Thursday, February 15, 2007

இரு தலை கொள்ளி எறும்பு

இப்படி என் நிலமை ஆகுமுன்னு எதிர்பார்க்கவே இல்லையே. எந்த விஷயமா இருந்தாலும், என்னதான் நடுநிலமைவியாதி (நன்றி: யாருக்குன்னு உங்களுக்கே தெரியும்) வேஷம் போட்டாலும், உள்ளுக்குள்ள நம்ம வோட்டு எந்தப் பக்கமுன்னு சரியாத் தெரியுமே. ஆனா இன்னைக்கு நம்மளை இப்படித் தொங்க விட்டுட்டாங்களே! மேட்டர் என்னான்னு கேட்கறீங்களா? எல்லாம் இந்த பாழாப்போன இண்டிபிளாக்கீஸ் தேர்தல்தாங்க.

எப்பவும் தேர்தல்ன்னு வந்தா நம்ம வோட்டு யாருக்குன்னு எளிதா முடிவு பண்ணிட்டு, தேர்தல் நாளன்று வோட்டு போட முடியாமல் எங்கயாவது வெளியூரில் ஆணி புடுங்குறதுதானே நம்ம வழக்கம். ஆனா இந்த முறை பாருங்க அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வர முடியாதபடி தவிக்க விட்டுட்டாங்களே. போதுமய்யா புலம்பல், மேட்டருக்கு வான்னு சொல்லறீங்களா? இருங்க வரேன்.

இந்த இண்டிபிளாக்கீஸ் இருக்காங்களே, இவங்களுக்கு வேற வேலையே இல்லை. வருஷா வருஷம் சிறந்த பதிவுகள் அப்படின்னு சில பதிவுகளைத் தேர்வு செய்து அவங்களுக்கு பரிசெல்லாம் குடுத்து அவங்களைக் குட்டிச்சுவராக்கறதே வேலையாப் போச்சு. அதுல பல பிரிவுகள் வேற. நமக்குத் தமிழ்மணத்தை விட்டு வேற என்ன தெரியும்? அதுனால இந்த தேர்தலை எல்லாம் சாய்ஸில் விட்டு வேடிக்கைப் பார்க்கலாம்ன்னு நினைத்தால் சிறந்த தமிழ்ப் பதிவு அப்படின்னு ஒரு பிரிவை வெச்சுத் தொலச்சுட்டாங்க. 24 மணி நேரமும் தமிழ்மணத்தில் குடியிருக்கற நாம இந்த தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போடாம யாரு போடப்போறாங்கன்னு உள்ள போயி பார்த்தா அங்கதான் நமக்கு அதிர்ச்சி.

ஆமாங்க, நம்ம பசங்களோட பசங்களா, விக்கி பசங்களா இருக்கிற ரெண்டு பசங்களை இந்த தேர்தலில் மோத விட்டு இருக்காங்க, இந்த பாழாப் போன இண்டிபிளாக்கீஸ். அதுவும் ரெண்டு பேரும் நமக்கு ரொம்பவே நெருக்கமான, வேண்டியப்பட்ட பசங்க. அது மட்டும் இல்லாம நம்ம ப.ம.க.வில் வேற ரெண்டு பேரும் பெரும் தலைங்க. இப்போ நான் யாருக்குன்னு வோட்டு போட? அதான் என்ன பண்ணினேன், இவருக்கு ரெண்டு வோட்டு, அவருக்கு ரெண்டு வோட்டுன்னு பிரிச்சுப் போட்டு இருக்கேன். என்ன பண்ண, நம்ம நிலமை அக்னி நட்சத்திரம் விஜயகுமார் மாதிரி ஆகிப் போச்சே!

என்னது யாரு அந்த ரெண்டு பேரா? சரியாப் போச்சு. நம்ம பெனாத்தலாரும், ரஷ்ய மருத்துவர் ராமநாதனும்தாங்க அவங்க. நீங்களும் என்ன பண்ணுங்க, இவருக்கு ஒரு வோட்டு, அவருக்கு ஒரு வோட்டுன்னு ஒண்ணுக்கு ரெண்டா ஓட்டு போட்டு நம்ம ஆளுங்களை பெருவாரியான வோட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்க.

