Thursday, July 24, 2014

கவிதைகளும் கட்டுடைத்தல்களும்!

நமக்கும் புதுக்கவிதைகளுக்குமான உறவு தொடர்ந்து படித்து வரும் வாசக நண்பர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றே. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கண்ணில் பட்டுத் தொலைத்துவிடுகிறது என்பதே தற்'போதை'ய சோகம். அப்படி மாட்டிய ஒன்றுதான் நண்பர் சுரேஷ் (எழுத்தாளர் ராம் சுரேஷ் இல்லை, நண்பன் பெனாத்தல் சுரேஷ் இல்லை, இவர் வேற) எழுதிய கவிதை ஒன்று. படித்த பின் சும்மா இருக்க முடியாமல் அதனைக் கட்டுடைத்து படித்ததற்கான பிராயச்சித்தத்தைத் தேடிக் கொண்டேன். கவிதையை வெளியிட்ட பதாகை இதழுக்கே எழுதியதை அனுப்பினேன். அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இதைப் பகடி என வகைப்'படுத்தி'யது பெருஞ்சோகம். 

எழுதியதில் இருந்து ஒரு சின்ன சேம்பிள் 

இனி இந்தக் கவிதை.

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது

காத்திரமான ஆரம்பம். இரண்டு வரிகளில் பூகம்பம். மனிதக்குரங்கு கதவை திறக்கிறது என்பதை அகக்கண்ணால் பார்க்கிற பொழுது தோன்றும் புன்னகை, மனிதனைத்தான் குரங்கெனச் சொல்கிறார் எனப் புரிய வரும் பொழுது ஏற்படும் கோபம், கேவலம் வயிற்றுப்பிழைப்பிற்காக குரங்காட்டியிடம் பணியும் குரங்கினைப் போல தொப்பி அணியச் சொன்னால் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கு உழைக்கும் வர்க்கத் தோழரின் இயலாமை கண்டு ஆதங்கம், தொப்பி அணிய வேண்டி இருந்தால் அணிய வேண்டியதுதானே, விழுமியங்கள் என நமக்கு நாமே போட்டு கொண்டிருக்கும் விலங்குகளை உடைத்து கதவுகளைத் திறந்து விட்ட அந்த பெயர் தெரியாத தோழரின் ஜென் நிலை கண்ட பரவசம் என பல அடுக்குகளில் பல வித தரிசனங்களைத் தரும் வரிகள். மனிதக்குரங்கு என எழுதாமல் மனித குரங்கு என எழுதி நாம் நினைப்பதற்கு மாறாக தோழரின் வாழ்வில் வலி இல்லை என்ற குறியீடு இவ்வரிகளின் சிறப்பம்சம்.
இந்த கட்டுடைப்பு முழுவதும் இங்கே இருக்கிறது. வாசித்து யான் பெற்ற இன்பத்தில் ஒரு சிறு பகுதியைப் பெற்று மகிழவும்.


1 comments:

said...

கவிதையில் "மனித குரங்கு" என்று இருக்கிறதே, 'க்' ஐக் காணோமே என்று குறை சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்களே ஏதோ விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள் (ஒன்னியும் புரியல).

> கட்டாயத்தில் இருக்கு உழைக்கும்
இருக்கும்

> வயிற்றுப்பிழைப்பிற்காக
வயிற்றுப்பிழைப்புக்காக