ஒரு பத்து பதினைந்து நாட்களாய் ரொம்ப வேலை. அதில் இரண்டு நாட்களுக்கு மினியாப்போலிஸும் மூன்று நாட்களுக்கு லண்டன் பயணமும் வேறு அடுத்தடுத்து. பயணக் கட்டுரைன்னு நம்ம ரசிகர்கள் எல்லாம் ஒரேடியா தொல்லை. (எழுதிட கிழிதிடப் போற என்று அன்பான வேண்டுகோள் வைத்தவர்கள்தான் அதிகம். ஹிஹி.) ஆனா வெறும் வேலை சம்பந்தப்பட்ட விஜயமாகிப் போனதுனால சுவாரசியமா ஒண்ணும் இல்லை. இருந்தாலும் கொஞ்சம் எழுதலாமேன்னுதான் இந்தப் பதிவு.
முதலில் உள்நாட்டு விசிட். மினியாப்போலிஸில் இரு நாட்களுக்கு வேலை என முடிவானதும் நம்ம குமரனைக் கூப்பிட்டு 'உங்க ஊர் பக்கம் வரேன்யா. நாம சந்திக்கலாம்' அப்படின்னு சொன்னேன். அவரும் பெருசா 'வாங்க வாங்க எப்ப வரீங்க?'ன்னு கேட்டாரு. ஆளு யாஹூ சாட் பண்ணும்போதே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆயிடுவாரே, அவருக்கு முன்னமே விஷயத்தை சொல்லிட்டா பார்ட்டி 'ஐயாம் தி எஸ்கேப்'ன்னு காணாம போயிடுவாரேன்னு யோசிக்காம நானும் வந்து போகிற தேதியை சொல்லிட்டேன். குமரனும் கரெக்ட்டா நான் குடும்பத்தோட லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலஸ், லாஸ்(ட்டா) டிஸ்னிலேண்ட் என ஒரு டூர் போறேனே அப்படின்னு சொல்லிட்டாரு. சொன்னா மாதிரி காணாமலும் போயிட்டாரு. குமரன், சும்மா டமாஸுக்கு. நீங்க வேற கோச்சுக்காதீங்க. ஸ்மைலி எல்லாம் போட்டுடறேன். :) :) :)
ஆக மொத்தம் விசேஷமாய் அந்த ஊரில் ஒண்ணும் பண்ணலை. நம்ம சிவ புராணம் சிவாவுக்கு மட்டும் போன் பண்ணி பேசினேன். அவர் பேசி கேட்கும்போதே 'அமெரிக்க கண்டமிது ஆனாலுமே, நெல்லைத் தமிழ் வந்து பாயுமே காதினிலே'ன்னு மனசுக்குள்ள ஒரு கும்மாளம், கொண்டாட்டம். எங்கேயோ ஒரு இடத்தில வந்து நம்ம ஊரு பாஷையை கேட்கறதுன்னா சும்மாவா? என்ன மக்கா, நாம சரியாத்தானே சொல்லுதோம். அவரைப் பார்க்கத்தான் முடியாம போயிருச்சு. இவ்வளவுக்கும் அவர் ஆபீஸ் பக்கம் இருக்கற ஒரு பில்டிங்கில்தான் இருந்திருக்கிறேன். அடுத்த முறை கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.
இந்த ஜீவா வெண்பா வடிக்கலாம் வான்னு கூப்பிட்டாலும் கூப்பிட்டார். இப்போ கிட்டத்தட்ட ஒரு பயித்தியம் பிடிக்கற லெவலுக்கு அடிக்ட்டாயாச்சு. இந்த பதிவையே வெண்பாவா எழுதலாமான்னு யோசிக்கற நிலமைக்கு கொண்டு போய் விட்டுட்டாரு. இப்படி ஆரம்பிச்சு விட்டுட்டு அவர் மட்டும் ஹாயா லீவு போட்டுட்டு போயிட்டார். ஈற்றடி இல்லாம இப்போ நமக்குத்தான் நமநமன்னு இருக்கு. நம்மளை மாதிரி ஒரு நாலு பேராவது இருக்க மாட்டாங்களா? அவங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டுமேன்னு ஜீவா வர வரைக்கும் நம்ம இந்த வெண்பா வடிக்கலாம் வா விளையாட்டை இங்க வச்சுக்கலாம். ஜீவா, உங்க பதிவை ஹைஜாக் பண்ணறேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க வந்த உடனே ஹேண்டோவர் பண்ணிடறேன்.
இந்த பதிவுல குமரனை பார்க்க முடியாததை குறிக்கும் படியாக 'குன்றில் குமரனைக் காண்' என்ற ஈற்றடி கொண்டு விளையாடலாம். ஜிரா, குன்று குமரன்னு எல்லாம் எழுதியிருக்கேன், மரியாதையா வந்துருங்க. ஆமா. முதல்ல நம்ம போணி.
மலையில்லா மாநகர்மி னீயாப்போ லீஸில்
அலைந்தேன் குமரனைத் தேடி - வலைப்பதிவீர்!
சொன்னார்கள் காலத்தே சான்றோர் சரியாக
குன்றில் குமரனைக் காண்.
Subscribe to:
Post Comments (Atom)
129 comments:
அதானே, எல்லாரும் பயணக்கதை எழுதிற முடியுங்களா?:-)
ஆனாலும், முயற்சிக்காக ஒரு + குத்து.
கொத்ஸ்
ரீபஸ் , கட்டம் என்றால் நானும் கலந்துக் கொல்வேன். ஏற்கனவே சந்திப் பிழைகளுக்காக டீச்சரிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறேன். நான் வரலை இந்த விளையாட்டுக்கு !
உங்களோட எல்லாம் போட்டி போட முடியாதுன்னு தெரிஞ்சிதானே ரூட்டை மாத்தரோம். அப்புறம் என்ன?
குத்துக்கு ரொம்ப நன்றிங்க.
நானும் உங்களை மாதிரிதான் சின்னவரே. ஆனா பாருங்க. இப்போ ஜீவா இந்த ரூல்ஸ் எல்லாம் சொல்லிக்குடுத்தாரா, இப்போ இது நமக்கு கிட்டத்தட்ட ஒரு புதிர் மாதிரிதான் இருக்கு. முயற்சி பண்ணிப் பாருங்க. வரும். நீங்க எல்லாம் நல்லா எழுதுவீங்க.
சின்னவரே,
டீச்சர் இன்னும் இங்கேதான் இருக்கேன்.
//ரீபஸ் , கட்டம் என்றால் நானும் கலந்துக் கொல்வேன். //
ஏந்தான் இப்படிக் கலந்து கொல்றீங்களோ?
கொல்லாம கொள்ளக்கூடாதா?:-))
ஏங்க டீச்சர்,
அவரே நான் வந்தா தப்பு கண்டுபிடிக்கறாங்க. அதனால வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு, நீங்க வேற இப்படி அவரை வர விடாம பண்ணுறீங்களே.
பொழப்ப கெடுக்காதீங்கக்கோவ்.
டீச்சர்
அது வேணுமின்னே போட்டதுதாங்க !
தமிழை கொல்வதுதான் என் வேலையா போச்சே!
//தமிழை கொல்வதுதான் என் வேலையா போச்சே!//
இப்போ யாராவது வந்து தமிழைக் கொல்வது என எழுதாத நீ தமிழைக் கொல்லத்தான் செய்கிறாய்ன்னு வாய் விடப் போறாங்க. ஐ திங்க் உனக்கு இது வேணும்மய்யா.
ஒன்று இரண்டாக ஐந்தாகிப் போனபின்னும்
நின்றும் நடந்தும் நிலத்தினிலே தேடுகின்றீர்
குன்றில் குமரனைக் காண்.
கொத்தனார், எனக்கும் வெண்பா எழுதாமல் இந்த வாரம் ஏதோ தொலைந்தது போல் இருந்தது.. ஈற்றடி கொடுத்ததற்கு நன்றி :)
//தமிழை கொல்வதுதான் என் வேலையா போச்சே!//
கொத்தனார், 'வேலையா போச்சே' லயும் ப் வருமா வராதா??
பொன்ஸ் அக்கா,
அப்படி போடுங்க. நான் சொன்னதுக்காக ஒருத்தராவது வந்து வெண்பா எழுதி மானத்தைக் காப்பாத்திட்டீங்க. ரொம்ப டாங்க்ஸுங்க.
பொன்ஸக்கா வந்தே பொருத்தமாய் சொன்னாரே
குன்றில் குமரனைக் காண்.
//கொத்தனார், 'வேலையா போச்சே' லயும் ப் வருமா வராதா?? //
நம்மைப் போய் சந்தேகமெல்லாம் கேக்கறீங்களே. நம்ம பதிவுக்கு வசந்தன், மணிவண்ணன் எல்லாரும் வந்து சொல்லிக் குடுத்தால்தான் உண்டு.