வோட்டு போடறது எல்லாம் ரொம்ப சிம்பிளுங்க. வோட்டுக்கு ஒரு மெயில் ஐடி வீதம் ரெண்டு மெயில் ஐடி வேணும். அதை வெச்சுக்கிட்டு இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா அந்த மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு சுட்டி இருக்கும். அதை சொடுக்கி வோட்டிடும் பக்கத்திற்குப் போங்க. அங்க இரண்டாவது பக்கத்தில் indic blog (tamil) என்ற பிரிவு இருக்கும். அங்க போயி Theriyala என்ற தளத்திற்கு ஒரு வோட்டும், Penathals என்ற தளத்திற்கு ஒரு வோட்டும் போடுங்க.

ஞாபகம் இருக்கட்டும் ஒரு மெயில் ஐடிக்கு ஒரு வோட்டுதான். அதனால இவங்க ரெண்டு பேருக்கும் வோட்டு போட ரெண்டு ஐடி வேணும். எனக்கு ரெண்டு ஐடி இல்லை அப்படின்னு பொய் சொல்ல நினைக்காதீங்க, அப்படி இல்லைன்னு சொன்னா நம்ம கிட்ட சொல்லுங்க இலவசமா ஒரு ஜிமெயில் ஐடி தரேன்!

போடுங்கய்யா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!
போடுங்கம்மா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!

31 comments:

said...

வழக்கம் போல நம்ம பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டம்.

said...

என்னுடைய வோட்டு இவ்வுலகின் புதிய கடவுள் செல்வன் தான். விக்கிபசங்க மொத்தமா நின்னுருந்தா போட்டிருப்பேன். ஆனா இப்படி காங்கிரஸ் காரங்க மாதிரி இரு அணியா நிக்கிறாங்களே

said...

//போடுங்கய்யா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!
போடுங்கம்மா வோட்டு, விக்கி பசங்கள பாத்து! //
சூரியனுக்கே டார்ச்சா..
பினாத்தலுக்கே விளம்பரமா...

(அதே ராகத்தில் படிக்கவும் :)) )

said...

//...இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா ..//
இதுவரைக்கும் செஞ்சிட்டேன்; ஆனா அங்க இருந்து ஒண்ணும் வரலையே :(

said...

//என்னுடைய வோட்டு இவ்வுலகின் புதிய கடவுள் செல்வன் தான்.//

டாலர்??

அட டாலர் குடுத்தாரான்னு கேட்கலை. டாலர் செல்வனான்னு கேட்டேன்! ஹிஹி.

//விக்கிபசங்க மொத்தமா நின்னுருந்தா போட்டிருப்பேன்.//

இந்த ஒரு வார்த்தை போதுங்க.

//ஆனா இப்படி காங்கிரஸ் காரங்க மாதிரி இரு அணியா நிக்கிறாங்களே//

இவங்க எங்கங்க பப்ளிக்குல அடிச்சுக்கிட்டாங்க. இவரு அவருக்கும் அவரு இவருக்கும் ஓட்டுப் போடற அளவு நல்லவங்கப்பா. ஒருத்தரை மட்டும் தேர்ந்தெடுக்காம ரெண்டு பேரையும் தேர்ந்து எடுத்தது காலத்தின் கட்டாயம் வேற என்ன சொல்ல! :))

said...

//பினாத்தலுக்கே விளம்பரமா... //

ஏதோ என்னாலானது. திருப்பதி சாமிக்கு ஒத்த ரூவா காணிக்கை போடற மாதிரின்னு வெச்சுக்குங்களேன்.

ஒரு சிறு அணில் போலன்னு சொல்ல வந்தா கவிதாக்கா உருவம் மனதில் வருது, பயமா இருக்குங்களே!!

said...

//இதுவரைக்கும் செஞ்சிட்டேன்; ஆனா அங்க இருந்து ஒண்ணும் வரலையே :(//

ஆமாம் ஐயா. சில சமயம் உடனே வருது, சில சமயம் ரொம்ப தாமதமாகுது. நான் வோட்டு நம்பர் 5,6க்கு குடுத்த ஐடிகளில் மெயில் இன்னும் வரவே இல்லை.

said...

தம்பி இலவசம்..

