Sunday, October 15, 2006

வீடு பேறும் வண்டிச் சத்தமும்

இந்த வாரயிறுதியிலும் உருப்படியா ஒண்ணும் பண்ணாம குண்டுசட்டியில் குதிரை ஓட்டியாச்சு. மடிக்கணினியை வைத்துக்கொண்டு ஒரு தவமோன நிலையை அடையும் பொழுது ஒரு விவாத மேடையைப் பார்த்தேன். தங்கள் திருமணத்தில் வந்த மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான பரிசுகளைப் பற்றிய விபரங்களும் அதன் மீதான விமர்சனங்களும் இருந்தன. அதில் ஒரு சம்பவம் இது -

" என் கணவரின் வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர். அதில் நால்வர் பெண்கள், என் கணவர் மட்டுமே ஆண்பிள்ளை. எங்கள் திருமணம் ஆகுமுன் மற்ற நால்வரின் திருமணமும் நடந்துவிட்டது. மிகப் பெரும் பணக்காரர்களான என் கணவரின் பெற்றோர்கள், தங்கள் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்குப் பரிசாக ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வாங்கித் தந்தார்கள்.

எங்கள் திருமணத்தின் போது எங்களுக்கு வீடு வாங்கித் தராமல் இரண்டு புதிய கார்கள் மட்டுமே வாங்கிப் பரிசாக தந்தார்கள். பின்னர் மறைமுகமாக இது பற்றிய பேச்சு வந்த பொழுது ஒரு ஆண்பிள்ளை தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அடுத்தவர் கையினை எதிர்பார்க்கக் கூடாது என பொருள் படும்படியாக கூறினர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
"


அத்தளத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட சம்பவம் இது. பெரும்பாலான கருத்துகளை இரு வகைகளில் பிரித்து விடலாம்.

கருத்து - 1

அ) இரண்டு கார்கள் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். இதில் குறை காண்கிறீர்களா? எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே கிடையாதா? எத்தனை பேருக்கு இப்படி ஒரு பரிசு கிடைக்கும்?


ஆ) எல்லாவற்றிக்கும் பெற்றோரை நம்பி இருக்கலாமா? உங்கள் முயற்சியில் நீங்கள் வீடு வாங்கி அவர்களுக்குச் சமமாக உயர வேண்டுமென்பதே அவர்கள் ஆசையாய் இருக்கும்


இ) பெண்களுக்கு அவ்வளவு செய்து அவர்கள் நொடித்துப் போயிருக்கலாம். அல்லது மற்ற வழிகளில் பணக்கஷ்டம் வந்திருக்கலாம். உங்களுக்கு முழு விபரங்கள் தெரியுமா?



கருத்து -2

அ) என்ன கிடைத்தது என்பதைப் பற்றிய பிரச்சனை இல்லை இது. மகள்களுக்கு ஒரு அளவுகோல் மகனுக்கு வேறு அளவுகோல் என்பது எந்த விதத்தில் சரி?


ஆ) தன் முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற அறிவுரை அவர் மருமகன்களுக்குக் கிடையாதா?


இ) மற்றவர்களுக்குச் செய்தது போல், அவர்களுக்கு வீடு கொடுக்கப் போவதில்லை என்பதை முன்பே சொல்லி இருந்தால், இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்காது அல்லவா?


இப்படி ரொம்ப பேரு வந்து கருத்து சொன்னாங்கப்பா. ரொம்ப சுவாரசியமா இருந்தது. இந்த மாதிரி நிறையா பேரு வந்து கருத்து சொல்லற விஷயங்கள் எல்லாம் நமக்கு அல்வா மாதிரியா, அதான் எடுத்துப் போட்டாச்சு. உங்க கருத்து என்ன? மாற்று கருத்துகளுக்கு உங்க பதில் என்ன? எல்லாம் வந்து விவரமா போடுங்க.

வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. அப்புறம் தலைப்புக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா, ஒரு பதிலும் இல்லைப்பா. இந்த மாதிரி எல்லாம் பேரு வெச்சாத்தானே வருவீங்க. அதான்.

132 comments:

said...

கையாலாகாதவன் தான் அப்பன் சொத்தை கைத்தடியா ஊன்றி நிற்பான்.

(நன்றி:கமல்)குரு படத்தில்

said...

என்ன செல்வன் பதிவு போட காத்துக்கிட்டு இருந்தீங்களா? இப்படி டகாலுன்னு வந்து கருத்து சொல்லிட்டீங்க!

கமல் சரியா வசனம் பேசி இருக்காரு. உங்க கருத்து என்ன? ஏன்?

said...

//ஆ) எல்லாவற்றிக்கும் பெற்றோரை நம்பி இருக்கலாமா? உங்கள் முயற்சியில் நீங்கள் வீடு வாங்கி அவர்களுக்குச் சமமாக உயர வேண்டுமென்பதே அவர்கள் ஆசையாய் இருக்கும்.//

இது ஒரு வகையில ரொம்ப்பச் சரி. ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு பொற்றொரை நம்பி இருப்பது கொஞ்சம் கூட சரியில்லை. சரி, இருக்கிறது கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள். அப்படி எடுத்துக் கொண்டு போயி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இல்லையென்றால் இளமையில் முதுமை தலை காட்ட ஆரம்பித்து விடும். நரை முடி ஒரு உதாரணம்.

திரும்ப வாரேனுங்க...

said...

காரை ஓட்டிக் கொண்டு கொடைக்கானல் போகலாம்.
வேலூருக்கு மாற்றல் ஆனால், வீட்டையா தூக்கிக் கொண்டு போக முடியும்?

said...

என் கருத்து என்ன?

சொந்த காலில் நிற்காதவன் கோழைப்பயல் என்பது தான் என் கருத்து.

அப்பன் காசை எதிர்பார்த்து நிற்பவன் கையாலாகதவன்.அவனை பெற்று வளர்த்ததற்கு அவன் அப்பன் தூக்கு போட்டு சாகவேண்டும்.

said...

இல்லாத காலத்தில் இருப்பிடத்தை விற்று இரவலராகாமல் இருக்கலாம்.
காரை வைத்துக்கொண்டு பெட்ரோலுக்குத்தான் அழவேண்டும்.

said...

//வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும்..//

வெண்பாவெல்லாம் புரியாததால முந்தி ஓடிப்போய்ட்டேன். இப்போ இந்த மாதிரி பதிவா வந்துச்சுன்னா, புரிகிறதால ஓடிப் போய்டுவேன், ஆமா.. :(

said...

செல்வன்,

அந்த பையன் கருத்து என்னன்னு நமக்கு தெரியவே தெரியாதே. அப்புறம் ஏன் இவ்வளவு கோப வார்த்தைகள்?

said...

தெக்கி / செல்வன்,

விஷயம் இங்க வீடா? அல்லது நம் உடன் பிறந்தவர்களுக்கு நடந்த ஒரு நல்லது நமக்கு நடக்கவில்லையே? நாம் எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்ற எண்ணமா?

said...

பாபா,

:) ஒரு கார், ஒண்ணு என்ன, ரெண்டு கார் தரேன், உங்க வீட்டை எக்ஸ்சேஞ் பண்ணிக்கலாமா? :) (சும்மா தமாஷ்தான். கோவிச்சிக்காதீங்க)

said...

வீடு என்பது அசையாச் சொத்து. அதாகப்பட்டது, பெற்றோருக்கு புகுந்தவீட்டுக்கு அசையும் மகள்களிடம் ஆறா அன்பு இருப்பதைக் குறிக்கும்.

மகிழுந்து என்பது அசையும் சொத்து. உள்ளர்த்தம் (தமிழ்மண பாசையில் உள்குத்து) என்னவென்றால், மகன் எங்கு மாற்றல் ஆகிறானோ, மக்களைப் பெற்ற மகராசர்களும் மறக்காமல் அசைந்து வருவார்கள்.

said...

பாபா,

இதுதான் பிள்ளையைக் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டற கதையா? LOL!

said...

தருமி ஐயா (ரொம்ப நாள் ஆச்சே இப்படி கூப்பிட்டு) இப்படி நழுவினா நான் என்னதான் பண்ணறது? அடுத்த வாட்டி நமீதா படம் ரெண்டு போடறேன். அப்பவாவது வாங்க! :)

said...

இ.கொ,
வணக்கம்.

/* வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. */

OK, ஓகே...

/*என்ன கிடைத்தது என்பதைப் பற்றிய பிரச்சனை இல்லை இது. மகள்களுக்கு ஒரு அளவுகோல் மகனுக்கு வேறு அளவுகோல் என்பது எந்த விதத்தில் சரி?

