Monday, January 09, 2012

புதைபுதிர் - பண்புடன் சிறப்பிதழுக்காக செய்தது

ரொம்ப நாள் ஆச்சு புதிர் போட்டு. நம்ம ஒருபக்கம் ஸ்ரீதர் நாராயணன், பண்புடன் இதழின் சிறப்பாசிரியராகி இருக்கேன். ஒரு புதிர் வேணும்ன்னு கேட்டார். சரி அப்படியாவது விட்டுப் போன புதிர் போடும் பழக்கம் திரும்ப வருதா பார்க்கலாம்ன்னு ஒரு புதிர் போட்டு இருக்கேன்.

நல்லா இருக்கா சொல்லுங்க. வழக்கம் போல விடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க. வெறும் விடையைச் சொல்லாம அது எப்படி குறிப்போட ஒத்துப் போகுதுன்னு சொல்லப் பாருங்க. சரியா தவறான்னு சொல்லறது மட்டும் என் வேலை.
புதிருக்கான கட்டங்களும் குறிப்புகளும் கீழே.


1 2 3 4
5 6
78 9
1011 12
13 1415



குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)


நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)

12.பொன் தலை மாறக் கேடு (4)

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)



  • இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.


ஸ்டார்ட் மியூஜிக்!


97 comments:

said...

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் :தங்கச்சிலை, போல அழகான பெண் ஆனாள்
15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம்:சிறை

said...

அனானி ஒருத்தர் விடை சொல்லி இருக்காரு.

14கு, 15நெ போட்டு இருக்காரு. ரெண்டும் சரியான விடை.

ஒரு பெயரைச் சொன்னா கணக்கு வெச்சுக்க சரியா இருக்குமே!

அதே மாதிரி வெறும் நம்பர் போடாம கு,நெ சேர்த்து போட்டா நல்லது.

said...

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)
- பதிவுலகம்

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)
- தைல?

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)
-திவசம்

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)
- கைதிகள்

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)
- கோபுரமா

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)
- பயின்று

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)
- போம்

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)
- தங்கச்சி

நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)
- மதி

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)
- கலகம்

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)
- அம்பிகை

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)
- கதைக்களன்

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)
- வம்பு தும்பு

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)
- மாந்தர்?

12.பொன் தலை மாறக் கேடு (4)
- பங்கம்

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)
- சிறை

said...

வாரமலர் அளவுக்கு கொஞ்சம் இறங்கிவந்து கேள்வி கேளுங்களேன். என்னை மாதிரி தற்குறிகளும் கலந்துக்குவோம்ல

said...

//நல்லா இருக்கா சொல்லுங்க.//

ரொம்ப நல்லா இருக்கு!

// வெறும் விடையைச் சொல்லாம அது எப்படி குறிப்போட ஒத்துப் போகுதுன்னு சொல்லப் பாருங்க//
நோ நோ- விடிகாலையில எழுந்து கஷ்டப்பட்டு போட்டிருக்கேன், ஒவர்-டைம் வேலை எல்லாம் பார்க்க மாட்டேன்.

நம்ம கடையில் கூட்டம் குறைச்சல், ஓரமா போஸ்டர் ஒட்டிக்கிறேன்.

குறுக்கெழுத்து
http://www.tamilpuzzles.com/2012/01/08/cw4-2/

said...

பூங்கோதை,

வாங்க! :)

6 - எழுத்துப்பிழையா? தவறான விடையா? இன்னும் ஒரு முறை பாருங்க.

14 - முழு விடையையும் எழுதலை போல இருக்கே! :)

11 - என்ன சந்தேகம். சரிதான்.

மீதி எல்லாம் சரி!

said...

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6) பதிவுலகம்

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4) திவசம்

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4) கைதிகள்

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4) கோபுரமா

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2) போம்.

