Monday, October 02, 2006

புதுச்சேரி கச்சேரி... (கொஞ்சம் பெரிய பதிவு)

இரண்டு விஷயங்கள் பத்திப் பேசலாம்.

முதலில் இந்த மாதத்திலிருந்து பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படப் போகிறதாம். இந்த பெயர் மாற்றம் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில் நுழையாமல் மாற்றி வைத்த பேரை நாம் மாற்றுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரிய நகரங்களின் பெயர் மட்டும்தான் மாறுகிறதா? சிறிய ஊர்களின் பெயர்களும் மாற்றப் படுகின்றனவா? உதாரணமாக வத்திராயிருப்பின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதா? இப்படி மாற்றுவதற்கு என்ன செலவாகிறது? இதற்காக அங்கு இருக்கும் எல்லா அலுவலகங்களும் தங்கள் லெட்டர்ஹெட், விசிட்டிங் கார்ட் உட்பட எல்லாவற்றையும் மாற்ற நிர்பந்திக்கப் படுகின்றனரா? அதனால் விளையும் பொருள் சேதமென்ன? இந்த மாதிரி பெயர் மாற்றத்தினால பாதிக்கப் பட்ட யாராவது சொல்லுங்களேன்.

புதுச்சேரி கச்சேரி அப்படின்னு பேரு வெச்சாச்சு. அதான் புதுச்சேரி பத்தி பேச வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஏன் வலையுலகில் பேசப்படறது இல்லைன்னு அப்படின்னு தெரியலை. பேசலாமே அப்படின்னு சொல்லறவங்க எல்லாம் வாங்க, இப்போ பேசலாம்.

இன்னைக்கு அடுத்த டாபிக் கச்சேரி. இன்னிக்கு கூட யாரோ வலைப்பதிவர் இந்த வார்த்தையை நீதிமன்றம் என்ற பொருளில் உபயோகப்படுத்தியுள்ளதைப் படித்தேன். இதைப் பல பழைய திரைப்படங்களிலும் இந்த பொருள் வருமாறு உபயோகப்படுத்தியதையும் கவனித்துள்ளேன். கன்னடத்தில் கூட கச்சேரி என்றாம் நீதிமன்றம்தான் என நினைக்கிறேன். இந்த வார்த்தை எப்படி சங்கீத கச்சேரி என்ற பொருளில் வருமாறு மாறியது? யாராவது விளக்குங்களேன்.

கச்சேரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நம்ம பெரியவர் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரைதான். நிலாச்சாரலில் வெளிவந்த அந்த கட்டுரையை அவர் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன். (இதெல்லாம் போடலையின்னா வலையுலகில் போராட்டம் நடக்குமாமே ...:) )

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்

எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே, நம்ம சிந்து பைரவி ஜே.கே.பி. மாதிரி. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்.

என்ன செய்யணும் என்பதற்கு முன்னால் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கச்சேரிக்கு என்று போனால், உள்ளே இருப்பது முக்கால்வாசி கிழங்கள்தான். அந்த வழுக்கைத் தலைகளையும், நரைத்த முடிகளையும் பார்த்தால், நமக்கும் வயசாகி விட்டதோ என்ற பயம்தான் வருகிறது. அதிலும் பாதி பேர் வீட்டில் மருமகள் பாடும் கோபப் பாட்டைக் கேட்க மனமில்லாமல் இங்கே வந்துவிட்டு மண்டையாட்டி ரசிப்பது போல் ஒரு குட்டி தூக்கம் போடும் வெரைட்டி. இவங்களைத்தாண்டி பார்வையை ஓட விட்டால், ராகம் பாடும் போது நெற்றி சுருக்கி, புருவத்தைத் தூக்கி, பின் கீர்த்தனை வரும் போது கர்நாடிக் கான்ஸர்ட் கைடில் அவசரம் அவசரமாய் ராகம் தேடும் கத்துக்குட்டிகள் ஒரு புறம். பட்டு புடவை சரசரக்க வந்து 'கோமதி மாமி பொண்ணு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே' என வம்படிக்கும் மாமிகள் மறுபுறம். நடு நடுவே ஒன்றும் புரியாவிட்டாலும், ஓரிடத்தில் அசையாமலிருந்து் எதையோ அனுபவிக்கும் குர்த்தா பைஜாமா வெள்ளைக்காரர்கள், கூடவே குங்கும நெற்றியும், கனகாம்பரமும், சல்வாருமாய் அவர்கள் சகதர்மிணிகள். இவர்களோடு இந்த சபாவில் பாடுவது யார் என்பதை விட காண்டீன் போடுவது யார் என்று ஆராய்ந்து வைத்துக் கொண்டு தனியாவர்த்தனத்தின் போது வெளிநடப்பு செய்து, பாடகர்களின் பிளட் பிரஷரை ஏத்தும் சாப்பாட்டு ராமர்கள். கடைசியாய், எனக்கு இவரைத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளவே வந்து, தப்பு தப்பாய் தாளம் போடும் பந்தா பார்ட்டிகள். இதுதான் கூட்டம்.

சரி இப்போ கச்சேரிக்கு வருவோம். வர்ணம், ஒரு பிள்ளையார் பாட்டு, ராக ஆலாபனையுடன் ஓரிரண்டு கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரங்கள், நடு நடுவே ஒரு வேகமான பாட்டு, தனி ஆவர்த்தனம், ராகம் - தானம் - பல்லவி (முடிந்தால்), துக்கடாக்கள், ஒரு தில்லானா, மங்களம் என ஒரு மாற்றமே இல்லாத ஒரு பழம் பாணி. இதில் 'சாருக்கு ஒரு காப்பி', என்பது போல் வரும் நேயர் விருப்ப சீட்டுகளும், அது தமிழில் வந்தால் படிக்கத் தெரியாமல் முழிக்கும் பாடகர்களும் ஒரு தனி காமெடி ட்ராக். சில இடங்களில் தமிழ்ப் பாட்டு, தமிழ்ப் பாட்டு என்ற ஏலம் வேறு தனியாக ஒரு பக்கம் நடக்கும். இவ்வளவுதான். அப்புறம் எங்கயிருந்தய்யா வரும் கூட்டம், அதுவும் இளைஞர் கூட்டம்?