ஆ) தன் முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற அறிவுரை அவர் மருமகன்களுக்குக் கிடையாதா? */

இ.கொ, இதுதான் என் கருத்தும். "எல்லாவற்றிக்கும் பெற்றோரை நம்பி இருக்கலாமா?" என்று மகன்களைக் கடிந்து கொள்பவர்கள், ஏன் இதே கேள்வியை மருமகன்களிடம் கேட்கக் கூடாது? ஏன் எல்லாவற்றிற்கும் பெண் வீட்டாரையே நம்பி இருக்க வேண்டும்? அடுத்தது கார் நிலையான சொத்து இல்லை. ஆனால் வீடு அப்படியில்லையே! இது அநியாயம். பெற்றோர்கள் எல்லாப் பிள்ளைகளையும் சமமாகப் பார்க்க வேண்டும்.

said...

---ஒரு கார், ஒண்ணு என்ன, ரெண்டு கார் தரேன்,---

ரெண்டு Automobili Lamborghini பார்சல் பண்ணுங்க தலை... வீடு உங்க பேரில் எழுதி வச்சுடறேன்
; )

said...

கையாலாகாதவர்களை கண்டால் கண்டிப்பா கோபம் வரத்தான் செய்யும்.

//விஷயம் இங்க வீடா? அல்லது நம் உடன் பிறந்தவர்களுக்கு நடந்த ஒரு நல்லது நமக்கு நடக்கவில்லையே? நாம் எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்ற எண்ணமா? //

அந்த மாதிரி நினைப்பே தப்பு.அப்பன் சம்பாதிச்ச காசு.என்ன வேணா செய்வான்.நீ சம்பாதி.என்ன வேணா செய்.அவ்வளவுதான்.

காரை வைத்து வீட்டை வைத்து பாசத்தை எடைபோடுபவன் முட்டாள்.பெத்த கடனை இவனால் திருப்பி கட்ட முடியுமா?அதையே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருப்பி கட்டமுடியாத போது அப்பா,அம்மாவிடம் காசுக்கு சண்டை போடுபவன் கையாலாகத வெறும்பயல் என்றுதான் சொல்வேன்.

தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை.
தந்தயிற் சிறந்த தெய்வமுமில்லை.

இதை உணராதவன் மனிதனே இல்லை.

said...

வீடு வரை உறவு!
வீதி (கார்) வரை மனைவி!!

said...

அந்தப் பெண் கேட்பதில் தவறொன்றுமில்லை. மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மகனுக்கு மட்டும் கொடுக்கவில்லையென்றால் கோபம் வரத்தானே செய்யும்.

இதில் முக்கியமான விஷயம்: மகன் என்ன நினைக்கிறார் என்பது.

தந்தையார் கஷ்டத்தால் கொடுக்க இயலவில்லையென்றால் மகனும் புரிந்துகொண்டால் சரி.

said...

//வீடு என்பது அசையாச் சொத்து. அதாகப்பட்டது, பெற்றோருக்கு புகுந்தவீட்டுக்கு அசையும் மகள்களிடம் ஆறா அன்பு இருப்பதைக் குறிக்கும்.

மகிழுந்து என்பது அசையும் சொத்து. உள்ளர்த்தம் (தமிழ்மண பாசையில் உள்குத்து) என்னவென்றால், மகன் எங்கு மாற்றல் ஆகிறானோ, மக்களைப் பெற்ற மகராசர்களும் மறக்காமல் அசைந்து வருவார்கள்.//

அண்ணா, இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறதுக்கு பேர்தான் பின்நவீனத்துவமாண்ணா? நல்லா இருங்கண்ணா! :)

said...

அப்படியில்லாமல் கொழுப்பெடுத்துக் கொடுக்கவில்லையென்றாலும், அறிவுரை என்ற பெயரில் கொடுக்கவில்லையென்றாலும் - பித்ருவாக்கிய பரிபாலனம் என்று சொல்லிக்கொண்டு மகன் தந்தையை எதிர்த்துப் பேசாமல் தனக்குத்தானே முனகிக்கொள்ள வேண்டியதுதான். மேற்கொண்டு செய்ய வேறொன்றுமேயில்லை.

மகன் வாயை மூடிக்கொண்டிருக்கலாம். மருமகள் அப்படியிருக்க வேண்டுமென்பதில்லை.

said...

இரண்டு கார் கொடுத்ததின் சூட்சுமம் என்ன? கணவனையும் மனைவியையும் பிரித்தாளும் பரங்கியரின் மனப்பான்மை எனக்கு வெளிப்படுகிறது.

said...

வாங்க வெற்றி, ஆணித்தரமா உங்க கருத்தை சொல்லிட்டீங்க. செல்வன் வேற என்னமோ சொல்லறாரு. அதுக்கு என்ன சொல்லறீங்க?

said...

ஆமா கொத்ஸு,
தங்கமணி அப்பாகிட்ட ஏதேனும் பெண்டிங் பேலன்ஸுக்கு அடி போடுறீங்களா? இல்ல அப்ப வாங்கினதுக்கு இப்ப குறுகுறுக்குதா? :))

said...

//ரெண்டு Automobili Lamborghini பார்சல் பண்ணுங்க தலை... வீடு உங்க பேரில் எழுதி வச்சுடறேன் //

அண்ணா, அவ்வளவு 'பணக்கார்' இல்லீங்கண்ணா! நம்ம ரேஞ்சுக்கு ஹோண்டா அக்கார்ட், டொயோட்டா காம்ரிதான்.

said...

//கையாலாகாதவர்களை கண்டால் கண்டிப்பா கோபம் வரத்தான் செய்யும்.//

சரிங்க செல்வன், உங்க பாயிண்டை சொல்லறீங்க. வெற்றியின் கருத்துகளுக்கு உங்க பதில்?

said...

//வீடு வரை உறவு!
வீதி (கார்) வரை மனைவி!!//

ROTFL!!

கலக்குறீங்கண்ணா!

said...

கொத்ஸு,
//நம்ம ரேஞ்சுக்கு ஹோண்டா அக்கார்ட், டொயோட்டா காம்ரிதான்//

எனக்கு லம்போர்கினில்லாம் வேணாம்.

மேலே சொன்ன ரெண்டுலயும் ரெண்டு பார்சல் நம்ம பக்கம் சீக்கிரம் கார்கோ-ல போட்டுடுங்க. புண்ணியமாப் போகும்.

வீடுதானே? ஹி ஹி.. ஆனந்தராஜ் கிட்ட சொன்னாக்க ஒரு காலனியே கட்டித்தருவாரு. என்ன நான் சொல்றது?

said...

//அந்தப் பெண் கேட்பதில் தவறொன்றுமில்லை.//

உம்ம கிட்ட இருந்து இப்படி ஒரு சாத்வீகமான பதிலா?

நம்பமுடியவில்லை.... (சிங்கார வேலன் படத்தில் கமல் ஆச்சிகிட்ட சொல்கின்ற ஸ்டைலில்)

said...

//மருமகள் அப்படியிருக்க வேண்டுமென்பதில்லை.//

வேண்டுமென்பதில்லையா? முடியாதா?
ஹிஹிஹி....

said...

இது என்ன கேள்வி?வரதட்சணை வாங்குபவனை 'நறுக்' செய்யவேண்டும் என வெறியோடு இருக்கிறேன்.மருமகனாம் மருமகன்.வரதட்சணை வாங்கும் மானங்கெட்ட பிறவிக்கு பேர் மருமகன்.தூ..

வரதட்சணை வாங்கி பிழைப்பதை விட எங்காவது மாமா வேலை செய்து பிழைக்கலாம்.சற்று கவுரவமாகவாவது இருக்கும்.

கோபிச்சுகாதீங்க...இந்த மாதிரி ஆட்களை கண்டால் நாக்கை பிடுங்கிக் கொள்வது மாதிரி நேரில் தான் கேட்க முடிவதில்லை.வலை பதிவிலாவது திட்டிக்கலாமேன்னுதான்:-))

said...

ரொம்ப படுத்தாமல், இன்னொன்று போட்டுவிட்டு ஜுட் விடுகிறேன் : )

வீடு வாங்கியதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை நிலைநிறுத்துகிறார். தன்னிறைவு பெற்ற சமூகத்தை லட்சியமாகக் கொண்ட பெற்றோர், இருப்பிடம் வழங்குகிறார்கள். இந்த வீட்டை சீர்திருத்தும் பணியில் Home depot செல்லும் மாப்பிள்ளைகள், செப்பனிடும் தொழிலாளிகள், வாடகை வருமானத்தின் மறு முதலீட்டின் மூலம் multiplier effect-ஆக வாணிபமும் வணிகமும் கொழிக்க உள்கட்டமைப்புக்கு வரியும் கூடும்.

