Friday, February 23, 2007

இண்டிபிளாக்கீஸைத் தொடர்ந்து ஒரு கின்னஸ் சாதனை!

இப்போதான் இண்டிபிளாக்கீஸ் தேர்தலில் நம்ம பினாத்தலார் வெற்றி பெற்ற சந்தோஷச் செய்தியை பகிர்ந்துகிட்டேன். அதுக்குள்ள அடுத்த செய்தி. இது கின்னஸ் சாதனை. பின்னூட்டத்தில் கின்னஸ் சாதனை செஞ்சதா நம்ம பேரு வந்திருக்கா? ச்சீ, ச்சீ அதெல்லாம் இல்லைங்க. இது வேற ஒரு இனிப்பான செய்தி.

அதாவது உலகத்திலே அதிக காரமுள்ள மிளகாயா நம்ம அசாம் மாநிலத்தில் விளையும் ஒரு ரக மிளகாயைத் தெரிவு செஞ்சிருக்காங்க. அதுதான் அதிக காரமுள்ள மிளகாய் என்ற சாதனை என்பதை கின்னஸ் நிறுவனத்தாரும் உறுதி செஞ்சுருக்காங்க. இப்போ சொல்லுங்க. இது இனிப்பான செய்திதானே. இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லறேன் கேட்டுக்குங்க.

இந்த மிளகாயின் பெயர் பூத் ஜோலோகியா (Bhut Jolokia), அதாவது பூத மிளகாய். இந்த மிளகாய் விஷ மிளகாய், நாகா மிளகாய், ராஜ மிளகாய் என்றெல்லாமும் அழைக்கப் பெறுகிறது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் பங்களாதேசத்தின் சில பகுதிகளில் பயிராகிறது. இந்த மாதம் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாநில பல்கலைக்கழகத்தின் மிளகாய் மன்றத்தின் (New Mexico State University Chili Pepper Institute) பேராசிரியர் போஸ்லேண்ட் என்பவர் நடத்திய ஆய்வுகளின் இறுதியில் இந்த முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

சரி. இந்த மிளகாயின் காரத்தை எப்படி அளக்கிறார்கள் என்று கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? காரத்தின் அளவு ஸ்கோவில் அளவுகோலால் (Scoville Scale) நிர்ணயிக்கப்படுகிறது. 1912ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி வில்பர் ஸ்கோவில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல் இது. மிளகாயின் சாற்றில் காரம் தெரியாத அளவு சர்க்கரைத் தண்ணீரைச் சேர்க்கிறார்கள். சேர்க்கப்படும் தண்ணீரின் அளவினைக் கொண்டு காரத்தின் அளவை நிர்ணயிக்கிறார்கள். தற்பொழுது இதனை விட துல்லியமான அளவுகளுக்காக High Performance Liquid Chromatography என்ற முறையையும் கையாள்கிறார்கள்.

நம்ம ஹீரோ (பெனத்தலார் இல்லைங்க நம்ம பூத் ஜோலோகி) ஸ்கோவில் முறைப்படி 1,001,304 கார அளவினைப் பெற்றுள்ளார். இதற்கு முன் எந்த மிளகாய்க்கும் இந்த அளவு ஒரு மில்லியனைத் (10 இலட்சம்) தாண்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னங்க இவ்வளவு அருமையான செய்தியைத் தேடி தருகிறானே என கண்ணீர் வருகிறதா!!

இன்னும் ஒரு மிளகாய் செய்தி. மனிதர்கள் சுமார் 6100 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிளகாய்ச் செடிகளை வளர்த்துள்ளனராம். அது பற்றிய செய்திக் குறிப்பு இதோ. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய காரம் சேர்க்கும் பழக்கம் போல இருக்கிறது. அது எந்த வகை மிளகாய்ன்னு பார்க்கணும்.

சாதனை குறித்த செய்தி

பூத் ஜோலோகியா குறித்த விக்கி குறிப்பு
ஸ்கோவில் அளவுகோலைக் குறித்த விக்கி குறிப்பு

82 comments:

said...

ஒரு வேளை இந்த பதிவை விக்கி பசங்க பதிவா போட்டு இருக்கணுமோ?

said...

மசாலா ஆகாத ஆள்கிட்டே இருந்து இப்படி ஒரு பதிவா? !!!!

said...

வாங்க டீச்சர். அதனாலதானே இனிப்பான செய்தி அப்படின்னு சொல்லி போட்டிருக்கேன்!! நமக்கு பட்டை, சோம்பு போன்ற ஐட்டங்கள்தான் ஆவாது. ஆனா காரம் நல்லா சாப்பிடுவேன். நம்ம சில்லி பியர் பதிவு மறந்துட்டீங்களா?

said...

நல்ல காராசாரமான பதிவு ......)))

said...

