கிரேசி. இந்தச்சொல்லை தன் அடையாளமாகவே எடுத்துக்கொண்டவர் கிரேசி மோகன் (Crazy Mohan).
உண்மையிலேயே ஒரு பன்முக ஆளுமை. நாடகம், திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி நடித்தது எல்லாரும் அறிந்தது . அழகாக படம் வரைவார் என்பதும் கூட இன்னும் சிலருக்குத் தெரிந்திருக்கும். மரபுக் கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர்.
நான் எழுதிய வெண்பாக்களை அவரிடம் இராமு அண்ணா கொண்டு சேர்க்க, கிரேசியின் நட்பு கிட்டியது. எழுதி அனுப்பும் வெண்பாக்களை ரசிப்பார், விமர்சனம் செய்வார், மேலும் எழுத ஊக்குவிப்பார். பெரும்பாலும் பதிலும் வெண்பாவாகவே வரும்.
விளையாட்டாக, ஆங்கிலம் கலந்தோ, தற்காலப் பேச்சுத் தமிழ் கலந்தோ, சென்னைத் தமிழ் போன்ற வட்டார வழக்குகள் கலந்தோ வெடித்துத் தெறிக்கும் பாக்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். எல்லா வித வார்த்தை விளையாட்டுகளையும் வெண்பாவில் கூடக் கொண்டு வந்துவிடுவார். நாம் செய்தாலும் மிகவும் ரசிப்பார்.
இன்று (அக் 16) அவர் பிறந்த நாள்.
பன்மொழிச் சொற்களில் பன்செய்யும் வித்தகர்ஒன்லியெம் க்ரேசியவர் ஒன்டர்புல் மன்சன்ப்பாவேரியஸ் வேக்களில் வேர்ட்ப்ளேயே செய்தவரும்சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு.
Photo: @premdavinci in twitter
0 comments:
Post a Comment