உன் பாசம் என்னைப் புல்லரிக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது என்பதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் கூறக்கடமைப்பட்டுள்ளேன் என்பதை இவ்வரலாறு கூறும்.

உன் கஷ்டம் எனக்குப் புரிகிறது. எனக்கே மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. நெருங்கிய நண்பர்களுடன் போட்டியா என்னும்போது? என்ன செய்ய இண்டிபிளாக்கீஸ் என்னும் மாயவலை, மகாபாரதம் போல நெருங்கியவர்கள், உறவினர்களுக்குள்ளே யுத்தத்தை உண்டுபண்ணிவிட்டது.

"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்ற கீதாச்சாரமும் மறுபரிசீலனைக்கு உட்பட்டு "கடமையைச் செய், கள்ளஓட்டுப் போடு" என்றாகிவிட்ட இன்னிலையில் செய்வதறியாது திகைக்கையில் அருமருந்தாக வந்திருக்கிறது உங்கள் அறிவுறுத்தல் பதிவு.

பாதி பிரசாரத்துக்கு நன்றி. மீதி நன்றியை டாக்டர் கூறுவார்.

said...

அட கைமேல் பலன் கறது இதுதானா?

பதிவுக்கு ரொம்ப நன்றி கொத்ஸு.

பெனாத்தலாரும் நானும் நெடுங்கால அரசியல் சகாக்கள். ப.ம.கவில் தொடங்கியது எங்கள் நட்பு. அகில உலக கொள்கை பரப்புச் செயலாளராய் இருந்தவர் பெருந்தன்மையுடன் என்னை ரஷ்ய மாவட்டமாக்கி பின்னர் மற்றொரு கொ.ப.சேவாக்கி அழகு பார்த்த வள்ளல். பின்னர் விக்கி மற்றும் இன்னும் பல தளங்களில் எங்கள் நட்பு தொடர்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பதாக கற்பனை செய்துகொள்ளவேண்டாம். அது வெறும் வதந்திதான். இருவருமே என்றைக்குமே ஒரே கட்சிதான்.

//மகாபாரதம் போல நெருங்கியவர்கள், உறவினர்களுக்குள்ளே யுத்தத்தை உண்டுபண்ணிவிட்டது.//
என்று ஆதங்கத்துடன் சொல்கிறார் அண்ணன். ஒரே உறைக்குள் இரு போர்வாள்களா என்று நீங்களும் கேட்கலாம்.

நான் சொல்கிறேன் இராமனுக்கு வில்லும் அம்பும் போல நாங்கள். வில்லில்லாமல் அம்பில்லை. அம்பில்லாமல் வில்லில்லை. விளக்கம் போதுமா?

வாக்காளர் என்ற வகையில் என் வோட்டு அவருக்கு. அவர் வோட்டு எனக்கு. இதுதான் எங்கள் அரசியல் பண்பாடு!

படிக்கிற நீங்கள் (அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப) எங்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ வாக்களித்து விக்கிகளை வாழவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்!

said...

அப்ப இது கள்ள ஓட்டுக் கணக்குலே வராதா?

ஐடியா அதி சூப்பர்:-))))

said...

நண்பர் ரவி எழுதியது :

ஓட்டு மட்டும் போடாம இருக்காதீங்கப்பா. அது ஜனநாயக விரோதம்.

மனசுக்கு சங்கடமா இருந்தா பூவா தலையா போட்டு ஒரு முடிவு எடுங்கப்பா.

said...

நம்மக்கிட்ட வேல மெனக்கேட்டு ஓட்டு கேட்டவர் இராமநாதந்தான்.. அதனால அவருக்குத்தான் நம்ம ஓட்டு..:)

said...

////...இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா ..//

ரிப்பீட்டே..

said...

//அப்ப இது கள்ள ஓட்டுக் கணக்குலே வராதா?//

கள்ள ஓட்டா? என்ன கெட்ட வார்த்தை எல்லாம் பேசறீங்க டீச்சர். வாயை கழுவிக்கிட்டு வாங்க! :))

//ஐடியா அதி சூப்பர்:-))))//

இங்க சொன்னா போதாது, நம்ம விக்கி பசங்க அக்கவுண்டில் வோட்டா ஏறணும். தெரியுமில்ல.

said...

