- இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
- பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
- விடைகளை அனுப்பும் பொழுது குறுக்கு நெடுக்கு எனப் பிரித்து குறுப்பிற்கான எண்களுடன் அனுப்பினால் சரி பார்க்க எளிதாக இருக்கும்.
- நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
- நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
- இணையாசிரியர் அண்ணன் பெனாத்தலார் அவர்களுக்கு என் நன்றிகள்.
- இந்த வார திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது.
வழக்கம் போல் இல்லாமல்
- வெறும் விடைகள் அனுப்பாமல், அது வந்த விதத்தையும் அனுப்பினால்தான் முழு மதிப்பெண்கள்!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.
1 | 2 | 3 | 4 | |||||
5 | 6 | |||||||
7 | 8 | |||||||
9 | 10 | |||||||
11 | 12 | 13 | 14 | |||||
15 | ||||||||
16 | 17 | |||||||
குறுக்கு
5 ஆனந்த கானத்தின் ஆரம்பங்கள் கேட்டேன். பலே! (2)
6 ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே, முன்னாள் ஜனாதிபதியே! (6)
7 ஆணவமா? சிதைந்த செருப்புக்கா? (4)
8 அத்தை இருக்கையில் இந்த மெத்தையா இறவா வரம் பெற்றது? (3)
9 திரும்பவும் எண்ண கொடுங்கள் (3)
11 இங்கிதம் பெரும்பாலும் தரும் இன்பம் (3)
13 நூறாயிரம் கட்லட் சம்பாதிக்கப் பார் (4)
16 அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது ஔவையாரிடம் தம்பி சொன்னது (3,3)
17 சந்திரகுலத்தில் உதித்த சூரிய வம்சம் (2)
நெடுக்கு
1 காமேஸ்வரன் தலையை வாசனை சூழ பொன்மலை கிடைத்தது (4)
2 சுவைக்காத என்றாயோ இல்லை, சுவையில்லாத என்பாயோ? (5)
3 உறுதி தரவாக் குடும்பமே வந்தது? (3)
4 நாயைப் போல கலாட்டா நடுவே வாடி (4)
10 இது இருந்தால் ”ஐயோ! எண் தலை மாறி விட்டதே!” என்பேனோ? (5)
12 உயிரும் மெய்யுமின்றி உத்தமி சேர்ந்த அரை அழகன் தலை நிமிர்ந்து நிற்பானா? (4)
14 எனக்குக் கிடைச்ச வரம் சாமரம் வீசுவதா? (4)
15 பானை சோற்றுக்கு ஒரு வார்த்தை?(3)
இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
ஸ்டார்ட் மியூஜிக்!
15 comments:
போன மாதம் போலில்லாமல் இந்த முறை பேராதரவைத் தர வேண்டுகிறேன்.
குறிப்புகளிலும் தவறு இருக்காது என நினைக்கிறேன்!!
//இணையாசிரியர் அண்ணன் பெனாத்தலார் அவர்களுக்கு என் நன்றிகள்.//
//குறிப்புகளிலும் தவறு இருக்காது என நினைக்கிறேன்!//
REDUNDANT REPEAT!
இப்போதைக்கு இவை. மீதியை முயற்சி செய்து பிறகு இடுகிறேன்.
குறுக்கு
5 ஆனந்த கானத்தின் ஆரம்பங்கள் கேட்டேன். பலே! (2) ஆகா
6 ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே, முன்னாள் ஜனாதிபதியே! (6) ?? விழுந்து சிரி (வி வி கிரி)??
11 இங்கிதம் பெரும்பாலும் தரும் இன்பம் (3) இதம்
13 நூறாயிரம் கட்லட் சம்பாதிக்கப் பார் (4) லட்சம்
16 அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது ஔவையாரிடம் தம்பி சொன்னது (3,3) பழம் தமிழ்
17 சந்திரகுலத்தில் உதித்த சூரிய வம்சம் (2) ரகு
நெடுக்கு
1 காமேஸ்வரன் தலையை வாசனை சூழ பொன்மலை கிடைத்தது (4) மகாமேரு
3 உறுதி தரவாக் குடும்பமே வந்தது? (3) வாக்கு
12 உயிரும் மெய்யுமின்றி உத்தமி சேர்ந்த அரை அழகன் தலை நிமிர்ந்து நிற்பானா? (4) தமிழன்
14 எனக்குக் கிடைச்ச வரம் சாமரம் வீசுவதா? (4) சவரம்
15 பானை சோற்றுக்கு ஒரு வார்த்தை?(3) பதம்
//இலவசக்கொத்தனார் said...
