Monday, December 15, 2008

புதசெவி - 12/15/2008

எழுதறது சுத்தமா நின்னு போச்சு. மாசத்துக்கு ஒரு குறுக்கெழுத்துப் போட்டுட்டு பேசாமப் போகலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா உலக நடப்புகள் நம்மை அப்படிச் சும்மா இருக்க விடுதா? எதையாவது செஞ்சு இப்படி புதசெவி பதிவு போட விட்டுடறாங்க. எஞ்சாய்!!

செய்தி 1
நம்ம காரை யாராவது தீ வெச்சுக் கொளுத்தினா நாம போலீஸ் கிட்ட போவோம். நிறையா பணம் இருக்கறவங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை எடுப்பாங்க. இவங்களும் கார்கள் இரண்டு முறை எரிக்கப்பட்டவுடன் இப்படி தனியார் பாதுகாவலர்களை வெச்சுக்கலாமான்னு யோசிக்கறாங்க. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் இவங்கன்னு நான் இங்க சொல்வது போலீஸ். தனியார் பாதுகாப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு! எகொஇச!! இங்க போய் பாருங்க.

பஞ்ச்: இதிலென்ன சுவாரஸ்யத்தைக் கண்டீங்க? நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாதுகாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா? சரி, அந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துல யாராச்சும் திருடிட்டா எங்க போயி புகார் கொடுப்பாங்க?

செய்தி 2
சினிமாவில் பல முறை பார்த்த காட்சி. பொம்மைத் துப்பாக்கியை எடுத்துவிட்டு நிஜ துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். யாராவது அதை எடுத்து சுட்டுக் கொண்டு சாவார்கள். அது சினிமாவில் சரி. ஆனால் நாடகத்தில் நடந்தால்? அப்படி நடந்து போச்சே! அட்டைக் கத்திக்குப் பதில் நிஜக் கத்தியை வெச்சு ஒரு நடிகரை மருத்துவமனைக்கே அனுப்பிட்டாங்கய்யா!! இங்க படியுங்க.

பஞ்ச்: இதுவும் நம்ம ஊருக்கு ஓல்டு நியூஸ். மருத்துவமனைக்கு மட்டும்தான் அவங்க அனுப்பினாங்க.. நாம கோட்டைக்கே அனுப்பினோம்! ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..

செய்தி 3
மும்பை தாக்குதல் மாதிரி நியூயார்க் நகரில் நடக்கக்கூடாது, அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1000 போலீசருக்கு தானியங்கி துப்பாக்கிகள் இயக்கக் கற்றுத் தருகிறார்களாம். நல்ல விஷயம்தான். ஆனால் பயிற்சி வெறும் மூன்று நாட்களுக்குத்தானாம். அது மட்டுமில்லாமல் தற்பொழுது பணியில் இருப்பவர்களுக்குத் தராமல் இப்பொழுது பயிற்சிக் கல்லூரியில் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சியாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஒரே இடத்தில் இருக்கிறார்களாம். பயிற்சி தருவது எளிதாம். பணியில் இருப்பவர்கள் வேலை நிமித்தம் பல இடங்களில் இருப்பதால் அவர்களுக்குப் பயிற்சி தருவது கஷ்டமாம். இங்க படியுங்க.

பஞ்ச்: என்ன நீங்க? எல்லாம் எங்களுக்கு பழக்கப்பட்ட நியூஸாவே கொடுக்கறீங்க? வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல? அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைலே உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க? இவங்களையே மறுபடியும் கூப்பிடுவாங்களா?

செய்தி 4
ஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டது நமக்கு எல்லாம் நல்லாத் தெரியும். வேறு பலர் என்னென்ன ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னா கிசுகிசு. இவங்களும் அது மாதிரிதான் ஆப்புரேஷன் செஞ்சுக்கறாங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் இவங்களுக்கு ஆப்புரேஷன் உயிர் போனதுக்குப் பின்னாடி. ஆமாம், இறந்த பின் காட்சிக்கு வைக்கப்படும் பொழுது சிக்கென தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக இறந்த உடன் அழகு சிகிச்சை செய்யச் சொல்லி உயில் எழுதி வைக்கிறார்களாம். இங்க படியுங்க.

பஞ்ச்: ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில நெக்ரோபிலிக்குங்களுக்கும் அங்கீகாரம் கிடச்சா? அப்ப இறந்தபிறகும் அழகா இருக்கவேண்டியது அவசியமாப் போயிடும் இல்லையா?

செய்தி 5

உலகில் பலவிதமான நோய்கள் இருக்கிறது. சிலது உடல்நிலை சார்ந்தது சில மனநிலை சார்ந்தவை. இவற்றில் சில மரணத்தில் கொண்டு போய் விடுகிறது. குடிப்பழக்கம் கூட இப்படித்தான். அளவுக்கதிகமாக குடித்தால் மரணம் நிச்சயம்தான். என்னடா இப்படி தெரிஞ்ச மேட்டரைச் சொல்லறானேன்னு பார்க்கறீங்களா? இவர் கதையைப் படியுங்க. இவரும் குடிப்பழக்கத்தால்தான் இறந்தார். ஒரே ஒரு வித்தியாசம். இவர் அளவுக்கதிகமாகக் குடித்தது வெறும் தண்ணி. இங்க படியுங்க.

