Friday, January 26, 2007

நானும் குரு பதிவு போடறேன்! (கொஞ்சம் லேட்டா)

நம்ம மக்கள்ஸ் எல்லாரும் குரு பதிவு போடறாங்களே, நாமளும் போட்டா என்னான்னு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. அதுல பாருங்க நம்ம ஊரில் ஹிந்தியில்தான் குரு வந்தது. தமிழில் வரலை. அம்புட்டுப் பணம் குடுத்து ஹிந்தியில் பாக்கணுமா, அப்படிப் பார்த்தா நமக்கு வலையுலகில் என்ன முத்திரை குத்துவாங்கன்னு யோசிச்சுக்கிட்டே பாக்காம விட்டாச்சு. ஆனாலும் இந்த பதிவு போடற ஆசை மட்டும் போகவே இல்லை. அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சுது. விடுவோமா? அதான் இந்த பதிவு!

வீட்டுலேர்ந்து நியூயார்க் நகரம் போகணுமுன்னா ரயிலில்தான் போகணும். அப்படிப் போகும் போது இலவசமா ரெண்டு மூணு செய்தித்தாள்கள் கிடைக்கும். பெரும்பாலும் உள்ளூர் செய்திகளே தாங்கி வரும். அதுவும் நம்ம ஊரில் இந்திய மக்கட்த்தொகை ரொம்ப ஜாஸ்தியா, அவங்களுக்கே ஒரு தனி செய்தித்தாள் வேற போட்டுட்டாங்க. அதுதான் DesiNJ.

நாம போன அன்னிக்கு அந்த செய்திதாளில் பார்த்த விஷயம் என்னன்னா...அட அதை நீங்களே பாருங்களேன்!



அதாவது குருவில் அமிதாப் நடிப்பைப் பார்த்து அபிஷேக்குக்கு ரொம்ப பெருமையாம். என்னடா இது நாம கேள்விப்பட்ட வரை அமிதாப் அந்த படத்தில் நடிக்கவே இல்லையேன்னு அந்த செய்தியை பூரா படிச்சா அமிதாப்புக்கும் அபிஷேக்குக்கும் கன்பூஸன் ஆகிட்டாங்க இந்த மக்கள். அதை நம்ம கும்பலுக்கு காமிச்சு சிரிச்சு அன்னைக்கு நம்ம கம்பார்ட்மெண்டையே ரெண்டு பண்ணிட்டோமில்ல. நீங்களும் இந்த வாரயிறுதியை ஒரு சிரிப்போட ஆரம்பியுங்க. Have a great FUNNY weekend!

அந்த செய்தித்தாளில் பார்த்த இன்னொரு விஷயம் இது. ஆனா போன செய்தியோட லட்சணத்தைப் பார்த்த பின் நம்பணுமா வேண்டாமான்னு தெரியலை. நீங்களே படிச்சி முடிவு பண்ணிக்குங்க.



அதாவுதுங்க பொதுவா ஒரு மொழிக்கு மேல பேசறவங்களுக்கு டிமெண்ஷியா என்ற நோய் தாக்கும் தருணம் லேட்டா ஆகுதாம். டிமெண்ஷியா என்றால் என்ன அப்படின்னு கேட்கறவங்களுக்கு அகராதி தரும் பொருள் - severe impairment or loss of intellectual capacity and personality integration, due to the loss of or damage to neurons in the brain. கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லணுமுன்னா Madness! அதாங்க சித்தம் இழந்து பயித்தியம் ஆகறது.

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா முதல்செய்தியைத் தந்த ஆளுக்கு ஒரே ஒரு மொழிதான் பேசத் தெரியும்! (அட அது யாருடா அது? சைடில் வந்து நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் நிறையா பேருக்குக் கூட ஒரு மொழிதான் தெரியும் போல அப்படின்னு சவுண்ட் விடறது!)

128 comments:

said...

இ.கொ,

ரண்டு மொழி பேசுகிறவர்களுக்குத் தானே இச் சிக்கல்?
நல்லது, நான் 3 மொழிகள் பேசுவேன்.:)) அப்பாடி, நான் தப்பினேன்.:)))

said...

அமிதாப் நடிப்பு பிரமாதமாத்தான் இருந்துச்சு குருவுல! பேப்பர்லேயே போட்டுட்டானே! இல்லேங்குறீரா???

அப்புறம் ரெண்டாவதா சொன்னது உண்மைதான்னு நினைக்கிறேன். கூகிளில் தேடிப்பார்க்க வேண்டும். பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் ஒரு பதினைந்து நிமிடமாவது உடற்பயிற்சி போல மூளைக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும். உதாரணம்: சுடோகு போடுவதைப் போல. routine வேலை கணக்கில் வராது. டிமென்ஷியா, அல்ஜெய்மர் போன்றவற்றை ஒத்திப்போட உதவும் இவை.

said...

வெற்றி,

பதிவு சரியா இல்லையா? ரெண்டு மொழிகள் பேசறவங்களை விட ஒரு மொழி பேசறவங்களுக்கு டிமெண்ஷியா சீக்கிரம் வருமாம். அதனால ரெண்டு மொழி பேசறவங்களை விட ஒரே ஒரு மொழி பேசறவங்களுக்குத்தான் சிக்கல் அதிகம்.

அது படி பாத்தா மூணு மொழி பேசற உங்களுக்கு இன்னும் லேட்டாத்தான் வரும்! :))

said...

டாக்டர்,

நான் கூட அதான் நினைச்சேன். மனுஷன் நடிச்சு இருக்காருன்னே தெரியலை அப்படி ஒரு நடிப்பு அப்படின்னு சொல்லிக் கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பத்தி நேரடியா படிச்சது இப்போதான்.

ரெண்டாவது விஷயம் நீங்க சொல்லறது சரிதான். மூளைப் பயிற்சி அவசியம். இதைச் சொல்லும் போது ஒரு ஹைப்பர்லிங்க்! சமீபத்தில், ஒரு வருஷத்துக்கு முன்னமே நான் இதைப் பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க - நீண்ட ஆயுள் !

said...

எனக்கு ரெண்டுக்கு மேலே மொழி தெரியுமே ..அதான் பார்த்தது கண்டது கேட்டது எல்லாம்,
விடாம எழுதறேனோ? :-))))

அப்ப டிமென்ஷியாவுக்கு நோ ச்சான்ஸ்?

ஆனா ஒண்ணு, ம்யூஸிக் படிக்கிற பசங்க புத்திசாலிகளா இருக்காங்களாம்.
( நான் முட்டாள்)

said...