போன மாதம் போலில்லாமல் இந்த முறை பேராதரவைத் தர வேண்டுகிறேன். ///
அப்ப போன மாசம் எல்லாருமே எஸ்ஸாகிட்டாங்களா ?
சரி இந்த மாசம் அசத்திப்புடறோம் அசத்தி :)
வாங்க டாக்டர்
5 11 13 17
1 3 12 14 15
இவை சரி.
6 - நீங்க ரெண்டு வார்த்தைப் பதில் சொல்லி இருக்கீங்க. அப்போ குறிப்பில் (4,2) எனச் சொல்லி இருப்பேனே. (6) எனச் சொன்னதால் விடை ஒரே வார்த்தை.
கடைசியாய் விடைகள் வந்த வழியைச் சொல்லாமல் விட்டதால் மதிப்பெண்கள் தரவேண்டுமா? :)
across:
5. aakaa
7. Serukkaa
11. itham
13.latcham
16.njaanap pazam
17. ragu
Down
3. vaakku
12. thamizan
14.savaram
Chandra
வாங்க சந்திரா
5 7 11 13 17
3 12 14
சரியான விடைகள்.
ஆஹா, கரெக்டா time-க்கு போட்டுட்டீங்க.
குறுக்கு
----------
5 ஆனந்த கானத்தின் ஆரம்பங்கள் கேட்டேன். பலே! (2)
- ஆகா
6 ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே, முன்னாள் ஜனாதிபதியே! (6)
- சிரிக்கலாமே
7 ஆணவமா? சிதைந்த செருப்புக்கா? (4)
- செருக்கா
8 அத்தை இருக்கையில் இந்த மெத்தையா இறவா வரம் பெற்றது? (3)
- மடியா
9 திரும்பவும் எண்ண கொடுங்கள் (3)
- தருக
11 இங்கிதம் பெரும்பாலும் தரும் இன்பம் (3)
- இதம்
13 நூறாயிரம் கட்லட் சம்பாதிக்கப் பார் (4)
- லட்சம்
16 அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது ஔவையாரிடம் தம்பி சொன்னது (3,3)
- பழம் தருக
17 சந்திரகுலத்தில் உதித்த சூரிய வம்சம் (2)
- ரகு
நெடுக்கு
--------
1 காமேஸ்வரன் தலையை வாசனை சூழ பொன்மலை கிடைத்தது (4)
- மகாமேரு
2 சுவைக்காத என்றாயோ இல்லை, சுவையில்லாத என்பாயோ? (5)
- ருசிக்காத
3 உறுதி தரவாக் குடும்பமே வந்தது? (3)
- வாக்கு
4 நாயைப் போல கலாட்டா நடுவே வாடி (4)
- வாலாட்டி
10 இது இருந்தால் ”ஐயோ! எண் தலை மாறி விட்டதே!” என்பேனோ? (5)
- கலக்கம்
12 உயிரும் மெய்யுமின்றி உத்தமி சேர்ந்த அரை அழகன் தலை நிமிர்ந்து நிற்பானா? (4)
- தமிழன்
14 எனக்குக் கிடைச்ச வரம் சாமரம் வீசுவதா? (4)
- சவரம்?
15 பானை சோற்றுக்கு ஒரு வார்த்தை?(3)
- பதம்
குறுக்கு:
5. ஆகா................ஆ.னந்த கா.னத்தின் ஆரம்பங்கள் மற்றும், பலே இரண்டும் குறிப்புக்கள்.
6. சிரிக்கலாமே....ஜோக்கைக் கேட்டபின் நரசிம்ம.. (சிரி), கலாமே!
7. செருக்கா..... ஆணவம் என்ற பொருளில் "செருப்புக்கா" வை சிதைத்தால்
8. அமர.... இறவா வரம்; மற்றும் அத்தை இருக்கையில்... (சந்தேகமாக இருக்கிறது).
