Thursday, December 22, 2011

பிரம்பில்லாத பாரா!

பாரா ஒரு பிரம்படி மாஸ்டர். அவருக்காக வெண்பா புத்தகம் எழுதும் பொழுதும் சரி, கொத்தனார் நோட்ஸ் எழுதும் பொழுதும் சரி, அவர் விதித்த கெடுவிற்குள் நம்மை எழுத வைத்துவிடுவார். அந்நேரங்களில் அவர் மின்னரட்டை செய்ய வந்தால் என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் என்னை மாதிரியான ஒரு சோம்பேறி கொடுத்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடிந்தது.  இப்பொழுது அவருக்குத் தர வேண்டியது எதுவும் இல்லை என்பதால்தான் எழுதுவது சுணங்கிப் போனது என்பது நிஜம்.

எவ்வளவோ புது முயற்சிகளை நானும் செய்து பார்த்துவிட்டேன். மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று எல்லாமே கொஞ்சம் நாளைக்கு மும்முரமாகப் போகும். அதன்பின் மெதுவாக அப்படியே கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆன கதையாய் காணாமல் போய்விடும். பதிவுகள் எழுதுவதாகட்டும், புதைபுதிர்கள் போடுவதாகட்டும், ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதுவதாகட்டும், புதசெவி பத்திகளாகட்டும், விக்கிபசங்க தளமாகட்டும், எல்லாமே இவ்வழிதான். 


இப்படித் தொடங்கும் என் தற்போதைய மோகம் குறித்த பதிவு தமிழோவியத்தில்! 

Posted via email from elavasam's posterous

0 comments: