டிஸ்கி: இது ஒரு சோதனைப் பதிவு. சொல்லப் போவது என் சோகக் கதையை. வேண்டாதவர்கள் சாய்ஸில் விட்டு விடுங்கள்.
சனிக்கிழமை வரை ஒழுங்காக தமிழ்மண முகப்பில் வந்து கொண்டிருந்த எனது பதிவுகள், திடீரென ஞாயிற்றுக் கிழமையிலிருந்து அண்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகளில் வரக் காணோம். இத்தனைக்கும் நான் வார்ப்புருவில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. என்ன செய்வது எனத் தெரியாது திணறி நின்ற பொழுது இந்தப் பதிவு கண்ணில் பட்டது.
தமிழ்மண நிர்வாகக் குழுவினர் இனி 30 பின்னூட்டங்களுக்கு மேல் போகும் பதிவுகளை திரட்ட போவதில்லை என்ற அவர்களது முடிவை வெளியிட்டு இருக்கும் பதிவு இது. இந்த அறிவிப்பு இவர்கள் இன்றுதான் வெளியிட்டு இருந்தாலும் ஒரு வேளை அதற்குரிய மென்பொருளை நேற்றே சோதனை செய்து இருப்பார்களோ, அதனால்தான் முப்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும் அந்தப் பதிவு தெரியாமல் போனதோ என சந்தேகம்.
இந்த பதிவும், இதில் வரும் மறுமொழிகளும் தமிழ்மணத்தில் சரிவரத் தெரிந்தால் வார்ப்புருவில் கை வைக்க வேண்டாம். அல்லது அதில் என்ன பிரச்சினை எனப் பார்க்க வேண்டும். அந்த சோதனைக்காகவே இந்தப் பதிவு. இவ்வளவு நேரம் பொறுமையாக எதேனும் இருக்கும் எனப் படித்து இருந்தீர்களானால் என்னை மன்னிக்கவும். இது உண்மையிலேயே ஒரு சோதனைப் பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
நம்ம கடைசி பத்து பதிவுகளில் வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை - 81, 61, 31, 129, 382, 94, 57, 24,68,8.
கணக்கெல்லாம் இல்லைங்க. சும்மா ஒரு ஆர்வத்துக்கு.
இந்த பின்னூட்டம் சோதனைப் பின்னூட்டமே.
ஓக்கேங்க. இப்போ வருது. அதனால நான் வார்ப்புருவில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. ஒரு ரெண்டு நாள் நம்மளை தவிக்க விட்டுட்டாங்க தமிழ்மணத்தார். அவ்வளவுதான் போல இருக்கு!! பரவாயில்லை!!
எனக்கெல்லாம் அந்த கவலையே இல்லை!!
மிஞ்சிப்போனா மிக அதிகமாக 17 தான் வரும்.:-))
சோதனைப் பதிவுக்கு யாரோ வோட்டுப் போட்டு ரேட்டிங் அதிகமானதை நினைச்சு சிரிக்கிறதா அழுவறதா? ;-)
குமார், உங்க பதிவெல்லாம் வந்து படிச்சுக்கிட்டுதான் இருக்கோம். பின்னூட்டம் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க.
சேது, அது என் வேலைதான். அதுவும் வேலை செய்யுதான்னு பார்த்தேன். அதான் உண்மையைச் சொல்லிட்டேனே. இனிமே என்ன அழுகை. நல்லா சிரியுங்க.
அடடா, நம்மளையும் இப்படி குரூப்பா பதில் போட வெச்சுட்டாங்களே!! :))
பொறுமையை நன்றாகவே சோதித்தீர்கள் கொத்ஸ்
நானும் குமார் கேஸுதான்!
:))
ஹைய்யா! ஜாலி!
:))
ஏற்கனவே 6 பின்னூட்டம் ஆச்சு. ஆறுல மூணு உங்களோடது.
//அடடா, நம்மளையும் இப்படி குரூப்பா பதில் போட வெச்சுட்டாங்களே!! :))//.
இப்படி போனா ரெம்ப சீக்கிரம் இந்த பதிவு வெளியே போயிடும் :-)
ரொம்பதான் சோதிக்கிறிங்க..பதிவ இல்ல, எங்கள
போன பின்னூட்டத்தில ஸ்மைலி போட மறந்திட்டேன் :))))
தலைவா என்ன இது.. பின்னூட்டத் தமிழுக்கு வந்தச் சோதனை.. தாங்க முடியவில்லையே வேதனை..
நாட்டிலே இலவசங்களை அரியணை ஏற்றுகிறார்கள்.. இங்கு நெட்டிலே இலவசத்தின் பின்னூட்ட அரியணையை அருவா மனைக் கொண்டு அறுக்கிறார்களே...
நெஞ்சுப் பொறுக்குதில்லையே.. அய்யகோ...
நம் மன்றத்துக் கண்மணிகள் பொங்கியெழுந்து புடலாங்காயாய் வளைந்து நெளிந்து உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம்....ஆணையிடுங்கள் தலைவா..
மு.கா. அதான் முதல் வரியிலேயே டிஸ்கி போட்டாச்சே, அதையும் மீறி வந்துட்டு நம்மளை கடுப்படிச்சா எப்படி? :))
---------
எஸ்.கே. ரொம்ப ஆடாதேயும். அப்புறம் உம்ம பதிவுக்கு வந்து நானே 30 பின்னூட்டம் போட்டுடுவேன். (பின்னூட்டம் போட்டுடுவேன்னு மிரட்டறது இதுதாங்க முதல் தடவை!)
--------
//இப்படி போனா ரெம்ப சீக்கிரம் இந்த பதிவு வெளியே போயிடும் :-)//
என்னங்க பண்ணறது. நம்ம பதிவு எல்லாம் போட்ட கொஞ்ச நேரத்தில் வெளிய போயிடும் போல இருக்கு. எப்பவும் வராதா ஆளுங்க நீங்க கூட வந்திருக்கீங்க பாருங்க. ஆனா வான்னு வாய் நிறையா கூப்பிடாம அழுகாச்சியாகிப் போச்சே நம்ம பொழப்பு. இனிமேலாவது ரெகுலரா வாங்கண்ணா!
---------
மணி, அப்படி டிஸ்கி போட்ட பின்னாடியும் இப்படிச் சொன்னா எப்படி? அப்புறம் இனிமே மறக்காம எல்லாத்தையும் ஒரே பின்னூட்டத்தில் சொல்லிடு சாமி. இந்த மாதிரி பிச்சு பிச்சு போட்டா முகப்பில் வர ஒரு மணி நேரம் கூட வராது போல இருக்கே!! :))) (கவலைப்படாம போடு ராசா, முகப்பில் வந்தா என்ன வரலைன்னா என்ன, நம்ம நண்பர்கள் அப்பப்போ பதிவு பக்கம் வராமலேயேவா போயிடுவீங்க?
------------
தம்பி தேவு, பதிவா போட வேண்டிய மேட்டரை இப்படி பின்னூட்டமா போட்டு வேஸ்ட் பண்ணிட்டயே. உனக்கும் பதிவு எண்ணிக்கையில் ஒண்ணு போச்சு, எனக்கும் இருக்கற முப்பதே முப்பதில் ஒண்ணு போச்சு. கவனமா இருக்க வேண்டாமா ராஜா! :))
-----------
நல்ல வார்த்தைகளால் வாழ்த்திய அனானி, உங்க பின்னூட்டத்தை போட முடியலை சாமி. இது நாலு பேரு வந்து போற இடம் அதனாலதான். மத்தபடி உம்ம பின்னூட்டத்திலே ஒரே ஒரு செட்டு வார்த்தைங்கதான் வருது. வேற எதுவும் தெரியாதா? சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்.
-------
இப்படி பின்னூட்டங்களுக்குப் பதிலே ஒரு பதிவு நீளத்துக்குப் போட வெச்சுட்டாங்களே! ஆனாலும் ரொம்ப மோசமப்பா. :)
கொ.பா.செ - யின் சோதனைப் பதிவில் ஒரு சோதனைப் பின்னூட்டம்
ஆமா ! இந்தப் பதிவிலும் 30 க்கும் மேல பின்னூட்டம் வந்தா திரட்ட மாட்டாங்களா? சொல்லுங்க கொதஸ் நானே உங்களுக்கு ஒரு 30 போட்டுறேன்!
கொத்ஸ் இதுக்குப் போய் அழுகலாமா? உங்களுக்கு இல்லாத பின்னூட்டமா?நாங்கள்லாம் பாசாக்காரப் பயலுக ஆமா....!)
அன்புடன்...
சரவணன்
தலைவா.. போற போக்கப் பார்த்தால், பதிவைவிட உங்க பின்னூட்டங்கள் நீளமா போயிடும் போலிருக்கே..
கொத்ஸ், நான் இதுக்கொரு யோசனை சொல்றேன்.. நல்லா இருக்கான்னு பாருங்க..
இப்போ, யாராவது உங்களுக்குப் பின்னூட்டம் போட்டாங்கன்னு வைங்க, அதுக்குப் பதிலை உங்க பதிவில் சொல்லிட்டு, அப்பாலிக்கா அந்தப் பின்னூட்டத்த ரிலீஸ் பண்ணுங்க.. அப்போ, நீங்க போட வேண்டிய ஒரு பின்னூட்டம் குறையும், அப்படியே உங்க பதிவு முகப்பிலும் வரும்.
சேர்ந்தாற்போல, நாலு பேர் பின்னூட்டம் போட்டா, அந்த நாலையும் பப்ளிஷ் பண்ணாம, ஒரே பின்னூட்டமா நீங்களே வெட்டி ஒட்டிப் போடலாம்.. நம்பர் குறையும், முகப்பில் வரும் நேரம் அதிகரிக்கும்.. எப்படி ஐடியா? :)))
(அதிக பின்னூட்டம் வாங்குவது எப்படின்னு எழுதின ஆளை இப்படி, பின்னூட்டத்தை முப்பதுக்குள் வைத்தும் பலபேரைப் பார்க்க வைப்பது எப்படின்னு யோசிக்க வச்சிட்டாங்களே!!:))))
//(பின்னூட்டம் போட்டுடுவேன்னு மிரட்டறது இதுதாங்க முதல் தடவை!)//
ஆமால்ல.. வாழ்க்கையே மாறப்போகுது போல :-) எல்லாருக்கும் இனிமே நல்ல PM தேவை (பின்னூட்ட மேனேஜ்மெண்ட்)
என்னைக் கேட்டா 30 வெவ்வேற நபர்களின் மறுமொழியும் வந்தபிறகே நீங்க வாயைத் திறக்கலாம் :-))) அதான் பெஸ்ட் :-D
அதோட இல்லாம, இனிமே எல்லாரும் பதிவு வந்தவுடனே "நான் தான் ஃபர்ஸ்ட்?" அல்லது "இப்ப உள்ளேன் ஐயா மட்டும்.. அப்றமா வரேன் தல" இப்படிப்பட்ட பின்னூட்டங்களை நீங்களே டிலீட்டிடுவீங்கன்னு நினைக்கிறேன் :-D
நீங்கல்லாம் இந்தப் பின்னூட்டப் பிரச்சினையில அல்லாடறதை வேடிக்கை பார்க்க நல்லாத் தான் இருக்கப்போவுது கொஞ்ச நாளைக்கு.. ஏன்னா எனக்கு அந்தப் பிரச்சினை இல்ல பாருங்க ;-)
சோதனைப் பதிவா நல்ல நகைச்சுவை பதிவுங்க..படிச்சு கண்ணீர் வரும் வரை சிரிச்சேன்.
அடுத்தவங்க கஷ்டத்துல இப்படி சிரிக்கலாமான்னு நினைச்சேன் சிரிக்கும் போது கடைசியில் கண்ணீர் வந்து விட்டது. அதனால நான் உங்களுக்கா வருத்தமும் பட்டுட்டேன்.
[நானெல்லாம் இன்னும் சதமே அடிக்காத ஆள்.]
பொன்ஸ் சொன்னது சேதுக்கரசி சொன்னது ரெண்டும் நல்ல ரோசனை..
//சேர்ந்தாற்போல, நாலு பேர் பின்னூட்டம் போட்டா, அந்த நாலையும் பப்ளிஷ் பண்ணாம, ஒரே பின்னூட்டமா நீங்களே வெட்டி ஒட்டிப் போடலாம்.. நம்பர் குறையும், முகப்பில் வரும் நேரம் அதிகரிக்கும்.. எப்படி ஐடியா? :)))//
இது அழுகாச்சி ஆட்டம்.
இனிமேல் பின்னூட்ட எண்ணிக்கையோட, இடுகையை இத்தனை முறைதான் மாற்றலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வரச் சொல்லி தமிழ்மண நிர்வாகத்திற்கு சிபாரிசு செய்கிறேன்.
சிச்சுவேஷன் சாங்க் ---
குயிலை பிடிச்சு கூண்டிலடைச்சு பாடச் சொல்லுகிற உலகம் இது...
மயிலை பிடிச்சு காலை உடச்சு ஆடச் சொல்லுகிற உலகம் இது...
எனக்குக் கவலையில்லை. பதினஞ்சு பின்னூட்டங்கள் வர்ரதே பெரிய விஷயம். இதுல முப்பதெல்லாம். ஆகையால இந்த முடிவு நம்மள ஒன்னும் செஞ்சுக்கிற முடியாது. ஒங்க நெலமைய நெனைக்கும் போதுதான் எனக்குப் பரிதாபமா இருக்கு! (இந்தப் பதிவுக்கே இன்னும் பத்துப் பின்னூட்டங்கள் போடலாம்னு தோணுது)
பின்னூட்ட உலகநாதா!
30பின்னூட்டத்துக்கு மேல் தமிழ்மண முகப்பில் இலவச டிஸ்ப்ளே கட்டிங்ன்னு சொல்லி கைல கிளாசோட கட்டிங் போட்டு
"30க்கு மேலே பின்னூட்டம் வந்தால் என்ன வராட்டித்தான் என்னன்னு" கானா பாட வுட்டுட்டாங்களே! :-))
எனக்கெல்லாம் கவலையே இல்லை. சிங்கிள் டிஜிட்ல வர்ற பின்னூட்டங்களை சிங்கம்மாதிரி எதிர்கொள்வதால் நோ அதிர்ச்சி..சோதனை...வேதனை.:-)
இப்படிச் சொந்த செலவில் பின்னூட்டிக் கொண்டாலும் சூனியமாகுமா? தேவுடா.. :-))
தனியாவர்த்தனமா பின்னூட்டக்கும்மி ஆட்டம் முடிந்து தற்போது பின்னூட்ட வரவேற்பு கூட்டணியாகச் செய்யவேண்டியது என்பது வேறென்ன
"காலத்தின் கட்டாயம்" :-))
ஒண்டே மேட்ச் மாதிரியான பதிவுகளையும், பலபதிவுகளில் பின்னூட்டங்கள் பதிவைவிடச் சுவையாகவும், கூடுதல் தகவல் தருவதாகவும் இருப்பதையும் கருத்தில் வைத்து குறைந்த பட்சம் 100 பின்னூட்டம் என்பதை கூடுதல் அளவாக வைத்தால் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
உள்ளேன் ஐயா.
நல்லா சோதனை செஞ்சீங்க போங்க.
