Monday, November 17, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - நவம்பர் 2008

போன முறை புதிர் ரொம்ப எளிதாக இருந்தது என நினைத்து இந்த முறை கொஞ்சம் கடினமாகச் செய்யலாம் என நினைத்துப் புதிர் செய்தேன். ஆனால் இதனை வெள்ளோட்டம் பார்த்த பெனாத்தலும் சரி, வாஞ்சியும் சரி, உம்ம புதிர் ரொம்ப எளிமையாக இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. ஆக, இந்த மாதமும் எளிமையான புதிர்தான். அடுத்த முறை மேலும் கடினமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!


123
45
6
789
1011
121314

இடமிருந்து வலம்
4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)
5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)
7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)
8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)
10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)
11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)
12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)
14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)

மேலிருந்து கீழ்
1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)
2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)
3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)
6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)
9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)
13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

136 comments:

said...

கொஞ்சம் ஆணி அதிகம். பதில் சொல்வதில் தாமதங்கள் ஏற்படலாம். அட்வான்ஸ் மாப்பு!

said...

கட்டங்களில் உள்ள எண்களும், குறிப்பில் உள்ள எண்களும் பொருந்தவில்லை.

சரி செய்யவும்.

said...

புதிர் கட்டங்கள் எண்கள் தவறாக இருந்தது. சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டிய கெ.பி.அக்காவிற்கு நன்றி. இனிமேல் தவறான எண்கள் சாக்கு சொல்ல முடியாது என்பதால் புதிரை விடுவிக்கும் வழியைப் பார்க்கவும்! :)

said...

வேலன், சரி செய்து விட்டேன். உங்களுக்கும் என் நன்றி. அது அடுத்த மாதத்திற்கான புதிர் கட்டத்தின் கோட் என நினைக்கிறேன்! :P

said...

புதிர் போட்டு பத்து நிமிசம் மேல ஆச்சுதே. இன்னமும் யாரும் விடை போடலையா? அப்ப நிசமாவே கஷ்டந்தானா? :(

//அது அடுத்த மாதத்திற்கான புதிர் கட்டத்தின் கோட் என நினைக்கிறேன்! :P//

சரி. சரி. மீசையை நல்லா துடைச்சிக்குங்க.

said...

my answers:

இடமிருந்து வலம்

4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. கவர்ந்திட
10. பொதுப்புத்தி
11. பலி
12. வருகிறது
14. மடமை

மேலிருந்து கீழ்

1. முதலெழுத்து
2. சரி பார்த்திடு
3. போக
6. சிகப்பு நிறம்
9. தின்பண்டம்
13. ருசு

Suresh

said...

Answers might have been easier. But the clues are wonderful.

idamirundhu valam:
4.பதம்
5.ஏரிக்கரை
7.எழு
8.கவர்ந்திட
10.பொதுப்புத்தி
11.பலி
12.வருகிறது
14.மடம்
mezhirundhu keezh:
1.முதலெழுத்து
2.சரிபார்த்திடு
3.போக
6.சிகப்புநிறம்
9.திண்பண்டம்
13.ருசு

said...

Answers might have been easier. But the clues are wonderful.

idamirundhu valam:
4.பதம்
5.ஏரிக்கரை
7.எழு
8.கவர்ந்திட
10.பொதுப்புத்தி
11.பலி
12.வருகிறது
14.மடம்
mezhirundhu keezh:
1.முதலெழுத்து
2.சரிபார்த்திடு
3.போக
6.சிகப்புநிறம்
9.திண்பண்டம்
13.ருசு

said...

இப்போதைக்கு:


இ -வ

10 பொதுப்புத்தி
11 பலி

said...

நாமக்கல் சிபி,

தனி மடலில் வந்த விடைகள்

மேகி 6 - இன்னும் போடலை
மேகி 9 - எழுத்துப்பிழை

இது ரெண்டும் சரி பண்ணுங்க. மத்தது எல்லாம் சரியான விடைகள்.

said...

வாருமய்யா சின்னவரே

தனிமடல் விடைகள் கிடைத்தன.

இவ 5 12
இவ 14 - ஒரு எழுத்து சரி பண்ணுங்க.

மேகி 3 6

மேகி 9 - எழுத்துப்பிழை. சரி செஞ்சால்தான் மதிப்பெண்.

இவை தவிர மற்றவை எல்லாம் சரி.

said...

வாங்க எஸ்.பி. சுரேஷ்

இவ 14 - ஒரு எழுத்து மட்டும் மாத்தணும்.

மற்ற எல்லாம் சரியான விடைகள்.

said...

வாங்க சீனு

குறிப்பெல்லாம் பிடிச்சு இருந்துதா! நன்றி.

மேகீ 9 - எழுத்துப்பிழை! சரி செஞ்சா எல்லாமே சரி.

அது என்ன இதுல இவ்வளவு பேர் தப்பு செய்யறாங்க.

said...