பஞ்ச்: தண்ணியில போதை இல்லையா? விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு? (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை? வெறும் தண்ணியக் குடிச்சாலும் சாவு வருது.. எனவே க்ளோஸ் த மேட்டர், ஓப்பன் த குவார்ட்டர்!

செய்தி 6
நம்ம ஊர் மேட்டரே சொல்லலையேன்னு வருத்தப்படறவங்களுக்காக இது. பதின்ம வயதில் தலையாய பிரச்சனை என்னன்னு கேட்ட முகத்தில் பரு வருவதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க கல்யாணமான பெண் ஒருவருக்கு அது எவ்வளவு பிரச்சனையா இருக்கு பாருங்க. கல்யாணம் முடித்துத் தேன்நிலவு சென்ற இடத்தில் இவர் முகத்தில் பரு பிரச்சனை வந்ததாம். திரும்பி வந்த கணவன் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் எனச் சொல்லி மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாராம். முதலில் இந்த வழக்கு சென்ற குடும்ப நல நீதிமன்றம் "repulsive condition of the wife is undoubtedly tragic for the wife but this is traumatic for the spouse" என்றும் இந்நோய் இருப்பதை சொல்லாமல் மறைத்தது தவறே என்றும் தீர்ப்பு அளித்ததாம். நல்ல வேளையா உயர்நீதி மன்றம் இந்த மாதிரி தீர்ப்பில் சொன்னதை நீக்க வேண்டும் எனச் சொல்லி தீர்ப்பு அளித்ததாம். இங்க படியுங்க.

பஞ்ச்: ஆமாமாம்.மறைக்கிறது பெரிய பிரச்சினைதான். ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு! பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி!

16 comments:

said...

பஞ்ச் அண்ணா பேசினதுல சிலது புரியவே இல்லை. அவங்க காலத்து அரசியலைப் பத்திப் பேசிட்டாரு போல!! :))

said...

உள்ளேன்.....

said...

ரீச்சர், புதிருக்குத்தான் உள்ளேன் போட்டுட்டு அப்படியே போனீங்க. இதுக்குமா?

இப்படி எல்லாம் செஞ்சா அடுத்த புதசெவி நியூசி ஸ்பெஷல்தான்.

said...

கடவுளுக்கே போலீஸ் பாதுக்காப்பு கொடுப்பது நாமதானே. இதிலயும் நம்மள அடிச்சுக்க முடியாது.

தண்ணினாலே பிரச்சினைதாம் போல

said...

நானும் ரெண்டுவாட்டி படிச்சுப் பாத்திட்டேன்... போலிஸ் ஆபிசருக்கு பாதுகாப்புன்னு சொல்லியிருக்காங்களே தவிர - ‘தனியார்’ செக்யூரிட்டின்னு சொல்லவே இல்லையே... ம்ம்ம்... நமக்குதான் புரியலப் போல

//ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..//

இது என்னாது புதுக் கதை?

//ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில //

திடீர்னு பஞ்ச் அண்ணா ‘கோணலா’ ஏதோ எழுதறா மாதிரி இருக்கே? ஓரின திருமணத்திற்குன்னு திருத்திப் படிக்கனுமோ?

//பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி! //

அடேங்கப்பா... ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குற மாதிரி ஒரு ‘பரு’ மேட்டரை ‘பலே’ மேட்டரா மாத்திட்டாரேப்பா.

said...

//ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு! பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி! //

பிம்பிள் மேட்டரு சிம்பிள் மேட்டரு இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன். ஆனா அதை கொண்டு போய் எதோட சேர்ப்பது. இந்தியாவில் இல்லைங்க தெனாவட்டுல இது எல்லாம் பேசுறீங்க. வேணாம் வீண் வம்பு சொல்லிப்புட்டேன்....

said...

பஞ்ச் அண்ணா ஹாலிடே மூட்ல இருக்காரு போல, கிறிஸ்த்மஸ் கேக் மாதிரி பஞ்ச் குடுத்து இருக்காரு. :))

said...

பஞ்ச் எழுதாம லஞ்சுக்குப் போயிட்டாரு; மண்டபத்தில எழுதிக் கொடுத்தாங்களா? ஸ்ரீதர் நாராயணன், நாகை சிவா இவர்களையும் வழிமொழிகிறேன்.


//கடவுளுக்கே போலீஸ் பாதுக்காப்பு கொடுப்பது நாமதானே.// இது பஞ்ச்!

பிம்பிள் மேட்டருக்குக் கொடுத்த ஒப்பீடு, பருவையும் மலையும் (மலைகளிடை எழும் கதிரையும்) இணைக்கிறது! இதற்கெல்லாம் மயங்காதவர்கள் நாங்கள்!!

said...

