Friday, September 04, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - செப்டெம்பர் 2009

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
  • இந்த வார திண்ணை இதழிலும் இந்தப் புதிர் வெளிவந்துள்ளது.

புதிரின் இணையாசிரியர் பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.

இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


குறுக்கு

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5)
6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4)
7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4)
8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)
13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6)
14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4)
15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4)
16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5)

நெடுக்கு

1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5)
2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5)
4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4)
5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4)
9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3)
10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3)
11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3)
12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)
13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

79 comments:

said...

ஆவலோடு எதிர்பார்த்திருந்தவங்க ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்!!

said...

ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :))

said...

மீ த அட்டெண்டென்ஸ் போட்டுக்கிடறேன் பதில்களோட வாரேன் :)

said...

இந்த மாதிரி போட்டியெல்லாம் வைத்தா...
“அழுதிடுவேன்” .
குறிப்பெல்லாம் ஒரே மயக்கமாக இருக்கு.

said...

மயில் அனுப்பி இருக்கேன்

said...

குறுக்கு

3. அசராமல்
6. சிறுவாணி
7. கடிதம்
8. திகம்பரம்
13. நம்மாழ்வார்
14. தகதக
15. சுற்றம்
16. அம்மம்மா

நெடுக்கு

1. பசித்திரு
2. ஆவாரம்பூ
4. சங்கம்
5. மருதம்
9. ரதம்
10. பாழ் நெற்றி
11. ஊர் வம்பு
12. சகடம்
13. நகரம்

:))))))))))))))))))))))))

said...

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5) - அசராமல்
6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4) - சிறுவாணி
7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4) - கடிதம்
8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6) - திகம்பரம்
13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6) - நம்மாழ்வார்
14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4) - தகதக
15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4) - சுற்றம்
16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5) - அம்மம்மா

நெடுக்கு

1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5) - பசித்திரு
2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5) - ஆவாரம்
4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4) - சங்கம்
5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4) - மருதம்
9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3) - ரதம்
10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3) - பாழ் நெற்றி
11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3) - ஊர் வம்பு
12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)- சகடம்
13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4) - நகரம்

said...

குறுக்கு

6. சிறுவாணி
8. திகம்பரம்
14. தகதக
16. அம்மம்மா
13. நம்மாழ்வார்
15. சுற்றம்

நெடுக்கு

1. பசித்திரு (?)
2. ஆவாரம்பூ
4. சங்கம்
12. பேகடம் (?)
13. நகரம்
9. ரதம்
10. பாழ்நெற்றி
11. ஊர்வம்பு

மிச்சம் இரவு வந்து போடுகிறேன் :)

said...

குறுக்கு

6. சிறுவாணி
8. திகம்பரம்
14. தகதக
16. அம்மம்மா
13. நம்மாழ்வார்
15. சுற்றம்

நெடுக்கு

1. பசித்திரு (?)
2. ஆவாரம்பூ
4. சங்கம்
12. பேகடம் (?)
13. நகரம்
9. ரதம்
10. பாழ்நெற்றி
11. ஊர்வம்பு

மிச்சம் இரவு வந்து போடுகிறேன் :)

said...

குறுக்கு
6.சிறுவாணி
7.கடிதம்
13.நம்மாழ்வார்
14.தகதக
15.சுற்றம்
16.அம்மம்மா

நெடுக்கு

1.பசித்திரு
4.சங்கம்
5.மருதம்
9.ரதம்
10.பாழ் நெற்று
11. ஊர் வம்பு
12.சகடம்
13.நகரம்

said...

8.திகம்பரம்

இன்னும் ரெண்டு தான் இருக்கு

said...

குறுக்கு

3. அசராமல்

said...

நெடுக்கு
2.ஆவாரம்பூ

said...

போட்டாச்சு போட்டாச்சு

குறுக்கு
3. அசராமல் - இதுல ‘ராம நாமம்’ல நாமத்துக்கும் எதுவும் significance தெரியலயே?

