நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிபடவே இல்லை. ஏன் இப்படி பண்ணறாங்கன்னு தெரியவே மாட்டேங்குது. நீங்க யாராவது கொஞ்சம் கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்.
நான் சொல்லறது இந்த கிரிக்கெட் மாட்சுங்களைப் பத்திதான். எப்ப , எங்க போட்டி வைக்கணமுன்னுங்கிறது போட்டியில் கலந்துக்கற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் எல்லாம் கலந்து பேசி முடிவு பண்ணற ஒரு விஷயம். இதுல ஐ.சி.சியின் கமிட்டி ஒண்ணு வேற இருக்கு. இவங்க எல்லாம் ஒண்ணாக் கூடி டீ, பிஸ்கெட்டு எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு எப்ப, எந்த ஊரில் யாரு விளையாடணமுன்னு முடிவு பண்ணறாங்க.
எல்லாம் நல்லா படிச்சவங்கதானே. இவங்களுக்கு எந்த ஊரில் எப்ப மழைக்காலம், எப்ப மழை வாராது அப்படின்னு தெரியாது? தனக்கா தெரியலைனாலும் அந்தந்த பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்கள் கிட்ட ஒரு பரிந்துரை வாங்கிக்க மாட்டாங்க? இப்படி எங்க போட்டி நடத்துனாலும் அங்க மழை பெய்யறதே ஒரு வாடிக்கையான நிகழ்வா ஆகிப் போச்சே.
சரி, இதையெல்லாம் பல மாதங்களுக்கு முன்னாடியே முடிவு பண்ணறாங்க. அதனால அந்த குறிப்பிட்ட நாளன்று வானிலை எப்படி இருக்குமுன்னு சொல்லறது முடியாத காரியம். ஆனா ஆகஸ்ட், செப்டம்பரில் கிழக்காசிய நாடுகளில் மழைக்காலம் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை?
மத்த விளையாட்டுங்களெல்லாமும் இந்த மாதிரிதானே முன்னாடியே முடிவு பண்ணறாங்க. இந்த அளவுக்கு வேறெந்த விளையாட்டும் மழைக் காரணமாக இந்த அளவு பாதிக்கப் படறதா தெரியலையே. அது ஏன்? ஒரு வேளை அங்க கமிட்டி எல்லாம் போடாம முடிவு பண்ணறதுனால சரியான முடிவுகள் எடுக்கறாங்களா? ஒண்ணும் புரியலையே.
இதுல மழை வரது இயற்கை நிகழ்வு. அதனால ஒரு பந்து கூட போடலையினாலும் டிக்கெட் காசை திருப்பி எல்லாம் தரமுடியாது அப்படின்னு ஏப்பம் வேற விடறாங்க. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விளம்பரக் காசு எல்லாம் வராம போகுதுன்னு அதுக்கு வேற தனியா இன்ஷூரன்ஸ் பண்ணி அங்க வேற பணம் வாங்கிக்கறாங்க. ஒரு வேளை இதுக்கெல்லாம்தான் மழைக்காலமா பாத்து போட்டியை வைக்கறாங்களா?
சரி. அப்படி என்னதான் யோசிச்சு முடிவு எடுத்தாலும், அது என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, கிரிக்கெட் போட்டி நடத்துனா மட்டும் மழை வருது அப்படின்னு சொன்னீங்கன்னா, மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.
இப்படிக்கு,
இணையத்தில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியாவிட்டாலும் வர்ணனையையாவது படிக்கலாம் என தூக்கத்தைக் கெடுத்து எழுந்து உட்கார்ந்து இருக்கும்
அப்பாவி ரசிகன்.
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
சொல்ல மறந்துட்டேனே. எல்லாம் வந்து உங்க கருத்து மழையைப் பொழியுங்கப்பா.
// மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா//
அப்படியே போட்டி நடத்துனதுல வந்த வருமானத்துல ஒரு பகுதியை அந்த ஊருல இருக்குற குளம், குட்டை எல்லாம் தூர் வாற பயன்படுத்தலாம்.
