Tuesday, February 28, 2006

உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம்

உடன்பிறப்பே,

கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது. நாம் புதிர்தானே போட்டுவிடலாம் என்று எண்ணியிருக்க 'பூப்பறிக்க வருகிறோம்' போட்டி இப்பொழுது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. வால் நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரு இணையப்போட்டிதானே என்று மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

வெண்முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாம் நம் நிலா அவர்கள் இணையத்தின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஒரு போட்டியை அறிவித்துவிட்டார். இதில் நம் அணியினர் பெரும் வெற்றியைப் பெற்று, இணைய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய பணி எளிதானதுதான். நாளைக் காலை (மார்ச் முதலாம் நாள்) இந்திய நேரப்படி காலை மூன்று மணிக்குள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் ரோஜா அணியினருக்கு அளித்து, http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html என்ற தளத்திற்கு சென்று பின்னூட்டமிடு்.

இதோ கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக்கூட்டம்,
கிழித்தெறிய தேடுது காண் பகைக்கூட்டத்தை,
மனம் பெரிய இணையத்தில் ரோஜாக்கள் அல்லார்
வால் நீட்டினால் சீறிடும் பாம்பாய்
செயலில் காட்டிடும் பணியாய்
செறுமுனைக்கு அஞ்சா இளைஞர் அணியாய்
செம்மாந்து கிளம்பிடு

கண்மணிகளாம் உடன்பிறப்புகாள்
இப்போதே இப்பயணம் தயாராகட்டும்
பின்னூட்டம் இட்டிடுவோம்
பகைவரை முட்டிடுவோம்.

41 comments:

said...

koths,
you are unbelivable...
I am lauging:-)))

excellent strategy, friend :-)

said...

சிரித்தால் மட்டும் போதுமா?

said...

கொத்தனார்,
நான் போட்டுட்டேன். அல்லது முட்டிட்டேன். எப்படி வேணா வச்சுக்கோங்க. ப.ம.கவின் ஆதரவு பெற வேணா முயற்சி செய்யலாம். நம்ம பொதுச் செயலாளரரையும், கொ.ப.சேவிற்கும் மடல் அனுப்புங்க. :)

கசுமாலப்பொடின்னு ஒண்ணு கேப்பாங்க. தரேன்னு மட்டும் இப்போதைக்கு சொல்லிடுங்க. அப்புறமா பாத்துக்கலாம்.

said...

எனக்கு தெரிஞ்ச ப.ம.க. நிர்வாகி நீங்கதான். கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்களேன். கசுமாலப்பொடி என்ன, கூட ஒரு காசுமாலை வேணாலும் தந்துருவோம்.

said...

//கசுமாலப்பொடி என்ன, கூட ஒரு காசுமாலை வேணாலும் தந்துருவோம்.
//

:-))

said...

//எனக்கு தெரிஞ்ச ப.ம.க. நிர்வாகி நீங்கதான்//

So, you dont know who is Ko Pa Se?

Poor.. and you are demanding support!

said...

இதெல்லாம் வேலையை அடுத்தவங்க தலையில கட்டற டெக்னிக் சுரேஷ். இதுக்கெல்லாம் போயி டென்ஷனாயிகிட்டு.

அது மட்டுமில்லாம எங்கம்மா ப.ம.க. ஆளுங்களோட நேரடியா பேச வேணாம்ன்னு சொல்லியிருக்காங்க. அதான்.

said...

கொத்தனாரே, வேட்டு போட்டாச்சு, ஒம்ம ரோஜா பார்ட்டிக்கு!!

;-)

said...

நன்றி ஞான்ஸ். உங்கள் பேராதரவில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்களுக்கு என்றுமே எம் இதயத்தில் இடமுண்டு.

said...

அந்த குமரன் சொன்னாரு இந்த குமரன் செஞ்சிட்டாரு! எலவச கொத்த்னாரே வோட்டுக்கு காசா இல்ல எலவசமா? சொல்லி புடுங்கோ இல்லன்னா வாபஸ் வாங்கி செல்கிறேன்!

said...

சிங்கு,
அதான் சொல்லிட்டோமே. வோட்டு போட்டவங்களுக்கு எல்லாம் எங்க இதயத்தில் இடமுண்டு.

said...