நீங்கதான் ஜீவா பதிவுல நாலாம் வேற்றுமை, பெயர்ச்சொல் புணர்ச்சி, வேற்றுமை உருபுன்னு என்னவெல்லாமோ சொல்லி இருக்கீங்க. உங்களுக்கு தெரியாததா?
வாங்கய்யா வாங்க...மினியாபோலீசும் லண்டனும்னு தொடர் எழுதீருக்கலாமுல்ல...சரி. சரி...விடுங்க...
ஆனா ஒன்னு...கட்டுரைக்குத் தக்க கடைசீல ஒரு வெண்பாவப் போட்டிருக்கீரு....சிவாவோட பேசியிருக்கீரு....அதுவே பெரிய விஷயந்தான்...
அதென்ன நெல்லைத்தமிழ்? சிவா தூத்துக்குடி மாவட்டம்....தெரியுமுல்ல? ;-)
//வாங்கய்யா வாங்க...மினியாபோலீசும் லண்டனும்னு தொடர் எழுதீருக்கலாமுல்ல...சரி. சரி...விடுங்க...//
எழுதி இருக்கலாம். ஆனா இது மினியாப்போலிஸ் சென்றது பற்றி மட்டும்தானே. லண்டன் அடுத்த பதிவாச்சே. :)
//அதென்ன நெல்லைத்தமிழ்? சிவா தூத்துக்குடி மாவட்டம்....தெரியுமுல்ல? ;-)//
வந்திட்டாரு. உங்க தூத்துக்குடி மாவட்டம் எல்லாம் இப்போ வந்ததுங்க. நாங்க இருந்தவரைக்கும் எல்லாமே நெல்லைதான். ஆமாம்.
அதெல்லாம் சரி. வெண்பா எழுதச்சொன்னேனே. அது எங்க?
கலந்துக் கொல்வேன்..
இத பார்த்துட்டு தமாஷ் பண்ணலாம்னு காப்பி பண்ணிட்டு கீழ பார்த்தா துளசி ஏற்கனவே நக்கல் பண்ணிட்டாங்க.
சரி கொத்தனார் இந்த மாதிரி ஏதாச்சும் எழுதுன என்னமாதிரி வயசான ஆளுங்க பின்னூட்டம் போடலாம் அத விட்டுட்டு கட்டம் சதுரம்னு போட்டா நாங்க என்ன பண்றது? இப்படியே எழுதுங்க, நாலஞ்சு படமும் போடுங்க அப்பத்தானே பயணக் கட்டுரை மாதிரி இருக்கும்?
அதானே, எல்லாரும் பயணக்கதை எழுதிற முடியுங்களா?:-)//
துளசி, இது காம்ப்ளிமெண்ட் மாதிரி தெரியலையே. கடைசியில ஒரு ஸ்மைலிய போட்டுட்டு தப்பிச்சிட்டீங்க.
என்ன இருந்தாலும் உங்கள மாதிரி எழுத முடியுமா :-(
//இப்படியே எழுதுங்க, நாலஞ்சு படமும் போடுங்க அப்பத்தானே பயணக் கட்டுரை மாதிரி இருக்கும்?//
அய்யா, வருகைக்கு நன்றி. என்ன படத்தை எல்லாம் மாத்திட்டீங்க?
நான் பயணக் கட்டுரை எல்லாம் எழுதலீங்க. (எழுதரேன்னு சொன்னா அந்த அக்கா திட்டும். அதனால எழுதலைன்னே சொல்லிக்கலாம் என்ன.)
இந்த முறை காமிரா கொண்டு செல்லவில்லை. அதனால் அடுத்த முறையிலிருந்து படம் காட்டுகிறேன்.
//என்ன இருந்தாலும் உங்கள மாதிரி எழுத முடியுமா :-( //
இப்படி ஒரு சோக ஸ்மைலி போட்டுட்டீங்களே, ஜோசப் சார். இதுக்கு என்ன அர்த்தம்?
பெனாத்தலாரே,
உங்க தனிமடலில் வந்த வெண்பாவை இப்போ போட்டுட்டேன்.
வலையூரில் உண்டு வகைவகையாய்ப் பூக்கள்
மலைபோல் தினம்குவியும் மாயம் - அலையாமல்
அன்றுள்ள ஆன்மீகச் செய்யுள் பொருளுக்கு
குன்றில் குமரனைக் காண்.
ஏங்க பெனாத்தலாரே,
மலை, அலை, வலை - இந்த எல்லா வார்த்தைக்களையும் ஒருசேர பார்த்த ஞாபகம் இருக்கே :-D
ஆனாலும் முற்றிலும் வேறு கருத்து. சபாஷ். ஆனால் எந்த குன்றில் போய் இந்தக் குமரனைப் பார்க்க சொல்கிறீர்களோ. அதுதான் தெரியவில்லை.
நன்றாய் நயமாய் பெனாத்தலார் சொன்னீர்கள்
குன்றில் குமரனைக் காண்
ஏன் கொத்ஸ். எங்க ஊருக்கு வந்துட்டு ஒன்னுமே விஷேசமா செய்யலைன்னா எப்படி? மால் ஆஃப் அமெரிக்கா போனீங்களா இல்லையா? அமெரிக்காவுலயே மிகப்பெரிய மால் அது. அதைப் பாக்குறதுக்கு மட்டுமே (டிஸ்னிலேன்ட் போற மாதிரி) மினியாபோலிஸ் வர்ற மக்களும் உண்டு.
பெனாத்தலார் சூப்பரா சொல்லிட்டார். நன்றி பெனாத்தலார்.
கொத்ஸ். மனக் குன்றில் குமரனைக் காண்னு சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன். :-)
அப்பாடா,
முதல் முதலா வந்து பின்னூட்டம் போடுவாரே. இப்போ ஆளைக்காணுமே. ஒரு வேளை கோவப்பட்டுட்டாரோன்னு நினைச்சேன். நல்ல வேளை அப்படி ஒண்ணும் இல்லை போல. :D
//அமெரிக்காவுலயே மிகப்பெரிய மால் அது. //
அதான் சொல்லிட்டேனே. விசேஷமாய் ஒண்ணும் பண்ணலை. வேலை அதிகம் இருந்ததால ஊர் ஒண்ணும் சுத்திப் பாக்கலை.
நீங்க இருந்து கூட்டிக்கிட்டு போயிருந்தா பாத்திருப்பேன். :( ஆனா சாப்பிடப் போனது அந்தப் பக்கம்தான்னு நினைக்கிறேன்.
இப்படி ஒரு சோக ஸ்மைலி போட்டுட்டீங்களே, ஜோசப் சார். இதுக்கு என்ன அர்த்தம்? //
நா துளசியைப் பார்த்து பொறாமைப் படறேன்னு அர்த்தம்..
அது உங்களுக்கில்லே..
என்ன படத்தை எல்லாம் மாத்திட்டீங்க? //
அவர் போட்டுருக்கற சட்டை சூப்பரா இருந்திச்சி. அதான் வச்சிக்கிட்டேன்..
கொஞ்ச நாள் கழிச்சி மாத்திட்டா போச்சி..
//கொத்ஸ். மனக் குன்றில் குமரனைக் காண்னு சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன். :-)//
கட்டாந்தரையாக இருக்கும் என் மனமானது குமரனை நினைக்க ஒரு குன்றாய் உயரும். குன்றிருந்தால் அங்கு குமரனும் இருப்பாரே. அவரை வேறெங்கும் போய் தேட வேண்டாம். மனக் குன்றிலேயே குமரனைக் காணலாம். இதைத்தானே நீங்கள் சொல்ல வறீங்க?
விளக்கம் சொல்லறதுல நம்மாளுங்களை மிஞ்ச முடியாதில்ல. :)
//அது உங்களுக்கில்லே..//
அப்போ சரி. அக்காமாருங்களை எல்லாம் இந்த மாதிரி எல்லாம் சொல்லி சந்தோசமா வெச்சுக்கணும். அப்போதான் பூவோட சேருர நாறு மாதிரி நமக்கும் நாலு பின்னூட்டம் கிடைக்கும். சரிதானே.
//அவர் போட்டுருக்கற சட்டை சூப்பரா இருந்திச்சி. அதான் வச்சிக்கிட்டேன்.. //
இல்லை. தலை நிறையா முடி இருக்கே. அதுதான் அட்ராக்ஷனோன்னு பார்த்தேன்.
:) :) :)
பாருங்க. ஸ்மைலி எல்லாம் போட்டாச்சு. திட்டக்கூடாது. ஆமாம்.
குன்றில் குமரணைக் காண் என்னும் போது ஈற்று மோனை வாராது நிற்கிறது. மோனையைச் சரிசெய்து, ஓசையைக் கூட்டி, வெண்பா அமைத்திருக்கிறேன்.