சமச்சீர் சமுதாயத்திற்கு ஏற்றுமதி எவ்வளவுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு இறக்குமதியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே இருத்தல் அவசியம்.

கார் என்பதற்கு பெட்ரோல் அயல்நாட்டில் இருந்து வரும். ஏற்கனவே அமைந்திருக்கும் ஹ்யூண்டாய் மட்டும் இல்லாமல், கலைஞரின் ஆட்சியில் அமையவிருக்கும் புத்தம்புதிய ஆட்டோமொபைல் உதிரி மற்றும் மொத்த பாக நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தையில் வரவேற்பாக அமையும்.

மனவுளைச்சல் மிக்க நெரிசல் நகர சூழலில் ஓட்டுநரின் அவசியம் ஏற்படும். மகிழுந்துக்கு பழகியபின் பைக், ஷேர் ஆட்டோ வெறுத்துப் போவதால், மாமனார், மாமியார், ஒன்று விட்ட ஓரகத்தியின் அத்தை மகள் என்று கார்களாக பல்கிப் பெருகும் சந்தைப்படுத்தல் நிகழும்.

இதுதானெ பெற்றோர்கள் கணித்தது?

said...

//இரண்டு கார் கொடுத்ததின் சூட்சுமம் என்ன? கணவனையும் மனைவியையும் பிரித்தாளும் பரங்கியரின் மனப்பான்மை எனக்கு வெளிப்படுகிறது.//

அதாண்ணா. அதுலயும் பையனுக்கு பெரிய கார், மருமகளுக்கு சின்ன கார் குடுத்து கலகம் கூட பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

said...

//ஆமா கொத்ஸு,
தங்கமணி அப்பாகிட்ட ஏதேனும் பெண்டிங் பேலன்ஸுக்கு அடி போடுறீங்களா? இல்ல அப்ப வாங்கினதுக்கு இப்ப குறுகுறுக்குதா? :))//

ஆஹா! மெதுவா ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க!

said...

//
மேலே சொன்ன ரெண்டுலயும் ரெண்டு பார்சல் நம்ம பக்கம் சீக்கிரம் கார்கோ-ல போட்டுடுங்க. புண்ணியமாப் போகும்.//

அந்த ஆபர் ஒருங்கிணந்த அமெரிக்க மாநிலங்களில் மட்டும்தான் செல்லுபடி. ஆமாம்.

said...

செல்வன் நீங்க நல்லா திட்டுங்க. அதனால என்ன.

ஆனா அந்த மருமகன் கேட்டாத்தானே வரதட்சிணை. இவங்களா மனமுவந்து கொடுக்கிற பரிசாத்தானே இது தெரியுது?

said...

பாபாண்ணா,

இது வரை படுத்தலை. ஆனா இப்போ என்னண்ணா சொல்லி இருக்கீங்க?

அப்புறம் ஒரு செய்தி. அந்த குடும்பம் நம்ம பக்கம்தான். வடகிழக்கு மாநிலம்தானாம். எனக்கென்னவோ அவங்க சொல்லுறதைப் பார்த்தா பாஸ்டன் பிராம்மணர்கள் குடும்பங்களில் ஒன்றாகத்தான் இருக்குமெனத் தோன்றுகிறது.

said...

நான் என்ன சொல்றதுங்க? எங்க வீட்டுல நாங்க ரெண்டு பேருமே பசங்க தான். அதனால கருத்து சொல்லாம ஐ'ம் தி எஸ்கேப். :-)

said...
This comment has been removed by a blog administrator.
said...

//நான் என்ன சொல்றதுங்க? எங்க வீட்டுல நாங்க ரெண்டு பேருமே பசங்க தான். அதனால கருத்து சொல்லாம ஐ'ம் தி எஸ்கேப். :-)//

கும்ஸ், சிவனா விஷ்ணுவான்னு விவாதன் நடந்தாலும் இப்படி எஸ் ஆகறீரு, இப்பவும் அப்படியே. என்னதான் ஆன்மீகப் பழமா இருந்தாலும் இவ்வளவு கொழகொழவென இருக்கீரே! :D

said...

//உம்ம கிட்ட இருந்து இப்படி ஒரு சாத்வீகமான பதிலா?
//
எப்பவோ என்னவோ சொல்லிருக்கலாம். இந்த காண்டெக்ஸ்ட்ல இன்னிக்கு இப்போ தோணுறது இதுதான். பின்ன பழசையெல்லாம் கிளறிகிட்டே இருந்தா எப்படி?

ஹி ஹி. ஞாபகமறதியை வளர்த்துக்கணும் கொத்ஸு. :))

said...

//ஆஹா! மெதுவா ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க!
//
ஆரமிக்கிறதுக்குத்தானே இப்படியொரு பதிவையே போட்டீரு? அப்புறமா மெதுவா தங்கமணியை கூப்பிட்டு 'பாரு வலையுலகக் கண்மணிகளே சொல்லிட்டாங்க'ன்னு பிட் போடுவீரு.

"இதெல்லாம் நடக்கக்கூடாது, இது எங்கள் எண்ணமில்லை" என்று ஆவணப்படுத்தவே இந்தப் பின்னூட்டம். பி. கயமைத்தனம் செய்யும் நீர் இதனை வெளியிட வில்லையென்றால் தனிப்பதிவாக இடப்பட்டு சுட்டி தரப்படும். :)

said...

//அந்த ஆபர் ஒருங்கிணந்த அமெரிக்க மாநிலங்களில் மட்டும்தான் செல்லுபடி. ஆமாம்.
//
சரி.. பாபாவுக்கு அனுப்பும்போது ரெண்டு சேர்த்து போட்டு அனுப்புங்க. அவர் எனக்கு அனுப்புவாரு.

said...

இந்த மாதிரி ஒரு வெட்டிப்பதிவிலும் macro & micro economicsலாம் பேசி, மருமகள் மற்றும் பெற்றோரை psychoanalysis செய்து, பயனுள்ள பதிவா ஆக்கினதுக்கு பாபா வாழ்க!

said...

கொத்ஸ்,
இப்படியெல்லாம் பதிவு போட்டு வயித்தெரிச்சலை கூட்டாதீங்க.. நானும் என் கல்யாணத்தப்போ ரெண்டு கப்பலாச்சும் வாங்கிக் கொடுங்கன்னு மறைமுகமா கேட்டுப் பார்த்தேன்.. ம்.. என்ன செய்ய.. நம்ம தலையெழுத்து..

said...

அதென்ன ரெண்டு தடவை கொழ கொழன்னு இருக்கீரே என்று போட்டிருக்கிறீர்?

said...

அனானி அவர்களே, இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாம எதுக்கு இம்மாம் பெரிய பின்னூட்டம்? நான் படிக்கக்கூட இல்லைங்க.

எதுக்கு வெளியிட்டேன்னு கேட்கறீங்களா? எல்லாம் பி.க.தான்.

said...

ராம்ஸ்,

அந்த நம்ப முடியவில்லை ராகத்திலேயே பாடிங்குங்க - மறக்கமுடியவில்லை!

said...

உங்க பேரைச் சொன்னா கிடைக்கிற சாப்பாடும் கிடைக்காம போயிடும். நீங்க வேற! நமக்கு அந்த வரவு ராசியே கிடையாது.

said...

//சரி.. பாபாவுக்கு அனுப்பும்போது ரெண்டு சேர்த்து போட்டு அனுப்புங்க. அவர் எனக்கு அனுப்புவாரு.//

அவருக்கு குடுத்த ஆபர் ரெண்டு. அதுல எவ்வளவு வாங்கிப்பீங்களோ உங்க சாமர்த்தியம்.

said...

எகனாமிக்ஸா,அதான் நமக்குப் புரியாம போச்சி! சரிதான். சைக்கோ தெரியும் அது என்ன அனாலிசிஸ்? அவரு பாவம் அம்மாவோட இருந்துக்கிட்டு இருக்காரு.



ஓ! அவரு வைக்கோவா? சாரி பார் தி கன்பியூசன்.

said...

ஆமா ராம்ஸு, அதுக்காக நம்ம பதிவை வெட்டிப்பதிவுன்னு சொல்லறீங்களே, வெட்டிப்பயல் பார்த்தா கோபப்பட மாட்டாரு. நல்ல மேட்டர் பதிவுபோடற நம்ம பேர் இப்படி ரிப்பேராகுதேன்னு...

said...

