Thursday, February 22, 2007

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ....

என்னவென்று சொல்வதம்மா இன்று வந்த செய்திதனை..

செய்தியைக் கேட்ட உடனே எம்புட்டு சந்தோஷமா இருக்கு. கையும் ஓடலை காலும் ஓடலை அப்படின்னு சொல்ல வந்த கை எப்படிடா ஓடுமுன்னு ஒரு டெவில் ஷோ நடத்துவீங்களோன்னு பயமா இருக்கு. அதனால அதைச் சொல்லலை.

ஆனா செய்தியைக் கேட்ட உடனே சும்மா இருக்க முடியுதா? அதான் இல்லை. வீட்டு சோபாவில் துள்ளிக் குதிச்சதைப் பார்த்து தங்கமணி டென்சனானதுதான் மிச்சம். அதுவும் வாயெல்லாம் பல்லா இருக்கா, விஷயத்தைச் சொல்லாம ஆடுறானேன்னு ஒரே கடுப்பு. என்னது?, உங்களுக்கும் அதே கடுப்புதானா? விஷயத்தைச் சொல்லணுமா? சரி சொல்லறேன்.

இண்டிபிளாக்கீஸ் தேர்தல் முடிவு வந்திருச்சுங்க!

நம்ம ஆளு, விக்கி சகோதரர், நகைச்சுவை மன்னர், நக்கல் நாயகன் பினாத்தலார் 2006ன் சிறப்பான பதிவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வெற்றி பெற்ற நம்மவர் அண்ணன் பினாத்தலார் அவர்களுக்கு அனைவரும் ஒரு பெரிய ஓ! போடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


(ஏன் மஞ்ச கலரா? அதான்ய்யா ஆளுங்கட்சி கலரு, அதான். இதே வேற சமயமா இருந்த பச்சையா போட்டு இருக்க மாட்டோம்.)

அதுவும் வெற்றின்னா வெற்றி, சாதாரண வெற்றி இல்லைங்க. மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு காரணமாய் இருந்த நம் சக வலைப்பதிவர்கள் அனைவரும் என் நன்றிகள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அளவு பின்னூட்டங்கள் விரைவில் வந்து சேர ஏற்பாடு செய்யப்படும். பினாத்தலார் பதவி ஏற்றுக்கொண்ட உடன் இடும் முதல் கையெழுத்து பின்னூட்ட போலீஸ்துறையை கலைப்பதாகத்தான் இருக்கும். ஆகவே இனி பின்னூட்டங்களுக்குப் பஞ்சமே இருக்காது!

இந்நேரத்தில் வெறும் ரீமேக் செய்ததற்கே இப்படி எல்லாம் பட்டம் கிடைக்கையில் நீர் சொந்தமாக எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பாசிச பேச்சுகள் எதையும் பேசி அண்ணன் அவர்கள் மூடை அவுட் ஆக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகார பூர்வ அறிவிப்பில் கள்ள ஓட்டுக்களை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது கண்டுபிடிக்க முடியாத வகையில் கள்ள ஓட்டுக்களைப் போட்டு கழக பலத்தை காட்டிய கண்மணிகளுக்கு என் நன்றி. நல்ல வோட்டு மட்டுமே போட்ட பொதுஜனங்களுக்கும் எனது நன்றி. (கூட ரெண்டு வோட்டு போட்டு இருந்தா குறைஞ்சா போவீங்க?). பினாத்தலாரின் பெருவெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் என் நன்றியைக் கூறி அண்ணன் அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களைக் கூறி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!இண்டிபிளாக்கின் அதிகார பூர்வ முடிவறிவிப்பு

அண்ணன் வாங்கிய வாக்கு விபரங்கள்

61 comments:

said...

அண்ணன் பினாத்தலார் வாழ்க! இண்டிபிளாக்கீஸ் வென்ற இணையில்லா இமயம் வாழ்க வாழ்க!!

said...

:))

எப்பிடிய்யா சைக்கிள் கேப்ல பதிவு எழுதறீங்க...

said...

இண்டிபிளாக்கீஸ் வென்ற இணையில்லா இமயம் பினாத்தலாருக்கும், கில்லிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியை விட தமிழில் தான் அதிக பதிவுகள் போட்டிக்கு தேர்வாயின. கலக்குங்க தமிழ் பதிவர்களே.

said...

தலைவா, நீங்களா நம்மூட்டுக்கு வந்தது. இன்னைக்கு என்ன இப்படி சந்தோஷமான விஷயங்களா நடக்குது.

நமக்கே பதிவு எழுத இந்த மாதிரி எதாவது மேட்டர் கிடைச்சாதான் உண்டு. அதையும் அடுத்தவன் போடறதுக்கு முன்னாடி நாம போடவேண்டாமா?

This is a dog eat dog world you see! ஓ! நாயின்னு சொல்லக்கூடாதோ.

சரி. It is a rat race you see! இப்போ சரியா இருக்கா?! :))

said...

அன்புத் தம்பி, என் கொள்கை பரப்பு செயலாளர் இலவசனாரே,

தேர்தல் தொடங்கிய உடனே அதைப்பற்றிய கவலைகளை விட்டு நான் ரீமேக் செய்ய இறங்கினேன் என்றால் அதற்குக் காரணம் - தேர்தல் பொறுப்புகளை ஒரு பொறுப்பான தம்பியிடம் விட்டதால் மனம் லேசானதுதான்!

