இன்னைக்கு காலையில் இணையத்தில் செய்திகளைப் படிக்கும் போது கண்ணில் பட்ட தகவல் இது. பாரம்பரியம் மிக்க பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைத் தற்காலிகமா ஏற்றுக் கொண்டிருப்பவர் டாக்டர். சித்ரா பரூச்சா என்ற பெண்மணியாம். இதுவரைத் தலைமைப் பொறுப்பில் இருந்த மைக்கேல் கிரேட் என்பவர் இங்கிருந்து விலகி போட்டி நிறுவனமான ஐ.டிவிக்கு சென்றுவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சித்ரா நிரப்புவார்.
இது வரை பி.பி.சி. நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்த போர்ட் ஆப் கவர்னர்ஸ் என்ற குழு கலைக்கப்பட்டு அந்த பொறுப்பு பி.பி.சி. ட்ரஸ்ட் என்னும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ட்ரஸ்டின் தலைமைப் பதவிக்குத்தான் சித்ரா தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இது வரை இந்த ட்ரஸ்டின் உபத் தலைவராக பதவி வகித்து வந்தார். ஒரு முழு நேர செயல்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் இந்தப் பதவியை வகிப்பார்.
1972 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இவர் 1996 ஆம் ஆண்டு வரை மருத்துவத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார். அதன் பின் ஊடகங்களின் பால் தன் கவனத்தைத் திருப்பி அதிலும் பல பதவிகளை வகித்தவர். பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்.
இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி விடணமுன்னு கேட்கறீங்களா? சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!
இது பற்றிய செய்திக் குறிப்பு 1, செய்திக் குறிப்பு 2
Subscribe to:
Post Comments (Atom)
57 comments:
சொன்னா மாதிரி வந்துட்டோமில்ல. புது வருஷத்தை இந்த மாதிரி நல்ல செய்தியோடு ஆரம்பிக்க சந்தோஷமா இருக்கு. எல்லோருக்கும் நம்ம புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு மருதைக்கார அம்மாவைப் பத்திப் போட்டா நாங்களும்
இல்லாத காலரைத் தூக்கிவிட்டுப்போமில்ல.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....
இலவசம்.
வாங்க வல்லியம்மா. நீங்கதான் போணி! இப்போ இல்லாத காலரை நல்லா தூக்கிவிட்டு சந்தோஷப் பட்டுக்கிட்டீங்களா! புது வருடத்தைத் தொடங்க நல்ல வழிதானே. இந்த மாதிரி அடிக்கடி தூக்கிவிட்டுக்க விஷயங்கள் கிடைக்க வேண்டிப்போம். :)
மருதக்காரய்ங்க தூக்கி விட்டு விட்டே காலரே சட்டை சைசுக்கு வந்திருச்சி... அவ்வளவு ஆளுக .. !!
//மருதக்காரய்ங்க தூக்கி விட்டு விட்டே காலரே சட்டை சைசுக்கு வந்திருச்சி... அவ்வளவு ஆளுக .. !!//
காலர் பேனர் சைஸுக்கு வர வாழ்த்துக்கள் !! :-D
அது ஏங்க மருதக்காரவுக மட்டும்?
மருத என்ன மலேயாவுலியா இருக்கு?
எல்லா தமிழ்க்காரவுகளும் காலரைத் துக்கி விட்டுங்கப்பா!
அம்மா, வல்லியம்மா, இன்னிக்கு மட்டும் அந்த டீ-ஷர்ட்டைப் போட்டுகிட்டு நீங்களும் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!
:))
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
கொத்ஸ்,
எங்கூருக் காரவங்களை பெருமையை பத்தி அருமையா பதிவு போட்டதுக்கு நன்றி...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//அது ஏங்க மருதக்காரவுக மட்டும்?//
அப்படிப் போடலைன்னா அவிங்க எல்லாம் நம்ம பக்கம் வர மாட்டேங்கறாங்களே. அதான். ஹிஹி...