நீங்களும் அந்த கேஸ்தானா கடலாரே! (எப்படி இருக்கு புது பேரு?)

நமக்கு கேட்கணுமின்னு கூட தெரியாம போச்சு.

ஆனாலும் ரெண்டு கப்பல் கொஞ்சம் ஓவராத் தெரியலை?

said...

//அதென்ன ரெண்டு தடவை கொழ கொழன்னு இருக்கீரே என்று போட்டிருக்கிறீர்?//

சிவா விஷ்ணு ஒருதரம் வீடா காரா? ஒருதரம். அதான்!

said...

எல்லரும் நீங்கள் வைத்த பொறியில் சிக்கி விட்டர்கள் என்ற திருப்தியில் சிரிக்கிறீர்கள் இல்லையா, இ.கொ.

இதோ நான் சொல்வது
பதிவை ஒரு தடவைக்கு இரண்டு தடவையாய் படித்தேன்.
இரண்டாம் தடவைதான் "அது" உரைத்தது!

முதல் நான்கும் பெண்கள்!
இவர் ஒருவர்தான் ஆண்மகன்.

ஆகவே பெற்றோர் செய்தது சரியே!

பெட்ரோல் காசை மாமியார் வீட்டில் கொடுக்கச் சொல்லி இப்படி செய்து விட்டார்கள்.

மேலும், அப்பன் சொத்தில் பங்கு வேறு வருமே!

பெண்கள் கஷ்டப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் அவர்களுக்கு வீடு!
மகன் உழைத்து சம்பாதிக்க கற்றுக் கொள்ளட்டும் என்று அவனுக்கு ஒன்றுக்கு இரண்டு கார்!

மேலும் அதிகப் பொறுப்பு!

சரிதான் என்று எனக்குப் படுகிறது.

said...

எஸ்.கே.

இது புதிரும் இல்லை, இதற்கு சரியான விடையும் இல்லை. ஒரு நிகழ்வையொட்டி நம் சிந்தனை என்ன என தெரிந்து கொள்ள முற்பட்டேன் அவ்வளவுதான்.

said...

அய்யா கொத்து கொத்துன்னு கொத்தி விட்டாச்சு.. ம்துரைக்கும் திண்டுக்கல்லுக்கும் சொல்லிவிட்டீங்கன்னா அப்படியே சூரிய குரூப் இந்த மேட்டரைத் தீபாவளி பட்டாசா நமீதா ரகஸ்யா பேட்டிக்கு நடுவில்ல போட்டுருவாய்ங்க...

நாடே கருத்துச் சொல்லும் போது நாம சொல்லாட்டி எப்படி?

ஆமா அந்த ரெண்டு கார் விலை என்ன? அப்புறம் வீடு விலை என்ன? விவரம் தேவை ப்ளீஸ்

said...

வீடு பேறும் வண்டிச் சத்தமும்

said...

தேவுதம்பி

இருக்குற விபரத்தை வெச்சுக்கிட்டு கருத்து சொல்லணும்.அதான் நல்ல தமிழனுக்கு அடையாளம். அது மட்டுமில்லை இந்த புள்ளி விபரங்கள் எல்லாம் வேஸ்ட்.

இப்போ நம்ம ஆட்சியில் சிக்குன்குனியா இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு. பத்திரிகைக்காரம் புள்ளி விபரம் போட்டா அது மாறிடுமா?

கொஞ்சம் கூட 'விபரம் தெரியாத' ஆளா இருக்கீங்களே!

said...

//வீடு பேறும் வண்டிச் சத்தமும் //
மொதல்ல இதுக்கு என்ன அர்த்தம்?
வண்டிச்சத்தம் என்றால் வண்டிக்கு கொடுக்கும் வாடகை. வீடு பேறு? அப்படின்னா என்னாங்க?

said...

இளா, என்ன சொல்ல வறீங்க?

said...

//நமீதா படம் ரெண்டு போடறேன். அப்பவாவது வாங்க! :)//

வேண்டாம்...வேண்டாம்... வேற ஏதாவது 'கப்'புன்னு ஒட்டிக்கிற மாதிரி படமா வேண்ணா போடுங்க
:)

said...

//மொதல்ல இதுக்கு என்ன அர்த்தம்?
வண்டிச்சத்தம் என்றால் வண்டிக்கு கொடுக்கும் வாடகை. வீடு பேறு? அப்படின்னா என்னாங்க?//

அதான் தெரியாதுன்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் என்ன அதையே கேட்டுக்கிட்டு. அதெல்லாம் எஸ்.கே. மாதிரி பெருசு யாராவது சொல்லும். அதுவரை கொஞ்சம் வெயிட்டீஸ் பண்ணுங்க.

said...

//வேண்டாம்...வேண்டாம்... வேற ஏதாவது 'கப்'புன்னு ஒட்டிக்கிற மாதிரி படமா வேண்ணா போடுங்க
:)//

அய்யோ ஒட்டிக்கிச்சு ஒட்டிக்கிச்சு ஓ ஓ பெண்ணே... அப்படின்னு பாட்டு எல்லாம் கூட வரும் போல இருக்கே....:)

said...

நண்பர் ரவி தனிமடலில் அனுப்பியது -

ஒரு கார் வாங்கிக் கொடுத்து, கூட ஒரு பிளாட் வாங்கிக் கொடுத்து இருக்கலாமே. அப்புறம் பெண்களை சமாளிக்க வேண்டியது வரும்.

said...

பொண்ணு வூட்ல என்ன குடுத்தாங்கன்னு சொல்லவே இல்லையே?

said...

அதெல்லாம் தெரியலையே அனானி. இவ்வளவுதான் மேட்டர். இதை வெச்சுதான் நாம வீடு கட்டணும். அதனால இத வெச்சு உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க.

said...

தலைவா,
ஒரு சின்ன டவுட், இது உங்க கதையோ இல்ல உங்க மச்சினன் கதையோ இல்லல.
ஏன்னா நாம் பாட்டுக்கு ஏதாவது சொல்ல போக உங்க மனசு அப்புறம் கஷ்டப்பட அதப் பாத்து நாங்க கஷ்டப்பட வேணாம். நீங்க சரியா சொல்லிட்டுங்க....

said...

ஐயா புலியாரே,

எங்க வீட்டுல எல்லாம் பசங்கதான். எங்க மச்சினனுக்கு இந்த மாதிரி ஆச்சுன்னா நான் ஏன் பதிவெல்லாம் போடறேன்? சும்மா வீட்டை பாத்துக்கிட்டு ஹாப்பியா இருக்க மாட்டேன்....:)

said...

ஐயா புலியாரே,

எங்க வீட்டுல எல்லாம் பசங்கதான். எங்க மச்சினனுக்கு இந்த மாதிரி ஆச்சுன்னா நான் ஏன் பதிவெல்லாம் போடறேன்? சும்மா வீட்டை பாத்துக்கிட்டு ஹாப்பியா இருக்க மாட்டேன்....:)

said...

வீட்டோட மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பொருள் இருக்கா? கல்யாணத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே.....:(

said...

இந்தப் பதிவு ஆங்கிலத்துல எப்படி இருந்தது ?

name of the house, sound of the vehicle...ன்னா ?

கொத்தனாருன்னு பேருன்னா வலைல எத வச்சு வேணா ஊடு கட்டி வெள்ளாடுவீங்களா ?

லாஜிக்குப்படி பாத்தா நாலு பொண்ணுக்கு வீடு கட்டி குடுத்து நாயினா ஓட்டாண்டியாயிட்டு இருப்பார்..மவனுக்கு ரண்டு டாடா சுமோ வாங்கிக் குடுத்து எலெக்சன் டயத்துல திமுக காரவுகளுக்கு வாடகைக்கு விட்டு பொளச்சுக்கோ அப்படீன்னு சொல்லியிருப்பாரா இருக்கும்...விசாரிச்சு பாருங்க :)

said...

//மவனுக்கு ரண்டு டாடா சுமோ வாங்கிக் குடுத்து எலெக்சன் டயத்துல திமுக காரவுகளுக்கு வாடகைக்கு விட்டு பொளச்சுக்கோ அப்படீன்னு சொல்லியிருப்பாரா இருக்கும்...விசாரிச்சு பாருங்க :) //

ஆஹா இங்கயும் அரசியலா.... ஒரு முடிவு எடுத்த மாதிரி தான் இருக்கு.
கொத்துஸ் எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு,

said...