நெடுக்கு
12. சகடம் - உருண்டு போற கடம்ன உடனே தோன்றிய விடைதான். ஆனா கூடவே ‘நான் வாசிச்ச’ அப்படின்னு எக்ஸ்ட்ராவா இருக்கேன்னு குழம்பிட்டேன். விகடம் (வாசிச்ச - புத்தகம்), பேகடா ராகத்தை வச்சு ஏதாவது துப்போன்னு குழம்பிட்டே இருந்தேன். அப்புறம்தான் ’வாசிச் சகடம்’ அப்படின்னு பிரிக்கனும்னு தெரிஞ்சது. இதுல எதுக்கு ‘நான்’?

5. மருதம் - இந்திரனின் நிலம்னா டக்குன்னு வந்திருக்கும் :) நாடுன்னாலெ சொர்க்கம், இந்திரபுரி இப்படித்தான் தோணிட்டே இருந்தது :)


7. கடிதம் - அடிக்கடி - ரசிச்சேன். தம்பியை அழைப்பது ‘தம்’ஆயிடுமா?

நல்லதொரு புதிருக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து போட்டுகிட்டு வாங்க.

said...

குறுக்கு

7. கடி தம், லெட்டர், கடுதாசின்னு \ இல்லை கடிதமே வெச்சிக்கலாம்!

said...

குறுக்கு

14 தகதக

said...

குறுக்கு

3 - அசராமல்
6 - சிறுவாணி
7 - கடிதம்
8 - திகம்பரம்
13 - நம்மாழ்வார்
14 - தகதக
15 - சுற்றம்
16 - அம்மம்மா

நெடுக்கு

1 - பசித்திரு
2 - ஆவாரம்பூ
4 - சங்கம்
5 -மருதம்
9 - ரதம்
10 - பாழ் நெற்றி
11 - ஊர் வம்பு
12 - சகடம்
13 - நகரம்

said...

வணக்கம் இலவசம்.

இந்த மாத விடைகள்

குறுக்கு

3-அசராமல்
6-சிறுவாணி
7-கடிதம்
8-திகம்பரம்
13-நம்மாழ்வார்
14-தகதக
15-சுற்றம்
16-அம்மாம்மா

நெடுக்கு

1-பசித்திரு
2-ஆவாரம்பூ
4-சங்கம்
5-மருதம்
9-ரதம்
10-பாழ் நெற்றி
11-ஊர் வம்பு
12-சகடம்
13-நகரம்

-அரசு

said...

வாஞ்சி

விடைகள் அனைத்தும் சரியே. சில குறிப்புகள் பற்றிய தங்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். விடைகளை வெளியிட்ட பின் குழுமத்தில் இதனைப் பற்றி விவாதித்தீர்களானால் மகிழ்வேன்.

said...

சௌமியா அருண்,

3 போடவில்லை
1 ஒரு சிறிய மாற்றம் தேவை. மற்றவை அனைத்தும் சரியே.

said...

கீதாம்மா

ஏகப்பட்ட மெயில்கள்!! சூப்பர்!!

கடைசியா போட்டதை எடுத்துக்கிட்டு பதில் சொல்லறேன்.

6கு, 1நெ, 5நெ - தவறான விடை
2நெ போடவில்லை

மற்றவை அனைத்தும் சரியான விடைகளே!!

11 நீங்கள் தப்பா போட்டு இருக்கவே முடியாது!! இல்லையா? :))

said...

ஆனந்த்

3கு, 12நெ தவிர அனைத்தும் சரியான விடைகளே!

said...

வீ. ஆர். பாலகிருஷ்ணன்

அனைத்து விடைகளும் சரியே. வாழ்த்துகள்!!

said...

ஹரிஹரன்ஸ்

அனைத்து விடைகளும் சரியே!! வாழ்த்துகள்!!

said...

வசுப்ரதா

3கு தவிர மற்ற விடைகள் அனைத்தும் சரி.

said...

ஜி3

ஒரே அட்டெம்ப்டில் பாஸாயிட்டீங்க!!

எல்லாமே சரி!!

வாழ்த்துகள்!

said...

ஆயில்ஸ்

2நெ - ஒரு எழுத்தை விட்டுட்டீங்க. ஆனா அது எழுத்துப்பிழை எனத் தெரிந்ததால் முழு மார்க்!!

நீங்களும் முதல் அட்டெம்ப்டில் செண்டம்!

