| |||||||||||||||||||||
|
Freeயா விடு மாமே....
| |||||||||||||||||||||
|
ஆண்டாள் சொன்னாள், அருணகிரிநாதர் சொன்னார், கம்பர் சொன்னார், காளமேகம் சொன்னார் என்று பேசிக்கொண்டு இருப்பவர் கவனத்திற்கு.
யாப்பு தேவைகளுக்காக சொற்கள் சில சமயங்களில் மாற்றம் பெறும். செய்யுளில் ஓசையின் தேவைக்காக இந்த மாற்றங்கள் வரலாம். செய்யுளில் உள்ள எல்லா வடிவங்களையும் உரைநடையில் கொண்டு வந்தால் படிக்கிறவனுக்குப் புரியாது. எது எளிமையாகப் புரியுமோ அதை பயன்படுத்துவதே நல்லது.
உதாரணமாக வன்பாற்கண் வற்றல் மரம் தளித்தற்றுன்னு வள்ளுவன் எழுதின குறளில் வன்பால் என்றால் வலிய பாலை. அதற்காக சகாரா பால் என உரைநடையில் எழுதினால் படிக்கிறவனுக்கு என்ன தோணும்?
கம்பன் சூர்ப்பணகைப் படலத்தில் ஓட்டந்தாள் என்று எழுதி இருக்கிறார். ஓட்டந்தாள் என்றால் ஓட்டம் தந்தாள், அதாவது ஓடினாள். இன்று பிடி உஷா ஓட்டந்தாள் என்று இன்று எழுத முடியுமா? கம்பன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற முன்மாதிரியையா இங்கே காட்ட முடியும்? ஓடினார் என்பதுதானே சரியான வடிவம்? அப்படிச் சொன்னால்தானே புரியும்?
ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா?
அதனால் உரைநடையில் அதற்கான சரியான வடிவத்தை பயன்படுத்துவதே நலம்.
ஐயா சாமிகளா, இதெல்லாம் நான் சொன்னதுன்னு உடனே கிளம்பி வந்துடாதீங்க. எனக்கு இலக்கணத்தில் சந்தேகம் வந்தால் உடனே கேட்டு சரி செய்து கொள்ள அணுகும் ஹரி அண்ணா அவர்கள் சொன்னது. இதில் இருக்கும் ஏரணத்தைப் புரிந்து கொண்டு நடந்தால் எல்லாருக்கும் நல்லது.
There is right. There is wrong. There is acceptable. There is avoidable. Why are these nuances too difficult for some people to understand?
இது மட்டும் நான் சொல்லறது!
புத்தம் சரணம் கச்சாமி!