கொத்துஸ்,
வாழ்க்கையில் இரண்டு லாஜிக்(வகை) இருக்கு.
ஒன்னு, வாழ்க்கையில் நல்லா செட்டில் ஆயிட்டு கல்யாணம் பண்ணுறவங்க
இரண்டு, கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆவது.

அந்த மருமகன்கள் இரண்டாம் வகையா இருக்கு. மகன் முதல் வகையா இருக்கும்.

இப்ப இதில் இருந்து கேள்வி

செல்வன், கோவப்படுவதில் இருந்து அவர் முதல் வகை என்று தெரிகின்றது. அப்ப நீங்க எந்த வகை தலைவா

said...

//இந்தப் பதிவு ஆங்கிலத்துல எப்படி இருந்தது ?

name of the house, sound of the vehicle...ன்னா ?//

வாங்க சங்கர் அண்ணா, நம்ம டெய்லர் இல்லீங்க வெட்டி ஒட்ட! கொத்தனார், வூடு கட்டிருவோம். :) அது வந்து ஒரு discussion board-ல் இருந்த டாபிக். நாம அதை பிடிச்சு பதிவு போட்டுட்டோம்.

//கொத்தனாருன்னு பேருன்னா வலைல எத வச்சு வேணா ஊடு கட்டி வெள்ளாடுவீங்களா ?//

அக்காங்க்பா. வெள்ளாட்டு காட்டிருவோமில்ல...

//திமுக காரவுகளுக்கு வாடகைக்கு விட்டு பொளச்சுக்கோ அப்படீன்னு சொல்லியிருப்பாரா இருக்கும்..//

வாடகை எல்லாம் சரியா வருமா? ரிஸ்கி பிசினெஸா இருக்கும் போல இருக்கே...

said...

//ஆஹா இங்கயும் அரசியலா.... ஒரு முடிவு எடுத்த மாதிரி தான் இருக்கு.
கொத்துஸ் எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு,//

எனக்கும்தான். புலி, சிறுத்தை எல்லாம் கூட இருக்குன்னு ஒரு தைரியத்தில் இருந்த கடைசி நிமிஷத்தில் காலை வாரி விட்டு காணாம போயிடுவீங்க போல இருக்கே....;)

said...

//செல்வன், கோவப்படுவதில் இருந்து அவர் முதல் வகை என்று தெரிகின்றது. அப்ப நீங்க எந்த வகை தலைவா//

யோவ், நடந்த விஷயத்தை பத்தி கருத்து சொல்லச் சொன்ன, இப்படி என்னையே ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே. ரொம்ப நாள் முன்னாடியே நம்ம அட்லாஸ் மாதம் எல்லாம் முடிஞ்சு போச்சும்மா....

said...

கொத்ஸ்,
இங்க பிரச்சனையே மகளுக்கு ஒரு நியாயம், மகனுக்கு ஒரு நியாயமானுதான்.

மகன் உழைச்சு பிழைக்கனும்னா, மருமகன் பிச்சை எடுத்து பிழைக்கனுமா ஒன்னுமே பிரியலையே :-)

said...

வாங்க வெ.பை.

அதானே மேட்டர். அந்த அப்பா மகளுக்கு ஒரு விதம், மகனுக்கு ஒரு விதம் என் நடந்தது சரியா? தன் கணவரின் சகோதரிகளுக்குக் கிடைத்தது தன் கணவருக்கும் கிடைக்குமென இந்தப் பெண் எதிர்பார்த்தது சரியா?

போட்டுத்தாக்கும்வோய்!

said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....நாலு பெண்களுக்கும் ஒரே போலக் குடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய பிரச்சனையாயிருக்கும். இப்பொழுது ஒரு ஜோடிக்கு மட்டுந்தானே வருத்தம். நாலு வீட்டுல ஒரு வீடு மட்டும் மாடி வீடா இருந்திருக்கட்டுமே........நாலு பெண்களும் போடுகிற சண்டை தெரியும்.

எல்லாம் சரிதாங்க. அப்பா அம்மா பாத்துக் குடுக்குறத வாங்கிக்கிருவோம். அப்பா அம்மாவை விடப் பெரிய செல்வம் உண்டாங்க!

said...

என்ன ஜிரா? இப்படி சொல்லிட்டீங்க. நீங்க சொல்லறது சரிதான். கிடைத்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதான். இல்லைன்னு சொல்லலை.

ஆனால் இந்த பெண்ணிற்கு இருந்த எதிர்பார்ப்பு சரியா? தவறா? அதை அந்த பெற்றோர்கள் சரியாக அணுகியிருக்க வேண்டாமா? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

said...

//இலவசக்கொத்தனார் said...
வாங்க வெ.பை.

அதானே மேட்டர். அந்த அப்பா மகளுக்கு ஒரு விதம், மகனுக்கு ஒரு விதம் என் நடந்தது சரியா? தன் கணவரின் சகோதரிகளுக்குக் கிடைத்தது தன் கணவருக்கும் கிடைக்குமென இந்தப் பெண் எதிர்பார்த்தது சரியா?
//
அந்த பொண்ணு எதிர்பார்த்தது சரியோ தவறோ...

இவுங்க மருமகன் கோவிச்சுக்குவாரு, மருமகள் என்ன பண்ணிட முடியும்னு நினைச்சிருக்காங்க. இது கண்டிக்கத்தக்கது. பெண்ணடிமை சிந்தனை...

(நாங்களும் எண்ணெய ஊத்துவொமில்ல ;))

said...

//Boston Bala said...
ரொம்ப படுத்தாமல், இன்னொன்று போட்டுவிட்டு ஜுட் விடுகிறேன் : )

வீடு வாங்கியதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை நிலைநிறுத்துகிறார். தன்னிறைவு பெற்ற சமூகத்தை லட்சியமாகக் கொண்ட பெற்றோர், இருப்பிடம் வழங்குகிறார்கள். இந்த வீட்டை சீர்திருத்தும் பணியில் Home depot செல்லும் மாப்பிள்ளைகள், செப்பனிடும் தொழிலாளிகள், வாடகை வருமானத்தின் மறு முதலீட்டின் மூலம் multiplier effect-ஆக வாணிபமும் வணிகமும் கொழிக்க உள்கட்டமைப்புக்கு வரியும் கூடும்.

சமச்சீர் சமுதாயத்திற்கு ஏற்றுமதி எவ்வளவுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு இறக்குமதியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே இருத்தல் அவசியம்.

கார் என்பதற்கு பெட்ரோல் அயல்நாட்டில் இருந்து வரும். ஏற்கனவே அமைந்திருக்கும் ஹ்யூண்டாய் மட்டும் இல்லாமல், கலைஞரின் ஆட்சியில் அமையவிருக்கும் புத்தம்புதிய ஆட்டோமொபைல் உதிரி மற்றும் மொத்த பாக நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தையில் வரவேற்பாக அமையும்.

மனவுளைச்சல் மிக்க நெரிசல் நகர சூழலில் ஓட்டுநரின் அவசியம் ஏற்படும். மகிழுந்துக்கு பழகியபின் பைக், ஷேர் ஆட்டோ வெறுத்துப் போவதால், மாமனார், மாமியார், ஒன்று விட்ட ஓரகத்தியின் அத்தை மகள் என்று கார்களாக பல்கிப் பெருகும் சந்தைப்படுத்தல் நிகழும்.

இதுதானெ பெற்றோர்கள் கணித்தது?
//

இத மட்டும் அவுங்க படிச்சாங்க... சத்தியமா பையனுக்கும் வீடு கட்டி கொடுத்திருப்பாங்க ;)

said...

கொத்தனார், மகனுக்கு அவருடைய மாமனார் வீட்டில் இரண்டு காராஜ் உள்ள வீடு தந்திருப்பார்கள் அதனால் அப்பா 2 கார் வாங்கிதந்திருக்கார்.

said...

"""ஆகா..இங்க பார்ரா
80 பின்னூட்டம் தாண்டினப்புறமும் வண்டி சத்தம் போட்டு போய்க்கே இருக்கு..""""

"""அண்ணே அதுல 41 பின்னூட்டம் இகொவே போட்டுக்கிட்ட கள்ள வோட்டுண்ணே"""...அப்படீன்னு யார்ராது பின்னாலிருந்து சவுண்டு வுடுறது..பிச்சு புடுவேன் பிச்சு.....தம்பி இகொ என்ன கழகத்துல இருக்கரா இல்லை கார்பரேசன் எலக்சன்ல நிக்குறாரா :)))

said...

