Tuesday, February 14, 2006

ஏனிந்த சோதனை?

என்னடா இவன் வந்து பத்து பதிவு கூட போடலை அதுக்குள்ள ஒரு பதிவுக்கு 350+ பின்னூட்டம், இன்னுமொரு பதிவு 150+ பின்னூட்டம் வாங்கி ஓடுது. என்னடா இதுன்னு யார் யார் வயிறு எரிஞ்சாங்களோ தெரியல. அல்லது பிளாக்கரிலேயே இந்த அளவு பின்னூட்டம் வந்தது இல்லை. அதனால நம்ம பதிவு ஒரு Stress Testஆ போயி, அதுல பிளாக்கர் பெயில்லாச்சான்னு தெரியலை. :)

ஆனா நல்லா போயிகிட்டிருந்த பதிவுக்கு வந்ததய்யா சோதனை. திடீரென பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவருவது நின்று போயிற்று. பின்னர் இந்த பதிவிற்கு இருந்த தனிப்பக்கம் இயங்காமல் போயிற்று. இதனால் நம்மிடமிருந்த வெளியிடப்படாத பின்னூட்டங்கள் காணாமல் போயின.

நண்பர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பதிவை எடுத்துவிட்டு பல முறை மீள்பதிவுகள் போட வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் தண்ணி காட்டிவிட்டு இன்றுதான் ஒரு நிலமைக்கு வந்திருக்கிறது.

இதானால் அசௌகரியத்திற்கு ஆளான அனைவருக்கும் எனது வருத்தங்கள். இது எனது கட்டுப்பாட்டை மீறிய ஒரு விஷயம். ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனி இது போல் நடக்காமலிருக்க வேண்டிக்கொள்வோம்.

ஜெயஸ்ரீ, சதீஷ், மீட்டிங்கை கட் அடித்து வந்த தியாக், கைப்பு எல்லாம் நல்ல சூப்பரா பதில் போட்டுக்கிட்டு இருந்த நேரம் இந்த மாதிரி ஆகி போச்சு. அவங்க போட்ட எல்லா பின்னூட்டத்தையும் போட முடியாம போச்சு. மன்னிச்சுக்குங்க.

ஞான்ஸு, ஒருத்தரு சொன்னா மாதிரி 'அரிசி மாவால கோலம் கோலம் போடலாம், ஆனா கோல மாவால அரிசி போட முடியுமா?' அந்த மாதிரி கொத்தனாரால வீடு கட்டலாம் ஆனா பிளாக்கர் கட்ட முடியுமா? 'தண்ணில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி' அது மாதிரி பிளாக்கருல நாம ஆடினா ஜாலி ஆனா நம்ம பிளாக்கரே ஆடினா காலி. இதெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டேன்.

ஹரிஹரன்ஸ், நீங்கள் சொன்னது "இதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி?". அது சரிதான். நாம் யாவரும் நிலையில்லை என்று சொல்ல விரும்பிய ஆண்டவனின் திருவிளையாடல்தான் இது என்று நினைக்கத் தோன்றுகிறது. (ரொம்ப பக்திப் பதிவுகள் படிக்கிற எஃபெக்ட்டா?)

அடுத்த பதிவு ரீபஸ்கள் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா போன ஆட்டம் ஒரு திருப்தியை தரல. அதனால மீண்டும் ரீபஸ் வந்தா ஆச்சரியப்படாதீங்க. போன தடவை விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டுமே போட்ட விதம் ஓக்கேவா? உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.

இப்போ போன பதிவு புதிர்களோட விடைகள். எதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்க கருத்தையோ ஒரு பின்னூட்டமா தட்டி விடுங்க.

உலேரியி - உயிரிலே கலந்தது
ரோஜா தாமரை - இரு மலர்கள்
விளக்கு - பச்சை விளக்கு
மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
நியாயம் அன்பு - நீதிக்குப் பின் பாசம்
ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)மதுரை பொன் - பாண்டி நாட்டு தங்கம்
பிராமி ந் தாதி - வண்ணத் தமிழ் பாட்டு (செந்தமிழ்ப்பாட்டு இல்லைங்க)
ஏழ்மை - வறுமையின் நிறம் சிகப்பு
பருத்தி - செம்பருத்தி
ஒற்றை சிங்கம் - தனிக் காட்டு ராஜா
ரெண்டு டஜன் காரட் - சொக்கத் தங்கம்
போர்ட்டர் - சுமைதாங்கி / தூக்குத்தூக்கி
ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ் - த்ரீ ரோஸஸ்

19 comments:

said...

இப்போ பின்னூட்டம் சரியா வருதான்னு ஒரு சோதனை தான்.

said...

நான் புதிர்னு சொன்னது 3டி திருவிழா-5, கேலிகிராஃபி பதிவு இல்லை.

said...

//ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)
டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)//


கொத்தனாரே! எப்படினு சொல்லுங்க?

said...

கைப்பு,

இப்படி சொன்னா எப்படி? அதுக்கு உண்டான சுட்டியைப் போட வேண்டாமோ? விதிகளை சரியாகவே படிக்கறதில்லையா?

எனக்கு தெரியும். நான் வரேன். ஆனா மத்தவங்க?

said...

//எனக்கு தெரியும். நான் வரேன். ஆனா மத்தவங்க?//

சரி...சரி...நீங்கல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க. நான் சின்ன பையன்...இப்ப தானே வித்தை கத்துக்கறேன்.