ஒரு முதல் கையெழுத்து போடுவது பழைய பேஷன். ஒரு இருநூறு முதல் கையெழுத்துதான் பேஷன். எந்த இருநூறுன்னு கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்கப்போவதுதான் நிஜமான முதல் கையெழுத்து.

இலவசனாரே, உங்கள் பாசம் என் கண்ணை மறைக்கிறது! எந்த அளவு கண்ணை மறைக்கிறதென்றால், நீங்கள் திட்டத்துடன் உள்நுழைத்துள்ள உள்குத்துக்களை கண்டுக்காமல் விடவைக்கும் அளவிற்கு!

மீண்டும் ஒருமுறை, நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு போட்டவர்கள் அனைவருக்கும் நன்றீ நன்றி நன்றி..

said...

//தேர்தல் பொறுப்புகளை ஒரு பொறுப்பான தம்பியிடம் விட்டதால் மனம் லேசானதுதான்!//

நல்ல வேலை கெலிச்சிட்டீங்கண்ணே. இல்லைன்னா என்னா பேச்சு பேசி இருப்பீங்க!

//ஒரு முதல் கையெழுத்து போடுவது பழைய பேஷன்.//

கெலிச்ச கையோட பால் மாறிட்ட பாத்தியா. நீதான்யா அக்மார்க் அரசியல்வாதி.

//இலவசனாரே, உங்கள் பாசம் என் கண்ணை மறைக்கிறது! //

நல்ல வேளை கண்ணை மறைக்குதுன்னு பக்கத்து வீட்டுக்குப் போகாம கரீட்டா நம்ம பக்கம் வந்தீரே. (ஐயோ, கண்ணு மண்ணு தெரியாத குடிக்காதேன்னா கேட்டாத்தானே. இதுல எதனா சொன்னா முணுக்குனு கண்ணுல தண்ணி வேற வந்துடுது. என்னா நடை நடக்கறாருப்பா!)

//நீங்கள் திட்டத்துடன் உள்நுழைத்துள்ள உள்குத்துக்களை கண்டுக்காமல் விடவைக்கும் அளவிற்கு!//

மீண்டும் அக்மார்க் அரசியல்வாதி!! ஆட்சிக்கட்டில் (ஆமா அது என்னா கட்டிலு, படுக்கவா போற?) ஏறுன உடனே டிவைட் அண்ட் ரூல் பாலிசி பண்ணற பாத்தியா!

//மீண்டும் ஒருமுறை, நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு போட்டவர்கள் அனைவருக்கும் நன்றீ நன்றி நன்றி..//

இதையாவது கரீட்டா சொன்னியே. நானும் இன்னொருதபா சொல்லிக்கிறேமா. நன்னி நன்னி.

said...

பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள்!!

said...

சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.

said...

நண்பர் ரவி எழுதிக் கொண்டது

நல்ல செய்தி. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

said...

பினாத்தலாருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிச்சிடுங்க! ஆமாம் ஸ்வீட்டு எங்க???

said...

வரலாறு காணாத வெற்றி பெற்ற கழக கண்மணி அன்பு தோழர் பினாத்தாலாருக்கு இந்த பின்னூட்டத்தை பொன்னாடையாக அணிவிக்கிறோம்.

said...

பெனாத்தல் என்றால் என்ன? பென் + ஆத்தல் பெனாத்தல். பென் என்றால் பேனா. கணினி பயன்படுத்துகிறவர்களுக்குக் கணினிதான் பேனா. அந்தக் கணினியை வைத்துக் கொண்டு ஆத்தோ ஆத்தென்று ஆத்திய (சேவையத்தாங்க) பெனாத்தலார் வெற்றி பெறாமல் இருந்தால்தான் நான் ஆச்சிரியப்பட்டிருப்பேன் என்பதை உடன்பிறப்புகள் அறிவர். எழுந்து வா விழுந்து வா என்ற தாரக மந்திரம் உனக்காகவே உருவானது என்பதை நீ அறிவாய். நான் அறிவேன். வாழ்க. வளமுடன்.

இதல்லாம் யாரால நடந்ததுங்க? ஓட்டுப் போடுற சைட்டுக்குப் போக முடியலை. ஒரே கலாட்டா. எல்லா லிங்க்கையும் பிளாக் பண்ணி வெச்சிருக்காங்க. அதையும் மீறி ஹேக் பண்ணிப் போனா வைரஸ்களையும் வார்ம்களையும் அள்ளி வெளாசுறாங்க. இந்தத் தேர்தலை நாங்க புறக்கணிக்கிறோம்.

நாங்க என்ன பிச்சையா கேட்டோம். எங்களுக்கு உரியதைத்தானக் கேட்டோம். வாக்குச் சேகரிக்கும் போது இவங்க பதிவு எழுதுவாங்க. நாங்க லோலோன்னு அலஞ்சு ஓட்டு வாங்குறது. கடைசில இவங்க மெடல் குத்திக்கிட்டு போறதா?