ஹி.ஹி.சொல்ல மறந்துட்டனே! நானும் ஒரு அப்பாவி ஆவி. அப்பாவி ரசிகையும் கூட.
//கிரிக்கெட் போட்டி நடத்துனா மட்டும் மழை வருது அப்படின்னு சொன்னீங்கன்னா, மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.//
:-) உப்பு விக்க போனேன்~~~~
தப்பு கணக்கை போட்டுத் தவிக்கும்~~~
இலவசமே என் இலவசமே~~~
:-))) இந்தியா ஒளி............
/எல்லாம் நல்லா படிச்சவங்கதானே. இவங்களுக்கு எந்த ஊரில் எப்ப மழைக்காலம், எப்ப மழை வாராது அப்படின்னு தெரியாது? /
நீங்க வேற அவங்களுக்கு கிரிக்கெட்டே தெரியதுன்னு பல பேர் சொல்றாங்க இதுல எங்க மழையை பத்தி யோசிக்கிறது.
ICC அப்படின்னா BCCI அதை அதுக்கும் மேல மோசம்.
என்னத்த சொல்ல :-(
//ஒரு வேளை இதுக்கெல்லாம்தான் மழைக்காலமா பாத்து போட்டியை வைக்கறாங்களா?//
இதுவும் ஒரு வகை கவர்ச்சி நிதி நிறுவனம் மாதிரி தான்.... விட்டில் பூச்சியை இழுக்கும் விளக்கு தான்.... நான் மேட்ச நேர பாத்தேனேனு, இந்த வீரர நேர பாத்தேனே அப்படீங்கற ஜம்பத்துக்கு மட்டும் திரியும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்....
//நான் மேட்ச நேர பாத்தேனேனு, இந்த வீரர நேர பாத்தேனே அப்படீங்கற ஜம்பத்துக்கு மட்டும் திரியும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்....//
இந்த மாதிரி ஆளுங்களை நம்ம ஊர்ப்பக்கம் அனுப்பி வைக்கணும்! சொல்லிட்டேன் ஆமா!
கிரிகெட்லே இதெல்லாம் சகஜம்ப்பா.நமாதான் பாத்துகிட்டு இருக்கோமே. தலைவருங்களுக்கு தலைமைப் பதவியை பிடிக்கும்போது காட்டும் வீரத்தை மேட்ச் நடத்தும்போது காட்டமாட்டோமே.தெரியாமயா தலைவர் பாடினார் "முட்டாபசங்களை எல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே"
சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கும் உங்களுக்கு வலைக் கலைவாணர்னு பட்டம் கொடுத்தறலாம்!
:))
//அப்படியே போட்டி நடத்துனதுல வந்த வருமானத்துல ஒரு பகுதியை அந்த ஊருல இருக்குற குளம், குட்டை எல்லாம் தூர் வாற பயன்படுத்தலாம்.//
ஆவி, ஐடியா நல்ல ஐடியாதான். ஆனா மழை பெஞ்சு ஆட்டம் நடக்கலைனாலே குடுத்த காசை திருப்பித் தராதவங்க இதெல்லாம் செய்வாங்க?
:))
//ஹி.ஹி.சொல்ல மறந்துட்டனே! நானும் ஒரு அப்பாவி ஆவி. அப்பாவி ரசிகையும் கூட.//
அதான் பதிவு பதிவா போயி சொல்லறீங்களே. அப்பாவி ஆவின்னே ஒத்துக்கறோம்.
//நாங்க பின்னூட்ட 'மழை பொழிஞ்சா' நீங்க எதுனா 'கான்செல்' பண்ணுவீங்களா? :)))//
பண்ணுவோமே. உங்க பேருல இருக்கற பின்னூட்ட கயமைத்தன குற்றச்சாட்டைக் கான்ஸல் பண்ணுவோம்!
//இது மேட்டர். நெசமாவே நல்ல சிந்தனை.//
ஆனா பாருங்க, இது சிந்தனை என்ற லெவலைத் தாண்டாது.