//எல்லா தமிழ்க்காரவுகளும் காலரைத் துக்கி விட்டுங்கப்பா!//
அப்புறம் தமிழ்நாடு மட்டும் மலேசியாவுலையா இருக்குன்னு யாராவது வம்பு பண்ணப்போறாங்க.
அதனால மதுரைவீரர்கள், தமிழர்கள், இந்தியர்கள், ஆசியர்கள் எல்லாரும் சந்தோஷப்படுங்கப்பா. :-D
//எங்கூருக் காரவங்களை பெருமையை பத்தி அருமையா பதிவு போட்டதுக்கு நன்றி...//
ரொம்ப நன்றி ராம்ஸ். காலரைத் தூக்கி விட்டுக்கிட்டீங்க இல்ல!
//மருத என்ன மலேயாவுலியா இருக்கு?//
SK என்னா இது.. எங்கூரே பத்தி பெருமையா சொன்னதுக்கு ஏனிந்த கலவரம்.....
//எல்லா தமிழ்க்காரவுகளும் காலரைத் துக்கி விட்டுங்கப்பா!//
இங்கே இப்போதான் குளிர ஆரம்பிச்சிருக்கு, அதுனாலே ஒரு சொக்கா அதுக்கு மேலே ஒரு ஜெர்கின் ஒன்னு போட்டுக்கிட்டுதான் திரியுரோம்.
அதினாலே மதுரைக்கு சொக்கா காலரு, தமிழுக்கு ஜெர்கின் காலரு.....
;-))
//அதினாலே மதுரைக்கு சொக்கா காலரு, தமிழுக்கு ஜெர்கின் காலரு.....//
அப்புறம் இந்தியா, ஆசியாவுக்கெல்லாம்/ பார்த்து, உங்க வெயிட்டை விட காலர் வெயிட் ஜாஸ்தியா ஆகிடப் போகுது!
//அப்புறம் தமிழ்நாடு மட்டும் மலேசியாவுலையா இருக்குன்னு யாராவது வம்பு பண்ணப்போறாங்க.//
என்னங்க கொத்ஸ்,
நான் பொதுவா தமிழ்க்காரங்கன்னு தானே சொல்லியிருக்கேன்.
நீங்க என்னமோ புதுசா பிரச்சினை பண்றீங்களே!
நடுவுல நம்ம ராமுத்தம்பி வேற கலவரப்படறாரு!
என்னமோ போங்க!
:)
//நீங்க என்னமோ புதுசா பிரச்சினை பண்றீங்களே!//
பிரச்சனை எல்லாம் இல்லை எஸ்.கே. ஒரு தமாஷ்த்தான். நீங்க கண்டுக்காதீங்க. :)
//..அவிங்க எல்லாம் நம்ம பக்கம் வர மாட்டேங்கறாங்களே ..//
நாங்கல்லாம் எப்ப எங்க எப்படி வரணுமோ அங்க அப்ப அப்படி கரெக்கிட்டா வந்திருவோம்ல .. !
அடடா!! மருதக்காரங்களுக்குக் காலரத் துக்கி வுடுற மாதிரி என்னவே இருக்கு? எவனோ ஒரு பரூச்சாவைக் கட்டிக்கிட்டு முடியை ஒட்ட வெட்டிக்கிட்டு..
மருதய்க்குண்டான மல்லியப்பூ உண்டா அல்லது அத வைக்குறதுக்கு தோதுவா சவுரிதான் உண்டா? இபப்டி ஒரு செய்தியும் நீரும்..போரும்வே!!
(தமிழகத்து அம்மணின்னு சொல்லியிருந்தீருன்னா கூடிக் கும்மியடிச்சிருப்போம்லா. நீரு பாட்டுக்கு மருதய மட்ட்டும் கும்மியடிக்கக் கூப்புட்டா அப்படித்தான்வே! நல்லா இரும்!
சாத்தான்குளத்தான்
இ.கொ.