அன்று மெசபடோமியாவிலே டஸ்கஸ் சிந்தூசஸ் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். பார்வையைப் பார்க்கா விட்டால் கோர்வையாகப் பேச்சு வராது என்று. அதை இன்னும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் ஒரு தமிழன் சொன்னான். அதை மறப்போமா? வஞ்சகரின் வலைப்பூவில் விழுவோமா!

(இதெல்லாம் என்னன்னு பாக்குறீங்களா? வெவ்வேறு தலைவர்களின் கருத்துகள்.)

said...

பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள்.

சரி சரி ஜெயிச்சாச்சில்ல...
அமைச்சரவையை அறிவிச்சிடுங்க..
(எல்லாருக்கும் தனி மடல்ல ஒவ்வொரு பதவிக்கும் என்ன ரேட் அப்படின்னு அனுப்பீட்டிங்க தானே?)

said...

கொ.ப.சே பதிவில் இட்டதையே இங்கும்,
--------------
பெனாத்தலார்,
சிறந்த தமிழ் வலைப்பூ விருதுக்கு வாழ்த்துகள்!

உங்களுக்குக் கொடுத்ததால் அந்த விருதுக்கே பெருமை!!!

இந்த விருதைக்கண்டாவது, ப.ம.க.வின் அசுர பலம் அறிந்து, எதிரிகள் தத்தம் குழிகளுக்குள் பதுங்கட்டும்! நிலாத்தேர்தலில் காட்டினோம்! இப்போது இண்டிப்ளாக்கீஸிலும்!

ஸ்ரீராமரின் சேதுவில் அணிலின் பங்காய் பமகவுக்கு நீங்கள் சேர்த்த நாற்பதுடன் என் பதிமூணையும் சேர்த்துக்கொண்டு கட்சிநிதியிலே வைக்கவும்.

-----------
இப்பதிவிலேயே ஒரு வலையுலக ப.ம.க மாநாடு நடத்தினாலென்ன? பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போமா?

-----------
இந்தப்பதிவிலேயே எனக்கு வாக்களித்த பதிமூணு பேருக்கும், வாக்களிக்க நினைத்து சோம்பேறியாய் விட்டவர்களுக்கும், இந்த கேடுகெட்ட பயலுக்கு விருதுவேறயா என்று நினைத்தவர்களுக்கும், இந்த வாரயிறுதிக்குள் வாக்களித்துவிட வேண்டும் என்று எண்ணியவர்களுக்கும் என் நன்றி நன்றி நன்றி!

said...

ஓ போடச்சொன்னீங்க. தமிழ் 'ஓ'வா, இல்லை ஆங்கில 'O' வா என்று சொல்லவில்லை. ஆகவே:
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
OOOOOOOOOOOOOOOOOOO

said...

:-) பெனாத்தலாருக்கு வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
ஓட்டு போடாதவன்.

said...

congrats Suresh

said...

வாஆஆஆஆஆஆஆஆஆழ்த்துக்கள்

சென்ஷி

said...

வெற்றி பெற்ற பினாத்தலாருக்கும் கொ.ப.செ வான உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் !!

said...

அண்ணன் பினாத்தலார் வாழ்க!

இண்டிபிளாக்கீஸ் வென்ற இணையில்லா இமயம் வாழ்க வாழ்க!!

பினாத்தலாருக்கு அ.ம.இ.ம.க.ம,தி.ம சார்பில் சென்னை தீவுத்திடலில் பிரம்மண்டமான வெற்றி விழா எடுக்கப்படும்....

மேலும் தலைவர் தலையசைத்தால் தமிழகமெங்கும் வீர வரலாற்றின் வெற்றி மாநாட்டினை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

பினாத்தலார் கழகம்,
தலைமை செயலகம்,
பெங்களூர்.

said...

பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள்.கொத்ஸ்க்கு நன்றி.

said...

எங்கெல்லாம் பெனாத்தல்கள் கேட்கிறதோ அங்கெல்லாம் தொண்டுசெய்யும் அனுமனே, உமது இராமன் வென்றதற்கு வாழ்த்துக்கள் !

அண்ணாவிற்கு ஒரு கருணாநிதி, வாஜ்பேயிற்கு ஒரு மகஜன் போல உங்கள் தேர்தல் களப் பணி சிறப்பானது :)

said...

கொத்ஸ்!
உங்களின் ஆன்ந்தத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்!!!

வாழ்த்துக்கள் சுரேஷ்!

கொ.பா.சொ உங்களின் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்!!!


அன்புடன்...
சரவணன்.

said...

///(ஏன் மஞ்ச கலரா? அதான்ய்யா ஆளுங்கட்சி கலரு, அதான். இதே வேற சமயமா இருந்த பச்சையா போட்டு இருக்க மாட்டோம்.)///


இப்ப எந்த சமயத்தை பின்பற்றிட்டு இருக்கீங்க.. இந்து சமயமா ? முகமதிய சமயம்னா பச்சை போடுவீங்களா ?? அப்ப கிருத்துவ சமயத்திற்கு என்ன போடுவீங்க


- வம்பன்

பி:கு : வெறுமனே வம்புக்காக மட்டுமே..

said...

எங்கள் ஊரைச்சேர்ந்த பினாத்தலாருக்கு விருது கிடைத்தது பற்றி மகில்ச்சியோ மகில்ச்சி..