ரமத,

நான் என்னமோ இனிப்பான செய்தின்னு நினைச்சா, இப்படி காரசாரமா விமர்சனம் எழுதிட்டீங்களே!! :))

said...

ஒரே சாதனைச் செய்தியா சொல்றீங்க..அடுத்து என்ன சாதனை செய்திங்க?

said...

மணி, நம்மளை இப்படி காலை வாரறீங்க மாத்தீங்களா? சாதனைகளை சொல்லத்தானே செய்தேன், செய்தவன் நானில்லையே!

said...

//சாதனைகளை சொல்லத்தானே செய்தேன், செய்தவன் நானில்லையே!
//

சீக்கிரமே செய்ய வாழ்த்துக்கள் :)))

said...

/இலவசக்கொத்தனார் said...
ஒரு வேளை இந்த பதிவை விக்கி பசங்க பதிவா போட்டு இருக்கணுமோ? //

இதெல்லாம் ஓவரு கொத்ஸ்... நான் போடலாம்னு வந்த பின்னூட்டத்த நீங்களே போட்டுட்டீங்க... இது நியாயமே இல்லை...

said...

//சீக்கிரமே செய்ய வாழ்த்துக்கள் :)))//

நம்ம ஸ்பெஷாலிட்டியில் சாதனை செய்யணமுன்னா நீங்க எல்லாம் அடிக்கடி வரணும். வறீங்களா? ஒரு டார்கெட் செட் செய்யட்டுமா? :))))

said...

//இதெல்லாம் ஓவரு கொத்ஸ்... //

ஆறு பால் போட்டாத்தான் ஓவருன்னு நினைச்சேன், முதல் பின்னூட்டம் போடறதுக்குப் பேரும் ஓவரா? :))

//நான் போடலாம்னு வந்த பின்னூட்டத்த நீங்களே போட்டுட்டீங்க... இது நியாயமே இல்லை...//

நான் போட நினைத்ததெல்லாம் நீ போட வேண்டும் நாள்தோரும் பதிவெல்லாம் பின்னூட்டம் வேண்டும் பின்னூட்டம் வேண்டும் உம் ஹும் உம் ஹும்...

said...

//நம்ம ஸ்பெஷாலிட்டியில் சாதனை செய்யணமுன்னா நீங்க எல்லாம் அடிக்கடி வரணும். வறீங்களா? ஒரு டார்கெட் செட் செய்யட்டுமா? :))))//

வந்துட்டா போச்சு காசா பணமா. டார்கெட் என்ன சொல்லுங்க??

said...

//வந்துட்டா போச்சு காசா பணமா. டார்கெட் என்ன சொல்லுங்க??//

ஆதரவுக்கு நன்றி மணி. என்ன காசா பணமான்னு சொல்லிட்டீங்க? நீங்க வந்தா ஒரு 100 டாலர் தருவீங்கன்னு நினைச்சேன்!! :))

ஆனா இந்த மாதிரி தகவல்கள் இருக்கற பதிவில் விளையாடினா ஆத்திகச் சுடர் ஏத்துன ஒருத்தர் திட்டறாரே, அவரை எப்படிச் சமாளிக்கறது? :)

said...

//நீங்க வந்தா ஒரு 100 டாலர் தருவீங்கன்னு நினைச்சேன்!! :))
//

100 டாலர் தானங்க. அதுக்குதான் நம்ம பதிவுல கேள்வி கேட்டிருக்கேனே. வந்து பதில சொல்லி வாங்கிக்குங்க :)))

said...

நம்ம ஊர்ல இவ்ளோ காரமான மிளகாயா?

said...

//100 டாலர் தானங்க. அதுக்குதான் நம்ம பதிவுல கேள்வி கேட்டிருக்கேனே. வந்து பதில சொல்லி வாங்கிக்குங்க :)))//

கில்லாடி நீங்க. ஒரு இலவச விளம்பரம் போடறீங்களான்னு பார்த்தேன். கரெக்ட்டா பாயிண்டைப் பிடிச்சுட்டீங்களே!!:))

said...

யுஷுவலா தென்னமெரிக்கால தான் காரமான மிளகாய் விளையும்னு கேள்விப்பட்டிருக்கேன்!

மை பேவரிட் யாலபீனோ உட்பட

said...

நம்ம ஊர்ல விளையுதுன்னு சொல்லி நம்ம ஊருக்கு பெருமை சேக்கற விஷயத்த சொல்லி அசத்திட்டீங்க.

said...

இது எல்லாத்தையும்விட முக்கியமான கேள்வி!

இந்த மிளகாய் சாப்டாக்கா குடிக்க எந்த ஜல்லிகள் தண்ணீ தருவாங்க?

said...