11. இதம்...இங்கிதம், இன்பம்.
13. லட்சம்.....நூறாயிரம், மற்றும் "கட் லட்சம் பாதி"
17. ரகு.....சந்தி ரகு லத்தில்
நெடுக்கு
1. மகாமேரு.....காமே ஸ்வரன் தலையை மரு (வாசனை) சூழ...
2. ருசிக்காத.... சுவைக்காத/சுவையில்லாத
3. வாக்கு.... உறுதி / தர வாக்கு டும்பமே
12. தமிழக.... தமி + ழக (உயிர், மெய் இல்லாத உத்தமி / அழகன்).... என் வோட்டு இந்த குறிப்புக்கு தான், நேரம் பிடித்தது எனக்கு.
14. சவரம்......கிடைச் சவரம்
15. பதம்....ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்?
குறுக்கு
5. ஆகா
6. சிரிக்கலாம்
7. செருக்கா
8. மடியா
9.
11. இதம்
13. லட்சம்
16. பழம் (இன்னொரு பாதி இன்னும் கண்டுபிடிக்கலை)
17. ரதி
நெடுக்கு
1. மகாமேரு
2. ருசிக்காத
3. வாக்கு
4. வாலாட்டி
10.
12. தமிழன்
14. சவரம்
15. பதம்
//வெறும் விடைகள் அனுப்பாமல், அது வந்த விதத்தையும் அனுப்பினால்தான் முழு மதிப்பெண்கள்!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இது என்ன கொடுமை.. என்ன மாதிரி பதிவே படிக்காம நேரா புதிருக்கு போய் பதில் போடறவஙக் நிலை :(((
சரி... ஏதோ இப்பவாவது பார்த்ததால போட்ட விடைகளுக்கு பதில் சொல்றேன் :D
குறுக்கு
5. ஆனந்த கானத்தின் ஆரம்பங்கள் கேட்டேன். பலே!
6. ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே, முன்னாள் ஜனாதிபதியே! - முதல்பாதி சிரி, இரண்டாம் பாதி கலாம். ரெண்டும் சேர்த்து சிரிக்கலாம் :)
7. ஆணவமா? சிதைந்த செருப்புக்கா?
8. அத்தை இருக்கையில் இந்த மெத்தையா இறவா வரம் பெற்றது? - “அத்தை மடி மெத்தையடி” பழமொழில இருந்து மடி- மெத்தையானு கேட்டதால மடியா னு மாத்தியாச்சு (இறவா வரம்-க்கும் சரியா இருக்கறதால சரியான பதில் தான்னு நம்பறேன்)
11 இங்கிதம் பெரும்பாலும் தரும் இன்பம்
13.நூறாயிரம் கட்லட் சம்பாதிக்கப் பார்
16. அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது ஔவையாரிடம் தம்பி சொன்னது (3,3) - முதல் பாதி- சிவன் பார்வதி கிட்ட பிள்ளையார் கேட்ட பழம். இரண்டாவது பாதி ஔவையார் கிட்ட முருகர் என்ன சொன்னாருனு என்கிட்ட சொல்லலை. அதனால 15 கரெக்டா தப்பானு நீங்க சொல்றத வைச்சு தான் கண்டுபிடிக்கனும்
17. சந்திரகுலத்தில் உதித்த சூரிய வம்சம் - ரதி (சவரம்-ல ர இருக்கு. மீதி ஒரு எழுத்த சந்திரகுலம் வார்த்தைல தேடினப்போ தி தான் சிக்குச்சு). ஒருவேளை இது தப்புனு சொன்னீங்கனா அடுத்த சந்தேக லிஸ்ட்டில் இருக்கும் ரவி பதிலாக அளிக்கப்படும்.
நெடுக்கு
1. காமேஸ்வரன் தலையை வாசனை சூழ பொன்மலை கிடைத்தது - வாசனை - மரு- காமேஸ்வரனின் தலையை மரு சூழ - மகாமேரு கிடைத்தது :)
2. சுவைக்காத என்றாயோ இல்லை, சுவையில்லாத என்பாயோ? - முதலிலேயா _சி_கா_ இந்த அளவிற்கு பதில் வந்துவிட்டதால் ருசிக்காத என்பது பதிலாக இருக்குமோ என்று லைட்டாக மண்டையில் பல்ப் எரிந்தது. க்ளூவுடன் ஒத்து சென்றதால் பதில் போட்டாயிற்று
3.உறுதி தரவாக் குடும்பமே வந்தது?