டேய் சுரேசு.. என்னை தெரியுதாடா.. பெனாத்தலான்னு பேரு வச்சிக்குனு மறந்துட்டியா.. நாந்தாண்டா கணேசு.. ஒரு போன் கூட பண்ண மாட்டேங்கிறியேடா..

கணேஷ்

said...

அன்புள்ள பெனாத்தலாருக்கு...


தாங்கள் விருது பெற்றது குறித்து அறிந்தோம்.. மகிழ்ச்சியுற்றோம். இந்த வேளையில் இலவசமும் சரி தாங்களும் சரி ஒரு வெண்பா மூலமாக மகிழ்ச்சியை தெரிவிப்பீர்கள் என்று நினைத்திருந்தக்கால் எங்குமே வெண்பா தென்படவில்லை என்பதில் சற்று வருத்தமே.. இப்படி எல்லாம் எழுதலாம்னா அடிக்க வரமாட்டீங்க ;)

அட போங்கப்பா...

வாழ்த்து்கள் பெனாத்தலாரே வாழ்த்துகள்

ஜீவ்ஸ்

said...

பெனாத்தலாருக்கு வாழ்த்துகள்.

நானெல்லாம் வாக்களித்துமா நீங்கள் வென்றீர்கள்? வியப்பு தான். :-)

said...

பெனாத்தலாருக்கு ஜே!

அவருக்காக ஊன் உறக்கம் இன்றி ஓட்டு செகரித்த[??!!] கொத்தனாருக்கும் ஜே!

இன்னொரு கேண்டிடேட்டு எவ்வளவு [ஓட்டுதான்!] வாங்கினாரு, கொத்ஸ்?

said...

பெனாத்தலாருக்கு ஜே!

அவருக்காக ஊன் உறக்கம் இன்றி ஓட்டு சேகரித்த[??!!] கொத்தனாருக்கும் ஜே!

இன்னொரு கேண்டிடேட்டு எவ்வளவு [ஓட்டுதான்!] வாங்கினாரு, கொத்ஸ்?

said...

congrats Mr. Suresh

said...

congrats Mr.Suresh

said...

பாசத்தின் உறைவிடமே... பண்பின் மொத்தக் குடவுனே...

பதிவுலகின் நிரந்தர முதல்வனே... பதிவர்களின் குலத் தலைவனே...

பதிவுலப் புதுமைகளின் அறிவாலயமே... நகைச்சுவைப் பதிவுகளின் தாயகமே...

வெற்றிக் கனிகள் குவிந்துக் கிடக்கும் கார்டனே.. பதிவுலகக் காவல் வார்டனே...

கொத்ஸ் அண்ணே இந்த மேட்டர் ஓ.கே வா..


நம்ம துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போஸ்ட்டர் டிஜிட்டல் கட் அவுட்... அதுவும் லைட் கட் அவுட்..

அப்புறம் நம்ம துபாய் தலைமையகம் இருக்க நம்பர் 12 விவேகானந்தாத் தெரு பக்கம் ரெட் கார்பெட் வெல்கம் ரெடி பண்ணிட்டோம்...

நமீதா நடனம் எல்லாம் கூட அண்ணன் பினாத்தலாருக்காக ஏற்பாடு பண்ணிரலாமாண்ணே... இது போதுமா இன்னும் எதாவது பண்ணனுமாண்ணே..

said...

பெனாத்தல் சுரெஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

said...

பினாத்தலாரே வாழ்த்துக்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் உங்களுக்கு எதிராய் நடந்த சில சதிவேலைகளை வெளிக்கொணர
நினைக்கிறேன். ஐயகோ, உற்ற நண்பன் என்று நினைத்து அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு பட்டம், பதவி
என்று அள்ளிக் கொடுத்து அழகுப் பார்க்கிறீர்களே அந்த இலவசனாரின் சூது நெஞ்சை இவ்வுலகம் அறியட்டும். ஓரே கேள்வி
உங்களுக்கு, ஏதும் அறியா பச்சிளம் பாலகன் இராமனாதனின் மனதில் நஞ்சைக் கலந்து, ஓட்டை பிரிக்க வேண்டும் என்ற ஓரே சூது எண்ணத்துடன் களத்தில் இறக்கியவரை இனியும் நம்ப வேண்டுமா என்று மட்டும் கேட்கிறேன். யோசியுங்கள்,
நன்கு தீர யோசியுங்கள்.

பி.கு ஏதோ என்னால் ஆனது :-)
-usha

said...

உஷாக்கா போல் வந்து பின்னூட்டம் இட்டிருக்கும் அனானிக்கு எங்கள் கண்டனங்கள்! :))

போகட்டும் பெயரிலிக்கு பதில் சொல்ல மாட்டேன் என அடம் பிடிக்கும் சின்ன குழந்தைகள் குழுவில் நான் இல்லை என்பதால் பதில் சொல்கிறேன்.

//ஏதும் அறியா பச்சிளம் பாலகன் இராமனாதனின் மனதில் நஞ்சைக் கலந்து, ஓட்டை பிரிக்க வேண்டும் என்ற ஓரே சூது எண்ணத்துடன் களத்தில் இறக்கியவரை//

எச்சூஸ் மி. நானா இறக்கினேன்? இது காலத்தின் கோலமம்மா. அவனின் சிறிய சித்து விளையாட்டு. (நான் கடவுளைச் சொன்னேன், நீங்க பாட்டு முகமூடியைச் சொன்னேன்னு நினைச்சுக்கப் போறீங்க).