//அது மட்டுமில்லாம எங்கம்மா ப.ம.க. ஆளுங்களோட நேரடியா பேச வேணாம்ன்னு சொல்லியிருக்காங்க. அதான்.
//
அநியாயம். அக்கிரம். இந்த விஷயத்தை என்னிடம் மறைத்து, என் மூலமாக ப.ம.க ஆதரவு கோரிய கொத்தனாரின் சூழ்ச்சியை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இது தெரிந்த போது, பெருந்தன்மையாக ஓட்டுபோட்ட கொள்கைவீரர்களாம் கொ.ப.சே மற்றும் ஞான்ஸின் கொள்கை பிடிப்பை கண்டு உள்ளம் பூரிப்படைகிறது. அதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அகங்கார அம்மாவிற்கு உணர்த்துங்கள்!

said...

வைத்தியரே,நல்லா படியுங்க.

//எங்கம்மா ப.ம.க. ஆளுங்களோட நேரடியா பேச வேணாம்ன்னு சொல்லியிருக்காங்க//

நேரடியா பேச வேண்டாம்ன்னுதானே சொல்லியிருக்காங்க. அதான் கவிப்பேரரசு மாதிரி உங்களை நடுவில் நிறுத்தறேன்.

ப.ம.க. ஆதரவு இல்லைன்னா எப்படி. ஹிஹி.

எங்கம்மா நீங்க இதயத்துல இடம் கொடுத்துட்டீங்கனா ஒரு எஸ்கேப் ரூட் வேணுமேன்னு ஒரு பாசத்துல சொல்லியிருப்பாங்க. தாயுள்ளம் இல்லையா. :)

said...

தேர்தல் என்றாலே இலவசம் என்று ஆகிவிட்ட இக்கலிக்காலத்தில், வெறும் பெயரில் மட்டும் இலவசத்தை வைத்து இருக்கும், கொத்தனார் அவர்களே,

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய கன்னித்தமிழகியின் கைகளிலே நல்லத் தமிழ் பெயர்கள் பல இருக்கும் போது, free mason என்று பெயர் சூட்டிக் கொண்டும் , மன்னரும் மயங்கும் நல்ல தமிழ் மலர்களான (??) மல்லிகை, முல்லை இருக்க, செல்வமணி, சீ சீ பாரசீக ரோ(ஜா) சாவை சின்னமாய் கொண்டு நீர் தேர்தலில் போட்டி இடுதல் தமிழ்த்தாய்க்கு செய்யும் பெரிய தொண்டாக நான் நினைக்கத்தான் முடியுமா.

இருந்தாலும், நான் உமக்கே வாக்களித்து விட்டேன், ஏதோ என்னாலான தொண்டு

said...

இராம்ஸ் & கொபச.. டென்ஷன் ஆகாதீங்க. நேரடியாத்தான் பேசரதில்லையே தவிர திரை மறைவில பேசிகிட்டுத்தான் இருக்காங்க. அடுத்த பொதுக்குழுவுல மிச்ச விபரம் சொல்றேன்.

அப்புறம் நம்ம ஓட்டையும் போட்டாச்சி.. காசுமாலை மட்டும் இல்ல கட்சி வளர்ச்சி நிதியும் தாராளமா கொடுங்க. தேர்தல் நேரம்.

said...

ஆனந்த் & சிங். செயகுமார். இங்கு மட்டுமல்ல. நிலாவின் பதிவிலும் சென்று வாக்களிக்க வேண்டும். ஏற்கனவே செய்தாகிவிட்டது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். கொத்தனார் இந்தப் பதிவில் நிலாவின் பதிவிற்கு சுட்டி கொடுத்திருக்கிறார்.

said...

ஆனந்த் அவர்களே,

உங்கள் பேராதரவுக்கு முதற்கண் எமது நன்றி.

ஒரு அறிஞர் கூறுகிறார். 'ஒருவனுக்கு மீனை இலவசமாய் கொடுப்பதற்கு பதிலாக, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு' என்று. அந்த அறிவுரையை உள்ளத்திலே தாங்கி, இணையத்தில் அதிக பின்னூட்டம் வாங்கி முன்னேறுவது எப்படி என்பதை நான் மறைத்தா வைத்தேன்? உங்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கவில்லையா? இப்படி எம்மனம் நோக செய்துவிட்டீரே. ஆனாலும் உமக்கும் எம் இதயத்திலே இடம் உண்டு.