வருஷத்தை நல்ல செய்தியோடு ஆரம்பிச்சதற்கு நன்றி.
நம்ம எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான் இது :-)
ரங்கா.
//நாங்கல்லாம் எப்ப எங்க எப்படி வரணுமோ அங்க அப்ப அப்படி கரெக்கிட்டா வந்திருவோம்ல .. !//
பஞ்ச் டயலாக்கு?! எல்லாம் நேரம்டா சாமி!
இருக்கட்டும். கேட்கணமுன்னு நினைச்சேன். உங்க போன பின்னுட்டத்தில நீங்க சொன்னது - //அவ்வளவு ஆளுக ..// உங்க ஊரு பாஷையில் 'அம்புட்டு ஆளுக' அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும்?
வாழ்க மதுரை,வாழ்க சித்ரா,வாழ்க பி.பி.சி,வாழ்க கொத்ஸ்
வாழ்க மதுரை,வாழ்க சித்ரா,வாழ்க பி.பி.சி,வாழ்க கொத்ஸ்
//மருதக்காரங்களுக்குக் காலரத் துக்கி வுடுற மாதிரி என்னவே இருக்கு? எவனோ ஒரு பரூச்சாவைக் கட்டிக்கிட்டு முடியை ஒட்ட வெட்டிக்கிட்டு..
மருதய்க்குண்டான மல்லியப்பூ உண்டா அல்லது அத வைக்குறதுக்கு தோதுவா சவுரிதான் உண்டா?//
அட சாத்தானே! ச்சீ! அடடா, சாத்தாங்குளத்தாரே! என்ன போடு போட்டு இருக்கீங்க. இதுக்கு மதுரை மக்கள்ஸ் என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம். (ஐயாம் தி எஸ்கேப்.....)
//தமிழகத்து அம்மணின்னு சொல்லியிருந்தீருன்னா கூடிக் கும்மியடிச்சிருப்போம்லா. நீரு பாட்டுக்கு மருதய மட்ட்டும் கும்மியடிக்கக் கூப்புட்டா அப்படித்தான்வே! நல்லா இரும்!//
அதான் மாப்பு கேட்டு, தமிழ்நாடு, இந்தியா, ஆசியான்னு பெரீய ரவுண்டே கட்டியாச்சே. அப்புறம் என்ன? வந்து கும்மியடியுங்கடே.
//நம்ம எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான் இது :-)//
வாங்க ரங்கா. வெறும் பெருமைப் பட்டா எப்படி? காலரைத் தூக்கி விட்டுக்குங்க சாமி!
//வாழ்க மதுரை,வாழ்க சித்ரா,வாழ்க பி.பி.சி,வாழ்க கொத்ஸ்//
மதுரை - சரி
சித்ரா - சரி
பி.பி.சி. - இது கூட சரிதான்.
இந்த லிஸ்டல நம்ம பேரு எதுக்குவோய்?
நல்ல விஷயத்தைப் பதிவு மூலமாச் சொல்லி இந்த வருஷத்தை ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க. நாம எல்லாரும் பெருமை பட்டுக்க வேண்டிய விஷயம் இது.
இ.கொ,
/* அது ஏங்க மருதக்காரவுக மட்டும்?*/
அதுதானே! ஏன் மருதகாரங்க மட்டும்?
இது உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய சங்கதியல்லவா?
டாக்டர். சித்ரா பரூச்சா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இ.கொ, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//நாம எல்லாரும் பெருமை பட்டுக்க வேண்டிய விஷயம் இது.//
பெருமை பட்டுக்கும் போது காலரைத் தூக்கி விட்டுக்க மறந்துடாதீங்க!
