Monday, December 01, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - நவம்பர் 2008

இந்த முறை கொஞ்சம் உற்சாகம் குறைஞ்சு போன மாதிரி ஒரு எண்ணம் எனக்கு. போன மாதம் பங்குபெற்றவர்களை விட இந்த மாதம் பங்குபெற்றவர்கள் எண்ணிக்கை சிறிதளவே குறைந்து இருந்தாலும் எதோ ஒரு உற்சாகம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றியது. பங்குபெற்றவர்கள்தான் நன்றாக இருந்ததா என்பதைச் சொல்ல வேண்டும். போன தடவை பதினாறு பேர் முழுவதும் போட்டாங்க. இந்த முறை 14 பேர்தான். யோசிப்பவர், ஸ்ரீதர் போன்ற புதிர் அபிமானிகள் முடிக்காமல் போனது ஏன் என்று கேட்கவேண்டும். முழுவதும் முடித்தவர்கள் பெயர்கள் கீழே.

 1. பெனாத்தல் சுரேஷ்
 2. நாமக்கல் சிபி
 3. எஸ் பி சுரேஷ்
 4. அரசு
 5. வி ஆர் பாலகிருஷ்ணன்
 6. சகாதேவன்
 7. மஞ்சுளா ராஜாராமன்
 8. பாசமலர்
 9. ச சங்கர்
 10. வடகரை வேலன்
 11. வசுப்ரதா
 12. அனுஷா
 13. திவா
 14. ஏஸ்
அனைவருக்கும் வாழ்த்துகள்! ஒன்றோ இரண்டோ போடமல் விட்டவர்கள் அனேகம். அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்
4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)
பதம் - கால் என்பதற்குப் பாதம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அதில் வரும் காலை உடைத்தால் பதம் வரும். பதம் என்பதற்குப் பக்குவம் என்ற பொருள் இருக்கிறதே.

5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)

ஏரிக்கரை - கொளுத்து என்றால் எரி. அது ஓசை மிகுந்து வந்தால் ஏரி. காகம் கரையும் என்று படித்து இருக்கிறோமே. ஆக காகம் போல் கத்துவது என்றால் கரை. அதற்கு முன் ஏரி. ஆக ஏரிக்கரை.

7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)

எழு - எழுதல் என்றால் கிளம்புதல். ஏழு என்ற எண்ணின் தலையைத் தட்டினால் எழு.

8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)

கவர்ந்திட - கடந்திவர் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை குழப்பிப் போட்டால் கவர்ந்திட என வரும். கவர்ந்திட என்றால் கொள்ளையிட என்பதுதானே பொருள்.

10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)

பொதுப்புத்தி - பொத்தித் துப்பு என்ற சொற்களின் எழுத்துக்களைக் கலைத்தால் பரவலான அறிவு என்ற பொருள்படும் பொதுப்புத்தி என்ற சொல் கிடைக்கும்.

11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)

பலி - பலசாலி என்ற சொல்லின் ஒரு பகுதியான ப மற்றும் லி என்ற எழுத்துக்களை எடுத்தால் காணிக்கை என்ற பொருள்படும் பலி கிடைக்கும்.

12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)

வருகிறது - குறிப்பு குடுக்கவே கொஞ்சம் கஷ்டப்பட்டேன். வருகிறது என்பதற்கு எப்படி பொருள் தருவது எனத் தெரியவில்லை. அதனால்தான் வருகிறது வரட்டும் என்ற சொற்றொடரைத் தந்துவிட்டேன். அதற்கான குறிப்பு சிறகிலா துருவம் என்ற சொற்களில் சிம்லா என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டால் வரும் எழுத்துக்களைக் கொண்டு வருகிறது என விடை தரலாம்.

14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)

மடம் - மடம் என்றால் சத்திரம். அச்சம் மடம் நாணம் என்று சொல்லும் பொழுது பேதமை என்ற பொருள்.


மேலிருந்து கீழ்
1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)
முதலெழுத்து - தமிழுக்கு அகரம் முதலெழுத்து. ஆதி அட்சரம் என்றால் முதல் எழுத்து.

2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)

சரி பார்த்திடு - தவறில்லை என்றால் சரி. நோக்கிடு என்றால் பார்த்திடு. சரி பார்த்திடு என்றால் சோதனை செய்.

3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)

போக - பார் என்று குறிப்பில் இருப்பது விடை குறிப்பினுள் இருப்பதையே குறிக்கிறது. செல்ல என்பதற்குப் போக என்றும் சொல்லலாம் இல்லையா. அது சம்போகத்திற்கு என்ற சொல்லினுள் இருக்கிறது.