தண்டா யுதபாணி தங்கி யிருக்குமலை;
உண்டார் "அரகர"வென் றோதுமலை; - தண்டனிட்டுச்
சென்றே குடமுழுக்கில் சேர்ந்து படியேறிக்
குன்றில் குமரனையே கொள்.
//குன்றில் குமரணைக் காண் என்னும் போது ஈற்று மோனை வாராது நிற்கிறது.//
வணக்கம் இராம.கி அவர்களே. தங்கள் வருகைக்கு நன்றி.
எங்க ஜீவா சார் கிளாஸ்சில் நாங்கள் இன்னும் மோனை வரை வரவில்லை. தளை தட்டாமலும் எதுகை அமையுமாறும் எழுதும் வரைதான் வந்திருக்கிறோம். எங்க சார் மோனைக்குண்டான ரூல்ஸ் கொடுக்கும் வரை எனக்கு புரியாதே. அவர் லீவில் போயிருக்கும் நேரத்தில் நீங்கள் சொல்லிக் கொடுத்தாலும் அறிந்து கொள்வோம்.
தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. பழநியில் குடமுழுக்கு நடந்த சமயத்தில் மிக பொருத்தமாகவே இருக்கிறது உங்கள் பா.
பெனாத்தலார் சொன்னது...
வலையும் அலையும் மலையும் எதுகை
நிலைபெற்றே நின்றுதா னிருக்க - கொலையா?
வினவுகிறான் கொத்தனாரை வீரக் கவிஞன்
பினாத்தலான் இங்கே காண்.
பெனாத்தலார் மேலும் சொன்னது...
குன்றில் குமரனைக் காண்பது எப்படி?
சென்று மலையேறிக் காணும் குன்றல்ல
குறைவெனும் கூடாப் பொருள்படும் குன்று..
குறைவிலா என்றே அறி.
யப்பா சாமி,
ஒரு நாலடியிலே கொலை, வீர கவிஞன்னு எல்லாம் போட்டு பயமுறுத்தறீரே.
நான் தபுன்னு... சாரி சாரி தப்புன்னு சொல்லவே இல்லையே. அதுக்குள்ள இவ்வளவு கோவமா?
கொஞ்சம் யோசிச்சு வெண்பா பதில் போடறேன்.
//குன்றில் குமரனைக் காண்பது எப்படி?
சென்று மலையேறிக் காணும் குன்றல்ல
குறைவெனும் கூடாப் பொருள்படும் குன்று..
குறைவிலா என்றே அறி. //
இந்த மாதிரி எல்லாம் எழுதினா விளக்கமும் குடுக்கணும். சொல்லிட்டேன். ஆமா.
standing by
பெனாத்தலாரின் விளக்க மடல்...
கொத்ஸ்,
குன்றில் என்றால் மலை யேறிச்செல்லும் குன்று என நினைக்காதீர்ம் குன்று என்றால், குறைவு என்றும் பொருள்படும் குன்றில் என்பதற்கு குறைவில்லாத என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறான் வீரக்கவி.
அலை, மலைக்கு எதுகையா கொலை,
வினவுகிறானுக்கு மோனையா வீரக்கவி,
அவ்வளவுதான் மேட்டரு, இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?
நன்றி இராமகி நன்றாகச் சொன்னீரே
குன்றில் குமரனையே கொள்
//standing by//
வந்துட்டாரைய்யா பீட்டர். பக்கத்துல நின்னா மட்டும் போதுமா? பாத்து கவனிச்சா உங்களைப் பற்றி அடுத்த பதிவுல நல்லதா எழுதுவேனில்லை.
//அலை, மலைக்கு எதுகையா கொலை,
வினவுகிறானுக்கு மோனையா வீரக்கவி,
அவ்வளவுதான் மேட்டரு, இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?//
இவ்வளவுதானா. நான் எனக்குத்தான் கத்தி அருவான்னு அனுப்பறீங்களோன்னு பயந்துட்டேன். இது ஓக்கே.
// குன்றில் குமரனைக் காண்.//
//குன்றில் என்பதற்கு குறைவில்லாத என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறான் வீரக்கவி. //
ஆகா. அற்புதமான கருத்தய்யா. இதைத்தான் எதிர்பார்த்தேன் உங்களிடமிருந்து. சூப்பர்.
அந்த குமரன் முழுமைக்கு அடையாளம். ஒரு குறையுமில்லாதவன். ஒரு குறையுமில்லாத குமரனைக் காண் என பொருள் கொடுத்த வீரக்கவியே. உம்மை மெச்சுகின்றோம். அவனைப்போன்றே நமக்கும் ஒரு குறை இல்லாது வைத்திருப்பானாக என வேண்டிக் கொள்வோம்.
முதலெழுத்து ஒன்றி வருவதே மோனை.
அப்படி வருமெழுத்துக்கள் கட்டாயம் ஒரேயெழுத்தாக இல்லாமல் இனவெழுத்துக்களாகவும் வரலாம்.
உயிரெழுத்துக்களில்,
அ, ஆ, ஐ, ஒள என்பன ஓரினம். இவற்றில் ஒன்றுக்கு மற்றொன்று மோனை.
இ, ஈ, எ, ஏ என்பன ஓரினம். இதுவும் மேற்கூறியவாறே.
உ, ஊ, ஒ, ஓ என்பன ஓரினம்.
மெய்யெழுத்துக்களில்,
ஞ், ந் ஓரினம்.
ம், வ் ஓரினம்
த், ச் ஓரினம்.
உயிர்மெய்கள் வரும்போதும் இவற்றைக் கருத்திற்கொண்டால் சரி.
மெய்யெழுத்துக்களில் சொல்லப்பட்ட இனங்கள் வராத பட்சத்தில் அதே மெய் வரவேண்டும்.
காட்டாக, 'குமரன்' என்று வந்தால் அதற்குரிய மோனையாக கு, கூ, கொ, கோ என்பவற்றில் ஏதாவதொன்றில் மட்டுமே சொல் தொடங்க வேண்டும்.
'குன்றில்' என்று வந்தாலும் அதே எழுத்துக்கள்தான். இராம.கி பாவித்தது 'கொள்' என்ற சொல்.
அதேபோல் 'அமரன்' என்று வந்ததுக்கு மோனையென்றால் அ, ஆ, ஐ, ஒள என்பவற்றில் ஏதாவதொன்றில் மற்றச் சொல் வரவேண்டும்.
விலங்கு என்று வந்தால், வி, வீ, வெ, வே என்பவற்றில் ஒன்றாகவோ, மி, மீ, மெ, மே என்பவற்றிலொன்றாகவோ வரலாம். (ஏனென்றால் மெய்யெழுத்துக்களில் ம், வ் என்பன மோனைக்கு இனவெழுத்துக்கள். மேலே பார்க்க)
அதேபோல் தச்சன் என்று வந்தால் 'த'கர வரிசையில் நான்கும் 'ச'கர வரிசையில் நான்குமாக எட்டு எழுத்துக்கள் தொடக்கமாக வரக்கூடும். ('ச்', 'த்' என்பன இனவெழுத்துக்கள்)
**சுருக்கமாக: முதற்சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் அந்த உயிரெழுத்தையோ அல்லது அதற்குரிய இனவெழுத்துக்களில் ஒன்றையோ கொண்டு மோனைச்சொல்லைத் தொடங்கலாம்.
உயிர்மெய்யில் முதற்சொல் வந்தால், மெய்யெழுத்தையும் கவனிக்க வேண்டும், உயிரெழுத்தையும் கவனிக்க வேண்டும்.
மெய்யெழுத்து, உயிரெழுத்து ஆகியவற்றின் இனங்களைக் கருத்திற்கொண்டே உயிர்மெய்யெழுத்தின் மோனை தீர்மானிக்கப்பட வேண்டும்.
இதோ ஒரு வெண்பா
ஓங்காரத் துட்பொருளை சங்கரனா ரிருசெவியில்
பாங்காக உரைத்திட்ட ஞானமலை - நீங்காம
லென்று மெனதுள்ளக் கோயிலுறை ஏரகக்
குன்றில் குமரனையே கொள்.
அவசரத்தில் எழுதியது. தளை தட்டியிருந்தால் சொல்லுங்கள்.
வசந்தன்,
விளக்கத்திற்கு மிகவும் நன்றி. சில சந்தேகங்கள்.
1) மெய்யெழுத்துக்களில் ஞ்,ந்,ம்,வ்,த்,ச் தவிர மற்றவைகளுக்கு அவ்வெழுத்துகள் மட்டுமே வர வேண்டுமா?
2) வெண்பாக்களில் எங்கெங்கு இந்த மோனை சரியாக வரவேண்டும்? ஈற்றடியில் இருக்கும் மூன்று சீர்களும் மோனையோடு இருக்க வேண்டுமா? மற்ற அடிகளுக்கு என்ன விதி?
