இன்று சச்சின் பிறந்த நாள். எத்தனையோ பேர் அவருக்கு வாழ்த்து சொல்லி இருப்பார்கள். எல்லா சமூகத் தளங்களிலும் இது பற்றிய செய்திகள் வந்தபடியே இருக்கும். இதுவரை பார்த்ததில் ட்விட்டரில் @dagalti எழுதிய இந்த வெண்பா வாழ்த்து என்னைக் கவர்ந்தது.
என்னயோகம் செய்தமோ உங்களாட்டங் கண்டிட
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
அதிலும் இந்த இன்னுமோர் நூற்றாண் டிரும் என்ற ஈற்றடி எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா என பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டை ஞாபகத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. இந்த ஈற்றடியைக் கொண்டு பத்து வெண்பா எழுதினால் சச்சினதிகாரம் கிடைக்குமே எனத் தோன்றி உடனே எழுதத் தொடங்கினேன்.
அண்ணன் வழிகாட்டி அற்புதமாய் ஆடுகிறீர்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
ரன்கள் குவிப்பதில் ராட்சதன் நீரய்யா
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
பண்ணவே வேண்டும் பலவேலை பாரினிலே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
மன்னவர் நீர்தானே மற்றவர் சொல்லுவர்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
மண்ணிலே உம்போல மாந்தர் வெகுசிலரே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
என்போல் மகிழ்ந்தோரும் ஏராளம் இங்கிருக்க
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
கண்ணனைப் போலவே கைப்பிள்ளை என்றும்நீர்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
என்னப்பன் உம்மையிங்கு ஏற்றியே வைத்திடுவான்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
விண்ணவர் வாழ்வில் விளக்கேற்றி வைப்பாரே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
சின்னவன் என்சொல் சிறப்பாக ஆகுமோ
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
நாம எல்லாம் என்னிக்குத் தனியாவர்த்தனம் பண்ணி இருக்கோம். வழக்கம் போலப் பெனாத்தலாரை ஆட்டத்திற்கு அழைக்க அவர் பங்கிற்குப் போட்டது
சின்னவர்கள் சிந்தனைக்கு அப்பாலும் சாதனைகள்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
உன்னைக் கடிந்து உயரத்தைப் பார்ப்போர்க்காய்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
மின்னல் கவர்ட்ரைவ் மிச்சம் இருக்கிறதே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
எண்ணற்ற சாதனைகள் இருந்தும் போதலையே
இன்னுமோர் நூற்றாண் டிரும்#Sachin
ஒன்பதும் ஒன்றுமாய் நிறுத்திட மனம்வருமா
இன்னுமோர் நூற்றாண் டிரும் #sachin
வெண்பா வாத்தி ஜீவ்ஸ் எழுதியது
அன்புடை மக்கள் அருகிருந்து வாழ்த்திட
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
சொக்கன் எழுதியது
சின்னஞ் சிறுவன்தான் சச்சின்நீ எப்போதும்
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
கண்ணன் குறும்புகள்போல் கிரிக்கெட்டில் நீதானே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
எண்ணற்ற உயரங்கள் எட்டித் தொட்டவனே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
அன்பான பெருங்கூட்டம் ஆதரவாய் உன்பின்னே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
பண்பாடி வாழ்த்துதுபார் பாரதமே நீஇங்கு
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
'என்னாமா ஆடுறான்பார்' என்றுபலர் வாழ்த்திடநீ
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
என்வாழ்வின் பலநாளை இனிப்பாக்கித் தந்தவனே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
சன்ஒன்றே மூன்ஒன்றே சச்சினும் அப்படியே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
என்னதவம் செய்தோமோ இந்தியனாய் உனைப்பெற
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
மண்மேலே நீவந்த மங்கலநாள் இன்று
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
இன்னும் ஒரு ட்விட்டர் நண்பரான @nattanu
டென்னிண்டு டென் டெண்டுல்கர் டெவிலே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
அன்னிக்கி போலவே இன்னிக்கும் ஆடுறீரே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
ஷேன்வார்னு மெக்குராத்து ஷோயபுக்கு எம்டனே
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin
0 comments:
Post a Comment