ரீச்சர்

போட்ட ரெண்டு விடையும் சரி. ஆனா அது ரெண்டு மட்டுமே போட்டதுக்குப் பின்னாடி பெரிய நுண்ணரசியல் இருக்கு போல இருக்கே!! :))

said...

Hi,
I am new to the blog world. I got your link from Thendral book , and came here.
- How to type in Tamizh?I googled for it and got a site called quillpad, and I used it for typing. I also got one NHM, but dint know how to use it. 'll figure it out, but is there an easier way?
- Aaani(your first comment in this page),pudasevi, nunnarisayal - idukkellam artham enna?

said...

சீனு சார், எனக்கு உங்க ஈமெயில் அட்ரஸ் குடுங்க. நான் கொஞ்சம் விபரமாச் சொல்லித் தரேன். நான் NHMதான் பயன்படுத்தறேன்.

ஆணி, நுண்ணரசியல், புதசெவின்னு பெரிய பெரிய ஐட்டமாக் கேட்கறீங்க!! எல்லாம் சொல்லித் தரேன்!! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க!! :))

said...

ஆமாங்க சீனு.

நுண்ணரசியலில் நம்ம கொத்ஸ் தான் சீஃப்!

said...

//ஆணி, நுண்ணரசியல், புதசெவின்னு பெரிய பெரிய ஐட்டமாக் கேட்கறீங்க!! எல்லாம் சொல்லித் தரேன்!! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க!!// இந்தப்பதிலில் தெரியும் ஆணவத்தின் நுண்ணரசியல் பெரும்பாலானோர்க்கு புரியாது. புதசெவி என்று கேட்டாலும் பதில் சொல்ல முடியாத ஆணியோடு உள்ளேன். ஆனால் கொத்தனாரின் அத்துமீறிய ஆட்டத்தைப் பற்றி பதிவு செய்வது அவசியம் என்பதால் எழுதியிருக்கிறேன்.

said...

வாங்க முத்து

போட்ட விடைகள் எல்லாம் சரி. இன்னும் ஒண்ணுதானே. போடுங்க.

said...

இந்தப் பதிவுக்கு தமிழ்மணம் பரிந்துரை 0/4. அதாவது ரெண்டு ஓட்டு +. அதில் ஒண்ணு நான் போட்டது. ரெண்டு - ஓட்டு.

எ கொ இ ச!

said...

வணக்கம் இலவசக் கொத்தனாரே,

இவ 14. மடம்

பொருத்தம் இல்லாவிடினும் "மடமை" என்று முதலில் தோன்றியதையே எழுதிவிட்டேன்.

சுரேஷ்

said...

இ.வ
7. எழு
10.பொதுப்புத்தி
11. பலி
14. மடம்

மே.கீ
1. உயிரெழுத்து
6.சிகப்பு நிறம்
13. ருசு

said...

வாங்க சுரேஷ்

14 - இப்போ சரிதான்.

எல்லாம் சரியா இருக்கு! குட் ஜாப்! :)

said...

கொத்ஸ்

கட்ட எண் சரியில்லையா
இ.வலம் 11 (2) என்றூஇருக்கிறது. ஆனால் அந்தப்பக்கம் கட்டமே காணும்

இன்னும் ரெண்டு மூணு அப்படி இருக்கு.

நான் முதன்முதலா வர்றதால எனக்கு தெரியவில்லையா

said...

வாங்க சின்ன அம்மிணி அக்கா!

7 10 11 14

6 13

சரியான விடைகள்.

1 தப்பு.

said...

மதுக்கா,

இப்போ கட்டம் எல்லாம் சரியாத்தானே இருக்கு. ஒரு முறை ரிப்ரெஷ் பண்ணிப் பாருங்க.

இல்லை சரியான கட்டத்தை மின்னஞ்சல் செய்யறேன்.

said...

சரியாப் போச்சு போங்க, போன வாரமே முடிச்சிருப்பீங்கனு நம்பிட்டு இருந்தேனே, நேத்திக்குத் தான் இணையம் திரும்ப கனெக்ட் ஆகி இருக்கு, கரெக்டா உடனே போட்டுட்டீங்களே? எதுக்கோ மூக்கிலே வேர்க்குமாமே அது போல உங்களுக்கும் மூக்கிலே வேர்த்ததோ?? :P:P:P:P:P

said...

கீதாம்மா,

ஆக மொத்தம் இந்த மாத எக்ஸ்யூஸ் இணையம் இல்லை. வேற என்னான்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு! :P

said...

கொத்ஸ் சரியான கட்டத்தை மின்னஞ்சல் செய்யவும்

said...

இ-வ

4 கல்வி

7 அரை

மே-கீ
3 கூடு
6 சிகப்புநிறம்

said...

1. முதலெழுத்து

said...

4.பதம்
5.ஏரிக்கரை
7.எழு
8.கவர்ந்திட
10.பொதுப்புத்தி
11.பலி
12.இருதுருவ
14.மடம்

1.முதலெழுத்து
2.சரிபார்த்திடு
3.போக
6.சிகப்புகுருதி
9.திண்பண்டம்
13.ருது

nithya balaji

said...