//அதுதானே! ஏன் மருதகாரங்க மட்டும்?//
ஒரு பரபரப்புக்கு வெச்ச தலைப்பு வெற்றி. அவ்வளவுதான். மத்தபடி பாருங்க இந்தியப் பெண் அப்படின்னுதான் சொல்லி இருக்கேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
//வாழ்க மதுரை,வாழ்க சித்ரா,வாழ்க பி.பி.சி,வாழ்க கொத்ஸ்//
ரி...ப்பீட்டூ!
புதிய ஆண்டில் புத்துணர்ச்சி டானிக் கொடுத்த கொத்தனார்க்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
////வாழ்க மதுரை,வாழ்க சித்ரா,வாழ்க பி.பி.சி,வாழ்க கொத்ஸ்//
ரி...ப்பீட்டூ!//
யப்பா, செய்தவர்கள் எங்கோயிருக்க அம்புக்கு வாழ்க போடுவதேன்?!!
வாழ்த்துகளுக்கு நன்றி கே.ஆர்.எஸ்.
கொத்ஸ்,
மதுரை என்ன மலேசியாவுலயா இருக்கு.. இந்தியாவுல தானே இருக்கும் அப்படி பார்த்தா இந்தியர் மொத்த பேருக்கும் பெருமை இல்ல. நம்மளை ஆண்டவங்க டிவியை(இப்பொழுதைக்கு டிவி பின்னாடி மத்ததை பார்ப்போம் :))) இப்பொழுது நாம ஆள ஆரம்பிச்சி இருக்கோம். புது வருஷம் இந்தியாவுக்கு நல்ல படியா நல்ல செய்தியுடன் துவங்கி இருக்கு.
//மதுரை என்ன மலேசியாவுலயா இருக்கு..//
அட, ஒரு பேச்சுக்கு சொன்னா எல்லாரும் அதையே பிடிச்சுக்கறீங்களே! அதான் இந்திய பெண்மணி அப்படின்னு அழுத்தம் திருத்தமா சொல்லியாச்சு இல்ல!
//நம்மளை ஆண்டவங்க டிவியை(இப்பொழுதைக்கு டிவி பின்னாடி மத்ததை பார்ப்போம் :))) இப்பொழுது நாம ஆள ஆரம்பிச்சி இருக்கோம். //
ஆஹா இது மேட்டர். ரொம்ப நல்லா இருக்கே!
//சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!//
இப்பிடித்தான் முடிச்சிருக்கீதிக சாமி!
//அதான் இந்திய பெண்மணி அப்படின்னு அழுத்தம் திருத்தமா சொல்லியாச்சு இல்ல!//
எங்கேவேய் அழுத்தந்திருத்தமா சொல்லிருக்கீஹ!
சுத்த எசகெட்டதனமாவுல்ல இருக்கு!
//சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!//
இப்பிடித்தான் முடிச்சிருக்கீதிக சாமி!//
இது தலைப்புக்கு உண்டான தொடர்பு.
//எங்கேவேய் அழுத்தந்திருத்தமா சொல்லிருக்கீஹ!//
இங்ஙன பாரும் - "பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்."
//நம்மளை ஆண்டவங்க டிவியை(இப்பொழுதைக்கு டிவி பின்னாடி மத்ததை பார்ப்போம் :))) இப்பொழுது நாம ஆள ஆரம்பிச்சி இருக்கோம்.
ரிப்பீட்டே!
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தல, இ.கொ., இன்னாபா, ஒரு மாசத்துப் பளைய சேதியெல்லாம் போட்டுக்கிட்டு? Rip Van Winkle? ஏதோ, நம்ம தமிள்காரவுங்களப் பத்தி நல்லா சொல்றதால, மன்னிச்சாச்சு!
