செப்டம்பர் 28, 2009 தேதியிட்ட குங்குமம் இதழில் எனது கதை வெளியாகி இருக்கிறது. முதன் முதலாக அச்சில் வந்திருக்கும் கதை என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெளியிட்டதற்கும், அதனை இங்கு போட அனுமதி தந்ததற்கும் அவ்விதழுக்கு நன்றி.
மறக்காம நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போடுங்கப்பூ!! :)
Ulai
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
எம்பெட் செய்த கதை சரியாத் தெரியலைன்னா சொல்லுங்க.
நல்லா இருக்கு ஆனா கடைசியில நிறைய சோகம்!
வில்லியத்தோட //ஏப்ரலில் பிறந்ததற்கு பிப்ரவரி மார்ச்சில் பிறந்திருந்தால் நிறைய நாட்கள் விளையாடியிருக்கமுடியும்!//
ஸேம் பீலிங்க்ஸ் :)))
வாழ்த்துக்கள் !
//நல்லா இருக்கு//
ரொம்ப நல்லாவே இருக்கு
நல்லா இருக்கு.
(ஆனா இனிமே தான் படிக்கணும்ங்கறதை நானும் சொல்லலை. நீங்களும் சொல்லாதீங்க). :-)
வாழ்த்துக்கள் இ.கொ.
//மறக்காம நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போடுங்கப்பூ!! :)//
கதை சுமாரா இருந்தாலும் நல்லா இருக்குன்னுதான் கமெண்ட் போடனுமா?!
கதை நல்லா இருக்குது :-)
இப்ப படிச்சிட்டேன்.
நல்லா இருக்கு. :-)
ஆனா உலை வெடிக்கிறது தவிர மத்ததெல்லாம் ஏற்கனவே படிச்சா மாதிரியே இருக்கு.
வாழ்த்துகள் சார் :)
இதுவே நான் முதலாக படித்த first person narrative-வில் எழுதப்பட்ட தமிழ் கதை.
நன்றாக இருந்தது.
ஒரு சின்ன குறை: மூல பாத்திரங்களின் பெயர்கள்தான் (மேரி தவிர) ரஷிய / யுக்ரைனிய பெயர்களைப்போல் இல்லை.
கதை சுமாரா இருந்தாலும் நல்லா இருக்குன்னுதான் கமெண்ட் போடனுமா?!
:))))
வாழ்த்துகள்!!!
நல்லா இருந்துச்சு. கடைசி வரிகள்ல ஒரு அதிர்ச்சியான திருப்பம் கொடுக்கணுங்கறதுதான் உங்க திட்டம்னா வெற்றிதான்.
இப்ப நோண்டி நுங்கு :
அடுத்த லெவலுக்கு எடுத்து போகறதுக்கு சில க்ளூஸ் அங்கங்கே தூவியிருக்கலாம் - ரஷ்ய பொம்மை, அந்த காலகட்டதில் இருந்த விளையாட்டு மைதானம் பெயர், பூங்கா பெயர் அப்படி எதாவது க்ளு தெளித்திருக்கலாம். எப்ரல் மாதம், மின்சாரத்துக்கு பஞ்சமில்லாத ஊர், வோட்கா என்று சில க்ளுக்கள் இருந்தாலும் 'வேலையை காப்பாற்ற ஓட்டம்’, ’நிலைமை சரியில்லை’ங்கறது எல்லாம் கம்யூனிச 1986 நாட்கள்ல இல்லையே? அது கொஞ்சம் கன்பூஸ் செய்துடுச்சு. அங்க அப்ப சோசியல் இன்சூரன்ஸ் இருந்ததே?
டாக்டர் சொன்னது போல ரஷ்ய பெயர்களும் இருந்திருக்கலாம்.
ஆனா ஓவியர் விவரமானவர், நீங்க கொடுக்காதா க்ளுக்களை ஓவியத்தில் உலை படம் போட்டு சொட்டு வாங்கிட்டார்! :)
நுண்ணரசியல்:
’அடுத்தவர் செய்யவேண்டும் என்பதெல்லாம் தானும் செய்ய வேண்டும்’ - ரஷ்யாவின் கம்யூனிசம் தளர்ந்து மிக்கேல் முக்கி முனங்கியது எதனால் என்பதற்கு இது ஒரு சாட்சி!
-டைனோ
ரொம்ப நல்லா இருக்கு
//
மறக்காம நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போடுங்கப்பூ!!
//
கண்டிப்பா போடுறேன்.. ரெம்ப நல்லா இருக்கு
எழுத்தாளர் கொத்ஸ்க்கு வாழ்த்துகள்...கலக்குறீர் அய்யா...