//எனக்கு ரெண்டுக்கு மேலே மொழி தெரியுமே ..அதான் பார்த்தது கண்டது கேட்டது எல்லாம்,
விடாம எழுதறேனோ? :-))))//

:))))

//அப்ப டிமென்ஷியாவுக்கு நோ ச்சான்ஸ்? //

இவ்வளவு பேர் வருமே உங்களைத் தேடி. அதனால உங்களுக்கு டிமெண்ஷியா இல்லாம இருக்கணும் அல்லது முத்திப் போயிருக்கணும்!!!

//ஆனா ஒண்ணு, ம்யூஸிக் படிக்கிற பசங்க புத்திசாலிகளா இருக்காங்களாம்.
( நான் முட்டாள்)//

தங்கமணியை பக்கத்தில் இருக்கும் பாட்டு டீச்சர் வீட்டைத் தேடச் சொல்ல வேண்டியதுதான். (அட, நானும் போகத்தாங்க. வீட்டுல குழப்பத்தை உண்டு பண்ணிடுவீங்க போல இருக்கே!)

said...

நண்பர் ரவி தனிமடலில் எழுதியது

புன்னகை பூத்த வாரயிறுதி தந்தமைக்கு நன்றி!

said...

ஒரு மொழியோ, இரண்டு மொழியோ, இல்லை இன்னும் அதிக மொழிகளோ தெரிவதால் மட்டும் ஒருவருக்கு டிமென்ஷியா வராது என்னும் கருத்தை மறுக்கிறேன்!

எத்தனை மொழிகள் தெரியும் என்பது முக்கியமில்லை; எவ்வளவுக்கு அதை ஒருவர் பயன்படுத்தி மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறார் என்பதே இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டும்.

அதைப் பொறுத்தே இந்த நோயைத் தள்ளிப் போட முடியும்.

இது தவிர, மருத்துவ ரீதியாக இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன இது வருவதற்கு!

said...

இ.கொ,
மன்னித்துக் கொள்ளவும். எனது முதல் பின்னூட்டாம் நீங்கள் தந்த பத்திரிகைச் செய்தியைப் படிக்காமல் போட்டது.

York University ல் நான் சில பாடங்கள் எடுத்திருக்கிறேன்.

நிற்க. அட இதுதானோ சங்கதி. அப்ப இதுக்காகவேனும் ஒரு மொழி மட்டடும் பேசுபவர்கள் இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் :))

said...

அக்காங்ப்பா, நீ சொல்றது எல்லாம் சர்தான். ஆனாக்கா இவங்க இன்னா சொல்ல வராங்கன்னா, நீ கண்டி ரெண்டு பாசை பேசுனயானா உம்மூளை ஆட்டோமேட்டிக்கா ஓவர்ட்டைம் செய்யும். அதுனால நீ நார்மலா இருந்தாலே ஓரமா குந்திக்கினு ரெண்டு சுடோக்கு போட்ட எபெக்ட் கெடைக்கும்முன்னுதானே சொல்றாங்க.

ஆக மொத்தம் ரெண்டு பேருமே என்னா சொல்றீங்கன்னா மூளையை சுறுசுறுப்பா வெச்சுக்கோன்னுதானே! வெச்சுக்கிட்டாப் போச்சு.

//இது தவிர, மருத்துவ ரீதியாக இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன இது வருவதற்கு!//

இதெல்லாம் கொஞ்சம் எடுத்து விடுப்பா!

said...

//York University ல் நான் சில பாடங்கள் எடுத்திருக்கிறேன்.//

அப்படியா? எந்த பாடங்களில்?

//இதுக்காகவேனும் ஒரு மொழி மட்டடும் பேசுபவர்கள் இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் :))//

மூளையை சுறுசுறுப்பா வெச்சுக்கணும். வேற மொழி படிச்சாலும் சரி, சுடோக்கு போட்டாலும் சரி. அதான் மேட்டர். இல்லீங்களா!

said...

ஒரு 'கசடற' தொடரையே ஒரு பின்னூட்டத்துல வுடுன்னு சொல்றியே!

இந்த டகல்பட்சாதானே வேணான்றது!

ஆட்டொமேடிக்க்கா வேலை செய்யுண்றதுல்லாம் சும்மா உட்டாலங்கடி வேலை!

ஊஸ் பண்ணினாத்தான் ஒதவும் எதுவுமே!

அத்தப் புரிஞ்சுக்கோ மொதல்ல!

said...

//குருவில் அமிதாப் நடிப்பைப் பார்த்து அபிஷேக்குக்கு ரொம்ப பெருமையாம்.//
அதாவது இந்த செய்தியை எழுதியவருக்கு டிமெண்ஷியா இல்லை.
ஏன்னா அவருக்கு ஹிந்தி தெரியல தெரிஞ்சு இருந்திருந்தா இப்படி எழுதி இருக்க மாட்டார்.

said...

ஓக்கே தலீவா, இங்க போட்டா என்ன, அங்க போட்டா என்ன? மேட்டரைப் போட்டா சரிதான். ஆனா நாபகமா நம்மளாலதான் பதிவுன்னு சொல்லி சுட்டி எல்லாம் குடுத்து அமர்க்களப் படுத்திடணும் என்ன!

said...

இளா,

இதுக்கு ஹிந்தி தெரியணுமாய்யா. டிமெண்ஷியாவும் இல்லை ஹிந்தியும் இல்லை. அந்த ஆளுக்கு அமிதாப் மூஞ்சி தெரியாது, அதான் பிரச்சனை!

said...

//severe impairment or loss of intellectual capacity and personality integration, due to the loss of or damage to neurons in the brain.//
பயித்தம் ஆவுறதுக்கு மொழி மட்டும் தான் காரணமா?

said...

அது தெரியாதுப்பா. ஆனா மொழியினால பைத்தியமா இருக்கிற நிறையா பேரை நமக்கே தெரியுமே! :)

said...

//இதுக்கு ஹிந்தி தெரியணுமாய்யா. டிமெண்ஷியாவும் இல்லை ஹிந்தியும் இல்லை. அந்த ஆளுக்கு அமிதாப் மூஞ்சி தெரியாது, அதான் பிரச்சனை!//
ஹிந்தி தெரிஞ்சிருந்தா அமிதாப்ப தெரிஞ்சு இருக்குலே. அக்காங்..

said...

//ஆனா மொழியினால பைத்தியமா இருக்கிற நிறையா பேரை நமக்கே தெரியுமே! :) //
இதுல பலமான ஒரு உள்குத்து இருக்கே. அரசியல் பேச கூடாது

said...

// ரெண்டு பேருமே என்னா சொல்றீங்கன்னா மூளையை சுறுசுறுப்பா வெச்சுக்கோன்னுதானே! வெச்சுக்கிட்டாப் போச்சு.//
இதுக்கு தமிழ்மணத்தை திறந்துட்டா போதாதா?

said...