ராம்ஸு, இதைவிடக் காரமா பதிவு எல்லாம் தமிழ்மணத்துல வருதே அப்புறமுமா நம்பிக்கை இல்லை? :))

said...

//ஒரு இலவச விளம்பரம் போடறீங்களான்னு பார்த்தேன்//

அதுக்கு தானங்க இலவசம்னு பதிவே வச்சிருக்கீங்க :))

said...

//யுஷுவலா தென்னமெரிக்கால தான் காரமான மிளகாய் விளையும்னு கேள்விப்பட்டிருக்கேன்!//

இதுக்கு முன்னாடி இருந்த காரமான மிளகாய் நியூ மெக்ஸிகோ பகுதியில் விளையும் வகைதான். அதைவிட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு காரம். இப்பொழுது இது மூன்றாமிடத்தில், நான் குடுத்த அளவுகோல் சுட்டியைப் பாருங்க. அதில் ஒரு பட்டியலே இருக்கு.

//மை பேவரிட் யாலபீனோ உட்பட//

இதை தென்னமெரிக்க உச்சரிப்பில் சொன்னால் ஹேலப்பீனோ. அதாவது J என்ற எழுத்து ஐரோப்பாவில் பரவலாக Y என உச்சரிக்கப்படுவது போல தென்னமெரிக்க நாடுகளில் H என உச்சரிக்கப்படுகிறது. அதனால் Jalapeno என்பது ஹேலப்பீனோ என உச்சரிக்கப்படுகிறது. இன்னும் சிலர் ஹேலப்பீன்யோ எனவும் சொல்வார்கள்.

said...

//நம்ம ஊர்ல விளையுதுன்னு சொல்லி நம்ம ஊருக்கு பெருமை சேக்கற விஷயத்த சொல்லி அசத்திட்டீங்க.//

அப்படி நினைச்சுத்தான் பிபிசி தலைமையில் நம்ம ஊரு பொண்ணு பத்தின செய்தியைப் போட்டேன். அதுக்கு அவங்க இந்தியாவுக்கு என்னய்யா செஞ்சாங்கன்னு கேள்வி வந்திச்சு. அந்த மாதிரி எதுவும் வம்பு தும்பு வராம இருந்தா சரி. :))

said...

//இது எல்லாத்தையும்விட முக்கியமான கேள்வி!

இந்த மிளகாய் சாப்டாக்கா குடிக்க எந்த ஜல்லிகள் தண்ணீ தருவாங்க?//

ஆஹா, எங்க போறீருன்னு தெரியாம நானும் கூட வந்துட்டேனே. இப்போ எல்லாம் ஸ்டேட் லெவல் போயி, செண்ட்ரல் லெவல் போயி எல்லாம் உலகம் பிரபஞ்சம் ரேஞ்சுல பேசறாங்கப்பா. அது எல்லாம் நமக்கு ரொம்ப டூமச். ஐயாம் தி ஜூட்!!!

said...

//அதுக்கு தானங்க இலவசம்னு பதிவே வச்சிருக்கீங்க :))//

அதே அதே!! ஹிஹி!!

said...

//தென்னமெரிக்க உச்சரிப்பில் சொன்னால் ஹேலப்பீனோ. அதாவது J என்ற எழுத்து ஐரோப்பாவில் பரவலாக Y என உச்சரிக்கப்படுவது போல தென்னமெரிக்க நாடுகளில் H என உச்சரிக்கப்படுகிறது. அதனால் Jalapeno என்பது ஹேலப்பீனோ என உச்சரிக்கப்படுகிறது. இன்னும் சிலர் ஹேலப்பீன்யோ//
தமிள்ப்பதிவுலகில் தனிஇசுபானிசு ஆராய்ச்சியா? வெட்கம்!!!

நான் தமிளன். நான் இசுட்டப்பட்டா மாதிரிதான் உச்சரிப்பேன். நீ என்ன இசுபானியனா என்னைத் தவறு சொல்ல?

said...

//அப்படி நினைச்சுத்தான் பிபிசி தலைமையில் நம்ம ஊரு பொண்ணு பத்தின செய்தியைப் போட்டேன்.//
ரொம்ப முக்கியம்.

அதானே! அவங்க என்ன செஞ்சாங்க? (எனக்குப் பிடிக்கிறமாதிரி) நாட்டுக்கு என்ன செஞ்சாங்க?

பேசன் டிவியில வர்ற பொண்ணு பத்தின்னா நானும் பின்னூட்டம் போட்டிருப்பேன்! அதானே! அவங்க என்ன செஞ்சாங்க?

said...