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6) தங்கச்சிலை


நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2) மதி

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4) கலகம்

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4) அம்பிகை

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6) கதைக்களமா

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3) வம்பு தும்பு

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4) மாந்தர்

12.பொன் தலை மாறக் கேடு (4) பங்கம்

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2) சிறை

16-ல் 14 கிடைத்தது. இதுக்கு மேல முடியும்னு தோணலை.

said...

//6 - எழுத்துப்பிழையா? தவறான விடையா? இன்னும் ஒரு முறை பாருங்க.//
தவறான விடைதான், தெரியவில்லை?
தைலா?

14 -எழுதலையா? மன்னிக்கவும்.தூக்கக்கலக்கம்.
தங்கச்சிலை

said...

டாக்டர் விஜய் (இப்படிக் கூப்பிடவே காமெடியா இருக்கு!)

4நெ - கொஞ்சமே கொஞ்சம் சரி பண்ணுங்க. கேள்வி கேட்காதீங்க. அப்போ 12கு சரியா வரும்.

கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு, வேணுமானா அகராதியையும் பார்த்தா, 6கு வும் போட்டுடலாம்!

நல்ல முயற்சி!

said...

பூங்கோதை

6, 14 ரெண்டுமே இப்போ சரி.

6 சந்தேகம் இருந்தா அகராதியைப் பாருங்க.

said...

6கு தைலா (மரப்பெட்டி)

said...

5பதி-ந்-ம் (??)
6 தைய
7 திவசம்
9 கைதிகள்
10கோபுரம்
12 பயின்று
13போம்
14 தங்கச்சிலை



1. மதி
2. பந்தம்
3. அம்பிகை
4. கதைக்களன்
8வம்புதும்பு
11மொத்தம்
12 பங்கம்
15 சிறை

said...

ஸ்கேன்

6 இப்போ சரி! இன்னும் ஒண்ணே ஒண்ணுதானே. போடுங்க!

said...

சத்யா

7 9 12 13 14

1 3 4 8 12 15

இவை சரியான விடைகள். மறுபடி முயன்று பாருங்கள்!

said...

ரைட்டு.
ஆனா எனக்குதான் என்னைக்குமே அகராதி பிடிக்காதே :-).

said...

குறுக்காக:
5. பதிப்பகம்
6. இது மட்டும் இன்னும் தெரியலை... (தை-நு ஆரம்பிக்கும்னு மட்டும் தெரியுதுங்க)
7. திவசம்
9. கைதிகள்
10. கோபுரம்
12. பயின்று
13. போம்
14. தங்கச்சிலை

நெடுக்காக:
1. மதி
2. கபடம் (இதுவும் சரியானு தெரியலைங்க... :()
3. அம்பிகை
4. கதைக்களன்
8. வம்பு தும்பு
11. மாந்தர்
12. பங்கம்
15. சிறை

6, 2 இவை ரெண்டுக்கு விடை தெரிஞ்சிருச்சுன்னா உங்களுக்கு விளக்கம் அனுப்பிடறேன்... :)

said...

குறுக்காக 6 க்கு ஸ்திரி யா இருக்கலாம்... ஆனா தை-nu ஆரம்பிக்கவில்லையே... :(

said...

5 -------பதிப்பகம்
6 -------தைலி
7 திவசம்
9 கைதிகள்
10 ----- கோபுரமா
12 பயின்று
13போம்
14 தங்கச்சிலை


1 மதி
2 -----கபடம்
3 அம்பிகை
4 கதைக்களன்
8 வம்புதும்பு
11 ---- மாந்தர்
12 பங்கம்
15 சிறை
கோடிட்டவை சரி செய்தவை.

said...

குறுக்காக 6க்கு தைலா... சரிங்களா?

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE&table=fabricius

said...

ராசுக்குட்டி,

7 9 12 13 14
1 3 4 8 11 12 15

சரி.

said...

ராசுக்குட்டி

6 சரி

said...

சத்யா

10 11

சரி

said...