சும்மா புதுசு புதுசா மாற்றங்கள் வேண்டாமோ? சாம்பிளுக்கு சிலது பார்ப்போம்.

- இனிமேல் பாடகர்கள் உட்கார்ந்து கொண்டு பாடக்கூடாது. சும்மா மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி நடனமாடிக் கொண்டே பாடவேண்டும். அதிலும் பாடகர்களும், பாடகிகளும் சேர்ந்து கும்பலாய்ப் பாடினால் இன்னும் விசேஷம். கூடவே துணைப்பாடகர்கள், பாடகிகள் எல்லாம் வெள்ளை கவுன் போட்டுக் கொண்டு பின்னாடி ஆடலாம்.

- அதிலும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உடை அணிந்து கொண்டு வந்தால் இண்டிரஸ்டிங்காய் இருக்கும். இதற்குத் தனியாய் ஸ்பான்ஸர்ஷிப் வேறு கிடைக்கும். பாடகிகள் அட்லீஸ்ட் ஒரு ஜன்னல் வைத்த ஜாக்கெட்டாவது போட்டுக் கொண்டு வர வேண்டும். அப்போதான் அதை பார்த்து காமெண்ட் அடிக்க ஒரு தாய்மார் கூட்டம் வரும்.

- ராகமாலிகை மாதிரி பாகவதர்மாலிகை என்று ஒரு முயற்சி செய்யலாம். ஒரே பாட்டை ஐந்தாறு பாகவதர்களைக் கொண்டு் பாட வைக்காலாம். அதிலும் ஹிந்திக்காரர்கள் இரண்டு பேர் வந்து முக்கி முக்கி பாடினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

- இரு பாடல்களுக்கு நடுவே ஒரு சேஞ்சுக்கு ஃபேஷன் ஷோ, மிஸ். கச்சேரி் என வெரைட்டி தரலாம்.

- ஸ்வரம் பாடும் போது நடுவில் கேட்பவர்களையும் பாடச் சொல்லி, கச்சேரியை இண்டராக்டிவாகச் செய்யலாம்.

- வயலின், மிருதங்கம், கஞ்சிரா என ஒவ்வொரு பாட்டுக்கும் வேறு வேறு ஆட்களை மேடைக்கு நடுவே கொண்டுவந்து வாய்பாட்டுக்காரரை ஒரு பக்கமாகத் தள்ளலாம். ஒரு வித்தியாசமாகவும் இருக்கும். சில பாடகிகள் மேல் ஸ்தாயியில் பாடும் போது, முகம் அஷ்டகோணலாய் போவதை பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்காது.

- சும்மா 20 ரூபாய், 50 ரூபாய் என வெறும் டிக்கெட் போடாமல் தூங்குபவர்களுக்கு ஸ்பெஷலாய் பெர்த் டிக்கெட் குடுக்கலாம். அப்புறம் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று நல்ல பணம் பண்ணலாம். 65 வயதுக்கு மேலிருந்தால் லோயர் பர்த் கியாரண்டி எனப் புதுத் திட்டம் கொண்டு வரலாம். கூடவே, குறட்டை வித்துவான்களுக்கென, ஸவுண்ட் ப்ரூப் கம்பார்ட்மெண்ட் எல்லாம் போடலாம். நல்ல ஐடியாவாய் இருக்கும்.

- அப்படியே மெயின் ராகம் முடிஞ்சா மசால் தோசை, துக்கடா பாடும்போது பக்கோடா என்ற கணக்கில் முன்பே ஆர்டர் வாங்கி சீட்டுக்கு வந்து சப்ளை செய்தால் தனியாவர்தனத்தின் போது வாக்கவுட் செய்பவர்கள் இல்லாமல் செய்யலாம். புதுசா, செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈயப்படும்ன்னு விளம்பரம் எல்லாம் கூட செய்யலாம்.

- புதிதாய் ஒரு பாட்டை பாட முயலுமுன் 'கர்நாடக சங்கீத உலகில் முதன்முறையாக' என்று அடிக்குரலிலோ ' சும்மா நச்சுனு இருக்கு இந்த பாட்டு' என்றோ விளம்பரம் செய்யலாம்.

- கச்சேரியின் இறுதியில் டிக்கெட்டை குலுக்கி போட்டு பரிசு தரலாம். கடைசி வரை கூட்டம் இருக்கும். கூடவே இன்றைய கச்சேரியின் மூன்றாவது பாடல் எந்த ராகம் என்ற ரேஞ்சில் கேள்விகள் கேட்டு ரகசிய புதையல் எல்லாம் குடுக்கலாம்.

- இன்னும் மங்களம் முதலில் என்று ஆரம்பித்து கடைசியாய் வர்ணம் பாடி முடிக்கலாம்.

- ரொம்ப முக்கியமான கச்சேரிகளுக்கு தலைக்கு 50 ரூபாய், பிரியாணி பொட்டலம் என ரேட் பேசி லாரி லாரியாய் ஆள் சேர்க்கலாம்.

முதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க. இதுக்கும் கூட்டம் வரலைன்னா திருப்பி வாங்க, இன்னும் கொஞ்சம் சொல்லறேன்னு சொன்னேன். என்ன தப்பா சொல்லிட்டேன்? ஏன் அப்போ போனவரை இன்னும் காணும்? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.

63 comments:

said...

U 2 koths???

said...

இகொ,

ஒரு + குத்து.

நன்றி

said...