இந்தப் பதிவுக்கு முதல் பின்னூட்டத்தை நீங்க ஏன் போடலே? எதாச்சும் ஆவி அடிச்சுருச்சா?

said...

//ஹிந்தி தெரிஞ்சிருந்தா அமிதாப்ப தெரிஞ்சு இருக்குலே. அக்காங்..//

ஏன் என்னை மாதிரி ஹிந்தி தெரியாமலேயே அமிதாப்பைத் தெரிஞ்சு இருக்கக் கூடாதா?

said...

//இதுல பலமான ஒரு உள்குத்து இருக்கே. அரசியல் பேச கூடாது//

ஐயையோ அப்போ

//சைடில் வந்து நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் நிறையா பேருக்குக் கூட ஒரு மொழிதான் தெரியும் போல அப்படின்னு சவுண்ட் விடறது!)//

இதையும் எடுத்துடணுமா? :))

said...

//இதுக்கு தமிழ்மணத்தை திறந்துட்டா போதாதா?//

மவுசை (அதாங்க நம்ம எலி) சுறுசுறுப்பா வெச்சுக்க சொல்லலை. மூளையை இல்ல சொல்லி இருக்காங்க. இளா, அதுக்கும் தமிழ்மணத்தில் வரதுக்கும்...... எனி கன்பியூஷன்?

இதையும் எடுத்துடணுமா?

said...

//இந்தப் பதிவுக்கு முதல் பின்னூட்டத்தை நீங்க ஏன் போடலே? எதாச்சும் ஆவி அடிச்சுருச்சா?//

பாத்தீங்களா? பதிவைப் போட்டுட்டு தமிழ்மணத்தில் இணைப்பு எல்லாம் குடுத்திட்டு வரதுக்குள்ள வெற்றி வந்து வெற்றிக் கொடி நாட்டிட்டுப் போயிட்டார்.

அதுனால் என்ன, இந்த பதிவுல 100 வரலைன்னா அவரை ராசி இல்லாதவருன்னு தமிழ்மணத்துல பேசப் போறாங்களேன்னு நினைச்சு அவரே தனி ஆளா நின்னு 100 அடிக்க மாட்டாரு! :))

said...

இலவசம், நீங்க சொன்ன மாதிரி முதல் செய்தியை படித்தவுடன் அடுத்த செய்தி மீது நம்பிக்கை வரவில்லை

said...

கார்த்தி,

அது விளையாட்டுக்குச் சொன்னதுதான். ஒண்ணுக்கு ரெண்டு மருத்துவர்கள் வந்து அந்த மாதிரி எதாவது செய்து மூளையை சுறுசுறுப்பாக வைப்பது நல்லதுன்னு சொல்லி இருக்காங்க பாருங்க.

அதனால் அடிக்கடி நம்ம பதிவுக்கு வாங்க, வெண்பா எல்லாம் எழுதுங்க! :)))

(இந்த சுய விளம்பரம் கூட இல்லைன்னா எப்படி! )

said...

நல்ல வேளை... கல்யாணத்தை மாற்றிப் போடவில்லையே : )

said...

ஆமாம் அபிஷேக்குக்கும் ஜெயாவுக்கும் 60ஆம் கல்யாணமுன்னு போட்டா நல்லாவா இருக்கும். இதைத்தானே சொல்லறீங்க பாபா! :))

said...

நல்ல வேளை... கல்யாணத்தை மாற்றிப் போடவில்லையே : )

said...

நல்ல வேளை... கல்யாணத்தை மாற்றிப் போடவில்லையே : )

said...

/* அதுனால் என்ன, இந்த பதிவுல 100 வரலைன்னா அவரை ராசி இல்லாதவருன்னு தமிழ்மணத்துல பேசப் போறாங்களேன்னு நினைச்சு அவரே தனி ஆளா நின்னு 100 அடிக்க மாட்டாரு! :)) */

அதுசரி :)))

said...

நல்ல வேளை... கல்யாணத்தை மாற்றிப் போடவில்லையே : )

said...

என்ன பாபா, ஒரே மங்களகரமான மூடில் இருக்கீங்க போல, இத்தனை கல்யாணம் பண்ணறீங்க.

பாவம் பச்சன்ஸ், விட்டுடுங்க!

(பின்னூட்டத்தின் இப்பகுதியை அளிப்பவர்கள் சன்ராய்ஸ்!!)

said...

//அதுசரி :)))//

என்ன வெற்றி, கிட்டத்தட்ட பாதி வந்தாச்சு, அப்புறம் என்ன? :))

said...

B.B,
மிக்க நன்றி. உங்களின் புண்ணியத்திலையாதல் என் மேல் பழி வராமல் இருக்கட்டும்.

அது சரி, தமிழகத்தில் இப்போது பகல் தானே? எங்கே தமிழகத்தவர்கள் ஒருவரையும் காணோம்? தமிழகம் இன்னும் விழிக்கவில்லைப் போலும்!:))

said...

//B.B,
மிக்க நன்றி. உங்களின் புண்ணியத்திலையாதல் என் மேல் பழி வராமல் இருக்கட்டும்.//

பாபா, உங்க மேல ஒரு பொறுப்பு ஒப்படைக்கப் பட்டு இருக்கு. :))

//அது சரி, தமிழகத்தில் இப்போது பகல் தானே? எங்கே தமிழகத்தவர்கள் ஒருவரையும் காணோம்? தமிழகம் இன்னும் விழிக்கவில்லைப் போலும்!:))//

என்ன வெற்றி, ரொம்ப உள்குத்தா இருக்கு!!

எல்லாம் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள் எல்லாம் பாத்துட்டு லேட்டாத்தானே எழுந்திருப்பாங்க. அதானா இருக்கும். :)))

said...

இ.கொ,

/* என்ன வெற்றி, ரொம்ப உள்குத்தா இருக்கு!! */

ஐயோ, தெய்வமே, சாமீ, உள்குத்து வெளிக்குத்து ஒன்றும் இல்லை ஐயா.:))

oh, இன்று சனிக்கிழமை அத்துடன் குடியரசு தினம்... சரி ஆறுதலாக வரட்டும்...:))

said...

//(பின்னூட்டத்தின் இப்பகுதியை அளிப்பவர்கள் சன்ராய்ஸ்!!)
//

இது புது ஐடியாவ இருக்கே... அப்படியே 7 நிமிஷ இடைவெளியில வேற blog-லயும் ரிலீஸ் பண்ணுங்க.

//எல்லாம் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள் எல்லாம் பாத்துட்டு லேட்டாத்தானே எழுந்திருப்பாங்க. அதானா இருக்கும். :)))
//
தூக்க கலக்கமா? குடியரசு தினத்துக்கு சினிமா படம் எல்லாம் கிடையாதுங்க :-)

said...