வாழ்க வளமுடன்
எனக்கும் ரெண்டு நாளா இந்த ஐயம் வந்து என்னுடைய பதிவுகளில் (பின்னூட்டம் ஒற்றை இலக்கங்களில் வருகின்ற பதிவுகளிலும்) பின்னூட்டங்களுக்கு எல்லாம் மொத்தமாக ஒரே பின்னூட்டத்தில் பதில் சொல்லத் தொடங்கிவிட்டேன் பார்த்தீர்களா? அப்படி பழக்கப்படுத்திக்கிட்டா தான் எப்பவாவது நிறைய பின்னூட்டம் வர்றப்ப பழைய பழக்கத்தை விட்டுட்டு மொத்தமா ஒரே பின்னூட்டத்துல பதில் சொல்ல முடியும். இல்லையா?
சென்னப்பட்டினத்துக்காரங்க பதிவைப் பார்த்துட்டுத் தான் இந்தப் பதிவுக்கு வந்தேன். இனிமே நல்ல பதிவு 30க்கு மேல பின்னூட்டம் வாங்கிடுச்சுன்னா அப்படி இன்னொரு பதிவு போட்டு கூட்டத்தை முதல் பதிவுக்கு அனுப்பவும் சோதனை பண்றீங்களோ?
சூப்பர் தல
no more கயமைத்தனம்.
இனிமேல், பின்னூட்டங்கள் முப்பது வரிக்களுக்குல் வரும்படி பார்த்துக் கொள்ளவும்.
அப்புறம் கொஞ்ச நாள் கழித்து முப்பது வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக.
முப்பது நபர்கள் மட்டுமே பின்னூட்டமுடியும்.
உங்கள் பதிவுகளும் முப்பது வரிகள் மிகாமல் இருக்க வேண்டும்.
சும்மா தமாசுக்கு.
எப்புடி இருந்த கொத்ஸ இப்புடி ஆக்கிட்டாய்ங்களே...தலைவா..அதாவது 300 க்கு மேல்னு சொல்றதுக்கு பதிலா டங்கு ஸ்லிப் ஆகி 30 னு சொல்லிட்டாங்கனு நினைக்கறேன் :-)
ஆகா... அட்லீஸ்ட் ஒரு ஒரு வருசத்துலயாவது கொத்தனார முந்திட்டு போலாம்னு நெனச்சேனே.. இப்படி தடை பண்ணிட்டாங்களே...
கொத்ஸ்,
என்ன உங்க நிலைமை இப்படி ஆகிபோச்சி, பசிச்சாலும் புலி புல்லை தின்னாது நீங்க புலி நீங்க எல்லாம் நாலு அஞ்சு பின்னூட்டத்துக்கு ஒரு பதில் போடலாமா? குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம், கொத்தனாரை புடிச்சி (நீங்களே பாட்டை முடிச்சிகோங்கப்பா :)) )
என்னப்பா இது மதுரைக்கு வந்த சோதனை?500, 600ன்னு அடிச்சு ஆடிக்கிட்டிருந்த எங்க கொத்சுக்கு வெறும் 30தான் டார்கெட்டா?இதை கண்டித்து தீக்குளிக்கா விட்டாலும் அட்லீஸ்ட் டீ குடிக்கவாவது செய்ய வேண்டாமா:))))
ஹரிஹரன் சார்..இனிமேலும் Test message உண்டா, இல்லை கட்டா?:)))
(அப்பாடி! 23 தான் ஆகியிருக்குது.) என்ன மாதிரி ஆளுங்க அதாவது கைநாட்டுகள் எல்லாம் தப்பிச்சோம். நாங்க எல்லாம் இப்பத்தான ப்லாக் படிக்கவெ ஆரம்பிச்சுருக்கோம். இனி எப்ப பதிவு போட்டு எப்ப பின்னூட்டம் வாங்கி.
இதுவரை 25 மட்டும் காமிக்குதுன்னு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்.
உங்களைமாதிரி நிறையப்பின்னூட்டம் வர்றவுங்களுக்குத்தான் இந்தக் கவலை. நாமெல்லாம்
30க்கு ஓக்கேன்னு சொல்லறவுங்கதானப்பு. அதையும் 50ன்னு ஆக்க மனுக் கொடுத்துருக்காங்க
சிலர். அது நிறைவேறுனாலும் போதும்( இப்போதைக்கு)
இதுவரை 25 மட்டும் காமிக்குதுன்னு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்.
உங்களைமாதிரி நிறையப்பின்னூட்டம் வர்றவுங்களுக்குத்தான் இந்தக் கவலை. நாமெல்லாம்
30க்கு ஓக்கேன்னு சொல்லறவுங்கதானப்பு. அதையும் 50ன்னு ஆக்க மனுக் கொடுத்துருக்காங்க
சிலர். அது நிறைவேறுனாலும் போதும்( இப்போதைக்கு)
ஆஹா, பின்னூட்டங்கள் முப்பது தாண்டிருச்சே. இப்போ என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். முதல் பக்கத்தில் வரவில்லை என்றாலும் கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட பதிவுகளிலாவது வருதான்னு பார்க்கலாம்.
