Saturday, October 28, 2006

விக்கி பசங்க நாங்க....

புதுசா ஒரு வலைப்பூ ஒண்ணு மலர்ந்திருக்கு. அதுதான் இந்த விக்கி பசங்க. நீங்க பாத்தீங்களா? பாத்த சிலவங்க மனசுல ஓடுன கேள்விகளை இங்க போட்டு இருக்கேன் பாருங்க.

என்னடா இந்த பசங்க கொத்துன பரோட்டாவையே மேல மேல கொத்தியிருக்காங்க. அடுத்து வந்த பாஸ்டாவும் பழசுதான். என்ன மேட்டர் தெரியலையே. ஒரு வேளை சமையற் குறிப்பு போடத்தான் இந்த வலைப்பதிவா? ஆனா அடுத்து வந்த ஆரஞ்சு ஜூஸ் மேட்டரில் ஆளைக் கவுத்துட்டாங்களே. என்ன இது என சிலர்.

என்னடா இந்த பசங்க. ஒருத்தன் தொந்தரவே தாங்க முடியலையே. நாலஞ்சு பேர் வேற சேர்ந்துக்கிட்டாங்க. என்ன அக்குறும்பு பண்ணப் போறாங்களோ தெரியலையேன்னு இன்னும் சில பேர்.

அடடா, இவனுங்க ஆளுக்கு ஓண்ணு ரெண்டு வலைப்பூக்களை வெச்சிக்கிட்டு பி.க. பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இப்ப இந்த வலைப்பூ வந்தாலும் வந்தது. தமிழ்மண முகப்பு பூரா வைரஸ் மாதிரி இவனுங்க பேர்தான் தெரியுது, இது என்ன மேட்டர்? இதுக்கு எதாவது போலீஸ்கார் தயார் பண்ணி அனுப்பலாமா என மேலும் சிலர்.

என்னமோ திட்டத்தோடத்தான் வந்திருக்காங்க. ஆனா விஷயம் என்னான்னு பிடிபடலையேன்னு சில பேர்.அதுல சில பேருக்கு விஷயம் பிடிபடாமலேயே, இந்த கூட்டணி நல்ல ஸ்ட்ராங்கா தெரியுதே, நாமளும் சேர்ந்துக்கலாமான்னு ஒரு யோசனை.

போட்ட மூணு பதிவும் பழைய மேட்டர். மீள்பதிவுக்கு தனியா ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சிட்டானுங்களா? இல்லை இது இந்த பதிவை தமிழ்மணத்தில் சேர்ப்பதற்காக செய்த கட் பேஸ்ட் வேலையா? ஒண்ணுமே புரியலையே அப்படின்னு மண்டையை உடைச்சிக்கற சில பேர்.

இந்த வாலிபர்கள் சேர்ந்ததுனால பசங்கன்னு பேரு சரி. அது என்ன முன்னால விக்கி அப்படின்னு ஒரு பேரு அப்படின்னு யோசிக்கிறவங்க ஒரு பக்கம். என்னதான் நடக்குது பார்த்திடலாமுன்னு ஒரு முடிவோட அடிக்கடி வந்து ஆஜர் குடுத்துட்டு போற நண்பர்கள் குழாம் ஒண்ணு.

இவங்க எல்லாருக்கும் நான் சொல்லப் போற பதில் ஒண்ணுதான். விஷயம் இருக்கு. உங்களுக்கு கட்டாயம் சொல்லத்தான் போறோம். என்ன இன்னும் ஒரு நாள், ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. திங்கள்கிழமை விக்கிப்பையன் உங்களுக்கு எல்லாம் ஒரு சேதி தருவான். அதனால அன்னிக்கு அங்க வந்து என்னான்னு கேட்டுக்கிட்டு போங்க.

அதுவரைக்கும் சும்மா இருக்க வேண்டாம். இருக்கற மூணு பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருங்க. என்ன? :-D

ராமநாதன் வலைப்பூவில் இது சம்பந்தப்பட்ட பதிவு இது.

28 comments:

said...

இந்த பதிவை போடும் போது பிளாக்கரில் சரிவர பப்ளிஷ் ஆகாமல் "
001 java.net.ConnectException: Connection refusedblog/31/38/3/elavasam/rss.xml " என்ற செய்தி வந்தது. எனது வலைப்பூவில் இந்த பதிவு வரவே இல்லை.

கூகிளாண்டவரை வேண்டியதில் பதிவு ஆர்க்கைவ்ஸில் இருக்கும் போய் பார் என ஆணை வர அங்கு சென்றால் பதிவு இருந்தது. இது என்ன பிரச்சனை? வேறு யாருக்கேனும் வந்திருக்கிறதா? சரி செய்ய ஏதேனும் வழியுண்டா?

said...