U2 இல்லை பெருசு. இது கர்நாடக சங்கீதம். :D

எதுக்கு இப்ப டென்ஷனாகறீங்க. விஷயத்தைப் பட்டுன்னு சொல்லுங்க.

said...

சிபா,

வருகைக்கும் குத்துக்கும் நன்றி. ஆமா அவ்வளவு பெருசா எழுதினேனே வேற ஒண்ணுமேவா இல்ல சொல்ல? :)

said...

ஆரம்ப வரியைப்ப்படிச்சுட்டு இதென்னடா ,
என் புருஷனும் கச்சேரிக்குப் போறார்'னு சொல்லப்போறிங்களோன்னு
பார்த்தேன்.

அப்புறம்தான் மேலே .... இல்லெ இல்லே கீழே படிக்கப் படிக்க புரிஞ்சு போச்சு:-))))

பட்டுப்புடவைத் தலைப்பாலெ அப்பப்ப காதுலெஇருக்கும் வைரத்தோடை
தொடைச்சுக்கறதைப் பத்தி ஏன் ஒண்ணும் சொல்லலை?

said...

//ஆரம்ப வரியைப்ப்படிச்சுட்டு இதென்னடா ,
என் புருஷனும் கச்சேரிக்குப் போறார்'னு சொல்லப்போறிங்களோன்னு
பார்த்தேன்.//

அப்படி எல்லாம் விட்டுருவோமா டீச்சர்? ஆமாம் உங்க புருஷனுக்கு கச்சேரிக்கு ஏது நேரம். அவரு போகணுமுன்னா சைனாவில் இல்ல கச்சேரி நடத்தணும். :)

//பட்டுப்புடவைத் தலைப்பாலெ அப்பப்ப காதுலெஇருக்கும் வைரத்தோடை
தொடைச்சுக்கறதைப் பத்தி ஏன் ஒண்ணும் சொல்லலை?//

பாத்தீங்களா. அனுபவம் பேசுது. இருக்கட்டும் டேட்டாபேஸில் போட்டு வச்சுக்கறேன். எப்பவாவது அந்த வைரத்தோடு பத்தி எழுதாமலேயா போவீங்க. அப்ப வெச்சுக்கறேன் விளையாட்டை. :)

said...

இப்பதிவு தமிழ் வலைப்பதிவுலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது!

வாழ்த்துகள்!

said...

ஆமாம் டீச்சர், அந்த ஜன்னல் வெச்ச ஜாக்கெட் பத்தி ஒண்ணுமே சொல்லலையே. இங்க ஒண்ணும் சொல்லாம உங்க ரெடிமேட் பகுதியில் எதாவது சொன்னீங்க அப்புறம் காப்பிரைட் கேஸ்தான். ஆமா!

said...

ஆமாம், இங்கே இருக்க குளுருக்கு என்னத்தை ஜன்னல்?
கதவு , ஜன்னல் எல்லாமே மூடிவச்சாலும் எலும்பையே நடுக்குதே......

ஜன்னல் வச்சுக்கிட்டா யாராவது அதைப் பார்த்து அப்ரிஷியேட் செய்யவேணாமா? ஸ்வெட்டர், கோட் எல்லாம் போட்டு மூடுனா என்னப்பா பிரயோஜனம்?

said...

//இப்பதிவு தமிழ் வலைப்பதிவுலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது!//

யோவ் என்னய்யா சொல்ல வர? கொஞ்சம் புரியும் படியா சொல்லித் தொலைக்கக்கூடாதா? நேராச் சொன்னாலே சரியாப் புரியாது, இதுல இப்படி எல்லாம் உகு இருந்தா யாருக்குத் தெரியும்?

said...

ஏங்க இலவசம்...

நம்ம ஊர் பேரை நடுவுல எடுத்துப் போட்டிருக்கீங்க....

அப்ப நீங்க தீபாவளி மலரும் நினைவுகள் எழுதுன அவர்தானா ? :))

ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...ஆரம்பிச்சுட்டாங்கையா அப்படீன்னு வடிவேலு கணக்கா நீங்க சொல்ற மாதிரி இருக்கே ???? இல்லை மனப்பிரமையா :)

said...

//ஆமாம், இங்கே இருக்க குளுருக்கு என்னத்தை ஜன்னல்?
கதவு , ஜன்னல் எல்லாமே மூடிவச்சாலும் எலும்பையே நடுக்குதே...... //

இன்னுமா குளிர் விடலை?! (உங்களுக்கு சொல்வேனா, நான் தட்ப வெட்பத்தைத்தான் சொன்னேன்.) சரி, இப்போ இல்லைன்னாலும் சமீபத்தில் பூனாவில், கேரளாவில் அப்படின்னு அடிச்சு விட வேண்டியதுதானே?

said...

//நம்ம ஊர் பேரை நடுவுல எடுத்துப் போட்டிருக்கீங்க....

அப்ப நீங்க தீபாவளி மலரும் நினைவுகள் எழுதுன அவர்தானா ? :))//

நான் அவரில்லை. எழுத மாட்டேன். நம்புங்க. :)

ஆமா நீங்க எந்த ஊரு? புதுச்சேரியா வத்திராயிருப்பா?

said...

இலவசமே கொத்சே....மீண்டு வந்தாயா...மீண்டும் வந்தாயா...இலவசமாய் அனைவரும் பரிசு தரும் வேளையில் இலவசமாய்ப் பதிவு தருகின்ற கலியுகக் கர்ணனே! அண்ணா எழுதிய கட்டுரையை தன் கட்டுரையில் இணைத்த வலையுலக கங்கை அமரனே!

கச்சேரி என்றால் பெங்களூரில் நீதிமன்றந்தான். தமிழில் அது பாட்டுக்கு மட்டும் வழங்கப்படும் காரணம் நான் அறியேன்.