கொத்ஸ், முப்பதானால் என்ன, முந்நூறானால் என்ன, எங்கள் கொத்தனாருக்கு ஒரு சோதனை என்றவுடன் ஓடோடி வந்து பின்னூட்டமிட்ட எங்களுக்கு இப்படி பதில் சொல்லாமலே இருக்கும் உங்களின் மெத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்! சீக்கிரம் பதில் சொல்லிடுங்க, இல்லையின்னா, உங்களின் அடுத்த முப்பது பதிவுகளுக்கு, பதிவு போட்டு முடிச்சதும், தொடர்ந்து முப்பது பின்னூட்டங்கள் நானே போட்ருவேன்.. ஜாக்கிரதை!!!
//ஆமா ! இந்தப் பதிவிலும் 30 க்கும் மேல பின்னூட்டம் வந்தா திரட்ட மாட்டாங்களா? சொல்லுங்க கொதஸ் நானே உங்களுக்கு ஒரு 30 போட்டுறேன்!//
உங்கள் நண்பன் அப்படின்னு பேர் வெச்சுக்கிட்டு என்னா கரிசனமப்பா. நீர் ஒருத்தர் போதும் நம்ம பதிவு எல்லாம் காணாம போக! :)))
//தலைவா.. போற போக்கப் பார்த்தால், பதிவைவிட உங்க பின்னூட்டங்கள் நீளமா போயிடும் போலிருக்கே..//
அதான் முடிவு பண்ணியாச்சு, நம்ம ஸ்டைலிலேயே போடறதுன்னு. :)
//இப்போ, யாராவது உங்களுக்குப் பின்னூட்டம் போட்டாங்கன்னு வைங்க, அதுக்குப் பதிலை உங்க பதிவில் சொல்லிட்டு, அப்பாலிக்கா அந்தப் பின்னூட்டத்த ரிலீஸ் பண்ணுங்க.. அப்போ, நீங்க போட வேண்டிய ஒரு பின்னூட்டம் குறையும், அப்படியே உங்க பதிவு முகப்பிலும் வரும்.
சேர்ந்தாற்போல, நாலு பேர் பின்னூட்டம் போட்டா, அந்த நாலையும் பப்ளிஷ் பண்ணாம, ஒரே பின்னூட்டமா நீங்களே வெட்டி ஒட்டிப் போடலாம்.. நம்பர் குறையும், முகப்பில் வரும் நேரம் அதிகரிக்கும்.. எப்படி ஐடியா? :)))//
ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பாபா வேற ஐடியா குடுத்து இருக்கார். அவருக்குச் சொன்னா மாதிரி நம்ம கையில் சில பல ஐடியாக்கள் இருக்கு. இப்போதைக்கு அதெல்லாம் தொழில் ரகசியம். :))
சின்ன அம்மணி..
//என்ன மாதிரி ஆளுங்க அதாவது கைநாட்டுகள் எல்லாம் தப்பிச்சோம். நாங்க எல்லாம் இப்பத்தான ப்லாக் படிக்கவெ ஆரம்பிச்சுருக்கோம். இனி எப்ப பதிவு போட்டு எப்ப பின்னூட்டம் வாங்கி.//
ரிப்பீட்டே :-)
கொத்ஸு, இப்ப தான் 30-ஐ தாண்டிருச்சே.. இனி தனித்தனி மறுமொழியாவே போடலாம் :-D இனிமே சாண் போனா என்ன மொழம் போனா என்ன :-) பதிவு காணாமப் போனது காணாமப் போனது தேன்.
//(அதிக பின்னூட்டம் வாங்குவது எப்படின்னு எழுதின ஆளை இப்படி, பின்னூட்டத்தை முப்பதுக்குள் வைத்தும் பலபேரைப் பார்க்க வைப்பது எப்படின்னு யோசிக்க வச்சிட்டாங்களே!!:))))////
அப்படின்னு ஒரு நாள் நினைச்சேன். ஆனா நம்ம பதிவுக்கு வரவங்க வந்துக்கிட்டுதான் இருப்பாங்கன்னு முடிவு பண்ணி நார்மலா ஆகிட்டேன்.
//ஆமால்ல.. வாழ்க்கையே மாறப்போகுது போல :-) எல்லாருக்கும் இனிமே நல்ல PM தேவை (பின்னூட்ட மேனேஜ்மெண்ட்)//
PM எப்பவுமே இருந்துதுங்க சேது. இப்போ கொஞ்சம் யோசிச்சதுல நல்லா இருக்கற ஐடியாவை தொடர்ந்து செய்யறதா முடிவு பண்ணியாச்சு.
//என்னைக் கேட்டா 30 வெவ்வேற நபர்களின் மறுமொழியும் வந்தபிறகே நீங்க வாயைத் திறக்கலாம் :-))) அதான் பெஸ்ட் :-D//
நல்ல வேளை வாயைத் திறக்காம இருன்னு சொல்லாம விட்டீங்களே!