ஜெயஸ்ரீ,
ரொம்ப அழகா வந்திருக்கு. அருமையான பொருள்.
//சங்கரனா ரிருசெவியில்//, //பாங்காக உரைத்திட்ட//
இந்த இரண்டு இடங்களில் மட்டும் காய் முன் நிரை வருவதால் தளை தட்டுகிறது. கொஞ்சம் சரி பண்ணுங்களேன்.
நேரடியாகவே இப்போது கமெண்ட்டுகிறேன்.
ஜெயஸ்ரீயின் தளைதட்டலை மிகச்சுலபமாகவே சரி செய்துவிடலாம்.
ஓங்காரத் துட்பொருளை சங்கரனா ரின்செவியில்
பாங்காய் உரைத்திட்ட ஞானமலை - நீங்காம
லென்று மெனதுள்ளக் கோயிலுறை ஏரகக்
குன்றில் குமரனையே கொள்.
சரிதான் பெனாத்தலாரே. அவங்க பாவில் நம்ம கை வைக்கலாமா கூடாதான்னு etiquette தெரியாது. அதான் அவங்ககிட்டையே விட்டேன்.
ஆமாம் இவ்வளவு நேரம் நம்ம மூலமா பின்னூட்டம் போட்டதுக்கு எதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா என்ன?
சிம்பிள் மேட்டர்தான், காதோட வெச்சுக்கோங்க, ஆபீஸ்லே பிளாக் பாக்கதான் முடியும், பிளாக்ஸ்பாட் அட்ரஸ் போயி கமெண்டு போட முடியாது. ஈ மெயில் அதனாலதான்.
ஆமா, நமக்குள்ளே என்ன etiquette?
அதெல்லாம் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டாங்க - சரிதானே ஜெயஸ்ரீ?
//சிம்பிள் மேட்டர்தான், காதோட வெச்சுக்கோங்க, ஆபீஸ்லே பிளாக் பாக்கதான் முடியும், பிளாக்ஸ்பாட் அட்ரஸ் போயி கமெண்டு போட முடியாது. ஈ மெயில் அதனாலதான்.//
ஓக்கே. ஓக்கே. யாரு கிட்டையும் சொல்லலை. நமக்குள்ளயே இருக்கட்டும்.
மெயில் மூலமா போஸ்ட் போடற மாதிரி பின்னூட்டம் போடவும் வழி பண்ணனும். இல்லையா?
அதுவரை நீங்க தனிமடல் அனுப்புங்க. நான் பதிவில் போடறேன். நோ பிராப்பளம்.
//அதெல்லாம் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டாங்க - சரிதானே ஜெயஸ்ரீ?//
என்னவோ நீங்களும் அவங்களும் கோவப்படாம இருந்தா சரிதான்.
அட, அதுக்குள்ள 50 பின்னூட்டமா. இந்த பதிவுக்கு நான் எதிர் பார்க்கவே இல்லை. இராமநாதன் வந்து ஒரு வயத்தெரிச்சல் பின்னூட்டம் போடுவாரு பாருங்க இப்போ. :)
கொத்ஸ்,
இதுக்கு எதுக்கு தப்பா நெனைக்கப் போறேன்?
சுரேஷ்,
ரொம்ப ரொம்ப நன்றி. இதோ நான் மாற்றி எழுதியது. சரியா சொல்லுங்க
ஓங்காரத் துட்பொருளை சங்கரனா ரும்மகிழ
பாங்காக வேயுரைத்த ஞானமலை - நீங்காம
லென்று மெனதுள்ளக் கோயிலுறை ஏரகக்
குன்றில் குமரனையே கொள்
இப்போ சரியா வந்திருச்சு. ரொம்ப அழகா இருக்கு படிக்க.
இல்லைங்க. யாரு எதுக்கு கோவப்படுவாங்கன்னு தெரிய மாட்டேங்குது. விளையாட்டா எதாவது எழுதி ஸ்மைலி போடலைன்னா ஒருத்தருக்கு கோவம் வருது. இந்திய நேரம் புதிர் போட்டா இங்க ஒருத்தர் கோவப்படறார். இந்த நேரத்தில் போட்டா அங்க ஒருத்தர் திட்டறார்.
புதிர் பதிவாப் போட்டா ஒருத்தருக்கு கோவம் வருது. சரின்னு புதிர் பதிவு போடாம இருந்தா இன்னொருத்தர் கோவப்படறாங்க.
இவங்க எல்லாத்துக்கும் மேல ஒருத்தர் பதிவுல போய் பின்னூட்டம் போட்டா இன்னொருத்தர் கன்னாப்பின்னான்னு திட்டறாரு. ;)
அதான் கொஞ்சம் சேஃப்பா இருந்துக்கலாமேன்னு. (அதுக்காக, நீங்க கன்னாப்பின்னான்னு திட்டுவீங்கன்னு சொல்ல வரலை. அதுக்கு தனியா கோச்சுக்காதீங்க.) :D
விசு (அரட்டை அரங்கம் புகழ்) உங்களுக்கு தூரத்து (அல்லது) ரொம்ப பக்கத்து சொந்தமா ?? ))))))
தியாக்,
//மண்டபத்துல புலம்பவிட்டாரே காண்//
முதற்சீர் கனிச்சீர் ஆகிவிட்டதே. நாட் அலவுட். இரண்டாவதில் நான்கு அசைகள் இருக்கிறதே. இதுவும் நாட் அலவுட்.
ஓ! நீங்க வெண்பா எழுதலையா. சாரி. சாரி. இப்படித்தான் பயித்தியமாகிட்டேன். என்ன பண்ணறது?
தேர்தல் சமயத்தில் புது பேரூந்து பத்தி எல்லாம் அறிவிக்கக் கூடாதாமே . அதான் வெயிட்டிங். :)
//விசு (அரட்டை அரங்கம் புகழ்) உங்களுக்கு தூரத்து (அல்லது) ரொம்ப பக்கத்து சொந்தமா ?? ))))))//
அரங்கத்தில் வரவங்க எல்லாம் உணர்ச்சியா பேசி அவரை அழவிடுவாங்களே. அந்த மாதிரி எல்லாம் நீங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பேச்சாலோ அல்லது செயலாலோ என்னை அழவிடாம இருந்தா சரி. :)
அவ்வளவு பெரிய ஆளோட நம்மளை கம்பேர் பண்ணறீங்களே. அவரு பாத்தா கோச்சுக்கப் போறார்.
சரி தியாக்,
நீங்க இவ்வளவு ஆசையா கேக்கறீங்க. அதனால லண்டன் போஸ்ட் போட்ட பின்னால ஒரு பேருந்து போஸ்ட் போடலாம்.
ஆனா மினிமம் கியாரண்டி வியாபாரம்தான். எவ்வளவு தருவீங்க?
//வியாபாரம் பின்(னூட்டத்)னால பிச்சுக்கிட்டு ஒ(ட்)டறத்துக்கு நாங்க கியாரண்டி //
இதுதான்ய்யா நம்ம ஆளுங்க. கற்பூர புத்தி. சும்மா சக்ன்னு பிடிச்சுட்டாரு பாருங்க.
டிபிஆர்ஜோ,
//இப்படியே எழுதுங்க, நாலஞ்சு படமும் போடுங்க
அப்பத்தானே பயணக் கட்டுரை மாதிரி இருக்கும்?//
இது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
கொத்ஸ்,
//நான் பயணக் கட்டுரை எல்லாம் எழுதலீங்க. (எழுதரேன்னு சொன்னா
அந்த அக்கா திட்டும். அதனால எழுதலைன்னே சொல்லிக்கலாம் என்ன.) //
இதுதான் 'உள்குத்து' சொல்றாங்களே அதா?
ஆமாம், 'ஊட்டம்' வேகமா வளர்றதைக் கவனிக்கலையா?:-)
//இது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?//
இதுக்கு அவரே பதில் சொல்லட்டும். நான் எஸ்கேப்.
//இதுதான் 'உள்குத்து' சொல்றாங்களே அதா?//
அடடா. தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. நான் எதோ ஊருக்குப் போயிட்டு வந்ததை சாக்கா வச்சு வெண்பா விளையாட்டு விளையாடறேன். பயணக்கட்டுரைன்னா ஒரு இலக்கணம் இருக்கு. அதுக்கு உதாரணம் உங்களோட இந்திய விஜயம் பற்றிய பதிவுகள். அதை பயணக்கட்டுரைன்னு சொன்ன மூச்சுலயே நம்முளுதையும் சொன்னாங்கன்னா உங்களுக்கு கோவம் வரும். அது பயணக் கட்டுரை. இதெல்லாம் சும்மா.