ஆனால் ஒன்று...காலத்திற்குத் தக்க மாற வேண்டிய ஒன்று பாரம்பரிய இசை. இல்லையென்றால் அவ்வளவுதான்.

said...

சென்னைக் கச்சேரிக்குப் போட்டியா புதுச்சேரி கச்சேரியா.. வாங்க கொத்தி.. ச்சீ ஒரு குத்திப் பாத்துருலாம்.. கூப்பிடுங்க கானா உலகுவை.. அடிக்கிற அடியில் தாரைத் தப்பட்டைகள் கிழிந்துத் தொங்க வேண்டும் ஆமாம்..

said...

பதிவு பெருசாத் தான் இருக்கு. இப்ப படிச்சு முடியாது போல இருக்கு. விரைவில் முழுவதும் படித்துவிட்டுப் பின்னூட்டம் இடுகிறேன். :-)

said...

//இலவசமே கொத்சே....மீண்டு வந்தாயா...மீண்டும் வந்தாயா...இலவசமாய் அனைவரும் பரிசு தரும் வேளையில் இலவசமாய்ப் பதிவு தருகின்ற கலியுகக் கர்ணனே! அண்ணா எழுதிய கட்டுரையை தன் கட்டுரையில் இணைத்த வலையுலக கங்கை அமரனே!//

அடடா, தமிழ் சும்மா துள்ளி விளையாடுதே...:)

//கச்சேரி என்றால் பெங்களூரில் நீதிமன்றந்தான். தமிழில் அது பாட்டுக்கு மட்டும் வழங்கப்படும் காரணம் நான் அறியேன்.//

தமிழில் அது பாட்டுக்கு மட்டும் இல்லைங்க. நீதிமன்றம் என்ற பொருளில் வழங்கி வந்திருக்கு. இப்போதான் அப்படி இல்லை.

//ஆனால் ஒன்று...காலத்திற்குத் தக்க மாற வேண்டிய ஒன்று பாரம்பரிய இசை. இல்லையென்றால் அவ்வளவுதான். //

சரி. என்ன மாறணும்? அதைச் சொல்லுங்க. அப்படி மாறிக்கிட்டே இருந்தா அது தற்கால இசையாத்தானே இருக்கும்? பாரம்பரிய இசையா இருக்குமா?

said...

//சென்னைக் கச்சேரிக்குப் போட்டியா புதுச்சேரி கச்சேரியா.. //

தம்பி தேவி, உனக்கு நான் போட்டியா? ஓர் உறையில் இரு வாட்களாக இருப்பவர் அல்லவா நாம்? கச்சேரி என வலைப்பூ வைத்திருக்கும் உன்னோடு கச்சேரி பதிவு போடும் நான் போட்டியிடத்தான் முடியுமா? கயவர்களின் நயவஞ்சகப் பேச்சைக் கேட்டு அண்ணனிடன் இப்படி அறைக்கூவல் விடாதே. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பார்கள். அதற்காக நீ இப்படியெல்லாம் ஆடாதே. (போதும்பா மூச்சு வாங்குது, வயசாகிப் போச்சா, பேச முடியலை.)

said...

//பதிவு பெருசாத் தான் இருக்கு.//
அதான் நாங்களே சொல்லிட்டோமில்ல.
// இப்ப படிச்சு முடியாது போல இருக்கு.//
அதான் தெரியுமே. வீட்டுல இருக்கும் போது இதெல்லாம் செய்ய முடியுமா? அப்புறம் அலுவலகம் சென்றால் என்ன செய்வது? ;)
// விரைவில் முழுவதும் படித்துவிட்டுப் பின்னூட்டம் இடுகிறேன். :-)//
ஐயாம் தி வெயிட்டிங்.

said...

இலவசம் கச்சேரி என்பது ஒரு இடம். அதுவும் பொது மக்கள் கூடும் இடம்.அந்தக் காலத்தில் நீதிமன்றங்களை பொது நீதிமன்றங்கள் என்றுதான் கூறுவார்கள்.நீதிபதி பொதுமக்கள் முன்புதான் தனது முடிவை அறிவிப்பார்
பிற்காலத்தில் சங்கீதத்தையும் கேட்பதற்காக பொது இடத்தில் கூடுவார்கள் அதனால் அந்த இடமும் கச்சேரி என்றுஅழைக்கப்படுகிறது.கொத்ஸ் என்ன உனக்கு தெரியாதா "ஆடிட்டர்" என்ற வார்த்தை எப்படி வந்ததுஎன்று.கணக்கு,வழக்குகளை பொது இடத்தில்பொது மக்கள்முன்பு படிப்பார்கள் அதை ஒருவர்கேட்டு தவறை சுட்டிக்காட்டுவார் அவர்தான்"ஆடிட்டர்"அது மாதிரிதான் கச்சேரியும். இபொழுதுகூட மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இரவு வரவு செலவு கண்க்குகளை அம்மன் சன்னதியில் பொது மக்கள் முன்பு படிப்பார்கள்

said...

இப்பதிவு குமுகத்தில் நிலைபெற்றுள்ள பல பொய்யான கட்டுமானங்களை தவிடு பொடியாக்கும்விதமாக காரத்துடன் எழுதப்பட்டிருப்பதால் பலநூற்றாண்டுகளாய் மாறாக் கறைகளாய் படர்ந்துகிடக்கும் பல விழுமியங்கள் இனி கேள்விக்குட்படுத்தப்படும் என்பது திண்ணம்.
ஆகவே இத்தகைய உயர்ந்த பதிவு தமிழ்ப்பதிவுலகை அடுத்த நிலைக்கு, புதியதொரு விவாதத்தளத்திற்கு, நுட்பமான ஒரு கருத்துக்களத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று கூறியிருந்தேன். இதில் உமக்கு என்ன புரியாமல் போனதென்று இங்கு குலவை கட்டுகிறீர் கொத்தனாரே?

said...