//நான் தமிளன். நான் இசுட்டப்பட்டா மாதிரிதான் உச்சரிப்பேன். நீ என்ன இசுபானியனா என்னைத் தவறு சொல்ல?//

ராம்ஸு, அடங்க மாட்டீங்க போல இருக்கே. நானெல்லாம் ஸ்பானிஷ்ன்னு எழுதற பரம்பரை! இதுக்கு குமரன் வந்து பதில் சொல்லும் வரை காத்திருப்போம். என்ன சொல்லறீங்க!! :))

said...

//பேசன் டிவியில வர்ற பொண்ணு பத்தின்னா நானும் பின்னூட்டம் போட்டிருப்பேன்!//

ரொம்ப வம்பு பண்ணாதீரும் அப்புறம் கலாச்சார போலீஸ் கிட்ட புடிச்சிக் குடுத்துடுவேன். ஜாக்கிரதை.

said...

பினாத்தல் சுரேஷ் பாப்பான் இல்லையே?

பிறகு எப்படி ஜெயித்தார்?

said...

அனானி, இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாமல் வந்து உளறியதற்கு நன்றி.

அவரு வேணா பாப்பான் இல்லாம இருக்கலாம். ஆனா அவர் எழுதறதை நிறையா பேரு பாப்பானுங்களே. அவனுங்க எல்லாம் வோட்டு போட்டுத்தான் ஜெயிக்க வெச்சு இருக்காங்க. :))

said...

நண்பர் ரவி சொல்வது

காரமோ பெருசு. செய்தியோ இனிப்பு!!

said...

நன்றி ரவி அவர்களே.

said...

நன்பர் ஸ்ரீதர் சொல்றது என்னன்னா....

said...

ஆணியெல்லாம் நிறைய புடுங்கிட்டதுனால, நம்ம கானா கொத்தனார் இப்போ மிளகாய் புடுங்க வந்திருக்கார் போல...

said...

//ஒரு வேளை இந்த பதிவை விக்கி பசங்க பதிவா போட்டு இருக்கணுமோ?
//

விக்கி பசங்க பதிவா போடலாம்... ஆனா அங்க பின்னூட்ட விளையாட்ட அனுமதிக்க முடியாதே... அதுனாலா இங்க போட்டிங்க போல.

அது சரி விக்கி பசங்களுக்கு ஏற்கெனவே பின் பதிவுகள் (backlog) நிறைய இருக்கு போல...

said...

வாருமய்யா வெங்கட்டு

//நம்ம கானா கொத்தனார் இப்போ மிளகாய் புடுங்க வந்திருக்கார் போல...//

ஆணிபுடுங்கறது எல்லாம் இந்தக் காலம். ஆனா மிளகாய் புடுங்கறது எவ்வள்வு வருஷமா நடக்குது தெரியுமா? பதிவின் கடைசியில் சேர்த்து இருக்கும் தகவலைப் பாருங்கள்!

said...

சரி... இந்த மிளகாய் சாதனைக்கும், இண்டிபிளாக்கீஸுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை அதுவும் செம காரமோ.... (யாருப்பா அது பொடி மட்டைய இங்க பிரிக்கறது. அதுக்கு வேற பதிவு இருக்குப்பா...)

said...

ஆமாங்க. தேர்தல் வேலை அது இதுன்னு கொஞ்சம் பிஸியா இருந்துட்டோம்,. (நல்லவேளை எதோ சாக்கு கிடைச்சுது!)

இனிமே அங்க பெனாத்தலார், ராமநாதன் எல்லாரும் புல் ப்ளோவில் வருவாங்க! (தப்பா அர்த்தம் பண்ணிக்காதீங்க)

இப்போ இங்க என்ன பின்னூட்ட விளையாட்ட விளையாடறோம்? மணிகண்டனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்க.

said...

//மிளகாயின் சாற்றில் காரம் தெரியாத அளவு சர்க்கரைத் தண்ணீரைச் சேர்க்கிறார்கள். சேர்க்கப்படும் தண்ணீரின் அளவினைக் கொண்டு காரத்தின் அளவை நிர்ணயிக்கிறார்கள்.//

இது கிட்டத்தட்ட ஆர்க்கிமெடீஸ் தத்துவம் மாதிரி இருக்கே!

For every action, there is an equal and oppsite reaction.

எவ்வளவு காரம் இருக்கோ, அத்தனை இனிப்பு தேவைப்படுது... அதைச் சரி செய்ய!

இது நம்ம தமிழ்மணத்திலும் ஒர்க்-அவுட் நல்லா ஆகுதில்ல!

said...

அடுத்தது அரசியல் பேச உம்ம டர்னா? நடத்துங்க. சரி, சுடர்தனமா ஒரு கேள்வி கேட்கறேன்.

உங்கள் பார்வையில் காரமான பதிவுகள் /பதிவர்கள் என்ன /யார்? அதே போல் இனிப்பான பதிவுகள் / பதிவர்?