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)
திவசம்
9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)
கைதி
10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)
கோபுரம்
13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)
போம்
நெடுக்காக:
3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)
அம்பிகை
4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)
காலட்சேபம்
15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)
சிறை

-சிமுலேஷன்

said...

குறுக்கு
6 தைலா - தையல்நாயகி - வைத்தீசுவரர் - தைலாங்கறது வைத்தியநூல்னு சொல்றாங்க.
10 கோபுரமா - கலைச்சுப்போட்டாச்சு
12 பயின்று - பயறுதான சரி? பயி(று) - படிச்சாச்சு.
13 போம் - போயாச்சு.
14 தங்கச்சிலை - மைதாசின் மகள் - தொட்டா தங்கச்சிலை.

நெடுக்காக
1 சார் - கமல்சார், ரஜினிசார், அறிவுசார்.
3 அம்பிகை - அம்பி + கை
4 கதைக்களன் - கதைக்களன்.
11 மாந்தர் - R.K.Narayan's commom man. ;)
15 சிறை - அடைச்சாச்சு.
12 பங்கம் - தப்பாப்போச்சு போங்க.

மற்றவை இப்போ தெரில.

said...

குறுக்காக:
7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)
திவசம்
10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)
கோபுரம்
13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)
போம்
14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)
தங்கச்சிலை
நெடுக்காக:
1.அறிவுக்கு மரியாதை கொடு (2)
மதி
3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)
அம்பிகை
4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)
காலட்சேபம்
8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)
வம்பு தும்பு
12.பொன் தலை மாறக் கேடு (4)
பங்கம்
15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)
சிறை

said...

சிமுலேஷன்

7 13 3 15 சரி
9 விடை நாலு எழுத்து ஆச்சே
10 கொஞ்சமா மாத்தணும். குறிப்பைப் பாருங்க.

said...

செந்தில்

6 - சரி. ஆனா நீங்க சொல்லும் பொருள் நான் கேள்விப்பட்டது இல்லை. அகராதியைப் பாருங்க. குறிப்பு எப்படி வந்ததுன்னு புரியும்.

10 12 13 14
3 4 11 12 15

இதெல்லாம் சரி.

said...

சிமுலேஷன்

7 13 14
1 3 8 12 15

சரி

said...

குறுக்காக
5.பதிவுலகம்
6.தைலா
7.திவசம்
9.கைதிகள்
10.கோபுரமா
12.பயிற்று
13.போம்
14.தங்கச்சிலை

நெடுக்காக
1.மதி
2.கலகம்
3.நம்பிகை
4.கதைக்களன்
8.வம்புதும்பு
11.மாந்தர்
12.பங்கம்
15.சிறை

said...

ஆயில்யா

12, 3 தவிர மத்த எல்லாம் ஓக்கே :)

டச் திரும்ப வந்தாச்சு போல! :)

said...

3 பயின்று

12 சாய்ஸ்ல விட்டாச்சு பாஸ் நீங்களா பார்த்து எதாச்சும் போட்டு கொடுங்க! :))


#டச் விட்டுப் போக வைச்சது நீங்கதான் இனி கரீக்டா மாசா மாசம் வரணும் ஆங் :)

said...

அலோ மிஸ்டர் ஆயில்ஸ்

நீங்க 3ன்னு போட்டதுதான் 12.

3தான் கண்டுபிடிக்கணும். பிடியும்.

said...