கள்ள ஓட்டு போடுறதுக்கான பேசிக்க் கூட தெரியாம இருக்குறியே..ரெண்டு பேருக்கு போட்டா ஓட்டு பிரிஞ்சிராது.
நான் நாலு ஓட்டு பினாத்திக்கிடே போட்டேன் :)

இருதலைக்கொள்ளி எறும்பு அப்படீன்னா என்ன? எறும்பு வந்து ரெண்டு பேர் தலல கொள்ளி வைக்குமா ?

said...

//ஓட்டு மட்டும் போடாம இருக்காதீங்கப்பா. அது ஜனநாயக விரோதம்.//

ஆமாம்பா. எல்லாரும் வோட்டு போடுங்க. சரியா?!!

//மனசுக்கு சங்கடமா இருந்தா பூவா தலையா போட்டு ஒரு முடிவு எடுங்கப்பா.//

அதெல்லாம் வேண்டாம்ப்பா. நம்ம பசங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு வோட்டா போடுங்க. காசா பணாமா? போடுங்கய்யா வோட்டு விக்கி பசங்கள பாத்து!

said...

//நம்மக்கிட்ட வேல மெனக்கேட்டு ஓட்டு கேட்டவர் இராமநாதந்தான்.. அதனால அவருக்குத்தான் நம்ம ஓட்டு..:)//

கட்டாயம் போடுங்க. நீங்க எல்லாம் நம்ம பசங்களுக்குப் போடலைன்னா எப்படி? ஆனா இன்னும் ஒரு வோட்டு நம்ம பெனாத்தலுக்கும் போடக்கூடாதா? அவர் சார்புலதான் நான் வந்து கேட்கறேனே!!

said...

//////...இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா ..//

ரிப்பீட்டே..//

தருமி / மணிகண்டன் - மெயில் வந்திருக்கும் வோட்டு போட்டு இருப்பீங்கன்னு நினைக்கறேன். வரலைன்னா அவங்க சுட்டியில் இருக்கும் மெயில் ஐடிக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க சாமியோவ்.

said...

//கள்ள ஓட்டு போடுறதுக்கான பேசிக்க் கூட தெரியாம இருக்குறியே..ரெண்டு பேருக்கு போட்டா ஓட்டு பிரிஞ்சிராது.
நான் நாலு ஓட்டு பினாத்திக்கிடே போட்டேன்//

அதெல்லாம் நமக்குத் தெரியுங்கண்ணா. பிரச்சனை இப்போ ரெண்டு பார்ட்டியும் நமக்கு வேண்டிய பார்ட்டியாச்சே. அது மட்டுமில்லாம அவங்க நம்மளாண்ட வந்து கேட்கவேற கேட்டுட்டாங்களே. அதான் பிரிக்க வேண்டியதாப் போச்சு. இதுவே ஒருத்தரா இருந்தா போட்டுத் தள்ளி இருக்க மாட்டோம். (அட நான் வோட்டைச் சொன்னேனய்யா, ஆளை எல்லாம் இல்லை!!)

//இருதலைக்கொள்ளி எறும்பு அப்படீன்னா என்ன? எறும்பு வந்து ரெண்டு பேர் தலல கொள்ளி வைக்குமா ?//

கேட்டுச் சொல்லறேன். வர்ட்டா.

said...

ஜோஸப் சார்,

உங்க மின்னஞ்சல் என்கிட்டே இல்லை அதான். இன்னொரு ஐடி இருக்கில்ல? நம்ம கொ ப செ வும், நானும் மனதார உளமாற வாக்குக் கேட்கிறோம்.. ஆவன செய்யுங்கள்:-)

இதைப்படிக்கும் அனைவரையும் இதையே என் திறந்த அழைப்பாகக்கருதி,

பினாத்தல்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டு, கொ ப செ கொத்தனாருக்கு உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

said...

ஆஹா..... இது தெரியாம போச்சே.... எங்க ஊருக்காரு போட்டியில இருக்காரு சொல்லி அனுப்பினாங்க அதனால் அப்படியே போய் ஒட்டை போட்டு வந்துட்டேன்.
மறுக்கா வேற போனுமா?

said...