//அதோட இல்லாம, இனிமே எல்லாரும் பதிவு வந்தவுடனே "நான் தான் ஃபர்ஸ்ட்?" அல்லது "இப்ப உள்ளேன் ஐயா மட்டும்.. அப்றமா வரேன் தல" இப்படிப்பட்ட பின்னூட்டங்களை நீங்களே டிலீட்டிடுவீங்கன்னு நினைக்கிறேன் :-D//
அப்படி எல்லாம் தப்பா நினைக்கக் கூடாது. அடுத்த பதிவை பாருங்க. ஆல் அலவுட். :)
//நீங்கல்லாம் இந்தப் பின்னூட்டப் பிரச்சினையில அல்லாடறதை வேடிக்கை பார்க்க நல்லாத் தான் இருக்கப்போவுது கொஞ்ச நாளைக்கு.. ஏன்னா எனக்கு அந்தப் பிரச்சினை இல்ல பாருங்க ;-)//
என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு போயிக்கிட்டே இருப்பேன். வரவங்க வரத்தான் செய்வாங்க! நீங்க வரமாட்டீங்க? :))
//சோதனைப் பதிவா நல்ல நகைச்சுவை பதிவுங்க..படிச்சு கண்ணீர் வரும் வரை சிரிச்சேன். //
டாங்க்ஸுங்க முத்துலெட்சுமி. :))
//அடுத்தவங்க கஷ்டத்துல இப்படி சிரிக்கலாமான்னு நினைச்சேன் சிரிக்கும் போது கடைசியில் கண்ணீர் வந்து விட்டது. அதனால நான் உங்களுக்கா வருத்தமும் பட்டுட்டேன்.//
அதலாம் வருத்தமே படக்கூடாது. அது வெறும் ஆனந்தக்கண்ணீர். சிரிச்சுக்கிட்டே இருங்க.
//[நானெல்லாம் இன்னும் சதமே அடிக்காத ஆள்.]//
அடிப்போமா?
//பொன்ஸ் சொன்னது சேதுக்கரசி சொன்னது ரெண்டும் நல்ல ரோசனை..//
அதுவும், அதுக்கு மேலவும் இருக்குங்க. :)
//இனிமேல் பின்னூட்ட எண்ணிக்கையோட, இடுகையை இத்தனை முறைதான் மாற்றலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வரச் சொல்லி தமிழ்மண நிர்வாகத்திற்கு சிபாரிசு செய்கிறேன்.//
நீர்தானா இந்த மாதிரி ஐடியா எல்லாம் குடுக்கறது. உம்மை தனியா கவனிக்கணும் போல!
//குயிலை பிடிச்சு கூண்டிலடைச்சு பாடச் சொல்லுகிற உலகம் இது...
மயிலை பிடிச்சு காலை உடச்சு ஆடச் சொல்லுகிற உலகம் இது...//
காலம் மாறிப் போச்சு வோய். ::))
//எனக்குக் கவலையில்லை. பதினஞ்சு பின்னூட்டங்கள் வர்ரதே பெரிய விஷயம். இதுல முப்பதெல்லாம். ஆகையால இந்த முடிவு நம்மள ஒன்னும் செஞ்சுக்கிற முடியாது. ஒங்க நெலமைய நெனைக்கும் போதுதான் எனக்குப் பரிதாபமா இருக்கு! (இந்தப் பதிவுக்கே இன்னும் பத்துப் பின்னூட்டங்கள் போடலாம்னு தோணுது)//
வழக்கம் போல ஆட்டம் தொடரும். என்ன அங்க தெரியாது, அதனால் நீங்களே ஞாபகம் வெச்சுக்கிட்டு வரணும். அப்புறம் அப்போ அப்போ சில ரிமைண்டர்கள் எல்லாம் வரும். :))
//ஒண்டே மேட்ச் மாதிரியான பதிவுகளையும், பலபதிவுகளில் பின்னூட்டங்கள் பதிவைவிடச் சுவையாகவும், கூடுதல் தகவல் தருவதாகவும் இருப்பதையும் கருத்தில் வைத்து குறைந்த பட்சம் 100 பின்னூட்டம் என்பதை கூடுதல் அளவாக வைத்தால் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.//
இதை நல்லாச் சொல்லுங்க! தமிழ்மணத்தில் இல்லைன்னாலும் வழக்கம் போல அப்பப்போ வந்து அட்டெண்டன்ஸ் குடுத்துட்டு போங்க! ஓக்கேவா?
//Test Comment//
சரியா வருது குமரன்!! :))
நல்ல மனசய்யா உங்களுக்கு! :)
//உள்ளேன் ஐயா.//
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு குமரன், இனிமே கிளாஸை கட் அடிச்சுட்டு சினிமா போகலாம். :)
//நல்லா சோதனை செஞ்சீங்க போங்க.//
சோதனை சக்சஸ் அப்படின்னு அடுத்த பதிவு போட்டாச்சே. பாத்தீங்களா? :)
//வாழ்க வளமுடன//
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் அண்ணா!
//அப்படி பழக்கப்படுத்திக்கிட்டா தான் எப்பவாவது நிறைய பின்னூட்டம் வர்றப்ப பழைய பழக்கத்தை விட்டுட்டு மொத்தமா ஒரே பின்னூட்டத்துல பதில் சொல்ல முடியும். இல்லையா?//
அதனாலதான் பழக்கப்படுத்திக்கறதா இல்லை! :))
//சென்னப்பட்டினத்துக்காரங்க பதிவைப் பார்த்துட்டுத் தான் இந்தப் பதிவுக்கு வந்தேன். இனிமே நல்ல பதிவு 30க்கு மேல பின்னூட்டம் வாங்கிடுச்சுன்னா அப்படி இன்னொரு பதிவு போட்டு கூட்டத்தை முதல் பதிவுக்கு அனுப்பவும் சோதனை பண்றீங்களோ?//
அதுவும் ஒரு வழிதானே!
