ரீபஸ் போடவேண்டாம் வேறு எதாவது எழுதுவோம் என்று நினைத்து எழுத உட்கார்ந்தேன். எல்லோரும் பக்தி சம்பந்தப்பட்டு எதாவது எழுதுகிறார்களே, நாமும் அதைப்போல செய்தாலென்ன என்று ஒரு நினைப்பு. அதெல்லாம் நமக்கு வருமா? அல்லது நமக்கு தெரிந்த புதிரையே போட்டுவிடலாமா என்று ஒரு தயக்கம். அதுதான் புதிரா? புனிதமா?
கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.
//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.
முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)
இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்
அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.
ஆவோ
கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.
//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.
முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)
இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்
அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.
ஆவோ
170 comments:
வழக்கம் போல சினிமா பட பெயர்கள்தான். கடைசி குறிப்பு உட்பட.
2. பகலில் ஒரு இரவு
6. ரயில் பயணங்களில்
7. சிகரம்
9. நீல வானம்
10 நெஞ்சுக்குள் நீ
ஜெயஸ்ரீ,
2,6,9 - சரி
7,10 - தவறு.
10க்கு நீங்க சொன்ன விடை பெயருல ஒரு படம் இருக்கா?
5. பாகப்பிரிவினை
10. ஆகா என்ன பொருத்தம்
8. வண்ண வண்ணப் பூக்கள் அல்லது நிறம் மாறாத பூக்கள்
ஜெயஸ்ரீ,
5,8 - சரி
10 - நம்பர் தப்பா போட்டுட்டீங்களோ?
3. திருடா திருடா
4. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
7. ஏணிப்படிகள்
இந்த பதிவு ஏன் '
அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள்' பகுதியில் வரவில்லை என்று தெரியவில்லையே. யாருக்கேனும் தெரிந்தால் உதவுங்களேன்.
ஜெயஸ்ரீ,
3, 7 - தவறு.
4 - சரி (நல்லாத்தானே இருந்தது?)
10. தெய்வத் திருமணங்கள்
12 ராஜராஜ சோழன்
ஜெயஸ்ரீ,
10,12 - இரண்டுமே தவறு.
ஜெயஸ்ரீ,
3- சரி.
விடாம புடிச்சுட்டீங்களே. :)
11. இதயத்தில் நீ
மற்றவை நாளை
1. ஒரு வீடு இரு வாசல்
4. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
7. ஏழுமலை
8. வண்ண வண்ணப் பூக்கள்
9. நீலவானம்
11. இதயத்தில் நீ
// இந்த பதிவு ஏன் '
அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள்' பகுதியில் வரவில்லை என்று தெரியவில்லையே. யாருக்கேனும் தெரிந்தால் உதவுங்களேன். //
இலவசம்...அதுக்குக் காரணம்...நீங்க இந்தப் பதிவை....ஏற்கனவே ஸ்டோர் பண்ணி வெச்சுக்கிட்டு அப்புறமா பப்ளிஷ் பண்ணீருப்பீங்க....
ஜெயஸ்ரீ,
11- சரிதான். :)
இப்போதான் formமுக்கு வறீங்க.
வாங்க இராகவன்
4,7,8,9,11 - சரி
1 - தவறு
சும்மா டோணி மாதிரி ஆரம்பிச்சு இருக்கீங்க. :)
//இலவசம்...அதுக்குக் காரணம்...நீங்க இந்தப் பதிவை....ஏற்கனவே ஸ்டோர் பண்ணி வெச்சுக்கிட்டு அப்புறமா பப்ளிஷ் பண்ணீருப்பீங்க....//
அட ஆமாங்க. அப்படி பண்ணக்கூடாதா? யாருமே சொல்லலையே. இனி நோட்பேடுல போட்டுக்கிட்டுதான் இங்க வரணுமா? தெரியாத போச்சே.
//மற்றவை நாளை//
ஏன் ஜெயஸ்ரீ இப்படி. சரி நாளை வரை காத்திருக்கேன். (அட இதுகூட படப்பெயர் மாதிரிதான் இருக்கு. :) )
// அட ஆமாங்க. அப்படி பண்ணக்கூடாதா? யாருமே சொல்லலையே. இனி நோட்பேடுல போட்டுக்கிட்டுதான் இங்க வரணுமா? தெரியாத போச்சே. //
அப்படிப் பண்ணலாம். ஆனா....போஸ்டிங்கோட டேட்...நீங்க ஸ்டோர் பண்ணுன டேட்டா எடுத்துக்கும்.
// வாங்க இராகவன்
4,7,8,9,11 - சரி
1 - தவறு //
ஒன்னு தப்பா...ம்ம்ம்ம்...இதுக்கு நெறைய கஷ்ட்டப்பட்டு யோசிச்சேன். மத்ததெல்லாம் பட்டு பட்டுன்னு எழுதினேன்.