மதுக்கா,

யாஹூ ஐடிக்கு அனுப்பியாச்சு!

said...

ரீச்சர்

இப்போ போட்டதுல 6 மட்டும் சரியான விடை!

said...

சின்ன அம்மிணி

1 ஒக்கே

said...

இடமிருந்து வலம்

4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. கவர்ந்திட
10. பொதுப்புத்தி
11. பலி
12. வருகிறது
14. மடமை

மேலிருந்து கீழ்
1. முதலெழுத்து
2. சரி பார்த்திடு
3. போக
6. சிகப்பு நிறம்
9. தின்பண்டம்
13. ருசு

சுலபமாய் இருந்தது.

-அரசு

said...

சட்டசபையில் வந்து கையெழுத்து மட்டும் இட்டு போவது போல் நான் என் வருகையை மட்டும் பதிவு செய்து விட்டு போகிறேன்.

said...

வாங்க நித்யா பாலாஜி. முதல் முறை நம்ம பக்கம் வந்ததிற்கு நன்றி.

4 5 7 8 10 14

1 2 3 13

9 - எழுத்துப்பிழை

said...

அரசு

14 தவிர மற்றவை அனைத்தும் சரி!

said...

கொத்தனாருக்கு வணக்கம்,

நான் Bloggger அல்ல என்பதையும், உங்கள் வலைப்பதிவின் தீவிர ரசிகன் என்பதையும் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

உங்களது ஒரு பழைய பதிவின் பின்னூடடத்தில் (மிகவும் பழைய) நீங்கள் ananymous - ஐ ஆதரிப்பதில்லை என்று் எழுதி இருந்தீர்கள்.சென்ற குறுக்கெழுத்து புதிருக்கு முந்தைய புதிரில் கலந்துகொண்டேன்.
பதில் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல...

என்னால் சென்ற புதிரில் கலந்துகொள்ள இயலவில்லை.

மேலும் உங்களது பதிவிற்கெல்லாம் பின்னூட்டமிட விருப்பம் இருந்தாலும், ஒரு கணக்கு தொடங்கிவிட்டு பின்னிடலாம் என்றிருக்கின்றேன்..


இந்த மாதப்புதிரின் விடைகள்.

இவ:
4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. வகர்ந்திட(கவர்ந்திட)
10. பொதுப்புத்தி
11. பலி
12.
14. மடமை

மேகீ:

1. முதலெழுத்து
2. சரி பார்த்திடு
3. போக
6. சிவப்பு நிறம்
9. திண்பண்டம்
13. சுதி


இப்படிக்கு
சதிஸ்

said...

வி ஆர் பாலகிருஷ்ணன், தனிமடலில் விடைகள் அனுப்பியதற்கு நன்றி. அனைத்து விடைகளும் சரியே!

வாழ்த்துகள்!

said...

சதிஸ்

நான் அனானிகளை ஆதரிப்பதில்லை என்பது சரியான எண்ணம் இல்லை. பொதுவாகப் புதிர் என வந்தால் பெயர் போட்டு விடை சொன்னால் எளிதாக இருக்கும். அவ்வளவுதான்.

ஆனால் நீங்கள் ஒரு கணக்குத் துவங்கி பதிவுகளும் எழுத வேண்டும். வாழ்த்துகள்.

4 5 7 10 11
8(இரு விடைகள் தந்திருக்கிறீர்கள். சரியான விடையை எடுத்துக் கொள்கிறேன்)

1 2 3 6

இவை சரியான விடைகள்.

9 - எழுத்துப்பிழை இருக்கின்றது. சரி செய்யுங்கள்.

said...

வலமிருந்து இடம்

4. பதம் : 5. ஏரிக்கரை : 7. எழு
8. கவர்ந்திட :
10. பொதுப்புத்தி : 11. பலி
12. வருகிறது : 14. மடம்

மேலிருந்து கீழ்

1. முதலெழுத்து
2. சரிபார்த்திடு : 3.போக
6. சிகப்புநிறம்
9. தின்பண்டம் : 13. ருசு

சகாதேவன்

said...

//ஆணி, நுண்ணரசியல், புதசெவின்னு பெரிய பெரிய ஐட்டமாக் கேட்கறீங்க!! எல்லாம் சொல்லித் தரேன்!! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க!! :))//

//இந்தப்பதிலில் தெரியும் ஆணவத்தின் நுண்ணரசியல் பெரும்பாலானோர்க்கு புரியாது.//

பெனாத்தலாரை(முதல்முறையாக???) வழிமொழிகின்றேன், ரொம்ப சந்தோஷமா இருக்கு!

said...

கொத்ஸ்

இம்முறையும் ஒன்று இடிக்கிறது.. :(

மே - கீ

1. முதலெழுத்து
2. சரி பார்த்திடு
3. போக
6. சிகப்பு நிறம்
9. தின்பண்டம்
13. ருசு

இ வ:

4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. கவர்ந்திட
10. பொதுப்புத்தி
11. பலி
12. :(
14. மடம்

said...