//ஆமா, சத்தம் பலமா இருக்கே! எதுனா மேட்ச்க்கு டிச்கெட் வாங்கி ஏமாந்துட்டீங்களாண்ணே?//
காசு குடுத்து ஏமாறுவோமா? இணையத்தில் பார்க்க உட்கார்ந்து தூக்கம் போச்சு. மழையினால மேட்சும் போச்சு. அதான்.
//:-) உப்பு விக்க போனேன்~~~~
தப்பு கணக்கை போட்டுத் தவிக்கும்~~~
இலவசமே என் இலவசமே~~~//
அடுத்தவன் கஷ்டத்தைப் பார்த்தா பாட்டா வருமே.. இருக்கட்டும் இருக்கட்டும்.
//என்னத்த சொல்ல :-(//
அதாங்க குறும்பன் நான் சொல்லறதும்...
//இந்த வீரர நேர பாத்தேனே அப்படீங்கற ஜம்பத்துக்கு மட்டும் திரியும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்....//
சும்மா நாலு தடவை பைசாவை வாங்கிக்கிட்டு இப்படி தொரத்தி விட்டாங்கன்னா இந்த மக்கள்ஸ் எல்லாம் ஒழுங்கா வேலையைப் பார்த்துக்கிட்டு போவாங்க.
//"முட்டாபசங்களை எல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே"//
தி.ர.ச., என்னத்த சொல்ல? :-D
//சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கும் உங்களுக்கு வலைக் கலைவாணர்னு பட்டம் கொடுத்தறலாம்!//
ஆமாம். ஆமாம். இருக்கற பட்டத்தை எல்லாம் எண்ணி எடுத்து வைக்கவே ஆளைத் தேடிக்கிட்டு இருக்கேன். இதுல இன்னொரு பட்டமா? இருந்துட்டுப் போகட்டும்.
தம்பி, இதையும் நோட் பண்ணிக்கிட்டு எடுத்து வைப்பா.....
//தம்பி said...
:)) //
தம்பி, சும்மா சிரிச்சிட்டுப் போனா எப்படி?
அமெரிக்கா வந்த பிறகும் கிரிக்கட் எதற்க்கையா பார்க்கிறீர். பனி பொழிந்தாலும் கையில் பந்தை வைத்து கொண்டு நடக்கும் அமெரிக்க புட்பால், அடிதடி ஐஸ் ஹாக்கி, பவர் பாஸ்கெட் பால் இவைகளை பார்க்க வேண்டியதுதானே
ஆனா ஆனா எல்லாரும் இந்த கேள்வியையும் கேளுங்க. அப்புறம் வெளிநாடு போயி தமிழில் பேசலை, எழுதலைன்னு திட்டு வாங்கற ஆசாமிங்க மாதிரி நம்ம கதியும் வெளிநாடு போயி கிரிக்கெட் பாக்காத இ.கொ.....அப்படின்னு பதிவெல்லாம் வந்தா தாங்காதப்பா. அதான்...
அப்ப கிரிக்கட்காரங்களுக்கும் வருணனுக்கும் ஏதோ உள்குத்து இருக்குது...அது எப்படி கொத்சுக்குத் தெரிஞ்சது? இது எதுவும் கத்திரிக்கா கொத்சு தொடர்புள்ளதா?
photos are uploaded correctly.. You can view it now.. Thanks for visiting my blog
//மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.//
இந்த வரிகளைப் படித்து விட்டு சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
வேற என்னத்த சொல்ல அவங்க அப்படித் தான் பாஸ் ... அல்வாவைக் கிண்டி கையிலே இல்ல இல்ல வாயிலே வச்சுட்டு போவாங்க... நாமளும் அப்பாவி ரசிகனா அல்வாவை தின்னுட்டே தான் இருப்போம்.. ( அஜீரணக் கோளார்ல்ல இப்படிப் பதிவு எல்லாம் போட்டு பீல் பண்ணக் கூடாது ஆமா)
இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தலைவா
//:-)))))//
என்ன ராம் வெறும் சிரிப்பா சிரிச்சுட்டுப் போயிட்டீங்க? ரசிகர்களைப் பார்த்தா அப்படித்தான் இருக்கா?