வாழ்த்துகள்!!

said...

ஸ்ரீதர்

முக்கா முக்கா மூணுவாட்டி போட்டு எல்லாம் சரியான விடையா சொல்லிட்டீங்க.

வாழ்த்துகள்!!

விமர்சனங்களுக்குப் பதில் அப்பால!

said...

சின்ன அம்மணி

நாலு அட்டெம்ப்ட், ஆல் ஓக்கே!!

குட் ஜாப்!! :))

said...

நக்கல் சிபி. ச்சீ நாமக்கல் சிபி

7 14 ரெண்டுமே சரி.

நீங்க போடணும் என்பதற்காக 7 14 21 28ம்ன்னு ஏழாம் உலகமா புதிரை மாத்த முடியுமா?

மத்தது எல்லாமும் போடுங்க சாமி!

said...

ஈரோடு நாகராஜ்

ஆல் ஓக்கே!! :))

said...

அரசு

எல்லாம் சரியா இருக்கு!! வாழ்த்துகள்!!

said...

//இந்த மாதிரி போட்டியெல்லாம் வைத்தா...
“அழுதிடுவேன்” .
குறிப்பெல்லாம் ஒரே மயக்கமாக இருக்கு.//

குமார்

மாசா மாசம் இதையே சொன்னா எப்படி? விடைகள் வரும் பதிவைப் பாருங்க. எப்படி குறிப்பை பிரிச்சு விடையை எடுக்கணும்ன்னு புரியும்.

இல்லை உங்க ஊரில் இருக்கும் ராம் பயலைப் பிடிச்சு ரெண்டு பியர் வாங்கிக் குடுங்க. அக்கு அக்கா எடுத்துக் குடுப்பான்! :))

இத்தனைக்கும் இந்த மாசம் ஈசியா இருக்குன்னு கம்பிளைண்ட்!!

அடுத்த மாசம் இப்படி ரெம்பிளேற் பின்னூட்டம் போடக் கூடாது. என்ன! :)

said...

//G3 said...

ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :))//

அக்கா

ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு சொல்லி முடிச்சுட்டீங்களே!! :))

said...

//மீ த அட்டெண்டென்ஸ் போட்டுக்கிடறேன் பதில்களோட வாரேன் :)//

ஆயில்ஸ்

அடுத்து நீரே ஒரு புதிர் போடலாமே!! :))

said...

//மயில் அனுப்பி இருக்கேன்//

மத்த ரெண்டையும் போடுங்க சாமி!!

said...

ஆனந்த்

12 ஓக்கே!!

இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு!! முதல் குறிப்பையே போடலைன்னா எப்படி?! :)

said...

ஆனந்த்

குட் ஜாப்! ஆல் ஓக்கே!!

said...

குறு:- 3.??ச?ம? (தெரியவில்லை)6.சிறுவாணி 7.க?த? (what is this ?)8.திகம்பரம் 13.நம்மாழ்வார்(எப்படி ?)14தகதக 15,சுற்றம் 16.அம்மம்மா

நெடு :-1.பசித்திரு (பரு என்றால் எடையா?)ஆவாரம்பூ 4.சங்கம் 5.மருதம்(?) 9.ரதம் 10.பாழ் நெற்றி11.ஊர் வம்பு 12.சகடம் 13.நகரம்

போன மாத விடைகளை 19.தேதிக்கு எழுதினேன். 2.தவறுகள் உங்களிடமிருந்து கமெண்ட் எதுவும் வரவில்லை :(

அன்புடன் R.நாராயணன்

said...

குறுக்கு.
6.சிறுவாணி
7.கடிதம்
8.திகம்பரம்
13.நம்மாழ்வார்
14.தகதக
15.சுற்றம்
16.அம்மம்மா

நெடுக்கு.

2.ஆவாரம்பூ
4.சங்கம்
5.மருதம்
9.ரதம்
10.பாழ்நெற்றி
11.ஊர் வம்பு
12.சகடம்
13.நகரம்

ஆணி அடிக்கறது முடிஞ்சதும் மீதி இருப்பதை அனுப்ப முயற்சிக்கிறேன்.

said...