இடமிருந்து வலம்
4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)
பதம்
5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)
7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)
எழு
8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)
10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)
பொதுப்புத்தி
11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)
பலி
12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)
14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)
மடம்

மேலிருந்து கீழ்
1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)
முதலெழுத்து
2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)
3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)
6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)
சிவப்புவெள்ளை
9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)
தின்பண்டம்
13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)
ருசு

said...

வாருங்கள் சகாதேவன். அனைத்து விடைகளும் சரி! வாழ்த்துகள்!

said...

வாங்க ஏஸ்! அட ஆமாம்! ஒண்ணு மட்டும் இடிக்கிறதே. அதையும் யோசிச்சுப் போட்டுடுங்க! :))

மற்றவை எல்லாம் சரி.

said...

யோசிப்பவரே, முழுசா யோசிக்க நேரம் இல்லையா? பாதி விடைகளைக் காணோமே.

4 7 10 11 14
1 9 13

இவைதான் சரியான விடை.

said...

//இவைதான் சரியான விடை.//
எது,எது தப்புன்னு சொன்னால் தேவலை. ஏற்கனவே தட்டிச்சிய பின்னூட்டமும் கையிலில்லை. நிரப்பிய கட்டங்ககளையும் புதுப்பித்துவிட்டேன். கூகிள் ஸ்பிரெட்ஷீட் அலுவலகத்தில் ஓபன் ஆகாது. ஸோ, உதவி ப்ளீஸ்!!:-)

said...

யோசிப்பவரே

5 8 12
2 3 6

இவை ஆறும் நீங்கள் போட வேண்டியவை.

said...

5) ஏரிக்கரை
8) கவர்ந்திட
2) சரிபார்த்திடு
3) போக
6) சிகப்பு நிறம்

said...

5) ஏரிக்கரை
8) கவர்ந்திட
2) சரிபார்த்திடு
3) போக
6) சிகப்பு நிறம்

said...

யோசிப்பவர்

5 8 2 3 6 - எல்லாம் சரிதான்.

இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் மீதி.

said...

4.பதம் இது மட்டும் தான் இப்போதைக்கு தெரியுதுங்க தலைவரே

said...

தேவுத் தம்பி,

இப்படி ஒத்த வார்த்த சொல்லிட்டுப் போனா எப்படி? போட்டது சரிதானே. மேல போடுமய்யா!!

said...

நான் அப்பீட்டு. 11 கடா தவிர எதுவும் எட்டவில்லை :)(:

said...

பாபா

இப்படி எல்லாம் எஸ் ஆனா நாட் அலவுட். அதுவும் போட்ட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுவும் தப்பு.

ப்ளீஸ் கம் பேக்! :))

said...

மேகி
1. முதலெழுத்து

இவ
4. பதம்
7. எழு
10. பொதுப்புத்தி

said...

இடமிருந்து வலம்
-----------------

4. பதம்
5 ஏரிக்கரை
7. எழு
8. கவந்திட
10. பொதுப்புத்தி
11. பலி
12.வருகிறது
14.மடம்


மேலிருந்து கீழ்
--------------
1. முதலெழுத்து
2 சரிபார்த்திடு
3. போக
6. சிகப்பு நிறம்
9. தின்பண்டம்
13. ருசு

said...

கொத்தனார் ஐயா, விடைகள் சரியா?

இடமிருந்து வலம்:

4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. கவர்ந்திடு
10. பொதுப்புத்தி
11. பலி
12. வருகிறது
14. மடம்

மேலிருந்து கீழ்:

1. முதலெழுத்து
2. சரிபார்த்திரு
3. போக
6. சிகப்புநிறம்
9. தின்பண்டம்
13. ருசு

said...

மேலிருந்து கீழ்:

2. சரிபார்த்திடு

said...

இட்லிவடை
4. பதம்
7. எழு
10. பகுத்தறிவு ?
11. பலி
14. மடம்

மேகீனா:
1. முதலெழுத்து (தப்பு)
3. போக‌
6. சிவந்த நிறம்
9. பப்படம்
13. ருசு

இதுல எவ்வளவு தப்பு/சரி பார்த்து மற்ற விடைகள் வரும்:-)

said...

இடமிருந்து வலம்

4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. கருர்டதிள்(திருடர்கள்..குழம்பி)
10. பொதுப்புத்தி
11. பலி
12. வருகிறது
14. மடம்

மேலிருந்து கீழ்

1. முதலெழுத்து
2. சரி பார்த்திடு
3. போக
6. சிகப்பு நிறம்
9. திண்பண்டம்
13. ருசு

said...

கைப்ஸ்,

1 4 7 10 - எல்லாம் சரி. மத்தது எல்லாம் எங்க?

said...

