- இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
- பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
- விடைகளை அனுப்பும் பொழுது குறுக்கு நெடுக்கு எனப் பிரித்து குறுப்பிற்கான எண்களுடன் அனுப்பினால் சரி பார்க்க எளிதாக இருக்கும்.
- நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
- நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
- இணையாசிரியர் அண்ணன் பெனாத்தலார் அவர்களுக்கு என் நன்றிகள்.
- இந்த வார திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது.
வழக்கம் போல் இல்லாமல்
- வெறும் விடைகள் அனுப்பாமல், அது வந்த விதத்தையும் அனுப்பினால்தான் முழு மதிப்பெண்கள்!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.
1 | 2 | 3 | 4 | |||||
5 | 6 | |||||||
7 | 8 | |||||||
9 | 10 | |||||||
11 | 12 | 13 | 14 | |||||
15 | ||||||||
16 | 17 | |||||||
குறுக்கு
5 ஆனந்த கானத்தின் ஆரம்பங்கள் கேட்டேன். பலே! (2)
6 ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே, முன்னாள் ஜனாதிபதியே! (6)
7 ஆணவமா? சிதைந்த செருப்புக்கா? (4)
8 அத்தை இருக்கையில் இந்த மெத்தையா இறவா வரம் பெற்றது? (3)
9 திரும்பவும் எண்ண கொடுங்கள் (3)
11 இங்கிதம் பெரும்பாலும் தரும் இன்பம் (3)
13 நூறாயிரம் கட்லட் சம்பாதிக்கப் பார் (4)
16 அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது ஔவையாரிடம் தம்பி சொன்னது (3,3)
17 சந்திரகுலத்தில் உதித்த சூரிய வம்சம் (2)
நெடுக்கு
1 காமேஸ்வரன் தலையை வாசனை சூழ பொன்மலை கிடைத்தது (4)
2 சுவைக்காத என்றாயோ இல்லை, சுவையில்லாத என்பாயோ? (5)
3 உறுதி தரவாக் குடும்பமே வந்தது? (3)
4 நாயைப் போல கலாட்டா நடுவே வாடி (4)
10 இது இருந்தால் ”ஐயோ! எண் தலை மாறி விட்டதே!” என்பேனோ? (5)
12 உயிரும் மெய்யுமின்றி உத்தமி சேர்ந்த அரை அழகன் தலை நிமிர்ந்து நிற்பானா? (4)
14 எனக்குக் கிடைச்ச வரம் சாமரம் வீசுவதா? (4)
15 பானை சோற்றுக்கு ஒரு வார்த்தை?(3)
இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
ஸ்டார்ட் மியூஜிக்!