இந்த மாதம் புதசெவி பதிவு போடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா மாற்றங்கள் எல்லாம் பெரிய இடங்களில்தான் உனக்கென்ன என மனசாட்சி கேட்க, அதுவும் சரிதான் என்று வழக்கம்போல் புதசெவி பதிவு எழுதிட்டேன். இனி இந்த பதிவுக்கான விஷயங்கள்.
செய்தி 1
நீங்க எல்லாரும் நம்ம பெனாத்தலார் எழுதின பதிவைப் படிச்சு இருப்பீங்க. ஜூப்பரு, நெத்தியடி அப்படின்னு எல்லாம் ஏத்திவிட்டு இருக்காங்க நிறையா புண்ணியவானுங்க. ஆனா, ஐயா பெனாத்தலாரே நான் சொல்லறேன். சாக்கிரதையா இருந்துக்குங்க. இப்படித்தான் தாய்லாந்து நாட்டு இளவரசர் பத்தி என்னமோ எழுதினதுக்காக ஒரு அவுஸ்திரேலிய எழுத்தாளரை மூணு வருஷம் உள்ள தள்ளிட்டாங்களாம். அது தாய்லாந்து அதனால மூணு வருஷம். இது தந்தையர் நாடு. சாக்கிரதை மக்கா! செய்திக்கு இங்க போங்க. பெனாத்தலார் பதிவுக்கு இங்க.
பஞ்ச்: உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க.. இப்படி ஆமையை திருப்பி போடு அடிக்கணும் ரேஞ்சுக்கு சமையல் குறிப்பு போடாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.
செய்தி 2:
அடுத்தது நம்ம ஊர் மேட்டர் ஒண்ணு பார்க்கலாம். புத்தாண்டு, இல்லை பொங்கல், இல்லை கருத்துக் கந்தசாமி பொறந்த நாளு, இப்படி ஒவ்வொரு ஆட்சியாளரைப் பொறுத்து எதோ ஒரு நாள். நாம எல்லாரும் பொங்கல் பொங்கிச் சாப்பிடுவோம். ஆனா நம்ம ஊர் ஒண்ணு இந்த நாளில் அகில உலக பிரபல்யம் அடைஞ்சு இருக்கு. ஏன் தெரியுமா? எங்க ஊரை எந்த வியாதியும் அண்டக்கூடாதுன்னு 7 வயசு பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் தவளைகளோட கல்யாணம் பண்ணி வெச்சு இருக்காங்க. மேட்டருக்கு இங்க போங்க. இந்தக் கல்யாணமா இல்லை முன்னாடி சொன்ன கட் அவுட் கல்யாணமா? எது பெட்டர்?
பஞ்ச்: தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு? இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது
செய்தி 3
சில நாட்களுக்கு முன் விமானி ஒருவர் திறமையாக ஹட்சன் நதியில் ஒரு விமானத்தை இறக்கி 155 உயிர்களைக் காப்பாற்றி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் விமான நிலையத்தில் இறக்காமல் உயிர்களைக் காப்பாற்றிய விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். கார்டிப் நகரத்தில் இருந்து பாரிஸ் வரை வந்த விமானத்தில் தரை இறங்கும் முன் விமானி செய்த அறிவிப்பு "Unfortunately, I'm not qualified to land the plane in Paris." இப்படிச் சொல்லி விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சென்றதாம். செய்தி இங்கே. எகொஇச!
பஞ்ச்: இனிமேல ஒண்ணும் சரி ஆவாதுன்ற நிலைமை வந்ததும், நான் தான் தப்பு.. நான் தான் தப்பு - சத்யமா சொல்றேன்.. என்னை விட்டுடுங்க நான் ஓடிப்போறேன்னு நம்பினவங்களை நட்டாத்துல விடாம, கிளம்பின இடத்துக்கே கொண்டு போய் சேத்தாரே புண்ணியவான்.. அவரைப் பாராட்டுவீங்களா.. அதை விட்டுட்டு..