// சும்மா டோணி மாதிரி ஆரம்பிச்சு இருக்கீங்க. :) //
நன்றி நன்றி எல்லாம் கிட்னிதான் காரணம். கி கி
புரிஞ்சது இராகவன். இனிமே பிளாக்கர் பக்கமே வராமல், நோட்பேடிலேயே சரியாக எழுதி வைத்துக் கொண்டு, நமக்கு என்றைக்கு வெளியிட வேண்டுமோ, அன்றைக்கு பிளாக்கரில் இட்டால் மட்டுமே தமிழ்மணத்தில் சரியாக வரும்.
தகவலுக்கு மிகவும் நன்றி.
பேசாமல், 'இன்று ஒரு தகவல்'ன்னு ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டியதுதானே. :)
இராகவன்,
//மத்ததெல்லாம் பட்டு பட்டுன்னு எழுதினேன்.// எப்பவுமே, natural gameதான் சரியா வரும். ரொம்பவெல்லாம் யோசிக்காதீங்க. நம்ம பதிவு ரொம்ப light reading.
இராகவன்,
//// சும்மா டோணி மாதிரி ஆரம்பிச்சு இருக்கீங்க. :) //
நன்றி நன்றி எல்லாம் கிட்னிதான் காரணம். கி கி//
புரியலையே. :|
வாங்க சதீஷ்,
4,9 - சரி. நமக்கு ஹிந்தி படமெல்லாம் தெரியாதுங்க. தமிழ்தான்.
1,2,7,8 - தவறு.
2 - கொஞ்சம் சரி பண்ணுனீங்கன்னா போதும்.
கொஞ்சம் அவசரப் படறீங்களோ?
சதீஷ்,
5 - சரியான விடை
சதீஷ்,
11 - சரி இல்லைங்க
5. பாகப் பிரிவினை
6. ரயில் பயணங்களில்
இராகவன்,
5,6 - இரண்டுமே சரி.
ஒரு படத்துல...கவுண்டமணி இதெல்லாம் எப்படிடா யோசிக்கிறன்னு கேப்பாரு...அதுக்கு செந்தில்...எல்லாம் கிட்னிதான் காரணமுன்னு சொல்வாரு. அதான்..
1.
2.பகலில் ஒரு இரவு
3.மலைக்கள்ளன்
4.அருணாச்சலம்,அண்ணாமலை
5.நீ பாதி நான்பாதி
6.ரயில் பயணங்களில்
7.சிகரம்
8.வண்ணப்பூக்கள்
9.நீல வானம்
10.
11.
12.பொன்னியின் செல்வன்
ஓ. அப்படியா?
இப்போ புதுசா வடிவேலு ஒரு படத்தில (இங்கிலிஷ்காரன்?) மண்டையை தட்டிக்கொண்டு 'பூரா கிரேய்ன் (grain)' அப்படின்னு சொல்லுவாரு. :)
மது அக்கா வாங்க.
2,6,9,12 - சரி
3,4,5,7 - தவறு
8 - முழுசா போடலை போலிருக்கே.
3.திருடா திருடா
4.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
மது அக்கா,
3- தவறு
4- சரி
10.காவியக் காதல்
11.இதயத்தில் நீ
இலவசக்கொத்தனார்
வேலைய விட்டு இங்க வந்து பதில் போடற வேலை செஞ்சிட்டிருக்கோமே.
க்ளூ வாவது கொடுக்கலாம்-ல
400 ஆச்சு போலிருக்கே 500 எப்ப???
8.வண்ணவண்ணப்பூக்கள்
மது அக்கா,
10 - தவறு
11 - சரி
மது அக்கா,
8 - சரி
அதான் க்ளூ இல்லாமலேயே சரியா போடறீங்களே. அது நாளக்குத்தான்.
ஆமா. அந்தப் பதிவு ஒரு மாதிரி 400 தாண்டிருச்சி. அதுல 500 எல்லாம் வேண்டாம்.
இது எப்படி ஓடுதுன்னு பார்ப்போம். எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே.
சதீஷ்
11 - ஏர்கனவே இந்த விடையை கேட்டீங்க. நானும் இல்லைன்னு சொல்லிட்டேனே.
//இலவசம்...அதுக்குக் காரணம்...நீங்க இந்தப் பதிவை....ஏற்கனவே ஸ்டோர் பண்ணி வெச்சுக்கிட்டு அப்புறமா பப்ளிஷ் பண்ணீருப்பீங்க....//
அட ஆமாங்க. அப்படி பண்ணக்கூடாதா? யாருமே சொல்லலையே. இனி நோட்பேடுல போட்டுக்கிட்டுதான் இங்க வரணுமா? தெரியாத போச்சே.//
இ.கொத்தனார், ராகவன்.
உங்க பதிவு பட்டியல்ல வராம போறதுக்கு லோக்கல் டிஸ்க்ல சேவ் பண்றது காரணம் இல்லை.
நான் எப்பவுமே வேர்ட்ல சேவ் பண்ணிட்டுத்தான் பப்ளிஷ் பண்ணுவேன். பப்ளிஷ் பண்ணதும் ஆர்க்கைவ் லிஸ்ட்லருக்கற பதிவோட லிங்க க்ளிக் பண்ணா உங்க பட்டை தெரியும். அப்புறம் அனுப்பு கிளிக் பண்ணா தமிழ்மணம் லிஸ்ட்ல வந்துரும்..