நெடுக்கு

1. பசித்திரு.

குறுக்கு.

3.clue கொஞ்சம் மாத்தியிருக்கலாம்.
பிடிபடவில்லை.

said...

நாராயணன்,

சென்ற புதிரில் உங்களுக்கு விடையளிக்கவில்லையா? மன்னிக்கவும்.

6 8 13 14 15 16
1 2 4 5 9 10 11 12 13

இவை சரியான விடைகள்.

said...

வாங்க பெருசு

6 7 8 13 14 15 16
2 4 5 9 10 11 12 13

எனப் போட்ட வரை அனைத்தும் சரியே!

said...

ithu varaikkum kandu pidichathu

2.aavaramapoo
4.sangam
5.marutham
6.saraavathi
7.kaditham
8.thigambaram
9.ratham
10.paazhnetri
11.oorvambu
13.nagaram
14.thagathaga
15.sutram

correcta?

innum puriyala..
1,3,12,16

said...

வெகு நல்ல, சுறு சுறு புதிர். நன்றி கொத்ஸ்.

விடைகள் குறுக்காக
5 யோசித்தால் வரும்,
6, சிறுவாணி
7,கடிதம்
8 திகம்பரம்
13 நம்மாழ்வார்
15 சுற்றம்
16 அம்மம்மா


நெடுக்காக
1 பசித்திரு
2, ஆவாரம்பூ
4,சங்கம்,
5 மருதம்
10 பாழ் நெற்றி
11 ஊர்வம்பு
12, சகடம்
13 நகரம்.

said...

பெருசு

1 ஓக்கே

3 - உமக்குப் பிடிபடலைன்னு குறிப்பை மாத்தச் சொல்லறது எல்லாம் இமா!!

(இமா = இரண்டாம் மாடி = டூ மச்சு!!)

said...

Mgnithi

ஒரு சின்ன விண்ணப்பம். அடுத்த முறை இந்த மாதிரி கலந்து கட்டி அடிக்காம குறுக்கு நெடுக்கு எனப் பிரிச்சு விடை தந்தால் சரி பார்க்க எளிதாக இருக்கும்.

http://software.nhm.in/products/writer - இந்த தளத்தில் இருந்து தமிழில் எழுத மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளலாம்.

2 4 5 7 8 9 10 11 13 14 15

சரியான விடைகள்!!

நன்றி!!

said...

வாங்க வல்லிம்மா!!

சூப்பராப் போடறீங்க. அப்படியே உங்க ப்ரெண்டி எங்க ரீச்சருக்கும் சொல்லிக் குடுத்து உள்ள இழுத்து விடுங்க!! :))

6 7 8 13 15 16
1 2 4 5 10 11 12 13

சரியான விடைகள்!! :))

said...

குறுக்கெழுத்து.
இ.வலம்
1
6 சிறுவாணி
7 கடிதம்
8 திகம்பரம்
13 நம்மாழ்வார்
14 தகதக
15 சுற்றம்
16 அம்மம்மா
மே.கீழ்
1 பசித்திரு
2 ஆவாரம்பூ
4 சங்கம்
5 மருதம்
9 ரதம்
10 பாழ்நெற்றி
11 ஊர்வம்பு
12 சகடம்
13 நகரம்

சகாதேவன்

said...

குறுக்கு

3.
6. சிறுவாணி
7. கத்தல்
8. திகம்பரம்
13. நம்மாழ்வார்
14. தகதக
15. உற்றம்
16. அம்மம்மா

நெடுக்கு

1. பசித்திரு
2. ஆவாரம்பூ
4. சங்கம்
5. மருதம்
9. பாரிம்?
10. பாழ் நெற்றி
11. ஊர் வம்பு
12. சகடம்
13. நகரம்

- சிமுலேஷன்

said...

குறுக்கு

3 அசராமல்(5)
6 சிறுவாணி (4)
7 கடிதம்(4)
8 திகம்பரம்(6)
13 நம்மாழ்வார் (6)
14 தகதக (4)
15 சுற்றம்(4)
16 அம்மம்மா (5)

நெடுக்கு

1 பசித்திரு (5)
2 ஆவாரம்பூ(5)
4 சங்கம் (4)
5 மருதம் (4)
9 ரதம் (3)
10 பாழ் நெற்றி (2,3)
11 ஊர் வம்பு (2,3)
12 சகடம் (4)
13 நகரம்(4)

said...