செய்தி 4
இது நம்ம மேட்டர். தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள் பற்றி எல்லாம் கேட்டு இருப்பீங்க. ஆனா இவங்க தூக்கத்தில் எழுந்து கணினியை துவக்கி, தனது மின்னஞ்சல் கணக்கினுள் போய், நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்காங்களாம். அடுத்த நாள் அந்த மின்னஞ்சல்கள் எல்லாம் பார்த்து அம்மிணிக்கு ஒரே அதிர்ச்சியாம். அந்த கால ஆனந்தவிகடனில் வரும் ஆபீசில் தூங்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு வாழ்வுதான்! செய்தி இங்கே.
பஞ்ச்: தூக்கத்துல மின்னஞ்சல்தானே அடிச்சாங்க? இது ஒரு தப்பா? போதையிலே எத்தனையோ பேர் பதிவே போடறாங்க! தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு!
செய்தி 5
கவுஜ எழுத வேண்டாம், கவுஜ எழுத வேண்டாமுன்னு சொன்னாக் கேட்கறாங்களா? இப்படி உடைச்சு உடைச்சு கவுஜ எழுதறது, அதையே யோசிக்கறது எல்லாம் ஒரு மாதிரியாப் போயிடுமுன்னு சொன்னாக் கேட்கறதே இல்லையே. இங்க பாருங்க, கவுஜ எழுதறாங்க, அதைப் படிச்சு அடுத்தவங்களைக் கேட்க வெச்சுக் கொடுமைப் படுத்தறாங்க. ஆனா அதுக்கு அப்புறம் -10 டிகிரி குளிரில் தண்ணீரில் போய் குதிக்கிறது எல்லாம் இரண்டாம் மாடி. இதுக்குத்தான் சொல்லறேன் - கவுஜ வேண்டாம்! செய்தி இங்க.
பஞ்ச்: கவுஜ வேண்டாம் என பாசிஸ முரசுகொட்டும் கொத்தனாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். கவுஜைன்னா எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இங்கே திட்டறதுக்கும் கவிதைதான்.. வெட்டறதுக்கும் கவிதைதான்.. ஜெயிச்சா மகனை வாழ்த்தவும் கவிதைதான்.. தோத்தா மக்களைத் திட்டவும் கவிதைதான்..நீளமா எழுதி அதை படிக்கட்டா வெட்டி கவுஜ படைச்சுப்பாருய்யா அப்ப தெரியும் கஷ்டம்! உங்களுக்குத் தெரியுமா நீங்க கொடுத்த செய்தியிலே எவ்ளோ பெரிய புரட்சி இருக்குதுன்னு? கவுஜ எழுதின பாவத்தை தொலைக்க உடனே முழுக்கு போட்டிருக்காங்க - நடக்குமா இது நம்ம ஊர்லே?
செய்தி 6
கடைசியா ஒரு சோகச் செய்தி. அவுஸ்திரேலியாவில் ஒரு ரக்பி விளையாட்டின் முதற்பகுதி முடியும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே விழுந்து இறந்துவிட்டாராம். உடன் ஆடியவர்கள் என்ன செய்தார்களாம் தெரியுமா? ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார்களாம். இதனால் இறந்தவர் குடும்பம் மிகுந்த மன கஷ்டத்திற்குள்ளானார்களாம். இங்க படியுங்க.
பஞ்ச்: சே.. இரக்கம் கெட்ட விளையாட்டா இருக்கு! நாமன்னா குறைஞ்சது ஒரு 10 நாள் வீராவேசமா பேசுவோம், 6 மாசம் அமுக்கி வாசிப்போம், ரெண்டு வருஷம் கழிச்சி சமாதானம் ஆவோம்.. அப்புறம்தான் கண்ணு பனிக்கும் இதயம் புளிக்கும் - செத்தவங்களை மறப்போம். நம்மளை மாதிரி ’கருணை உள்ளம்’ அவங்களுக்கு வருமா?