கொத்தனார். உங்க புதிர்ல பங்கு கொள்ளணும்னு ஆசைதான்.. ஆனா .. வயசான காலத்துல இதெல்லாம் தேவையான்னு... வேணாம் விட்றுங்க
சதீஷ்,
2. சரியான விடையிலிருந்து விலகி போறீங்க. கொஞ்சம் குறிப்பை பாருங்க.
சதீஷ்,
6 - சரி
7 - தவறு
7.இமயம்
ஜோசப் சார்,
இராகவன் சொன்னது லோக்கல் டிஸ்க்கில சேமிக்கறது பத்தி இல்லை. நேரடியாக பிளாக்கரிலே டிராப்டா சேமிச்சா இந்த பிரச்சனை வரும் அப்படின்னு சொல்லறார். நானும் அதைத்தான் செஞ்சதுனால அவர் சொல்லறது சரிதான்னு தோணுது.
என்ன ஆசையிருந்தும் போட மாட்டேங்கறீங்க? 'ஆசைக்கும்' உண்டோ அடைக்கும் தாள்?
மது அக்கா,
7 - சரியில்லை
சதீஷ்,
2. இல்லைங்க. நீங்க சொல்லற பேருல படம் இருக்கா என்ன?
சதீஷ்,
இப்போ நீங்க 4ன்னு போட்டது 8க்குன்னு நினைக்கறேன். ஆனா அதுவும் தவறான விடை.
எல்லாமே தப்புன்னு சொல்லறேனேன்னு ரொம்ப திட்டாதீங்க.
சதீஷ்,
இரவு சூரியன்
1991. direction by s.nathan
தகவலுக்கு நன்றி.
சதீஷ்
12 - சரியான விடை (அப்பா!)
அதை ஏங்க அவ்வளவு சந்தேகமா கேக்கறீங்க?
சதீஷ்
8 - இன்னும் சரியில்லை
இந்த பரபரப்பில் இப்பதிவு 50 பின்னூட்டங்களை எல்லாம் தாண்டி 100-ஐ நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டணி மாறாமல், தியாக மனப்பான்மையுடன் நம்மை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி. :)
சதீஷ்,
10 - இவ்வளவு யோசிக்கறீங்களே. இது எல்லாதுக்கும் சேர்த்தா மாதிரி ஒரு ஈசி வார்த்தை யோசிங்க.
சதீஷ்,
7 - கொஞ்சம் வேற மாதிரி எண்ணிப் பாருங்களேன்.
10.கோகுலத்தில் சீதை
இன்னும் எத்தனை சரியா எழுதணும்
சதீஷ்,
2 - சரியான விடை.
விடாக்கொண்டரா இருந்து முடிச்சுட்டீங்களே. வாழ்த்துக்கள்.
மது அக்கா,
10 - இல்லைங்க.
குறிப்பு இப்படி
10. சீதா இராமன் (அல்லது) இராதா கிருஷ்ணன்
அக்கா,
நீங்க சரியா போட்டது
2,4,6,8,9,11,12
போட வேண்டியது
1,3,5,7,10 மற்றும் கடைசிக் குறிப்பு.
1.டாடா பிர்லா
3.கொல்லிமலைத் திருடன்
சபாஷ் சதீஷ்
7 - சரியான விடை
(என் க்ளூ உதவியா இருந்ததா?)
அக்கா,
1,3 - இரண்டுமே சரியில்லையே.
பெரியவர் ஹரிஹரன்ஸ் மூளையை கசக்குற மாதிரி புதிர் போட சொன்னார். கோவம் வந்தா அவரை திட்டுங்க.
சதீஷ்
3 - தவறு
அய்யா கொத்தனாரே..."போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்" பதிப்பில், 400க்கும் மேலாக பின்னோட்டங்கள் வந்துட்டே..வாழ்த்துக்கள்.
சதீஷ், மன்னிக்கவும். உறங்கிவிட்டேன். அதனால் உடன் பதில் போட முடியவில்லை. இப்பொழுது மீண்டும்...
சதீஷ்,
தவறான பதில்களையும் போட வேண்டாம். அதுவே ம்ற்றவர்களுக்கு ஒரு க்ளுவாகிவிடுமே என்று நினைத்தேன். ஆனால் உங்கள் அன்பான மிரட்டலால் அவைகளை முதலில் போட்டு விட்டேன். சரியான விடைகளுக்கு மட்டும் இன்னும் சிறிது நேரம் வேண்டும்.
இந்த முறை எதுவும் மறைந்து போகாமலிருக்க வேண்டிக்கொள்கிறேன். நீங்களும் எனக்காக பிரார்த்தியுங்களேன்.