இதைத்தான் நான் சொன்னேன். நீங்க என்னவோ நான் உங்களை கிண்டல் பண்ணறதா நினைச்சுக்கிட்டீங்களா?
அப்பாடா. எப்படியோ சமாளிச்சாச்சு. ஹிஹி.
கொத்ஸ்,
சமாளிப்புத் திலகமைய்யா நீர்:-)
பொழைச்சுக்குவீங்க.
நல்லா இருங்க.
//பொழைச்சுக்குவீங்க.நல்லா இருங்க.//
:-D
எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம். அப்புறம் இந்த ஜிரா அடிக்கடி சொல்லுவாரே அதுவும்தான்.
//அப்புறம் இந்த ஜிரா அடிக்கடி சொல்லுவாரே அதுவும்தான்.
//
அது எது?
அதாங்க
'யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்'
அப்படின்னு அவர் பண்ணற அட்டகாசத்துக்கெல்லாம் முருகனை கூப்பிட்டுப்பாரே. அதைத்தான் சொன்னேன்.
ஜிரா இப்போ நீங்க கோச்சிக்காதீங்க. :)
ரொம்ப பயமுறுத்துறீங்கய்யா....வெண்பா இதென்ன வம்பா ....அதான் பீடட்ர்...
நமக்கும் அன்பா ஒரு வெண்பா போடல...அப்புறம் இருக்கு உங்களுக்கு...
//ரொம்ப பயமுறுத்துறீங்கய்யா....வெண்பா இதென்ன வம்பா ....அதான் பீடட்ர்...//
தமிழ் பாத்து பயந்து பீட்டர் விட்டா சரியாயிடுமா? அங்கேயும் வந்து நாங்க Iambic Pentameterன்னு பேசினா என்ன பண்ணுவீங்க? ப்ரெஞ்ச், ரஷ்யன் எதாவது தெரியுமா?
//நமக்கும் அன்பா ஒரு வெண்பா போடல...அப்புறம் இருக்கு உங்களுக்கு... //
இந்த அன்பு மிரட்டல்களாலேயே பயமுறுத்தரீங்களேப்பா. அவரு அழகா குமரன்னு பேர் வைச்சுக்கிட்டாரு. மக்களும் ஆர்வமா குன்று, சங்கரனார், அரகரான்னு எல்லாம் எழுதினாங்க.
நீங்க என்னடான்னா டுபுக்குன்னு பேர் வைச்சிருக்கீங்க. என்ன எழுதறது? பார்க்கலாம். அட்லீஸ்ட் உங்க பேர் ஈரசைச்சீரா இருக்கு அதனால முடியாதுன்னு சொல்ல வேண்டியது வரலை.
மத்தபடி ஒரு கவிஞனை (நேரம்தான்) இந்த மாதிரி என்னைப்பத்தி எழுது, உன்னைப் பத்தி எழுதுன்னு ஃபோர்ஸ் எல்லாம் பண்ணக்கூடாது. தெரியுமில்ல. (எழுத வரலைன்னா ஒரு ஐயாம் தி எஸ்கேப் ரூட் வேண்டாமா) ஹிஹி.
கொத்தனார் சார்..
இந்தாங்க என்னோட வெண்பா
அன்றிருந்தே தேடுகிறீர் அண்ணலவ(ர்)ன் இருப்பிடத்தை
நின்றவிடம் தன்னை மறந்தீரோ எப்போதும்
தன்னை நினைத்தோரை காப்பான் மனக்
குன்றில் குமரனைக் காண்
பரவாயில்லையான்னு பாத்து சொல்லுங்க
***
அன்புடன்
ஜீவா
கொத்தனார் சார் :
Dubukku said...
ரொம்ப பயமுறுத்துறீங்கய்யா....வெண்பா இதென்ன வம்பா ....அதான் பீடட்ர்...
நமக்கும் அன்பா ஒரு வெண்பா போடல...அப்புறம் இருக்கு உங்களுக்கு...
*****
ஆசைப்பட்டு கேக்கறார்... எழுதுங்க சார்...
சும்மாவாச்சும்
என்பேரைக் கொண்டெழுதோர் வெண்பா எனவே
சொன்னவர் பேர்டுபுக் கு
அப்படியெழுதினாலாவது அவர் சந்தோசப் படிவாரில்லையா
அன்புடன்
ஜீவா
//அன்றிருந்தே தேடுகிறீர் அண்ணலவ(ர்)ன் இருப்பிடத்தை
நின்றவிடம் தன்னை மறந்தீரோ எப்போதும்
தன்னை நினைத்தோரை காப்பான் மனக்
குன்றில் குமரனைக் காண்//
ஜீவா,
எல்லா அடியிலும் முதற் சீர் எதுகையுடன் வருவதால், இரண்டாமடியின் கடைச்சீர் எதுகையாய் வரத்தேவையில்லை. சரிதானே? இதற்கு இன்னிசை அளவியல் வெண்பா என்பதுதானே பெயர்?
//அண்ணலவ(ர்)ன் இருப்பிடத்தை// - இங்க காய் முன் நிரை வருகிறதே. கொஞ்சம் பாருங்கள்.
//காப்பான் மனக்// - மனக் என்பது ஓரசைச் சீராக இருக்கிறதே? ஈற்றடி கடைச்சீர் தவிர அலவுடா?
//ஆசைப்பட்டு கேக்கறார்... எழுதுங்க சார்...//
எழுதறேன் சார். அவர் ரோல் அடுத்த எபிஸோடிலதானே வருது.
//என்பேரைக் கொண்டெழுதோர் வெண்பா எனவே
சொன்னவர் பேர்டுபுக் கு//
இதுல //எனவே சொன்னவர்// வரும் போது மா முன் நேர் வந்து தளை தட்டுது பாருங்க.
வெண்பாவைப் பொருத்த மட்டும் எதுகை இரண்டைகளின் முதற்சீரில் மட்டும் வந்தால் போதுமா? அல்லது வேறேனும் விதிகள் இருக்கின்றனவா?
//வசந்தன்,
விளக்கத்திற்கு மிகவும் நன்றி. சில சந்தேகங்கள்.
1) மெய்யெழுத்துக்களில் ஞ்,ந்,ம்,வ்,த்,ச் தவிர மற்றவைகளுக்கு அவ்வெழுத்துகள் மட்டுமே வர வேண்டுமா?
2) வெண்பாக்களில் எங்கெங்கு இந்த மோனை சரியாக வரவேண்டும்? ஈற்றடியில் இருக்கும் மூன்று சீர்களும் மோனையோடு இருக்க வேண்டுமா? மற்ற அடிகளுக்கு என்ன விதி?//
ஜீவா, வசந்தன் மோனைன்னா என்னன்னு சொல்லியிருக்கார். எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கே? இதுக்கு இங்க பதில் சொல்லப் போறீங்களா? தனிப்பதிவா? பதிவுன்னா வெயிட் பண்ணறேன்.
ஜீவா,
அப்புறம் உங்களுக்கு இன்னுமொரு கேள்வி.
கடைச்சீர் பற்றிய விதிகளைப் பற்றி பேசும் போது நேர், நிரை, நேர்பு அல்லது நிரைபு என முடிய வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள்.
அதில் நேர்பு மற்றும் நிரைபு என்றால் என்ன என கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?
மணிமேகலையை எழுதுனாரே சீத்தலைச் சாத்தனார், அவ்ரு அவங்க வாத்தியார் கிட்ட தலையில எழுத்தாணியால குட்டு வாங்கியே தலையில சீழ் கட்டுனதால "சீத்தலைச் சாத்தனார்"னு பேர் வந்துச்சுன்னு படிச்சிருக்கேன். நீரும் சீத்தலைக் கொத்தனாரா இருப்பீர் போலிருக்கே ஓய்? புதிர் மட்டும் போடுவீருன்னு பாத்தா வெண்பாவும், வெண்பாவிலேயே புதிரெல்லாம் போட்டு கலக்குறீரு?
//நீரும் சீத்தலைக் கொத்தனாரா இருப்பீர் போலிருக்கே ஓய்? //
என்னா? எனக்கு தலையில கட்டின்னு சொல்ல வரீரா? அடி வாங்கத்தான் போறேன்னு டிஸைட் பண்ணி வர ஆளுங்க கிட்ட நான் என்ன சொல்ல.
சீத்தலைக் கொத்தனாராம் சொல்கிறார் கைப்புள்ளை
பேத்தலே போதும் நிறுத்துமே - உம்மைநான்
தேத்தவே பார்க்கிறேன், இல்லையேல் இங்கிருக்கு
சாத்தவே கையிரண்டு காண்!
