ஆண்டாள் சொன்னாள், அருணகிரிநாதர் சொன்னார், கம்பர் சொன்னார், காளமேகம் சொன்னார் என்று பேசிக்கொண்டு இருப்பவர் கவனத்திற்கு.
யாப்பு தேவைகளுக்காக சொற்கள் சில சமயங்களில் மாற்றம் பெறும். செய்யுளில் ஓசையின் தேவைக்காக இந்த மாற்றங்கள் வரலாம். செய்யுளில் உள்ள எல்லா வடிவங்களையும் உரைநடையில் கொண்டு வந்தால் படிக்கிறவனுக்குப் புரியாது. எது எளிமையாகப் புரியுமோ அதை பயன்படுத்துவதே நல்லது.
உதாரணமாக வன்பாற்கண் வற்றல் மரம் தளித்தற்றுன்னு வள்ளுவன் எழுதின குறளில் வன்பால் என்றால் வலிய பாலை. அதற்காக சகாரா பால் என உரைநடையில் எழுதினால் படிக்கிறவனுக்கு என்ன தோணும்?
கம்பன் சூர்ப்பணகைப் படலத்தில் ஓட்டந்தாள் என்று எழுதி இருக்கிறார். ஓட்டந்தாள் என்றால் ஓட்டம் தந்தாள், அதாவது ஓடினாள். இன்று பிடி உஷா ஓட்டந்தாள் என்று இன்று எழுத முடியுமா? கம்பன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற முன்மாதிரியையா இங்கே காட்ட முடியும்? ஓடினார் என்பதுதானே சரியான வடிவம்? அப்படிச் சொன்னால்தானே புரியும்?
ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா?
அதனால் உரைநடையில் அதற்கான சரியான வடிவத்தை பயன்படுத்துவதே நலம்.
ஐயா சாமிகளா, இதெல்லாம் நான் சொன்னதுன்னு உடனே கிளம்பி வந்துடாதீங்க. எனக்கு இலக்கணத்தில் சந்தேகம் வந்தால் உடனே கேட்டு சரி செய்து கொள்ள அணுகும் ஹரி அண்ணா அவர்கள் சொன்னது. இதில் இருக்கும் ஏரணத்தைப் புரிந்து கொண்டு நடந்தால் எல்லாருக்கும் நல்லது.
There is right. There is wrong. There is acceptable. There is avoidable. Why are these nuances too difficult for some people to understand?
இது மட்டும் நான் சொல்லறது!
புத்தம் சரணம் கச்சாமி!
10 comments:
நல்லாவே பாடம் நடத்துறீங்க! மெல்ல தமிழ் இனி வாழும்!!
நல்ல தகவல்களாக இருந்தது. நன்றி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
முழுக்க முழுக்க ஒத்துக் கொள்ள வேண்டிய பதிவு.
:-)) Poetic justice இது தானா?!!
புத்தம் சரணம் கச்சாமி!
பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
இ.கொ,
பாவம்யா கம்பர், அவர் எல்லாம் இன்னிக்கு இருந்தா இணையம் வந்து தமிழ் கத்துக்கனும்!
அப்புறம் பூவில நெய் பூசி வாணலில போட்டு வறுத்து சாப்பிடணுமா> இப்படிலாமா நெய்த்துக்கு அர்த்தம் வருது?
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப கச்சக சுற்று என்பதோட சேர்த்து பார்த்தா பொருள் மாறுமே,
சரமாக தொடுத்த குளிர்ந்த பிச்சி பூவினை அழககா சுற்றி இருந்தாள் அப்படினு தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.யாரோ ஒரு பொண்ணு ,வள்ளியாக கூட இருக்கலாம் அப்படி கொண்டைல பிச்சி பூ வச்சு இருப்பதை சொல்லி இருக்ககூட்டும்.
பிச்சி = முல்லை,
தட்பம்= குளிர்,
கச்சக =அழகாக,
சுற்று= சுற்றி இருப்பது,
தனியா ஒரே ஒரு பூவ சுத்த முடியுமா?
நெச்சு= நெய்த= நெய் பூசிய என்று எப்படி எடுத்துக்கொள்வது, பூமேல எல்லாம் இயல்பா ஒரு வாக்ஸ் கோட்டிங்க் இருக்கும், அதை நெய்னு சொல்லி இருக்கலாம்னா, அருணகிரி பாட்டணி மேஜர் படிச்சு இருப்பாரா?
துணி நெய்தல்=இழைகளை இணைப்பது,அப்படியே பூக்களை தொடுப்பதை நெய்த என்று எடுத்துக்கலாமோ?
அடுத்த வரிகளை போட்டா ,முழுசா படிச்சா வேற பொருள் வரலாம்.அடுத்த வரிகளைப்போடுங்க.
கள்வடியும் பூக்கள்னு சொன்னா அதிலிருந்து கள் எடுத்து குடிக்கிறாங்கனு சொல்வாங்களோ? :-))
ஓசூர் ராஜன்,
வாங்க ,வணக்கம், நன்றி
ஓசூர் எல்லாம் எப்படி இருக்கு, உங்க ஊரை தாண்டி (அனுமான் போல இல்லை)சமிபகாலமாக பல முறை சென்று வந்துவிட்டேன்.
தமிழ் இன்னும் மெல்லமா தான் வளரனுமா எல்லாம் சேர்ந்து காம்ப்ளான் கொடுக்கலாம் சார்!
நம்ம சைட் பக்கமெல்லாம் உங்க காத்து வீசாதோ?
இருக்கட்டும்.இருக்கட்டும்!
எதைப் பத்தி எழுதினீங்கனு தெரியல:)
இருந்தாலும் நீங்க சொல்றீங்க. அதனால் நானும் சரின்னு சொல்றேன்.
இதுக்குத்தான் நான் இப்படி தப்பெல்லாம் செய்யறதில்லை. எளிமையான தமிழ் போதும்!
Post a Comment