குறுக்கு:
5. பதிவுலகம். //பதி//
6. தைல //தையல//
7. திவசம் //வசம்பு தி..//
9. ? //கையகம் என்றாலும் கடசி எழுத்து உங்க விதிப்படி உதைக்குது//
10. கோபுரமா //கோபு + ரமா//
12. பயின்று //பயிறு, முயற்சி..//
13. போம் //போதும், செல்வீர்..//
14. தங்கச்சிலை //சகோதரி, மைதாஸ் பெண்//

நெடுக்கு:
1. மதி //"அ"றிவுக்கு "ம"ரியாதை//
2. கலகம் //கந்தன் தலை, குழப்பம், படகு//
3. அம்பிகை //Obvious :-(//
4. கதைக்களன் //பீமனின் ஆயுதம், புனைவு நடந்த இடம்//
8. வம்புதும்பு //guess//
11. மாந்தர் //ஏமாந்தவர், மொத்தம்//
12. பங்கம் //@vivaji :-) //
15. சிறை //சில்லறை, ஆதி+அந்தம்//

கெக்கேபிக்குணி
http://kekkepikkuni.blogspot.com

said...

பூங்கோதை, உங்கள் தளம் நல்லா இருக்கு. இனியும் வருவேன். நன்றி.

said...

௧)மதி
௧௫)சிறை
௧௨)பங்கம்
௧௩) போம்

இப்போதைக்கு இது போதும் மீதம் அப்புறம் பாத்துச்சொல்றேன்

said...

கெபி அக்கா

5 7 10 12 13 14 - சரி
6 - எபி
9 - ம்ஹூம்

1 2 3 4 8 11 12 15 - சரி

said...

வினோ

போட்ட நாலும் சரி. ஆனா இப்படி தமிழ் நம்பர் எல்லாம் போட்டுப் படுத்தக் கூடாது.

said...

குறுக்கு :

5. பதிவுலகம்
7. திவசம்
9. கைதிகள்???? :(
10. கோபுரமா
13. போம்


நெடுக்காக:

1. மதி
3. அம்பிகை
4. கதைக்களம்
8. வம்பு தும்பு
11. மாந்தர்
12. பங்கம்
15. சிறை

said...

குறுக்காக

6. தைலா

said...

5) பதிவர்கள்
9) காமராஜ்

said...

ஏஸ் (சிங்கம்லன்னு போடறது இல்லையா? :) )

5 7 9 10 13
1 3 8 11 12 15

9 ஏன் :( ?

4 ஒரு சின்ன மாற்றம் வேணும்.

said...

ஏஸ்

6 சரி

said...

வினோ

5, 9 - ரெண்டுமே சரியில்லை

குறிப்போட பொருத்திப் பார்க்கணும்.

said...

நெ

1. மதி
2. ???? தர்கம் / கலகம்
3. ??
4. கதைக்களம்
8. வம்புதும்பு
11.மாந்தர்
12.பங்கம்
15.சிறை

குறுக்
5. பதிவர்கள்?
6. இதில இல்லையே.
http://ta.wiktionary.org/w/index.php?
தகர வருக்கம் முழுக்க தேடியாச்சு.
7. திவசம்
9. கைதிகள் (குருட்டாம்போக்கு)
10. கோபுரமா
12. (பயம்பு) - எப்படி!
13. போம்
14.தங்கச்சிலை
உங்க டிக்சனரி தேடத் தெரியலை எனக்கு.
7. திவசம்

said...

அந்தோணி

1 8 11 12 15 - சரி
2 - குடுத்த ரெண்டு விடைகளில் ஒண்ணு சரி. எது?
4 - ஒரு சின்ன மாற்றம் வேணும்

6- நான் கூட ஒரு அகராதி சுட்டி தந்திருக்கேனே. அதில் இருக்கு :)

7 9 10 13 14 - ஓக்கே

said...

6. தைலா. //தையலா பெட்டி//
9. கைநகம் //இந்த குறிப்பு செம கடி என்பதால், கைநகம் "கடி" என்று நினைக்கிறேன்//

said...

கெபி அக்கா

6 ஓக்கே
9 ம்ஹூம் :)

said...

குறுக்காக:

12.பயின்று


நெடுக்காக:

4. கதைக்களன்

said...

ஏஸ்

12, 4 - ரெண்டும் ஓக்கே!

said...

நெடுக்காக:

2. கலகம்

சகோதரி, தலை, marigold?? ஒன்னும் பிரியலையே..

said...

