Friday, December 22, 2006

Bye! Bye! Brothers and Sisters!!

ஆமாங்க, இனி எழுதறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் நிறுத்தறதுக்கு முன்னாடி பை பை அப்படின்னு சொல்லிட்டுப் போகத்தான் இந்த பதிவு. டிசம்பர் மாதக் கடைசிக்கு வந்தாச்சு. உலகம் பூரா விடுமுறைக் கொண்டாட்டங்கள் நடக்கிறது. எல்லாரும் எல்லாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற ஒரு நேரமாத்தான் இருக்கு. எங்க எங்கேயோ இருக்கும் உங்களுக்கு எல்லாம் நான் என்ன பரிசு தந்து சந்தோஷப் படுத்த. அதான் இப்படியாவது ஒரு நிம்மதியைத் தரலாமே!! என்ன சந்தோஷம்தானே!

எல்லோருக்கும் எனது கிருத்துமஸ், விடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நல்ல நிம்மதியா சந்தோஷமா (என் தொல்லையில்லாமல்) இந்த விடுமுறைகளைக் கொண்டாடுங்க.ஏன்னா ஜனவரி முதல் வாரத்தில் இருந்து திரும்பி வந்திருவோமில்ல!

ஒண்ணுமில்லை மக்கள்ஸ். பையனுக்கு ஸ்கூல் லீவு. அதனால ஒரு வாரம் வெளியூர் பயணம். போற இடத்தில் இந்த மாதிரி 24 மணி நேரமும் தமிழ்மணமே கதின்னு இருந்தா தனியாத்தான் திரும்பி வரணும். அதனால லீவு சொல்லிட்டுப் போகத்தான் பதிவு. இப்போ பை பை சொல்லிட்டு போற சீசனா, அதான் இப்படி.

ஆனா அந்த வாழ்த்துக்கள் மட்டும் உண்மைங்க!

மீண்டும் உங்கள் கழுத்தை அறுக்கும் வரை விடை பெறுவது, உங்கள் அன்பு...

இ.கொ. (இ.கொ., இ.கொ., இ.கொ.... அட எக்கோ எபெக்ட்டுங்க)

35 comments:

said...

வழக்கம் போல நானே முதல் போணி பண்ணிக்கறேன். :)

said...

"""இ.கொ. (இ.கொ., இ.கொ., இ.கொ.... அட எக்கோ எபெக்ட்டுங்க)
"""

எனக்கு இம்புட்டு கொழுப்பா...இம்புட்டு கொழுப்பா....என்று காதில் விழுகிறது...என் காது சரியில்லையின்னுதானே சொல்லப் போகிறீங்க ?

:))))

said...

ஒரு பார்ப்பனர் எண்ணிக்கை குறைந்தது (மிதவாத பார்ப்பனராக இருந்தாலும்) என்று சந்தோசத்துடன் வந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள். இருந்தாலும், நீங்கள் உண்மையிலேயே போயிருந்தால் கொஞ்சம் சந்தோசத்தையும் மீறிய சோகம் இருந்திருக்கும்.

உங்களுக்கும் எல்லாவித வாழ்த்துக்களும். சாதிமத பேதமில்லா சமத்துவம் நாம் அடைய!

said...

Enjoy . Hava a great holidays

said...

கிருத்துமஸ், விடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இ.கொ.

பயணம் இனிதாக அமையட்டும்!
பயணக் கட்டுரையா 2007இல்?? :-)

//போற இடத்தில் இந்த மாதிரி 24 மணி நேரமும் தமிழ்மணமே கதின்னு இருந்தா தனியாத்தான் திரும்பி வரணும்//

:-)

said...

கொத்ஸ்,
ஒரு அதிர்ச்சியோட வந்தா இப்படி நக்கல் அடிச்சிடிங்களே இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. வாழ்த்துக்கள் கொத்ஸ்.

said...