//சூப்பர் தல
no more கயமைத்தனம்.//
யாரு சொன்னா? இதுதான்யா சரியா 50ஆவது பின்னூட்டம்!!ஹாஹாஹா!!!
//இனிமேல், பின்னூட்டங்கள் முப்பது வரிக்களுக்குல் வரும்படி பார்த்துக் கொள்ளவும்.
அப்புறம் கொஞ்ச நாள் கழித்து முப்பது வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக.
முப்பது நபர்கள் மட்டுமே பின்னூட்டமுடியும்.
உங்கள் பதிவுகளும் முப்பது வரிகள் மிகாமல் இருக்க வேண்டும்.
சும்மா தமாசுக்கு.//
சும்மா தமாசுக்குக்கூட சொல்லாதீங்கப்பா, அதுவும் வந்தா என்ன பண்ணறது? அவ்வளவு சின்னதா பதிவு எழுதத் தெரியாதுப்பா! :)
//எப்புடி இருந்த கொத்ஸ இப்புடி ஆக்கிட்டாய்ங்களே...தலைவா..//
அப்படியேத்தான் இருக்கேம்பா!
//அதாவது 300 க்கு மேல்னு சொல்றதுக்கு பதிலா டங்கு ஸ்லிப் ஆகி 30 னு சொல்லிட்டாங்கனு நினைக்கறேன் :-)//
இது மேட்டர்! :))
//ஆகா... அட்லீஸ்ட் ஒரு ஒரு வருசத்துலயாவது கொத்தனார முந்திட்டு போலாம்னு நெனச்சேனே.. இப்படி தடை பண்ணிட்டாங்களே...//
Try try try until you succeed!எப்படி நம்ம ஆங்கிலப் புலமை! ( பக்கத்துவீட்டுப் பையன் வந்து தட்டிக் குடுத்துட்டு போனான். கெட்ட வார்த்தை எதுவும் இல்லையே, இந்த காலத்துப் பசங்களை நம்பவே முடியலைப்பா!)
//கொத்ஸ்,
என்ன உங்க நிலைமை இப்படி ஆகிபோச்சி, பசிச்சாலும் புலி புல்லை தின்னாது நீங்க புலி நீங்க எல்லாம் நாலு அஞ்சு பின்னூட்டத்துக்கு ஒரு பதில் போடலாமா? குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம், கொத்தனாரை புடிச்சி (நீங்களே பாட்டை முடிச்சிகோங்கப்பா :)) )//
சொல்லி வெச்சா மாதிரி அது என்னப்பா எல்லாம் இந்த பாட்டையே பாடறீங்க. கூண்டை விட்டு வெளியே வந்தாச்சு, சும்மா ஜிவ்வுன்னு சிங்கம் ஒன்று புறப்பட்டதேன்னு பாடுங்க!:)
//என்னப்பா இது மதுரைக்கு வந்த சோதனை?500, 600ன்னு அடிச்சு ஆடிக்கிட்டிருந்த எங்க கொத்சுக்கு வெறும் 30தான் டார்கெட்டா?இதை கண்டித்து தீக்குளிக்கா விட்டாலும் அட்லீஸ்ட் டீ குடிக்கவாவது செய்ய வேண்டாமா:))))//
டீ குடிச்சிட்டு வந்து வழக்கம் போல நின்னு ஆடுங்கா. ஐயாம் தி வெயிட்டிங். :)
//ஹரிஹரன் சார்..இனிமேலும் Test message உண்டா, இல்லை கட்டா?:)))//
அவரு அது போட்டே ஒற்றை இலக்கத்தில்தான் வருதுன்னு கவலையா சொல்லிட்டுப் போய் இருக்காரு, நீங்க வேற!
//(அப்பாடி! 23 தான் ஆகியிருக்குது.) என்ன மாதிரி ஆளுங்க அதாவது கைநாட்டுகள் எல்லாம் தப்பிச்சோம். நாங்க எல்லாம் இப்பத்தான ப்லாக் படிக்கவெ ஆரம்பிச்சுருக்கோம். இனி எப்ப பதிவு போட்டு எப்ப பின்னூட்டம் வாங்கி.//
அம்மிணி, ஒரு வருஷத்துக்கு முன்னாடி நாங்களும் உங்க நிலமைதான். சீக்கிரம் வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க. :)
//இதுவரை 25 மட்டும் காமிக்குதுன்னு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்.//
நீங்க வந்தா எனக்குப் பெருமைங்க. 25ஓ, 250ஓ, மறக்காம கட்டாயம் வாங்க! :)
//உங்களைமாதிரி நிறையப்பின்னூட்டம் வர்றவுங்களுக்குத்தான் இந்தக் கவலை. நாமெல்லாம்
30க்கு ஓக்கேன்னு சொல்லறவுங்கதானப்பு. அதையும் 50ன்னு ஆக்க மனுக் கொடுத்துருக்காங்க
சிலர். அது நிறைவேறுனாலும் போதும்( இப்போதைக்கு)//
பின்னூட்ட நாயகியே நியூசிவாசி,
துளசி, நீங்கதானே எங்க டீச்சரம்மா
(கற்பூர நாயகியே மெட்டுல படிச்சுக்குங்க!)
