Saturday, October 31, 2009

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள் - அக்டோபர் 2009

போன மாதம் எளிது எளிது என எல்லாரும் சொன்னதால் இந்த முறை கொஞ்சம் கஷ்டமாக்கினேன். ஆட்கள் எல்லாம் அம்பேல் ஆகிட்டாங்களே!! அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? நல்ல வேளை! வி.ஆர். பாலகிருஷ்ணனும் லக்ஷ்மி சங்கரும் சரியான விடைகளைத் தந்தார்களோ, நான் தப்பிச்சேன்!

தலைவர் வாஞ்சியின் அறிவுரைப்படி இந்த முறை விடைகள் வந்த விதத்தை விளக்கப் போவது இல்லை. விடைகளைத் தந்து விடுகிறேன். வந்த விதத்தை நீங்கள் பின்னூட்டமாகச் சொல்லலாமே.


4 comments:

said...

ஒரு குறிப்பில் தப்பு இருக்கு. வாஞ்சி தனிமடலில் சுட்டிக் காட்டினார். அதையும் சொல்லிடுங்க.

(இதை மட்டும் கரெக்ட்டா எல்லாரும் சொல்லிடுவீங்களே)

said...

ஹைய்யா இந்த மாச போட்டியில நிறைய பேர் எஸ்ஸாகிட்டாங்களா ? :)

வகித்திடு - இதுல எதுனாச்சும் எரர் இருக்கா? :)

said...

இலவசமா ஒரு புதிர்தந்து விட்டு ஏகப்பட்ட உழைப்பை விலை கேட்கிறீரே? கூலி கட்டுப்படியாகவில்லையென்று நாலைந்து குறிப்புகளுக்கு நான் விடை கண்டுபிடிக்க
மறுத்துவிட்டேன் (என்னால விடை கண்டு பிடிக்க முடியலைன்னு யாரும் நெனைச்சிடக் கூடாதில்ல)

10 நெடுக்கில் பிளிர்வது என்பது புரியவில்லை. அகராதியைச் சொடுக்கிப் பிளிர் என்றால் வாயைக் கொப்பளிப்பது என்றும் அத்தி என்றால் யானை என்றும் தெரிந்து கொண்டேன்.

யானை பிளிறியது என்று படித்திருக்கிறேன்.
அப்படியென்றால் பிளிறுவது என்பதுதான் சரியாக வ இருக்க வேண்டும். அது இங்கே இடிக்குதே?

கஷ்டமாக்க வேண்டும் என்று ரொம்பவே அகராதியை நோண்டிவிட்டீர்களா?

said...

தலைவா, நான் கூட முடிச்சேனே, second attempt அடிச்சதால ஆட்டத்துக்கு சேர்த்துக்கலையா?

என் பங்குக்கு ரெண்டு விளக்கம்.

குறுக்கு
-------
13. இனாமா இடையில்லாப் பயன் கலந்து செய்யுள் தா (6)
பன்(இடையில்லாப் பயன்)+ பா(செய்யுள்) + அளி (தா) => கலந்து=> அன்பளிப்பா (இனாமா)

14. சிறப்பான தடை தரும் துருவை (4)
துருவையை தூக்கி இதுல போடுங்க. ஆஹா, செம்மறி.
செம்(சிறப்பான)+மறி(தடை(டு?))=> செம்மறி. அப்ப இதுதான் correct!
:-)
இப்படித்தான் நான் போட்டேன்.