அப்படி சூது கவ்விய நெஞ்சிருந்தால் நான் வெளிப்படையாக இருவருக்கும் வாக்கு சேகரித்து இருப்பேனா, ஆளைக்கு பாதி என்ற கணக்கில் எனது எட்டு வோட்டுக்களை நான்கு நான்காக பிரித்து இருப்பேனா?

எனது வெள்ளை மனதை முழுமையாக அறிந்த பெனாத்தலாரிடம் உங்கள் பருப்பு வேகாதென்பதைத் தெரிவித்துக் கொண்டு அண்ணன் பெனாத்தலாரை அவரது கருத்துக்களைத் தெரிவித்து அனைவரையும் தெளிவிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

ஓவர் டு பெனாத்தல்ஸ்.

said...

அக்கானா கரெக்டா இருக்கீங்க (சொர்ணாக்கா இல்ல :))

பெனாத்தலாரும் நானும் பொதுவில் இல்லாவிட்டாலும் உரையாடிக் கொண்டுதான் இருக்கிறோம். பெனாத்தலார் தான் ஜெயிக்க போகிறார் என்பது முன்னரே ஆண்டவனால் முடிவுசெய்யப்பட்டது.

எங்களுக்குத் தெரியாத கொத்தனார் (எ) 'முகமூடி'யின் விளையாட்டுக்களைப் பற்றி?

said...

ஐயகோ, எத்துணை பசப்பு வார்த்தைகள்? எங்கள் அன்பு அண்ணன் பினாத்தலார் இதை இனியும் நம்ப மாட்டார் என்பதை
மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உம்முடைய சதி வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டதையா ஆகிவிட்டது. பினாத்தலார் வென்றதும் ஓடோடி வந்து முதலில் பாராட்டுகிறேன் என்று பதிவு போட்டீரே அப்பொழுதே உம்முடைய சுயரூபம் தெரிந்துவிட்டது. பினாத்தலார் தேர்தலில் நிற்கிறார் என்றதும் பதிவு போட்டு வோட்டு கேட்டு, உம்முடைய விசுவாசத்தைக் காட்டினீரா?
களத்தில் இராமனாதனையும் இறங்கிவிட்டுவிட்டு, இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல இருதலை எறும்புப் போல
தவிக்கிறேன் என்று இராமனாதனும் களத்தில் நிற்கிறார் என்று முரசடித்து உலகிற்கு அறிவித்தவர் ஆயிற்றே நீர்?

said...

ராம்ஸு, என்னய்யா இது புது வம்பைக் கிளப்பறீரு. விட்டா நான் எனக் கருதப்படுபவர்கள் அப்படின்னு நானும் ஒரு லிஸ்ட் போடணும் போல இருக்கே!! :))

said...

//விட்டா நான் எனக் கருதப்படுபவர்கள் அப்படின்னு நானும் ஒரு லிஸ்ட் போடணும் போல இருக்கே!! :))//

இந்தப் பதிவுலயுமா? :P

said...

பெனாத்தலார் மெயிலனுப்பி போடச்சொன்னது:

பிரிந்து நின்றாலும் ஜெயிக்கும் என்பதை அறிந்துதான் எங்கள் பலத்தை உலக்குக்கு நிரூபிக்கவே அப்படி செய்தோம்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது எங்களுக்கு தெரியும்..
உலகிற்கு தெரிய வேண்டாமா?

said...

தம்பி, இராமனாதா, தோற்றுவிட்டதும் உனக்கு உலகம் புரிகிறது. இதுதான் ஐயா அரசியல். சிறிது யோசித்து பார். நீ வென்று
இருந்தால் இலவசனார் அவ்வெற்றி தானே காரணம் என்று சொல்லிக் கொண்டு அலைந்திருப்பார்.
மூவுலகும் போற்றும் கலியுக அவதாரம் சொன்னதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்
"இறைவா என் நண்பன் என்று நினைத்து அருகில் இருப்பவனை மட்டும் காட்டு, என் எதிரியை நானே பார்த்துக் கொள்கிறேன்"
என்ற மூதுரையை மட்டும் மறவாதே!
-usha

said...

//பினாத்தலார் வென்றதும் ஓடோடி வந்து முதலில் பாராட்டுகிறேன் என்று பதிவு போட்டீரே அப்பொழுதே உம்முடைய சுயரூபம் தெரிந்துவிட்டது. //

அதிகாரபூர்வ அறிவிப்பு வருமுன்னே, ஏன் தேர்தலே முடியுமுன்னே, விக்கி பசங்களின் வெற்றியைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்த என்னைப் பார்த்து இப்படி ஒரு குற்றச்சாட்டா? என் நெஞ்சு வெடிக்கும் போல் இருக்கிறதே. (இந்த எஸ்.கே. பதிவை படிச்சாலும் படிச்சேன், இப்போ எல்லாம் ஒரே நெஞ்சுவலி மாரடைப்பு ஞாபகம்தான்!)