//இதுவரை 25 மட்டும் காமிக்குதுன்னு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்.//
அதுக்காக ஒரே பின்னூட்டத்தை எல்லாம் ரெண்டு வாட்டி போடறது உங்களுக்கே ஓவராத் தெரியல! :))
//கொத்ஸ், முப்பதானால் என்ன, முந்நூறானால் என்ன, எங்கள் கொத்தனாருக்கு ஒரு சோதனை என்றவுடன் ஓடோடி வந்து பின்னூட்டமிட்ட எங்களுக்கு இப்படி பதில் சொல்லாமலே இருக்கும் உங்களின் மெத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்! சீக்கிரம் பதில் சொல்லிடுங்க, இல்லையின்னா, உங்களின் அடுத்த முப்பது பதிவுகளுக்கு, பதிவு போட்டு முடிச்சதும், தொடர்ந்து முப்பது பின்னூட்டங்கள் நானே போட்ருவேன்.. ஜாக்கிரதை!!!//
பொன்ஸ், உண்மையிலேயே ரொம்ப ஆணி புடுங்கல் அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க. முப்பதுக்கு மேல் போயாச்சு, அப்புறம் ஜாண் போனாலென்ன முழம் போனால்லென்ன? இதை நான் சொன்னா கேட்கவா போறீங்க.
உங்க மிரட்டலால் பதில் சொன்னேன், உங்க சோதனையும் வெற்றி அப்படின்னு சொல்லுவீங்க. சொல்லிட்டுப் போங்க. நீங்க என்னைக் கலாய்க்காமல் யாரு கலாய்ப்பா!! :))
(அதுக்காக கொ.க.ச. எல்லாம் ஆரம்பிக்காதீங்கம்மா!) :))))
கொ.க.ச படிக்கயில் நல்லா இல்லை.. இ.க.ச வச்சிக்கிடலாம்.. ஓகேவா? :))))
//கொ.க.ச படிக்கயில் நல்லா இல்லை.. இ.க.ச வச்சிக்கிடலாம்.. ஓகேவா? :))))//
விடறதாயில்லை. வேணாமுன்னா கேட்கவா போறீங்க! If you cannot stop it, enjoy it!
(மீண்டும் பக்கத்துவீட்டு பாலகன்!)
http://veyililmazai.blogspot.com/2007/05/blog-post.html
இங்கே போய், கடைசி பின்னூட்டம் சிலது பாருங்க..
இதைக் கொண்டுபோய் எங்கே போடுறதுன்னு யோசிச்சு, உங்க சோதனைப் பதிவைத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் உங்க வலைப்பதிவுக்கு ஒரு நாலு ஹிட் அதிகப்படுத்தியிருக்கிறேன், எனவே counter-la நாலு எண்ணிக்கை குறைத்துக்கொள்ளவும் ;-)
//இங்கே போய், கடைசி பின்னூட்டம் சிலது பாருங்க..//
பார்த்தாச்சு. பதிலும் போட்டாச்சு!! :)
//இதைக் கொண்டுபோய் எங்கே போடுறதுன்னு யோசிச்சு, உங்க சோதனைப் பதிவைத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில்//
இருக்கட்டும். அதென்ன அந்த பின்னூட்டத்தை இந்தப் பதிவில்தான் போடணமுன்னு வேண்டுதலா ஆத்தா? (அட, அக்காவுக்கு ஆத்தா ப்ரமோஷன்!)
// உங்க வலைப்பதிவுக்கு ஒரு நாலு ஹிட் அதிகப்படுத்தியிருக்கிறேன், எனவே counter-la நாலு எண்ணிக்கை குறைத்துக்கொள்ளவும் ;-)//
அதெப்படி,நீங்க நாலு, பதிலுக்கு நான் நாலு. இந்த மாதிரி எல்லாம் செஞ்சுதானே இப்போ இருக்கிற நம்பர் இருக்கு. சும்மா சாய்ஸில் விடுங்க அரசிக்கா!! :))
அதொண்ணுமில்ல தாத்தா (ஆத்தான்னா சொன்னீங்க?) முகப்புப் பக்கம் முதல் பதிவுல பின்னூட்டம் 40க்கு கீழ இருந்துச்சா, சரி அதுல ரெண்டோ நாலோ சாப்பிடவேண்டாமேன்னு ஒரு நல்லெணம் தான்...
யக்கோவ்,
இதுக்கு முன்னாடி நான் தாத்தான்னு சொல்லிக்கிட்ட நாமக்கல்லாருக்கு நான் சொன்னது
//இனி உங்களைப் பார்த்து அதைத்தா, இதைத்தா, தா, தா, தாத்தா எனச் சொல்ல ஆள் வந்தாச்சா? சூப்பர்!!//
அதனால நாங்க தாத்தான்னு கூப்பிட்ட அஞ்ச மாட்டேன் ஆத்தா!! :))
மற்ற படி உங்க நல்ல உள்ளத்துக்கு என் நன்றிகள்.
Post a Comment