//இது புது ஐடியாவ இருக்கே... அப்படியே 7 நிமிஷ இடைவெளியில வேற blog-லயும் ரிலீஸ் பண்ணுங்க.//

ஸ்பான்ஸர் பேரை சரியாப் படிச்சீங்க இல்ல!

////எல்லாம் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள் எல்லாம் பாத்துட்டு லேட்டாத்தானே எழுந்திருப்பாங்க. அதானா இருக்கும். :)))
//
தூக்க கலக்கமா? குடியரசு தினத்துக்கு சினிமா படம் எல்லாம் கிடையாதுங்க :-)//

மாப்பு மாப்பு. தூக்கக்கலக்கம்தான். அதோட வேற பதிவுகளில் போயி படிச்சி பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருந்ததில கன்பியூசன்.

ஆனா படம் உண்டுங்க, சன் டிவியில் சண்டைக் கோழி போட்டாங்க. எங்க வீட்டில் கொஞ்ச நேரம் ஓடிச்சே.

said...

பாலா சொல்லற மாதிரி யோசிச்சா...

/நல்ல வேளை... கல்யாணத்தை மாற்றிப் போடவில்லையே : ) /

அய்யோ அய்யயோ

தேவ்.

said...

யோவ் தேவு, நீர் ஏன்யா பதறரீரு? ஒரே டவுட்டா இருக்கே....இதுல அனானியா வேற வரீரு. சம்திங் ராங்!

said...

கொத்ஸ் அந்தப் பத்திரிக்கைக்கு எங்க ஊர்ல்லயும் ஒரு பிராஞ்ச் ஆரம்பிக்கச் சொல்லுங்க...

எங்களுக்கும் ரயில்ல போகும் போது பொழுது போகும் இல்லையா

said...

தேவ்ஸ்,

வர அடையார் டைம்ஸ் எல்லாம் ஒழுங்கா படியுங்க.இந்த மாதிரி மேட்டர் எல்லம் கிடைக்கும்.

நம்மைச் சுத்து என்ன நடக்குதுன்னு கண்ணைத் திறந்து பாத்துக்கிட்டே இருங்க. எழுத நிறையா விஷயங்கள் கிடைக்கும். (நன்றி துளசி டீச்சர்!)

said...

//யோவ் தேவு, நீர் ஏன்யா பதறரீரு? ஒரே டவுட்டா இருக்கே....இதுல அனானியா வேற வரீரு. சம்திங் ராங்! //

பின்னே பாவம்ய்யா அபிஷேக் ஏற்கனவே ஒரு தடவ மேடை வரைக்கும் மணமகனாப் போய் திரும்பி வந்துட்டார்.. இப்போ வேற பத்திரிக்கை இப்படி கும்மி அடிச்சா.. அதான் கொஞ்சம் பிலீங் ஆயிட்டேன்ங்க..

said...

//தேவ்ஸ், //

கொத்ஸ் இருங்க் இருங்க யாராவது வந்து உங்க கிட்ட தேவ்ஸ்ன்னா தமிழான்னு கேள்விக் கேட்கப் போறாங்கப் பாருங்க...

said...

/வர அடையார் டைம்ஸ் எல்லாம் ஒழுங்கா படியுங்க.இந்த மாதிரி மேட்டர் எல்லம் கிடைக்கும்.//

அப்படிங்கறீங்க.... செஞ்சுருவோம்

said...

//நம்மைச் சுத்து என்ன நடக்குதுன்னு கண்ணைத் திறந்து பாத்துக்கிட்டே இருங்க. எழுத நிறையா விஷயங்கள் கிடைக்கும். (நன்றி துளசி டீச்சர்!) //

பாத்துக்கிட்டே இருந்தா எப்படி எழுத முடியும் ? எழுத ஆரம்பிச்சா எப்படி பாக்குறது? இதுக்கு நீங்கப் பதில் சொல்லுவீங்களா இல்லை டீச்சர் சொல்லுவங்களா?

said...

//அதான் கொஞ்சம் பிலீங் ஆயிட்டேன்ங்க..//

அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜைப் பார்த்து அந்த சிவாஜி சார் நீங்க எங்கயோஓஓ போயிட்டீங்கன்னு சொல்லும் போது ஜனகராஜ் என்ன சொல்லுவாரு?

my boy ட்யூட்டியில் இருக்கும் போது நோ பீலிங்க்ஸ்

அதுதான் உங்களுக்கும்.! :))

said...

நாந்தான் 50

said...

---ஒரே மங்களகரமான மூடில் இருக்கீங்க போல, இத்தனை கல்யாணம் பண்ணறீங்க. ---

தினசரி நான்கு காட்சிகள் போல்...

ஏழுமலையான் நித்ய கல்யாண புருஷன் என்பது போல்...

:)

said...

வந்துட்டேன் வ்ந்துட்டேன்.... ஸ்டாட் மீசிக்....

said...

கொஞ்சம் இருங்க கொத்ஸ், பதிவ படிச்சுட்டு வாரேன்

said...

இன்னிக்கு மேட்சுல்ல 50 விழுதோ இல்லையோ..இந்தாங்க.. இங்க ஒரு 50 அடிச்சாச்சு..

said...

Abi,
இல்லையே! நீங்கள் 49!
எமது மூத்த பதிவர் B.B அவர்கள் இட்டதுதான் 50 வது பின்னூட்டம்.

O.K, அபி, மனதைத் தளரவிடாமல் 100 வதுக்கு முயற்சி பண்ணுங்க.

said...

இல்லையே வெற்றி, அபி அப்பாதான் சரியான நேரத்துக்கு வந்து 50 அடிச்சு இருக்காருன்னு நினைக்கறேன். ஒரு தடவை சரி பாத்துடுங்க!

லெட் அஸ் மீட் ஆப்டர் எ ஸ்மால் ப்ரேக்!! :))

said...

//Abi,
இல்லையே! நீங்கள் 49!
எமது மூத்த பதிவர் B.B அவர்கள் இட்டதுதான் 50 வது பின்னூட்டம்.

O.K, அபி, மனதைத் தளரவிடாமல் 100 வதுக்கு முயற்சி பண்ணுங்க. //

இல்லியே வெற்றி அய்யா, நான் தான் 50. சரி நம்ம மூத்தவரு போட்டா என்ன நா போட்டா என்ன, கல்லா ரொம்புனா சரி.

said...

//ஒரு தடவை சரி பாத்துடுங்க!//

ஆணி புடுங்க வைக்கிறதுல கில்லாடிய்யா நீர்...

said...