தி.ர.ச. - கச்சேரி என்பது பொது மக்கள் கூடும் இடம் என்ற பொருள் இது வரை தெரிந்ததில்லை. இப்பொழுது புரிகிறது. இதனால்தான் சீட்டு விளையாடுவதை சீட்டுக் கச்சேரி என்கிறார்களா? ஓக்கே.ஓக்கே.

சரி. அண்ணனின் கட்டுரை பத்தி ஒண்ணுமே சொல்லலையே....

said...

யோவ் இராம்ஸு,

ஒழுங்கா படிச்சோமா, வேலைக்குப் போனோமான்னு இல்லாம ஊரைச்சுத்திக்கிட்டு திரிஞ்சா இப்படித்தான் எதாவது கோக்கு மாக்கா தோணும். என்ன சொல்ல வறீரு? குமுகாயம், வெங்காயம், பெருங்காயமுன்னுகிட்டு...தமிழில் சொல்லுமய்யா...

said...

/////////இலவசக்கொத்தனார் said...

நான் அவரில்லை. எழுத மாட்டேன். நம்புங்க. :) ///////////

நம்பிட்டேன்..:) வேறென்ன பண்ண?

/////ஆமா நீங்க எந்த ஊரு? புதுச்சேரியா வத்திராயிருப்பா?//////

ஹி..ஹி..ரெண்டுமில்லைங்க...நம்ம புகுந்த வீடு வத்ராப்பு...அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நம்ம ஊரு அப்படீன்னு சொல்லிட்டேன் :)

said...

கொத்ஸ்,
மன்னிச்சுக்கங்க டயர் பஞ்சர் ஆயிடுச்சு. பஞ்சர் ஒட்டிட்டு மூச்செறைக்க கச்சேரிக்கு லேட் ஆயிடுச்சுன்னு டீ கூட சாப்புடாம ஓடியாரேன். கீழே பாருங்க புதுச்சேரியைப் பத்தி நான் அந்த காலத்துல எழுதி வச்சது. உண்மையிலேயே அது புதுச்சேரி தான் "u" "n" ஆனதுனால புதுச்சேரி பாண்டிச்சேரி ஆகிப்போச்சு.

பாண்டிச்சேரி

கச்சேரி பத்திய ஆலோசனைகளைப் படிச்சதும் என் மண்டைக்கு ஏனோ அந்த சிட்டிபாபு அர்ச்சனா காமெடி டைம்ல சொல்லற ஐடியா மணியின் யோசனைகள் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பேசாம சன் டிவிக்குப் பெரியவரை எழுதிப் போடச் சொல்லுங்க
:)

said...

//.நம்ம புகுந்த வீடு வத்ராப்பு..//

ஆஹா அண்ணன் இப்படித் துள்ளறாரே. ஏதேனும் விஷ்யம் இருக்கணுமேன்னு நினைச்சேன், இருக்கு பாருங்க! :D

சங்கர், இதுதான் நம்ம பதிவுக்கு முதல் முறையின்னு நினைக்கறேன். அடிக்கடி வந்து போங்க.

said...

கைப்பு, நானே எழுத சரக்கில்லாம கட் பேஸ்ட் பண்ணறேன். அதுல உமக்கு இலவச விளம்பரமா? நல்லா இரும் சாமி. ஆனா அந்த பதிவில் போட்ட விஷயம் எனக்கு இது வரை தெரியாத ஒன்று. என்னடா இது புதுச்சேரிக்கும் பாண்டிச்சேரிக்கும் சம்பந்தமே இல்லையேன்னு நினைச்சிருக்கேன். இப்போ புரியுது. டேங்க்ஸ் தல!

said...

//கைப்பு, நானே எழுத சரக்கில்லாம கட் பேஸ்ட் பண்ணறேன். அதுல உமக்கு இலவச விளம்பரமா? நல்லா இரும் சாமி. //

ஹி...ஹி...என்னங்க பண்ணறது? உங்கப் பதிவைப் பாத்ததும் கையில நமநமன்னு ஒரே நமச்சல் விளம்பரம் பண்ணச் சொல்லி
:))

said...

"""சங்கர், இதுதான் நம்ம பதிவுக்கு முதல் முறையின்னு நினைக்கறேன். அடிக்கடி வந்து போங்க."""

இல்லீங்கோ..அடிக்கடி வந்து போரதுதான்.....சவுண்டு வுட்டது இப்பதான் மொதல் தடவை...நாம வந்துக்கினுதானுங்க இருப்பம் :)

said...

காப்பி, பேஸ்ட் நன்னா இருந்துதுடா அம்பி. ஆனா எழுதினது ஆரூன்னு சொல்லலையே ?

said...

// இலவசக்கொத்தனார் said...

அடடா, தமிழ் சும்மா துள்ளி விளையாடுதே...:) //

என்ன செய்ய கொத்சு..துள்ளித் துள்ளி விளையாட அள்ளி அள்ளித் தருகிறான் கந்தன்.

// தமிழில் அது பாட்டுக்கு மட்டும் இல்லைங்க. நீதிமன்றம் என்ற பொருளில் வழங்கி வந்திருக்கு. இப்போதான் அப்படி இல்லை. //

அப்படியா...தெரிஞ்சிக்கிட்டேன்.