3டி பதிவோட சுட்டி இதோ:
http://kaipullai.blogspot.com/2006/02/3-5_14.html

said...

மரியாதை என்கின்ற வார்த்தையின் முதல் எழுத்துதானே ம. அதனால் ம = மரியாதையின் முதல் = முதல் மரியாதை. ஓக்கேவா?

யோவ், உங்க ஊரு பக்கமெல்லாம் டாக்டருங்கயெல்லாம் என்ன செய்வாய்ங்க? இப்புடி கேக்க?

said...

// மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
இது இதயக்கோவில் இல்லையோ...

புதிர்-னு வெச்சா.. ரெண்டு நாளுக்குள்ள பதில் தெரியணும்.. இல்லேன்னா.. சுவாரசியம் போயிடுது...
ஆனாலும் நீங்க ரொம்ப இழுத்திட்டீங்க..
ப்ளாக்கருக்கே பொறுக்கல போல இருக்கு..
கொத்தனார்.. வீடு கட்டுறதோட இருங்க... தாஜ்மகால் கட்டப் பாக்காதீங்க.. :)))

இந்த அறிவார்ந்த போட்டிக்கு நன்றிகள்!!

said...

எங்கூர்ல காசு வாங்குவாங்க, மருந்து சீட்டு குடுப்பாங்க, ரொம்ப முத்துச்சுன்னா ஊசி போடுவாய்ங்க...வாழல்லாம் வைக்க மாட்டாய்ங்க! ஆனாலும் டாக்டர்னு கொடுத்து 'நான் வாழ வைப்பேன்'பதிலை எதிர்பார்க்கறது கொஞ்சம் ஓவர் தான்யா! தங்கத் தாரகை இதுக்கு பதில் சொன்னாங்களா? அவங்களாலேயே முடியல்லன்னா இது நீங்க மட்டும் தான் போட முடியும்.

said...

சீமாச்சு,

நம்ம போட்டி எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல போனதில்லை. பழசையெல்லாம் பாருங்க. பிளாக்கர் படுத்தினதுனாலதான் இந்த இழுப்பு. மீண்டும் மன்னிச்சுக்கோங்க.

நீங்க தாஜ்மஹால் கட்ட போகாதேன்னு சொல்லறீங்க. நம்ம அறிஞர் ஒருத்தர் தாஜ்மஹாலைக் கேளு அப்பத்தான் தலைக்கு ஒரு கூரையாவது கிடைக்கும் அப்படின்னு சொல்லறாரு. நான் என்ன செய்ய?

//// மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
இது இதயக்கோவில் இல்லையோ...//

இப்படியும் வெச்சுக்கலாம் ஆனா நான் எதிர்பார்த்தது அது இல்லையே. Quiz Master' decision is final என்ற போர்வையின் கீழ் பதுங்கிடட்டுமா? :)

said...

இதுக்கு முன்னாடி இங்கே போட்ட பின்னூட்டம் ரிஜிட்டடா?

said...

மன்னிச்சுக்குங்க கைப்பு போலி டோண்டு பதிவையும் உங்க 3டி படிவையும் பாத்து கிட்டு இதை மிஸ் பண்ணிட்டேன்.

வேற யாரும் அப்படி சொல்லலையே. ஒரு வேளை மத்தவங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இல்லையோ என்னவோ.

said...

அப்பிடியா? வேற யாராச்சும் சரியான பதில் சொன்னாங்களா இதுக்கு? தப்பா எடுத்துக்காதீங்க...தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் தான்!

said...

கௌசிகன் மட்டும் சொன்னாருங்க. அவரு முதல் மரியாதை மட்டும் சொல்லலை. ஆனா அதுக்கும் தலைமகன் அப்படின்னு ஒரு போடு போட்டார். இப்போதைக்கு அவர்தான் நம்பர் 1. ஆன அதிகம் பின்னூட்டம் போடாததால் அவருக்கு பட்டமெல்லாம் குடுக்கலை.

said...

DOCTOR

Nan vazhavaipen - na
engappa vazha...
Ippadi saga vachuttiyeppa.....

Aduththa thadava - oru kattu kattame - konjam karunai kattuppa... :-)))))))

THYAG

said...

Thanks for the answer!

said...

ஏங்க தியாக்,

15 புதிரில ஒண்ணு கஷ்டமா கேட்டா, அதுக்கு பேரு ஒரு காட்டு காட்டறதா? இப்போ இந்த டெக்னிகெல்லாம் தெரிஞ்சாச்சு இல்லா, அடுத்த வாட்டி சூப்பரா போடுவீங்க. கவலைப்படாதீங்க.

said...

சதீஷ்,
புதிரைப் போட்டவந்தான் விடையைப் போடனும். இதுக்கெல்லாம் போய் தாங்க்ஸ் அது இதுன்னு. இருந்தாலும் நீங்க பெருந்தன்மையா சொல்லறத ஏத்துக்கறதுதானே நம்ம பண்பாடு. ஹிஹி.

அடிக்கடி வந்து உங்க ஆதரவ காமிங்க. அதுதான் வேணும். ஓக்கேவா.

said...

Hi, a nice blog you have here. You will surely get an bookmark :) phentermine

said...

ரொம்ப நன்றிங்க.