நண்பர் எஸ்கே: மொழி தெரிவது மட்டுமே காரணமாக சொல்லவில்லை. ஆனால் அறிவியலில் பல மொழிகள் தெரிவதும் நினவாற்றல் பயிற்சி பெறுவதும் டிமென்ஷியாவை தள்ளிப்போடுவதாக சொல்கிறார்கள். முடிந்தால் சுட்டி தேடி தருகிறேன்

said...

//அதாவுதுங்க பொதுவா ஒரு மொழிக்கு மேல பேசறவங்களுக்கு டிமெண்ஷியா என்ற நோய் தாக்கும் தருணம் லேட்டா ஆகுதாம். டிமெண்ஷியா என்றால் என்ன அப்படின்னு கேட்கறவங்களுக்கு அகராதி தரும் பொருள் - severe impairment or loss of intellectual capacity and personality integration, due to the loss of or damage to neurons in the brain. கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லணுமுன்னா Madness! அதாங்க சித்தம் இழந்து பயித்தியம் ஆகறது//

அப்போ இன்னும் கொஞ்ச நாள்ல நான் ரோட்டுல சட்டையைக் கிழிச்சிக்கிட்டு நிக்கப் போறேனா? தமிழ், இந்தி போதாதுன்னு கொஞ்சம் கொஞ்சம் குஜராத்தி வேற இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கு. திடீர்னு இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே சாமி?
:((

said...

//அதாவுதுங்க பொதுவா ஒரு மொழிக்கு மேல பேசறவங்களுக்கு டிமெண்ஷியா என்ற நோய் தாக்கும் தருணம் லேட்டா ஆகுதாம்//

சே! சரியாப் படிக்காம சொ.செ.சூ ஆகிப் போச்சா? ஆனாலும் நான் பைத்தியம் இல்ல அறிவாளின்னு தெரிஞ்சதுல ஒரே சந்தோஷ சந்தோஷமா வருது.
:)))

said...

60 க்கு அப்புறம் உங்க ஊர்ல 99999ஆ?
தமிழ்மணத்தை இப்பப் பாருங்க. புது சரித்திரம் படைக்கறீங்க போலிருக்கு?
:)

said...

நானும் அதை மறுக்கவில்லையே பத்மா அர்விந்த்!

"கசடற"க் கற்றாலும் "அதற்குத் தக நிற்க"லைன்னா பயன் ஏதும் இல்லை என்றே சொலியிருக்கிறேன்.

//எத்தனை மொழிகள் தெரியும் என்பது முக்கியமில்லை; எவ்வளவுக்கு அதை ஒருவர் பயன்படுத்தி மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறார் என்பதே இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டும்.

அதைப் பொறுத்தே இந்த நோயைத் தள்ளிப் போட முடியும்.

இது தவிர, மருத்துவ ரீதியாக இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன இது வருவதற்கு!//

said...

கொத்ஸ்,

இங்கே பஞ்சம் பிழைக்க வந்த பெங்களூரூலே நண்டுசுண்டுகல்லாம் கன்னடா,இங்கிலிபிசு,இந்தி, பத்தாக்குறைக்கு தமிழ்,தெலுங்குன்னு பலமொழிகளை சாதாரணமா பேசுதுக.... அப்பிடின்னா இங்கே இருக்கிற நாங்கெல்லாம் ரொம்ப அறிவாளியா இருக்கோமோ???

said...

//இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா முதல்செய்தியைத் தந்த ஆளுக்கு ஒரே ஒரு மொழிதான் பேசத் தெரியும்//

நம்புகிறோம்!

said...

குரு படத்தில அமிதாப் பச்சனா?

கமல்தான நடிச்சாரு!

உங்க விமர்சனம் ரொம்ப லேட்டு!

:))

said...

##மவுசை (அதாங்க நம்ம எலி) ##
Mouse இற்கு "சுட்டி" என்னும் கலைச்சொல் தற்போது பரவலாகப் பாவிக்கப்படுகிறது.
clicking- சுட்டுதல்.
இதனையே பயன்படுத்தலாமே?

said...

படியாதவன்,

URL என்பதை அதிகமாக சுட்டி எனப் பயன் படுத்துகிறார்களே! (சிலர் உரல் எனச் சொல்லியும் பாத்து இருக்கிறேன்) இரண்டிற்கும் சுட்டி என்றால் குழப்பம் வராதோ?

வேண்டுமென்றால் Click என்பதை சொடுக்கு, Double Click என்பதை இரட்டைச் சொடுக்கு எனச் சொல்லி, சொடுக்க பாவிக்கும் எலியைச் சொடுக்கி எனச் சொல்லலாமா?

said...

இதை வச்சே பதிவு ஒண்டைப் போடலாமே?
Mouse என்று ஆங்கிலத்திலோ எலி/எலிக்குட்டி என்று பொருத்தமற்ற சொற்களையோ பயன்படுத்துவதை விடுத்து பலரது கருத்தை அறிந்து ஒரு பொதுவான சொல்லைத் தேர்ந்தெடுக்கலாமே?

said...

//தங்கமணியை பக்கத்தில் இருக்கும் பாட்டு டீச்சர் வீட்டைத் தேடச் சொல்ல வேண்டியதுதான். (அட, நானும் போகத்தாங்க. வீட்டுல குழப்பத்தை உண்டு பண்ணிடுவீங்க போல இருக்கே!)//

வாய்ப் பாட்டு இல்லேப்பா. ம்யூஸிக் நொடேஷன் படிக்கிறது இன்னொரு மொழி படிக்கிற மாதிரியாம்.

said...

இ.கொ,

/* குரு படத்தில அமிதாப் பச்சனா?
கமல்தான நடிச்சாரு!
உங்க விமர்சனம் ரொம்ப லேட்டு!*/

'நக்கல் நாயகன்' நாமக்கலாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

said...

எனக்கு தமிழை தவிர ஆங்கிலம், ஹிந்தி,உருது,மலையாளம்,தெலுகு எல்லாம் தெரியும்.கரேட்டா கண்டுபுடிச்சிடுவேன் எதிரளிங்க என்ன மொழி பேசுறாங்கன்னு. கொத்ஸ், எனக்கும் பைத்தியம் புடிக்குமா? பயந்து பயந்து வருது.

said...

//இன்னிக்கு மேட்சுல்ல 50 விழுதோ இல்லையோ..இந்தாங்க.. இங்க ஒரு 50 அடிச்சாச்சு..//

தேவு, அந்த மேட்சுலையும் நிறையா பேரு 50 அடிச்சுட்டாங்களே. ஆனா யாருமே....:))

said...

//O.K, அபி, மனதைத் தளரவிடாமல் 100 வதுக்கு முயற்சி பண்ணுங்க.//

வெற்றி, ஆனாலும் குடுத்த வேலையை எவ்வளவு பொறுப்பா பாக்கறீங்க!!

said...