1. பணக்கரக் குடும்பம்
10. ஜோடிப் பொருத்தம்
சதீஷ்
8,3,11,1 - நான்குமே சரியில்லை. (அய்யோ இப்படி நாலு பதிவா போட வேண்டியதை ஒண்ணா போடறேனே)
வாங்க பெரியவரே,
வாழ்த்துகளுக்கு நன்றி. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே.
உங்க புது பதிவு (http://mahamosam.blogspot.com/2006/02/blog-post_114052037089166960.html) பார்த்தேன்.
உங்க பதிவு தமிழ்மணத்தில் வராதது ஏன்?ஏன்?ஏன்?
ஜெயஸ்ரீ,
சொன்னா மாதிரியே வந்துட்டீங்களே.
1 - சரிதான். (நல்ல குறிப்புதானே!)
10 - நீங்க போட்டதும் சரிதான். நான் நினைத்தது உங்கள் பதிலின் முதல் பாதி மட்டுமே.
ஜெயஸ்ரீ,
நீங்க போட வேண்டியது 7,12 மற்றும் கடைசி கடி குறிப்பு மட்டுமே.
சரி இது பதில் பின்னூட்டம்.
1. ஒரு வீடு இரு வாசல்
2. பகலில் ஓர் இரவு
3. தெரியலை.
4. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5. பாகப்பிரிவினை
6. ரயில் பயணங்களில்
7. ஏழுமலை
8. வண்ண வண்ணப் பூக்கள்
9. நீல வானம்
10. தெரியலை.
11. இதயத்தில் நீ?
12. பொன்னி இன் செல்வன்
பெனாத்தல் சுரேஷ்,
வாங்க வாங்க. அதிரடி ஆரம்பமா இருக்கே.
1,3,10 - சரியில்லை
2,4,5,6,7,8,9,11,12 - சரிதான்
அது ஏங்க அந்த கடைசி புதிரை யாருமே முயல மாட்டேங்கறீங்க?
இந்திய பகல் நேரத்தில் ரொம்ப ஆர்வமாய் கலந்துகிட்டாங்க. ஆனால் அமெரிக்க பகல் நேரத்தில் ஆட்களையே காணுமே.....
இதெல்லாம் என்னாபா? ஒண்ணுமே விளங்கலையே!
மக்களே!
ரஷ்ய FSB யின் புது டெக்னாலஜி மூலம் எல்லா ரீபஸ், டூபஸ்களுக்கும் விடை என் கையில் கிடைத்துவிட்டது. வேண்டுவோர் தனிமயிலில் தொடர்பு கொண்டால் டீல் பேசிக்கொள்ளலாம்!
நன்றி
வைத்தியரே,
விஷயம் தெரியுதோ இல்லையோ கரெக்ட் டயத்திற்கு வந்திடரீங்களே. அது எப்படி. பதிவில் போடாத சரியான பதில்களையும் சேர்த்து நீங்கள் போட்டதுதான் 100-வது பின்னூட்டம்.
வாழ்த்துக்கள்.
கொத்தனாரே,
விடைகளை வெளியிடக்கூடாதுன்னா நம்மளை தனியா கவனிச்சாகணும். சொல்லிட்டேன்!
FSB எல்லாம் உபயோகப்படுத்தி KBC கேள்வி பதிலெல்லாம் வாங்கினா பரவாயில்லை. நம்ம புதிர் விடையெல்லாம் போயி அவுட்டாக்கிட்டு. சிறுபிள்ளைத்தனமா இல்ல இருக்கு.
அதான் 80 பின்னூட்டம் வரும்போதே 100ன்னு சொல்லி அவார்ட் குடுத்தாச்சே. வேற என்ன வேணும்?
நீங்க காசு பணமெல்லாம் தாண்டி பொதுப்பாட்டு லெவெலில இருக்கீங்க. உங்களுக்கு போய் அதெல்லாம்மா குடுத்து அசிங்கப்படுத்தறது... :)
7. ஏழுமலை
ஜெயஸ்ரீ,
7 - சரியான விடை
செல்பொன்னிவன் - மணிபிரவாளம்
இதை போட்டாச்சா? இல்லையே?
அப்புறம் இது - ஆவோ :)
லீவுக்கு போன கௌசிகன் ரிடர்ன் வந்துட்டாரே. சும்மா அமர்க்களமா சாதா பதில், மசாலா பதில் அப்படின்னு ஆரம்பமே அமர்க்களம்.
கேள்வி 1க்கு நீங்க போட்ட ரெண்டுமே சரிதான்.
வாங்கய்யா வாங்க.
செல்பொன்னிவன் - மணிபிரவாளம்
பொன்னிin செல்வன்
வேண்டும் / வேண்டாம் என்றுதானே ஜெயஸ்ரீ இதற்கு விடை எழுதவில்லை?
:-)))
வாங்க பாலராஜன்கீதா,
12-க்கு நீங்க போட்ட விடை சரிதான். ஜெயஸ்ரீ ஏன் போடலைன்னு தெரியலை. ஒரு வேளை சுத்தமான தமிழ் இல்லையென்பதாலோ?
நீங்க மத்ததெல்லாமும் போடலாமே.