// //ஆனால் ஒன்று...காலத்திற்குத் தக்க மாற வேண்டிய ஒன்று பாரம்பரிய இசை. இல்லையென்றால் அவ்வளவுதான். //

சரி. என்ன மாறணும்? அதைச் சொல்லுங்க. அப்படி மாறிக்கிட்டே இருந்தா அது தற்கால இசையாத்தானே இருக்கும்? பாரம்பரிய இசையா இருக்குமா? //

பாரம்பரியம் என்றால் மாறாதிருப்பது அன்று. இன்றைக்கு இருக்கின்ற பாரம்பரிய இசை என்பது நேற்று இருந்திருக்கலாம். ஆனால் முந்தாநேற்று இல்லை என்பதே உண்மை என்பதை நாம் உணராமல் போகலாகாது. பாரம்பரியமாக வந்த மகர, சகோட, யாழ்களும் கொட்டு, செண்டை, சிறு, பெரும் பறைகளும் கொம்பு, முழவு போன்ற ஊதிகளும் எங்கே இன்று. அது மாறித்தான் இது வந்திருக்கிறது என்பது உணரப்பட்டால் இது மாறி எது வரும் என்ற எதிர்பார்ப்பு வரும். குரல், விளி, துத்தம் போன்றவை தொலைந்தனவல்லவா...அது போல் இதுவும் மாற வேண்டும். மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது.

said...

// இலவசக்கொத்தனார் said...

அடடா, தமிழ் சும்மா துள்ளி விளையாடுதே...:) //

என்ன செய்ய கொத்சு..துள்ளித் துள்ளி விளையாட அள்ளி அள்ளித் தருகிறான் கந்தன்.

// தமிழில் அது பாட்டுக்கு மட்டும் இல்லைங்க. நீதிமன்றம் என்ற பொருளில் வழங்கி வந்திருக்கு. இப்போதான் அப்படி இல்லை. //

அப்படியா...தெரிஞ்சிக்கிட்டேன்.

// //ஆனால் ஒன்று...காலத்திற்குத் தக்க மாற வேண்டிய ஒன்று பாரம்பரிய இசை. இல்லையென்றால் அவ்வளவுதான். //

சரி. என்ன மாறணும்? அதைச் சொல்லுங்க. அப்படி மாறிக்கிட்டே இருந்தா அது தற்கால இசையாத்தானே இருக்கும்? பாரம்பரிய இசையா இருக்குமா? //

பாரம்பரியம் என்றால் மாறாதிருப்பது அன்று. இன்றைக்கு இருக்கின்ற பாரம்பரிய இசை என்பது நேற்று இருந்திருக்கலாம். ஆனால் முந்தாநேற்று இல்லை என்பதே உண்மை என்பதை நாம் உணராமல் போகலாகாது. பாரம்பரியமாக வந்த மகர, சகோட, யாழ்களும் கொட்டு, செண்டை, சிறு, பெரும் பறைகளும் கொம்பு, முழவு போன்ற ஊதிகளும் எங்கே இன்று. அது மாறித்தான் இது வந்திருக்கிறது என்பது உணரப்பட்டால் இது மாறி எது வரும் என்ற எதிர்பார்ப்பு வரும். குரல், விளி, துத்தம் போன்றவை தொலைந்தனவல்லவா...அது போல் இதுவும் மாற வேண்டும். மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது.

said...

// இராமநாதன் said...
இப்பதிவு குமுகத்தில் நிலைபெற்றுள்ள பல பொய்யான கட்டுமானங்களை தவிடு பொடியாக்கும்விதமாக காரத்துடன் எழுதப்பட்டிருப்பதால் பலநூற்றாண்டுகளாய் மாறாக் கறைகளாய் படர்ந்துகிடக்கும் பல விழுமியங்கள் இனி கேள்விக்குட்படுத்தப்படும் என்பது திண்ணம்.
ஆகவே இத்தகைய உயர்ந்த பதிவு தமிழ்ப்பதிவுலகை அடுத்த நிலைக்கு, புதியதொரு விவாதத்தளத்திற்கு, நுட்பமான ஒரு கருத்துக்களத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று கூறியிருந்தேன். இதில் உமக்கு என்ன புரியாமல் போனதென்று இங்கு குலவை கட்டுகிறீர் கொத்தனாரே? //

யய்யா இராமநாதா...ரெண்டு நாளா வயித்துவலியா? சாப்பாடு கொள்ளலையா? சித்தரத்தையும் அதிமதுரமும் சேத்துரசி பால்ல கலந்து குடிச்சா சரியாப் போயிரும்.

said...

கொத்தனார், புதுசேரி என தலைப்பை பார்த்தவுடன் மீண்டும் நம்ம மேட்டரா என பார்த்தேன் அட கச்சரி பத்தியும் போட்டிருக்கே. இதோ என்னுடைய 2 பைசா யோசனை. காண்டீன்லெ ஒரு பியர் பவுண்டன் வச்சு சைட்லே போக்கர், பிளாக் ஜாக், ஸ்லாட் மெஷின் வச்சா கச்சேரி களை கட்டுமே

said...

நான் இதை பூராவும் வியாழக்கிழமை வந்து படிச்சிக்கிறேன்.

அதுவரைக்கும் பின்னூட்டங்கள் வருமென நம்பிக்கையுடன்..

ராம்

said...

உஷாக்கா, அதான் பெரியவர் அப்படின்னு சொல்லி இருந்தேனே. அவரு ஹரிஹரன்ஸ் என்ற பெயரில் பதிவு போடுபவர். இப்போ கொஞ்ச நாளா பதிவே போடக் காணும். சரி, அவர் வரதுக்குள்ள திருடிப் போடலாமேன்னு நினைச்சேன். திருடியாச்சு. போட்டாச்சு. :)

said...

கொத்ஸ், பாண்டிச்சேரி புதுச்சேரியா மாறினாலும் சரக்கு ஒண்ணுதானே?

இல்ல அதையும் மாத்தறாங்களா.

இந்த அரசியல்வாதிங்களே இப்படிதான், செயிச்சி வந்துட்டா ஏதாவது செய்யணும்ல.

said...

எங்க கோயமுத்தூரை கூட தான் கோயம்படூர் அப்படின்னு வெள்லைக்காரன் சொல்லிட்டு போயிட்டான்.நாங்க இன்னும் அதை மாத்தாம தான் வெச்சிருக்கோம்.