3.அசராமல்
6.----
7.கடிதம்
8.திகம்பரம்
13.நம்மாழ்வார்
14.தகதக
15.சுற்றம்
16.அம்மம்மா
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1.பசித்திரு
2.மகிழம்பூ
4.சங்கம்
5.மருதம்
9.ரதம்
10.பாழ் நெற்றி
11.ஊர் வம்பு
12.சகடம்
13.நகரம்

said...

கீதாம்மா

5 /6 - ரெண்டுமே தப்பு!!

said...

வணக்கம் ஸ்ரீதேவி!

விடைகளுக்கு நன்றி.

அனைத்துமே சரி.

அடுத்த முறை குறுக்கு நெடுக்கு என விடைகளைப் பிரித்துத் தந்தால் எளிதாக இருக்கும்.

நன்றி

said...

சகாதேவன்

6 7 8 13 14 15 16
1 2 4 5 9 10 11 12 13

சரியான விடைகள்!

said...

வாங்க சிமுலேஷன்!!

ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து!!

3 8 13 14 16
1 2 4 5 10 11 12 13

இவை சரியான விடைகள்!!

said...

வாங்க மணியன்

வழக்கம் போல அனைத்தும் சரியான விடைகள்தான்!! :))

said...

வாய்யா சங்கரு!!

3 7 8 13 14 15 16
1 4 5 9 10 11 12 13

2 - உம்ம விடை வந்த விதத்தைச் சொல்லும். அது தவறான விடை!

6 - எளிதுதானே! ஏன் போடலை?! :)

said...

விடை கண்டு பிடிச்சதுல உணர்ச்சி வசப்பட்டு அப்படியே கமெண்ட் போட்டுட்டேன்
அடுத்த முறை நீங்க சொன்ன மாதிரி விடை அனுப்பறேன்.

இந்த தடவை மன்னிச்சிகோங்க தல..

மீதி விடை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்

said...

//8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம்//

இதுக்கான விளக்கத்தை எதிர்பார்த்து இருக்கிறேன். பரம்பொருள் தொடங்கன்னதும் பரம்னு ஆரம்பிச்ச வார்த்தைக்கு நான் குழம்பினேன். :)

said...

From india... Mobile browser. Sorry for thamlnglish.

said...

Kurukku 3.Asaraamal 6.Siruvaani 7.Kaditham 8.Thigambaram 13.Nammaazvaar 14.Thagathaga 15.Sutrram 16.Ammamma

said...

Nedukku 1.Pasithtìru 2.Aavaarampoo 4.Sangam 5.Marutham 9.Radham 10.Paaznetri 11. Ur vampu 12.Vaaganam 13.Nagaram

said...

குறுக்கு

6 சிறுவாவி
7 கடிதம்
8 திகம்பரம்
13 நம்மாழ்வார்
14 தகதக
15 சுற்றம்
16 அம்மம்மா

நெடுக்கு


2 ஆவாரம்பூ
4 சங்கம்
5 மருதம்
9 முல்லை
10 பாழ்நெற்றி
11 ஊர் வம்பு
12 சகடம்
13 நகரம்

said...

வணக்கம் கொத்தனாரே...

ரொம்ப நாளா புதிர் போடாம நீங்க இருந்த்தால.. இந்த பக்கம் வர முடியல...

புதிர் அருமை.
கொஞ்சம் முயற்சித்தால்..எல்லாமே சுலபம்...

இப்படிக்கு
சதிஸ்
விடைகள் கீழே....


குறுக்கு:
1. அசராமல்
6. சிறுவாணி
7. கடிதம்
8. திகம்பரம்
13. நம்மாழ்வார்
14. தகதக
15. சுற்றம்
16. அம்மம்மா

நெடுக்கு:
1. பசித்திரு
2. ஆவாரம்பூ
4. சங்கம்
5. மருதம்
9. ரதம்
10. பாழ் நெற்றி
11. ஊர் வம்பு
12. சகடம்
13. நகரம்

said...