கௌசிகன்,
2 - சரியான விடை. இதுக்கு ஸ்பெஷல் மசாலா எல்லாம் இல்லையா? :)
கௌசிகன்,
4,6 - சரியான விடை
ஆவோ
இந்திரா
:-(((
கௌசிகன்,
7 - சரியான விடை. நான் ரொம்ப கஷ்டப்பட்டு, ரசித்து செஞ்ச ஒரு நகாசு வேலையை யாருமே கண்டுக்கலையேன்னு நினைச்சேன்.
நீங்க புடுச்சுட்டீங்க. சபாஷ்.
பாலராஜன்கீதா,
அந்த கடைசி குறிப்பை முதல் ஆளா கண்டு பிடிச்சுட்டீங்களே. வாழ்த்துக்கள்.
ஆனா :((((( இப்படி போட்டுட்டீங்களே. அவ்வளவு மோசமா?
கௌசிகன்,
9,11 - இரண்டும் சரிதான்.
மீதியையும் போடுங்க.
7ல் என்ன நகாசு வேலை? world's 7 highest peaks in the decreasing order of their heights??
ஜெயஸ்ரீ,
அதுவும்தான். சொன்ன உடனே நீங்களும் உங்க பங்குக்கு ஒண்ணை சொல்லிட்டீங்க. ஆனா கௌசிகன் சொன்னது வேற.
அதெல்லாம் சரி. மீதி இரண்டு விடை என்ன ஆச்சு? நீங்க போடாத இரண்டை மட்டும் பாலராஜன்கீதா வந்து போட்டுட்டாரே.
ஏன் ஜெயஸ்ரீ இப்படி. சரி நாளை வரை காத்திருக்கேன். (அட இதுகூட படப்பெயர் மாதிரிதான் இருக்கு. :) )
விடியும்வரை காத்திரு
:-)))
ஏங்க பாலராஜன்கீதா,
//ஏன் ஜெயஸ்ரீ இப்படி. சரி நாளை வரை காத்திருக்கேன். (அட இதுகூட படப்பெயர் மாதிரிதான் இருக்கு. :) )
விடியும்வரை காத்திரு //
ஒரு பேச்சுக்கு சொன்னா இதையெல்லாமா solve பண்ணறது. என்னவோ போங்க. நல்லா இருந்தா சரி.
ஆமாம். அந்த ஆவோ க்ளூ அவ்வளவு மோசமான்னு கேட்டேனே. பதிலே சொல்லலை?
கௌசிகன்,
5 - சரியான விடை. நல்ல க்ளூ என்று பாராட்டியதற்கு நன்றி.
1 À½ì¸¡Ãì ÌÎõÀõ
2 À¸Ä¢ø ´Õ þÃ×
3 ¾¢Õ¼¡ ¾¢Õ¼¡
4 º¢¾õÀÃò¾¢ø ´Õ «ôÀ¡º¡Á¢
5
6
7 ²ØÁ¨Ä (¿ýÈ¢ ¦ƒÂŠÃ£ «Å÷¸ÙìÌ. «¼, §¸ûÅ¢ ±ñÏõ 7 !!!)
8 ¿¢Èõ Á¡È¡¾ âì¸û
9 ¿£Ä Å¡Éõ
10
11 þ¾Âò¾¢ø ¿£
12 ¦À¡ýÉ¢ in ¦ºøÅý
13 þó¾¢Ã¡
rest tomorrow
கௌசிகன்,
10 - சரியான விடை இல்லையே. இராதா கிருஷ்ணனுக்கும் ஜானகி ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
வேணும்னா குறிப்பையே இப்படி மாத்தட்டுமா?
சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் / ஜானகி ராமன்
பாலராஜன்கீதா,
உங்க பதிலை ஏதோ பண்ணி படிச்சுட்டேன்.
1,2,4,7,9,11,12,13 - எல்லாமே சரிதான். கௌசிகன் சொன்ன நகாசு வேலையை நீங்களும் சொல்லிட்டீங்களே. சபாஷ்.
3,5,6,8,10 - நீங்க போடணும்.
உங்க வார்த்தையிலேயே சொல்லணும்னா விடியும் வரை காத்திருக்கேன். :)
100 பின்னூட்டங்கள் என்பதைப் பார்த்து வாழ்த்து சொல்ல வரும் அன்பர்களே. பதிவு செய்யப்படாத பின்னூட்டங்களின் எண்ணிக்கை 33. ஆகவே மொத்தம் 133 பின்னூட்டங்கள் வந்து விட்டனவே. :)
சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் / ஜானகி ராமன்
சாரி எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சி
ஆனால், அந்த படம் வந்ததும் தெரியல, போனதும் தெரியல:-)))
பாலராஜன்கீதா (இனிமே சுருக்கமா, பாலான்னு கூப்பிடலாமா?)
//சாரி எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சி//
அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதே..அது இல்லைங்க.