//இல்லியே வெற்றி அய்யா, நான் தான் 50. சரி நம்ம மூத்தவரு போட்டா என்ன நா போட்டா என்ன, கல்லா ரொம்புனா சரி.//

பாயிண்டைப் புடிச்சீங்க அபியப்பா!

said...

//ஆணி புடுங்க வைக்கிறதுல கில்லாடிய்யா நீர்...//

ஒரு ஆணி புடிங்கறவனுக்குத் தெரியாதா? புடிங்க வைக்க என்ன செய்யணமுன்னு!!!

said...

//பத்மா அர்விந்த் said...

நண்பர் எஸ்கே: மொழி தெரிவது மட்டுமே காரணமாக சொல்லவில்லை. ஆனால் அறிவியலில் பல மொழிகள் தெரிவதும் நினவாற்றல் பயிற்சி பெறுவதும் டிமென்ஷியாவை தள்ளிப்போடுவதாக சொல்கிறார்கள். முடிந்தால் சுட்டி தேடி தருகிறேன்
//

பத்மா, நீங்க நம்ம பதிவுக்கு வந்ததே பெருமையா இருக்கு.

நான் நினைத்த வரை பல மொழிகள் தெரிவதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது, நம்முடைய Sub Conscious Mind பல மொழிகளிலும் யோசிப்பதால் அதுவே மூளைக்குப் பயிற்சியாகிறது. இது டிமெண்ஷியா போன்ற நோய்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது. மொழியாற்றல் இப்படித்தான் உதவுகிறது என்பதென் எண்ணம்.

உங்கள் சுட்டிகள் வெறுவிதமாகச் சொல்லுமானால் தயவு செய்து தாருங்கள். நன்றி.

said...

//தமிழ், இந்தி போதாதுன்னு கொஞ்சம் கொஞ்சம் குஜராத்தி வேற இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கு. திடீர்னு இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே சாமி?//

குஜராத்தி எல்லாம் புரியுதாக்கும், ஆனா நம்ம பதிவு மட்டும் சரியா புரியலையாங்காட்டியும் போல! மற்ற மொழிகள் தெரிஞ்சா நல்லதுன்னு தானேய்யா சொல்லி இருக்கேன்.....

said...

//எனக்கும் பைத்தியம் புடிக்குமா? பயந்து பயந்து வருது.//

ஒரு தடவைக்கு மேல் திரும்ப திரும்ப பிடிக்க வாய்பில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. சரியா. இது ஒரு குஞ்சுமோன் அக்ரிமென்ட். ஓக்கே.

said...

//சே! சரியாப் படிக்காம சொ.செ.சூ ஆகிப் போச்சா? ஆனாலும் நான் பைத்தியம் இல்ல அறிவாளின்னு தெரிஞ்சதுல ஒரே சந்தோஷ சந்தோஷமா வருது.
:)))//

ஒழுங்காப் படிக்காம இது தேவையா?!

said...

//60 க்கு அப்புறம் உங்க ஊர்ல 99999ஆ?
தமிழ்மணத்தை இப்பப் பாருங்க. புது சரித்திரம் படைக்கறீங்க போலிருக்கு?
:)//

முதலில் விஷயம் புரியலை. அப்புறம் நம்ம ராயல் சொல்லித்தான் விளங்குச்சு. நம்ம பேரில் மட்டும் அப்படி ஒரு நம்பர் வந்த பதிவு போட்டு ஜமாய்ச்சிருக்கலாம். ஆன நிறையா பேரு பின்னாடி அந்த நம்பர் வந்திருச்சே!

said...

//நானும் அதை மறுக்கவில்லையே பத்மா அர்விந்த்!

"கசடற"க் கற்றாலும் "அதற்குத் தக நிற்க"லைன்னா பயன் ஏதும் இல்லை என்றே சொலியிருக்கிறேன்.//

எஸ்.கே, இதை ஆங்கிலத்திலேயே சொல்கிறேன்.

I feel that when you possess skills in more than one language, your mind subconsciously translates the words that you utter in one language into another. This provides a way to keep the brain active and consequently helps keep Dementia at bay.

So you are right in saying that the trick is to keep the mind active. But the counterpoint is that becos of such subconscious work that happens, you dont have to expressly do something to keep your brain active.

May be we would understand better, if some can read and interpret the whole scientific article that triggered this discussion in the first place!

said...

//அப்பிடின்னா இங்கே இருக்கிற நாங்கெல்லாம் ரொம்ப அறிவாளியா இருக்கோமோ???//

நிறையா மொழிகள் தெரிஞ்சா சீக்கிரம் டிமெண்ஷியா வராதுன்னு சொல்லி இருக்கேனே தவிர நீர் சொன்னா மாதிரி சொல்லி இருக்கேனா? உம்ம பேச்சைக் கேட்டா ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருது.

ஒருத்தன் போயி கண் டாக்டர் கிட்ட கண்ணை பரிசோதனை பண்ணிக்கிட்டான். அவரும் டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டு கண்ணாடி ஒண்ணு போட்டுக்கச் சொன்னாரு. போட்டுக்கிட்டா நல்லா படிக்க முடியுமின்னு சொன்னாரு.

இந்த ஆளும், சின்ன வயசுல பள்ளிக்கூடம் போக முடியாம இவ்வளவு நாளா தற்குறியாவே இருந்துட்டேன். இந்த கண்ணாடி மட்டும் முன்னமே கிடைச்சு இருந்தா .... அப்படின்னு புலம்பினானாம்!

said...

//இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா முதல்செய்தியைத் தந்த ஆளுக்கு ஒரே ஒரு மொழிதான் பேசத் தெரியும்//

நம்புகிறோம்!//

சிபி, நீர் இப்படி ஒரு வார்த்தையில் பதில் சொன்னா கலவரமா இருக்கே. உள்குத்து எதனா இருந்தா சொல்லிடும்.

said...

//குரு படத்தில அமிதாப் பச்சனா?

கமல்தான நடிச்சாரு!

உங்க விமர்சனம் ரொம்ப லேட்டு!

:))//

வந்துட்டாரய்யா நக்கல் பார்ட்டி. நீர் லீவில் போன சமயத்தில் ஒருத்தர் அந்த படத்துக்கு விமர்சனமே எழுதிட்டாரு. அதுக்கு அப்புறம் கூடவா கன்பியூஷன்?

said...

//வாய்ப் பாட்டு இல்லேப்பா. ம்யூஸிக் நொடேஷன் படிக்கிறது இன்னொரு மொழி படிக்கிற மாதிரியாம்.//

டீச்சர், நம்ம ஊர் பாட்டுக்களில் பல பாடல்கள் எழுதி வைத்துக்கொண்டு பாடப்படுவதில்லை. அதுவும் மனதிற்கு பயிற்சிதானே. :))

said...