மறுபடி சாயந்திரம் வந்து சண்டை கட்டுறேன்.இது அட்டென்டெண்ஸ் சண்டை:-))

said...

//மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது.//

ஜிரா, நல்லா இருக்கு நீங்க சொன்ன கருத்துகள். இன்னும் விரிவா சொல்லுங்க.

said...

//காண்டீன்லெ ஒரு பியர் பவுண்டன் வச்சு சைட்லே போக்கர், பிளாக் ஜாக், ஸ்லாட் மெஷின் வச்சா கச்சேரி களை கட்டுமே//

அது சீட்டு கச்சேரி, இது சங்கீதக் கச்சேரி. இரண்டுக்கும் சரிவருமா? :P

said...

/நான் இதை பூராவும் வியாழக்கிழமை வந்து படிச்சிக்கிறேன்.

அதுவரைக்கும் பின்னூட்டங்கள் வருமென நம்பிக்கையுடன்..//

அது என்ன வியாழக்கிழமை படிக்கிற வேண்டுதல்? இப்படி எல்லாரும் அப்பீட் ஆனா அப்புறம் எங்க இருந்து வரும் பின்னூட்டம்? ஞாபகமா சுட்டியை எடுத்து வெச்சுக்கிட்டு வாங்க.

said...

//கொத்ஸ், பாண்டிச்சேரி புதுச்சேரியா மாறினாலும் சரக்கு ஒண்ணுதானே?

இல்ல அதையும் மாத்தறாங்களா.//

தம்பி, அவங்க அதுனாலதான் ஆட்சியைப் பிடிக்கறதே. அதைப் போயி மாத்துவாங்களா? என்ன விலையை ஏத்துவாங்க.

said...

என்னோட பின்னூட்டம் எங்கே காணோம்?யாராவது பாத்தீங்களா?கோயமுத்தூரை கோயம்படுரா மாத்துனதை கண்டிச்சு பின்னூட்டம் போட்டிருந்தேன்.கொத்ஸ் சதிவேலை செஞ்சு அதை தடுத்து நிறுத்திட்டரா?
:-))

said...

//எங்க கோயமுத்தூரை கூட தான் கோயம்படூர் அப்படின்னு வெள்லைக்காரன் சொல்லிட்டு போயிட்டான்.நாங்க இன்னும் அதை மாத்தாம தான் வெச்சிருக்கோம்.//

உங்க ஆளுங்களுக்கு இந்த பந்தா எல்லாம் பிடிக்கும் அதான் மாத்த மாட்டீங்க.

//மறுபடி சாயந்திரம் வந்து சண்டை கட்டுறேன்.இது அட்டென்டெண்ஸ் சண்டை:-))//

வாங்க வாங்க. நான் சொன்னது விளையாட்டுக்குத்தான். அதுக்கு 'கோயம்பட்டூர்' எல்லாருமா சேர்ந்து சண்டை போடாதீங்க. :D

said...

//கொத்ஸ் சதிவேலை செஞ்சு அதை தடுத்து நிறுத்திட்டரா?
:-))//

யோவ் என்னைப் பத்தி உமக்குத் தெரியாதா? பின்னூட்டத்தை நிறுத்தி வைக்கிற ஆளா நாம? எதோ அதிசயமா கொஞ்சம் வேலைப் பாக்கலாமுன்னா, அதுக்குள்ள இவ்வளவு சவுண்டு விடறீரே.

சாயந்திரம் வாங்க. நிதானமா சண்டை போடலாம்.

said...

அப்படியே ராகவன் சொன்னது ரிபீட் அடிக்கிறேன்... மாற்றமில்லாததது நாறத் தொடங்கிவிடும்... அதுவே ஒரு குட்டைக்கும், ஓடைக்கும் உள்ள வித்தியாசம் போல...

....பாரம்பரியம் என்றால் மாறாதிருப்பது அன்று. இன்றைக்கு இருக்கின்ற பாரம்பரிய இசை என்பது நேற்று இருந்திருக்கலாம். ஆனால் முந்தாநேற்று இல்லை என்பதே உண்மை என்பதை நாம் உணராமல் போகலாகாது. பாரம்பரியமாக வந்த மகர, சகோட, யாழ்களும் கொட்டு, செண்டை, சிறு, பெரும் பறைகளும் கொம்பு, முழவு போன்ற ஊதிகளும் எங்கே இன்று. அது மாறித்தான் இது வந்திருக்கிறது என்பது உணரப்பட்டால் இது மாறி எது வரும் என்ற எதிர்பார்ப்பு வரும். குரல், விளி, துத்தம் போன்றவை தொலைந்தனவல்லவா...அது போல் இதுவும் மாற வேண்டும். மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது...

said...

கச்சேரி நடுவிலே சிறப்புரை, நன்றியுரை என்று அரை மணியோ முக்கால் மணியோ வேஸ்ட் ஆக்கும் 'பெரியவர்களை' பற்றி நீங்கள் கூறவில்லையே?.

வைசா

said...

கோயம்பட்டூர்" என்னும் ஆங்கிலமாக்கலை கோசன்புதூர் ஆக
மாற்றக்கோரி போராட்டம் அறிவிக்க திட்டமிட்டுல்லார்
எங்கள் தானைத்தலைவர் அருமை அண்ணன் செல்வன் அவர்கள்.

(ஏனுங்கண்ணா , சரிதானுங் நாஞ்சொல்றது.)

said...

கொத்ஸ், அம்பது நாந்தனே.

(யோவ் , சரியா படிக்கணும், 50, fifty,cincuenta,பச்சாஸ்)

said...

சார், கச்சேரி எல்லாம் ஒண்ணுதானுங்களே. அது சீட்டுக் கச்சேரியா இருந்தா என்ன பாட்டுக் கச்சேரியா இருந்தா என்ன. அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்

said...