வழக்கம் போல் ஒரே ஒரு விடை தெரியவில்லையே.. சகோதரி சதி பண்றாளே என்ன கொடுமை சார் இது :(

said...

ஏஸ்

2 சரி :)

said...

ஏஸ்

எல்லாம் ஈசியா வந்துட்டா அடுத்த முறை போர் அடிச்சுடாது?! :)

said...

குறுக்காக:

14. தங்கச்சிலை

அனைத்தும் முடிச்சாச்சே ... சிங்கம்லே.. :)

said...

ஏஸ்

குட் ஜாப்!!

சிங்கம்லே!! :)

said...

எல்லா பதில்களும் மறுபடியும்-ங்க... 5 , 10 (silly mistake :) ஆனாலும் நீங்க ரொம்ப கண்டிப்பான வாத்தியார். மாந்தர் சரியாக சொல்லியும் இதை சரி-நு எடுத்துக்க மாட்டேங்கறீங்களே...), 2 இந்த மூன்றும் திருத்தும் செய்துள்ளேன்.

குறுக்காக:
5. பதிவுலகம்
6. தைலா
7. திவசம்
9. கைதிகள்
10. கோபுரமா
12. பயின்று
13. போம்
14. தங்கச்சிலை

நெடுக்காக:
1. மதி
2. கலகம்
3. அம்பிகை
4. கதைக்களன்
8. வம்பு தும்பு
11. மாந்தர்
12. பங்கம்
15. சிறை

said...

ராசுக்குட்டி

இப்போ போட்டது எல்லாமே சரி :)

said...

1-மதி,2-கபடம்,3-அம்பிகை,4-கதைக்களன்,பதிப்பகம்,6-தைல,7-திவசம்,8-வம்புதும்பு,9-கைதிகள்,10-கோபுரமா,11-மாந்தர், 12-பங்கம்,13-போம்,14-தங்கச்சிலை,15-சிறை

said...

10அம்மா

2,6 சரியில்லை

போட்டதில் மத்த எல்லாம் ஓக்கே

said...

2க்கும் 6க்கும் விடையை எப்போ சொல்வீங்க?

said...

10அம்மா

கொஞ்ச நாள் போகட்டும், இன்னமும் மக்கள் போட்டுக்கிட்டு இருக்காங்களே!

said...

வருசக்கணக்குல ஆவுது சார் உங்க தளத்துக்கு வந்து.. புதிரை சால்வ் செஞ்சுட்டு பிறகு வரேன்

said...

வாங்க அப்பாதுரை

விட்டுப் போனதெல்லாமும் படியுங்க. :)

said...

இப்போதைக்குத் தெரிந்தவை:

9 - கைதிகள் - கரங்கள் - மீதியின் பாதி - சிறை சென்றவர்கள்
2 - கலகம் - படகு=கலம். அதன் நடுவே கந்தனின் தலை=’க’ எடுத்து வீசினால் விளைந்த குழப்பம் - கலகம்.
3 - அம்பிகை - ஐயராத்துப்பையன்=அம்பி. அவன் கையில் = அம்பி+கை - அம்மன்!

மிச்சம் பின்னால வருது. :)

said...

5 --பதிவுலகம்
6 --தைலா
7 திவசம்
9 கைதிகள்
10 கோபுரமா
12 பயின்று
13போம்
14 தங்கச்சிலை


1 மதி
2 ----கலகம்
3 அம்பிகை
4 கதைக்களன்
8 வம்புதும்பு
11 மாந்தர்
12 பங்கம்
15 சிறை

said...

செந்திலு

9 2 3 இப்போ ஓக்கே!

said...

சத்தியா

ஜூப்பரு! எல்லாம் சரி. அது என்ன 2 மட்டும் சந்தேகமாப் போட்டு இருக்கீர்?

சரிதான்வோய்!! :)

said...