இனிப்புன்னா நீங்கதான் என்ற ஐஸ் எல்லாம் வேண்டாம். (முதலில் இப்படிச் சொல்லிட்டா நல்லது பாருங்க!)

said...

ஆஹா! சொ. செ. சூ. வா!

இவரு, அவருன்னு பிரிச்செல்லாம் சொல்ல முடியாத்ஹுங்க!

எந்த கருத்துல ஒரு பதிவு வந்தாலும், ஒடனே அதுக்கு ஈடு கட்டற மாரி ஒரு எதிர்ப் பதிவு அச்சேறிரும் நம்ம தமிழ்மணத்துல இல்லியா!

அதைத்தான் சொன்னேன்!

இது பொதுவா, பரவலா நடக்கற விஷயம் ... அதைத்தான் சொல்லியிருக்கேன்!

சும்மாவே இலவசமா வூடு கட்டுவீங்க!

செங்கல்லும் சேந்து வந்தா, கொத்தனாருக்கு கட்றதுக்கு சொல்லியா தரணும்!

said...

என்ன எஸ்.கே. உங்க கிட்ட இருந்து என்னென்னவோ எதிர்பார்த்தேன். இப்படி கழுவற மீனில் நழுவற மீனா தப்பிச்சுட்டீங்களே! :))

said...

கழுவுற மீனும் இல்லை; நழுவுற மீனும் இல்லை!

வாழத்துடிக்கும் மீனு!

said...

மீனுக்கு ஆட்டோ எதனாச்சும் வந்துதா? இப்படி ரிவர்ஸ் கியர் போடுது! எதுக்கும் நாட்டுல கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கிறது நல்லதுன்னு படுது!

said...

ஆட்டோல்லாம் வராத ஊருல இருக்கேன் கொத்ஸ்!

2001க்கு அப்புறம் ப்ளேன் கூட வர்ர பயப்படற ஊர் இது!

நல்லதைச் சொல்லிடுவோம்!
அல்லதைத் தள்ளிடுவோம்!

said...

சரிங்கய்யா!

இனிய உளவா இன்னாது கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இது எப்பங்க எல்லாருக்கும் புரியப் போகுது? அதுக்கு உங்க மன்னாரை வந்து நல்ல மண்டையில் ஏறர மாதிரி சொல்லச் சொல்லுங்க.

said...

எஸ் கே ஐயா அவர்களுக்கு,

//இது கிட்டத்தட்ட ஆர்க்கிமெடீஸ் தத்துவம் மாதிரி இருக்கே!

For every action, there is an equal and oppsite reaction.
//

தனித் தனியா சொல்லியிருக்கீங்க போல... ஆனால் சேர்த்து படிக்கும்போது தப்பா தெரியுதே.

nitpicking எல்லாம் இல்லைங்க. கண் முழிச்சு காபி குடிச்சிட்டு (சன்ரைஸ்) யாராவது வழியோடு போனாங்கன்னா இழுத்து வச்சு வம்பு பேசற கொத்தனாருக்காக ஒரு இலவச பின்னூட்டம்.

said...

என்ன தப்புன்னு விவரமாச் சொன்னாத்தானே. என்னை மாதிரி அக்கவுண்டன்ஸி படிச்சவங்க கிட்ட இந்த மாதிரி மொட்டையா சொன்னா அவரு சொன்னதுதான் புரியுமா இல்லை நீங்க சொல்ல வரதுதான் தெரியுமா?

(அப்பாடா உங்க பதில், அவர் பதில் அப்படின்னு ஒரு நாலஞ்சாவது தேறாது!)

said...

//சேர்க்கப்படும் தண்ணீரின் அளவினைக் கொண்டு காரத்தின் அளவை நிர்ணயிக்கிறார்கள்//

இதை ஆர்கிடிமிஸின் தத்துவத்துக்கு ஒப்ப இருப்பதாக சொல்கிறார். ஆர்கிமிடிஸ் தேற்றம் இதுதான் (இயன்ற வரையில் தமிழ் 'படு'த்தியிருக்கிறேன். தவறு இருந்தால் பொறுத்தருளவும்)

ஒரு பொருளானது தண்ணீரில் முழ்கும் பொழுது அதன் எடைக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றுகிறது.

குளியல் தொட்டியில் இருந்த ஆர்க்கிமிடிஸ் இதை கண்டுபிடித்தவுடன் 'யுரேகா' என்று கத்திக் கொண்டே அப்படியே தெருவில் ஓடியதாக ஒரு கதை உண்டு.


//For every action, there is an equal and oppsite reaction.
//
இது ந்யூட்டனின் மூன்றாவது விதி (Third law of motion).

இன்னுமா தூங்க போகல? இந்த பகுதியை ஸ்பான்சர் செய்யறது யாரு?

said...