6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)

சிகப்பு நிறம் - தோழர்கள் என்றால் கம்யூனிஸ்ட்களைக் குறிக்கும் சொல்லாகவும் கொள்ளலாம். அவர்களின் குறியீடு சிகப்பு நிறம். ரத்தத்தில் சிகப்பு நிறம் கட்டாயம் இருக்கும் அல்லவா. சிவப்பு என்பதும் சரியான சொல்லாக இருந்தாலும் கவர்ந்திட என்ற சொல்லோடு இயைந்து வராது போகும். ஆகவே சிகப்பு நிறம் என்பதே சரியான விடை.

9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)

தின்பண்டம் - எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுத்த விடை இது. மிகப் பலரும் இதனை தின்பண்டம் எனச் சொல்லாமல் திண்பண்டம் என்றே விடை அளித்திருந்தனர். தின்னக்கூடிய பண்டம் தின்பண்டம். கடிக்க முடியாத மைசூர்பாகை வேண்டுமானால் திண்பண்டம் எனச் சொல்லலாம். இத்தனை பேர் இப்படி எழுத்துப்பிழை செய்வது ரொம்பவே வருத்தமான விஷயம்.

உறுதி என்பதற்கு இணையான திடம் என்ற சொல்லின் உள்ளே முன் என்பதின் பாதியான ன் என்ற எழுத்தும் இசைக்கு ஈடாக பண் என்ற சொல்லும் இட்டால் தின்பண்டம் வரும்.

13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)

ருசு - சுருதி என்ற மூன்று எழுத்துக்களில் பெரும்பகுதியான சுரு என்ற இரண்டு எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் அத்தாட்சி என்ற பொருள் கொண்ட ருசு என்ற சொல் வரும்.

புதிர் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் பலரும் சொன்னது எளிதாகவே இருந்தது என்று. அடுத்த முறை இன்னும் கடினமாகச் செய்யப் பார்க்கிறேன்.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!

18 comments:

said...

அடுத்த போட்டிக்கு எதேனும் ஆலோசனை சொல்ல விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

said...

மீ த பர்ஸ்டு (உங்க பின்னூட்டம் கணக்கில வராது)

said...

இதெல்லாம் சரியாச் செய்யுங்க. ஆனா புதிருக்கு மட்டும் பதிலைக் காணும்...

said...

//முடிக்காமல் போனது ஏன் என்று கேட்கவேண்டும்.//

ஐயா,

அதான் சொல்லியிருந்தேனே ஆணி அதிகமாயிடுச்சின்னு. குறுக்கெழுத்து போட உக்காந்தேன்னா எவ்வளவு நேரம் நம்மள உள்ள இழுத்துக்குமோன்னு தயக்கம்தான்.

அடுத்த முறை களத்தில் சீக்கிரமே குதித்து விடுவோம் :-)

said...

ரொம்ப அறிவுப் பூர்வமா இருக்கு பாஸ்

said...

வாத்தியார் வாஞ்சிநாதனே முழுதாக முடிக்காதபொழுது, இந்த மாணவன் முடிக்க வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்? அதனால் தான் சிறகிலா துருவம் - சிம்லா சென்ற பின் வரட்டும் என்று விடை வரும் வரை பேசாமல் இருந்து விட்டேன்!!
;-))

said...

நான் அனைத்து விடைகளையும் சரியாக சொன்னேனே.. என் பெயர் பட்டியலில் இல்லை..

என் பெயரை வேண்டுமென்றே பட்டியலில் இருந்து நீக்கிய, நுண்ணரசியலை கண்டித்து, இனிமேல் வரும் புதிர்களுக்கு விடை அளிக்காமல், வெளிநடப்பு செய்கிறேன்.

said...

ஏஸ்,

இது என் தவறுதான். அந்த ஸ்பெரட்ஷீட்டில் ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு. இப்போ சரி செஞ்சுட்டேன். உங்க பேரையும் இணைச்சாச்சு.

இந்த தவறு என்னுடையதுதான். மன்னிக்கவும்.

உங்கள் பயமுறுத்தல் தமிழக அரசியல்வியாதிகளின் வாக்குறுதிகள் போல அந்த சமயத்தில் சொன்னதே தவிர மத்தபடி நடைமுறைக்கு வராது என்றே நம்புகிறேன்.

said...

///Sridhar Narayanan said...
ஐயா,

அதான் சொல்லியிருந்தேனே ஆணி அதிகமாயிடுச்சின்னு. ///

முழுவதும் போட்டு முடித்தவர்களெல்லாம் வேலையில்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி நுண்ணரசியல் செய்யும் ஸ்ரீதர் அவர்களை கண்டித்து 2 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கிறேன்

said...

