Wednesday, November 29, 2006

கேள்வியின் நாயகர்களே....

நம்ம விக்கி பதிவில் கேள்வியின் நாயகனே அப்படின்னு ஒரு பதிவு போட்டோம். என்ன காரணத்துனாலயோ தமிழ்மணத்துல வரலை. அதுல பின்னூட்டம் போட்டாக்கூட முகப்பில் வர மாட்டேங்குது. அதனால இந்த பதிவு ஒரு ரிபீட். விக்கி பசங்க பக்கத்தில் இருக்கும் பெரிய கேள்விக்குறியைச் சொடுக்கினால் இந்த பதிவுக்கு கொண்டு செல்லும். எல்லாம் ஒரு நடை வந்திடுங்க. இனி அந்த பதிவு. இதுக்கு அப்புறம் எழுதினது எல்லாம் விக்கி பதிவுல இருந்து கட் பேஸ்ட். அதனால கேள்விகளை அங்க கேளுங்க. இங்க இல்லை.

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

13 comments:

said...

நாயகிகளேன்னு சொல்லலை அப்படின்னு மகளிர் அணி வந்து சண்டை போடக்கூடாது. இப்போ எல்லாம் நடிகைகளையும் Actors அப்படின்னு சொல்லறது இல்லையா, அந்த மாதிரித்தான்.

said...

"நமது வயிறு மனித மாமிசம் உட்பட்ட எல்லாவிதமான மாமிசங்களையும்
செரித்துவிடும். ஆனால் நமது வயிறும் மாமிசத்தால் ஆனதுதானே, பிறகு ஏன் அது
தன்னைத்தானே செரித்துக் கொள்வதில்லை?"

said...

ஆஹா! தலைவா, இந்த கேள்விக்கு விரைவில் பதில் வருது. ஆனா கேள்விகளை இங்க கேட்கக் கூடாது. விக்கிபசங்க பக்கத்தில்தான். முதல் வரியில் சுட்டி இருக்கு பாருங்க.

said...

ஐயா இது இலவசக் குழப்பம்.
சரி சரி அங்கியே போறேன்.

said...

ரோடு ரோலர் என்பது ஏன் பெரிசாகவே இருக்கு? அதனுடைய வடிவமைப்பில் முன்னேற்றம் ஏற்படுத்த யாரும் முன்வரவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?

said...

தீக்கங்குகளை நீர்ல் போட்டால் "புஷ்" என்று சத்தம் வருவது எதனால்?

(இந்தியாவில் போட்டாலும் கூட அதே சத்தம்தான் வருகிறது)

said...

யப்பா ராசாக்களா. கேள்விகளை இங்க கேட்கப்பிடாது. விக்கி பதிவுலதான் கேட்கணும். இருங்க. பதிவை சரி பண்ணறேன்.

said...

I am working in Semiconductor industry, I want to know Arsenic test, If i fail in arsenic what are the impact will make arsenic in future..

said...

இ.கொ. - விக்கியில் எனது கேள்விக்கு பதிலை தோசை சாப்பிட்டு சொன்னதுக்கு நன்றி :-)

said...

நான் அங்கே ஒரு கேள்வி கேட்டேன் - பதில் வரலேன்னு நினைக்குரேன். மக்கள் பிஸியா இருக்காங்க போலிருக்கு. இருந்தாலும் சீக்கிரமே பதில் குடுத்தாங்கண்ணா நல்லா இருக்கும்.

said...

நாகு சொன்னா மாதிரி மக்கள்ஸ் எல்லாம் தோசை சாப்பிடறாங்க போல. கொஞ்சம் இருங்க சீனா, வந்து பதில் சொல்லறோம்.

said...

இலவசம்,நாங்களே பதில் சொல்ல ஆசைப் பட்டா எதானும் இலகுவான வழி இருக்கா?
கேள்விகிட்ட பதில் போடுற மாதிரி வாய்ப்பு இருந்தா எல்லாரும் சொல்ற பதிலை கேள்வி கேட்டவங்க பாத்துக்குவாங்க..
ஒரேவழி,தனிப் பதிவுல ஒவ்வொரு கேள்வியுமே ஒரு பதிவாப் போட்றதுதான்.பதில்களை பின்னூட்டமாப் போட்டுக்கலாம்...
வேறு எளிதான வழி?

said...

என்னடா நாய்க்கரு நாடாருன்னு கொத்ஸ் சாதி பேசுறாரேன்னு ஓடியாந்தேன். பாத்தா கேள்வி கேக்கச் சொல்றீங்க. அதையும் இங்க கேக்கக் கூடாதுங்குறீங்க. அப்ப இங்க என்னதான் செய்றது?