//. நானெல்லாம் ஸ்பானிஷ்ன்னு எழுதற பரம்பரை! இதுக்கு குமரன் வந்து பதில் சொல்லும் வரை காத்திருப்போம். என்ன சொல்லறீங்க!!//

இசுபானீய பித்தளை எழுதும் மானங்கெட்ட தமிழா? மானங்கெட்டது தமிழா? நீயா? ஓடு ஓடு உன் இசுபானிய நாட்டுக்கே ஓடு! இல்லேன்னா ஓட்டுவோம்!

said...

//இன்னுமா தூங்க போகல? //

நான் போகலை. ஆனா எஸ்.கே. தூங்கிட்டார் போல. அவருக்கு வெயிட் பண்ணலாம்.

//இந்த பகுதியை ஸ்பான்சர் செய்யறது யாரு?//
இப்போதைக்கு நீங்கதான்!! :)

said...

//இசுபானீய பித்தளை எழுதும் மானங்கெட்ட தமிழா? மானங்கெட்டது தமிழா? நீயா? ஓடு ஓடு உன் இசுபானிய நாட்டுக்கே ஓடு! இல்லேன்னா ஓட்டுவோம்!//

நீர் வேஸ்டய்யா, இந்த மாதிரி எழுத உமக்குத் தெரியவே இல்லையே? முக்கியமான கீவேர்ட்டே மிஸ் ஆவுது. நீரெல்லாம் எப்போ எழுதக் கத்துக்கிட்டு எப்போ என்னை வந்து திட்டறது? :)))

said...

//நீர் வேஸ்டய்யா, இந்த மாதிரி எழுத உமக்குத் தெரியவே இல்லையே?//
எங்கேயாவது பஸ்லயோ ட்ரெயின்லயோ வந்திறங்கியிருந்தாத் தானே கீவர்டெல்லாம் தெரியும்!

said...

//எங்கேயாவது பஸ்லயோ ட்ரெயின்லயோ வந்திறங்கியிருந்தாத் தானே கீவர்டெல்லாம் தெரியும்!//

ஓக்கே நீர் பாஸ்!! Boss, Pass என்ன வேணா வெச்சுக்குங்க. ரெண்டுமே சரிதான்!!

said...

ஆர்க்கிமெடீஸ் தத்துவத்தை கொஞ்சம் உல்டா பண்ணி ந்யுட்டன் ஒரு தத்துவத்தைச் சொன்னதைக் குறிக்கும் வகையாக, தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி நான் இட்ட பின்னூட்டத்தை சரியாக கவனித்து மறுமொழியட்ட ஸ்ரீதர் வெங்கட்டே! இதோ ஆயிரம் பொன் உங்களுக்கே!

விக்கி பசங்க ஆயிரம் பேர் சேர்ந்து தீர்க்காத சந்தேகத்தை தனி ஒருவனாய்த் தவிர்த்த நும் புலமையைப் போற்றுகிறோம்!

ஆனால், ஆயிரம் பொன்னின் மீது நும் கை படும் முன், கீ வேர்ட் எனச் சொல்லி விட்டு படட்டும்!

said...

அடுத்த பதிவு: உலகத்திலேயே ரொம்ப இனிக்கிற கரும்பு !

கொத்ஸுக்குப் போய் என்ன மாதிரி ஆளெல்லாம் எடுத்துக் கொடுக்கணுமா என்ன?

said...

//

SK said...

இது கிட்டத்தட்ட ஆர்க்கிமெடீஸ் தத்துவம் மாதிரி இருக்கே!

For every action, there is an equal and ***oppsite*** reaction.
//

ஒரு "ஓ" போடுங்க அய்யா
:-)))

said...

இங்கேயும் கீ வேர்டா... மேலே உங்க சக மருத்துவர் ஏதோ சொல்லியிருக்கிற மாதிரி தெரியுது. நமக்கு இந்த மேட்டர் எல்லாம் சட்னு புரியாது (அப்படியே வச்சிக்குவோம்)

//ஆர்க்கிமெடீஸ் தத்துவத்தை கொஞ்சம் உல்டா பண்ணி ந்யுட்டன் ஒரு தத்துவத்தைச் சொன்னதைக் குறிக்கும் வகையாக,//

ந்யூட்டனும் 'யுரேகா'னு ஓடினாரா என்ன? :-)))

said...

57 ஆவது நானா?
மிளகாயைப் பத்தி எழுத கண்ணில நீர் வர வச்சுட்டீங்க.

பின்னூட்டங்கள் ப்ரமாதம்.
காரமான பதிவுக்குச் சாரமான\பதில்கள். சிரிக்க சிந்திக்க வைத்ததுக்கும் நன்றிங்க.:-)

said...

மீனு மீனுன்னு சொன்னா யாசனையா இருக்கு. எங்க மீனாட்சியைப் பத்திக் காமெடி இல்லையே?:-)

said...