சிபி,

இப்போ எல்லா விடைகளும் சரியா இருக்கு!! (இதில் இருக்கும் எழுத்துப்பிழையை மன்னித்தோம்!)

வாழ்த்துகள்!!

said...

மஞ்சுளா ராஜாராமன்,

எல்லா விடைகளும் சரி!! வாழ்த்துகள்!

said...

கெபி அக்கா

4 7 11 14

1 3 13

இவை சரியான விடைகள். அது என்ன 1 பக்கத்தில் நீங்களே தப்புன்னு போட்டுக்கறீங்க?

said...

வாங்க பாசமலர்

4 5 7 10 11 12 14
1 2 3 6 13

இவை சரியான விடைகள்.

8 - படிக்க சரியான தமிழ்ச் சொல்லாகத்தான் இருக்கும்.

9 - எழுத்துப்பிழை. சரி செய்து போடுங்கள்.

said...

8. கவர்ந்திட
9. தின்பண்டம்

இப்போது சரியென்று நினைக்கிறேன்..

said...

பாசமலர்

இப்பொழுது இரண்டும் சரி. முழுவதும் முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள்!!

said...

14 - மடம் ?

-அரசு

said...

அரசு

14 - சரி

எல்லாத்தையும் போட்டாச்சு போல. வாழ்த்துகள்!

said...

இ-வ (இட்லி வடை இல்லை)


4.பதம்
5.ஏரிக்கரை
7.எழு
8.கவர்ந்திட
10.பொதுப்புத்தி
11.பலி
12.வருகிறது
14.மடமை

மே-கி

1.முதலெழுத்து
2.சரி பார்த்திடு
3.போக
6.சிகப்பு நிறம்
9.தின்பண்டம்
13.ருசு

said...

ச சங்கர்,

போட்ட விடைகளில் 14 தவிர மற்றவை அனைத்தும் சரி!

said...

///ச சங்கர்,

போட்ட விடைகளில் 14 தவிர மற்றவை அனைத்தும் சரி!
///

மடம் ??

said...

//போட்ட விடைகளில் 14 தவிர மற்றவை அனைத்தும் சரி!//

மொத்தமே 14தானே போட்டேன். எல்லாமே தப்பான்னு ஓட்டுவீங்கன்னு நினைச்சேன். நல்ல வேளை.

இப்போ போட்டது சரிதான். :)

said...

எல்லா விடைகளும் சரியா? நன்றி.

சகாதேவன்

said...

///மொத்தமே 14தானே போட்டேன். எல்லாமே தப்பான்னு ஓட்டுவீங்கன்னு நினைச்சேன். நல்ல வேளை.///

எங்களுக்குத் தான் குறுக்கெழுத்து போட தெரிந்துவிட்டதா ? இல்லை உமக்கு புதிர் போடத் தெரியாமல் போய் விட்டதா என்னும் அளவுக்கு...
இது எழுதணும்னு நெனைச்சு மிஸ் பண்ணிட்டனா?அதான் மேல நீர் விட்ட கோட்டையைக் கவனிக்கலை :)

said...

//எல்லா விடைகளும் சரி!! வாழ்த்துகள்!//

மிக்க நன்றி!

said...

இடமிருந்து வலம்
4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் - பதம்
5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து - ஏரிக்கரை
7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு - எழு
8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே - வளர்மதியா
10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு - பொதுப் புத்தி
11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு - பலி
12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு - வருகிறது
14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. - மடம் (அ) மடமை

மேலிருந்து கீழ்
1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் - முதலெழுத்து
2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் - சரி பார்த்திடு
3. சம்போகத்திற்குச் செல்லப் பார் - போக
6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் - சிவப்பு நிறம்
9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே - தின் பண்டம்
13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி -ருசு

said...

சங்கரு,

ஆக மொத்தம் உருப்படியா புதிர் போடப் போய் நுண்ணரசியலை மறந்துட்டீரு!! பாத்து உம்ம USPயே அதுதானே!! :))

said...

வடகரை வேலன்

6 - ஒரு எழுத்து மாறணும்

8 தவறான விடை. 6 மாற்றும் பொழுது இதற்கான சரியான விடை கிடைக்கிறதா எனப் பாருங்கள். மற்றவை எல்லாம் சரி.

said...

6 - சிகப்பு நிறம்
7 - கவர்ந்திட

said...

வடகரை வேலரே

இப்போ ரெண்டும் சரியாப் போச்சு!

வாழ்த்துகள்!!

said...

5. ஏரிக்கரை
7. எழு
8. கவர்ந்திட/டு?
10. பொதுப்புத்தி
11. பலி
12. வருகிறது
14. மடம்

மே.கி
1. உயிரெழுத்து
2. சரிபார்த்திடு
3. போக
4. சிகப்பு நிறம்
9. தி்ன்பண்டம்

said...

நமக்கு ஞானம் பத்தாது. விடை எல்லாம் ரிலீஸ் செஞ்சப்புறம் வந்து பார்க்கிறேன்.

said...

