நண்பர் டி.எம்,கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி பட்டம் அளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்தது எனக்குப் பெருமகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்நிகழ்வுக்குச் சில நாட்கள் முன்பு அவர் சென்னை மியூசிக் அகாடமியில் செய்த கச்சேரி பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். (பதிவின் சுட்டி - https://elavasam.blogspot.com/2024/12/freedom-to-sing-about-everything.html)
காலச்சுவடு பதிப்பகம், அவர்களின் பிப்ரவரி 2025 இதழின் தலையங்கமாக இந்தக் கச்சேரி பற்றி எழுதி இருக்கின்றார்கள். அந்தத் தலையங்கத்தில் எனது பதிவையும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆங்கிலத்தில் நான் எழுதியிருந்த பதிவில் இருந்து சில பகுதிகளைத் தமிழாக்கம் செய்து அவர்களின் தலையங்கத்தில் சேர்த்து கொண்டது என் உணர்வுகளுக்கு அங்கீகாரம் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.
தமிழ் எழுத்துலகில் பொதுவாக எங்கிருந்து தகவல்களோ அல்லது கருத்துகளோ எடுத்துக் கொள்ளப்பட்டது என்று பட்டியலிடப்படுவது அரிதே. அந்தப் பொதுவழக்கில் இருந்து மாறாக என் பதிவுக்குச் சுட்டி தந்திருக்கும் கால்சுவடு இதழுக்கு என் நன்றி.
தகவலைச் சொல்லி படங்களை அனுப்பிய நண்பர் சரவணன் அவர்களுக்கும் என் நன்றி.