இப்படித்தான் போன முறை காஸெட் கடைக்கு போன போது ஒரு விஜய் படம் பார்த்தேன் -'என்னைத் தனியா அழ விட்டுட்டு நீ எங்கே போயிட்ட?'. இந்த படத்தைப் பத்தி கேள்விப் பட்டிருக்கீங்க?
அன்னிக்கு எடுக்க முடியலை. படம் பார்த்துட்டு சொல்லறேன்.
// இப்படித்தான் போன முறை காஸெட் கடைக்கு போன போது ஒரு விஜய் படம் பார்த்தேன் -'என்னைத் தனியா அழ விட்டுட்டு நீ எங்கே போயிட்ட?'. இந்த படத்தைப் பத்தி கேள்விப் பட்டிருக்கீங்க? //
என்ன படம் பார்த்தீங்க ?
படம் எப்படி இருந்தது ?
என்ற இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில்தானே? :-)))
படத்தை பாக்கலியே. பார்த்தா அப்படித்தான் இருக்கும். இருந்தாலும் பாத்துட்டு சொல்லறேன். :D
5 பாகப் பிரிவினை
பாலா (கூப்பிடு, வேண்டாம் எதுவுமே சொல்லலை. நானே உரிமையோட இப்படி கூப்பிட்டுவிட்டேன்.),
என்ன நம்ம பதிவு உங்களை போக விடாமல் கட்டி போட்டிருச்சா? வெரி குட். வெரி குட். :)
5 - சரியான விடைதான்.
6 இரயில் பயணங்களில்
ஆமாம் பாலா,
6-ம் சரிதான்.
3,8,10 -- இவைகள்தானே மீதி?
போட்டுத் தாக்குங்க.
8 உதிரிப் பூக்கள்
பாலா,
8 - அது இல்லை. ஆனா இன்னைக்கு வந்த பாப்புலர் விடைகளில் அதுவும் ஒன்று.
இதிலும் ஒரு நகாசு வேலை உண்டு. என்னன்னு கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
10 ஜோடி
பாலா,
10 - சரியான விடை.
நீங்களும் ஜெயஸ்ரீயும் ஆளுக்கு இரண்டு விடைகள் மட்டுமே விட்டு வச்சுருக்கீங்க.
3 நான் அவனில்லை
;-)))
ஆமாங்க. நீங்களும் அவனில்லை. விடையும் அதுவில்லை. :)
ஆனா இந்த மாதிரி ஆர்வம் காமிச்சு நம்மை ஆதரிக்கறதுனால நீங்க உள்ளம் கவர் கள்வந்தானே. ஹிஹி.
ச்ச்சும்ம்ம்மா விளையாட்டிற்கு
அன்புள்ள ஜெயஸ்ரீ,
இலவசக் கொத்தனாருக்குத் தெரியாமல்,
நான் தங்களுக்கு 12, 13 க்கு விடை சொல்கிறேன். நீங்கள் எனக்கு 3,8க்கு விடை சொல்லவும்.
;-)))
இந்த பாருங்க.. இந்த மாதிரி விளையாட்டெல்லாம் வேண்டாம். போட்டியின் விதிமுறைகளை மீறியதால் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள் என்று அறிவித்து விடுவேன்.
அப்படி செய்தீர்கள் என்றால் ஆளுக்கு 100 பின்னூட்டம் போட வேண்டும். ஓக்கேவா?
ஆகா. போன பின்னூட்டம்தான் 150 ஆவது. Way to go guys!
3 கைதி கண்ணாயிரம்
பாலா,
3- இதுவும் இல்லையே. ஒரு க்ளூ வேணுமா?
சதீஷ்,
காலை வணக்கங்கள்.
11. இதுவுமில்லையே.
1.அறிவாளி,உழைப்பாளி,பணக்காரன்3.தெற்கத்திக் கள்ளன்
5.உனக்கு 20 எனக்கு 18
7.மூடுபனி
10.சதிபதி
7.ஏழுமலை,திருப்பதி
மது அக்கா,
1. இல்லை, இல்லை, இல்லை
3. இல்லை
5. இல்லை
7. இல்லை
10. இல்லை :D
மது அக்கா,
7. முதல் விடையே சரியானது.
அப்ப இன்னும் 1,3,5,10 இருக்கா
வேற வேலை எவ்வளவு இருக்க் தெரியுமா
க்ளூ கிடையாதா
10.வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன்
மது அக்கா,
மெயில் ஐ.டி. கொடுங்க. க்ளு தரேன்.
மது அக்கா,
10 - சரியில்லை
உங்களுக்கு க்ளு தரத்தான் போகிறேன்.
மது அக்கா,
கொஞ்சம் மெயில் பாருங்க. இப்போ நீங்க சொன்னதைத்தான் 1க்கு கௌசிகன் ஸ்பெஷல் மசாலா பதிலாய் சொல்லி இருக்கார். சாதா பதில் வரணுமே.
1.பணக்கார குடும்பம்,கணவன் மனைவி
3.உள்ளம் கவர் கள்வன்
10.ஜோடி
ஆவோ-சந்திரமுகி??