வாய்யா கப்பி, ஏன் லேட்டு!!

5 7 8 10 11 12 14
1 2 3 6 9

எல்லாமே சரி

மத்தது எல்லாம் போடுங்க.

said...

கொத்ஸ்,

13 மே கீ - ருசு,
6 மே கீ - சிவப்புநிறம்

இவை இரண்டும் சரியா?, இதனால் 12 இ-வ இரண்டாம் எழுத்து "ரு" மற்றும் 4ம் எழுத்து "ற" என்றும் வருகிறது. இப்படி ஒரு வார்த்தை ஒன்றும் படித்த மாதிரி ஞாபகம் இல்லை..

(சென்ற முறை, அம்புக்கு தவறாக "நேரம்" என்று தவறாக பதிலளித்தும், சரியான பதில் என்று சொல்லிட்டீங்க)

அதான், இந்த தடவை தெளிவா கேட்டுக்குவம்னு.. ஹி ஹி..

said...

ஏஸ்

13 - சரி
6 - ஒரு எழுத்து மாறணும்

12 - உங்க பின்னூட்டத்தைப் பார்த்து நீங்களே தலையில் அடிச்சுக்கப் போறீங்க!! :)

said...

யோவ் ஏஸ்

12 தவிர மீதி எல்லாம் ஏற்கனவே போட்டாச்சே. என்னய்யா குழப்பறீரு..

said...

வசுப்ரதா, தனி மடலில் தந்த விடைகளுக்கு நன்றி.

14 - ஒரு எழுத்து சரி செய்ய வேண்டும். மற்றவை அனைத்தும் சரியே.

said...

///பினாத்தல் சுரேஷ் said...
இந்தப்பதிலில் தெரியும் ஆணவத்தின் நுண்ணரசியல் பெரும்பாலானோர்க்கு புரியாது. புதசெவி என்று கேட்டாலும் பதில் சொல்ல முடியாத ஆணியோடு உள்ளேன். ஆனால் கொத்தனாரின் அத்துமீறிய ஆட்டத்தைப் பற்றி பதிவு செய்வது அவசியம் என்பதால் எழுதியிருக்கிறேன்./////

ஆணி நிறைய இருக்கிறதென்றாலும் நுண்ணரசியலில் புதசெவி என்றால் சொல்லித்தருகிறேன் என்று ஓடிவரும் கொத்தனாரின் நுண்ணரசியலும்,புதசெவி என்று கேட்டாலும் சொல்லமுடியாத ஆணியுடன் இருந்தும் கொத்தனாரின் ஆணவத்தைப் பதிவு செய்யப் பின்னூட்டமிடும் பினாத்தலாரின் நுண்ணரசியலும் என்னை
" பிரமிக்கவைக்கிறது "

அப்பாடா..விட்டுப் போன வார்த்தையையும் சேத்தாச்சு.

அதுமட்டுமல்லாது கொத்தனாரின் நுண்ணரசியல் பெரும்பாலானோர்க்கு புரியாது என்று சொல்லும் பினாத்தலாரின் ஆணவத்தைப் பதிவு செய்யவும் இந்தப் பின்னூட்டம்

இகொ, நீங்க சொன்னபடியே பின்னூட்டம் போட்டு விட்டேன்.சரியா இருக்கா?

said...

சங்கரு, இனி உம்மை சங்’குரு’ன்னு கூப்பிட வேண்டியதுதான் போல!

நல்லா இரும்!! :)

said...

இப்பத்தான் பார்த்தேன். கண்டு பிடிச்சது
அரை,
சிவப்பூ குருதி

சாலி
மீண்டும் வருகிறேன்.

said...

13 ருசு

said...

10 பொது புத்தி

said...

வல்லிம்மா

10 13 ரெண்டுமே சரி! மத்தது எல்லாம் இல்லை.

said...

1.விக்கி பசங்க பெயர் காரணம் என்ன?

2.default, flirt, anagram- இதுக்கெல்லாம் தமிழ்ல என்ன?

உடனே அகராதி link கொடுத்துடாதீங்க.
நேத்து கை புடிச்சு ஆ-னா ஆ-வன்னால்லாம் எழுத சொல்லி கொடுத்த மாதிரி, இன்ன பிர விஷயங்களும் சொல்லி கொடுத்தா நானும் சீக்கீரமா biography வேலையை பார்ப்பேன், பொய்யாவாவது உங்களை பத்தி நாலு நல்ல வார்த்தை எழுதுவேன்.

said...

கொத்ஸ்

நன்றாக இருமையா!!

இரவு 1 மணி... 12ம் புதிருக்கு விடை கண்டு பிடிச்சிட்டேன்..

12. வருகிறது.

நாளைக்கு ஆபிஸ் போன மாதிரி தான்.

said...

ஏஸ்,

போய் நிம்மதியாத் தூங்கும்!! :))

said...

11 விடை சரின்னு சொல்லிட்டு அதுக்கு மார்க் போடாததை கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்!!