கொத்தனாரே
அலுவலகத்தில இருந்து எழுதினதால தலைத்தட்டிடிச்சு ( எதுக்கு முறைக்கிறீங்க.. சரியா தானே எழுதிருக்கேன் )
அப்பறம சரி பண்ணிபோடறேன்.. இப்போதைக்கு வுடு ஜூட்
மோனைப் பத்தி எங்க எழுதினாலும்.. எல்லாம் தொகுத்து ஒரு பதிவா போட்டுடலாமே.. இங்க கூட வசந்தன் ஐயா சொல்லட்டும் எல்லாமும் சேர்த்து ஒரு பதிவு போட்டுடலாம்.
உங்க மெயில் ஐடி ய jeeves_k at yahoo.com க்கு அனுப்புங்க.. கொஞ்சம் பேசவேண்டி இருக்கு ( பயப்படாம அனுப்புங்க ;) )
அன்புடன்
ஜீவா
//எதுக்கு முறைக்கிறீங்க../
நான் முறைக்கலைங்க. என் பார்வையே அப்படித்தான் என்ன செய்ய.
//அலுவலகத்தில இருந்து எழுதினதால தலைத்தட்டிடிச்சு //
தளை தட்டி வந்தா தலை தட்டும் வரும்தானே. சீத்தலைச் சாத்தனார் மாதிரி எழுத்தாணியால குட்டுப் பட்டு காயம் படாம இருந்தா சரி.
இலவசகொத்தனாரே (ஷெண்பகப்பாண்டியனே - தொனியில் படிக்கவும்). எங்களுக்கிருக்கிற தமிழ் புலமைக்கு ..இது எட்டாக்கனியாக தெரிகிறது. வெண்பாக்களை பற்றி முதலில் தமிழ் வாத்தியார் பாடம் எடுக்கும் போது வெண்பொங்கல் போன்ற ஒன்று என நினைத்தேன். அதுக்கப்புறம் தமிழ் எவ்ளோ ஆழம் எனத்தெரிந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக அதை மேற்க்கொண்டு ஆழப்படிக்காமல் விட்டுவிட்டேன். ஏற்கனவே வடிவமைத்ததை படிக்கிற நமக்கே (எனக்கே) இப்படின்னா.... தொல்காப்பியர் ...ரியலி க்ரேட்..
என் பதிவுல உங்க பின்னூட்டத்துக்கு நன்றி..அதுலயே (உங்க பின்னூட்டத்துக்கு பின்னாடி) நான் என் கமென்ட்டை பதிந்திருக்கிறேன். வந்து பாருங்க..நன்றி.
//"பின்னூட்டம் வாங்கறது ஒரு கலை. அதெல்லாம் உங்க குரு சொல்லித்தரலையா? :) "
இலவசகொத்தனாரே (ஷெண்பகப்பாண்டியனே - தொனியில் படிக்கவும்). எங்களுக்கிருக்கிற தமிழ் புலமைக்கு ..இது எட்டாக்கனியாக தெரிகிறது. வெண்பாக்களை பற்றி முதலில் தமிழ் வாத்தியார் பாடம் எடுக்கும் போது வெண்பொங்கல் போன்ற ஒன்று என நினைத்தேன். அதுக்கப்புறம் தமிழ் எவ்ளோ ஆழம் எனத்தெரிந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக அதை மேற்க்கொண்டு ஆழப்படிக்காமல் விட்டுவிட்டேன். ஏற்கனவே வடிவமைத்ததை படிக்கிற நமக்கே (எனக்கே) இப்படின்னா.... தொல்காப்பியர் ...ரியலி க்ரேட்..
என் பதிவுல உங்க பின்னூட்டத்துக்கு நன்றி..அதுலயே (உங்க பின்னூட்டத்துக்கு பின்னாடி) நான் என் கமென்ட்டை பதிந்திருக்கிறேன். வந்து பாருங்க..நன்றி.
//பின்னூட்டம் வாங்கறது ஒரு கலை. அதெல்லாம் உங்க குரு சொல்லித்தரலையா? :)
டுபுக்கு குரு முதல் படி சொல்லி குடுத்தாப்ல அதான் இந்த டெக்னிக்..(என்ன குரு பேரை காப்பாத்திட்டேனா?)
டுபுக்கு...உங்களுக்கு புரியாட்டி...என்னோட இந்திய விஜயம் - 3 கமென்ட்ஸை படிக்கவும்.
//அதுக்கப்புறம் தமிழ் எவ்ளோ ஆழம் எனத்தெரிந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக அதை மேற்க்கொண்டு ஆழப்படிக்காமல் விட்டுவிட்டேன். //
வாங்க இராம், இப்படிச் சொன்னா எப்படி. நானும் உங்களை மாதிரிதான். அப்போ பரீட்ச்சை வைப்பாங்க அதனால சரியாப் படிக்கலை. ஆன இப்போ நம்ம ஆர்வத்துனால மட்டுமே படிக்கிறதுனால, ஒரு வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கு.
முயற்சி பண்ணுங்க. நல்லா வரும்.
மத்தபடி, நம்ம மத்த பதிவெல்லாம் படிங்க. அப்போ நிறைய பின்னூட்ட விவகாரமெல்லாம் மாட்டும்.
முதல்ல உங்க பதிவை தமிழ்மணத்தில் பதிவு செஞ்சு பட்டையைப் போடுங்க. அதாங்க தமிழ்மணப்பட்டையை சொன்னேங்க.
சரி போனாப்போகுதுன்னு விட்டாக்க, சும்மா இருக்கற என்னைய ஏன்யா வம்புக்கு இழுக்குறீரு..
பாவம், ஜீவ்ஸுக்கும் நம்ம (என்னோட) நிலைமை வந்துடும் போலிருக்கு. அவர்கிட்டேர்ந்து க்ளையண்ட்ஸெல்லாம் லபக்கிகிட்டீரு. அவர் 40, 50 னா உமக்கு நூறு கேக்குதா.. எல்லாம் காலம் கலி காலம்..!
ஏதோ, நம்ம பங்குக்கு தமிழ்ச்சேவை புழிய வேண்டாமா? புழியறேன்..
நன்கனி யொன்றையச் சட்டையாய் விட்டதால்
இன்றுமன் றாச்சினங் கொண்டங்கி ருந்துமயி
லொன்றிலேறித் தண்டுடன் மொட்டையாய் சுட்டிடும்
குன்றில் குமரனைக் காண்
ஆகா வந்துட்டீரா? 50க்கு ரொம்ப லேட். 100க்கு கொஞ்சம் சீக்கிரம் போலத்தோணுதே. இல்ல ஒரு முடிவோடத்தான் வந்திருக்கீரா?
//பாவம், ஜீவ்ஸுக்கும் நம்ம (என்னோட) நிலைமை வந்துடும் போலிருக்கு. அவர்கிட்டேர்ந்து க்ளையண்ட்ஸெல்லாம் லபக்கிகிட்டீரு.//
அவரு லீவுல போனதுனாலத்தான் அவர் விளையாட்டை நான் கண்டின்னியூ பண்ணினேன். ஆமா உம்ம கிளையண்ட் யாரை அய்யா நான் லவட்டின்னேன்?
//உமக்கு நூறு கேக்குதா..//
நீங்க எல்லாம் வந்தா 100 வராமலேயா போயிடும்...ஹிஹி
//இல்ல ஒரு முடிவோடத்தான் வந்திருக்கீரா? //
//நீங்க எல்லாம் வந்தா 100 வராமலேயா போயிடும்...ஹிஹி//
நம்ம ரூல்ஸ்புக்கிலேர்ந்து நமக்கே டெமோவா? போட்டு வாங்கறதெல்லாம் இனிமே நடக்காதாக்கும். :))
//புழியறேன்.. //
புழிஞ்சிட்டீரேவோய். சும்மா புகுந்து விளையாடிட்டீரே.
அதுவும் இவரு எதுகை கிளாஸை கட் அடிச்சிட்டு எங்கேயே போனாரே, அதுல மாட்டலாமுன்னு பார்த்தா, தூளா ஒரு இன்னிசை வெண்பா போட்டு தாக்கிட்டீரே.
ஆனாலும் உமக்கு அறிவு ஜாஸ்திதான்யா. ஒத்துக்கறேன். என்ன கொஞ்சம் பொறுப்பில்லாம இருக்கீரு. ஒரு கால்கட்டு போட்டா அதுவும் சரியாயிடும்.
அந்த முருகன் கிட்டயே ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கறேன். :)
//நம்ம ரூல்ஸ்புக்கிலேர்ந்து நமக்கே டெமோவா? போட்டு வாங்கறதெல்லாம் இனிமே நடக்காதாக்கும். :))//
உங்க கிட்ட எல்லாம் போட்ட்டு வாங்க முடியுமா? நீங்க போட்டதை வாங்கிக்கறேன். என்ன சொல்லறீங்க. :))
அது எப்படிங்க கொத்ஸ்,
வெண்பா அது இதுன்னு பெரிய இலக்கண சுத்தமான சேதிகளையெல்லாம் எழுதியும்கூட இப்படி (இவ்ளோ)பின்னூட்டம் வாங்குறீங்க??