//'நக்கல் நாயகன்' நாமக்கலாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.//

கருமமே கண்ணாக இருக்கும் வெற்றியாரைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள் நண்பரே.

said...

//எனக்கு தமிழை தவிர ஆங்கிலம், ஹிந்தி,உருது,மலையாளம்,தெலுகு எல்லாம் தெரியும்.கரேட்டா கண்டுபுடிச்சிடுவேன் எதிரளிங்க என்ன மொழி பேசுறாங்கன்னு. கொத்ஸ், எனக்கும் பைத்தியம் புடிக்குமா? பயந்து பயந்து வருது.//

புடிக்குமா? இது என்ன கேள்வி. ஒரு முறை வந்தா மறு முறை வராம இருக்க இது என்ன சிக்கன்பாக்ஸா? எல்லாம் வருமய்யா வரும்.

said...

சரி, நா 100க்கு கெளம்பிட்டேன். யாரு எங்கூட வாரீங்க. என் கைய ஜாக்கிரதையா புடிச்சுகோங்க.

said...

//சரி, நா 100க்கு கெளம்பிட்டேன். யாரு எங்கூட வாரீங்க. என் கைய ஜாக்கிரதையா புடிச்சுகோங்க.//

50க்குத்தான் தேவ் 49 ரன் எடுத்த உடனே நீர் வந்து ஒரு ரன் எடுத்துப் பேர் வாங்கிட்டீரு. 100க்காவது கொஞ்சம் வேலை பாரும். :))

said...

//50க்குத்தான் தேவ் 49 ரன் எடுத்த உடனே நீர் வந்து ஒரு ரன் எடுத்துப் பேர் வாங்கிட்டீரு. 100க்காவது கொஞ்சம் வேலை பாரும். :))//

சூ!!! அப்டீல்லாம் பேசப்படாது. வாங்க வாங்க. கொஞ்ச தொலவுதான்

said...

தூக்கம் ரொம்ப கண்ணைச் சொக்குத்ப்பா.. கொஞ்சம் சீக்கிரம் ஆடினா தேவலாம்...

said...

//50க்குத்தான் தேவ் 49 ரன் எடுத்த உடனே நீர் வந்து ஒரு ரன் எடுத்துப் பேர் வாங்கிட்டீரு. 100க்காவது கொஞ்சம் வேலை பாரும். :))//

போதும் போதும் 28 நாள் ஒழச்சாச்சு. நாளைக்கு சம்பளம் கிரடிட் பன்னினாதான் மேல புடுங்குவேன்.

said...

டைம் என்னாச்சு அங்க?

said...

என்ன கொத்ஸ், அடுத்த பதிவு என்னன்னு ஒரு க்ளூ தரக்கூடதா? தூங்கியாச்சா?

said...

//O.K, அபி, மனதைத் தளரவிடாமல் 100 வதுக்கு முயற்சி பண்ணுங்க. //

வெற்றி, நாங்கள்ளாம் சிம்பு மாதிரி. மனச தளரவுட மாட்டோம்ல.(யாராவது சிம்புவின் Sun Tv Pongal பேட்டி பாத்தீங்களா?)

said...

அடடா உங்களுக்குன்னு செய்தி கிடைக்குது பாருங்க ...

said...

நல்ல வேளை அமிதாபுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் னு மாத்தி செய்தி போடாம இருந்தாங்களே.

said...

மூளையை சுறுசுறுப்பா வெச்சிருந்தா dementia வருவதை தவிர்க்க முடியுமா?

வம்பு பேசுறவங்களுக்குக்கூட இதெல்லாம் குறைவா வரும்னு எங்கயோ படிச்சேன்

said...

நூறு போட்டாச்சு ...

அவசரத்துல smiley போட மறந்துவிட்டேன். போட்டுக்குங்க..

said...

இலவசம் அப்போ ஊமை 200 வருஷம் இருப்பாங்களா திடசித்தத்துடன்

said...

கொத்ஸ் இரண்டு மொழி பரவாயில்லை.
தமிழில் பதிவு எழுதிப் பின்னூட்டம் போட்டாலும் டிமென்ஷியாவைத் தள்ளிப் போடலாம்னு எங்க டாக்டர் சொல்றாருங்க.
அதுவும் வெண்பா எழுத ஆரம்பித்தால் பழைய பிரச்சினைகள் எல்லாம் மறந்து போய்ப் புதிசா
யோசனைகள் வருவதால் எல்லாம்
சுபம்.:-0)

said...

எப்படீங்க இந்தமாதிரி செய்தியெல்லாம் உங்க கண்லமட்டும் படுது..

ரெம்ப நல்லா தொகுத்திருக்கீங்க.

:)

said...

எல்லாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கப்பா. இந்த பிளாக்கர் மாத்தச் சொல்லி படுத்துது. என்ன செய்யணமுன்னு பாக்கறேன்.

said...

:))

said...

:))

said...

(கொஞ்சம் லேட்டா)"
:))

said...

என்ன சிரிப்புன்னு கேட்க வந்தேன், அதுக்குள்ள பதில் சொல்லிட்டீங்களே! :))

said...

இ.கொ,
இலக்கை [target] அடைஞ்சாச்சா?
இப்பதான் மனதுக்கு நிம்மதி :)))

said...

வெற்றி,

உங்க கை ராசியான கைதான்! நல்லா போணியாயிருச்சே! இனிமே நீங்களே வந்து எல்லா பதிவுகளிலேயும் முதல் பின்னூட்டம் போட்டு போணி பண்ணிடுங்க.

(அப்படிச் செஞ்ச உடனே இந்த மாதிரி பொறுப்பா கூட இருந்து சதம் அடிக்கும் வரை கவனிப்பீர் இல்லையா!)

வெண்பா பற்றிய உங்களின் கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்!

said...

இ.கொ,
/*உங்க கை ராசியான கைதான்! நல்லா போணியாயிருச்சே! இனிமே நீங்களே வந்து எல்லா பதிவுகளிலேயும் முதல் பின்னூட்டம் போட்டு போணி பண்ணிடுங்க. */

அதுசரி:))) பின்னூட்டங்கள் 100 ஐ எட்டியிருக்காவிட்டால்,"அட பாவி மனுஷா, உன் ராசி, பின்னூட்டங்கள் கொஞ்சம் கூட வரேல்லை என்று திட்டியிருப்பீர்களாக்கும், huh?' :)))

/* வெண்பா பற்றிய உங்களின் கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்*/
வரும் வார இறுதியில் வினாக்கள் வரும்.:))

said...

வெற்றிகரமாக புச்சா பிலாக்கர் மாத்தின கொத்ஸ்'க்கு வாழ்த்துக்கள் :))))

said...