மதுரைக் காரங்க எப்பவுமே பெரிய பெரியா போஸ்ட்லே தான் இருப்பாங்க. அதுவும் அவங்க பேர் "சி" என்ற எழுத்தில் ஆரம்பித்தால் மிகவும் பிரபலமானவர்கள் என அர்த்தம். மதுரையில் பிறந்து வாழும் ஊரின் முதலெழுத்து "கா" என இருந்தால் அவர்கள் மிக மிக பிரபலமடைவார்கள் என்பது நிச்சயம்!! :). ஆகையால் இது ஒன்றும் ஆச்சரியமான செய்தியல்ல. எங்களின் மதுரைகாரர்கள் தினம் தினம் கேட்கும் செய்திதான் என மிக அடக்கத்துடன் சொல்லி புத்தாண்ட்டு வாழ்த்துகளை ஆராவாரத்துடன் சொல்கிறேன்
வாங்க கெ.பி.
இது அம்புட்டு பழைய சமாச்சாரமா? நான் இன்னைக்கு காலையில்தான் பார்த்தேன். நீங்க குடுத்த சுட்டியைப் பார்த்தேன். அதிலிருந்து - ". The BBC's current vice-chairman Anthony Salz has already succeeded Grade. After Salz demits the post at year-end, Bharucha will take over. "
இன்றைக்குத்தான் இவங்க பொறுப்பெடுத்து இருக்காங்க போல. சரி, அனேகம் பேருக்கு தெரியாத விஷயம்தானே. அதுவும் நல்ல விஷயம்தானே. என்னை மன்னிச்சு விட்டுடுங்க. :)
//எங்களின் மதுரைகாரர்கள் தினம் தினம் கேட்கும் செய்திதான் என மிக அடக்கத்துடன் சொல்லி புத்தாண்ட்டு வாழ்த்துகளை ஆராவாரத்துடன் சொல்கிறேன்//
ரொம்ப அடக்கம்தான் போங்க. :)))
எஸ்.கே.சார்,நாங்க எவ்வளோ அடக்கம்னு உங்களுக்குத் தெரியாது.
சொல்லறதெலாம் சொல்லிட்டு
''எல்லாம் எமக்குத் தெரியும்னு ''
ஒரு டயலாக் அடிச்சுட்டா போதுமே.
சிவாஜியே சொல்லிட்டார்.:-0)
//இங்ஙன பாரும் - "பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்."//
இங்கனேதான் தடிச்ச எழுத்துல போட்டிருக்கிதீரு!
பதிவுலியும் மாத்தினாத்தான் ஒத்துக்கிருவோம்!
:))
//நாங்க எவ்வளோ அடக்கம்னு உங்களுக்குத் தெரியாது.//
ஆமாம் வல்லிம்மா, மேல கால்கரி சிவாவைப் பார்த்தாலே தெரியலை. எவ்ளோ அடக்கம். :)
//இங்கனேதான் தடிச்ச எழுத்துல போட்டிருக்கிதீரு!//
அது சரி. முதல்ல எழுதவே இல்லைன்னு அடம் பிடிச்சீரு. அப்புறம் இப்போ தடிச்ச எழுத்தில் எழுதக்காணுமுன்னு வறீரு. அதையும் செஞ்சா அடுத்தது என்ன சொல்லுவீரோ.
விட்டா அப்பனும் பிள்ளையும் போயி கழுதை வாங்கின கதையா போயிடும். ஆளை விடுங்க சாமி! :)
// நல்ல விஷயத்தைப் பதிவு மூலமாச் சொல்லி இந்த வருஷத்தை ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க. நாம எல்லாரும் பெருமை பட்டுக்க வேண்டிய விஷயம் இது.//
கைபுள்ள சொன்னது ஒரு வாசகம்னாலும் திருவாசகம். இப்பிடித்தான் சொல்லோனும். அத உட்டுட்டு என்னா மதுர காரய்ங்கள்ளாம்? கால்கரியார் சலம்புரத பாத்தியளா?
'நம்மூர் காரய்ங்கள்ளாம் காலர தூக்கி விட்டுகுங்கடே'ன்னு சூசகமா சொன்னா போதும்! அவுக புரிஞ்சிக்க மாட்டாய்ங்களா!!
சொன்ன வாக்கை காப்பாத்தற மாதிரி முதல் தேதியிலேயே முதல் பதிவை பதிந்த இலவசனாருக்கு ஒரு ஓ!!!
