இதுதான் எங்கள் விளம்பரம் - பாண்டி நாட்டு தங்கம்ஸ்.
விளம்பரம் என்றாலே, பாட்டும் ஆட்டமும் வேணும். அது துணிமணியா இருந்தாலும் சரி, பல்பொடியா இருந்தாலும் சரி. சினிமா விளம்பரம் அது இல்லாம முடியுமா? அதனால பாட்டு வேணும்ன்னு முடிவாச்சு.
தமிழ் தெரியாத குழந்தைகளும் ஆடுவது ரஜினி பாட்டுக்குதான். அதனால் அவர் பட விளம்பரத்தில் அவர் பாட்டு வருவதுதானே முறை. ரஜினிக்கு மிக பொருத்தமான பாட்டு என்று பார்த்தால், நம்ம வந்தேண்டா பால்காரன் பாட்டுதான். அதனால் அதையே கொஞ்சம் ரெடி பண்ணி, ரஜினி டான்ஸோட அனுப்பறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இப்போ பாட்டு. (பேக்கிரவுண்ட் இசைக்கு இங்க போய் கிளிக் பண்ணிக்கோங்க.)
வந்தேண்டா ஜுலாவிக்கு,
அட நான்
சிவாஜி பத்தி பாட போறேன்
புது பாட்டு கட்டி ஆட போறேன்
(வந்தேண்டா)
எங்களுக்கு ஷூட்டிங்குக்கு
நல்லதொரு இடம்வேணும் தம்பி
அதுக்காத்தான் ஜூலாவிக்கு
வந்தோமே உங்களையே நம்பி
(வந்தேண்டா )
நியூஸிலாந்து சுவிட்சர்லாந்து எல்லாமே போயிருக்கேன்
டூயட்டுக்கு தான்னாகுமப்பா
இங்லாந்தில் அயர்லாந்தில் ஷூட்டிங்கில் நானிருந்தா
கூட்டம்தான் சேருதப்பா
(நியூஸிலாந்து)
பாட்ஷா படம்தான் வரலாறு
படையப்பா சொல்றேன் நீ பாரு
சிவாஜி படத்தை எதிர் பாரு
க்ளைமேக்ஸ் சீன்தான் வெகுஜோரு
நீ அனுமதி இன்னும் கொடுக்கலையே
படபிடிப்பு இன்னும் முடிக்கலையே
(வந்தேண்டா)
தந்தனா தந்தனா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா
ஜூலாவில் லொக்கேஷன் எல்லாமே பாத்தாச்சு
ரொம்பவும்தான் சூப்பருங்க
பகலெல்லாம் பனியாச்சு, இரவெல்லாம் நிலவாச்சு
ஷூட்டிங்குக்கு சூப்பருங்க
(ஜூலாவில்)
டூயட் எல்லாம் நான் பாட
ஜூலா தேவதைங்க தேவைதானுங்க
சண்டை எல்லாம் நான் போட
உங்கூரு மலைங்க தோதாச்சுங்க
இப்போ வேணும் உங்க அனுமதிதான்
அதை தந்தா கொடுப்போம் வெகுமதிதான்
(வந்தேண்டா)
(வந்தேண்டா)
இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க? //
என்ன இவருதான் முடிவு பண்ணி சொல்லமாட்டாரு.
//என்ன இவருதான் முடிவு பண்ணி சொல்லமாட்டாரு. //
:-))
யோவ் அனானி,
என்ன நக்கலா? தொண்டர்களுக்கு தெரிஞ்சுதுனா என்ன ஆகும் தெரியுமா?
எதோ நிலா அக்கா சிரிச்சுட்டாங்களேன்னு சும்மா விடறேன். ஆங்..
Post a Comment