புதிரா? புனிதமா? - இதை பட்டிமன்ற தலைப்பா வெச்சிருந்தா சாலமன் பாப்பய்யா (ஓ! இப்போ இவரை பத்தி பேசக்கூடாதோ) கூட தேவையே இல்லாம புதிரே அப்படின்னு ஏகோபித்த முடிவா இருந்திருக்கும். இப்படி அமோக வரவேற்பைக் கொடுத்த மக்களுக்கு நம் நன்றி. சும்மா 200 பின்னூட்டங்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய நண்பர்களுக்கு நன்றியோ நன்றி. இவ்வளவுக்கும் தொடர்ந்து புதிர்களை விடுவிக்க முயன்றதென்னவோ பத்து பேர்கள் கூட இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயஸ்ரீ, கோ.இராகவன், சதீஷ், மதுமிதா, பெனாத்தல் சுரேஷ், கௌசிகன், பாலராஜன்கீதா - அவ்வளவுதான். அடிக்கடி வரும் பெரியவர் ஹரிஹரன்ஸ், சின்னவன், கைப்புள்ள, தியாக், சீமாச்சு போன்றவர்களைக் காணவே காணோம். என்ன விஷயமோ தெரியவில்லை.
இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)
ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.
விடைகளைப் பார்ப்போமா
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்
அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு
ஆவோ - இந்திரா
சில கருத்துகள்
இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)
ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.
விடைகளைப் பார்ப்போமா
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்
அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு
ஆவோ - இந்திரா
சில கருத்துகள்
- முதல் குறிப்பிற்கு ஒரு வீடு இரு வாசல் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க. கேட்ஸ் என்றால் வாசல்கள்தானேன்னு விளக்கம் வேற. ஆனா படம் பேரு ஒரு வீடு இரு வாசல்கள் இல்லையே. அதனால இந்த பதிலை ஒத்துக்கொள்ளவில்லை.
- திருட்டுப்பயலே ரிலீஸ் ஆகாததுனால ரொம்ப பேருக்கு தெரியலை. அந்த படம் ப்ரொடியூசர் நம்மளை தனியா கவனிக்கணும். கடைசியா பச்சோந்திதான் விடையை அவுட் பண்ணிட்டாரு.
- பாகபிரிவினை குறிப்புதான் பெஸ்ட் அப்படின்னு அதிகம் பேர் சொன்னாங்க.
- ஏழுமலை. இந்த குறிப்பை ஏழாவதாக வைத்ததும், உலகின் ஏழு உயரமான சிகரங்களை வரிசை படுத்தியதும் நான் செய்த சிறு நகாசு வேலைகள். உன்னிப்பாக இதையும் பார்த்து கண்டு பிடித்து விட்டார்கள் நம் மக்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ்.
- அதே போல் எட்டாவது குறிப்பில் உள்ள மலர்கள் எல்லாமே வேறு திரைப்பட பெயர்கள். இதையும் கௌசிகன் கண்டுகொண்டார்.
- பத்தாவது குறிப்பில் ஒரு பெண் பெயரும், ஒரு ஆண் பெயரும் கலந்து, வருவதும் ஒரு ஆணின் பெயராக கொடுத்ததில் பலபேர் வழி தவறிவிட்டனர்.
7 comments:
ஏதாவது விடை எப்படி வந்ததுன்னு புரியலைன்னா ஒரு பின்னூட்டம் போட்டு கேளுங்கள். சொல்கிறேன்.
பாலராஜன்கீதா ஒரு தனி மடல் அனுப்பி இருக்கிறார். படிக்க சந்தோஷமாய் இருந்தது. அதனைத் தமிழ் எழுத்துருவில், அவரின் அனுமதியோடு இங்கே தருகிறேன்.
அன்புள்ள இலவசம்,
உங்கள் புதிர்கள் நன்றாக இருந்தன.
ஜனவரி மாதத்தில் சென்னைக்கு விடுமுறையில் சென்றிருந்தேன். வீட்டில் இணைய இணைப்பு இல்லையாதலால் தங்கள் பதிவுகளை இப்போழுதுதான் பார்க்க இயன்றது.