தொடர்ந்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள்!!!
நல்ல தொடக்கம். தொடரவும். வாழ்த்துக்கள்!
’மறக்காம நல்லா இருக்குது’
:)
//எழுத்தாளர் கொத்ஸ்க்கு வாழ்த்துகள்...கலக்குறீர் அய்யா...//
ரிப்பீட்டே :)
தொடர்ந்து போட்டு தாக்குங்க தல.
கதை நல்லாருக்குங்கோ. கதையின் நாயகன் சரி செய்யாமல் விட்ட அந்த பழுதின் காரணமாகத் தான் உலை வெடித்ததுன்னும் சொல்ல வந்திருக்கீங்களா? எனக்கு அப்படியும் தோனுது...
:)
எழுத்தாளர் இலவசக் கொத்தனாருக்கு வாழ்த்துக்கள்! :)
சரி, குங்குமத்தில் பின்னூட்ட கயமைத்தனம் எல்லாம் பண்ண முடியும்-ல்ல? அத கேட்டுக்கிட்டுத் தானே கதையைக் கொடுத்தீக? :))
அச்சு இதழ்-ல எப்படி பின்னூட்டம் போடறது-ன்னு நீ தான்யா சொல்லிக் கொடுத்து புரட்சி செய்யணும் மவராசனா! :))
கதை சூப்பர் கொத்ஸ்! முடிவில் கொத்ஸ் ஸ்டைல் திருப்பம்! நல்லாத் தான் இருக்கு! நடு நடு-ல வர்ணனை-ல தான் கொஞ்சம் லாஜிக் மிஸ்ஸிங்! அப்போ ஒன்னும் பொருளாதாரப் பின்னடைவு, வேலை இழப்பு எல்லாம் இல்லீயே! கட்டாயமா எல்லாரும் கலாஷ்னிகோவ் பயிற்சி பெற்றாங்களே! :)
உங்க கதைக்கு குங்குமம் போட்ட படம் சூப்பரு!
உங்க கதைக்குத் திலகம்/குங்குமம் வச்சா மாதிரி இருக்கு!
and...
வழமை போல கொத்ஸ் கதைகளில் அவரு தான் கதை சொல்லுவாரு!
கதா பாத்திரங்கள் ஒன்னோடு ஒன்னு பேசிக்காது! லவ்வும் பண்ணாது! :))
"உலை" என்ற தலைப்பும் நல்ல இருக்கு கொத்ஸ்!
பல பேருக்கு உலை வைத்த உலை! பின்னாளில் பலதுக்கும் உலை வைத்த உலை!
சரி...குங்குமம் சர்க்குலேஷன், உங்க கதைக்கு அப்புறம், பின்னூட்டக் கணக்கு போலவே எகிறுச்சா-ன்னு கேட்டுச் சொல்லுங்க! :)
வாழ்த்துக்கள்.
கதையில் ஒரு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது “எனக்கு”.
//எம்பெட் செய்த கதை சரியாத் தெரியலைன்னா சொல்லுங்க.//
ஆமுங்க! எப்படி படிக்கறதுன்னு தெரிலிங்கோவ்!
congrats and wishes
your story and -டைனோ comment are good...
வாழ்த்துக்கள் கொத்ஸ்!!! இன்னும் வளரட்டும் உங்கள் எழுத்து பணி...
வாழ்த்துகள் கொத்ஸ்! நவராத்திரி மும்முரத்தில் இப்போதுதான் படிக்கமுடிந்தது. எல்லா ’முதல் ’களுமே மறக்கமுடியாதவைதானே! உலை யும் அந்த வகையில் பதமாய் இருக்கிறது.
மேலும் அதிகம் இதுபோல கதைகள் வருவதற்கு அக்காவின் ஆசிகளும் வாழ்த்துகளும்!
அன்புள்ள இ.கொ.
கதை மிக நன்றாக இருக்கிறது.கதாபாத்திரங்கள் அவரவர் உணர்ச்சிகளை நன்றாகச் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் சப்பென்று முடிந்துவிட்டது போலிருக்கிறது.
நாராயணன்
கபாலி ஜோக்கை விட ஹலோபதி டாக்டர் ஜோக் சூப்பர்.!!!!
சுஜாதாவின் விமான விபத்து பற்றி ஒரு கதை வருமே...அதன்பெயர் என்ன...விமானத்தின் பெயர்தான் கதையின் பெயரும்....ச்சே...பெயர் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது....அந்தக் கதையின் பாதிப்பா..(ஆ....ஞாபகம் வந்து விட்டது...கனிஷ்கா விமான விபத்து பற்றிய கதை)
ஆஹா..... 'உலை' கொதிச்சா அரிசியைக் களைஞ்சு போடவேண்டாமா?