சரி, இன்னொரு ரவுண்டு ஓட்டுவோம்.!!
இது முழுக்க முழுக்க என் கருத்து மட்டுமே!

ஒரு தந்தை தன் மகளுக்கு என்ன செய்யணும், மகனுக்கு என்ன செய்யணும் என்று முடிவெடுப்பது அவர் உரிமை.

இதில் ஒரு எதிர்பார்ப்புடன் வரும் மருமகளைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவர் செய்திருக்க வேண்டியது இதுதான்.

தன் தந்தையிடம் சென்று, அப்பா, இதுபோல அவர்கள் விட்டில் அவர் மகள்களுக்கு எல்லாம் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுபோல நீங்களும் முடிந்தால் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கணும்.

அதுதான் முறை.

அதைவிட்டு விட்டு இப்போது மாமனாரைப் தவறாகப் படுகிறது.

மற்றவரிடம் போய் இதைப் பற்றி வருத்தப்படுவதும் அவரைச் சற்று தரம் தாழ்த்தியே பர்க்க வைக்கிறது என்பது என் கருத்து.

மேல் விவரங்கள் கேட்காமல், கொடுத்ததில் இருந்தே வூடு கட்டணும் என்று கொத்தனார் விரும்புவதால் இவ்வளவுதான் நான் சொல்லுவேன்.

பெண்களுக்கு ஒரு அசையாச் சொத்தாக இருக்க "வீடு பேறும்", பையனுக்கு நாலு இடங்களுக்குப் போய்வர 2 "வண்டிச் சத்தமும்" கொடுத்தது மிகச் சரியே.

ம்ம்ம்ம்... எத்தினி பேருப்பா ஆட்டோவுல கெளம்பிட்டீங்க??

:))

said...

/* வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. */


கருத்து 1

ரெண்டு காரையும் ஒரு வீடா மாத்திக்க வேண்டீயதுதான்.

said...

/* வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. */


கருத்து 2 க்கான பதிலுக்குமுன் கேள்வி
1

இரண்டு காரோட மதிப்பும்
ஒரு வீட்டோட மதிப்பும் என்ன..?

said...

/* வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. */


கருத்து 3

தற்போதைய வீட்டை தனது காலத்திற்க்கு பிறகு மகனுக்கு தர முடிவு செய்து இருக்கலாம்.

said...

/* வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. */


கருத்து 4

::))



( இது பதிவுக்கு )

said...

//இவுங்க மருமகன் கோவிச்சுக்குவாரு, மருமகள் என்ன பண்ணிட முடியும்னு நினைச்சிருக்காங்க. இது கண்டிக்கத்தக்கது. பெண்ணடிமை சிந்தனை...//

வாங்கய்யா வாங்க. இந்த மாதிரி வித்தியாசமா (அட, அப்படின்னா வித்யாவுக்கு சமமான்னு பொருள் இல்லைங்க!) யோசிக்கற ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தீங்க.

நீங்க எண்ணெயை விடறது இருக்கட்டும், நம்ம மின்னலைத் தவிர லேடீஸ் யாருமே வரலையே. மின்னல் என்ன சொல்லறாங்கன்னு பார்க்கறேன்.

said...

//இத மட்டும் அவுங்க படிச்சாங்க... சத்தியமா பையனுக்கும் வீடு கட்டி கொடுத்திருப்பாங்க ;)//

என்ன சொல்ல வறீங்க வெ.பை.? பையனுக்கு வீடு கட்டிக் கொடுத்து இருப்பாங்களா? இல்லை இவரை வூடு கட்டி இருப்பாங்களா? :)

said...

//கொத்தனார், மகனுக்கு அவருடைய மாமனார் வீட்டில் இரண்டு காராஜ் உள்ள வீடு தந்திருப்பார்கள் அதனால் அப்பா 2 கார் வாங்கிதந்திருக்கார்.//

இதான்யா கால்கரி மூளைங்கறது! (யாரது? இதெல்லாம் சாப்பாட்டு மேட்டர் இல்லை. அவரு சும்மா ஒரு மாட்டுக்கறி பதிவு போட்டா அவரு சம்பந்தப்பட்ட எல்லாமே சாப்பாட்டு ஐட்டம்தானா?)

யாருமே சொல்லாத விஷயத்தை இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்களே. (இப்படி எல்லாம் சொல்லறதுனாலதான் சதா ரணமா?! இந்த பப்ளிக் நியூசன்ஸ் தாங்கலை. தனியா போயி பேசலாம்.)

said...

//.தம்பி இகொ என்ன கழகத்துல இருக்கரா இல்லை கார்பரேசன் எலக்சன்ல நிக்குறாரா :)))//

சங்கர் இதெல்லாம் நாம செஞ்சாத்தான் போலீஸ்கார் தடியை சுத்திக்கிட்டு வருவார். கழகத்துல சேர்ந்து செஞ்சா எல்லாமே சரிதான்.

said...

இலவசக்கொத்தனாரே, எனக்கு கருத்து-1ல் இ.யும் கருத்து-2ல் இ.யும் தான் பிடித்திருந்தது.. அதுவே எனது கருத்தும் ஆகும்.

//தலைப்புக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா, ஒரு பதிலும் இல்லைப்பா. இந்த மாதிரி எல்லாம் பேரு வெச்சாத்தானே வருவீங்க//

ரொம்பச் சரியா சொன்னீங்க இலவசக்கொத்தனாரே

Can you tell me what to do in blogger, to get proper display in firefox. Thanks for your suggestions, IK

said...

//ம்ம்ம்ம்... எத்தினி பேருப்பா ஆட்டோவுல கெளம்பிட்டீங்க??//

நம்ம லெவலுக்கு ஆட்டோ எல்லாம் வராது. நம்மளை வரச் சொல்லிதான் மொத்துவாங்க. அத விடுங்க.

அவங்களுக்கு வீடு கிடைக்க என்ன வழின்னா கேட்டோம்? அவங்க மனவருத்தம் சரியான்னு கேட்டோம். அதை தப்புன்னு சொல்லிட்டீங்க. அதுக்கு மக்கள்ஸ் எல்லாம் என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

said...

// ஒரு தந்தை தன் மகளுக்கு என்ன செய்யணும், மகனுக்கு என்ன செய்யணும் என்று முடிவெடுப்பது அவர் உரிமை.

இதில் ஒரு எதிர்பார்ப்புடன் வரும் மருமகளைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. //

கண்டிப்பாக ஒரு தந்தைக்கும் தாய்க்கும் அந்த முடிவெடுக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் மருமகளுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது இயல்பே.

// அவர் செய்திருக்க வேண்டியது இதுதான்.

தன் தந்தையிடம் சென்று, அப்பா, இதுபோல அவர்கள் விட்டில் அவர் மகள்களுக்கு எல்லாம் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுபோல நீங்களும் முடிந்தால் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கணும்.

அதுதான் முறை. //

அடக் கொடுமையே! நான் இப்படியும் இருக்குமோ என்று நினைத்தேன். ஒருவேளை வீட்டிற்கு வந்த மருமகள் சரியாகக் கொண்டு வரவில்லையே என்று குத்திக்காட்டுவதற்காக பெண்களுக்கு வீடுகளைக் கொடுத்து மகனுக்கு கார் கொடுத்திருக்கிறார்களோ என்று நினைத்தேன். இதைப் பார்த்து நீ போய் ஒங்கப்பா வீட்டுல வாங்கீட்டு வான்னு சொல்லாமச் சொல்ற மாதிரி. அப்படி இருந்திருந்தா அதை விடக் கேவலம் எதுவும் இல்லை. நல்லவேளை அந்தப் பெண்ணும் அப்படித் தூண்டப்பட்டு கணவனின் மானத்தைத் தன் பெற்றோரிடம் அடகு வைக்காமல் இருந்தாளே!

said...

//ரெண்டு காரையும் ஒரு வீடா மாத்திக்க வேண்டீயதுதான்.//

வாம்மா மின்னல். இதைத்தான் நானும் நம்ம பாபாகிட்ட ட்ரை பண்ணினேன். நடக்க மாட்டேங்குதே.....

said...

//இரண்டு காரோட மதிப்பும்
ஒரு வீட்டோட மதிப்பும் என்ன..?//

எனக்குத் தெரியாதேம்மா. இவ்வளவுதான் விபரம். இதை வெச்சு நாம ஒரு முடிவுக்கு வரணும். வாங்க பார்க்கலாம்.

said...