அன்று இரவு ஜெயஸ்ரீ அவர்களால் சரியான பதில்கள் அளிக்க இயலாத வினாக்களை முதலில் விளையாட்டாக யோசித்து விடை அனுப்பினேன். பிறகு தாங்கள் சொன்ன பிறகுதான் மற்ற வினாக்களுக்கும் விடைகளை யோசித்தேன். யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாக விடை அளிக்க முடிந்தது. (ஆனால் அன்றி இரவு சாப்பிடவில்லை, தூங்கவில்லை என்பது வேறு கதை)
மிகவும் கவர்ந்தது பாகபிரிவினைதான்.
ஆர்வத்துடன் படித்தது கணக்குப் பாடம். அதனால் புதிர்களை விடுவிக்கும் பழக்கம் இயல்பாக வருகிறது என்று நினைக்கிறேன். ஜெயஸ்ரீயும் கணக்கு படித்துள்ளதாக எங்கேயோ எப்போதோ மடலோ பின்னூட்டமோ எழுதி இருந்தார்கள். ஏதோ அவர்களுடன் போட்டி போட முடிந்தது என்பது போதும். ஓக்கே.ஓக்கே. ஜெயஸ்ரீ அவர்களுடன் போட்டி போடும் அடுத்த வாய்பினுக்காக காத்திருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலராஜன்கீதா
பாலராஜன்கீதா
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
அந்த இராதா கிருஷ்ணன் சீதா ராமனுக்கு நான் வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன் வரைக்கும் நினைச்சேன்...கடைசீல கோடிப் பொருத்தமா....
அது சரி...அதென்ன மணிபிரவாளம்? பொன்னியின் செல்வனா இருக்குமுன்னு நான் நினைச்சேன். ஆனா அந்த மணிபிரவாளக் குறிப்பு என்னை ஏமாத்தீருச்சு.
1. வலைப்பதிவுகள் பலரின் வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?
2. வலைப்பதிவுகளினால் காலமும் நேரமும் வீணாகிறதா, இல்லையா?
3. வலைப்பதிவர்கள் தங்கள் Office வேலைகளையும், குடும்பப் பொறுப்புகளையும் சரிவரக் கவனிக்கிறார்களா, இல்லை தவறுகிறார்களா?
4. வலைப்பதிவர்களின் தூங்கும் நேரம் எவ்வளவு?
5. வலைப்பதிவர்கள் தூக்கத்தில் கானும் கனவுகள் பிரதானமாக எதைப்பற்றி இருக்கும்?
என்பவை பற்றி எழுத முயற்சிக்கலாமே!
கோ.ரா. (அப்படின்னா ஆங்கிலத்திலே வெள்ளைக்காரன் தானே),
மணிப்பிரவாளம் அப்படின்னா இரண்டு மொழிகள் கலந்து பேசுவது எழுதுவதாமே. இங்கே பொன்னியின் செல்வன் என்பதை பொன்னி in செல்வன் எனப் பொருள் படும்படி கொடுத்திருந்ததால் மணிப்பிரவாளம் என குறிப்பிட்டிருந்தேன்.
இதை சொல்லாமல் இருந்தால் போட்டிருப்பேன் என்று கௌசிகன் சொன்னார். இப்போ நீங்களும்.
ஞான்ஸு,
நீரு எண்ற ரம்பாவும் ஓண்ற கண்ணும்ன்னு படம் போடுவீரு, நாங்க இந்த மாதிரி எல்லாம் எழுதி கல்லடி படணுமா. இரும். உம்மை வந்து கவனிச்சுக்கறேன்.
ஆமாம் நான் அப்படி என்னய்யா சொஞ்சேன்?
(இந்த நக்கல்தாம்பா, நம்மாளுங்க கிட்டயே நமக்கு பிடிச்சது. எப்படி, அப்படியே நைசா எறக்கறான் பாரு!)
Post a Comment