காலரை நல்லாவே தூக்கி விட்டுகிட்டாச்சு.
//முடியை ஒட்ட வெட்டிக்கிட்டு..
மருதய்க்குண்டான மல்லியப்பூ உண்டா அல்லது அத வைக்குறதுக்கு தோதுவா சவுரிதான் உண்டா?//
முடி இல்லாத சீமாட்டி... பூந்தொட்டியில வச்சிக்கிடுறோம்... என்ன இப்போ? (ஊர்க்காரய்ங்களை விட்டுக் கொடுத்திடுவோமா?)
தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர், சீக்கிரமே நிரந்தர செயல் தலைவராக தேர்ந்தெடுக்க வாழ்த்துக்கள்.
ஹாய் இ.கொ!!!
ஏதோ எழுத போய் நல்ல ஆப்பு வாங்கி கட்டிகிட்டிங்க!!
ஏதோ எல்லாரும் சந்தோஷ பட்ட சரி தான்!!
ஆமாம் ஏன் ஒரு ஆண் கூட ஒரு நல்ல பதவில இல்லையா??? இல்ல அவங்கள பத்தி நீங்க செய்தி போடலியா??
உள்ளேன் கொத்தனாரய்யா....
ஏங்க எல்லோரும் கோவபடிதீக...மருதக்காரவுக மருதக்காரவுகதீங்....
ஏனுங்கய்யா எஸ்கே, ஒங்களுக்கு வேணுமுண்டா ஒரு பெசல் ஹானரரி சிட்டிசன்சிப் கார்பரேசன் காரவுககிட்ட் சொல்லி தந்திடுதோம்....வச்சிக்கிடுங்க....
ஆஹா.இதுவல்லவோ பதில்.
மௌலி ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்.
//அத உட்டுட்டு என்னா மதுர காரய்ங்கள்ளாம்? கால்கரியார் சலம்புரத பாத்தியளா?//
ஆனாலும் ஆளுக்கு அடக்கம் அதிகம்தான். என்ன சொல்லறீங்க? :-D
//'நம்மூர் காரய்ங்கள்ளாம் காலர தூக்கி விட்டுகுங்கடே'ன்னு சூசகமா சொன்னா போதும்! அவுக புரிஞ்சிக்க மாட்டாய்ங்களா!!//
சொல்லியிருக்கலாம்தான், இந்த மருத மேட்டர், பதிவை இப்படி ஹைஜாக் பண்ணும் அப்படின்னு தெரியாமப் போச்சே!
தகவலுக்கு நன்றி கொத்ஸ்.
விடுமுறை எல்லாம் நன்றாக இருந்ததா? வீட்டில் வாக்களித்த மாதிரி தமிழ்மணம் பார்க்காமல் இருந்தீரா?
//இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி விடணமுன்னு கேட்கறீங்களா? சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!//
ஐயையையையையைய...இவங்க தொல்லை தாங்க முடியலை.
ஏம்பா, கல்பனா சாவ்லா பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க, சுனிதா வில்லியம்ஸ பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க. ஏன்? என்னவோ அவங்க இங்கன இருந்து இந்தியாவுக்கு சேவை செய்த மாதிரி. அவங்களே கண்டுக்கல. நீங்க வேறையா???