எனக்கு தெரியுதே.. அதுசரி.. எல்லாரும் நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?.. நான் மட்டும்தான் கொடுக்கிறேன்னு நெனச்சேன்..(சரி நீங்களும் வந்து என்ன சர்ப்ரைஸ்னு பாருங்க.. பாட்ஷா ஸ்டைல்ல படிங்க.. 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு...')

கண்டிப்பா 'விக்கி பசங்க' என்ன பண்றாங்கன்னு பார்த்தா போச்சு..
நான் எப்பவும் உங்க பதிவுக்கு வர்றப்ப, அதுக்குள்ளயும் 40 கமெண்ட்ஸ் ஓடியிருக்கும்.. இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டனே..

said...

வாங்க கணேசனாரே,

பொதுவா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நம்மாளுங்க ரொம்ப வர மாட்டாங்க. அதான் நான் வாரயிறுதியில் பதிவுகள்போடுவதில்லை. இது ஒரு விதி விலக்குதான்.

//'எனக்கு இன்னொரு பேரு இருக்கு...'//

என்ன மேட்டர்? யாருக்காவது மெடிக்கல் காலேஜ் சீட் வாங்கிக்குடுத்தீங்களா? :-D

said...

//இந்த பதிவை போடும் போது பிளாக்கரில் சரிவர பப்ளிஷ் ஆகாமல் "
001 java.net.ConnectException: Connection refusedblog/31/38/3/elavasam/rss.xml " என்ற செய்தி வந்தது. எனது வலைப்பூவில் இந்த பதிவு வரவே இல்லை.

கூகிளாண்டவரை வேண்டியதில் பதிவு ஆர்க்கைவ்ஸில் இருக்கும் போய் பார் என ஆணை வர அங்கு சென்றால் பதிவு இருந்தது. இது என்ன பிரச்சனை? வேறு யாருக்கேனும் வந்திருக்கிறதா? சரி செய்ய ஏதேனும் வழியுண்டா?//

எனக்கும் நேற்றும் (இன்றும்) இதே தொல்லை தான். அதற்கு நான் செய்தது. dashboard-> ur blog-> settings-> formatting. there change number of post tobe displayed in the home page of ur blog. reduce as much as possible. இம்முறை உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.

பதிவுகளை வாசித்து விட்டு பதிவு தொடர்பான பின்னூட்டமிடுகிறேன். :)

said...

நன்றி லொடுக்கு. உங்கள் ஆலோசனையை முயற்சித்துப் பார்க்கிறேன்.

said...

சரி விக்கி தொலைங்க

said...

சரி விக்கி தொலைங்க

said...

வாங்க கால்கரியாரே,

விக்கின வாய்க்கு ஒரு ஜிகர்தண்டா கிடையாதா? :D
(இன்னும் புதரகம்தானா? பாக்கறது எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியறது போயி இப்போ போடுற பின்னூட்டமும் ரெண்டு ரெண்டா ஆகிற அளவு போயாச்சா?)

said...

கொத்துஸ், ஒவரா சீன் போடுறீங்களே.... சரி ஆனது ஆச்சு இன்னும் ஒரு நாள் தானே. வெயிட் அண்ட் சீ

said...

அதானே. ஆனா, அது வரை என்ன செய்யணமுன்னு தெரியுமில்ல. :)

said...

சஸ்பென்ஸ் என்ன "க்" எடுத்துட்டு "ஸ்"
போடபோறிங்களா கொத்ஸ்?

said...

சஸ்பென்ஸ் என்ன "க்" எடுத்துட்டு "ஸ்"
போடபோறிங்களா கொத்ஸ்?

said...

நாளைலேருந்து ஒரு குரூப்பா விக்க போறீங்க. தண்ணியெல்லாம் ரெடியா எடுத்து வச்சிக்கிட்டீங்க இல்ல?
:)

வாழ்த்துகள்.

said...

கொத்ஸ்,
நீங்க சொன்னதெல்லாம் இல்லாம எனக்கு வேற ஒண்ணு தோணிச்சு.. கோவிச்சிக்கக் கூடாது...

இப்படி பரோட்டாவையும் ஆரஞ்சு சூஸையும் அங்கிட்டு கொத்தினா, இனிமே கொத்தனார் இலவசத்துல என்ன தான் எழுதுவாரு? இப்படித் தான் தோணிச்சு மொத மொத ;)

said...