கடைசியா ஒரு போனஸ் மேட்டர். ஆனா இது வயது முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டும்.
பஞ்ச்: என்ன மேட்டரா இருந்தாலும் (முக்கியமா என்னோட கருத்துக்களா இருந்தா) அவசரப்பட்டு கருத்து சொல்லிடக்கூடாதுன்னு சொல்ற அற்புதத் தத்துவமய்யா இது! சரி.. நீரும் பாத்துட்டீர்.. உங்க கலர் கண்ணாடி பல்லை இளிச்சுதா இல்லையா?
Tuesday, January 20, 2009
புதசெவி - 01/20/2009 அல்லது பெனாத்தலாருக்கு எச்சரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
நகர்படத்தை நேரம் சரியா இருக்கும் பொழுது பாருங்க. ரொம்பவே இண்டரெஸ்டிங்! :)
kataisikku munna ithayam pulikkum punch suuperoo super:-))
// தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு? இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது//
ithuvum arumai! kusuppu ammaiyaar kooda ennavoo koovapattu irunthanga ithu paththi:-))
Though A++, superb creativity...
-Arasu
நடக்கட்டும் நடக்கட்டும்.. எவ்ளோ நாள் வஞ்சம்யா என் மேலே?.. உம்ம காழ்ப்புணர்ச்சிய காட்டறதுக்கு இன்னும் ரெண்டு மேட்டர் -- தவளைக்கு கல்யாணம், கவுஜர்க குளிச்சாங்கன்னு சேத்துக்கிட்டு பதிவு போடும் உம் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!
//புதசெவி - 01/20/2009 //
தலைப்பு மட்டும் ட்தான் புதசெவி, மற்றபடி நீங்களே எல்லாவற்றையும் புளி போட்டு விளக்கிட்டிங்க.
முதலில், ரொம்பநாள் கழித்து வந்த பஞ்ச் அண்ணனுக்கு ஒரு ஜெ! போட்டுக்கறேன்.
இதானய்யா கொத்ஸ் பதிவு மாதிரி இருக்கு :-)
//இனிமேல ஒண்ணும் சரி ஆவாதுன்ற நிலைமை வந்ததும், நான் தான் தப்பு.. நான் தான் தப்பு - சத்யமா சொல்றேன்.. என்னை விட்டுடுங்க நான் ஓடிப்போறேன்னு நம்பினவங்களை நட்டாத்துல விடாம, கிளம்பின இடத்துக்கே கொண்டு போய் சேத்தாரே புண்ணியவான்.. அவரைப் பாராட்டுவீங்களா.. //
பஞ்ச் அண்ணா, கலக்கல். நட்டாத்தில் விடப்பட்டவன் :-).
நகர் படத்தை இனிதான் பார்க்கணும்.
பெனாத்தலாருக்கு இருக்கட்டும், உம்ம ஏரியாவுக்கு ஆட்டோ வருதா?னு செக் செசண்டி, இந்த தடவ செம பஞ்ச்.
ஆபிஸ்ல படம் தெரியல, ஹிஹி,வீட்ல போய் பாத்துக்கறேன். :))
ayyoo paarthitteen, ayyoo parthitteen, ayyoo paarthitteen!:-))))))))))
//ரொம்பவே இண்டரெஸ்டிங்! :)//
அதே ! அதே !
:))
இ.கொ சாரே! வெகு சுவாரசியமான செய்தி தொகுப்புதான். கலக்கலா இருக்கு.
//உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க//
:)) அதான் கணக்கா புள்ளி வச்சுதான் கோலம் போடுறீங்களா. அவர் பாவம் அப்பாவிய்யா.
//பஞ்ச் அண்ணா, கலக்கல். நட்டாத்தில் விடப்பட்டவன் :-).