மது அக்கா,
ஒரு கோடு போட்டு காட்டின உடனே புடிச்சுட்டீங்களே.
1 - முதல் விடை சரியே
3 - இல்லைங்க
10 - ஆங், ஆங், அதுதான்
அந்த ஆவோ = விளக்கம் எல்லாம் சரியா கொடுத்திட்டு விடையிலே கோட்டை விட்டுட்டீங்களே.
இதுவரை
த.தா.ஜெயஸ்ரீ - 1,2,3,4,5,6,7,8,9,10,11
ஜிரா - 4,5,6,7,8,9,11
சதீஷ் - 2,4,5,6,7,9,12
மது அக்கா - 1,2,4,6,7,8,9,10,11,12
பெனாத்தலாரு - 2,4,5,6,7,8,9,11,12
கௌசிகன் - 1,2,4,5,6,7,9,11
பாலராஜன்கீதா - 1,2,4,5,6,7,9,10,11,12,13
யாரையும் விடலையே?
இனி....
த.தா.ஜெயஸ்ரீ - 12,13
ஜிரா - 1,2,3,10,12,13
சதீஷ் - 1,3,8,10,11,13
மது அக்கா - 3,5,13
பெனாத்தலாரு - 1,3,10,13
கௌசிகன் - 3,8,10,12,13
பாலராஜன்கீதா - 3,8
இதுவரை எல்லவற்றையும் போட்டது நம்ம மருத்துவர் அய்யா அவர்கள்தான். ஆனால் தன்னடக்கம் காரணமாக இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நானும் சொல்லவில்லை.
1.பணக்கார குடும்பம்.
2.பகலில் ஒரு இரவு.
3.
4.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.
5.பாகப்பிரிவினை
6.ரயில் பயணங்களில்.
7.ஏழுமலை.
8.வண்ணவண்ணப்பூக்கள்.
9.நீல வானம்.
10.ஜோடி
11.இதயத்தில் நீ.
12.பொன்னியின் செல்வன்.
13.சந்திரமுகி
நண்பரே!
எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம்.
இருந்தாலும் அடுத்த முறை யோசித்து விடை கூறுகிறேன்.
அப்படியே மூளைக்கு வேலை வைக்கும் அறிவியல், பொது அறிவு, நுண்ணறிவு போட்டிகள் போட்டு எங்க மூளையை கொத்துங்க.
வாங்க பரஞ்சோதி. எல்லாரும் சினிமாவுக்குதான் பதில் சொல்லறாங்கன்னுதான் அதையே போட்டு அரைச்சுக்கிட்டிருந்தேன். நீங்களும் சொல்லிட்டீங்க, நமக்கும் திகட்டிப் போச்சு. மாத்திர வேண்டியதுதான்.
என்ன சொல்லறீங்க?
எல்லாம் கும்சா விடைகள் தான். தப்புன்னா தப்புனே சொல்லுங்க :)
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - ஜோடிபொருத்தம், ஜாடிக்கு ஏத்த மூடி, மணாளனே மங்கையின் பாக்கியம்.
3. கள்ளா - திருடா திருடா
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் அப்பாசாமி
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - இமயம்
நீங்க வழக்கம் போல் சினிமா புதிர்களும் போடுங்க, மக்களுக்கு பிடிக்குது தானே.
பரஞ்சோதி,
கடைசில நீங்களும் சினிமா ஜோதியில இப்படி ஐக்கியமாயிட்டீங்களே.
1 - இதுக்கு நீங்க குடுத்த விடைகளில் ஒன்று பின்னாடி வரும் வேறொரு குறிப்புக்கு சரியானது! இதற்கு இல்லை.
3,7 - தப்பு
4 - சரியான விடை. உங்களுக்கான 3 கிராம் தங்கத்தை எடுத்துக்குங்க.
கொஞ்சம் சினிமாவும் மத்ததையும் கலந்து தரலாம்ன்னு பார்க்கறேன். என்ன நடக்குதோ பார்க்கலாம்.
8 வண்ண வண்ணப் பூக்கள்
பாலராஜன்கீதா,
8- சரியான விடை. இன்னும் 3 மட்டும்தான்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கறீங்களே. 3-ம் போடுங்க. ஒரு பட்டம் யோசிச்சு வைக்கறேன்.
இலவசம், நீங்க சொன்னீங்கன்னு ட்ரை பண்ணிப் பார்த்தேன். ஒன்னுமே புரியலை. நான் இந்த விளையாட்டுக்கு வரலை. சாரி.
என்ன குமரன்,
இப்படி சொல்லிட்டீங்க. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்ன்னு சொல்லுவாங்களே. கொஞ்சம் பழைய பதிவுகளில் உள்ள புதிர்களையும் விடைகளையும் பாத்தீங்கனா விஷயம் பிடிபடுமே.
இல்லை இன்னும் ஒரு நாள் பொறுங்க. இதோட விடையையே போட்டுடலாம்.
