(முதலில் சன் ரீவியில் வரும் திரை விமர்சனம் நிகழ்ச்சியில் வருவாங்களே அந்தம்மா குரலில் படிச்சுக்கோங்க.)
இன்னிக்கு நாம விமர்சனம் பண்ணப் போற ஆப்புரேசல் பெனாத்தலாரின் ஆப்பு. வ.வா.சங்கத்தின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா வந்திருக்கிறது பெனாத்தலாரின் இந்த ஆப்பு.
ஒரேடியா பாராட்டாமலும் அதே சமயம் வெறும் குறைகளா அடுக்காம நடுநிலைவியாதியா இந்த ஆப்பைத் தந்திருக்காரு பெனாத்தலார். அதிலும் வீக்னஸ்களை அடுக்கி ஆரம்பித்த அவர் நேர்மையைப் பாராட்டியே ஆகணும்.
இந்த ஆப்புரேசல் பத்தி சிறப்பு விமர்சகர் கொத்ஸ் அவர்கள் என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்.
(இனி கொத்ஸ் குரலில் படிக்கணும். என் குரலை கேட்டிராதவங்க சிம்மக்குரலோன் சிவாஜி குரலில் படிச்சுக்கோங்க.)
வீக்னெஸ் எல்லாம் சொல்லி ஆரம்பிச்சிருக்காரு. நல்ல விஷயம்தான். ஆனா பாருங்க. இந்த ஆப்புரேசலில் பல விஷயங்கள் ஒளிவு மறைவா இருக்கு. அதைப் பத்தி நாம இப்போ பார்க்கலாம்.
உதாரணமா அவருக்கு ஃபளாஷ் தெரியும் என்பதற்காக வெறும் எழுத்துக்களில் நகைச்சுவையைத் தரும் மற்ற அட்லஸ் வாலிபர்களை மட்டம் தட்டும் அதிகாரப் போக்கு ரொம்பவே கண்டிக்கப் படவேண்டியது.
(இந்த மாதிரி பேசறது கமல் பேட்டி மாதிரி ரொம்ப செயற்கையா இருக்கு, அதனால இனிமே அவரைப் பார்த்து பேசற மாதிரி சொல்லிடறேனே. சிம்பிளா இருக்கும்.)
//நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்//
இந்த ஒரு ஃப்ளாஷ் ஒண்ணைக் கத்துக்கிட்டீராக்கும். அதுனால எதுக்கு எடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ். அதாண்டி உனக்கு விக்கியில் வெச்சோம் ஆப்பு. புகைப்படக்கலை பெரியவர் ஆனந்த் வாயாலையே ஃப்ளாஷ் ஒரு வேஸ்ட் அப்படின்னு சொல்ல வெச்சாச்சு இல்ல.பாகங்களிலேயே ஏறத்தாழ எல்லா பதிவுகளையும் வகைப்படுத்திவிடலாம்.//
அதே போல் சில சமயங்களில் வாரத்திற்கு ஏழு பதிவுகள், சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு பதிவு என இல்லாமல் சீரான அளவு பதிவுகள் வரணும். இதைப் பத்தியும் நீங்க ஒரு வரி சொல்லி இருக்கலாம்.
//நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்..//
அவனவன் அட்லஸ் ஆகட்டும், அல்லது நகைச்சுவை போட்டியாகட்டும் மைண்ட் எல்லாம் கசக்கி புதுசு புதுசா எழுதுறான், இப்படி ரீரிலீ்ஸ் பண்ணறதே அசிங்கம், அதுல பெருமை வேற! த்தூ!!
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்உப்புமா பிராண்ட் பதிவு தவிர வேற எதாவது பதிவு போட்டு இருக்கீராய்யா? ;-)
சொல்லிய வண்ணம் செயல்.
(அப்பாடா, மாற்றுக் கருத்து சொன்னவன் யோக்கியதையைக் கேள்வி கேட்கணுமே என்ற தமிழ் மரபை மீறலை. என்ன நம்ம பின்புலம் அப்படி, அதனால விளிம்புநிலை மாந்தர்களின் வலி தெரியலை, அதனால நாகரீக அளவுகோல் இன்னமும் க்ரீமீ லேயர் லெவலிலேயே இருக்கு.)
//வெளியே போற சிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால //
உம்மைச் சேர்த்துக்கிட்டதுனால சும்மா சிரிப்புமூட்டின்னு சொல்லிக்குவீராய்யா? அம்புட்டு பேசறீரே அவங்க நடத்துன நகைச்சுவை போட்டியில் ஒருத்தனாவது அட்லஸாய்யா? வந்துட்டாரு என்னமோ பெருசா சொல்ல. அவங்க இளிச்சவாயனுங்களா யாரு மாட்டறாங்கன்னு பிடிச்சுப் போடறாங்க.
(இதுக்கு மேலும் வெற்றி பெற்றவர்கள் சங்கத்தில் அட்லஸ் வாலிபராக வருவார்களேயானால், காப்பிரைட் வழக்கு வழக்கம்போல் பாயும் என்பதைத் தெரிவித்துக் கொல்கிறேன்.)
//எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன்.//
வாராவாரம் உமக்கு பதிவு போடுன்னு அனுப்பற மெயில் எல்லாம் படிக்கறீரு போல. அட்லீஸ்ட் அது இன்னும் நேர டிலீட் பண்ணற அளவு போகலையே. அது வரை சந்தோஷம். :-D
//இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் //
//ஒத்தை வரிப் பின்னூட்டங்கள்//
என்னமோ புகையுற வாசனை அடிக்கலை?
//Opputunities//
'aappar' tuni 'tease'??
1. கும்பலோட கோவிந்தா. அடி வாங்குனாலும் ஆளுக்குக் கொஞ்சம்தான் விழும்.
2. புதிய மொந்தையில் பழைய (நகைச்சுவை) கள்?
3. சும்மா 100 பதிவு போட்டிக்கு வரணமுன்னு பழசு புதுசுன்னு எல்லாத்தையும் வாங்கி வெச்சுக்காதே. (நல்ல ஆளய்யா நீரு. உமக்கு பழசு எல்லாம் எடுத்துப் போட ஐடியா வரலைன்னதும், இப்படி எல்லாம் அறிவுரை!)
4. அதாவது இப்போ எழுதறதுக்கு சிரிக்க முடியலை. சிரிக்கணுமுன்னா அட்லீஸ்ட் ஒரு ஜோக்காவது போட்டு வை. இதானே சொல்ல வறீரு?
அடுத்தவனை ஆராயச் சொன்னா நல்லாத்தான்யா செய்யறீரு! கரும்பு தின்ன கூலியா வேணும்! :)))
(மீண்டும் சன் ரீவி அம்மா.)
இப்படி வீக்னஸ், ஸ்ட்ரெங்த், த்ரெட்ஸ், ஆப்பர்சூனிடீஸ் என பல விதமான கோணங்களில் சங்கத்தினைப் புரட்டிப் பார்த்த ஆப்புரேசல் இந்த ஆப்புரேசல்.
பெனாத்தலாரின் ஆப்பு சூப்பரப்பு.