நகர் படத்தை இனிதான் பார்க்கணும்.//
மௌலி அண்ணா, வருத்தமாக இருக்கிறது. சீக்கிரம் கரை சேர்ந்து விடுவீர்கள்.
அது சாதாரண வீடியோ படம் இல்லீங்ணா.. விவகாரமான வீடியோ. அக்கம்பக்கம் பார்த்துட்டுப் அப்புறமா பாருங்க.
புதரகத்திலே இருக்கிறதுனாலே எந்த நகர்படத்தை வேணுமின்னாலும் போடுவீங்களா??
இதுக்கு பேரு தான் கலாச்சார துவேஷம்'ய்யா....
ஆனாலும் சோக்கா'கீதுப்பா... என்னாவொரு திறமை... :)
// kataisikku munna ithayam pulikkum punch suuperoo super:-))//
இது என்ன தங்கிலிஷ் பின்னூட்டம்? அப்புறம் நீரும் அந்தக் கட்சியாச்சே. இப்படி எல்லா ஜூப்பருன்னு பின்னூட்டம் போட்டாக் கட்டம் கட்டிடப் போறாங்க. பார்த்து! :)
//ithuvum arumai! kusuppu ammaiyaar kooda ennavoo koovapattu irunthanga ithu paththi:-))//
அப்படியா?! இதைப் பத்தி வேற எந்த இடத்திலும் நான் படிக்கவே இல்லை! குஷ்பூ அம்மையார் ஈயம் பித்தளை வியாபாரியா?
இந்த மாதிரி நகர் படங்களை அதிகம் போடவும்... சீக்கிரமே உங்களுக்கு பதிவுலக மாத்ருபூதம்னு பேர் வெச்சிருவோம்.
வழக்கம் போல கலக்கல் :)
//பஞ்ச்: உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க.. இப்படி ஆமையை திருப்பி போடு அடிக்கணும் ரேஞ்சுக்கு சமையல் குறிப்பு போடாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.//
ஆமைக்கு மட்டும் அடி விழாது ஆமையை திருப்பி போட்டு அடிக்கனும்னு சொன்னவங்களுக்கும் விழும்னு நினைக்கிறேன் :)
//பஞ்ச்: தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு? இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது//
தவளை எப்படி ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கும்? அப்பறம் எப்படி தவளைக்கு மாலை போட்டிருப்பாங்க?
போட்டோ ஏதாவது இருக்கா?
//
பஞ்ச்: தூக்கத்துல மின்னஞ்சல்தானே அடிச்சாங்க? இது ஒரு தப்பா? போதையிலே எத்தனையோ பேர் பதிவே போடறாங்க! தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு!//
பயங்கரமான உள்குத்து இருக்கும் போல... நீங்க யாரை சொல்றீங்கனு நான் கண்டுபிடிச்சிட்டேன் :))))
// ambi said...
பெனாத்தலாருக்கு இருக்கட்டும், உம்ம ஏரியாவுக்கு ஆட்டோ வருதா?னு செக் செசண்டி, இந்த தடவ செம பஞ்ச்.
ஆபிஸ்ல படம் தெரியல, ஹிஹி,வீட்ல போய் பாத்துக்கறேன். :))//
பாத்தாச்சா? ;)
இப்ப பயம் விட்டதா ?
//Though A++, superb creativity...
-Arasu//
ஆமாம் அரசு, அதான் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கடைசியில் பரவாயில்லை என பதிவில் சேர்த்துவிட்டேன்!