//களத்தில் இராமனாதனையும் இறங்கிவிட்டுவிட்டு, இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல இருதலை எறும்புப் போல
தவிக்கிறேன் என்று இராமனாதனும் களத்தில் நிற்கிறார் என்று முரசடித்து உலகிற்கு அறிவித்தவர் ஆயிற்றே நீர்?//

இராமநாதன் யார்? பெனாத்தலார் யார்?
பாமாகவின் பெரும் தலைகளில் இருவர் அன்றோ? விக்கி வேந்தர்கள் அல்லவோ? என்னிரு கண்கள் அல்லவோ? ஒரு கண்ணில் வெண்ணையையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துப் பார்க்கும் அளவிற்கு கல்நெஞ்சம் படைத்தவன் இல்லையே நான்?

இவர்கள் இருவரையும்தான் பிரித்துப் பார்க்க என் மனதும் ஓப்புமோ? காலத்தின் கட்டாயத்தால் இருவரும் தேர்தலில் நிற்க வேண்டியது வந்தது. ஆனாலும் ஒருவரை மட்டும் ஆதரிக்க முடியாத எனது ஆற்றாமையைப் பதிவு போட்டு ஆற்ற நினைத்தால் அதற்கும் இப்படி ஒரு களங்கம் கற்பிக்க முடியுமா? இப்படி ஒரு குற்றச்சாட்டை வீசுமளவிற்கு கல்நெஞ்சாளாக (நெஞ்சனுக்குப் பெண்பால் இதுதானே?) நீங்கள் ஆனது எப்படி? ஆ! என் மனம் அல்லல் படுகிறதே. ஆற்றுவார் இல்லையா?!!!!

said...

//இந்தப் பதிவுலயுமா? :P//

தலைவா, ஏற்கனவே பகல் பருந்து சொன்னாக, மாலை மயிலு சொன்னாகன்னு மக்கள் நம்மளை கேள்வி மேல கேள்வி கேட்கறாங்க. நீர் வேற எதனா வம்பைக் கிளப்பாதேயும்.

said...

//Anonymous said...//

முதலில் முகத்தை மூடிக் கொண்டு வந்த உங்களுக்கு நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும். பெயரிலிகளுக்கு பதில் சொல்லுமளவிற்கு நாங்கள் ஒன்றும் தரம்தாழ்ந்துவிடவில்லை! (வேற மேட்டர் இல்லைன்னா இதை எடுத்து விடறதுதானே இப்போதைய ஃபேஷன்!)

அது என்ன ஒரு அனானி பின்னூட்டம், ஒரு சொந்த பின்னூட்டம், ஒரு அனானி பின்னூட்டம் அப்படின்னு மாறி மாறி வருது?

//நீ வென்று
இருந்தால் இலவசனார் அவ்வெற்றி தானே காரணம் என்று சொல்லிக் கொண்டு அலைந்திருப்பார். //

பெனாத்தலார் வெற்றிக்கு நாந்தான் காரணமென்று எங்காவது சொல்லி இருக்கிறேனா? இப்படி வாய்கூசாமல் பொய்புரட்டுக்களை எடுத்துவிட உங்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது? ஒரு வெள்ளை மனத்தானை, பால்வடியும் முகத்தானை, நல்ல மனத்தானை (இதுக்கு மேல ஆனை போட்டா பொன்ஸ் எதாவது கேஸ் போட போறாங்க) அழ வைக்க உங்களுக்கு எப்படி மனம் இடங்கொடுக்கிறது?

//மூவுலகும் போற்றும் கலியுக அவதாரம் சொன்னதை //

ஐ!ஐ! நீங்க எல்லாம் அவதாரம் பத்தி எல்லாம் பேசுறது நாட் அலவுட்!! இது போங்கு ஆட்டம்!!!

said...

அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ,
ஒரு உண்மையை நான் சொல்லியாக வேண்டும். பினாத்தலார் ஜெயித்தது தெரிந்தவுடன் முதல் வாழ்த்துப்பதிவு போடுவதாக இருந்தவன் நான்!

என்னிடம் சாட்டில் மன்றாடி தானே வாழ்த்துப்பதிவு போடுவதாக கொத்தனார் கேட்டதன் பின் இவ்வளவு அரசியலா? எனக்கு மூட்டிய சிதைக்காக நானே வந்து கெரசின் வேறு விட்டேனே! ஐயகோ!!

அப்பப்பா.. என்னையும் சீக்கிர ரிட்டையர் ஆக்கி ஸ்விஸ்ஸாபுரம் பண்ணைக்கு குஜிலியுடன் குஜால்ஸ் பண்ண அனுப்பிவிடுவார்கள் போலிருக்கிறது. :(((

said...

கொத்ஸு,
//பெயரிலிகளுக்கு பதில் சொல்லுமளவிற்கு நாங்கள் ஒன்றும் தரம்தாழ்ந்துவிடவில்லை! //
இது தனிமனிதத் தாக்குதல் இல்லையா? பூரணமான சுவாதீனத்துடன் எழுதியதுதானே இது?

பதிவுக்கு சம்பந்தமேயில்லாத ஒருவரை தாக்கி விசயத்தை திசை திருப்ப முயற்சிப்பது ஏன்? ஏன்? ஏன்? என்று எங்களுக்குத் தெரிந்தே தான் இருக்கிறது!!

said...

