முன்னாடி ஒரு நாள் சும்மா இருக்காம இராமாயணத்தை அறுசீர் விருத்தத்தில் எழுதறேன்னு ஒரு கிறுக்குத்தனம் பிடிச்சு எழுதினேன். கிரேசி மோகன் உட்பட பல பெரியவர்கள் அதைப் படிச்சு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் எதாவது எழுதவே பயமா இருக்கு.
இன்னிக்குக் கோகுலாஷ்டமி. என்னமோ தெரியலை கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மான்னு ஆரம்பிக்கும் இந்த எம்ஜியார் பாட்டு மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.
அதுவும் புதுக்கவிதைகள் பிறந்ததம்மான்னு சொன்ன உடனே இந்த கண்ணன் கதையை எழுதினா என்னான்னு தோணுச்சு. அதுக்காக கட்டுரை ஒண்ணு எழுதி அதை உடைத்துப்போட்டு ஓ மனிதா, ஆச்சரியக்குறின்னு எல்லாம் சேர்த்து புதுக்கவிதை என்ற பெயரில் தர முடியுமா? வெண்பாவா விருத்தமா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதத் தொடங்கிய பொழுது வந்தது கலிவெண்பா, அதுவும் இன்னிசைக் கலிவெண்பா என்ற இந்த பாவகை!
கண்ணனின் கதைன்னு ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டே இருக்கலாம். அப்புறம் எழுத ஆரம்பிச்சது மகாபாரதம் ரேஞ்சுக்கு ஆயிடும். அதனால முக்கிய நிகழ்வுகள்ன்னு நினைக்கிறது எல்லாம் மட்டும் சொல்லலாம்ன்னு நினைச்சேன். அப்படி எழுதின வெண்பாதான் இது.
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொன்னா சந்தோஷப்படுவேன். அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்! நன்றி!
இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் இரா முருகன் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வெண்பாவை தங்களுக்கு அளிக்கிறேன். வாழ்த்துகள் இராமு அண்ணா!

அன்னை விடுத்தவன் ஆற்றினைத் தாண்டிபல
கன்றும் பசுக்களும் காட்டினில் மேய்த்துதான்
உண்ட முலையில் உயிரைப் பறித்துபின்
பெண்டிர் மனத்திலே பேருவகை தான்தந்து
பண்ணைக் குழலிலே பாங்காய் இசைத்தவன்
வெண்ணெய் திருடிபல வேடிக்கை தான்செய்து
மண்ணையே உண்டு மரங்கள் பெயர்த்தங்கு
விண்ணில் இருந்து விழுந்த மழைதடுத்து
கொன்றானே பாம்பினைக் கோகுலத்தில் தன்தாயின்
அண்ணனாம் கம்சனை அவ்வுலகம் சேர்த்ததும்
கண்மணி ருக்மிணியைக் கல்யாணம் செய்ததொடு
எண்ணிக்கை இல்லாது ஏராள மாய்மணந்து
பெண்ணொருவள் மானம் பெருமையும் காத்துபஞ்ச
பாண்டவர் பக்கம் படைதனில் சேர்ந்ததும்
சின்னவன் பாலன் சிரம்நீக்கி ஆட்கொண்டு
சொன்னானே பார்த்தனது சோத்திரத்தில்* கீதையிது
மன்னவன் மாயன் மயக்கிடும் மாலனாம்
கண்ணன் அவனின் கதை!* சோத்திரம் = காது