நண்பர் ரவி தனிமடலில்

விடுமுறைக்கு முன்னால வாழ்த்து சொல்லிட்டுப் போவது நல்ல பழக்கமுங்க. மிக்க நன்றி. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் நல் வாழ்த்துக்கள்.

said...

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கொத்ஸ் அவர்களே
லீவ்லாம் எஞ்சாய் பண்ணுங்க...

said...

---ஸ்கூல் லீவு. அதனால ஒரு வாரம் வெளியூர் பயணம். போற இடத்தில் இந்த மாதிரி 24 மணி நேரமும் தமிழ்மணமே கதின்னு இருந்தா தனியாத்தான் திரும்பி வரணும்.---

: )

எனக்கும் ஸ்கூல் லீவு ; )

said...

//ஒரு பார்ப்பனர் எண்ணிக்கை குறைந்தது //

அட பாவிங்களா...இங்கேயுமா ஜாதி. அது சரி இவர் பார்ப்பனர் என யார் சொன்னா?

said...

கொத்தனார், சென்று வாருங்கள் வென்று வாருங்கள்

said...

ரைமிங்கா நாலு வரிகள போட்டு திரும்ப தமிழ்மணத்து பக்கம் இழுத்துட்டு வரலாம்னு பின்னூட்டம் எல்லாம் ரெடி பண்ணிட்டு வந்தனய்யா!!

said...

அடுத்த சர்வே-க்கான ஐடியா கெடச்சிடுச்சு.

//போற இடத்தில் இந்த மாதிரி 24 மணி நேரமும் தமிழ்மணமே கதின்னு இருந்தா தனியாத்தான் திரும்பி வரணும்//

சராசரியாக எவ்வளவு நேரம் தமிழில் பதிவெழுதவும்/வாசிக்கவும் செலவுகிறீர்கள்?

சில நிமிஷங்கள்
1 - 2 மணி நேரங்கள்
2 - 4 மணி நேரங்கள்
4 - 8 மணி நேரங்கள்
8 - 24 மணி நேரங்கள்
எப்பயாச்சும் வந்து எட்டி பாப்பேன்

இதோ ரெடி பண்ணிடறேன் :)

-சர்வே-சன்

said...

கொத்ஸ் நல்லா போயிட்டுவாப்பா. நாங்க கொஞசம் நிம்மதியா இருக்கோம். அது சரி இது புது வருஷத்துக்கா இல்லை இந்த வருஷத்துக்கா?

said...

இகொ,

அசத்திப் புட்டீவாங்க. எங்காவது இடையிலே ஆன்லைன்ல, கீன்லைன்ல பார்த்தேன், கீசிடுவேன், கீசி சொல்லிப்புட்டேன் ஆமா :-)

வும்மா எல்லோருக்கும் Happy Holidays!!

said...

நானும் கூட அப்பாடான்னு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்... ஆனா, இப்படி ஏமாத்திபுட்டீயளே... அப்ப திரும்ப வருவீங்களா... கடவுளே :-P

said...

எது எப்படியோ குறைந்தப் பட்சம் ஒரு வாரம் லீவுப்பா, வும்மா தொந்திரவில இருந்து... அப்படி என்னதான் எழுதி கழுத்த அறுத்துப்புட்டேன் அப்படின்னு தானே கேக்கிறீங்க... எழுதுறதே இல்லையே அதான் பிரட்சினையே... ஒண்ணுமே சொல்றது இல்லை :-))

said...

அட விடுமுறையில போயி கொத்து
ரொட்டி போடப்போறன்னு ஆரம்பத்தில
சொல்லி தொலைச்சிருக்கலாமுல்ல
அது எதுக்கு இம்புட்டு பில்டாப்பு

சரி சரி சீக்கிரமா வந்து தொலையும்

said...

Bye,Bye, brother. Happy Holidays!!

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பொங்கலுக்கு வந்துருவீங்க தானே :)

said...

ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!!!

நல்ல வேலை நினைச்ச மாதிரி எதுவும் இல்லை...