திரு கொத்ஸ் அவர்களே. வணக்கம். நான் உங்களை அறிவேன். நன்றாகவே.
(இட்லி - வடை- சட்னி - சாம்பார் connection.) :-D

இன்றுதான் முதல் முறையாக உங்களின் குறுக்கெழுத்து போட்டியில் பங்கு பெறுகிறேன். முதலில் என் பாராட்டுகள் உங்களுக்கும், பெனாத்தலாருக்கும். அருமையாக செய்துள்ளீர்கள். இதில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி.

என்னுடைய பதில்கள், இதோ.

***தெரியவில்லை***, சிறுவாணி, கடிதம், திகம்பரம், நம்மாழ்வார், தகதக, சுற்றம், ***தெரியவில்லை***

பசித்திரு, ஆவாரம்பூ, சங்கம், மருதம், ரதம், பாழ் நெற்றி, ஊர் வம்பு, டக டக, நகரம்

said...

//மீதி விடை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்//

வெயிட்டிங்! :)

said...

வாங்க தமிழ்ப்பிரியன்

தங்கிலிஷா இருந்தா என்ன, சரியா இருக்கான்னு பார்த்திடலாம்.

இந்தியா பயணம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு? :)

said...

தமிழ்ப்பிரியன்

3 6 7 8 13 14 15 16
1 2 4 5 9 10 11 13

சரியான விடைகள்

12 மட்டும் தப்புங்க!

said...

வாங்க திவா

7 8 13 14 15 16
2 4 5 10 11 12 13

சரியான விடைகள்.

said...

வாங்க சதிஸ்

எல்லா விடைகளுமே சரியானவை!!

வாழ்த்துகள்!

said...

வாங்க மானஸ்தன்

சரவணபவன் / ரத்னா கபேன்னு எங்கேயாவது பார்த்திருக்கோமோ?

அடுத்த முறை கொஞ்சம் விடைகளை குறிப்பு எண்களோடு போட்டால் நலம்.

6 7 8 11 12 13
12 தவிர மற்ற நெடுக்கு விடைகள் ஓக்கே!

said...

கீதாம்மா

2 5 6 மூணுமே சரி! :)

said...

I guess, 'm very late.lucky you dint post the answers yet.
puzzle was interesting, but a bit easy. :-)

குறுக்கு
-------

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5)
- அசராமல்
6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4)
- சிறுவாணி
7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4)
- கடிதம்
8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)
- திகம்பரம்
13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6)
- நம்மாழ்வார்
14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4)
- தகதக
15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4)
- சுற்றம்
16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5)
- அம்மம்மா

நெடுக்கு

1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5)
- பசித்திரு
2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5)
- ஆவாரம்பூ
4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4)
- சங்கம்
5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4)
- மருதம்
9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3)
- ரதம்
10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3)
- பாழ் நெற்றி
11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3)
- ஊர் வம்பு
12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)
- சகடம்
13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4)
- நகரம்

said...

7. கடிதம்
I just got the above one only. I'll try to improve gradually :-))

said...

குறுக்கு:
6. சிருவானி, 7. கடிதம், 8. திகம்பரம், 13. நம்மாழ்வார், 14. தகதக (?), 15. சுற்றம், 16. பாட்டிம்மா (?)

நெடுக்கு:
1. பசித்திரு, 2. ஆவாரம்பூ, 4. சங்கம், 5. மருதம், 9. ரதம், 10. பாழ் நெற்றி, 11. ஊர் வம்பு, 13. நகரம்.

said...

வாங்க பூங்கோதை.

வழக்கம் போல் எல்லாமே சரியான விடைகள்தான்!!

வாழ்த்துகள்!!

said...

ரவிசுகா

இங்க போட்டு இருக்கும் விடை சரிதான். மத்தது எல்லாமும் முயற்சி செய்யுங்க. எளிதாகப் போடமுடியும்.

said...

டாக்டர் விஜய்,

6 7 8 13 14 15
1 2 4 5 9 10 11 13

சரியான விடைகள்!! எழுத்துப்பிழைக்கு மதிப்பெண் குறைக்கவில்லை!! :))