"காப்பி கசக்குதடி மிளகாய் காரம் இனிக்குதடி
பூப்போன்ற இட்டிலியும் பூரியும் புளித்துப் போனதடி
சாப்பிட வேண்டுமென்றால் வயிறோ சண்டை பிடிக்குதடி...............
...................................."

இது ஒரு பழைய திரைப்படப் பாடலில் இடையில் வரும் வரிகள்.

எந்த படம் என்ற புதிரை விடுவிக்க யாராவது முயல்வார்களா?

said...

ரசித்த பாட்டு.
சபாபதி,என் மனைவி னுபடங்கள் கே டி வியில் பார்த்தபோது கேட்ட பாடலோ?ஒரு வேளை கமல் படப் பாடலோ?

said...

கொத்தனார் அவர்களே! இத்தனை காரம் உள்ள மிளகாய் உண்பதனால் அடுத்த நாள் உண்டாகும் விளைவுகளைப்பற்றியும் ஒரு பதிவு போடும்படி வேண்டிக்கோள்கிறேன். ஹிஹி

said...

கொத்தனார் அவர்களே! இத்தனை காரம் உள்ள மிளகாய் உண்பதனால் அடுத்த நாள் உண்டாகும் விளைவுகளைப்பற்றியும் ஒரு பதிவு போடும்படி வேண்டிக்கோள்கிறேன். ஹிஹி

said...

கொத்தனார் அவர்களே! இத்தனை காரம் உள்ள மிளகாய் உண்பதனால் அடுத்த நாள் உண்டாகும் விளைவுகளைப்பற்றியும் ஒரு பதிவு போடும்படி வேண்டிக்கோள்கிறேன். ஹிஹி
அதுவே உங்க சொந்த அனுபவமா இருந்தா இன்னும் நல்ல இருக்கும்.
ஹிஹிஹிஹி

said...

//விக்கி பசங்க ஆயிரம் பேர் சேர்ந்து தீர்க்காத சந்தேகத்தை தனி ஒருவனாய்த் தவிர்த்த நும் புலமையைப் போற்றுகிறோம்!//

எஸ்.கே. விக்கி பசங்களைக் கேட்காமலேயே இப்படி ஒரு வசனம் பேசியதற்கு உம்மை கண்டிக்கிறோம்.

விக்கி பசங்க சார்பாக
கொத்ஸ்

said...

//அடுத்த பதிவு: உலகத்திலேயே ரொம்ப இனிக்கிற கரும்பு !

கொத்ஸுக்குப் போய் என்ன மாதிரி ஆளெல்லாம் எடுத்துக் கொடுக்கணுமா என்ன?//

தருமி, இப்படி நம்ம தொழில் ரகசியத்தை எல்லாம் எடுத்து விட்டா எப்படி? என்ன இருந்தாலும் மூஞ்சி சுளிக்காம எழுதறது அவ்வளவு ஈசியா இல்லையே!!

said...

//ஒரு "ஓ" போடுங்க அய்யா
:-)))//

O !!!

போட்டாச்சு. எதுக்குங்க?

said...

//இங்கேயும் கீ வேர்டா... மேலே உங்க சக மருத்துவர் ஏதோ சொல்லியிருக்கிற மாதிரி தெரியுது. நமக்கு இந்த மேட்டர் எல்லாம் சட்னு புரியாது (அப்படியே வச்சிக்குவோம்)//

எனக்கும் இதெல்லாம் புரியறது இல்லைங்க. ஆனா யாரவது ரொம்ப தெரிஞ்சா மாதிரி ஆமா ஆமான்னு சொல்ல வேண்டியதுதான்.

said...

//பின்னூட்டங்கள் ப்ரமாதம்.
காரமான பதிவுக்குச் சாரமான\பதில்கள். சிரிக்க சிந்திக்க வைத்ததுக்கும் நன்றிங்க.:-)//

வல்லியம்மா, வந்து இந்த மாதிரி ஊக்குவிக்கறதுக்கு ரொம்ப நன்றி. நம்ம பதிவை எல்லாம் படிச்சு சிந்திச்சீங்களா? அப்படி என்னங்க சிந்திச்சீங்க? என்னைப் பத்தி தப்பான்னா மட்டும் சொல்லாதீங்க!

said...

//மீனு மீனுன்னு சொன்னா யாசனையா இருக்கு. எங்க மீனாட்சியைப் பத்திக் காமெடி இல்லையே?:-)//

இல்லைங்க. தீஸ் பீப்பிள் மீன் சம்திங் டோட்டலி டிப்பரண்ட் பரம் வாட் வீ திங்க் தே மீன். யூ நோ வாட் ஐ மீன்.

said...