நல்லபடியா விடுமுறையை கொண்டாடிவிட்டு வரவும்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

said...

ரொம்ப சந்தோஷமா படிக்க வந்தா இப்படி ஏமாத்திபுட்டீங்களே கொத்ஸ் ;)

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் :)

said...

//ஆமாங்க, இனி எழுதறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் நிறுத்தறதுக்கு முன்னாடி பை பை அப்படின்னு சொல்லிட்டுப் போகத்தான் இந்த பதிவு. //

ஏன்...ஏன்...ஏன்? இந்த விளம்பர மோகம் உங்களுக்கு? :)

நல்லபடியா விடுமுறைகளைக் கொண்டாடிட்டு வாங்க. கிறித்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துகள்.

said...

//நானும் கூட அப்பாடான்னு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்... ஆனா, இப்படி ஏமாத்திபுட்டீயளே... அப்ப திரும்ப வருவீங்களா... கடவுளே :-P //

//எங்காவது இடையிலே ஆன்லைன்ல, கீன்லைன்ல பார்த்தேன், கீசிடுவேன், கீசி சொல்லிப்புட்டேன் ஆமா//
- தெகாவை அப்படியேஏஏஏஏ வழிமொழிகிறேன் ;) :))))))

ஹாப்பி ஹாலிடேஸ்!!

said...

ஹாய் கொத்ஸ்,

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
திரும்பி வரும் போது புதுசு புதுசா மேட்டரெல்லாம் கொண்டு வாங்க....

said...

புத்தாண்டு வாழ்த்துகள்:-)

தமிழ்மணத்திலிருந்து ஒரு வருஷத்துக்கு விடுதலையா!!!!!

சரி சரி 2007 ல் சந்திப்போம் ப்போம் போம் ம்ம்ம்

said...

இ.கொத்ஸ்,

நல்ல எஞ்சாய் செய்துய்யு வாங்க.
என்னட தமிழ்மணத்துக்குக் காலம் சரியில்லையோனு பயந்துட்டேன்.

நீங்க லாப்டாப் கூட எடுத்துப் போகக் கூடாது.:-)
புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

said...

இ.கொ.
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்

விடுமுறை தினா வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

விடுமுறைக்கால நல் வாழ்த்துக்கள். `
உங்க வெளியூர் பயணத்த மகிழ்ச்சியா கொண்டாடுங்க.

வாழ்த்துக்கள்.

said...

இலவச குரு அவர்களுக்கு,

//ஆமாங்க, இனி எழுதறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.
//

மெய்யாலுமா? சொன்ன மாதிரியே பின்னூட்ட 'கவுண்டிங்' கூட பண்ணல போல இருக்கு... சொன்ன சொல் தவறாத தன்மானத் தமிழ்ன்ங்க நீங்க...

உங்களுக்கும் எங்கள் கிருத்துமஸ், விடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சந்தோஷமாக குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.


//
ஏன்னா ஜனவரி முதல் வாரத்தில் இருந்து திரும்பி வந்திருவோமில்ல!
//

2007-ம் வருடத்தின் சிறந்த பரிசு இதுதான்!
(மனசாட்சி - இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியல உனக்கு...)

said...

வாழ்க வளமுடன். நல்லபடியாச் சுத்தீட்டு வாங்க. எஞ்சாய்..........அடுத்த ஆண்டு சந்திப்போம். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

ஒரு வார லீவுக்கு இவ்வளவு buildup ஆ? ))

Happy Holidays !

said...

dey anonymous,

enna chumma reel uttuni keere.
Bend nimithipuduven!

uvi

said...

பெனாத்தலார் சொல்வது

ஆசை காட்டி மோசம் செய்த கொத்தனார் ஒழிக!

said...

என்னங்க இது ! துளசி மேடம் லீவு வுட்டுட்டாங்க. எல்லாரும் லீவுல போறாங்க. அப்ப நாங்கள்ளாம் லீவுல என்னங்க பண்ணறது

said...

Enjoy the Trips.. Bye..