//அடுத்த போட்டிக்கு எதேனும் ஆலோசனை சொல்ல விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லவும்//

க்ளூவெல்லாம் கொஞ்சம் ஸ்ரிரியோ ரைப்பாக இருக்கிறதனால் இப்போதெல்லாம் விடை சுலபமாகத் தெரிகிறார் போல் இருக்கிறது.

( விடை யை விரைனு எழுதணுமோ?)

said...

இவ்வளவு பொறுமையா ஆர்வத்தோடு போடறீங்க. கட்டாயம் ஆதரவு கொடுப்போம்.

ஆதரவு கூட்டணின்னா சும்மாவா? இந்தாங்க பிடிங்க:

1. பேதைமை தான் சரின்னு நினைச்சேன் நான், உங்களுக்குப் பிடிச்ச அகராதி (யப்பா, இது சொன்னதுக்கே என்னைப் பாராட்டி கடிதங்கள்:-) யிலயும், பேதைமை தான் பொருள்ல‌ வருது. பேதமை இஸ் 'ஓகே' ஒன்லி.
2. கால் உம் பாதம் உம் ஒன்று எனச் சொல்லுவதை வ'ண்'மையாகக் கண்டிக்கிறோம்!

தொடர்ந்து செய்யுங்க. இதே போல் ஆதரவு கொடுக்க நாங்கள் தயார்!

said...

//அடுத்த போட்டிக்கு எதேனும் ஆலோசனை//

ஏன் தீம்ல போடக்கூடாது? இலக்கியம் (குறிப்பிட்ட கால வகை), வரலாறுனு எவ்வளவோ இருக்கே? பதிவர் நாமாவளி கூட:-)

said...

அடுத்து: நீங்க வ-இ, கீ-மே போடறது இல்லைன்னு கவனிச்சிருக்கேன். வடைக்கு அப்புறம் இட்லி சாப்பிடாதது பற்றி உங்கள் கருத்து என்ன?

said...

மன்னிக்கவும், முந்தய பின்னூட்டத்தில் சிரிப்பான் போட மறந்திட்டேன்.. :)

said...

கொத்ஸ்,

நேரம் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கு?
கிடைத்த நேரத்தில் யோசனை ஓடவில்லை. அடுத்த புதிருக்கு
முழு முயற்சியும் ஆதரவும் நல்கப்படும் என்று இப்போதே சொல்லிக்கொள்ளுகிறேன்.:)

said...

பாஸ்,

ரெண்டு தான் பிரச்சனையே.

1.காலு பாதம் சரியா எனக்கு செட் ஆகல. நீங்க 1 கரெக்ட்ன்னு எழுதும்போது எல்லாம் ரைட் வாங்கினவங்களுக்கு மெயில் அடிச்சிரலாமான்னு கை குறு குறுன்னுச்சி. (ம்ம்ம்...நல்லவன் பாஸ் நானு...)


2. சிம்லா மேட்டர்...வருவது... ம்ம்... வந்ததும்... அது இதுன்னு என்ன என்னவோ போட்டாலும் ஒண்ணும் செட் ஆகல பாஸ்.

நீஙக வேற ஃபுல்லா முடிச்சவங்க பேர மட்டும்தான்(அது செரி.....) போட்டு பாராட்ட போறீங்க. மானம் போவானேன். அதான் அப்பிடயே படிக்காத மாதிரி எஸ்....கேப் ஆய்டலாம்ன்னு... ஆனா நீங்க வேற "இந்த முறை கொஞ்சம் உற்சாகம் குறைஞ்சு போன மாதிரி ஒரு எண்ணம் எனக்கு" அப்பிடின்னு சொல்லிட்டிங்களா.. மனசு கேக்கல...(அகென் செட்..நல்லவன் பாஸ் நானு...செரி...செரி...). இனிமே தப்போ ரைட்டோ டாண் டாண்ணு சொல்லிடறேன். அப்புறம் உங்க பாடு...ஹா..ஹா ஹா.

said...

அதானே! எங்க இதே மாதிரி ஒரு புதிரை போட்டு இந்த மாசத்தையும் ஓட்டிடுவீங்களோ?ன்னு பாத்தேன். :p

said...

அடிக்கடி வந்து பாத்து, 'சீய் இந்த பழம் புளிக்கும்' என ஓடி போன என்னை மாதிரி ஆட்களுக்கு ஏன் நன்றி சொல்லவில்லை? :))