//அது எப்படிங்க கொத்ஸ்,
வெண்பா அது இதுன்னு பெரிய இலக்கண சுத்தமான சேதிகளையெல்லாம் எழுதியும்கூட இப்படி (இவ்ளோ)பின்னூட்டம் வாங்குறீங்க??//
இப்போ நீங்க கேட்டீங்க நான் சொன்னேன். இரண்டாச்சா? இப்படித்தான். என்னங்க எவ்வளவு பதிவுல படிச்சி படிச்சு சொல்லி இருக்கோம், இந்தக் கலையைப் பத்தி. :)
ஜோசப் சாரைத் தொடர்ந்து உங்க படத்தையும் மாத்தியாச்சா? என்ன எல்லாருக்கும் இளமை திரும்புது? வோட்டுப் போட வயசில்லைன்னு சொல்லிடப் போறாங்க பாத்து.
இதெல்லாம் பாத்தா, நமக்கே வெண்பா எழுதும் ஆசை வருது. இந்த இலக்கண விழயமெல்லாம் பள்ளி நாட்களிலே சாய்ஸ்லே விட்டு தொலைச்சேனா, ஒன்னும் புரியலை...கொத்ஸ் கொஞசம் உதவி பண்றீயளா?
//இதெல்லாம் பாத்தா, நமக்கே வெண்பா எழுதும் ஆசை வருது.//
வருதா. வரும் வரும். அப்படி ஆரம்பிச்சிதானே இப்போ பயித்தியமாய் அலையறோம். உங்களுக்கு ஒரு வசதி. முடியைப் பிச்சிக்க வேண்டியது இல்லை. ;)
//இந்த இலக்கண விழயமெல்லாம் பள்ளி நாட்களிலே சாய்ஸ்லே விட்டு தொலைச்சேனா, ஒன்னும் புரியலை..//
எல்லாரும் அதைத்தானே பண்ணியிருக்கோம். ஆனா ஒண்ணுங்க உங்க காலத்திலேந்து ரொம்ப மாறாத விஷயம் இது ஒண்ணுதான். அதுனால ஈசியா வரும். கவலை வேண்டாம்.
//கொத்ஸ் கொஞசம் உதவி பண்றீயளா?//
பண்ணிட்டா போகுது. என்ன வேணும்ன்னு சொல்லுங்க. அதுக்குத் தகுந்த தட்சிணை எல்லாம் தருவீங்க இல்லை....
இன்னுமொரு வெண்பா
குன்றம்கு டைபிடித்தவேய்ங் குழலோன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து சூரனையே - அன்று
வென்றுசி னந்தணியவே யிருந்த தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
குன்றம்கு டைபிடித்த மாயவன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து சூரனையே - அன்று
வென்றுசி னந்தணியவே யிருந்த தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
ஜெயஸ்ரீ,
நாலு வெர்ஷன் வந்திருக்கே. எதை எடுப்பது எதை விடுப்பதுன்னே தெரியலையே.
//டை-பிடித்-தவேய்ங்// இதைப் பாருங்க கூவிளங்கனியா வருதே. கொஞ்சம் தட்டுங்க.
சரி,
இப்போ கடைசியாப் வந்த வெண்பாவை எடுத்துக்கலாம். இதில் கொஞ்சம் தளை தட்டுது பாருங்க. அப்புறம் //னந்/தணி/யவே// இது கனிச்சீர். நாட் அலவுட்.
கொஞ்சம் டயம் குடுங்க. சரி பண்ணலாம். எனக்கே ரொம்ப குற்றம் கண்டுபிடிக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க் வருதே. ரொம்ப சாரிங்க. அது எனது இண்டென்ஷன் இல்லை.
இப்போ சரியா இருக்கான்னு பாருங்க.
குன்றம்கு டைபிடித்த மாயவன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து சூர பதுமனையே
வென்றுசி னந்தணிய நின்ற தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
கொத்ச்,
எனக்கே என்ன எழுதினேன் என்று புரியவில்லை.
இப்பொ சரியா இருக்கு. நன்றி.
அதான் இப்போ சரியாப் போச்சே. ராகவண்ணா என்ன சொல்லறாருன்னா, ஒரு வெண்பாவை எடுத்து நல்லா 4-5 முறை பாலிஷ் போட்டு பர்ஃபெக்ட்டா ஆக்கணுமாம். அப்புறம்தான் அடுத்த பாவிற்குப் போகணுமாம். அதுவும் ரெண்டு, மூணு பேர் ஒரு பாவை இந்த மாதிரி ரெடி பண்ணணுமமாம். பண்ணுவோமா?
// unga levelukku ellam varathukku late aagumnu nenaikkaren. //
எனக்கும் ஒரு வாரமாய்தான் தெரியும். அதெல்லாம் கஷ்டமில்லை. சுளுவா எழுதுவீங்க பாருங்க.
//penathalaroda kunril kumaran vilakkam arumai.//
அருமைதான். அவரு பெனாத்தரதே இவ்வளவு நல்லா இருந்த அவரு சீரியஸா எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பாக்கவே முடியலை.
//namma aalunga athai thappa purinjuttu malai ellam kovila kattiputtaangala? //
இருக்கலாம். தெரியலை. இது ஜிராவோ, குமரனோ பதில் சொல்லவேண்டிய கேள்வி. நான் சாய்ஸ்ல விட்டுட்டு அவங்களுக்கு வெயிட் பண்ணறேன்.
ஜெயஸ்ரீ,
அடுத்த கட்ட மாற்றங்களுடன். இந்த முறை நான் முதல் முறையா மோனை வருமாறு முயன்று இருக்கிறேன். சரியான்னு பாருங்க. ஜீவா, நீங்களும் பாருங்க.
குன்றம்கு டைபிடித்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்றுசி னந்தணிய வந்த தணிகைக்
குன்றில் குமரனையே கொள்.
ஜிரா, உங்க உபதேசத்தை சிரமேற்கொண்டு செயல்படுகிறேன். சந்தோஷம்தானே.
//சீத்தலைக் கொத்தனாராம் சொல்கிறார் கைப்புள்ளை
பேத்தலே போதும் நிறுத்துமே - உம்மைநான்
தேத்தவே பார்க்கிறேன், இல்லையேல் இங்கிருக்கு
சாத்தவே கையிரண்டு காண்!//
என்னையவே அடிப்பென் உதைப்பேன்னு எழுதுன வெண்பாவை நான் படிக்கலேன்னு வூட்டாண்ட வந்து ஜம்பமா சவுண்டு குடுக்கறீரு...பாராட்டி நல்ல விதமா நாலு வார்த்தை எழுதிட்டா, தர தரனு பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவீரு போலிருக்கே?
வெண்பா அது இதுன்னு இலக்கியப் பதிவெல்லாம் போடறீரு...நான் வந்து உருப்படியா எதுவும் இதுல பண்ணப் போறதில்லை. பின்னூட்ட எண்ணிக்கை அதிகரிக்குறதுக்கு வேணா எதாச்சும் உளறி வைக்கிறேன். 200 அடிக்க, 300 அடிக்க ஒரு கை குறைஞ்சதுன்னா சொல்லுங்க...உடனே ஆஜர் ஆகிடறேன்.
//வருதா. வரும் வரும். அப்படி ஆரம்பிச்சிதானே இப்போ பயித்தியமாய் அலையறோம். உங்களுக்கு ஒரு வசதி. முடியைப் பிச்சிக்க வேண்டியது இல்லை. ;)//
எனக்கு முடி இல்லைன்னா என்ன? பக்கத்திலிருக்கிறவன் முடி இல்லையா என்ன?
//என்னையவே அடிப்பென் உதைப்பேன்னு எழுதுன வெண்பாவை //
அது பத்தி எழுதரதுதான் உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைச்சேன். இல்லையா?
//தர தரனு பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவீரு போலிருக்கே?//
ஆமாம். மாட்டோமா பின்ன.
//200 அடிக்க, 300 அடிக்க ஒரு கை குறைஞ்சதுன்னா சொல்லுங்க...உடனே ஆஜர் ஆகிடறேன். //
ஆமா 200 - 300 அடிக்கும் போது நிறையா பேரு வருவாங்க. அங்க கொண்டு போகத்தான் ஆளு வேணும். ஆமா.
//பக்கத்திலிருக்கிறவன் முடி இல்லையா என்ன? //
ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா? கொஞ்சம் தள்ளியே இருக்கணும் போல இருக்கே.
எங்க வெண்பா வாத்தியார் வார்த்தைகளை ரொம்ப உடைக்காம போடப் பாருங்க. அது இன்னும் மெருகூட்டும்ன்னு சொன்னாரு. அதையும் முயன்றதால் அடுத்த வெர்ஷன். இதைக் கொஞ்சம் பாருங்க.