ரொம்பவே நல்லா இருக்கு.
( படிச்சுட்டு அப்புறமா வாரேன்)
நல்வாழ்த்து(க்)கள்.
ரஷ்யாக்காரியா இருந்தாலும் பொம்னாட்டி தங்க நகைன்னுதான்......
கணவன் & மனைவி கதாப் பாத்திரங்கள்
சிந்திப்பது உலகுக்கெல்லாம் பொதுவான முறையில்.......
மனுசன் மனுசந்தான் எங்கிருந்தாலும், இல்லே?
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ராஜேஷ். அச்சில் வருவது என்பது பெரிய விஷயம் தான்; பாராட்டுகள்.
ரங்கா.
அனைத்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் அருமை வாத்தியாரே!
ம்ம்ம்ம்ம்ம்??? கதையிலே என்னமோ குறையுதே??? என்னனு புரியலை! என்றாலும் கொஞ்சமாவது ரஷிய நகரச் சூழ்நிலைக்குப் பொருந்தும் வண்ணமாய் இருந்திருக்கலாமோ??? ஏதோ நம்ம ஊரு மேரி கதை மாதிரி இருக்கு!
என்றாலும் முதல் முயற்சிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும். தொடர்ந்து முயன்றால் வெற்றி அடைவீர்கள். தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். :(
மறக்காம நல்லா இருக்கு
SMS ஜோக்குகள் கதையை அற்புதம் என சொல்ல வைத்து விட்டது.
:-)
-அரசு
இன்னாபா! வூட்டுல தங்கமணி தங்க நகை கேட்டாங்கன்னா அவுங்களை கிலியேத்தறதுக்காக எழுதின கதை மாதிரி இருக்கே நைனா!
கதை நல்லா இருக்கு.
இலவசக்கொத்தனார் அப்படீங்குறது வித்தியாசமான பேரா இருக்கேன்னு வெச்சுக்கிட்டிரு..அந்தப் பேர்ல கூட எழுத்தாளர்களெல்லாம் இருக்காங்க பாத்தீரா :)
வாழ்த்துக்கள் தல
நிறைய எழுதி பேரும் புகழும் வாங்குங்க. நாங்களும் உங்களைத் தெரியும் அப்படீன்னு பெருமையா நாலு பேர்கிட்ட சொல்லி காலரை தூக்கி விட்டுக்குறோம்
///நாமக்கல் சிபி said...
அனைத்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் அருமை வாத்தியாரே!
////
உம்ம கதைக்கு வந்த விமர்சனப் பின்னூட்டத்திலேயே ஹை லைட் மேற்கண்ட பின்னூட்டம் தான் :)
நல்லா இருக்கு! :)
வாழ்த்துக்கள்!!
உங்கள் உலை என்னும் சிறுகதையைப்படித்தேன். நிகழ்கால் தமிழ் கதைகளைப்போல் உண்மைச் சம்பவம் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
நான் 1994-ல் செர்னோபில் சென்றிருந்தேன் - auxiliary power supply DG sets ,நான் வேலை பார்த்து வந்த கம்பெனி க்கு வாங்கு வதற்காக. மின் நிலையம் வெடித்ததனால் அவற்றை உபயோக ப்படுத்தியிருக்கவில்லை. மின் நிலையத்தின் மற்றப்பகுதிகள் பாழடைந்து புறாக்களின்
இருப்பிடமாகக்காட்சியளித்தது. டாக்சியில் செல்லும்போது போலீஸ் check-post களில் மதுபானம் லஞ்சம் கொடுத்தால் கேள்வி கேட்காமல்
பாதை திறக்கும் !
அந்த சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று வாசகர்களுக்கு உங்கள் சிறுகதை கோடிட்டு காட்டியுள்ளது
சுருக்கமாக சொன்னால் முதல் கதை- முழுமையான கதை.
மேலும் நிறைய எழுதுங்கள் .
வாழ்த்துக்களுடன்,
வசுப்ரதா
(மெயில் மூலம் வந்த கருத்து)
Excellent story writing, keep it up!
வாழ்த்துக்கள் கொத்ஸ் !
பினாத்தல் சார் ,
கதை அருமையாய் இருந்தது. இப்போது தான் உங்கள் தளத்தின் லின்க் கிடைக்கப்பெற்றேன்.குறுக்கெழுத்து புதிர்களும் அபாரம்,
இனி தொடர்கிறேன்
Post a Comment