அட! இப்போ தான் சென்னை மாநகராட்சி பிரச்சாரம் முடிந்ததுன்னு பார்த்தா, இலவசம் நீங்கள் விக்கி பசங்களுக்கு இலவசமா ஒரு பிரச்சாரம்.. தூள்..


ரெண்டு ஐடி இல்லாமலா.. தோடா.. நம்ம கிட்ட ஒரு பத்து பதினைந்து இருக்கு.. எல்லாத்தையும் பயன்படுத்திட வேண்டியது தான்

said...

அவ்வளவுதானே!! போட்டுட்டா போச்சு

said...

கொத்ஸ், பெனாத்தலாருக்கு 3 ஓட்டு, இராமநாதனுக்கு 2 ஒட்டு போதுமா..கொத்ஸ் சொன்னா செய்யாமலா?

(போட்டாச்சு...போட்டாச்சு..வுட்டா மாட்டுக்கு ஒரு கையெழுத்து மடிக்கு ஒரு கையெத்தா)

said...

//மறுக்கா வேற போனுமா?//

சொன்ன பேச்சை மறுக்காம போகணும்!! அப்புறம் யாருக்கு எவ்வளவு வோட்டு அப்படின்னு வந்துச் சொல்லுங்க. நம்ம கட்சி அப்ரெய்சலுக்கு உபயோகமா இருக்கும். :)

said...

//இலவசம் நீங்கள் விக்கி பசங்களுக்கு இலவசமா ஒரு பிரச்சாரம்.. தூள்..//

நானூறு கண்ட சிங்கமே, நன்றி நன்றி!!

//ரெண்டு ஐடி இல்லாமலா.. தோடா.. நம்ம கிட்ட ஒரு பத்து பதினைந்து இருக்கு.. எல்லாத்தையும் பயன்படுத்திட வேண்டியது தான்//

உம்மை மாதிரி ஆளுங்கதான்யா வேணும். வந்து எவ்வளவு ஸ்கோர்ன்னு மறக்காம சொல்லுங்க.

said...

//அவ்வளவுதானே!! போட்டுட்டா போச்சு//

சின்ன அம்மிணி, போட்டீங்களா இல்லையா? எதுக்காக கேட்கிறேன்னா வோட்டுப் போட கடைசி தினம் நாளை - அதாவது 20ஆம் தேதி. மறக்காமல் நம் விக்கி பசங்க இருவருக்கும் வோட்டு போடுவீர்.

said...

//கொத்ஸ், பெனாத்தலாருக்கு 3 ஓட்டு, இராமநாதனுக்கு 2 ஒட்டு போதுமா..கொத்ஸ் சொன்னா செய்யாமலா?//

கடமையிலிருந்து சிறிதும் வழுவாத அபி அப்பா அவர்களுக்கு கடமை கண்ணாயிரம் என்ற பட்டம் வழங்க இருப்பதை அறிவிப்பதில் நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

இண்டிபிளாக்கீஸில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நம் விக்கி பசங்க வென்றதைக் கொண்டாடும் விழாவில் இந்த பட்டம் வழங்கிச் சிறப்பிக்க இருப்பதையும் தெரிவித்துக் கொண்டு, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் தாழ்மையுடன் அழைக்கிறோம்.

நன்றி வணக்கம்.

said...

நாளை (இந்திய நேரப்படி இன்றே) வாக்கெடுப்பின் கடைசி தினம். அன்புடன் வந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வாக்கெடுப்பு முடியும் வரை இங்கு பி.க. தொடரும். போலீஸ்கார் மன்னிக்க! :)

said...

இப்படம் இன்றே கடைசி. வோட்டு போடாதவங்க எல்லாம் வோட்டு போடுங்கோ. வோட்டு போட்டவங்க எல்லாம் இன்னும் ரெண்டு போடுங்க. இதுவரை போட்டவங்களுக்கு நன்றி.

said...

வாக்கு பதிவு முடிஞ்சு போச்சு போல. நம்ம பேச்சைக் கேட்டு ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் நன்றி. இனி நம்ம சிங்கங்கள் வெற்றி என்ற செய்தி வரும் வரை எனக்கு ரெஸ்ட்தான்! :-D