தொடரும்....

said...

//free mason என்று பெயர் சூட்டிக் கொண்டும் , மன்னரும் மயங்கும் நல்ல தமிழ் மலர்களான (??) மல்லிகை, முல்லை இருக்க, செல்வமணி, சீ சீ பாரசீக ரோ(ஜா) சாவை சின்னமாய் கொண்டு//

நீர் சொல்வது போல் ஆங்கிலத்திலா வைத்துக்கொண்டேன்? உயிரினும் மேலாம் தமிழில் அல்லவா அவ்வார்த்தையை மொழிமாற்றம் செய்து வைத்துக்கொண்டேன். இதிலென்ன குற்றம் கண்டீர்.

சின்னம் யாமாய் விரும்பி எடுத்ததில்லை. அதைத்தான் தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்தார்கள். அதனை வேண்டாமெனச் சொல்லாமல், மாற்றான் நாட்டிலிருந்து வந்த ரோஜாவும் மணக்கும். மணக்க வைப்போம் என உறுதி கொண்டோம். இதுவுமா குற்றம்?

said...

அட பாருங்கப்பா.

தலைவரே சொல்லிட்டாரு. இனியென்ன.
நிதி பத்தியெல்லாம் இப்படி ஓபனா பேச வேண்டாம். யாரு யாரு படிக்கறாங்களோ. சரிதானே.

said...

குமரன்,

உங்களுக்கான என் வோட்டை பதித்துவிடுகிறேன்.

(வீடுதேடி) வந்தாரை வாழவைப்போம்.

அன்புடன்
கீதா

said...

கொத்தனாரே , தம்பி குமரா

உங்களுக்கு என்னுடைய வாக்கை குத்திவிட்டேன். வெற்றி நமதே

கால்கரி சிவா

said...

சிவா என்ற பெயருக்கும் குமரனுக்கும் அப்படி ஒரு பொருத்தம். நன்றி கல்காரி சிவா அவர்களே.

இதயம் கனக்கிறது.

பின்ன இவ்வளவு பேருக்கு இடம் கொடுத்தால் சும்மாவா?

said...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்.


உமக்கு கட்டிட கலையில் நாட்டம் இருந்தால், சிற்பி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். இல்லை இலவசத்தில் ஆர்வம் இருந்தால் அரசியல்வாதி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம், இல்லை, தத்துவம், இயக்கங்களில் ஆர்வம் என்றால், ஏதாவது கழகத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம். பெயருக்குக் கூட அன்னிய மோகமா ?


சீறும் புலியை முறத்தால் அடித்துத் துரத்திய தமிழ் பரம்பரையில் வந்து விட்டு, கேவலம் தேர்தல் ஆணையத்துக்கு பயப்படுவதா ? இப்படி அடிப்பணிவதால்தான்


வடக்கு வாலிபால் ஆடிக் கொண்டு இருக்கிறது
தெற்கு தெருக்கோடியில் கோலி ஆடிக் கொண்டு இருக்கிறது.

said...

என்ன ஆனந்த் இப்படி.

//இலவசம் அப்படீன்னு ஒரு தளம். அதை கட்டற ஆளு நானு. அதனாலத்தேன் நான் இலவசகொத்தனாரு.//

இதைத்தான் ஏற்கனவே சொல்லியிருக்கோமே. சிற்பி எல்லாம் சிலை, கலை படைப்புகளுக்கு. நம்ம அந்த லெவல் எல்லாம் இல்லை.

நம்மவூர் மாம்பழமோ, பம்பரமோ தந்தா வேணான்னா சொல்லப்போறேன். எதோ குடுக்கறவங்க மனசு கஷ்டப்படக்கூடாதேன்னுதான். அதானே தமிழ்ப் பண்பாடு.

said...

செல்வன்,

நம்ம ஒரு செல்லா வோட்டு. இங்க வந்து கேக்கறீங்களே. :(

said...