என்னது மிச்ச ரெண்டா? தெரிஞ்சா சொல்லிட மாட்டேனா..வெயிட்டீஸு :))

said...

என்ன செய்ய கப்பி, கண்ணை மூடிக்கிட்டு மார்க் போட்டா அப்படித்தான் இருக்கு!! :))

said...

இ வ:
4.பதம்.
5.(தடாகத்தை ஏதாவது செய்யணுமா?)
7.எழு
10.பொதுப்புத்தி
11.பலி
12.வருகிறது

மே.கீ
1.முதலெழுத்து
3.போதி?
6.சிவப்பு நிறம்
13.ருசு

said...

இ வ
4 பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8.கவர்ந்திட
10. பொதுப் புத்தி
11. பலி
12. வருகிறது
14. மடம்

மே.கீ

1.முதலெழுத்து
2. சரி பார்த்திடு
3.போக
6.சிகப்புநிறம்
9.திண்பண்டம்
13.ருசு

said...

இ.வ

4 பதம்
5.ஏரிக்கரை
7.எழு
8.கவர்ந்திட
10.பொதுப்புத்தி
11.பலி
12.வருகிறது
14.மடம்

மே.கீ
1.முதலெழுத்து
2.சரிபார்த்திடு
3.போக
6.சிகப்புநிறம்
9.திண்பண்டம்
13.ருசு.

said...

வாங்க அனுஷா,

ரெண்டாவது முயற்சியில் எல்லாம் சரியாப் போட்டுட்டீங்க போல. ஆனா 9 - ஒரு எழுத்துப்பிழை இருக்கு. சரி செஞ்சாத்தான் புல் மார்க்ஸ்! :)

said...

யப்பா அனானி, பேரைச் சொல்லாம பதிலைப் போட்டா எப்படி மார்க் தரது?

அனுஷா செஞ்ச அதே எழுத்துப்பிழை வேற இருக்கு. இதுவும் அனுஷாதானா? இல்லை நீங்களும் 9-ல் இருக்கும் எழுத்துப்பிழையை சரி செஞ்சு போடுங்க.

அனானி1 அப்படின்னு சொல்லறேன். இப்போதைக்கு 13 மார்க்.

said...

பதிவர் திவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

said...

ஒரு வழியா முடிச்சிட்டேன். சரியா இருக்கான்னு சொல்லுஙக.

இ-வ

4) பதம்
5) ஏரிக்கரை
7) ஏழு
8) கவர்ந்திட
10) பொதுப்புத்தி
11) பலி
12) வருதூறல்
14)மடமை

மே-கீ

1) முதலெழுத்து
2) சரி பார்த்திடு
3) போக
6) சிகப்பு நிறம்
9) தின்பண்டம்
13) ருசு

said...

வந்துட்டய்ன்யா வந்துட்டய்ன்..ஊருக்கு போயிருந்தேன். மன்னிக்க.
இதோ விடைகள்:
இ-வ

4. பதம்
5. ஏரிக்கரை
7. எழு
8. கவர்ந்திட
10. பொதுபுத்தி
11 பலி
12. வருகிறது
14. மடம்

மேலிருந்து கீழ்

1. முத எழுத்து
2. சரி பார்த்திடு
3. போக
6. சிகப்பு நிறம்
9. திண்பண்டம்
13.ருசு

said...

வாங்க மகேஷ்

ரொம்ப கஷ்டமா இருந்துதோ?

12, 14 தவிர மற்றவை எல்லாம் சரி.

said...

திவா

இவ எல்லாம் சரி.

மேகீ

1 - என்ன இரண்டு சொற்கள் போட்டு இருக்கீங்க? ஒண்ணாச் செய்யும்.

9 - எழுத்துப்பிழை.

மற்றவை எல்லாம் ஓக்கே.

said...

மேகீ

1 - என்ன இரண்டு சொற்கள் போட்டு இருக்கீங்க? ஒண்ணாச் செய்யும்.

ம்ம்ம்ம்ம்...எல்லாம் என் தலை எழுத்து!
அட, தலை எழுத்து.
இல்லையே, இதுவும் 2 சொற்கள். அட ஒண்ணாக்க சொல்றீரா? அவ்ளோதானே!

முதலெழுத்து.

ரைட்!

9 - எழுத்துப்பிழை.
ஹிஹி
தின்பண்டம்

said...

திவா

இப்போ ரெண்டும் சரி!

குட் ஜாப்!!

said...

இ-வ 14 மடம்

இ-வ 12 பெருதூறல்

12 சரியான்னு தெரியலை. அது கொஞசம் கஷ்டம்தான்

said...

மகேஷ்

14 இப்போ சரியா இருக்கு. ஆனா 12 இன்னும் சரி இல்லை! முயன்று பாருங்கள்! :)

said...

