என்னடா இவன் நன்றி சொன்னா கிண்டல் பதிவு போடறான், இப்போ இவனே நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா? இது விஷயம் வேற. நம்ம பசங்க எல்லாம் என்ன நீங்க எங்க எங்கயோ போயி பதிவு போடறீங்க. நாங்க எல்லாம் பதிவு படிக்கறதா இருந்தா உங்க பதிவுல மட்டும்தான் படிப்போம் அப்படின்னு ஒரே ரவுசு. இந்த அன்புக்கும் பாசத்துக்கும்தான் நன்றி. இந்த பசங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கக் கூடாது, அப்படின்னு சொல்லி இங்க சுட்டி தரேன் அப்புறமாவது போயி படிங்கன்னு சொல்லவும்தான் இந்த பதிவு.
ஜுலை மாதம் நம்ம வ.வா.சங்கத்தில நம்மளை அட்லாஸ் வாலிபரா தேர்ந்தெடுத்து வாரம் ஒரு பதிவு போடச் சொன்னாங்க. ஆடிக்கு ஒரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு போடற நம்மளால வாரம் ஒரு பதிவு போடமுடியுமான்னு ஒரே கவலை. ஓடினேன் பாரு ஒரு ஓட்டம். வாழ்க்கையின் எல்லை வரை ஓடலைன்னாலும் கிட்டத்தட்ட இந்த உலகின் எல்லை வரை ஓடி நம்ம துளசி டீச்சர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவங்கதான் சொன்னாங்க, " கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு இரு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு. அதை வெச்சி வாரம் ஒரு பதிவு என்ன, ஒரு நாளைக்கு ஒரு பதிவு வேணாலும் போடலாம்." அப்படின்னு சொன்னாங்க. நாமளும் அதை சிரமேற்கொண்டு கண்ணை நல்லா திறந்து வெச்சுக்கிட்டு அலைஞ்சேன். அப்படித்தான் நான் போட்ட நாலு பதிவும் மாட்டிச்சு. ஒண்ணொண்ணா பார்க்கலாம்.
போட்ட முதல் பதிவு மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு. நமக்கு வேண்டப்பட்ட ஆளு ஒருத்தரோட பேசிக்கிட்டு இருந்தம்போது வந்த ஐடியா இது. அது யாருன்னு கேட்டீங்கன்னா, வேற யாரும் இல்லை. நம்ம தளபதி நாமக்கல்லார்தான். அவரு நமக்கு புதுக்கவிதை பத்தி கிளாஸ் எடுக்கப் பாத்தாரு. நாம் அவருக்கு திறனாய்வு கிளாஸ் எடுத்துட்டோமில்ல!
அடுத்துப் போட்ட பதிவு - பரிணாம வளர்ச்சி. நம்ம தெக்கி போட்ட ஒரு பதிவு பத்தி அவரோட சாட் பண்ணும் போது வந்த ஐடியா இது. பேசிக்கிட்டே இருக்கும் போது வெகு வேகமா டெவலப் ஆச்சு. பதிவின் நீளம் கருதி யோசிச்ச சில ஐடியாக்கள் போட முடியாமப் போச்சு. தனக்கு ஒரு வளர்ச்சியும் சொல்லலையேன்னு செல்லமா திட்டினவங்க கூட உண்டு!
பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574. இது ஓடிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வாரம் போனதுனால அடுத்த பதிவு போடச் சொல்லி கைப்பு கிட்ட இருந்து ஒரே பிரஷர். அந்த சமயத்தில நம்ம போலிஸ்கார் வேற பின்னூட்டக் கயமைத்தனம் பத்தி போட்டாரா, நாமளும் அதைச் சாக்கா வைச்சு அடுத்த பதிவு ரெடி பண்ணியாச்சு - வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்.
கடைசியாப் போட வேண்டியது நன்றி நவிலல்தானே. ஆனா அப்போ நம்ம தேன்கூடு போட்டி முடிஞ்சு எல்லாரும் நன்றி சொல்லிக்கிட்டு இருந்தாங்களா? நமக்குக் கொஞ்சம் டென்ஷனாகிப் போச்சு. சரின்னு அதை வெச்சே ஒரு நன்றி பதிவு போட்டாச்சு. அதான் தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல் .
இப்படித்தான் நம்ம அட்லாஸ் மாதம் ஓடிச்சு நண்பர்களே. இந்த பதிவுகளுக்கு காரணிகளாக இருந்த நண்பர்களுக்கும், இப்படி எல்லாம் கவனமா இருக்கச் சொன்ன டீச்சருக்கும், வந்து படிச்சவங்களுக்கும், செய்ய வேண்டியதை சரியா செஞ்ச நண்பர்களுக்கும், எனக்கு ஒரு சவுண்டிங் போர்டாக இருந்த (இருக்கும்)எஸ்.கே அவர்களுக்கும் நம்ம நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
இ.கொ,
மீண்டும், மீண்டும் நமக்கு இலவச விளம்பரம் வாங்கி கொடுத்து நம்ம எங்கோ எடுத்துட்டு போறீங்களே... இலவசம், நன்றி!
பரிணாம வளர்ச்சிப் பதிவு போடும் பொழுது நான் நினைச்சேன் நிறைய பேர் இந்த மாதிரி ஒரு விஷ் லிஸ்ட் வைச்சிகிட்டு வந்து பின்னூட்டம் போடுவாங்கன்னு அதே மாதிரி நடந்துடுச்சு.
உங்களுக்கு அந்த ஸ்பீடு பிரேக்கர் மட்டும் போடம இருந்துருந்த 1000 கண்டிப்பா போயிருக்கும்...