ஓட்டு போட்டாச்சு.
(நிலா பதிவிலும்)

said...

ரொம்ப நன்றி பச்சோந்தி அவர்களே.

said...

குமரனுக்கு ஜே ஜே!

said...

வாக்களித்த பேரன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி. வாக்களிக்கும் நேரம் முடிந்தமையால் வாக்களிக்க முடியாமல் போனாலும் வாக்களிக்க முன்வந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி.

said...

ஆனாலும் குமரன் எவ்வளவு வாக்கு உங்க வாக்குலே. தெய்வ வாக்கு. ஆனா பாத்து பிடிக்காத யாராவது டேக் எ வாக்குன்னு சொல்லப்போறாங்க. :)

said...

கொத்தனாரே!
கலக்கிட்டீங்க. சரியான காம்பினேஷனய்யா உம்ம ரெண்டு பேரு காம்பினேஷன்...ஒருத்தரு கழகத் தலைவரு இன்னொருத்தரு பழுத்த ஆன்மீகவாதி...ஹ்ம்ம்ம்...நடத்துங்க.இப்ப தான் ஓட்டு போட்டுட்டு வாரேன். ஒரே ஜே ஜேனு ஜனமா நிக்குது ரோஜா ரோஜானு சொல்லிக்கிட்டு...ஜெயிச்சா இலவசமா என்ன கொடுக்கப் போறீரு?

said...

கைப்பு,
சரியான நேரத்துக்கு காணாம போயிட்டீங்களே. வோட்டு எண்ணி முடிச்ச பின்னாடி போட வறீங்களே. உங்களை என்ன செய்ய?
இதுல இலவசமா வேற கேக்குதா?
உம்மை சிபி கேள்வி கேட்டதுல தப்பே இல்லைய்யா.

said...

இப்போதான் பாக்கிறேன். போட்டி பரபரப்பிலே கீதா அக்காவிற்கு நன்றி சொல்ல விட்டுட்டோம். அக்கா, உங்களுக்கும் இதயத்தில் இடமுண்டு.

said...

சாரிங்க,
கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு. நேத்து ராத்திரி 8 மணி வரைக்கும் ஆபிசுல தான் இருந்தேன்...உங்க உடன்பிறப்பு கடிதம் அப்ப வந்திருந்தாக் கூட ஓட்டு போட்டுருப்பேன். எப்படியிருந்தாலும் அரிதி பெரும்பான்மை உங்களுக்கே...என் வாழ்த்துகள். அடுத்த தடவை கடுதாசி எழுதும் போது இந்திய உடன்பிறப்புங்க முழிச்சிருக்குற நேரமா எழுதுங்க.ஜமாய்ச்சுடுவோம்!

said...

கைப்பு,
அப்படியே பண்ணிருவோம். ஆனா அதை போட்டி நடத்துறவங்க கிட்டயும் சொல்லுங்கய்யா.

said...

Namakkuthan vottu illennu sollitangale...... (rule 1)

Namma AAdharavu umakkukkuthan....

Kalla vottum umakkukkuthan......
:-))))))))
All the best

THYAG

said...

தியாக்,

வோட்டுக்கு நன்றி. மற்றவைகளுக்கு எங்கள் கள்ளத்தனமான நன்றி.

எங்கே போன புதிருக்கு ஆளைக் காணும்?

said...

Adha en kekkaringa

Thoguthi udanpattukku AMMA kitte poitten... Pona idathhula namma Kaipulle (mobile) kala variduchhu... R Connect work agaleappa.....

Sorry -- nextu meet panren

THYAG

said...

அட, வெளிகண்ட நாதரையும் விட்டுபுட்டோமே. நன்றி அய்யா.

said...

அடடா!
வாக்களித்த பின்புதான் இந்த கடிததைப் பார்த்தேன்! முன்பே பார்த்திருந்தால் இந்த கடிதத்துக்காகவே நாலஞ்சு ஓட்டு போட்டிருப்பேன்!


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

என்ன இருந்தாலும் நீங்க நம்ம கட்சிக்காரர்தானே. ஒரு வோட்டே ஓக்கே. நம்ம பதிவு எல்லாம் இனி மிஸ் பண்ணாம படியுங்க. சரியா?