//அதுசரி:))) பின்னூட்டங்கள் 100 ஐ எட்டியிருக்காவிட்டால்,"அட பாவி மனுஷா, உன் ராசி, பின்னூட்டங்கள் கொஞ்சம் கூட வரேல்லை என்று திட்டியிருப்பீர்களாக்கும்,//

அதான் முன்னாடியே சொல்லியாச்சே! :))

said...

//வெற்றிகரமாக புச்சா பிலாக்கர் மாத்தின கொத்ஸ்'க்கு வாழ்த்துக்கள் :))))//

ராம்ஸ், மாற்றும் போது திறந்து வெச்சுருந்த பதிவுகளில் உங்களோட பதிவும் ஒண்ணு! நன்றி!

said...

//ராம்ஸ், மாற்றும் போது திறந்து வெச்சுருந்த பதிவுகளில் உங்களோட பதிவும் ஒண்ணு! நன்றி!//

கொத்ஸ் நன்றிக்கு தன்யன்னேன்..... அப்புறம் விளம்பரத்துக்கு நன்றி..

புரோப்பல் போட்டோ சூப்பரூ.. :)

said...

அதெப்படிங்கானும்... சும்மா ரெண்டு வரி எழுதினாலே உமக்கு மாத்திரம் நூத்துக்கும் மேல பின்னூட்ட்டம் வந்து கொட்டறது ?

said...

//என்ன கொத்ஸ், அடுத்த பதிவு என்னன்னு ஒரு க்ளூ தரக்கூடதா? தூங்கியாச்சா?//

என்ன அபிஅப்பா இப்படி திடீருன்னு அனானியாகிட்டீங்க? :))

க்ளூவா? அதெல்லாம் தெரிஞ்சாத் தர மாட்டோமா? அடுத்து கட் பேஸ்டுக்கு என்ன மேட்டர் கிடைக்குதோ, அதான் மேட்டர். இது போதுமா?

said...

//வெற்றி, நாங்கள்ளாம் சிம்பு மாதிரி. மனச தளரவுட மாட்டோம்ல.(யாராவது சிம்புவின் Sun Tv Pongal பேட்டி பாத்தீங்களா?)
//

இந்த சிம்பு மேட்டர் எல்லாம் மனசோட இருக்கட்டும். உதடு வரை வர வேண்டாம்.

said...

//அடடா உங்களுக்குன்னு செய்தி கிடைக்குது பாருங்க ...//

வாங்க ஜெயஸ்ரீ, என்ன இவ்வளவு லேட்டு?

உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி மேட்டர் கண்டுபிடிச்சி போடறோம் பாருங்க!

அது சரி வெண்பா பதிவு, விக்கியில் வெண்பா எல்லாம் நடந்த போது ஆளை எங்க காணும்?

said...

//நல்ல வேளை அமிதாபுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் னு மாத்தி செய்தி போடாம இருந்தாங்களே.//

அது கூட பரவாயில்லை, ஆனா ஜெயாவுக்கும் அபிஷேக்குக்கும் அப்படின்னு போட்ட இன்னும் அசிங்கமுல்ல!

said...

//வம்பு பேசுறவங்களுக்குக்கூட இதெல்லாம் குறைவா வரும்னு எங்கயோ படிச்சேன்//

அப்போ நமக்கெல்லாம் வரவே வராதுன்னு சொல்லுங்க!!

said...

//நூறு போட்டாச்சு ...

அவசரத்துல smiley போட மறந்துவிட்டேன். போட்டுக்குங்க..//

நீங்க 100 போட்டதுக்கு நான் சிரிப்பான் போட்டுக்கிட்டாச்சு!! :)))

said...

//இலவசம் அப்போ ஊமை 200 வருஷம் இருப்பாங்களா திடசித்தத்துடன்//

ஐயா, பதிவை சரியா படிக்காம பின்னூட்டம் போட்டவங்க லிஸ்டில் உங்க பேருமா?

நான் என்னங்க சொல்லி இருக்கேன். நிறையா மொழிகள் தெரிஞ்சா இந்த மாதிரி சித்தம் கலங்கற சான்ஸ் கம்மி! இதுக்கும் பேசறதுக்கும் ஊமையா இருக்கறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

ஒரே கன்பியூஷன்.

said...

//கொத்ஸ் இரண்டு மொழி பரவாயில்லை.
தமிழில் பதிவு எழுதிப் பின்னூட்டம் போட்டாலும் டிமென்ஷியாவைத் தள்ளிப் போடலாம்னு எங்க டாக்டர் சொல்றாருங்க.
அதுவும் வெண்பா எழுத ஆரம்பித்தால் பழைய பிரச்சினைகள் எல்லாம் மறந்து போய்ப் புதிசா
யோசனைகள் வருவதால் எல்லாம்
சுபம்.:-0)//

நல்லாச் சொன்னீங்க வல்லியம்மா.. ஆனா இது எல்லாம் சொல்லிட்டு நீங்களே வெண்பா வகுப்பை கட் அடிக்கலாமா? :))

said...

//எப்படீங்க இந்தமாதிரி செய்தியெல்லாம் உங்க கண்லமட்டும் படுது..

ரெம்ப நல்லா தொகுத்திருக்கீங்க.

:)//

உங்களை மாதிரி ஆவலா வரவங்களுக்குச் சரியான தீனி போடணுமேன்னு பல இடங்களில் தேடி அலைஞ்சு கொண்டு வர மேட்டருங்க இது எல்லாம்! :))

said...

//அதெப்படிங்கானும்... சும்மா ரெண்டு வரி எழுதினாலே உமக்கு மாத்திரம் நூத்துக்கும் மேல பின்னூட்ட்டம் வந்து கொட்டறது ?//

நல்லா பாருமய்யா, ரெண்டு வரியா எழுதி இருக்கேன். எம்புட்டு கஷ்டப்பட்டு இது எல்லாம் கொண்டு வந்து உங்க பார்வைக்கு வைக்கிறேன்னு தெரியுமா? :))

said...

டியர், கொத்ஸ் என்ன ஆளயே கானும். நம்ம வீடு கிரகப்பிரவேசம் நல்லபடியா முடிஞ்சுது. உங்க வருகைக்காக வெயிட்டிங்.

said...

//டியர், கொத்ஸ் என்ன ஆளயே கானும்.//

ரொம்ப ஆணி புடுங்க வைக்கிறாங்க. அழுவாச்சி அழுவாச்சியா வருது.

//நம்ம வீடு கிரகப்பிரவேசம் நல்லபடியா முடிஞ்சுது. உங்க வருகைக்காக வெயிட்டிங்.//

வந்து மொய் எழுதியாச்சுங்க! :)