அன்புள்ள இலவசம்,
நானும் என் மகள்போல்தான் இருக்கிறேன்.( அவள் miscellaneous மற்றும் abbreviated போன்ற சொற்களுக்கு சரியாக எழுத்துகூட்டிவிடுவாள் கடினமான கணக்குகளை எளிதில் செய்துவிடுவாள் ஆனால்skool மற்றும் colur போன்ற சிறிய வார்த்தைகளின் எழுத்துகூட்டல்களில் / பதின்மப் புள்ளிகளில் தகறாரு மன்னிக்கவும் தகராறு
13 ஆம் கேள்விக்கான விடை மற்றும் விடியும்வரை காத்திரு எளிதில் கண்டுபிடிக்கமுடிந்தது ஆனல் 3 ஆம் கேள்விக்கு விடை இன்னும் யோசிக்கிறேன் யோசிக்கிறேன், யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கூகிளாண்டவரின் அருளும் கிடைக்கவில்லை. கள்ளனையும் பிடிக்கமுடியவில்லை :-(((
வாங்க கௌசி,
3 - சரியான விடைதான். கூகிளாண்டவரே துணை. சரியா?
கௌசிகன்,
8 - சரிதான்.
முன்னமே சொல்லிட்டேனே.
//பெரியவர் ஹரிஹரன்ஸ் மூளையை கசக்குற மாதிரி புதிர் போட சொன்னார். கோவம் வந்தா அவரை திட்டுங்க.//
கௌசி,
10 - இதையும் புடிச்சுட்டீங்க.
ஆனா இவ்வளவு வெவரமா எல்லாம் யோசிக்க கூடாது. புதிர் போடறது நான். அதுனால என் லெவலிலெதான் யோசிக்கணும்.
கௌசிகன்,
12- சரிதான். இதுக்கு எக்ஸ்ட்ரா கமெண்டெல்லாம் இல்லையா?
கௌசிகன்,
13 - கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு ஒரு பதிலை சொல்லுங்க.
பாலராஜன்கீதா
நமக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் உண்டு. இடது பக்கம் கையை காமிச்சு கிட்டே ரைட் சைடா போங்கன்னு சொல்லற நம்ம வசனம் வீட்டுல ரொம்ப பேமஸ்.
3 - ஒரு க்ளு தரேன். தனி மெயிலிலே.
148
149
இதுதாண்டா 150!
வைத்தியரே,
150க்கு ட்ரை பண்ணறீங்க போலைருக்கு. சரியான விடைகள் ஒரு 47 இருக்கு. அதை மறந்துறாதீங்க.
ஆனா 200 உங்க பேருல வந்தாகணும்ன்னு முருகன் நினைச்சா நாம என்ன பண்ண முடியும்.... போட்டு ஜமாய்ங்க.
200???????
அட ஆமாய்யா ஆமாம்.
இந்தப் பதிவும் 200 தொட்டாச்சு.
அப்புறம் என்ன - பார்ட்டிதான்.
10. oru thalai ragam ??
ஜெயஸ்ரீ,
10 - சரியான பதிலை முன்னாடியே தந்துட்டீங்களே. இப்போ என்ன இப்படி ஒரு தவறான பதில்?
நீங்க போட வேண்டியது 12 மற்றும் 13. அவ்வளவுதானே?
தனி மெயில் ஒண்ணு அனுப்பினேனே. பாத்தீங்களா?
13. indira?
அப்பாடா.
ஜெயஸ்ரீ,
13 - சரியான விடை. ரொம்ப நோகடிச்சுட்டேனோ? :)
13ணையே போட்டாச்சு. இன்னும் 12 மட்டும் விட்டு வச்சா எப்படி? அதையும் போடுங்க.
யப்பா இராசாங்களா / இராணிங்களா,
க்ளு குடு, க்ளூ குடுன்னு கேட்டவங்க எல்லாம் நம்ம பச்சோந்தி பதிவைப் போய் படிங்க. க்ளு என்ன விடையையே தந்திருக்காரு.
http://tamiltheni.blogspot.com/2006/02/blog-post_24.html
திருட்டுப் பயலே என்ற பெயரில் படம் வந்ததது தெரியவில்லை
:-(((
பாலா,
படம் இப்போதான் வரப் போகுது. போட்டவங்க எல்லாருமே கூகிளாண்டவர் கருணைன்னுதான் சொல்லியிருக்காங்க.
இப்போதான் போட்டுட்டீங்களே. :)
ஆக மொத்தம் எல்லா கேள்விக்கும் பதிலைச் சொல்லிட்டீங்க. விளையாட்டு பிடிச்சிருந்துதா? இன்னும் என்ன நல்லா பண்ணலாம்? உங்க கருத்தையும் கொஞ்சம் தட்டி விடுங்களேன்.
anbuLLa ilavasam,
thani madal anuppi uLLEn.
endRendRum anbudan,
balarajangeetha
பாலா,
ரொம்ப நன்றி. இப்போதான் மெயில் பார்த்தேன். இன்னிக்கு விடைகளைப் போடறேன்.
பங்கெடுத்த அனைவருக்கும் எனது நன்றி
Post a Comment