கல...
    இந்தியா போனா தெலுகு படமெல்லாம் கட் :-)

    //
    அடுத்தது தெலுங்கு படத்துக்கு விமர்சனம் எழுதுனீங்க, அப்புறம் அழுதுருவேன். ஆமா.....//
    எல்லா படத்துக்கும் எழுதினா தானே தமிழ் படம் எவ்வளவு தரம்னு தெரியும்...

    இங்கிலிஷ் படம், ஸ்பானிஷ் படத்துக்கு மாஞ்சி மாஞ்சி தம்பியும், கப்பியும் விமர்சனம் எழுதறாங்க... அவுங்களை ஒண்ணும் சொல்லாதீங்க :-)

    ReplyDelete
  187. பேக் டு திவசம்!

    ReplyDelete
  188. //தமிழ்மணத்தின் "வாரியார்" அருமை நண்பர் கோ.இராகவனின் ஆக்கத்தோடு புதுமையாகத் தந்துள்ளீர்கள்//

    ரிப்பீட்டு...

    ஜிராவின் பட்டங்களையே ஒரு பதிவா போட்டுடலாம் போலிருக்கே!!!

    ReplyDelete
  189. கொத்ஸ்,
    உங்களுக்கு தெரிஞ்சி அதிக பின்னூட்டம் வாங்கின பதிவு எது???

    (அப்படியே லிங் கொடுங்க)

    ReplyDelete
  190. //அதுலேயும் இந்த படத்தைப் பாருங்கோ. இன்னிக்கு தினமலர்ல போட்டு இருக்கான். இந்த சேவாக் அம்பியை ஆட்டத்துலயே சேத்துக்கலை. ஆனா பணம் பண்ண மட்டும் சரியா ஆஜர் ஆயுட்டன். அதுலயும் அந்த அபிஷ்டு மொகத்துல சிரிப்ப பாத்தேளோ? எல்லாம் கலிகாலங்காணும். வேற என்ன?//

    இந்த சேவாக் எப்படி இவ்வளவு நாளா டீம்ல இருக்கானு தெரியல...

    ReplyDelete
  191. இங்க ஒருத்தன் ஆணி புடுங்க கூப்பிடறான்.. கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்...

    அதுக்குள்ள யாராவது வந்து 200 ஆக்கிடாதீங்கப்பூ... சீக்கிரம் வந்திடறேன்...

    ReplyDelete
  192. வெற்றிகரமான ஓராண்டு நிறைவுக்கு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  193. வந்துட்டேன்யா வந்துட்டேன்!!!!

    ReplyDelete
  194. இன்னும் 4 தானே...
    சுலபமா அடிச்சி ஆடலாம் :-)

    ReplyDelete
  195. என்னைக்காவது என்னடா இது இலவசகொத்தனார்னு பேர் வெச்சிருக்கோம் வேற பேர் வெச்சிருக்கலாமேனு தோனியிருக்கா???

    ReplyDelete
  196. ஏன்னா என்கிட்ட எல்லாரும் ஏன் புனை பேர் வெச்சி எழுதரனு கேக்கறாங்க...

    அதுலயும் வெட்டிப்பயல்னு சொன்னா சரியாத்தான் வெச்சிருக்கனு சொல்லி ஒரு நக்கல் சிரிப்பு வேற...

    உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது நடந்துருக்கா?

    ReplyDelete
  197. சரி இந்த பதிவுக்கு டார்கெட் என்ன???

    ReplyDelete
  198. மொய் வெச்சிக்கறேன் 201 :-)

    ReplyDelete
  199. சரி... 300ல நெக்ஸ்ட் மீட் பண்ணலாம் :-)

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!