7 - திவசம் - அழுத்”தி வசம்”பினைத் தடவிய பாட்டியை நினை - திவசநாள் - நீத்தார்
8 - வம்புதும்பு - அம்புகள் - தலைநீக்கி சலசலப்பை உண்டாக்கியாச்சு.

நான் சின்னப்பையங்கறது இப்போவாச்சும் தெரியுதா? 3 எழுத்து தெரியல 5வதுல. :(

said...

வேகவேகமாய்த் திருத்தி மார்க் போடுறீங்களே.. சரியான வாத்திதான்.

ஆரம்பத்துலேந்தே #2தான் எடக்கு பண்ணி விட்டது.இந்த மாதிரி குறுக்கெழுத்துல 'குழப்பம்'னா எழுத்துகள் குழம்பி இருக்கணும்னுங்கறது எழுதப்படாத விதி. அங்கேதான் குழப்பமே.

said...

செந்திலு

7 8 ஓக்கே

8 இன்னும் கூட கொஞ்சம் விளக்கம் இருக்கு.வெயிட்டீஸ் :)

said...

சத்யா

குடும்பத்து நடுவில புகுந்தா குழப்பம்தானே! அதனால இதுவும் ஓக்கேதான்! :)

said...

8 - ’வம்புதும்பு’ = வந்து - வ+(அ)ம்பு+து+(அ)+ம்பு. முதற்கடை - வ,து. சரிதான? :)

said...

செந்திலு!

இப்போ ரொம்ப சரி!!

இப்படி குறிப்பின் எல்லா பகுதிகளும் பொருந்தி வரணும்!! :)

said...

ரொம்ப நாளாகக் காணாததால் வர‌லாற்றில் புதைந்து விட்டீர்களோ என்று நினைத்தேன். புதை புதிரோடு எழுந்து வந்துவிட்டீர்கள். இதோ விடைகள்.
‍‍வாஞ்சி
5. பதிவுலகம்
6. தைலா (பேப்ரிசியஸ் அகராதி உதவியால் கண்ட விடை)
7. திவசம்
8. கைதிகள் (குறிப்பில் "சென்றோர்/சென்றவர்கள்" என்றிருந்தால் பன்மை என்பது விளங்கியிருக்கும். அல்லது என் விடை தவறா?)
10.. கோபுரமா
12. ???
13. போம் 14. தங்கச்சிலை

நெடுக்காக‌
1 மதி 2 கலகம்
3 அம்பிகை 4 கதைக்களம் 8 வம்பு தும்பு
11 மாந்தர்12 பங்கம் 16 சிறை

said...

வாஞ்சி அண்ணா,

4. - ஒரு சின்ன மாற்றம் வேண்டும். செய்தால் 12ம் வந்துவிடும்.

மற்றவை எல்லாம் சரி.

8. குறிப்பை கூகிள் குழுமத்தில் விவாதிக்கலாம். விடைகளை வெளியிட்ட பின்னர்.

said...

8) வம்பு தும்பு
ஏழு) திவசம்

said...

வினோ

ரெண்டும் சரி! :)

said...

9. கைதிகள்

said...

கெபி அக்கா

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தோணிச்சா? :)

said...

கு
05 பதிவரகம் ( ?! )
06 தைல
07 திவசம்
09 கைதிகள்
10 கோபுரமா
12 பயின்று
13 போம்
14 தங்கச்சிலை
நெ
01 மதி
02 ????
03 அம்பிகை
04 கதைக்களன்
08 வம்புதும்பு
11 மாந்தர்
12 பங்கம்
15 சிறை

said...

பாலா அண்ணா

ரொம்ப நாள் ஆச்சே இந்தப் பக்கம் வந்து.

5 - சரியில்லை
6- எழுத்துப்பிழையா?ஒரு சின்ன தப்பு

போட்டதில் மத்த எல்லாம் சரி.

said...