4.நாயைப் போல கலாட்டா நடுவே வாடி - வாடியின் நடுவே “லாட்” வந்து வாலாட்டி என்றானது
12. உயிரும் மெய்யுமின்றி உத்தமி சேர்ந்த அரை அழகன் தலை நிமிர்ந்து நிற்பானா? - உத்தமி அழகன் இரண்டு வார்த்தையிலும் உயிரும் மெய்யும் எடுத்துவிட்டால் கிடைக்கும் வார்த்தை
14. எனக்குக் கிடைச்ச வரம் சாமரம் வீசுவதா?
15. பானை சோற்றுக்கு ஒரு வார்த்தை? - “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” பழமொழில இருந்து சுட்டு பதம்னு சொல்லியிருக்கேன். சரியா தப்பானு நீங்க தான் சொல்லனும்.
ஒரு சந்தேகம் - விடைகள் சரியா இருந்து கண்டுபிடித்த வழி தவறாக இருந்தாலும் மதிப்பெண்கள் உண்டா???
குறுக்கு
5 ஆகா (2)
6 சிரிக்கலாம்(6)
7 செருக்கா (4)
8 மடியா (3)
9 தருக (3)
11 இதம் (3)
13 லட் சம்(4)
16 பழம் தருக(3,3)
17 ரகு (2)
நெடுக்கு
1 மகாமேரு (4)
2 ரசிக்காத (5)
3 வாக் கு(3)
4 வாலாட்டி (4)
10 கலக்கம் (5)
12 தமிழன் (4)
14 சவரம் (4)
15 பதம்(3)
குறுக்கு
6 சிரிக்கிரியே
7 செருக்கா
நெடுக்கு
2 ருசிக்காத
குறுக்கு
16 பழம் தரவா
குறுக்கு
5 ஆகா (ஆ னந்த கா னத்தின் ஆரம்பங்கள் - ஆ,கா)
6 சிரிக்கலாமே (ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே(சிரி), முன்னாள் ஜனாதிபதியே(கலாமே))
7 செருக்கா (சிதைந்த செருப்புக்கா? - செருக்கா)
8 மடியா (அத்தை மடி - மெத்தை; இறவா - மடியா )
11 இதம் (இன்பம் = இதம்; இ ங்கி தம் வார்த்தையுள் இதம் ஒளிந்திருக்கின்றது)
13 லட்சம் ( நூறாயிரம் : லட்சம்; கட்லட் சம்பாதிக்கப் பார் - இந்த வார்த்தைகளிலும் லட்சம் ஒளிந்திருக்கின்றது)
16 பழம்,தமிழ் ( அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது - பழம்; ஔவையாரிடம் தம்பி சொன்னது - தமிழ்)
17 ரகு (சந்திரகுலத்தில் : ‘ரகு’ ஒழிந்திருக்கின்றது)
நெடுக்கு
2 ருசிக்காத (சுவைக்காத என்றாயோ இல்லை, சுவையில்லாத என்பாயோ? சுவை - ருசி)
3 வாக்கு (உறுதி= வாக்கு ”தர வாக் கு டும்பமே” - வாக்கு இந்த வாக்கியங்களில் ஒழிந்திருக்கின்றது)
12 தமிழன் (உயிரும் மெய்யுமின்றி உத்தமி : தமி; சேர்ந்த (அரை அழகன் - ழன்)= தமிழன், தலை நிமிர்ந்து நிற்பானா?
14 சவரம் (எனக்குக் கிடைச் ச வரம் சாமரம் வீசுவதா? - சவரம் வார்த்தைகளில் ஒழிந்திருக்கிறது)
15 பதம் ( பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்; வார்த்தை = பதம்)
மத்ததுக்கெல்லாம், நீங்க பயன்படுத்தற அகராதியில் ஏதாவது clue இருக்குதா ??
Post a Comment