//தற்போதைய வீட்டை தனது காலத்திற்க்கு பிறகு மகனுக்கு தர முடிவு செய்து இருக்கலாம்.//

அதைச் சொல்லி இந்த மனவருத்தத்தைத் தவிர்த்திருக்கலாம்!

said...

என்கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவா, இலவசம். உங்க எல்லா கேள்விகளுக்கு விடை கிடைச்சிடும்... ;-)

said...

//கருத்து 4

::))



( இது பதிவுக்கு )//

சூப்பர் கருத்து. நன்றி மின்னல் :)

said...

//ரொம்பச் சரியா சொன்னீங்க இலவசக்கொத்தனாரே//

வாங்க கார்த்தி. அதான் சரியா வந்துட்டீங்களே. :D

நீங்க இங்க வந்த சமயத்தில்தான் நான் உங்க பதிவுக்குப் போயி எனக்குத் தெரிஞ்சதை சொல்லி இருக்கேன். பாருங்க. அதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா ஒரு பதிவு போடுங்க, நம்ம மக்கள்ஸ் வந்து உதவுவாங்க. நமக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் சாமி.

said...

//கண்டிப்பாக ஒரு தந்தைக்கும் தாய்க்கும் அந்த முடிவெடுக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் மருமகளுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது இயல்பே.//

ஒத்துக்கிறேன் ஜிரா.

இதுக்கு எஸ்.கே. என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்.

நாராயண! நாராயண!!

said...

//என்கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவா, இலவசம். உங்க எல்லா கேள்விகளுக்கு விடை கிடைச்சிடும்... ;-)//


சரியான சமயத்துக்கு வந்து 100 அடிச்சிட்டீங்களே. காத்துக்கிட்டு இருந்தீங்களா! ;)

உங்க அடுத்த பதிவுக்கு காத்துக்கிட்டு இருக்கோம் தலைவா. சூப்பர் மேட்டர் சிக்கியிருக்கு. கதை எப்படி போகுதுன்னு பார்க்கலாம்.

said...

ஆகமொத்தம், நமக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லாத, முன்பின் தெரியாத, யாருமே பார்த்திராத இச்சம்பவத்தில் வரும் மகன் ---- கையாலாகாதாவன், சொந்தக்காலில் சுயமாக நிற்கத்தெரியாதவன், அப்பன் காசை எதிர்பார்த்து நிற்பவன், கோழைப்பயல்.

said...

மருமகள்: வாயாடி, புகுந்த வீட்டைக் குறைகூறுபவள், திமிரு பிடித்தவள், புருஷனுக்கு அடங்கி நடக்காதவள்.

said...

வாங்க வைத்தியரே,

//இச்சம்பவத்தில் வரும் மகன் ---- கையாலாகாதாவன், சொந்தக்காலில் சுயமாக நிற்கத்தெரியாதவன், அப்பன் காசை எதிர்பார்த்து நிற்பவன், கோழைப்பயல்.//

பாத்தீங்களா? அவரு ஒரு வார்த்தை கூட சொல்லலை. அவருக்கு வீடு கிடைக்காதது முன்னமே தெரியுமா தெரியாதா? எதுவுமே தெரியாது. ஆனா எப்படி பட்டம் கட்டறோம் பாருங்க.

பதிவுல கேட்ட கேள்வியே வேற, இது மேட்டரே வேற. என்ன பண்ணறது சொல்லுங்க?

said...

மாப்பிள்ளைகள்: மாமனார் சொத்தை நக்கித் தின்னும் நாய்கள், வரதட்சணை வாங்கிய "இன்னபிற" மகன்கள். இந்த மானங்கெட்ட பிறவிகளை 'நறுக்' செய்யவேண்டும். மருமகன்கள் அல்ல மாமாக்கள்.

said...

வீடு கொடுக்காத மாமனார்: இப்படி ஒரு கையாலாகாத பையனைப் பெற்றதுக்கு தூக்கில் தொங்கி சாகலாம்!

said...

//மருமகள்: வாயாடி, புகுந்த வீட்டைக் குறைகூறுபவள், திமிரு பிடித்தவள், புருஷனுக்கு அடங்கி நடக்காதவள்.//

இதுவும்தான். இருக்கட்டும்.

இந்த மாதிரி மேட்டர் எல்லாம் நம்ம ஊர் தாய்க்குலங்களுக்கு அல்வா மாதிரி இல்லை? ஒரு மெகா சீரியல் வாடை அடிக்கலை? அப்புறமும் ஏன் யாரையுமே காணும்? (மின்னலைத் தவிர)

said...

சபாஷ்! பலே பலே!

முன்பின் தெரியாத நபர்களை முகஸ்துதி செய்வதிலிருந்து, அவர்களைக் காரண காரணிகள் தெரியாமலேயே அக்குவேறு ஆணிவேராக அலசித் தோய்த்து நார்நாராய்க் கிழித்துக் காயப்போடுவது வரை - தமிழ் வலைப்பதிவுலகின் அனைத்து அம்சங்களும் நிறைந்த நிறைவான பதிவைத் தந்த கொத்தனார் பெருமானுக்கு எமது நன்றிகள்.

said...

//மாப்பிள்ளைகள்: மாமனார் சொத்தை நக்கித் தின்னும் நாய்கள், வரதட்சணை வாங்கிய "இன்னபிற" மகன்கள். இந்த மானங்கெட்ட பிறவிகளை 'நறுக்' செய்யவேண்டும். மருமகன்கள் அல்ல மாமாக்கள்.//

பாருங்க. அவங்களைப் பத்தி பேசவே இல்லை, ஆனா அவங்களும் வாங்கிக் கட்டிக்கிட்டாங்க. :(

said...

//வீடு கொடுக்காத மாமனார்: இப்படி ஒரு கையாலாகாத பையனைப் பெற்றதுக்கு தூக்கில் தொங்கி சாகலாம்!//

இப்படி எல்லாம் பேச்சு வருமுன்னு தெரிஞ்சு இருந்தா மனுசன் பேசாம வீடே வாங்கிக் குடுத்து இருப்பாரு, பாவம். இந்த தாக்கு தாக்குறாங்களே மக்கள்ஸ்.

said...

//முன்பின் தெரியாத நபர்களை முகஸ்துதி செய்வதிலிருந்து, அவர்களைக் காரண காரணிகள் தெரியாமலேயே அக்குவேறு ஆணிவேராக அலசித் தோய்த்து நார்நாராய்க் கிழித்துக் காயப்போடுவது வரை - தமிழ் வலைப்பதிவுலகின் அனைத்து அம்சங்களும் நிறைந்த நிறைவான பதிவைத் தந்த கொத்தனார் பெருமானுக்கு எமது நன்றிகள்.//

முதல்ல ஒரு சந்தேகம். நம்மளை வெச்சு காமெடி கீமடி பண்ணலையே?

இதுக்கு பதில் சொல்லுங்க. அப்புறம் மத்தது எல்லாம் பேசுவோம். என்னமோ நைசா பேசி, என்னை எங்கயோ கூட்டிக்கிட்டு போற மாதிரி தெரியுது. வேணாம் தலை. எனக்கு அவ்வளவு எல்லாம் தாங்காது....

said...

கொத்ஸ்,

எந்த ஒரு செயலையும் தடாலடியாக சரி அல்லது தவறு என்று தீர்ப்பு சொல்வது தவறு.

தந்தை தன் மற்ற அசையும்/ அசையா சொத்துக்களை என்ன செய்தார் அல்லது செய்வதாக இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் பெற்றவர்கள் பாரபட்சமாக நடப்பதாக நினைக்கிறோம். அவர்களுக்கு பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியுள்ளது. நமக்கு ஒப்புதலில்லாத போதும் நமக்கு சாதகமாக இல்லாத போதும் பெற்றவர்கள் என்ற நிலையில் அவர்கள் செய்வது சரி என்றே (பல சமயங்களில்) நம் உள்மனம் சொல்கிறது.

மருமகள் இதைத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பார்ப்பதற்கு முன்பு அவர்கள் குடும்பப் பின்னணி, பழக்க வழக்கங்கள் , மதிப்பீடுகள் மற்றும் இப்படி செய்வத்ற்கு ஏதேனும் விசேஷ காரணம் உண்டா என பலவற்றையும் கொஞ்சம் ஆராய்ந்து ஒரு தந்தை என்ற முறையில் அவரது தரப்பு நியாயத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

(இதற்காக நான் அந்த தந்தை செய்தது சரிதான் என்று சொல்லவில்லை.)

There is not enough information

ரொம்ப serious ஆ பதில் சொல்லியிருக்கேனோ ?)))

said...