//சொன்ன வாக்கை காப்பாத்தற மாதிரி முதல் தேதியிலேயே முதல் பதிவை பதிந்த இலவசனாருக்கு ஒரு ஓ!!!//
டாங்க் யூ! டாங்க் யூ! :-D
ஏதோ எழுத போய் நல்ல ஆப்பு வாங்கி கட்டிகிட்டிங்க!!//
ஹலோ, இந்த மாதிரி சுமால் ஆப்பூக்கெல்லாம் அரண்டா எப்படி? நம்மளைப் பார்த்தும் ஒரு நாலு பேர் எவ்வளவு நல்லவண்டா இவன் அப்படின்னு சொல்லவேண்டாமா? :))
//ஆமாம் ஏன் ஒரு ஆண் கூட ஒரு நல்ல பதவில இல்லையா??? இல்ல அவங்கள பத்தி நீங்க செய்தி போடலியா??//
அவங்களும் இருக்காங்க. நமக்கு பதிவு போட வேற மேட்டர் இல்லாத போது அவங்களைப் பத்தின செய்தி ஒண்ணும் வரலையே. வந்தா போட்டுருவோம். என்ன? :)
//ஏனுங்கய்யா எஸ்கே, ஒங்களுக்கு வேணுமுண்டா ஒரு பெசல் ஹானரரி சிட்டிசன்சிப் கார்பரேசன் காரவுககிட்ட் சொல்லி தந்திடுதோம்....வச்சிக்கிடுங்க....//
கொஞ்சம் சத்தம் போட்டா உடனே பங்காளியாக்கி செட்டு சேத்துக்கறாங்க பாருங்க. யாருக்கு வரும் இம்புட்டு சாமர்த்தியம்? :))
//ஆஹா.இதுவல்லவோ பதில்.
மௌலி ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்.//
வல்லிம்மா, யாரு மௌலி? மறந்து போயி நிஜ பேரைப் போட்டு உடைச்சுட்டீங்களா? :))
தகவலுக்கு நன்றி கொத்ஸ்.//
வாங்க கும்ஸ். நல்லா காலரைத் தூக்கி விட்டுக்கிட்டீங்களா?
//விடுமுறை எல்லாம் நன்றாக இருந்ததா? வீட்டில் வாக்களித்த மாதிரி தமிழ்மணம் பார்க்காமல் இருந்தீரா?//
ஆமாங்க ஒரு வாரம் பார்க்காம, எழுதாம இருந்துட்டேன். கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னு வெச்சுக்குங்க! :))
புத்தாண்டும் அதுவுமா நல்ல செய்தி.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டும் அதுவுமா நல்ல செய்தி.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
//ஐயையையையையைய...இவங்க தொல்லை தாங்க முடியலை.
ஏம்பா, கல்பனா சாவ்லா பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க, சுனிதா வில்லியம்ஸ பார்த்தா காலர தூக்கிவிட்டுக்கரீங்க. ஏன்? என்னவோ அவங்க இங்கன இருந்து இந்தியாவுக்கு சேவை செய்த மாதிரி. அவங்களே கண்டுக்கல. நீங்க வேறையா???//
என்ன சீனு இப்படி சொல்லறீங்க? நம்ம நாட்டில் பிறந்தவங்க ஒரு நல்ல பதிவிக்கு வந்திருக்காங்கன்னு ஒரு சந்தோஷம்தான். நம்ம கிரிக்கெட் டீம் ஜெயிச்சா ஒரு சந்தோஷம் வரதில்லையா? அந்த மாதிரித்தான். அவங்க மட்டும் காசுக்கு ஆடாம நாட்டுக்கு சேவையா பண்ணறாங்க?
நாம் வளர்ந்த / வளரும் சூழ்நிலையில் வளர்ந்த தனி மனிதர்களின் வெற்றியில் நாம் ஒரு சிறிய சந்தோஷம் அடைவது தப்பொன்றும் இல்லையே. நாட்டுக்கு சேவை செய்பவர்களை மட்டுமே கண்டு சந்தோஷப்பட வேண்டுமா?
சினிமா நடிகர்களையும் அரசியல்வியாதிகளையும் தூக்கி வெச்சுக்கிட்டு ஆடும் பொழுது இந்த மாதிரி சாதனையாளர்களின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்வதில் தப்பே இல்லைன்னு நினைக்கிறேன்.
வாங்க ஜெயஸ்ரீ, புத்தாண்டும் அதுவுமா நல்ல விஷயம்தான். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள்.
Post a Comment