//சஸ்பென்ஸ் என்ன "க்" எடுத்துட்டு "ஸ்"
போடபோறிங்களா கொத்ஸ்?//

அதுவும்தான். அது இல்லமலேயா? ஆனா அது மட்டும் இல்லை. :)

said...

//தண்ணியெல்லாம் ரெடியா எடுத்து வச்சிக்கிட்டீங்க இல்ல?//

அட என்ன எல்லாரும் இந்த தண்ணி மேட்டரிலேயே இருக்கீங்க. எங்களைப் பத்தி இவ்வளவு நல்ல எண்ணமா?

வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//கோவிச்சிக்கக் கூடாது...//

கவலைப்படதீங்க. இதுல கோவத்துக்கு என்ன இருக்கு.

//இனிமே கொத்தனார் இலவசத்துல என்ன தான் எழுதுவாரு?//

ரொம்ப நல்ல கேள்விதான். இப்ப பாருங்க, அங்க எழுதப் போறது என்னான்னு இங்க இலவச விளம்பரம் பண்ணலையா? அந்த மாதிரி அங்க வரப் போகுதுன்னு இங்க எழுதலாம். அல்லது இங்க எழுதினத அங்க மீள் பதிவு பண்ணலாம்.

இல்லை நமக்குன்னு கட் பேஸ்ட் மேட்டருக்கு குறைச்சலா என்ன? எங்கேருந்தாவது சுடலாம்.

அதனால இலவசம் படிக்கவேண்டாம்னு சந்தோஷமெல்லாம் படக்கூடாது, புரியுதா? :D

said...

//அதனால இலவசம் படிக்கவேண்டாம்னு சந்தோஷமெல்லாம் படக்கூடாது, புரியுதா? :D //
அச்சிச்சோ.. இனியும் படிக்கணுமா? ;)

said...

//அச்சிச்சோ.. இனியும் படிக்கணுமா? ;)//

பின்ன அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா? ஹிஹிஹி....

said...

ஓகோ! அப்படியா! அப்ப நான் திங்கக்கெழமை வந்தே பின்னூட்டம் போட்டுக்கிறேன். :-)

said...

உருப்படியா ஒரு வெண்பா சொல்றேன்.
இதுல விக்கி ன்னு வருது பாருங்க. காளமேகப் புலவரின் பாடல்.

முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின்று ஓது.

யாராவது பொருள் சொல்லுங்கள் இல்லாவிட்டால் நான் சொல்லுகிறேன்.

இன்னாடாது பேஜாரு. சொம்மா ஜாலிக்குன்னு வந்தா வெண்பாவம் பொருளாம்னு நமாளுங்க மொனகறது ஞானக் காதுல கேக்குது. இகொ, அப்டி ரொம்ப பேஜார்னா இத்த வெம்பா பதிவுக்கு இஸ்துகினு போயிடலாம்.

said...

//ஓகோ! அப்படியா! அப்ப நான் திங்கக்கெழமை வந்தே பின்னூட்டம் போட்டுக்கிறேன். :-)//

பதிவின் கடைசி வரிகளைப் படிக்கவில்லையா? :)

said...

வாங்க ஓகை. விக்கிக்கு கூட வெண்பா கண்டுபிடிச்சுட்டீங்களே. சூப்பர்.

நம்ம மக்கள் பதில் சொல்லறாங்களான்னு பார்ப்போம், இல்லைன்னா நீங்களே சொல்லிடுங்க. :)

said...

விக்க பசங்களாய் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கொத்தனாருக்கு வாழ்த்துக்கள்!

said...

//விக்க பசங்களாய் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கொத்தனாருக்கு வாழ்த்துக்கள்!//

யப்பா சாமி, நாங்க எதையும் விக்க கிளம்பலை. நீங்க எதாவது புது பூதத்தைக் கிளப்பாதீங்க. சொல்லிட்டேன்.

இது நான் மட்டும் இல்லைய்யா. நம்ம நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பிச்சதுதானே.

said...

koths,
first time here... unga blog romba nalla irukku.. namma kadaipakkam oru naal neenga varanumnu kettukuren :)

said...

koths,
first time here... unga blog romba nalla irukku.. namma kadaipakkam oru naal neenga varanumnu kettukuren :)

findarun.blogspot.com

said...

வாங்க அருண்குமார், உங்க பாராட்டுக்கு நன்றி. உங்க கடைப்பக்கம் வந்துட்டா போகுது. கடைப்பக்கம் மட்டுமில்லை முதல் பக்கம், இரண்டாம் பக்கம்ன்னு எல்லா பக்கத்துக்கும் வரேன் விடுங்க.