வாங்க ஜெயஸ்ரீ,

மகளிர் அணியிலிருந்து கருத்து சொல்ல யாரையுமே காணுமேன்னு பார்த்தேன். நல்ல வேளை கொஞ்சம் லேட்டா வந்தாலும் வந்து மானத்தைக் காப்பாத்திட்டீங்க.

இன்னைக்கு இந்த பதிவு பக்கத்தில் வரவே இல்லை அதான் உங்க பின்னூட்டத்தை வெளியிட கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு. சாரி.

said...

நீங்க போதுமான விபரம் இல்லை என்பது சரிதான். இருக்கற விஷயத்தை வெச்சு பார்த்தோமானால், அவர்கள் குடும்பத்தில் ஒரு வழக்கமாக வீடு கொடுத்து வருவதால், கொடுக்கப் போவதில்லை என பக்குவமாக முன்னமே சொல்லி இருந்தால் இது போன்ற மனக்கசப்புகளை வராமல் செய்து இருக்கலாம் என்பதே எண்ணம்.

பதிலும் சீரியஸா போச்சோ? )

said...

அப்பா அம்மா இருக்கற வீடு 'கடைசியிலே அவுங்க வீடு பேறு அடையும்போது' மகனுக்கு
வருங்கறதாலே வீடு கொடுக்காம இருந்துருக்கலாம்..
இப்ப என்னவாம்? காரு வேண்டாமாமா?
நம்ம அட்ரஸுக்கு அனுப்பிறச் சொல்லுங்கோ:-)))

said...

வாங்க டீச்சர். இருக்கிற ரெண்டு காரை எவ்வளவு பேர்தான் கேட்பீங்க? சரி. யு ஆர் இன் தி க்யூ. ப்ளீஸ் வெயிட். நீங்கள் வரிசையில் இருக்கிறீர்கள். தயவு செய்து காத்திருக்கவும்!

அந்த மாதிரி ஐடியா வெச்சிருந்தாங்கன்னா மொதல்லயே சொல்லி இருக்கலாமில்ல? அதாங்க என் பாயிண்டு.

said...

இதில இன்னொரு விஷயமும் இருக்கு. எங்கே நம்ம மருமகன்கள் வீட்டோட மாப்பிள்ளையா வந்து டேரா போட்டுடக்கூடாதேன்னு முன் ஜாக்கிரதையா இந்தாங்கடா ஆளுக்கொரு வீடுன்னு வாங்கிகொடுத்திருக்கலாம்.

said...

ஆஹா! அப்படி போடுங்க ஜெயஸ்ரீ. இதுதான் உண்மையான காரணமுன்னு நினைக்கிறேன். :D

said...

இது இன்னும் அடங்கலியா?!!!

அப்பனுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கய்யா!

தனி மனித சுதந்திரம் கேள்வியாவதை நான் எதிர்க்கிறேன்!

அவன் சொத்து.
அவன் என்னவானாலும் செய்ய உரிமை உண்டு!

இதைக் கேள்வி கேட்க நீங்கள் யார்?

அந்த மருமகள்தான் யார்?

[என்ன கொத்தனாரே! இன்னோரு ரவுண்டுக்கு சரியாத்தானே கேள்வி கேட்டிருக்கேன்?:))]

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு.

இது மன்னார் சொன்னது!

said...

வாங்க எஸ்.கே.

இப்போதான் மகளிர் அணி மூழிச்சிக்கிட்டு இருக்காங்க. எங்க போகுதுன்னு பார்க்கலாம்.

மன்னார் சொன்னான்னு என்ன வேணா பண்ணாதீங்க.அவரு எங்கிட்ட சொன்னது
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ! :)

said...

இப்ப என்ன வீடு முக்கியமா கார் முக்கியமான்றது பிரச்சினையா, ஆண்பிள்ளைக்கு எவ்ளோ பெண்பிள்ளைக்கு எவ்ளோன்றது பிரச்சினையா?

said...

வாங்க பெனாத்தலாரே, இப்போதான் வழி தெரிஞ்சுதா? எல்லாம் அடிச்சித் தொவைச்சு, அலசி காய போட்ட பின்னாடி இப்படி வந்து கேட்கறீங்களே.

காரா வீடான்னு ஒரு கேள்வியா? யாரைக் கேட்டாலும் வீடுன்னுதானே சொல்லப் போறாங்க.

ஆண்பிள்ளைக்கு பெண்பிள்ளைக்கு என பிரித்து பார்க்கிறேன் எனச் சொல்லி நம்ம பேருல அவதூறு வழக்கு வராமா விட மாட்டீங்க போல இருக்கே. :)

விஷயம் என்னைப் பொருத்த வரை இதுதாங்க.

மத்தவங்களுக்கு செஞ்சா மாதிரி இவங்களுக்கு செய்யாததுனால இவங்களுக்கு இருக்கிற வருத்தம் சரிதானா?

செய்ய போறது இல்லை என முடிவு செய்திருந்தால், அதை பக்குவமாக இவங்க கிட்ட பெற்றோர்கள் சொல்லி இருக்கணுமா வேண்டாமா?

என்ன சொல்லறீங்க?

said...

//வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. //

ஆஹா...இது அதை விட டேஞ்சரா இருக்கே கொத்ஸு?
:)

said...

வாங்கய்யா கைப்பு. வெண்பா எழுதறதுல என்ன டேஞ்சரைக் கண்டீரு? இல்லை இந்த பதிவுலதான் எந்த டேஞ்சரைக் கண்டீரு? இவ்வளவுக்கும் உனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை. ஒழுங்கா வந்து கருத்து சொல்லப் பாருங்க.

said...

// பின்னர் மறைமுகமாக இது பற்றிய பேச்சு வந்த பொழுது ஒரு ஆண்பிள்ளை தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும். //
அப்படி என்றால் மாமனார் ஏன் 2 கார் வாங்கிக் கொடுத்தாராம் ? வீடு கொடுத்திருந்தால் கணவர் அங்கே தன் சொந்தக் காலில் நின்றிருப்பார் என்று சொல்கிறாரா அந்தப் பெண்மணி ?
:-)))

said...

//அப்படி என்றால் மாமனார் ஏன் 2 கார் வாங்கிக் கொடுத்தாராம் ? வீடு கொடுத்திருந்தால் கணவர் அங்கே தன் சொந்தக் காலில் நின்றிருப்பார் என்று சொல்கிறாரா அந்தப் பெண்மணி ?//

அந்த பொண்ணு சொல்லலையே..அவங்க மாமனார் சொன்னதைத்தானே சொன்னாங்க. :-D

said...

Hi kothus, Nalla thalaipu.Antha appa avaroda nalu ponnukaluku mattum veedu koduthudu payanauku kodukalaikarathu thavarana mudivu. For example:entha oru animals eduthukitainganalum irai(food) thedi vanthu thanoda ella kulanthaikalukum SAMAMA(EQUAL)kodukum.entha arivu ANIMALS ke irukum pothu 6 arivu manithan mattum thanudiya kulanthaikal kita para patachama nadakarathu rompa varuthamana seyal.10 kaasu enralum irukarathai anuboda ellarukum kodupathu than murai.Anything wrong in my word just forgive me.

said...

வாங்க மாயா,

வந்து உங்க கருத்தை சொன்னதுக்கு நன்றி. உங்க கோணம் எல்லா பசங்களையும் ஒண்ணா பாவிக்கணும். அது ஒரு விதத்தில் சரிதான்.

ஆனா உங்க உதாரணத்தையே எடுத்துக்கிட்டா நல்ல பலசாலியான குட்டியை தள்ளி விட்டுட்டு கொஞ்சம் நோஞ்சான் குட்டியை ஒரு தாய் மிருகம் கவனிக்கறது இல்லையா? அந்த மாதிரி இவங்களும் அந்த பையன் பேரில் இருக்கிற நம்பிக்கையால அப்படிச் செஞ்சிருக்கலாம்.

என்ன இருந்தாலும் இந்த மாதிரி செய்யப் போகிறேன் என அந்த பிள்ளையிடம் சொல்லி இருந்தால் இந்த மாதிரி சங்கடமான ஒரு சூழ்நிலையைத் தடுத்திருக்கலாம். இதுதான் என் கருத்து.

//Anything wrong in my word just forgive me.//

உங்க கருத்தைச் சொல்லத்தானே இந்த விவாதமே. அப்புறன் என்னத்துக்கு இதெல்லாம்?

said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post.html

அன்புள்ள கொத்ஸ்,

மகாலட்சுமி பற்றிய இறுதி பதிவு. பாருங்களேன்.

அன்புடன்
ரவி