//என்னிடம் சாட்டில் மன்றாடி தானே வாழ்த்துப்பதிவு போடுவதாக கொத்தனார் கேட்டதன் பின் இவ்வளவு அரசியலா? //

எப்படி ஒரு நல்லெண்ணச் செயலிலும் உள்குத்து கண்டுபிடிக்க வேண்டும் என வகுப்பெடுக்கலாம் போலத் தெரிகிறதே!! அதற்கு நீயுமா மயங்குவாய் என் நண்பா? This too will pass! (அவங்க மூதுரை சொன்னா நானும் சொல்ல வேண்டாமா?)

//அப்பப்பா.. என்னையும் சீக்கிர ரிட்டையர் ஆக்கி ஸ்விஸ்ஸாபுரம் பண்ணைக்கு குஜிலியுடன் குஜால்ஸ் பண்ண அனுப்பிவிடுவார்கள் போலிருக்கிறது.//

என்னது?!!!!!

ஓ! குஜிலியா? படிக்கும் போது ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆகிப்போச்சு! அப்புறம்தான் உம்மோட இந்த குஜிலி ஞாபகம் வந்தது.

ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேம்பா!

said...

பார்தாயடா தம்பி இதுதான் அரசியல்! சூது மதியாளனின் பசப்பு வார்த்தைகளால் எத்துணை திரித்தல்கள்? நம் அண்ணன்
காதுக்கு இச்செய்திகள் எட்ட வேண்டும் என்று நினைத்தே, வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவேன் என்ற பயமுறுத்தல்களை
புறம் தள்ளி உண்மையை உலகிற்கு தெரிவித்தேன்.

பி.கு ஏதோ இன்றைக்கு காலை இலவசத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு இனிமையாய் விடிந்தது. வரட்டா
இனி வேலையை பார்க்கோணும்.சில சமயங்களின் பின்னுட்டம் போக மறுக்கிறது. அதனால் அனானிமஸ் கிளிக் செய்ய
வேண்டியுள்ளது.
-உஷா

said...

அன்பு அக்கா உஷா மற்றும் அன்புத்தம்பி ராமநாதன்..
உங்கள் கவனத்திற்கு எனத் தனிப்பதிவு போடலாம் என்று பார்த்தேன்,
ஆனால் காபிரைட் பிரச்சினைகள் வரலாம் என விட்டுவிட்டேன்.
ப ம க வலை மாநாடு நடத்தலாம் என தம்பி ராமநாதன் சொன்னபோதே பயந்தேன் - உட்கட்சி ஜனநாயகம் கொடிகட்டிப் பற்க்கும் நம் மாநாடு எதிரிகளின் வாயில் அவல் ஆகிவிடக்கூடாது என்று.
சகோதரத்துவம் நிறைந்த நம் சொல்லாடல்களை சண்டை எனத் திரித்திடும் வம்பர் வம்பிகள் பலருள்ள வலையுலகிலே
பகலில் பக்கம் பார்த்தும், இரவில் அதுவும் பேசாமலேயும் இருப்பதே நன்று.
கொத்தனாரின் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையை தர்க்கசாஸ்திரத்தின் துணைக்கொண்டு, குறைந்தபட்சம் இரு ஈமெயில் உதவியுடன் சமாளித்தார்.
அவருடைய வலதுகண் வென்றாலென்ன, இடதுகண் வென்றாலென்ன என்ற சமத்துவச் சிந்தனையோடு பதிவிட்டார்.
ராமநாதன் வென்றிருந்தாலும் உஷா சொன்னது போல முதல் பதிவிட்டிருக்கக்கூடியவரே அவர்தான்.
களத்தில் ராமநாதன் இறங்கியது காலத்தின் கோலம் - ஆனாலும் அஃதை நாம் நமது பாசறையின் வெற்றியைப் பரைசாற்றிடவே உபயோகித்தோம்.
எனவே, தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர் இலவசத்தின் மீது சந்தேகத்தை விடுங்கள்.
தம்பி ராமநாதா,
குழபிய குட்டையில் மீன் பிடிக்கலாம், மீனாக இருக்கும் நீயே குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதுவும் தகுமா?
வெற்றிக் கொண்டாட்ட வேலைகள் தலைக்கு மேல் நிற்கின்றன
பிரிவினையை விடுங்கள், ஜோதியில் ஐக்கியப்படுங்கள்
வெல்க ப ம க!

said...

கொத்தனார், உம்முடன் விளையாடவே யாம் இங்கு வந்தோம்.

பமகவின் வெற்றியை தனியொரு பதிவால் தூக்கிநிறுத்திய செம்மலே! நீவிர் வாழ்க! உனது பின்னூட்ட கயமை வாழ்க! பமக உள்ளவரை உனது புகழ் நிலைத்திருக்கட்டும்!

உம்மைச் சோதிக்கவே, நம்முடன் முன்னர் தேர்தல் சமயத்தில் விளையாடியவாறு சற்று உஷாக்காவும் விளையாடினார்.

இனி துயர்விட்டு, நெஞ்சம் நிமிர்ந்து, கட்சிக்காக களப்பணியை திருவுளப்பணியாய் எண்ணி செயல்பட்டுவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் அகில பிரபஞ்ச கட்சி மாநாட்டிற்கான வேலைகளும் தொடங்க இருக்கின்றன. அதையும் நீர் தானே முன்னின்று நடாத்த வேண்டும்?

said...