//இந்த வரிகளைப் படித்து விட்டு சிரிப்பை நிறுத்த முடியவில்லை.//
தேவு, பார்த்து பல்லு சுளுக்கிக்கப் போகுது.
சிரிச்சா மட்டும் போதாது அதுக்கு பின்னாடி இருக்கற உண்மையையும் யோசிங்கப்பா - அப்படின்னு சொல்ல ஆசை. சொல்லிட்டேன்.
ஆனா நாம சிந்திச்சு என்ன ஆகப் போகுது? எளவு. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கும் போது எல்லா வேலையும் விட்டுட்டு டீ.வி. முன்னாடி தவம் கிடப்போமில்ல.
//( அஜீரணக் கோளார்ல்ல இப்படிப் பதிவு எல்லாம் போட்டு பீல் பண்ணக் கூடாது ஆமா)//
அதுக்குத்தானே பிளாக் ஆரம்பிச்சதே. அதையும் பண்ணக்கூடாதுன்னா எப்படி?
//இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தலைவா//
அதே. அதே.
//மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்//
அப்படித்தான், சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்ததாக சொல்கிறார்கள், இலவசம்..
//அப்படியே போட்டி நடத்துனதுல வந்த வருமானத்துல ஒரு பகுதியை அந்த ஊருல இருக்குற குளம், குட்டை எல்லாம் தூர் வாற பயன்படுத்தலாம். //
அமானுஷ்யம், நீங எல்லாம் இங்கே இருக்க வேன்டிய ஆளே அல்ல.. அதனால தான் ஆவி உலகதுக்கு அனுப்பிட்டாங்க போல
உங்க வாய் முஹூர்த்தம், மும்பையில் இப்போ மழை பெஞ்சு சாம்பியன் ட்ராபி பைனல்ஸ் நடக்க விடாம பண்ணுதே. இவ்வளவுக்கும் இப்போ அங்க மழை பெய்யற காலம் கூட இல்லை.
மழை வர வைக்க இது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு.
கொத்தனார்!
நல்ல யோசனை; இவங்களை எதியோபியா அனுப்புங்க!!!!!
யோகன் பாரிஸ்
அனானி அவர்களே,
ஆக மொத்தம் நம்ம கணிப்பு சரின்னு சொல்லறீங்க. நன்றி!
நல்லவேளை எதோ கிடைச்ச கேப்பில நாலு ஓவரைப் போட்டு மேட்சை முடிச்சிட்டாங்க. ஆஸ்திரேலியாவும் இதுவரை வாங்காம இருந்த கப்பை வாங்கியாச்சு. அவங்க சந்தோஷமா இருக்காங்க.
நம்ம ஆளுங்களும் சீக்கிரமே வீட்டுக்குப் போனதுனால நல்ல விளம்பர படங்களில் நடிக்க நிறையா நேரம் கிடைச்சு சந்தோஷமா இருக்காங்க.
ரசிகர்கள் சந்தோஷமா இருக்காங்களான்னு யாருப்பா அது? அதைப் பத்தி யோசிக்க யாருக்கு நேரம் இருக்கு? பை பை!
வாங்க யோகன் அண்ணா,
எத்தியோப்பியா போகறது எல்லாம் இருக்கட்டும், முதல்ல நம்ம நாட்டுல கூட எவ்வளவோ இடங்கள் இருக்கே. முதல்ல அங்க கவனிக்கலாமே....
இன்னிக்கு கிரிக் இன்போவில் வந்திருக்கும் செய்தியைப் பாருங்கள்.
ரொம்ப நாட்களாக காணவில்லையே?பங்களாதேசிலா இருக்கீங்க?
இவ்வளவு பின்னூட்டம் வந்த பிறகு இதை யாரு படிக்க போறாங்க.அதனாலேயே ஒன்னும் எழுதவில்லை.:-))
Post a Comment