//காப்பி கசக்குதடி மிளகாய் காரம் இனிக்குதடி//

நாங்க எல்லாம் 'உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா' காலத்தவங்கன்னு சொல்லிக்க ஆசைதான். அப்படி இல்லையினாலும் 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி' அப்படின்னு ரசிச்சவங்க. உங்க கேள்வி எல்லாம் எப்படி தெரிய போகுது? யாராவது வந்து பதில் சொல்லுவாங்க.

said...

//ரசித்த பாட்டு.
சபாபதி,என் மனைவி னுபடங்கள் கே டி வியில் பார்த்தபோது கேட்ட பாடலோ?ஒரு வேளை கமல் படப் பாடலோ?//

இதோ சொல்லிட்டாங்களே. சரியா ஓகை சார்?

said...

//கொத்தனார் அவர்களே! இத்தனை காரம் உள்ள மிளகாய் உண்பதனால் அடுத்த நாள் உண்டாகும் விளைவுகளைப்பற்றியும் ஒரு பதிவு போடும்படி வேண்டிக்கோள்கிறேன். //

அது பத்திதான் தமிழ்மணத்தில் அடிக்கடி வருதே. நான் என்னாத்தை தனியா சொல்லறது. அதை எல்லாம் 'அள்ளி அள்ளி' படியுங்க. :))

said...

இந்த பதிவு தமிழ்மணத்தில் வர மாட்டேங்குதே... :((

said...

பதிவுல காரம் ரொம்ப ஜாஸ்தியாயிருக்குன்னு தமிழ்மணத்துல தடை பண்ணியிருப்பாங்க :)

அடுத்ததா தமிழ்/ஆந்திரா சினிமா வில்லன்கள் "ஜோலோக்கியா சாப்பிட்டு வளர்ந்த எங்கிட்டயே மோதப்பாக்கியா"ன்னு வசனம் பேசுவாங்களோ?

said...

இந்த மிளகாயைக் கூட நீங்க முன்ன சொன்ன மாதிரி பீர் மிளகாய் ஆக்கினா ஸ்கோவில் எல்லாம் அடிபட்டுப் போயிடும்னு நினைக்கிறேன்.
:)

இப்பதிவினைத் தொடர்ந்து தமிழ் கூறு நல்லுலகம் உங்களை 'மிளகாய் வேந்தன்' என்று அழைக்கட்டும்.

said...

//பதிவுல காரம் ரொம்ப ஜாஸ்தியாயிருக்குன்னு தமிழ்மணத்துல தடை பண்ணியிருப்பாங்க :)//

யோவ் டுபுக்கு, நம்ம பதிவு பக்கமெல்லாம் கூட வரீயா? ஆச்சரியமா இருக்கு!! யப்பா அடுத்தது தருமி சொன்னா மாதிரி உலகத்திலேயே தித்திப்பான கரும்பு அப்படின்னு வேணா பதிவு போடறேம்பா, இந்த தடை எல்லாம் வேணாம்பா.

//அடுத்ததா தமிழ்/ஆந்திரா சினிமா வில்லன்கள் "ஜோலோக்கியா சாப்பிட்டு வளர்ந்த எங்கிட்டயே மோதப்பாக்கியா"ன்னு வசனம் பேசுவாங்களோ?//

இதெல்லாம் நம்ம கொல்ட்டி புகழ் வெட்டி கிட்டதான் கேட்கணும்.

said...

//இந்த மிளகாயைக் கூட நீங்க முன்ன சொன்ன மாதிரி பீர் மிளகாய் ஆக்கினா ஸ்கோவில் எல்லாம் அடிபட்டுப் போயிடும்னு நினைக்கிறேன்.
:)//

அட, நீங்க கூட இங்கதான் இருக்கீங்களா? நம்ம மிளகாய் நெடி ஒளிஞ்சுக்கிட்டு இருந்த நிறையா பேரை வெளிய வர வெச்சிருச்சு போல!!

இந்த மிளகாயை அந்த பியரில் போட்டா, நல்லாத்தா இருக்கு நினைச்சுப் பார்க்க!!

//இப்பதிவினைத் தொடர்ந்து தமிழ் கூறு நல்லுலகம் உங்களை 'மிளகாய் வேந்தன்' என்று அழைக்கட்டும்.//

நல்ல வேளை சுண்டைக்காய் பத்தி எழுதலை இல்லைன்னா நம்மளை சுண்டைக்காய் அரசன் அப்படின்னு சொல்லிடுவீங்க போல!! :)))

தேவு, எதுக்கும் இதை நம்ம பட்டப் பெயர்கள் லிஸ்ட்ல போட்டு வெச்சுக்கப்பா. :)

said...

நம்மளை Snapjudgeல சேர்த்ததுக்கு நன்றி பாபா.

said...

நன்றி