ஆறிலும் சாவு நூறிலும் சாவு இது பழமொழி. தண்ணி அடிச்சாலும் சாவு குடிச்சாலும் சாவு என்பது புதுமொழி போல!

said...

செய்தியும் பஞ்சும் அருமை.
அது என்ன புதசெவி?
தெரிஞ்சுக்க ஆசை அதனாலே கேட்டேன்

said...

//கடவுளுக்கே போலீஸ் பாதுக்காப்பு கொடுப்பது நாமதானே. இதிலயும் நம்மள அடிச்சுக்க முடியாது.//

எனக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வேணும் அப்படின்னு அவரும் கேஸ் போடாம இருந்தா சரி. என்ன சொல்லறீங்க...

//தண்ணினாலே பிரச்சினைதாம் போல//

விவேக் ஒரு படத்தில் சொல்வது மாதிரி எனக்குத் தண்ணியில்தாண்டா கண்டம் அப்படின்னு எல்லாருமே சொல்ல வேண்டியதுதான்.

said...

//நானும் ரெண்டுவாட்டி படிச்சுப் பாத்திட்டேன்... போலிஸ் ஆபிசருக்கு பாதுகாப்புன்னு சொல்லியிருக்காங்களே தவிர - ‘தனியார்’ செக்யூரிட்டின்னு சொல்லவே இல்லையே... ம்ம்ம்... நமக்குதான் புரியலப் போல//

இதப் பாருங்க. வந்தோமா படிச்சோமான்னு இருக்கணும். இப்படி தப்பு எல்லாம் கண்டு பிடிச்சா எனக்கு ரெண்டு வழி இருக்கு.

1) கேள்வி கேட்க நீ யாரு அப்படின்னு மிரட்டுவேன்
2) இவன் நான் கொத்தனார் என்றுதானே கேள்வி கேட்கிறான். இதுவே ஸ்னாப்ஜட்ஜா இருந்தா கேட்பானா இட்லிவடையா இருந்தாக் கேட்பானா?இந்த சமூக அவலத்தைக் கேட்க ஆளே இல்லையான்னு ஒப்பாரி வைப்பேன்

இப்படி எல்லாம் செய்ய வெச்சுடாதீங்க.

//இது என்னாது புதுக் கதை? //
சொன்னேனே. இது எல்லாம் அவர் காலத்துக் கதை போல.

//திடீர்னு பஞ்ச் அண்ணா ‘கோணலா’ ஏதோ எழுதறா மாதிரி இருக்கே? ஓரின திருமணத்திற்குன்னு திருத்திப் படிக்கனுமோ?//

குட் கொஸ்டின். பஞ்ச் அண்ணா வந்தே பதில் சொல்லட்டும். ஆனா, இதெல்லாம் உம்ம கண்ணுக்கு எப்படி சரியா மாட்டுது? ரொம்ப சட்டி கதை குட்டிக் கதை எல்லாம் படிக்காதேன்னா கேட்டாதானே.


//அடேங்கப்பா... ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குற மாதிரி ஒரு ‘பரு’ மேட்டரை ‘பலே’ மேட்டரா மாத்திட்டாரேப்பா.//

பஞ்ச் எங்க அண்ணாவாம்
அண்ணா என்றால் சும்மாவா?

:))

said...

//பிம்பிள் மேட்டரு சிம்பிள் மேட்டரு இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன். ஆனா அதை கொண்டு போய் எதோட சேர்ப்பது. இந்தியாவில் இல்லைங்க தெனாவட்டுல இது எல்லாம் பேசுறீங்க. வேணாம் வீண் வம்பு சொல்லிப்புட்டேன்....//

பஞ்ச் அண்ணா யாரு எங்க இருக்காருன்னு உனக்குத் தெரியுமா? இந்தியாவில் இல்லையா? ஒரு தனிமடலில் மேட்டரைச் சொல்லுப்பா.

என்னது நான் எழுதினேனா? யோவ் என் அட்ரஸ் எல்லாம் நிறையா பேருக்குத் தெரியும் ஆட்டோ லாரின்னு வந்திடப் போகுது. அதெல்லாம் நான் எழுதினது இல்லைய்யா.

said...

//பஞ்ச் அண்ணா ஹாலிடே மூட்ல இருக்காரு போல, கிறிஸ்த்மஸ் கேக் மாதிரி பஞ்ச் குடுத்து இருக்காரு. :))//

இப்போ என்ன சொல்ல வர? நல்லா இருக்குன்னு சொல்லறியா? இல்லை வேற மாதிரியா? ஒரு வரி எழுதி மண்டை காய விடறாங்கப்பா!

said...

:))

said...

//ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு! பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி! //

பிம்பிள் மேட்டரு சிம்பிள் மேட்டரு இல்லங்குறதை நான் ஒத்துக்குறேன். ஆனா அதை கொண்டு போய் எதோட சேர்ப்பது. இந்தியாவில் இல்லைங்க தெனாவட்டுல இது எல்லாம் பேசுறீங்க. வேணாம் வீண் வம்பு சொல்லிப்புட்டேன்....//

நான் இதை ரீப்பிட்டுற்றேன்... ;)