குறுக்கு:
5. பதிவர்கள்
6.தீப்
7. திவசம்
10.கோபுரமா
13.போம்
12.பயிலும்
14.தங்கச்சிஸ்

நெடுக்கு:
1.மதி
8.வம்புதும்பு
11.மாந்தர்
12.பங்கம்
15.சிறை

said...

3. அம்பிகை
9. கைதியின்

that makes 5a wrong. :-(

said...

இதைப் பார்க்கவே இல்லையே?

said...

சின்னப்பையன்

7 10 13
1 8 11 12 15

இவை எல்லாம் சரி

மத்தது எல்லாம் ரீட்ரை!

said...

கீதாம்மா,

நீங்க எதைத்தான் சரியாப் பார்க்கறீங்க! :)

சரி சரி சீக்கிரமா விடைகளைப் போடுங்க.

இதை சரியாப் பாருங்க. விடைகளை, வடைகளை இல்லை!!

said...

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2) தைலா

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4) திவசம்

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)கோபுரமா

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)போம்

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)தங்கச்சி


நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)பந்தம்

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)கதைக்களம்

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)வம்பு, தும்பு

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)மாந்தர்

12.பொன் தலை மாறக் கேடு (4)பங்கம்

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)சிறை


மிச்சம் சப்பாத்தி பண்ணிட்டு வந்து அப்புறமா வச்சுக்கறேன்.

said...

நீங்க எதைத்தான் சரியாப் பார்க்கறீங்க! :)


அநியாயமா இல்லை??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாப் பேசிக்கிறேன், சேர்த்து வைச்சு! நறநறநறநற

said...

இ.கொ.11 தங்கச்சிலை னு சொல்றதுக்குக் கடைசியிலே லை போட்டேனா என்னனு நினைப்பில்லை. சேர்த்துக்குங்க. :)))))

said...

ஹிஹி, வடை சாப்பிட்டுட்டே தட்டச்சினதிலே 14 க்குப் பதினொண்ணுனு போட்டுட்டேன் போல! 14 தான் தங்கச்சிலை.

said...

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2) தைலா

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4) திவசம்

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)கைதிகள்

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)கோபுரமா

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)போம்

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)தங்கச்சிலை


நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)தலை

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)பந்தம்

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)அம்பிகை

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)கதைக்களம்

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)வம்பு, தும்பு

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)மாந்தர்

12.பொன் தலை மாறக் கேடு (4)பங்கம்

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)சிறை

mmmmm???கணவர் இணையத்தில் எழுதுவதே இல்லை; ஆனால் ரொம்பப் படுத்தல்! பார்க்கலாம். வரேன் அப்புறம்மா.

said...

கீதாம்மா

போட்ட வரை சரி.

4 ஒரே ஒரு எழுத்து மாறணும்

அதை செஞ்சுட்டு 5, 12 போட்டா எல்லாம் சரி.

said...

5க்கு வலை சொந்தம் அல்லது வலை பந்தம்

said...

குறுக்காக:

5) பதிவுலகம்
6) தைதை
7) லாவகம் (இல்லன்னா ஞாவகம்) சரியான்னு தெரியல
9)கைதிகள்
10)கோபுரமா
12)பயின்று
13) போம்
14) தங்கச்சிலை


நெடுக்காக:
1) மதி
2) கலகம்
3) அம்பிகை
4) கதைக்களன்
8) வம்புதும்பு
11) மாந்தர்
12) பங்கம்
15) சிறை

said...

A Simple Man

நெடுக்காக எல்லாம் சரி.

குறுக்காக 6,7 - இது ரெண்டும் மட்டும் கொஞ்சம் சரி பாருங்க.

said...

6)தைபு (புதை திரும்பியுள்ளது-- பாதி புதையல் )
7)திவசம்

எல்லாமே ஈசிதான் ..ஆனாலும் குறிப்புகள்தான் ரொம்ப அநியாயத்துக்கு குழப்புது சார் :-)

said...

not sure if i posted this already..

6) தைபு
7) திவசம்