தம்பி இராமனதா! இத்துணை அப்பாவியாய் இருக்கிறாயே என்பதை நினைத்தால் கண்ணில் இருந்து பெருகும் நீரை நிறுத்த முடியவில்லையடா!
பச்சோந்திகளைப் போல நாளும் வர்ணம் மாற்றும் இச்சதிக்காரர்களை, சுயநலமிகளை நம்பி மோசம் போகாதே! தலைவருக்கோ
இப்பொழுது வெற்றி விழாவில் இருக்கிறது முழு எண்ணம், அதற்கு தொண்டர்கள் உதவி தேவை என்பதால் இலவசனாரின்
முதுகு குத்தலை செளகரியமாய் மறந்ததுப் போல நடிக்கிறார். இலவசமோ உன்னை பகடைக்காயாய் வைத்து பினாத்தலாரை வீழ்த்த போட்ட திட்டம் தவிடு பொடி ஆனதே என்று பயந்து, விழாவில் எப்படி தலைவரின் இழந்த அன்பை
மீண்டும் பெறுவது என்று வியூகம் வகுக்கிறார்.
ஆகையால் விழித்துக் கொள், விழா நல்லப்படி நடந்தால் இலவசத்தின் கை ஓங்கும். ஓரே வழி, உன்னையறியாமல் சூதுவலையில் விழுந்ததை எடுத்து சொல்லி, நீ பெற்ற வாக்குகளை, தலைவருகே சமர்பிக்கிறேன் என்று கண்ணீரை வரவழைத்துக் கொண்டு விழா மேடையில் அறிவித்து விடு. இல்லை என்றால் எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் தலைவரின் கோபககணை உன் மேல் பாயும். அதற்கு நெய்யூற்ற பலர் இருக்கிறார்கள் என்பதை மறவாதே!
-usha

said...

///இராமனதா!//

இது என்ன?

நேர்மை இரா மனதா?
நாணயம் இரா மனதா?
நம்பிக்கை இரா மனதா?
ஈரம் இரா மனதா?
கருணை இரா மனதா?
நல்லெண்ணம் இரா மனதா?

இப்படி எல்லாம் கேட்க வந்து அரைகுறையாக நிறுத்தினீர்களா?

நாங்கள் சொல்கிறோம், இது

சூது இரா மனது!
கள்ளம் இரா மனது!
கபடம் இரா மனது!
நஞ்சு இரா மனது!
கொடுமை இரா மனது!
கொலைவெறி இரா மனது!
இது போன்ற மனது இராமனது!!

said...

கொத்சு,
என்னைய வச்சு காமெடிகீமடி பண்ணலையே?

அப்படியே என் நெஞ்சாங்கூட்டுக்குள்ள பூந்து ஹார்ட்ட கைல எடுத்து ஆரஞ்சு ஜூஸாட்டாம் பிழிஞ்சு சக்கையாக்கிட்டய்யா.. என்ன சொல்றதுன்னே தெரியாம வழிஞ்சுகிட்டிருகேன் நான்

said...

வாழ்த்துக்கள் பினாத்தல்.

ராம்ஸ் உங்களுக்கும் கொத்துஸ்க்கும் ஏதும் பிரச்சனையா?

said...

//ஆரஞ்சு ஜூஸாட்டாம் பிழிஞ்சு சக்கையாக்கிட்டய்யா.. என்ன சொல்றதுன்னே தெரியாம வழிஞ்சுகிட்டிருகேன் நான் //

என்ன சொல்லுறதுங்குறது அப்புறம் இருக்கட்டும். அந்த ஜுஸ்ச யாரு குடிச்சா. அத சொல்லுங்க முதல

said...

//சூது இரா மனது!
கள்ளம் இரா மனது!
கபடம் இரா மனது!
நஞ்சு இரா மனது!
கொடுமை இரா மனது!
கொலைவெறி இரா மனது!
இது போன்ற மனது இராமனது!! //

அட இரா மனது என்னது?

said...

கொத்துஸ், இவ்வளவு மோசமான ஆளா அவரு - இரா மனது

said...

கொத்துஸ்,

ஆட்டத்துல இருக்கீங்களா... ஆடலாமா?

said...

சரி நான் ஜுட் விடுறேன். அப்பால பாக்கலாம். அனா ஒன்னு(ஆனா இரண்டு) ராம்ஸ்க்காக உயிரை கொடுக்கும் தொண்டர் படை இருக்கு அதை மறந்து விடாதீர்கள்.

said...

வாழ்த்துக்கள் பெனாத்தல் சுரேஷ் & பெனாத்தல் கணேஷ் ;-)

said...

நா ஒரு 3 போட்டேன். ஏதாவது போட்டு கொடுங்கன்னு பெனாத்தலார்கிட்ட கேட்டேன். கிடேசன் பார்க் மேட்டர தங்கமணிகிட்ட நல்லா போட்டு குடுத்துட்டு "இது போதுமா இன்னும் கொஞ்ஜம் போட்டு குடுக்கவா"ன்னு கேக்குறார். அதனால கொ.ப.ச.கொத்ஸ்ஸாவது போட்டுகுடுக்கனுன்னு கோரிக்கை வைக்கிறேன். மத்தபடி பெனாத்தலார் வாழ்க!! வாழ்க!!!!