//நடக்கட்டும் நடக்கட்டும்.. எவ்ளோ நாள் வஞ்சம்யா என் மேலே?.. உம்ம காழ்ப்புணர்ச்சிய காட்டறதுக்கு இன்னும் ரெண்டு மேட்டர் -- தவளைக்கு கல்யாணம், கவுஜர்க குளிச்சாங்கன்னு சேத்துக்கிட்டு பதிவு போடும் உம் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!//
பெனாத்தல், இப்போ உமக்கு ஜூப்பருன்னு பின்னூட்டம் போடறவங்கதான் நல்லவங்க. நான் செய்யறது கசக்கும். ஆனா நான் செய்வது உம்ம நன்மைக்குதான் எனத் தெரிய வரும் பொழுது என் அருமை புரியும்.
அப்புறம் நுகபிநி ந்னு சுருக்கமா எழுதாம விரிச்சு எழுதி என் ப்ளாக்ஸ்பாட் கெபாசிடி தாண்டனும்னு காழ்ப்புணர்ச்சி பிடிச்சு ஆடற உம்மை விடவா எனக்கு காழ்ப்புணர்ச்சின்னு எனக் கேட்க நினைத்தாலும் நம் நட்பு என்னைத் தடுக்கிறது.
//தலைப்பு மட்டும் ட்தான் புதசெவி, மற்றபடி நீங்களே எல்லாவற்றையும் புளி போட்டு விளக்கிட்டிங்க.//
வாங்க கண்ணன்,
புதசெவின்னா என்னமோ கெட்ட வார்த்தைன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க போல. பழைய புதசெவி பதிவுகளைப் படித்துவிட்டு வரவும்! :)
//முதலில், ரொம்பநாள் கழித்து வந்த பஞ்ச் அண்ணனுக்கு ஒரு ஜெ! போட்டுக்கறேன்.
இதானய்யா கொத்ஸ் பதிவு மாதிரி இருக்கு :-)//
ஐயா மதுரையம்பதியாரே, பஞ்ச் அண்ணா மாசம் ஒரு முறை வராரு. அவரு ரொம்ப நாள் கழிச்சு வரதா ஒரு பிட்டு போடறீரு. அப்புறம் அவருக்கு ஜே போடறீரு. அதையும் செஞ்சுட்டு இந்த ப்திவு அக்மார்க் கொத்ஸ் பதிவுன்னு சொல்லறீரு. அப்படின்னா என்ன? நாந்தான் பஞ்சா? என்ன அக்குறும்பு செய்யறீரு!
//பஞ்ச் அண்ணா, கலக்கல். நட்டாத்தில் விடப்பட்டவன் :-).//
அண்ணா, எல்லாம் விரைவில் சரியாக எல்லாம்வல்லவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் சரியாகும்.
//நகர் படத்தை இனிதான் பார்க்கணும்.//
பார்த்துட்டு சொல்லுங்க.
//பெனாத்தலாருக்கு இருக்கட்டும், உம்ம ஏரியாவுக்கு ஆட்டோ வருதா?னு செக் செசண்டி, இந்த தடவ செம பஞ்ச்.
//
பஞ்ச் நல்லா இருந்தா எனக்கு ஏன் ஆட்டோ வரணும்? ஒண்ணும் புரியலை!
//ஆபிஸ்ல படம் தெரியல, ஹிஹி,வீட்ல போய் பாத்துக்கறேன். :))//
டிஸ்கி போட்ட பின்னாடியும் வீட்டுக்குப் போய் பார்க்கப் போறீரா? ரொம்பத்தான் தைரியம்.! :))
// ayyoo paarthitteen, ayyoo parthitteen, ayyoo paarthitteen!:-))))))))))
//
பாண்டியம் படத்தில் இருந்து ரஜினி டயலாக்கை திருடியதற்கு உம் மீது கேஸ் நடக்கப் போகுதாமே. கோப்பிறைற் வயலேஷன்! :)
//
அதே ! அதே !
:))//
நாகை சிவா, சின்னப் பையன் பேசற பேச்சா இது!! :))
கொத்ஸ் நீங்க இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை:)
பெனாத்தலார் உங்களை விட்டுவெச்சாருங்கறீங்க:)
Post a Comment