//அப்படியே ராகவன் சொன்னது ரிபீட் அடிக்கிறேன்... மாற்றமில்லாததது நாறத் தொடங்கிவிடும்... அதுவே ஒரு குட்டைக்கும், ஓடைக்கும் உள்ள வித்தியாசம் போல...//

சரிங்கண்ணா!

said...

//கச்சேரி நடுவிலே சிறப்புரை, நன்றியுரை என்று அரை மணியோ முக்கால் மணியோ வேஸ்ட் ஆக்கும் 'பெரியவர்களை' பற்றி நீங்கள் கூறவில்லையே?.//

ஆமாம் அது விட்டுப் போச்சே. அடுத்த முறை அதையும் சேர்த்துடலாம். வந்ததுக்கு நன்றி வைசா.

said...

//(ஏனுங்கண்ணா , சரிதானுங் நாஞ்சொல்றது.)//

அதெல்லாம் இருக்கட்டும் பெருசு, முதல் ஆளா வந்து யூ டூ அப்படின்னு கேட்டது ஏன் அதுக்கு பதிலைச் சொல்லு. ஆமாம்.

said...

//கொத்ஸ், அம்பது நாந்தனே.//

அவசரப்பட்டுட்டீரேய்யா. முதல் பின்னூட்டம் போட்டவரே 50ஆவதும் போட்டாரு அப்படின்னு என்ன சொல்லவிடாம பண்ணிட்டையே. நீ 50 இல்லை.

said...

//சார், கச்சேரி எல்லாம் ஒண்ணுதானுங்களே. அது சீட்டுக் கச்சேரியா இருந்தா என்ன பாட்டுக் கச்சேரியா இருந்தா என்ன. அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்//

அந்த நயாகரா போயிட்டு வந்ததுலேர்ந்து நானும் பாக்கறேன், ஆள் கொஞ்சம் கூட சரியில்ல. தங்கமணிக்கிட்ட ஒரு என்கொயரி பண்ணனும் போல இருக்கே....

said...

இந்தப் பதிவை ஏற்கனவே உங்க வீட்டுப் பெரியவர் இட்டுப் படித்திருப்பதாகத் தோன்றுவதால் மேற்கொண்டு எந்தக் கருத்தும் இல்லை. :-)

said...

//குமுகாயம், வெங்காயம், பெருங்காயமுன்னுகிட்டு...தமிழில் சொல்லுமய்யா...
//

'சொல் ஒரு சொல்' பதிவின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

No smiley.

said...

நீங்கள் இரு முரண்களை இட்டிருக்கிறீர்கள். ஒன்று மாற்றமடைந்த ஒன்றை பின்னோக்கி பழையநிலைக்கு கொணர்வது. பழமையுடன் நமது நெஞ்சம் கொள்ளும் நெருக்கத்திற்கு சுகம் அளிக்கும் மாற்றமது.
மற்றது பழமையான இசையை மாற்ற விரும்புவது. இன்றைய இசைக்குத் தான் நிறைய விசிறிகளும் சுதந்திரமும் உள்ளதே ! பாரம்பர்யத்தை ஏன் மாற்ற வேண்டும் ? பரிணாம தத்துவத்தின்படி ஏற்கெனவே விடிய விடிய நடந்த கச்சேரிகள் மூன்று மணி நேரமாகி ஒன்றரை மணி நேரத்தில் சுருங்கி விட்டதே!
ஷேக் சின்னமௌலானா, தண்டபாணி தேசிகர் என்று பரவலாக இரசிக்கப் பட்ட கர்நாடக இசை இன்று ஒரு குறிப்பிட்ட குழுவினருடன் நின்று விடுவதால் செங்கிருதம் போல இது வேண்டாத மருமகளாகி விட்டது. முதலில் அனைத்துத் தரப்பினரும் கர்நாடக சங்கீதம் பயில தூண்டப் பட வேண்டும். கேரளாவில் பள்ளிகள் இடையே மாநில அளவில் அரசு சார்ந்த போட்டிகள் நடத்தி கலா திலகம், கலா... (மறந்து விட்டது) முதலிய பட்டங்கள் தந்து ஊக்குவிக்கிறார்கள்.

பெரிய பதிவு போடுவது எப்படி என்று தெரிந்து கொண்டேன். நானும் அப்படி ஒன்று இட்டிருக்கிறேன். (ஐடியா கைப்புவிற்கு நன்றி)

said...

அது என்ன நியாயம் குமரன்? அந்த கட் பேஸ்ட் பதிவுக்கு முன்னாடி சொந்த சரக்கு எவ்வளவு இருக்கு? அதுல கேள்வி எல்லாம் வேற கேட்டு இருக்கேன். அது பத்தி சொல்லாமப் போனா எப்படி?

said...

//'சொல் ஒரு சொல்' பதிவின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

No smiley.//

சரி. அதைப் பத்தி விவரமா சொல்லுங்க. கேட்டுக்கறேன். அதுவரை எனக்கு என்ன புரியப் போகுது. :)

Smiley Present.

said...

வாங்க மணியன். பள்ளிக் குழந்தைகளுக்கு பாரம்பரிய இசை பயில்விப்பது நல்ல ஒரு யோசனைதான். நடக்குமா?

உங்கள் பதிவுக்கு சென்று படித்தேன். ரொம்ப டாங்கஸ்பா!

said...

சரி..பாண்டிச்சேரி மேல் கொத்தனாருக்கு இத்தனை கரிசனம் வர காரணம் அங்கே குறைந்த விலையில் அரசமீனவனும், தங்ககழுகும் கிடைப்பதுதான் என ஒரு பட்சி சொல்லுச்சு.உண்மையா அது?

said...

செல்வன் அதுவும் ஒரு காரணந்தேன். (இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!) அது மட்டுமில்லாம, இப்போ நடக்கற விஷயத்தைப் பத்திப் பெசினாத்தானே மக்கள்ஸ் எல்லாம் வருவாங்க, அதான்.