குன்றைக் குடைசெய்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்ற சினந்தணிய வந்த தணிகைக்
குன்றில் குமரனையே கொள்.
கொத்ஸ்,
மிக்க நன்றி. ராகவன் உங்களுக்கும்.
//குன்றைக் குடைசெய்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்ற சினந்தணிய வந்த தணிகைக்
குன்றில் குமரனையே கொள் //
இது இன்னும் எளிமையாக , நன்றாக இருக்கிறது.
இன்னொரு version பாருங்கள்
குன்றம் குடைபிடித்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோமளை மணாளனையே
வென்ற சினமாறித் தானமர் தீந்தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
நன்று தமிழ் பயின்று, நல்ல தமிழ்நாடில் பிறந்தும்.
இன்று நீ வேறென்று சொல்லிப் -பிரிவினைபேசி
'கன்றினைப் பசுவினின்று பிரிப்பது'போல் உற்சாகம்
குன்றில், குமரனைக் காண்.
'எவ்வளவுதான், "எல்லாரும் தமிழர்கள்தான்" என சொல்லிப் பார்த்தாலும், திருப்பித் திருப்பி சாதிகளைக் காட்டி சுடுமொழி பேசும் கூட்டம், கன்றினைப் பசுவிடமிருந்து பிரிப்பது போன்ற செயல்களைச் செய்து, நம் ஆர்வத்தைக் குன்றச் செய்யும்போது, குமரனைப்[முருகனைப்] பார் அல்லது நமது நண்பர் திரு. குமரனின் வலைப்பூக்களைப் படி!'
ஜெயஸ்ரீ,
இப்போ நல்லா வந்திருக்கு.
//வென்ற சினமாறித் தானமர் தீந்தணிகைக்//
இந்த ஒரு அடி மட்டும் பாருங்க, கொஞ்சம் சரி பண்ணினா மோனையும் வந்திடும்.
SK,
எப்படி சீர் பிரிக்கணும்ன்னு தெரியலையே. கனிச்சீர், ஓரசைச்சீர் எல்லாம் இருக்கே. கொஞ்சம் தட்டி, கொத்தி பாருங்க.
இரண்டாமடியில் 'கோர பதுமனையே' என்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
திரும்பப படிக்கும்போது முதல்வரியில் 'குடைசெய்த ' என்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.இப்போது பாருங்கள்...
Your version was more apporopriate
குன்றம் குடைசெய்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்ற சினமாற வந்தமர் தீந்தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
இன்னும் கொஞ்சம் polish.....
குன்றம் குடைசெய்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்ற சினமாற வந்தமர்ந்த தீந்தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
ஜெயஸ்ரீ,
நானே கேட்கணும்ன்னு நினைச்சேன். கோமளை மணாளன்னா சூரபதுமனா? எனக்குச் சரியா புரியலையேன்னு. அதுக்குள்ள நீங்க மாத்திட்டீங்களே.
ஆஆஆ.....
வெ-க்கு மோனையா வ வராதாமே. மி,மீ,மெ,மே,வி,வீ,வெ,வே மட்டும்தான் மோனையாம். So yet another version. சரி பாருங்க.
குன்றம் குடைசெய்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்ற சினமாற மேவிய தீந்தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
சூரபத்மனின் மனைவி பெயர் பதுமகோமளை. அதனால் கோமளை மணாளன் என்பதும் சூரபத்மனையே குறிக்கும்.
முருகப்பெருமான் போரெல்லாம் முடித்து தணிகையில் வந்து அமர்ந்து தன் கோபமும், களைப்பும்
தணியப்பெற்றான். அந்த அர்த்தம் மூன்றாவது அடியில் சரியாக வரவேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன். மேவிய என்பதைவிட 'வீற்றிருந்த ' பொருத்தமாக இருக்குமா?
குன்றம் குடைசெய்த கோபாலன் தன்மருகன்
குன்றுருவ வேலெறிந்து கோர பதுமனையே
வென்ற சினமாறி வீற்றிருந்த தீந்தணிகைக்
குன்றில் குமரனையே கொள்
இது சரியா இருக்கு ஜெயஸ்ரீ. பெரியவங்க யாராவது வந்து பார்த்துச் சொன்னா பரவாயில்லை.
ஆகா! பிரமாதம்! கவித! கவித! வெண்பா இப்படி தான் எழுதனுமா? நமக்கு கல்லிடைகுறிச்சி, டுபுக்கு தம்பி, சின்ன டுபுக்கு!
அம்பி,
வாங்க. உங்க அண்ணன் பதிவுலதான் உங்களைப் பார்த்தேன். கொஞ்சம் மைல் ஐ.டி. குடுங்க.
கொத்தனாரே! ஏற்கனவே இந்த பதிவை பார்த்தேன்.நமக்கும் வெண்பா, கலிப்பா எல்லாம் ரொம்ப தூரம். நடத்துங்க நடத்துங்க. இவ்வளவு தூரம் வந்துட்டு, ஆபீஸ் பக்கத்துலையே இருந்துக்கிட்டு இப்படி பாக்காம போய்டியலே..ம்ம்ம்ம்..அடுத்த முறை வரும் போது முன்னமே மடல் அனுப்பவும்.
ஆமாம்! நாங்கெல்லாம் தூத்துக்குடி மாவட்டம்...ராகவன் எங்க மாவாட்ட..சே..மாவட்டம் தான்.
:-))
வாங்க சிவா,
எங்க ஆளைக்காணும்ன்னு பார்த்தேன். அந்தக் கவலை விட்டுது.
//அடுத்த முறை வரும் போது முன்னமே மடல் அனுப்பவும்.//
கட்டாயம். ஆனா குமரன் கிட்ட சொல்லிராதீங்க. அப்புறம் ஜூட் விட்டுருவார். :)
//நாங்கெல்லாம் தூத்துக்குடி மாவட்டம்//
அதான் சொல்லிட்டேனே. நான் பழைய ஆளு. இந்தப் புது கதையெல்லாம் எனக்குத் தெரியாது. (இப்படி சொல்லலைன்னா எப்படி செட்டு சேர்த்துக்கறது.)
என்ன கொளுத்து எப்படி இருக்குதீய?
நாங்க நல்லாத்தேன் இருக்கோம். புதுசாப் போட்ட வெண்பா பதிவெல்லாம் பாக்கறது இல்லையா?
கொஞ்சம் இங்க போய் பாக்கறது.
வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.
யப்பா ஆப்பூ,
யாரு பெத்த புள்ளையோ. இப்படி சித்தம் கலங்கிப் போய் இருக்கியே. உன்ன அந்த தமிழ்த் தாய் சீக்கிரம் சரியாக்கிருவா.
நல்லா இருடே.
கொத்ஸ், எங்க கைப்பு, என்னிக்கு வந்து பின்னூட்டினாருன்னு எப்படி தெரிஞ்சிக்கிடறது? தேதிக்கு ஒரு செங்கல் வையுங்க..
அவரு வந்து போற விஷயம் தெரியக்கூடாதுன்னு சொல்லியிருக்காரே. என்ன பண்ண? எதோ சங்கமாமே. அந்த பொடிப்பசங்க அவரை படுத்தறாங்களாமே. அதனாலதான். இது பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா? :)
கொத்ஸூ, இதெல்லாம் டூ மச்.. வந்து எங்க பாருங்க.. எங்கள் தங்கத் தலைவர் மால்கேட் மாணிக்கம், எத்தனை வேலை இருந்தாலும், விடாமல் எங்கள் சங்கத்துக்கு மட்டும் வந்து வருகைபதிந்து சென்றிருக்கிறார்.
அதெப்படிங்க மருத்துவர் பதிவு 100 பின்னூட்டத்திலேயே ரொம்ப ஸ்லோவா திறக்குது.. உங்க குமரன் பதிவு இத்தனை சீக்கிரம் திறந்து "வா, வந்து எழுதுன்னு" சொல்லுது??
சுட்டி சரியா தரலையே. அதனாலத் தெரியலை. அவரு அதுவும் சொன்னாரு. அவர் பேர்ல வந்து மத்த இடத்தில் பின்னூட்டம் போடறாங்க. அதை எப்படி தடுக்கறதுன்னு கேட்டாரு.
//அதெப்படிங்க மருத்துவர் பதிவு 100 பின்னூட்டத்திலேயே ரொம்ப ஸ்லோவா திறக்குது.. உங்க குமரன் பதிவு இத்தனை சீக்கிரம் திறந்து "வா, வந்து எழுதுன்னு" சொல்லுது??//
அது குமரன் அருள் இருக்கிறதுனாலதான் இந்த பதிவி திறக்குது. இல்லைன்னா நம்ம பக்கங்களும் நிதானமாத்தான் திறக்கும்.
Post a Comment