வணக்கம்
உள்ளேன் ஐயா,
வருகிறேன் ஐயா
விரைவில்...அதி விரைவில்....
வட்டியும் முதலுமா பின்னூட்ட மழை பொழிய.
திட்டமிட்ட கயமைத்தனதால், 1000 கானாமற் போன அருமை நண்பரே1!
என்னையும் இதில் சேர்த்து நன்றி நவின்றமைக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்!
உங்களுக்குள் ஓராயிரம் திறமைகள் ஒளிந்திருக்கின்றன!
நல்ல முறையில் அவற்றை வெளிக்கொணர்ந்து தமிழ் மணத்திற்கு உங்களால் இயன்ற சேவையினைச் செய்ய வேண்டுகிறேன்!
ரெடியா....
/./
"அட்லாஸ்(ட்) நன்றி
/./
ராசா போயி பினாத்தலாரும் வந்துட்டாரு இப்ப நன்றியாயாயா....
டீச்சர் சொன்னத ஃபாஸ்டா புரிஞ்சுடிங்க..::)
/./
பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574.
/./
ஆடுவோமா...??
என் வாக்கைக் காப்பாத்த முடியலை கொத்ஸ். உங்கப் பதிவுல அட்லாஸ்டா இல்லன்னாலும் அட்லீஸ்டாவாவது ஒரு "உள்ளேன் ஐயா" போடலைன்னா எப்படி? ஆனா ஆரம்பிச்சிருக்குற ஜரூரைப் பாத்தா உங்க கணக்கு தப்புக் கணக்குன்னு தெரியுது.
:)
//திட்டமிட்ட கயமைத்தனதால், 1000 கானாமற் போன அருமை நண்பரே1!//
கொத்ஸ்! இது என்ன கூத்து? யாரந்த கோடாலி காம்பு?
:)
This is my first pinnoottam. (We expect pinnoottam also to be there in the next edition of oxford dictionary!)
என்ன இந்த பதிவு இன்னும் சூடு பிடிக்காம இருக்கு?குறைஞ்சது 100வது தாண்டிடனும்.
அலைகடலென திரண்டுவாரீர் உடன்பிறப்புக்களே.
நன்றி சொல்வதற்காக ஒரு பதிவையே போட்ட கொத்தனாருக்கு நன்றி
டோரோண்டாவின் ட்ராபிக் போல் நயாகரவின் வெள்ளம் போல் அதிக அளவில் பதிவிகள் இட வேண்டுகிறேன்.
டூர் போய்ட்டு வந்து யாரைப் பார்த்தாலும் இந்த பந்தாதான்
என்னா சார் லாங்க் வீக் எண்டிற்கு எங்காவது கேம்ப் போய்ட்டிங்களா?
தெக்கி,
உங்க நன்றிக்கு நன்றி. :)
செல்வன்,
கொஞ்சம் லீவு விடலாமுன்னு பார்த்தேன். அதான் விளையாட்டுக்கு வரலை.
எஸ்.கே.
வலைப்பூவினால் உங்களைப் போன்றோர் நட்பு கிடைத்ததுதான் மிகப்பெரிய நன்மை. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உங்கள் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
மின்னல்,
இந்த பதிவுல ரெடி இல்லை. :(
பதிவு கொஞ்சம் லேட்தான். என்ன பண்ணறது, நம்மளையும் வேலை பார்க்க வெச்சுட்டாங்க இல்லை.
//என் வாக்கைக் காப்பாத்த முடியலை கொத்ஸ். //
கைப்ஸ், :-X
//கொத்ஸ்! இது என்ன கூத்து? யாரந்த கோடாலி காம்பு?//
No Comments (அட இதுவே நல்ல பதிலா ஆயிருச்சே.)
திருமொழியன் அவர்களே, உங்கள் முதல் பின்னூட்டத்தை என் பதிவில் இட்டதற்கு நன்றி. தமிழ்மணத்தில் நல்ல பதிவுகள், சிரிக்க வைக்கக்கூடிய பதிவுகள் நிறையவே இருக்கின்றன. அதற்கு ஆதரவு தாருங்கள். சர்ச்சைக்குறியவைக்களுக்கு வேண்டாம். கருத்துக்கும் வருகைக்கும் மீண்டும் நன்றி.
கால்கரியாரே, வருகைக்கும் நன்றிக்கும் நன்றி. நயாகரா டொராண்டோ பயணம் நன்றாக இருந்ததா? பயணக் கட்டுரை எப்போ? பந்தா அடிக்க வேண்டிய விஷயம்தான். நல்லா அடிங்க. இந்த நீண்ட வாரயிறுதிக்கு நான் வெளியூர் சென்றிருந்தேன். அதான் லேட்.
டீச்சருக்கு நன்றி சொன்னது பிடிச்சிருக்கு.
ச்சும்மாவா சொல்லிட்டுப்போனாங்க மாதா பிதா 'குரு' அப்புறம்தான் தெய்வம்னு:-))))
நன்றி நவிலல்னு போட்டே ஒரு 500த்துச் சொச்சம் பார்க்கவேணாமா? :-))))
மீண்டும் நன்றி டீச்சர். இந்த பதிவுல 500 பாக்க வேண்டாமுன்னு தோணிச்சு. அதான் இப்படி கஷ்டப்பட்டு அமுக்கி வெச்சுருக்கேன். :)
//அதான் இப்படி கஷ்டப்பட்டு அமுக்கி வெச்சுருக்கேன். :)//
இது திட்டமிட்ட பின்னூட்ட மறுத்தல் கயமைத்தனம். கொத்தனார் டவுன் டவுன்!!
அட விடுங்கப்பா. அதான் அடுத்த பதிவு போட்டாச்சுல்ல. கோ தேர் அண்ட் எஞ்சாய்.
Post a Comment