இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள். ஒரு மேட்சைச் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. தோணி ஒரு அதிரடி ஆட்டம் ஆடி அந்த போட்டியை ஜெயித்துக் கொடுத்தார். அரையிறுதியில் நுழைந்த சென்னை அணியினர் அட்டகாசமாக விளையாடி கோப்பையை வென்றது சரித்திரம்.
அதே போல சேம்பியன்ஸ் ட்ராபியிலும் முதலிரண்டு ஆட்டங்களை எளிதாக வென்றாலும் மூன்றாவது ஆட்டத்தை சூப்பர் ஓவரில் கோட்டை விட்டதால் தென்னாப்பிரிக்க அணியான வாரியர்ஸை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பொழுது அவர்களை கொஞ்சம் போராடியே வென்று அரையிறுதிக்கு சென்றது சென்னை அணி. அதில் அசத்தலாக விளையாடி பெங்களூர் அணியினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு இவர்களை எதிர்த்து ஆட வந்த அணி முன்பு மோதிய அதே வாரியர்ஸ் அணிதான்.
போன முறை தோற்றதற்கு ஈடு கட்டும் வகையில் விளையாடி அந்த அணியினர் வெல்வார்களா? மீண்டும் ஒரு முறை திறமையாக விளையாடி ஐபிஎல் கோப்பையைத் தொடர்ந்து சேம்பியன்ஸ் கோப்பையையும் சென்னை அணியனர் வெல்வார்களா? என மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியது இந்த இறுதிப் போட்டி. ஐபிஎல் விதிகளின் படி இந்த வருடம் அணிகள் யாவும் கலைக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பதால் இந்த அணியினர் விளையாடும் கடைசிப் போட்டி இதுதான் என்று தோணி பலமுறை உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டு ஒரு வெற்றியோடு இந்த அணியினர் தங்கள் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என முனைப்பாக இருப்பதாகவும் சொன்னார்.
மேலும் படிக்க .... தமிழோவியம் பக்கம்
6 comments:
எல்லாரும் கிரிக்கெட் உணர்ச்சிவயப்பட்ட நிலையில கடைசியில நானும் பைனல்ன்னு தெரியாத ஒரு மேட்ச் பைனலா பார்த்து முடிச்சேன் :) -
சென்னை ஜெயிச்சுட்டாங்கன்னு ஓஓஓஓஓஓஓஓஓன்னு எல்லாரும் கத்துனாங்க தமிழன் எங்கு போனாலும் ஜெயிப்பான்னு என்னோட தமிழ் மனசு சொல்லுச்சு !
:)))))))))))))
என்னாண்ணே இது அரைகுறையா ஒரு போஸ்ட்? :-((
திவாண்ணா,
மேலும் படிக்க அப்படின்னு ஒரு சுட்டி இருக்கு பாருங்க. இது தமிழோவியத்துக்காக எழுதினது. ஒரு சொடுக்கு சொடுக்கி ஒரு எட்டு அங்க போய் படிச்சுட்டு வந்திடுங்க.
மீண்டும் எழுத ஆரம்பிச்சுட்டேன் ஒரு கடுதாசி போடக் கூடாதோ. ஏதோ அம்பி பதிவிலேருந்து நூல் பிடிச்சு வரேன்:))சென்னை வாழ்க க்ரிக்கெட் வாழ்க.
தமிழோவியமும் போய் பார்க்கிறேன்.
அம்மா
இதுக்கு முந்தின பதிவையும் பார்த்திடுங்கோ! :)
Oh!!! Do they play cricket? I thought in IPL they play only money :-(
-Arasu
Post a Comment