சரிதைக்காக(autobiography-னா சுயசரிதை, அப்போ biography-னா சரிதை தானே), இன்னும் கொஞ்சம் கேள்விகள்.1. ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மின்னரட்டை வரிகள் டைப் செய்வீர்கள்?
2. ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை பதிவுகள் படிப்பீர்கள்?
3. ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை பின்னூட்டங்கள் இடுவீர்கள்?


நான் phone பண்ணினப்போ நீங்க 4 chat, 3 blog, 2 comment-ன்னு busy-ஆ இருந்தீங்களா, அதனால் உங்க வீட்டுக்கு 1 phone போட்டேன். அவங்க சொன்னாங்க, சரிதை எழுதறவங்க எல்லாருமே நடந்ததையே திரட்டி திரிச்சி எழுதறாங்களே, நீங்க கொஞ்சம் வித்தியாசமா எழுதுங்கன்னு. குறிப்பு/உள்தகவலெல்லாம் வேற கொடுத்தாங்க. உங்களை தலை-ன்னு ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் இது கூட செய்யலைன்னா எப்படி? இதோ ஆரம்பிச்சுட்டேன்.

said...

இடமிருந்து வலம்

4. பதம்
7 எழு
11. பலி

**

மேலிருந்து கீழ்

1. முதலெழுத்து
6. சிவப்பு நிறம்

said...

கொத்ஸு என்னப்பா இது

// நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.// ன்னு குடுத்திருக்கிறீங்க.

எந்தக் குறிப்புக் கேள்வியை இங்கே பாப்பி பேஸ்ட் செய்தாலும் பதில் தரவில்லையே:)

A search of dictionary entry words for ........... did not locate any occurrences. என்று மட்டுமே வருகிறதே:)

எப்ப மீது பதில் கண்டுபிடிச்சு எழுதறது.

said...

மதுக்கா,

அகராதி சரியா வேலை செய்யுதே. என்ன எழுத்துரு போடறீங்க? உங்களுக்கு வராத வார்த்தை ரெண்டு குடுங்க. இங்க முயற்சி பண்ணிப் பார்க்கறேன்.

said...

மதுக்கா

4 7 11 1 6 எனப் போட்டது எல்லாமே சரிதான். சீக்கிரமே மத்தது எல்லாமும் போடுங்க.

said...

//4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)
5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)
7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)
8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)
10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)
11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)
12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)
14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை//

இதெல்லாம் ரொம்ப அநியாயம்?! ஒண்ணுமே புரியலை கொத்தனாரே!!!ஏதோ
தூர்தர்ஷன்ல ஜூனுன் பாக்ற மாதிரி இருக்கு உங்க புதிர்.கொஞ்சம் விளக்குங்க அண்ணாச்சி !

said...

வாங்க மிஸஸ் டவுட்.

கொஞ்சம் அப்படியே பின்னாடி போய் கடந்த மூணு மாதங்களா போட்டு இருக்கும் புதிர்களின் விடைகளைப் படிச்சீங்கன்னா ஒரு ஐடியா கிடைக்கும்.

அது மட்டுமில்லாம இந்த பதிவின் கடைசியில் வாஞ்சி அண்ணா எழுதி இருக்கும் ஓர் அறிமுகத்தின் சுட்டியும் இருக்கு.

எல்லாம் பாருங்க. அப்புறமும் புரியலைன்னா ’டவுட்டைக் கிளியர் பண்ணிடலாம்!’ :)

said...

I am new to this blog, Want to know how to type in tamil, or exact tamil font to download. any help.

said...

வாங்க பேம்

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

இங்க போய் அந்த மென்பொருளை டவுண்லோட் பண்ணி நிறுவிக்கிட்டா இருக்கும் கீபோர்ட் வெச்சே தமிழில் எழுத முடியும்.

All the best.

said...

மன்னிக்கவும், ஆர்வ கோளாறுல நான் தான் ரெண்டு தடவ பதில் சொல்லிட்டேன். தின்பண்டம் சரியா?

said...

அனுஷா,

இப்போ போட்ட விடை சரியானதுதான்.

said...

அனுஷா

எல்லா விடைகளையும் போட்டுட்டீங்க போல! வாழ்த்துகள்!

said...

இவ.
4. பதம்
7. ஏழு
10. பொதுப்புத்தி
11. பலி
14. மடம்
மேகீ.
1. முதலெழுத்து
6. சிவப்பு வெள்ளை
9. திண்பண்டம்
13. ருசு

said...

இவ 8: கவர்ந்திட

said...

மேகீ. 3 போக

said...

மே.கீ:
2.சரிபார்த்திடு
இ.வ:
5. ஏரிக்கரை

கொத்ஸ், விடையெல்லாம் சரியா இல்லையான்னு சீக்கிரமா சொல்லுங்க பாஸ்.. :)

said...

4 10 11 14

1 13


முதல் ரவுண்ட் இது மட்டும்தான் தேறிச்சு பீமார்கன்!

said...

பீ மார்கன் 3 8 சரி

said...

பீ மார்கன் 2 5 சரி.